கடந்த அக்டோபர் 2007 ஜாமக்காரனில் அந்நியபாஷை குழப்பம் பகுதி ஆரம்பிக்கப்பட்டது. என்னுடைய ஊழியம் மிக அதிகமானபடியால் அதை மாதாமாதம் தொடர்ந்து வெளியிட முடியாமல்போனது பொறுத்துக்கொள்ளவும்.
(குறிப்பு: பலர் எனக்கு கடிதம் எழுதும்போது அந்நியபாஷை குழப்பம்கட்டுரையை 2007 அக்டோபர் ஜாமக்காரனில் 19ம் பக்கத்தில் முடிந்திருந்தீர்கள். இனி தொடர்ந்து எழுதும்போது பக்கம் 20முதல் தொடர்ந்துள்ள பக்கங்களை முறைப்படுத்தி வெளியிட்டால் நாங்கள் அவைகளை பிரித்து எடுத்து பக்க ஒழுங்கின்படி பைண்ட் செய்ய உதவியாக இருக்கும் என்றார்கள். ஆனால் அதன்படி செய்ய இயலாததற்கு பொறுத்துக்கொள்ளவும்).
கடந்தமுறை சபைகளின் வரலாறுகளையும், பெந்தேகோஸ்தே சபைகள் தொடங்கிய காலங்கள் வரை தொகுத்து எழுதினேன். இப்போது சபை பிரிவுகளின் வரலாற்றையும் நீங்கள் அறியத்தருகிறேன்.
சபை சரித்திரத்தின் பிரிவுகள்
சபை சரித்திரத்தை ஆறுபிரிவுகளாக ஆய்வாளர்கள் பிரித்துள்ளார்கள். அதையும் அறிந்துகொள்வது நல்லது.
1. APOSTOLIC CHURCHஅப்போஸ்தலர்களின் கால சபை: கி.பி.30-100 இயேசுகிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு பிறகு இயேசுகிறிஸ்து பரலோகத்திற்குபரமேறி சென்ற காலத்திலிருந்து - இயேசுவின் சீஷனாகிய அப்போஸ்தலனாகிய யோவானின் மரணம்வரை உள்ள காலம்.
2. PERSECUTED CHURCHஉபத்திரவங்களை அனுபவித்த ஆரம்ப சபைகளின் உபத்திரவ காலம் (கி.பி.100-313) அதை தொடர்ந்து அப்போஸ்தலன்யோவான் மரித்தகாலம் தொடங்கி கான்ஸ்டன்டைன் இராஜா கிறிஸ்தவ சபையின் பொறுப்பெடுத்த காலம்வரை உண்டான கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட பயங்கர உபத்திரவ காலகட்டங்கள்.
3. IMPERIAL CHURCHஇராஜாக்களின் தலைமையில் இயங்கப்பட்ட சபைகளின் காலம் கி.பி.314-476 தொடங்கி சபைகளின்மேல் ரோமாபுரியின் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்தகாலம் வரை உள்ள வரலாறு.
4. MEDIEVEL CHURCHஇடைப்பட்ட சபை காலவரலாறு: கி.பி.476-1453 ரோமாபுரியின் ஆதிக்கத்தின் வீழ்ச்சி காலம் தொடங்கி - கான்ஸ்டன்டைன் டிநோபுளும் வீழ்ச்சியுற்றதின் இடைப்பட்ட கால வரலாறு.
5. REFORMED CHURCHசபைகள் மறுமலர்ச்சி பெற்ற காலம்: கி.பி.1453-1648வரை அதாவது கான்டன்டைன் டிநோபாளின் அரசாட்சி வீழ்ச்சியடைந்த காலத்திலிருந்து அதை தொடர்ந்து நடந்த பயங்கரபோர்முடிய சுமார் 30 வருடங்களானது. அந்த காலங்களில் நடந்த வரலாறு.
6. MODERN CHURCHநவீன கால சபைகள் கி.பி.1648-1900 வரை அதாவது நடந்துமுடிந்த 30 ஆண்டுகால யுத்தத்திற்கு 19ம் நூற்றூண்டு காலம்வரை உள்ள வரலாறு என்று பிரித்து அதன்பின் ஒவ்வொரு இடைப்பட்ட காலங்களில் சம்பவித்த விஷயங்கள் சபை உபதேசங்களை திருத்திய வரலாறுகள் இவைகளை குறித்த ஆராய்ச்சிகளை ஒன்று சேர்த்துதான் 6 பிரிவுகளாக வேத ஆய்வாளர்கள் பிரித்தனர்.
ஆனால் ஜாமக்காரன் வாசகர்கள் கடந்தகால 6 பிரிவுகள் அடங்கிய வரலாறுகளைப்பற்றி இப்போது அறியவேண்டிய அவசியம் இல்லை.
அந்நியபாஷை குழப்பம் தொடங்கிய வரலாறு
1901ம் ஆண்டுக்குபின் சபைகளில் புதியதாக எழும்பிய அந்நியபாஷை குழப்பமும், அது சபைக்குள் உண்டாக்கிய வேறு பல குழப்பங்களையும், அதன் அடிப்படையில் சபைகளுக்குள் பிரவேசித்த பொய்யின் ஆவியும் அதனால் ஏற்பட்ட விபரீதங்களும் ஏராளம். சபைகள் வசனத்தை அறவே விட்டுவிட்டுபரவச உபதேசங்களில் வெறித்தனமாக அடிமைப்பட்டுப்போன வரலாறுதான் முக்கியமாக உங்களுக்கு அறிவிக்க பாரப்படுகிறேன். அதைப்போன்ற இப்போதுள்ள மாயையிலிருந்து வாசகர்கள் வெளிவரவேண்டும், அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதுதான் இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.
எந்த பரிசுத்த ஆவியானவரை-பரிசுத்தஆவி என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து பெரும்பாலான கிறிஸ்தவர்களை அடிமைப்படுத்தி-ஆவிக்குரிய மனநோயாளிகளாக இன்று அலையவிட்டிருக்கிறார்களோ - அந்த குழப்பக்காரர்கள் நயமாக உபயோகப்படுத்திக்கொண்ட பெயரான ஆவி என்ற பிழையான வார்த்தையை விளங்கப்பண்ணி பரிசுத்த ஆவியானவரை ஒரு நபராக, ஒருஆள்தத்துவம் உள்ளவராக, தெய்வமாக உங்களுக்கு தெளிவுப்படுத்துவதுதான் இக்கட்டுரையின் மற்றொரு நோக்கமாகும்.பரிசுத்தஆவி என்ற பதம் ஆவியானவரை குறிக்க புதிய ஏற்பாட்டில் 3 இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. உண்மைதான். ஆனால் அதற்கு சில காரணம் உண்டு.
பெரும்பாலான பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்களும், பெந்தேகோஸ்தே உபதேசத்தை கைக்கொள்ளும் மேடை ஊழியர்களும் உபயோகிக்கும் வார்த்தைபரிசுத்தஆவி என்பதாகும். இவர்கள் கேட்கும் கேள்வி பரிசுத்தஆவியைபெற்றுக்கொண்டீர்களா? என்பதாகும். இப்படிப்பட்டவர்கள் ஆவியானவர் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கவேமாட்டார்கள்.
இவர்கள் குறிப்பிடும் ஆவி என்பது புகை. அதாவது நாம் சாப்பிடும் இட்லிதட்டு திறக்கும் போது காணும் நீராவிபோன்ற ஆவி என்பதாகத்தான் அர்த்தம் கொள்ள வைக்கும்.
ஆவி இறங்கினால் ஆடுவார்கள், உண்மைதான். மற்ற மதத்தில் உள்ளவர்கள் உடுக்கை அடித்ததால் ஆவி இறங்கி ஆடுகிறார்கள் என்பார்கள். உடுக்கை அடிப்பதை நிறுத்தியபின் ஆவி மலை ஏறிவிட்டது அல்லது ஆவி இறங்கிவிட்டது என்பார்கள். அதைப்போலவே அதேமுறையில்தான் கொஞ்சம்கூட மாறாமல் இன்று இவர்கள் சபையில் ஆவிஇறங்கி ஆடுவதும், கூக்குரல் இடுவதும், பூமியில் படுத்து உருளுவதும்,பல்லைக் கடிப்பதும், கைகளை சேர்த்து நடுங்கியபடிநிற்பதும், கைகளை வேகவேகமாக தட்டுவதும், வாய்க்கு வந்தபடிஉளறுவதையும் காணும்போது அதை பரிசுத்தாவியின் அபிஷேகம் என்று இவர்கள் கூசாமல் கூறிவிடுகிறார்கள். என்ன பயங்கரம் இது! என்ன துணிகரம் இது!.
அந்நியபாஷை என்பது உண்டு. அந்த உண்மையான அந்நிபாஷையைபுதிய ஏற்பாட்டு சபைமக்கள் எல்லாரும் பேசும்போது அதைக்கூட பரி.பவுல் அப்போஸ்தலன் கீழ்கண்டவாறு விமர்சிக்கிறார். 1கொரி 14:23 "சபையாரெல்லாரும் ஏகமாய்க்கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது(சபைக்குள்ளே) பிரவேசித்தால் அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?" என்று கூறி கண்டிக்கிறார். உண்மையான அர்த்தம் உள்ள பாஷைக்கே இப்படி ஒரு விமர்சனத்தை பவுல் கூறுகிறார் என்றால் இன்று அந்நியபாஷை என்ற பெயரில் இவர்கள் பேசும் உளறல்களை என்ன என்று கூறுவார்?.
இதில் வேதனை என்னவென்றால் இவர்கள் நடத்தும் சபையில் காணப்படும் இந்த கூத்தை ஆவியானவர் வெளியிலிருந்தப்படியே துக்கத்தோடு கண்டுக்கொண்டிருக்கிறார் என்பதுதான். அவர் இப்படிப்பட்ட சபைகளின் மக்களுக்கு இதை எப்படி புரிய வைப்பார்? எப்படி தெளிவு உண்டாக்குவார்? என்ற இந்த கேள்விக்கான பதில்தான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
மேலே ஆரம்பத்தில் கூறிய 6 பிரிவுகளில் கடைசி பிரிவான நவீன கிறிஸ்தவ சபைகளின் காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இதன் ஆரம்ப காலத்தில்தான் பெந்தேகோஸ்தே சபை தொடங்கப்பட்டது. அது 20ம் நூற்றாண்டு காலமாயிருந்தது.
இக்காலத்தில் மற்ற பலவித பெயர்களில் உள்ள ஸ்தாபன சபைகளில் (Main line Churches) மக்களிடம் ஆவிக்குரிய வளர்ச்சி குறைவுப்பட்டிருந்தது. இந்தக்காலகட்டத்தில்தான் பெந்தேகோஸ்தே சபையினர் ஒவ்வொரு இடத்திலும்உயிர்மீட்சி கூட்டங்களை நடத்தி ஏராளமான ஸ்தாபன சபை மக்களைக் கவர்ந்து தன்சபைகளில் சேர்த்துக்கொண்டனர்.
இப்போதும் பெந்தேகோஸ்தே சபையினர் சுவிசேஷம் அறிவித்து புதிய ஆத்துமாக்களை கொண்டுவருவதைவிட அந்தந்த இடங்களில் உள்ள ஸ்தாபனசபை (Main Line Churches) மெத்தடிஸ்ட் CSI, லூத்தரன், மார்த்தோமா போன்ற சபைகளிலிருந்து அங்குள்ள சபைமக்களை கவர்ந்து இழுக்கும் வேலையைதான் பெரும்பாலான பெந்தேகோஸ்தே சபையினர் செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு சில சபைகள் பெண்களை ஆயுதமாக்கி சபையில் முழுநேர ஊழியத்தில் உள்ள சகோதரிகளுடன் (Sisters) சபை பெண்களையும் சேர்த்து அனுப்பி கிறிஸ்தவ வீடுகளை கண்டுபிடித்து அவர்கள் வீடுகளில் சென்று அங்குள்ள பெண்களை கவர்ந்து, அவர்களை சபையைவிட்டு பிரித்து அப்பெண்களை தங்கள் சபைகளுக்கு கொண்டுபோவதால் புருஷன்மார்கள் தானாக அவர்கள் பின்னே பெந்தேகோஸ்தே சபையில் சங்கமமாகிவிடுகின்றனர். பலர் இரண்டு வித்தியாசமான சபைகளிலும் தொடர்பு வைத்துக்கொள்கின்றனர்.
பெந்தேகோஸ்தே சபையினரான இவர்கள் இயேசுவை அறியாத மக்களைக்குறித்தோ, மிக தொலைவில் மலைகளில், காடுகளில் உள்ள ஆதிவாசி மக்களைக்குறித்தோ இவர்களுக்கு தரிசனம் இல்லை.சுலபவழியாக கிறிஸ்தவர்களை-மறுபடியும் கிறிஸ்தவர்களாக்கும்ஊழியத்தையே இப்போதும் தொடர்கின்றனர்.
பொய்யான அந்நியபாஷை என்ற உபதேசத்தின் ஆரம்பம்
1901ம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டு. அது பொய்யானஅந்நியபாஷையின் ஆரம்ப ஆண்டு ஆகும். அந்நியபாஷை என்ற பெயரில் மிகவும் வித்தியாசமான, சரீர கிளர்ச்சியை உண்டாக்கும் உளறல் சப்தத்தை அறிமுகப்படுத்தி அதையே தங்கள் சபையின் உயிர்நாடி உபதேசமாக்கி மற்ற சபைகளிலிருந்து தங்களை வேறுப்படுத்திகாட்டிக்கொண்டனர். தங்கள் மற்றசபைகளிலிருந்து வல்லமை பெற்றசபையாக சொல்லிக்கொள்ள உயர்த்திக்கொள்ள அது அவர்களுக்கு உதவியாக அமைந்தது.
இதன் ஆரம்பத்தைக் கவனிப்போம்:
அமெரிக்க ஐக்கிய நாட்டில் Charles F.Parham's Bethel Bible School (Topeka) Kansas-ல் பயிலும் மாணவர்களில் ஒருவரான 18வயதே நிரம்பியAgnes Ozman என்ற பெயருள்ள வாலிபப்பெண் ஒருவள் அந்நியபாஷைஎன்ற பெயரில் உளற, அது பெந்தேகோஸ்தேநாளில் ஆரம்பத்தில் அப்போஸ்தலர்கள் பேசின பற்பலபாஷைகளுக்கு ஒத்ததாக இருக்கக்கண்டு, அதையே தங்கள் அடிப்படை உபதேசமாக ஆக்கிக்கொண்டு பல மாணவர்கள் அதை பேச பயிற்சி எடுத்துக்கொண்டனர். அவர்களும் அந்த பெண்ணைப்போல பேசினார்கள். சபையிலுள்ள மற்றவர்களுக்கும் அதில் ஏற்படும் உற்சாகத்தை அறிமுகப்படுத்தினர். அந்த சம்பவம் காட்டுத்தீபோல அமெரிக்கா முழுவதும் பரவினது. மேலும் அந்த நவீன உபதேசம் உலகெங்கும் பரவின. அதை தொடர்ந்து பெந்தேகோஸ்தே சபைகளில்தீர்க்கதரிசனமும், அற்புதசுகமும் பிரபலமாயின.
மேலே குறிப்பிட்ட Bethel Bible School-ன் ஸ்தாபகர் திரு.Parham என்பவர் ஆரம்பத்தில் மெத்தடிஸ்ட் சபை ஊழியராக ஊழியம் செய்தவராவார்.
அந்நியபாஷை இந்தியாவிலும் நுழைந்தது
இந்த நவீன பெந்தேகோஸ்தே உபதேசம் இந்தியாவுக்குள் நுழைந்தது 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். அன்றைய நாட்களில் இந்தியாவில் பெரியஉயிர்மீட்சி காணப்படவில்லை.
முதல் உயிர்மீட்சி: முதன்முதலாக 1873ம் ஆண்டு இந்தியாவில்கேரளா மாநிலத்தில் மூன்று இடங்களில் உயிர்மீட்சி ஏற்பட்டது. இதற்கு காரணமானவர் Metropolitan Mathew's Marathanasius என்ற பிஷப் ஆவார். இது ஆச்சரியமான செய்தியாகும். கத்தோலிக்கரை போன்ற உபதேசத்தை கொண்ட இவர் தங்கள் உபதேச வைராக்கியத்திலிருந்து திடீரென்று மாறுபட்டவராய், தன் கட்டுப்பாட்டில் உள்ள சபைகளில் ஜெபக்குழுக்களை ஆரம்பிக்க கட்டளையிட்டார். எல்லா இடங்களிலும் சுவிசேஷ உயிர்மீட்சி கூட்டங்களை நடத்த பிராட்டஸ்ண்ட் பிரசங்கிமார்களை தங்கள் சபைகளுக்கு வந்து பிரசங்கம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தார். அதன் மூலம்தான் சபை மக்களில் பெரும் மனந்திரும்புதலும், உயிர்மீட்சியும் ஏற்பட்டது. அதை கண்ட பிஷப் அந்த ஏற்பாடுகளை இன்னும் அதிகமாக உற்சாகப்படுத்தியும், ஊக்கப்படுத்தியும் அப்படிப்பட்ட உயிர்மீட்சி கூட்டங்களுக்கு தன் பொறுப்பில் உள்ள அனைத்து சபைகளின் வாசல்களையும் விரிவாக திறந்துக்கொடுத்து உதவினார். இதன் மூலம் கேரளா கிறிஸ்தவ சபைகளில் வேதவசனத்தைக்குறித்து பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது.
இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில் மத்திய திருவாங்கூர் சமஸ்தான பகுதிகளில்தான் முதல் உயிர்மீட்சி கிறிஸ்தவசபைகளில் உண்டானது. இந்த இடங்களிளெல்லாம் மிஷனரிமார்கள் வந்து தங்கி ஆரம்பகட்ட (Pioneer) ஊழியம் செய்த இடங்களாகும்.
இரண்டாவது உயிர்மீட்சி கேரளத்தில் 1895ம் வருடம் தமிழ்நாட்டின் அன்றைய பிரபல ஊழியர் திரு.V.D.David என்பவரால் ஏற்பட்டது. இவரைதிருவாங்கூருக்கு அழைத்து கூட்ட ஏற்பாடு செய்தவர், கேரளாவில்மாவெலிக்கரா என்ற இடத்தில் உள்ள (ArchDeacon) திரு.Oommenஎன்பவராகும்.
அதை தொடர்ந்து 1906ம் ஆண்டு கேரளா மார்த்தோமாசபை பிஷப்பானRt.Rev.TITUS MARTHOMA METROPOLITAN அவர்கள் தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலிருந்து Bro.தாமஸ் வாக்கர் என்பவரை அழைத்து கூட்டங்களை நடத்த மறுபடியும் பெரிய உயிர்மீட்சி கேரள சபைகளில் உண்டானது. இப்படிப்பட்ட உயிர்மீட்சிகளால் மற்றொரு பாதிப்பும் ஸ்தாபன சபைகளில் உண்டானது. அதாவது சபைகளில் உள்ள உயிர்மீட்சி பெற்ற பலர் சபைகளிலிருந்து பிரிந்து பெந்தேகோஸ்தே சபை உருவாக காரணமாயினார்.
இப்படி ஆரம்பிக்கப்பட்ட பெந்தேகோஸ்தே சபைகளில் அமெரிக்காவில் 1901ல் சிறு பெண் மூலமாக பேசப்பட்ட போலியான அந்நியபாஷையின் அனுபவத்தை இந்தியாவில் கேரளாவிலும் அறிமுகப் படுத்தப்பட்டது. அதுவே இந்தியாவிலும் பெந்தேகோஸ்தேசபையின் அஸ்திபார உபதேசமாக மாறின.
இந்தியாவில் முதல் உயிர்மீட்சி கேரளா மாநிலத்தில் ஏற்பட்டாலும், பெந்தேகோஸ்தே சபையின் நவீன உபதேசங்கள் இந்தியாவில் மஹாராஷ்ட்ராமாநிலத்தில் முக்தி மிஷன் என்ற கிறிஸ்தவ ஸ்தாபன பொறுப்பாளரானபண்டித ராமாபாய் என்ற பிரபல பெண் ஊழியக்காரியின் மூலமாகத்தான் முதல் பெந்தேகோஸ்தே உபதேசம் இந்தியாவில் பரவியது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இப்படியாக ஏறக்குறைய இந்தியா முழுவதும் பெந்தேகோஸ்தே சபை உருவாகி அந்நியபாஷையும் அந்த சபைகளில் பிரதான ஸ்தானம் வகித்தது.
சபை சரித்திரத்தில் நவீன பெந்தேகோஸ்தே என்று அழைக்கப்பட்ட சபைகளில் எப்படி பொய்யான அந்நியபாஷை அனுபவங்கள் காட்டு தீப்போல பரவினதோ! அந்த அளவு இந்த பெந்தேகோஸ்தே சபைகளும் கண்ணாடி உடைவதைப்போல் துண்டுதுண்டாக பல சபைகளாக உடைந்து, வீதிக்கு நான்கு வீதம் பல பெயர்களில் சபைகள் ஆரம்பிக்கப்பட்டு சரித்திரம் படைத்தது. அதுமட்டுமல்ல, அடிப்படை வேதஅறிவே இல்லாத பெந்தேகோஸ்தே சபைபாஸ்டர்களும் உருவானார்கள். இவர்கள் மூலமாக பெந்தேகோஸ்தே சபைகளுக்கு இருந்த ஆவிக்குரியசபை என்ற சிறப்பு பெயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது என்றாலும் அதேசமயம் அடிப்படை வேதாகம படிப்போடும், சிலர் வேதாகம கல்லூரி சென்று படித்து பாஸ்டர்களானதாலும் சில பெந்தேகோஸ்தே சபைகள் நல்ல கட்டுப்பாட்டுடன் கூடிய நல்ல பெந்தேகோஸ்தே சபைகளாக உருவாயின. அவைகளில் குறிப்பிடப்படும்படியான சபைகளில் சில:
பெயர்
அறியப்பட்ட காலம்
ASSEMBLIES OF GOD INDIAN PENTECOSTAL CHURCH OF GOD CYLON PENTICOSTAL CHURCH (TPM) CHURCH OF GOD UNITED PENTICOSTAL CHURCH APOSTOLIC CHURCH OF PENTECOST IN INDIA WORLD MISSIONARY EVANGALISM CHURCH OF GOD ZION SANGHAM SHARON FELLOWSHIP CHURCH PENTECOSTAL CHURCH OF GOD NEW INDIA CHURCH OF GOD NEW INDIA BIBLE CHURCH CHURCH OF GOD IN KERALA (DIVISION)
இப்படிப்பட்ட ஆரம்ப பெந்தேகோஸ்தே சபைகளின் பெயர் வரலாறு ஆகியவற்றின் விவரங்களை கேரளாவில் கோட்டயம் என்ற ஊரில் உள்ளORTHODOX SEMINARY-யில் உள்ள லைப்ரரியில் கண்டறியலாம். இதோடு மட்டுமல்லாமல் இப்போதும் ஈசல்போல் தினம் ஒரு பெந்தேகோஸ்தே சபை தோன்ற ஆரம்பித்துக்கொண்டிருக்கிறது.
அடிப்படை வேதஅறிவு இல்லாத பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களின் எண்ணிக்கைதான் இப்போது மிக மிக அதிகமாக காணப்படுகிறது. இவர்கள் நடத்தும் சபைகளில் உள்ள மக்களின் நிலையை நினைத்தால்தான் மிகவும் வேதனையாக இருக்கிறது.
பொதுவாக இப்படிப்பட்ட பெந்தேகோஸ்தே சபைகள் நாங்கள்தான்மறுபடியும் பிறந்த அனுபவம் உள்ள இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள்என்றும் தங்களைத்தான் ஆவிக்குரிய சபைகள் என்பார்கள் என்றெல்லாம் கூறிக்கொள்வார்கள். மற்ற ஸ்தாபன சபைகளை (MAIN LINE CHURCH) பெயர் கிறிஸ்தவசபைகள் என்று இவர்கள் அழைப்பார்கள். ஆனால் உயிர்மீட்சி ஆரம்பத்தில் பெந்தேகோஸ்தேசபை பிரசங்கிமார்களால் உண்டாகவில்லை என்பதை இவர்கள் உணரவில்லை. ஸ்தாபன சபைகளிலிருந்துகன்வென்ஷனில் பேச அழைக்கப்பட்ட பிரசங்கிமார்கள் மூலமாகத்தான்உயிர்மீட்சி உண்டானது என்பதை இவர்கள் மறந்துப்போனார்கள். இவர்கள் கைகளில் வைத்துள்ள வேதபுத்தகத்தை மொழிபெயர்த்து கொடுத்தமிஷனரிகள் யாரும் அந்நியபாஷை பேசாதவர்கள் என்பதையும் இவர்கள் மறந்தார்கள். சுவிசேஷத்தை ஆரம்ப விதைகளாக தெளித்து இரத்த சாட்சிகளாக மரித்த ஒரு மிஷனரிகளும் அந்நியபாஷை பேசவில்லை என்பதையம் குறிப்பிடவிரும்புகிறேன்.
பெந்தேகோஸ்தே சபைகளின் சிறப்பு அம்சங்கள்
பெந்தேகோஸ்தே சபைகள் இவ்வளவு சீக்கிரம் வெகு வேகமாக வளர மிக முக்கியமான காரணங்களில் ஒன்று இவர்களின் வீடுசந்திப்பு என்றால் மிகையாகாது. வீட்டுக்கூட்டங்கள் மூலமாகத்தான் தென்கொரியாநாட்டிலுள்ள பால்யாங்கிச்சோ அவர்களின் சபை 10 லட்சம் அங்கத்தினர்களைக்கொண்ட சபையாக மாறியது.
தெரு பிரசங்கம், துண்டுபிரதிகள் விநியோகம் இவைகள் ஆரம்ப பெந்தேகோஸ்தே சபைகள் வளர சிறப்பு காரணமாகியது.
வியாதிஸ்தர்களை சந்திப்பது, அதுவும் அவர்கள் சுகம் ஆகும்வரை அவர்களைச்சந்தித்து அவர்களுக்காக ஜெபித்து, சுகமாக்கி ஆத்தும ஆதாயம் செய்து அவர்களை சபைக்கு அழைத்து வருவது இவர்களின் சிறப்பு அம்சமாகும். இப்படிப்பட்ட செயல் இன்று CSI சபை குருமார்கள் பெரும் பாலானவர்களிடம் காணாதது CSI சபைகளுக்கு பெரும் வீழ்ச்சியாகும். இதை இங்கு குறிப்பிடாமல் இருக்க இயலவில்லை.
சபை விசுவாசிகள் பாஸ்டர்மார்களை கனப்படுத்துவது, அவர்களை பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துவதாகவும், அவர்கள் உண்மையானவர்கள் என்றும், மகா பரிசுத்தமானவர்கள் என்றும் மனதார பெந்தேகோஸ்தே சபைமக்கள் நம்பினார்கள். அவர்கள் நம்பினபடியே ஆரம்பகால பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களும் பெரும்பாலானவர்கள் நடந்து சாட்சியுடன் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட சாட்சிகள் இப்போது குறைந்துகொண்டு வருவது இந்த சபைகளுக்கு நல்லதல்ல.
வேதவசனத்தில் காணப்பட்டபடி முழுகி ஞானஸ்நானம் எடுப்பதை இவர்கள் மிக கண்டிப்புடன் உபதேசித்தார்கள்.
பூரண சுவிசேஷ சபை
பெரும்பாலான பெந்தேகோஸ்தேசபைகள் தங்களை பூரண சுவிசேஷசபை என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டுக்கொள்வார்கள். இந்த பெயரே இவர்களுக்கு பொருத்தமானதல்ல! எப்படி?
சுவிசேஷம் என்றால் நற்செய்தி (Good News) என்பதாகும். நற்செய்தி என்பது என்ன? உலக மனிதர்களின் பாவபரிகாரமாக, மேசியா இயேசு கிறிஸ்துவாக இவ்வுலகில் பிறந்து சிலுவையில் மரித்து, மனிதர்கள் அனுபவிக்கவேண்டிய தண்டனைகளை தன் சரீத்தில் ஏற்று, மனித பாவங்களை கழுவ தன் சரீரத்தின் இரத்தம் முழுவதையும் சிந்தினார். அதன்மூலம் அதை விசுவாசித்தவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடைத்தது. இனி மனிதன் பாவத்தோடு சாகவேண்டியதில்லை. பாவம்போக்க கங்கை போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு போகவேண்டியதில்லை - பாவம்போக்க தன் சரீரத்தை வருத்திக்கொள்ள வேண்டிய அவசியுமுமில்லை. இதுதான் நற்செய்தி(சுவிசேஷம்).
இந்த சுவிசேஷத்தை பூரணமாக அறிவிக்கவேண்டும்! எப்படி?
இயேசுகிறிஸ்து ஏன் பிறந்தார்? இயேசுகிறிஸ்து ஏன் மரிக்க வேண்டும்? இயேசுகிறிஸ்து இப்போதும் உயிரோடு இருக்கிறார் என்ற இந்த மூன்று முக்கிய விஷயங்களையும் ஒரு நபருக்கு முழுமையாக கூறவேண்டும் இதற்கு பெயர்தான் பூரண சுவிசேஷம்என்பதாகும்.
பெந்தேகோஸ்தேசபையினர் பூரண சுவிசேஷம் என்று கூறுவது 1. மனந்திரும்புதல், 2. முழுகி ஞானஸ்நானம், 3. பரிசுத்தாவியின் அபிஷேகம் இவைகளை பூரண சுவிசேஷம் என்று குறிப்பிடுகின்றனர். இவைகள் சுவிசேஷம் அல்ல, உபதேசமாகும். சுவிசேஷம் என்பது இயேசு கிறிஸ்துவைகுறித்து அறிவிப்பது மட்டுமே. ஆகவே இவர்கள் தங்கள் சபையை பூரண சுவிசேஷ சபை என்று கூறுவது பொருத்தமான பெயரல்ல.
பெந்தேகோஸ்தே சபையின் போலியான அல்லது பிழையான உபதேசங்கள்
பெந்தேகோஸ்தே சபையில் மற்ற எல்லா உபதேசங்களையும் பின்னுக்கு தள்ளி ஞானஸ்நான உபதேசத்தை அளவுக்குமீறி முக்கியத்துவம் கொடுத்துஞானஸ்நானம் பெறாதவன் பரலோகத்துக்கே போகமாட்டான் என்று கூறி விசுவாசிகளை பயமுறுத்துவார்கள்.
இதற்கு பெந்தேகோஸ்தே சபையின் உள்ளே உள்ளவர்களும், சபையின் அங்கத்தினராக இல்லாத மற்ற ஸ்தாபனசபை விசுவாசிகளும் (CSI, மார்த்தோமா, லூத்தரன், மெத்தடிஸ்ட்) பயந்து கீழ்படிந்தனர். இப்படி பயந்து ஞானஸ்நானம் எடுக்க இவர்கள் சுட்டிக்காட்டி உபயோகிக்கும் மிக முக்கிய வசனம்:
இந்த குறிப்பிட்ட வசனத்தை கூறி பரலோகம் செல்ல முழுகி ஞானஸ்நானம் எடுப்பதே வழி அப்படி செய்யாவிட்டால் பரலோகம் போகமுடியாது என்று கூறி பயப்பட செய்து ஞானஸ்நானம் எடுக்கவைத்துவிடுவார்கள். இந்த ஒரு வசனத்தை வாசித்து பயந்ததினாலேயே CSI போன்ற சபைகளில் உள்ள விசுவாசிகள் இரகசியமாக முழுகி ஞானஸ்நானம் எடுத்து தங்கள் சபைகளிலேயே தங்கிவிட்டவர்களும் உண்டு. இது ஏமாற்றி அல்லது பயமுறுத்தி ஞானஸ்நானம் எடுக்கவைக்கும் தந்திரமாகும். இப்படி அர்த்தமில்லாமல் எடுக்கும் ஞானஸ்நானத்தால் எந்த ஒரு பிரயோஜனமுமில்லை. இப்படி பயத்தின் அடிப்படையில் ஞானஸ்நானம் எடுத்தவர் பரலோகம் போகபோவதுமில்லை.
இவர்கள் குறிப்பிடும் இந்த வசனம்(யோ 3:5) ஞானஸ்நானத்தை குறிப்பிடும் வசனமே அல்ல, இது பரிசுத்த ஆவியானவரை குறிப்பிடும் வசனமாகும்.
முழுகி ஞானஸ்நானம் எடுப்பதைக்குறித்து எழுதப்பட்ட வசனம் வேதத்தில் ஏராளம் உண்டு. ஆனால் இந்த (யோ 3:5) குறிப்பிட்ட வசனம் ஞானஸ்நானத்தை குறிப்பிடுவனவல்ல.
பரலோகம் செல்ல மனந்திரும்புதல்தான் முதலும், முக்கியமுமான வழி (யோ 3:3) ஆகும்.
ஆக, இப்படிப்பட்ட வசனங்களை முக்கியப்படுத்தாமல் ஞானஸ்நானத்தை மட்டும் முக்கியப் படுத்துகிறதால் இவர்கள் சபையில் ஞானஸ்நானத்தின் அர்த்தம் தெரியாமல் சேர்ந்த போலி விசுவாசிகள் பெருகிவிட்டார்கள். அப்படியேஅந்நியபாஷை உபதேசத்தையும் கட்டாயப்படுத்தியதால் பல வாலிபப் பிள்ளைகள் அந்நியபாஷைப்போல போலியாக பேசி சபைமக்களையும், பாஸ்டரையும் ஏமாற்றினார்கள்.
இவர்களின் மற்றொரு போலியான உபதேசம் அந்நியபாஷை
அந்நியபாஷையை இவர்கள் பரிசுத்தஆவியானவரின் வல்லமைக்குஅடையாளமாகவும், பரிசுத்தஆவியின் நிறைவுக்கு அடையாளமாகவும் உபதேசிக்கிறார்கள். இதை இவர்களின் சபையின் உபதேசத்தின் அஸ்திபார உபதேசமாகவும் ஆக்கிவிட்டபடியால் போலியாக அந்நியபாஷை என்ற பெயரில் உளறி சபைமக்களை சபைபாஸ்டரை, மட்டுமல்ல பரிசுத்த ஆவியானவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏமாற்றுபாஷையை சபையில் பாஸ்டர் முதற்கொண்டு நம்பிவிடுகிறார்கள். காரணம், பாஸ்டர் பேசுவதே அந்நியபாஷை அல்ல, சபையின் மூப்பர்கள் பேசுவதும், சபையில் தீர்க்கதரிசனம் கூறும் நபர் பேசுவதும் அந்நியபாஷையே அல்ல. அதனால் பெந்தேகோஸ்தே சபைகளில் பேசப்படுவதுஅந்நியபாஷையல்ல அது செயற்கைபாஷை, அது பரவசப்பேச்சு என்கிறேன்.
இப்படி சொல்ல காரணம் என்ன? இப்படி துணிந்து கூற ஆதாரம் என்ன?
இவைகளைப்பற்றிய அனுபவம்+வேதஆதாரம்ஆகியவைகளைப்பற்றியும், இன்றுள்ள பிரபல ஊழியர்கள், பிரசங்கிமார்கள்,பிரபல பெரிய பிரசித்திபெற்ற பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் பேசியஅந்நியபாஷைகளை அவர்களே வெளியிட்ட வீடியோ, CD, VCDஆகியவற்றிலிருந்து தொகுத்து எடுத்து ஒரு VCD தயாரித்துள்ளேன். அதைபார்ப்பவர்கள், கேட்பவர்கள் நிச்சயம் தாங்கள் பேசிக்கொண்டிருக்கும்அந்நியபாஷையை நிறுத்திவிடுவார்கள். அதை பார்க்கும்போது ஒரு முழுநீள நகைச்சுவை சினிமா பார்த்ததைப்போல விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். பலசபைகளின் பாஸ்டர்கள் பேசின அந்நியபாஷையை அவர்கள் சபைமக்களேகேஸட்டில் பதிவுசெய்து எனக்கு அனுப்பி உதவினார்கள். வெளிநாட்டு வெள்ளைக்கார ஊழியர்கள், பிரபல TV ஊழியர்கள், சுகமளிக்கும் ஊழியர்கள்பேசின அந்நியபாஷைகளையும், கருப்பு இனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பேசின அந்நியபாஷைகளையும், ஒருங்கே ஒரேசமயம் அவைகளை நீங்கள் உட்கார்ந்துகேட்டால் நான் இவர்களை போலிபெந்தேகோஸ்தே என்று குறிப்பிட்டதின் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள். சாதாரண மனுஷர்களாகிய நாம் இவர்களின் போலிபாஷைகள் பேசுவதை நேரில் அந்தVCD மூலம் காணும்போதும், கேட்கும்போதும் இவர்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதனால் ஏற்பட்ட ஆத்திரம் குமுறிக்கொண்டுகோபமாக,வெறுப்பாக நமக்குள் உருவாவதை நாம் உணரமுடியும். அப்படியானால் தேவஆவியானவர் இவர்களின் அந்நியபாஷைகளை கண்டு எத்தனையாய் இவர்களைப்பற்றி துக்கப்படுவார்!. இவர்களை ஆவியானவர் சும்மாவிட்டுவிடுவார் என்றா நினைக்கிறீர்கள்?. இப்படி நான் குறிப்பிடுவதின் காரணம், இப்படிப்பட்டவர்களால் ஏமாற்றப்பட்டு, பைத்தியங்களைப்போல இப்போதும் சபையிலும், தனிப்பட்ட ஜெபத்திலும் ஜனங்கள் உளறுவதற்கு இப்படிப்பட்ட ஊழியர்களும், பாஸ்டர்களும்தானே காரணம்!. ஆகவே தேவஆவியானவர் இவர்களை நிச்சயமாக சும்மாவிடமாட்டார். அந்த VCDஐ இப்போது வெளியிடமாட்டேன். ஆகவே அதை கேட்டு யாரும் எனக்கு கடிதம் எழுதவேண்டாம். அந்த VCD வெளிவந்தால் எத்தனை ஊழியர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்போகிறார்களோ அறியேன். ஆனால் அது திருட்டு சினிமா VCD அல்ல. ஆகவே பிரச்சனை இருக்காது என்று நம்புகிறேன்.
பெந்தேகோஸ்தேசபை பாஸ்டர்கள், சபைமக்கள் இனிமேலாவது பரவசப்பேச்சை நிறுத்தி சாட்சியுள்ள வாழ்க்கை மூலமாக கர்த்தரை மகிழச்செய்வோம். நமக்குள் என்ன ஆவி உண்டொன்று நம் செயல்கள், கனிகள் கூறட்டும். நிச்சயம் அதன்மூலம் மட்டுமே தேவநாமம் மகிமைப்படும். பக்திவிருத்தியும் உண்டாகும். ஆமென்.
மேலே வாசித்த ஆய்வு அறிக்கைகள் தயாரிக்க தெரிந்துக்கொண்ட புத்தகங்கள்
1). Augustine, John.S(Rd), Religious Fundamenalism an Asian, Bangalore. Satri. 2). Mathew.K.J(M.Th Thesis) Denominational Pluralism, UTC, Bangalore 1993. 3). Menzies, William.W Anointed to Serve Mission.GPH.1971.(P.27). 4). Stephen M.The Challenge of the Penticostal Churches Today an Insiders View (Article in Jeevadhara July 1995) Kottayam (P.274ff). Du Plessis, David.J, The World Penticostal Movement(article) World Christian Hand Book, London.Lutter worth Press. 1967 (P.15). 5). Stephen OP CIT (P.275), 6). IBID, 7). Mathew.K.J, OP CIT(P.85). 8). Quoted from Keralathile almiya unaruu by K.K.Kuruvilla, In the Penticostel Churches in Kerala and its witness in the Socio-Political life. Mathew Samuel, M.Th. Thesis Ferrc Kottayam. Faith and Practices of Penticostals: The Commen Beliefs and Practices of the Penticostal Churches are following: A). The Scripture the 66 Books of the Bible is Accepted by the Penticostals as the Sacred Scripture the only Orr. J.Edwin Evangelical Awakenings in India. Delhi (Cli 1970. P.154).
-- Edited by devapriyaji on Friday 7th of January 2011 05:28:19 PM
அந்நியபாஷை குழப்பம் என்ற தலைப்பில் தொடர்ந்து இக்கட்டுரையை கொஞ்சகொஞ்சமாக வெளியிட்டு கொண்டுவருகிறேன் என்பதை வாசகர்கள் அறிவீர்கள். இதுவரை சபைகள் தோன்றியவிதம் அதன் வரலாறு ஆகியவற்றை சரித்திர பூர்வமாக எழுதி பெந்தேகோஸ்தே சபை தோன்றிய காலம்வரை அதன் சூழ்நிலை வரலாறு ஆகியவற்றை எழுதினேன்.
அந்தக்காலகட்டத்தில் வசனத்தின்படி இயங்கிய சபைகளும் ஜான்வெஸ்லி அவர்கள் தொடங்கிய சரியான உபதேசத்தில் இயங்கின சபைகள்கூட நான் குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் ஊழியர்களுக்குள்ளே ஒரு சோர்வும், பரம்பரை கிறிஸ்தவ உணர்வும், ஜெப ஐக்கிய குறைவும் ஏற்பட்டது. அப்போதுதான் சபையில் சிலருக்கு ஆவிக்குரிய ஆகாரம் தேவை என்றும், வசனத்தை ஆழமாய் தியானிக்கும் உணர்வும் உண்டானது. அது முதலில் ஊழியர்களுக்குள்ளும், பின் சபைமக்களுக்குள்ளும் உண்டானது. ஆனால் தங்களில் ஏற்பட்ட வசன ஆகாரத்தின் ஏக்கத்தை சபை ஊழியர்கள் அலட்சியம் செய்தார்கள். இப்போதும் பலCSI,லூத்தரன்,மார்த்தோமா சபைகளின் நிலையும் அதுதானே. அதனால்தானே ஆகாரம் கிடைக்கும் வெளிசபைகளுக்கு சபைமக்கள் போகிறார்கள். சரியான ஆவிக்குரிய பிரசங்கம், உண்மையான ஆராதனை நம் சபைகளில் இருந்தால் மக்கள் ஏன் மற்ற சபைகளை தேடிபோகிறார்கள். அநேக சபைகளில் சபை குருமார்களுக்கு பிரசங்கம் தயாரிக்கவே நேரம் இல்லை. ஜெபிக்கநேரம் இல்லை. பிறகு எப்படி ஆராதனையில் ஜீவனுள்ள வசன ஆகாரம் சபைமக்களுக்கு கொடுக்கமுடியும்.
பிஷப் அணியில் சேரலாமா? பிஷப்பின் எதிர்அணியில் சேரலாமா? எந்த அணியில் தமக்கும் தன் குடும்பத்துக்கும் ஆதாயம் அனுகூலம் கிடைக்கும் என்பதிலேயே சபை ஊழியர்களின் மனம் அலைகிறபோது சபைமக்களின் ஆத்மீக பசியை தீர்க்க இப்படிப்பட்ட ஊழியர்களால் இயலாதுபோனது.
மேய்ப்பர்கள் மந்த இருதயம் உள்ளவர்களாய் கர்த்தரை தேடாமல் போனார்கள். ஆகவே மந்தைகள் சிதறடிக்கப்பட்டுபோயின என்று வேதம் கூறுகிறது எத்தனை உண்மை.
அன்றைய ஆரம்பகாலத்திலும் ஆவிக்குரிய ஐக்கியம், தாகம், ஆகாரம் குறைந்துபோனபடியால், இனி சபையை நம்பினால் நம் ஆத்துமா வீணாய் போய்விடும் என்று உணர்ந்து சபையிலிருந்து பிரிந்துபோய் ஒருகூட்டம் தனிகுழுவாக ஜெபத்திலும், ஊழியத்திலும் அன்யோன்னியத்திலும் ஊறுதியாக தரித்திருந்தார்கள். அதுவே தனி சபையாக மாறிவிட்டது. இக்கூட்டம்தான் புதிய ஏற்பாட்டில் முதல் சபை ஆரம்பிக்கப்பட்ட பெந்தேகோஸ்தே நாளையேதங்கள் சபைகளுக்கு பெயராக வைத்து பெந்தேகோஸ்தே சபை (Pentecostal Church) என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள்.
அன்று யூதர்களின் முக்கிய பண்டிகையான பஸ்கா பண்டிகையின் கடைசி நாளான அதாவது 50வது நாளான பெந்தேகோஸ்தே நாளை(பெந்தேகோஸ்தே என்றால் 50வது நாள்) நினைவுக்கூறும் வண்ணமாக தங்கள் சபைக்கும் பெந்தேகோஸ்தே சபை என்று வைத்துக்கொண்டார்கள். அதாவது புதிய ஏற்பாட்டு சபையான முதல்சபையின் வழிவந்தவர்கள் என்று அறிவித்து கொண்டார்கள். ஆகவே அந்த சபைகள் மிக உற்சாகத்தோடு உயிருள்ள ஆவிக்குரிய சபையாக இருந்தது. ஆகவே மற்ற சபைகளிலிருந்து ஏராளமானபேர் பெந்தேகோஸ்தே சபைகளில் சோந்தார்கள். இப்போது மற்ற சபைகளைவிட பெந்தேகோஸ்தே சபை வசனத்திலும், ஆவியிலும் மிகவும் சிறப்பாக வளர்ந்தது.
நான் குறிப்பிட்டதுபோல சபை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 8 வருடங்கள்வரை சபையில் அந்நிய பாஷை ஆர்பாட்டங்கள் எதுவும் இல்லை. நல்ல வசனத்திலும், ஜெபத்திலும் பெந்தேகோஸ்தே சபை வளர்ந்தது. பிசாசு சும்மா இருப்பானா? 1901ம் ஆண்டு பிறந்தது. பிசாசு திட்டமிட்டப்படி உலகதோற்றத்தில் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப்போல18 வயது சிறுமியை உளறவைத்து பிசாசு அதை அந்நியபாஷை என்று ஜனங்களை நம்பவைத்தான். மற்ற எல்லா சபைகளிலும் மனந்திரும்பியஅனுபவமுள்ளவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களும் உண்டு - தங்கள் சபையிலும் அப்படிப்பட்டவர்கள் உண்டு. ஆகவே மற்றவர்களிலிருந்து தங்களைவித்தியாசப்படுத்திக்கொள்ள, தங்களை வேறுப்படுத்திக்கொள்ள அந்நியபாஷை என்ற செயற்கையான உபதேசத்தை பயன்படுத்திக்கொண்டனர். அந்நியபாஷை பேசின பிறகுதான் அதற்கு வேதத்தில் ஆதாரத்தை தேடினார்கள். அப்போஸ்தலர் நடபடிகளில் 3 இடங்களில் பேசப்பட்ட பாஷைகளை ஆதாரமாக்கி தாங்கள் பேசுவதும் அதேமாதிரிதான் என்றார்கள். ஆகவே நாங்கள்தான் ஆவியானவர் நிரப்பிய ஆரம்பகால முதல் சபையின் வழிவந்தவர்கள் என்றார்கள். இப்படித்தான் நல்ல ஆவிக்குரிய சபையான பெந்தேகோஸ்தேசபை போலியான பாஷை பேசும் போலி விசுவாசிகள் நிறைந்த சபையாக மாறியது.
அந்நியபாஷையின் வரலாறு
இனி சபைகளின் ஆரம்பகால நிகழச்சிகளை கூறி நேரம் போக்காமல் விஷயத்துக்குள் கடந்து போவாம்.
இந்த அந்நியபாஷைக்கு பழைய ஏற்பாட்டின் வரலாறு என்ன? புதிய ஏற்பாட்டில் அதற்கு தொடர்பு உண்டாக காரணமென்ன? என்பதை அறிந்தால் இந்த போலி அந்நியபாஷைகளை நீங்கள் இனம் கண்டுக்கொள்ளமுடியும்.
இதற்கு வேதபுத்தகத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் எழுதப்பட்ட சரித்திர வரலாற்றை வாசிக்கவேண்டும். ஆதி 11:1,6-9. அன்றை உலக ஆரம்பகாலங்களில் உள்ள மக்கள் எல்லாரும் ஒரே பாஷையைதான்பேசினார்கள், அனைத்து மக்களுக்கும் ஒரே ஒரு பாஷைதான் இருந்ததது.பாஷை-மொழி என்றால் ஒருவர் மற்றவரோடு பேச தொடர்புக்கொள்ள உபயோகிக்ககூடிய வித்தியாசமான சப்தம். ஆதிகாலத்தில் ஊமையர்கள் ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளும் செய்கைமொழிதான்,கற்கால மக்களுக்கு தொடர்புமொழியாக பயன்பட்டது. நாளாகநாளாக ஒரு குறிப்பிட்ட பொருளை சுட்டிக்காட்டிபேச அதற்கு எல்லாரும் குறிப்பிட்ட வார்த்தையைபெயராக சூட்டினார்கள். இப்படி பல பெயர்கள் வார்த்தைகளாக உருவானது பின் அதுவே மொழியாக மாறியது. அதைத்தான் ஆதிமக்கள் பேசும் மொழியாக்கிக்கொண்டார்கள். அன்றைய உலகம் ஒரே பேச்சும், ஒரேபாஷையுமாயிருந்தது என்று கூறுகிறது. ஆதி 11:1.
அன்றைய நாட்களில் பசிக்கு சாப்பாடு கிடைத்தால்போதும் என்று வாழ்ந்தார்கள். வேட்டையாடி, பயிரிட்டு அதை சாப்பிட்டு மீதி நேரம் முழுவதும் ஜனங்கள் சும்மாயிருந்தார்கள்.
அறிஞர்.அண்ணா அவர்கள் கூறினார். வீதி ஓரங்களில் வேலையற்றதுகள், வேலையற்றதுகள் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள்என்றார். இந்த வேலைவெட்டியில்லாதவர்கள் உண்டுவிட்டு சும்மா இருக்கும்போது பலவித தேவையற்ற சிந்தனைகள் அவர்களுக்குள் உருவாகிறது. இன்று இப்படி வேலையில்லாத வாலிபர்களைத்தான் கைநிறைய பணம்கொடுத்து பயன்படுத்தி தீவிரவாதத்துக்கு பயன்படுத்துகிறார்கள். ஆகவே சாப்பிட்டுவிட்டு வேலை ஒன்றும் இல்லாத அந்தகால மக்கள் எல்லாரும் இணைந்து வானத்தைத்தொடும்உயர்ந்தகோபுரம் பணிந்தால் என்ன? (இப்போதுள்ள ஜெபகோபுர வியாபார கடைகளைபோல என்று கூறமாட்டேன்). கோபுரம் பணியும் ஆசை மக்களுக்குள் ஏற்பட்டது. உடனே கோபுரம் பணியும் வேலையை மிகத்திறமையாக செய்தார்கள். பெரியபெரிய எஞ்ஜினியர்கள் கட்டும் நான்கு அடுக்குமாடிகள்கூட அடித்தளம் சரியில்லாமல், கலவையின் அளவு சரியில்லாமல் கட்டிய சில நாட்களில் இடிந்துவிழுந்தது என்று தினசரி செய்திதாள்களில் கேள்விப்படுகிறோம்.
ஆனால் எஞ்ஜினியர்கள், படித்தவர் இல்லாத அக்காலத்தில் எத்தனை திறமையாக யோசித்து வானத்தைதொடும் அளவு உயர்ந்த கோபுரத்தை பணித்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது மிக ஆச்சரியமாகயிருக்கிறது. இந்த கட்டிட ஞானத்தோடு இரண்டு தவறான எண்ணங்கள் இவர்களுக்குள் ஏற்பட்டது. அதுதான் தேவனின் மனதை தாக்கின. ஆதி 11:6-9.
(1). தங்களுக்கு பேர் உண்டாக இந்த கோபுரத்தை பணிவோம் என்றார்கள் (வச 4).
(2). தாங்கள் செய்ய நினைத்தது எதையும் யாராலும் தடைசெய்ய முடியாது என்று நினைத்தார்கள் (வசன 6).
முதலாவது கடவுளைப் புறக்கணித்தார்கள். தங்களுக்கு பெயர் உண்டாக வேண்டும்.
1. தான் இல்லாமல் போனால் இந்த சபையை, டையோசிஸ்ஸை கெடுத்துவிடுவார்கள் என்று சிலர் எண்ணுவதாலும் தங்களால்தான் சபையை நன்றாக நடத்தமுடியும் என்று எண்ணம் உள்ளவர்கள் உண்டல்லவா? இங்குதான் பிரச்சனை உருவாகிறது. தாங்கள் புகழப்படவேண்டும் என்று நினைக்கிறதால்தானே தேவனுக்கு கோபம் வந்தது. நான் கர்த்தர் என் புகழ்ச்சியையும், துதியையும் யாருக்கும் விட்டுகொடுக்கமாட்டேன் என்று கர்த்தர் கூறினார். ஏசா 42.8. தேவன் தனக்குவரும் புகழ்ச்சியை, யார் தனக்கென்று எடுத்துக்கொண்டாலும் தேவனுக்கு கோபம் வரும்.
2. அடுத்தது தான் செய்வதுதான் சரி என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. நாங்கள் எடுக்கும் முயற்சியை யாராலும் தடுக்கமுடியாதுஎன்ற பெருமையுள்ள எண்ணம் இவர்களுக்குள் இருந்தது. என் திட்டம், என்எண்ணம், என் செயல், நான் நினைப்பதுதான் நடக்கவேண்டும் என்ற எண்ணம் தேவனுக்கு பிடிக்காதது.
கர்த்தர் சொல்கிறார். உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல என் வழிகள் உன் வழிகளுமல்ல என்றார். ஆகவே இவர்களுக்குள்ளே இருந்த தேவனுக்கு பிரியமில்லாத பெருமை, தாங்கள் செய்வதை யாரும் தடுக்க முடியாது என்று அகம்பாவத்தை உணர்த்த கர்த்தர் நடவடிக்கை எடுத்தார். மேலும் இவர்கள் பணியும் கோபுரத்தை வானம்வரை உயர்த்தி என்ன பிரயோஜனம்? - பிரயோஜனமில்லாத விஷயத்துக்கு நேரத்தையும், பொருளையும் வீணாக்குகிறார்களே என்றும் இவர்களுக்கும்மேல் சக்தி வாய்ந்த ஒருவர் உண்டென்பதையும் இம்மக்கள் அறிந்து உணர்த்தப்படவும் இவர்களின் அகம்பாவத்தை அதமாக்கவும் கர்த்தர் இறங்கி வந்தார்.
இது நடந்த காலம் ஏறக்குறைய கி.மு 2225ம் ஆண்டு ஆகும். உடனே கர்த்தர் அற்புதமாக செயல்பட்டார். அவர்களைக்கொண்டேஅவர்கள் மூலமாகவே, அவர்களே ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து ஓடத்தக்கதாய் அவர்கள் நாக்கை மட்டும் தொட்டார். அவ்வளவுதான் ஒரே பாஷை-பல பாஷையாக மாறியது. இதைத்தான் செமிட்டிக் லாங்வேஜ்என்பார்கள். அதாவது ஒரே ஒரு மொழியிலிருந்து சுமார் 18 மொழிகள்உருவாயின.
சமஸ்கிருத மொழி பலமொழிகளுக்கு ஆரம்பம் என்பார்கள். அதுதான்செமிட்டிக் லாங்வேஜ் என்பது. சமஸ்கிருதம் கலக்காத இந்தியமொழிகள்மிககுறைவு அதைப்போலவே சம்பவித்தது.
அந்த சில நிமிடத்திலேயே ஒருவர் பேசியது மற்றவர்களுக்குபுரியவில்லை. யார் பேசியது யாருக்கு புரிந்ததோ அவர்கள் எல்லாரும் ஒரே கூட்டமாய் இணைந்து அந்த நாட்டைவிட்டே பெயர்ந்து உலகத்தில்மறுகோடிக்கு சென்று குடியேறினார். இப்படியாக யார்யார் எந்தெந்தபாஷைகளை பேசினார்களோ அவர்கள் எல்லாரும் கூட்டம் கூட்டமாக பிரிந்துபோனார்கள். இப்படியாக கர்த்தர் அந்த ஜனங்களை பாஷைகளால் சிதறடித்தார். இப்படி உலகெங்கும் சிதறிடிக்கப்பட்ட மக்கள் எல்லாருக்கும்பாவங்கள் கழுவப்பட பாவத்திலிருந்து விடுவிக்க தேவனோடு அந்த மக்களைஒப்புரவாக்க மேசியா இந்த உலகத்தில் பிறந்த விவரம் அறிவிக்கவேபெந்தேகோஸ்தே நாளை கர்த்தர் தெரிந்தெடுத்தார். பண்டிகையின் 50வது நாளிலே தேவன் தன் பரிசுத்த ஆவியானவராலே எல்லா மக்களையும்ஒப்புரவாக்கும் பணியும், இணைக்கும் பணியும் ஒன்றாக நடந்தேறியது.பிதாவோடு மனிதனை ஒப்புரவாக்கும் மீட்பின் பணியை இயேசுகிறிஸ்து நிறைவேற்ற அவரின் உதவியாளராக பரிசுத்த ஆவியானவர் பெந்தேகோஸ்தே நாளில் இறங்கி வந்தார். ஆவியானவர் வரப்போவதை இயேசுவானவர் பலமுறை பல வசனங்கள் மூலமாக முன்னறிவித்ததைதான் நீங்கள் அறிவீர்களே. அதை மீண்டும் நான் இங்கு எழுதவில்லை நீங்களே எடுத்து வாசித்துக்கொள்ளுங்கள்.
ஆவியானவரின் முதல் இறக்கம்
கிறிஸ்துவின் வாக்குப்படி சீஷர்கள் (இயேசுவின் தாய் மரியோளோடு சேர்த்து 120 பேர்) மேல் அறையில் காத்திருந்தபோது அவர்கள்மேல் ஆவியானவர் இறங்கினார்.
அப்போது நடந்த அதிசய சம்பவம் மூன்று
1. பலத்த காற்று - அக்கினிமயமான நாவு, 2. இடிமுழக்கம் போன்ற சத்தம், 3. பற்பல பாஷைகளில் பேசினது.
1. அக்கினி-காற்று: பழைய ஏற்பாட்டிலிருந்து காற்றும் - அக்கினியும்பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளம் என்பதை அறிவீர்கள். பழைய ஏற்பாட்டின் காலத்தில் வந்துவந்து திரும்பபோகிறவராக பரிசுத்த ஆவியானவர் காணப்பட்டார். இயேசுகிறிஸ்து மேலறையில் காத்திருங்கள் (ஜெபித்துக்கொண்டிருங்கள்) நான்போய் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவேன். பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்வரை நீங்கள் எங்கும் போகக்கூடாது, ஊழியமும் செய்யக்கூடாது என்று இயேசுகிறிஸ்து கட்டளையிட்டிருந்தார். இயேசுகிறிஸ்து வாக்களித்தப்படியே பரிசுத்த ஆவியானவரை சீஷர்களுக்குள் அனுப்பினார். ஜெபித்துக்கொண்டிருந்த சீஷர்கள் பலத்த காற்றும் அக்கினி மயமான நாவு (flam) திடீர் என்று கண்டவுடன் பரிசுத்த ஆவியானவர்வந்துவிட்டார் என்பதையும் தங்கள்மேல் இறங்கிவிட்டார் என்பதையும் உணர்ந்தார்கள்.
2. இடிமுழக்கம் போன்ற சத்தம்: திடீர் என்று கேட்டும் பயங்கரசத்தம் ஆட்களை எழுப்பி சத்தம் வந்த இடத்தில் கூட்டிசேர்க்க பயன்பட்டது. அன்றுபாபேல் கோபுரம் பணியும்போது கர்த்தரால் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து பஸ்கா பண்டிகைக்கு வருடாவருடம் வழக்கமாக வந்து கூடுவது வழக்கம். அப்படியே பற்பல தேசத்திலிருந்து, பற்பல பாஷைக்காரர் கூடிவந்திருந்தார்கள். இரவு எல்லாரும் உறங்கிக்கொண்டிருக்கஇடிமுழக்கம் போன்று என்றும் கேட்டிராத (பூமி அதிர்ச்சி போன்ற) சத்தம் கேட்டவுடன் என்னவோ ஏதோ என்று பயந்து சப்தம் வந்த இடமாகிய மேலறை கட்டிடத்துக்கு முன்பாக எல்லா ஜனங்களும் கூடிவிட்டார்கள். யாருக்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
3. பற்பல பாஷைப்பேசினார்கள்: அப்போதுதான் மற்றொரு அதிசயம் யாராலும் செய்யமுடியாத அதிசயம் நடந்தது. அதுதான் ஒரே வாயிலிருந்து,ஒரே நாக்கிலிருந்து சீஷர்கள் பற்பல பாஷைகளை (Other Languages) பேசினார்கள் என்று வேதம் கூறுகிறது. இந்த இடத்தில் நன்றாக கவனியுங்கள்.அந்நியபாஷை பேசினார்கள் என்று எழுதப்படவில்லை. அப்படியே ஒருவர் ஒரே ஒரு அந்நியபாஷை பேசினார் என்றும் எழுதப்படவில்லை. ஒரே ஒருவர் வாயிலிருந்து வெவ்வேறு பாஷைகள் வெளிவந்ததை கவனிக்கவேண்டும்.வெவ்வேறு பாஷையில் பேசினார்கள்........ ஒருவர் ஒரேசமயம் ஒரு பாஷைத்தான் பேசமுடியும் - நான் ஒரு இடத்தில் பிரசங்கம் செய்யும்போது மலையாளிகள் - தமிழர்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் மத்தியில் பேசும்போது தமிழில் ஒரு வார்த்தை பேசி - உடனே அதையே மலையாள வார்த்தையில் பேசி இருபாஷைக்காரர்களையும் பிரசங்கம் கேட்கும்படி செய்தேன். இங்கு அப்படியல்ல, விவரிக்கமுடியாத அதிசயம் நடந்தது. ஒரே வாயில் ஒரே சமயத்தில் தங்களுக்கு தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகள் பேசினார்கள் (பாஷைகள் வெளிவந்தன).
இந்த இடத்தில் ஒன்றை பெந்தேகோஸ்தேசபையினர் கவனிக்க மறந்துவிடுகிறார்கள் என்பதைவிட மறைக்கிறார்கள் என்பதுதான் சரியானது. காரணம் அவர்களுக்கு நன்றாக தெரியும். பேசப்பட்ட அந்த வெவ்வேறு பாஷைக்கும் அர்த்தம் இருந்தது. மேலும் பாஷைக்குரிய ஆட்களும் அங்கிருந்தனர். சீஷர்கள் வாயிலிருந்தும் வெளிப்பட்ட பாஷை அத்தனை பேருக்கும் அவரவர் பாஷை விளங்கினது. (இப்போது பெந்தேகோஸ்தேகாரர்கள் பேசுவது பாஷையே அல்ல என்பதை அறியவேண்டும்).
பாஷையில் என்ன கேட்கப்பட்டது
அன்று சீஷர்கள் வெவ்வேறு பாஷையில் பிரசங்கம் செய்யவில்லை.பிதாவாகிய (யாவேவை) தேவனின் மகத்துவங்களை பேசகேட்டார்கள்.
மகத்துவங்கள் என்றால் தேவன் ஆதியாகம காலத்திலிருந்து நடப்பித்தஅற்புத,மகிமையான காரியங்களை இவர்கள் மட்டும் அறிந்த கேள்விப்பட்ட மகிமையான காரியங்கள், மழையால் தேவன் முழு உலகத்தையும் அழித்தது பெரிய மகிமை. அப்படியே தனக்கு கீழ்ப்படிந்தவர்களை மட்டும் அற்புதபேழை மூலமாக மிருகங்களோடு காப்பாற்றியது. தேவன் வானத்தையும் பூமியையும் ஒரே வார்த்தையால் சிருஷ்டித்தது. வெறும் மண்கொண்டு மனுஷனை உண்டாக்கியது போன்ற அன்றைய காலத்தில் இவர்கள் மட்டும் அறிந்தவைகளை அன்று அவர்கள் சந்ததி சந்ததியாய் இந்த மகத்துவங்களை பாட்டாய்பாடி தங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்தவைகளை சாதாரண கலிலேயராகிய இவர்கள் எப்படி அறிவார்கள்?. தேவன் நடப்பித்த அந்தகால மகிமைகள் அத்தனையும் தங்களைத்தவிர வேறுயாருக்கும் தெரியாதே அப்படியிருக்க இவர்கள் வாய்மூலம் நம் பாஷையிலேயே இவர்கள் கூறகேட்கிறோமே. இவர்கள் யாவரும் கல்லேயரல்லவா, ஆகவே இது நம் தேவன் நடப்பித்த அற்புதம்தான்.அப்போ நம் தேவனுக்கும்-இவர்களுக்கும் தொடர்பு உண்டு. அப்படியானால் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம் என்று தயாரானவுடன்தான். பேதுரு எழுந்து நின்று பாஷைக்கு விளக்கம் தரவில்லை. பாஷையில் அருளப்பட்ட தேவமகிமைக்கு விளக்கம் கொடுத்து-தேவதிட்டத்தையும் பிரிந்து சிதறிடிக்கப்பட்டு போனவர்களை தேவனோடு ஒப்புரவாகும் மேசியாவை அனுப்பிய பிதாவின் திட்டத்தையும் கூறி சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவை பிரசங்கித்தார். அன்று 3000பேர் அப்போதே இயேசுவை ஏற்றுக்கொண்டு சபையில் சேர்ந்தார்கள்.
இங்கு கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம்
பிதா ஆவியானவர் மூலமாக யாருக்கு இரட்சிப்பின்-ஒப்புரவாகுதலின் செய்தியை வெவ்வேறு பாஷைகளில்பேசி அறிவித்தார்?. (வச.5) வானத்தின் கீழ் இருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்களுக்கு இந்த செய்தி கூறப்பட்டது........................................................(
-- Edited by devapriyaji on Friday 7th of January 2011 05:29:16 PM
2008 ஆகஸ்ட்மாத ஜாமக்காரனில் கடைசிபக்கம் நம்பாதீர்கள் என்ற தலைப்பில் எந்த பாஸ்டராவது ஊழியக்காரராவது, அவர் வரம்பெற்றவர் என்று கூறினாலும் அவர்கள் ஜெபவேளையிலோ, ஆராதனையிலோ அந்நியபாஷையில் பேசுங்கள் என்று கட்டளையிட்டால் அப்படிப்பட்டவர்களை நம்பாதீர்கள் அது ஆவியானவரின் ஆலோசனையில்லை என்று எழுதியிருந்தேன்.
உடனே பலர் கடிதம் எழுதி அந்நியபாஷையில் பேசுவதை தடை பண்ணாதீர்கள் என்று எழுதியிருக்கிறதே என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதில் ஒரு பாஸ்டர்கூட அதையே குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். இதை யோசித்து எழுதினார்களா? ஏனோ தானோ என்று எழுதியுள்ளார்கள் என்றுதான் நினைக்கிறேன். நான் எழுதியதற்கும் இந்த வசனத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? கொஞ்சம் யோசியுங்கள். அந்நியபாஷையில் பேசுங்கள் என்று ஒரு மனிதன் கட்டளையிட நீங்கள் அந்நிய பாஷையில் பேசினால் அது ஆவியானவர் பேசவைத்ததாக இருக்குமா? பேசுங்கள் என்றால் பேசுகிறீர்கள், நிறுத்துங்கள் என்றால் நிறுத்திவிடுகிறீர்கள். கொஞ்சம் யோசியுங்கள். இப்படி செய்தால் இது நீங்களே பேசுவதாகத்தானே அர்த்தம். வேதவசனத்துக்கும் உங்கள் செய்கைகளுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லை என்பதை இதை வாசிக்கிற உங்களுக்கு விளங்கவில்லையா?
சபை ஆராதனையில் உரத்த சப்தங்கள்:
இன்றைய சபைகளில் இரண்டு விதம் உண்டு. 1). சப்தத்தோடு ஆராதிக்கும் சபை. 2). சப்தங்கள் ஆர்ப்பாட்டங்கள் இல்லாது ஆராதிக்கும் சபை. இவைகளில் எது சரியானது என்பதை வேத வசனத்தோடு பிறகு விளக்குகிறேன்.
குறிப்பாக பெந்தேகோஸ்தேசபை மக்கள் மாத்திரம் ஏன் இப்படி சப்தமிடுகிறார்கள். அதுவும் ஜெப நேரத்தில் இடும் சப்தம் துதித்தலின் சப்தம் என்கிறார்கள். இப்படி சப்தத்துடன் துதித்தால்தான் கர்த்தர் கேட்பாரா? அல்லது மகிமைப்படுவாரா?
உடனே இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோ மதிலை சுற்றி வந்தபோது அவர்களின் துதித்தலின் சப்தம்மதிலை இடிக்கசெய்தது என்பார்கள். அப்படியே நீ உன் வாயை திறந்து சத்தமாக துதித்தால் எரிகோ மதில் இடிந்ததுபோல உன் வாழ்க்கையில் உள்ள மதில் போன்ற தடைகள் எல்லாம் இடிந்துவிழும் என்று பாஸ்டர் கூற பாவம் சபைமக்கள் அதை நம்பி, ஆடுகளைப்போல ஒன்றும் அறியாமல் ஆராதனை நடத்துபவர் கட்டளையிட்டதுபோல சத்தமாக துதிப்பதையும் அழுவதையும் காணும்போது என்ன பரிதாபமாக இருக்கிறது தெரியுமா? துதிப்பது என்பது தேவனுக்கு நன்றி கூறுதலுக்கு சமம். அந்த நன்றியை வெறும் சப்தத்தினால் காட்டாமல் நம் கிரியையினால் காட்டுவதைத்தான் கர்த்தர் விரும்புவார்.
வேதத்தில் அந்த எரிகோ மதில் சம்பவத்தின் குறிப்பிட்ட பகுதியை வாசித்துப்பாருங்கள். யோசுவா 6ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் மக்கள் எரிகோ மதிலை சுற்றிவந்தபோது எங்காவது துதியுங்கள் என்ற கட்டளை இடப்பட்டதா? ஆர்ப்பரியுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அப்படியே அவர்கள் ஆர்பரித்தார்கள். ஆங்கிலத்தில் அதை LOUD SHOUT என்றும், மற்றொரு மொழிபெயர்ப்பில் Great Shoutஎன்றும் குறிப்பிட்டுள்ளார்கள். துதித்தார்கள் என்றோ அல்லது சத்தமாக துதித்தார்கள் என்றோ குறிப்பிடவில்லையே. இவர்கள் வசனத்தையே மாற்றி அர்த்தம் கொள்ள செய்கிறார்கள். இதுவும் பிசாசு ஏதேனில் செய்த தந்திரம் போன்றதாகும்.
இப்படிப்பட்ட துதியின் சத்தினால் பல முழு இரவு ஜெபகூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. பல சபைகளில் முழு இரவு ஜெபங்களில் லவுட் ஸ்பீக்கர் வைத்து இராத்திரி முழுவதும் தோத்திரம் தோத்திரம் என்று மிகுந்த சத்தமிடுகிறதை நாம் கண்டிருக்கிறோம். முழு இரவு ஜெபம் தேவனோடு பேசத்தான் நடத்தப்படுகிறது. அதை ஸ்பீக்கர் வைத்தா அந்நியபாஷை சத்தத்துடன் ஜெபித்து மற்றவர்களின் தூக்கத்தை கெடுப்பது! அரசாங்க உத்தரவுப்படி இரவு 10 மணிக்குமேல் எந்த ஸ்பீக்கர் சத்தமும் கேட்கக்கூடாது. அரசியல் சொற்பொழிவும் நடத்தக்கூடாது என்பது கட்டளை ஆகும். அந்த அரசாங்க கட்டளையும் மீறி சப்தம் உண்டாக்கினால் அரசாங்கமே சபை ஆரானையை தடை செய்யும். அதை பிசாசு தடை செய்தது என்று கூறக்கூடாது.
பல கல்லூரிகளில், விடுதிகளில் இரட்சிக்கப்பட்ட பிள்ளைகள் கூடி ஜெபிப்பது நல்ல ஆசீர்வாதம். ஆனால் நல்ல ஆவிக்குரிய வார்டன்களே அப்படிப்பட்ட ஜெபத்தை நிறுத்த கட்டளையிட்டுவிட்டனர். கட்டளையிட்டவர் ஜெபத்துக்கு எதிரியல்ல. அந்த விடுதியில் இரவு படிப்பவர்கள் உண்டு, உறங்குபவர்கள் உண்டு, சுகயீனமாக படுத்திருப்பவர்கள் உண்டு. இப்படிப்பட்ட ஜெப சத்தம் அவர்களுக்கு இடையூறு அல்லவா? இது வேதவசனத்தை மக்களுக்கு வேறு விதமாக வியாக்கியானித்துக்காட்டி பிரசங்கிப்பதால் உண்டான ஆவிக்குரிய விபத்தாகும்.
ஆசீர்வாதம் (Blessing) என்ற பத்திரிக்கையில் 2004 செப்டம்பர் மாத இதழில் அட்டைப்படத்தில் ஆதி திருச்சபை அபிஷேகத்திற்காக கதறியது பரவசத்துக்காக அல்ல என்று எழுதி படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதை ஒரு சகோதரர் எனக்கு அனுப்பி ஞாபகப்படுத்தினார். புதிய ஏற்பாட்டிலோ - பழைய ஏற்பாட்டிலோ யாராவது அபிஷேகத்துக்காக கதறியதாகவாசிக்கிறோமா? விசுவாசிகளின் உடலைவருத்த ஏன் இப்படி தவறான வியாக்கியானத்தை உபதேசமாக அளிக்கிறார்கள் என்று விளங்கவில்லை! அபிஷேகத்தை கதறி விழுந்து பிரண்டு, விழுந்து சத்தம்போட்டு ஸ்தோத்திரத்தை வேகமாகச்சொல்லி, கைகளை வேகமாகதட்டி இப்படியெல்லாம் செய்தா? பெற்றுக்கொள்வது. என்ன கொடுமை! ஆதி புதிய ஏற்பாட்டுசபை பரிசுத்த ஆவியானவரை இப்படியா அனுபவித்தது. பாஸ்டர்மார்கள் அனைவரும் கொஞ்சம் சிந்தியுங்கள்.
ஆசீர்வாதம் பத்திரிக்கைமூலமாக அபிஷேகம் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் அபிஷேகத்தைப்பற்றி குறிப்பிடுகிற ஒரு வசனத்தைக்கூட அந்த புத்தகத்தில் குறிப்பிடவில்லை. மேற்கோள் காட்டப்படவுமில்லை. பின் எதற்காக அபிஷேகம் என்ற தலைப்பில் அந்த புத்தத்தை எழுதவேண்டும்?
அதே செப்டம்பர் 2004 ஆசீர்வாதம் பத்திரிக்கையில் 2 பக்கத்தில் டங்கன்கேம்ப்பெல் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். அதில் 6வது பத்தியில் அந்த ஓசையைஅவர்கள் கேட்டபோது திராளான மக்கள் கூடினர். அப் 2:6 அது என்ன சத்தம்? ஆண்-பெண் அனைவரின் ஆழமான அர்ப்பணிப்பின் ஒலியே அது என்று எழுதியுள்ளார். என்ன ஒரு அபத்தம் இது! அந்த சத்தத்தை மக்களின் சத்தமாகவா வேதம் குறிப்பிடுகிறது. இது கடைந்தெடுத்த பொய்யாய் தோன்றவில்லையா? அப் 2:2ல் வானத்திலிருந்து உண்டான முழக்கம் என்று அந்த குறிப்பிட்ட சத்தத்தைப்பற்றி வேதம் குறிப்பிடுகிறது. அது மக்களின் சத்தம் அல்லவே! இப்படிப்பட்ட தவறான வியாக்கியானத்தைத்தான் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையாககருதி பெந்தேகோஸ்தே சபைகளில்பெருத்த சத்தமும் ஆர்ப்பாட்டமும், ஆர்ப்பரிப்பும் பரிசுத்தாவியின் அடையாளமாக உபதேசிக்கிறார்கள். கர்த்தர் ஏவாளோடு பேசின வசனத்துக்கே பிசாசு தவறான அர்த்தத்தை கற்பித்து அவர்களை பாவத்தில் விழதள்ளினான். இப்போது பெந்தேகோஸ்தே சபைகளில் அதுதான் நடைபெறுகிறது. சத்தம்போட்டுஆராதிக்கவேண்டும் என்பதை நியாயப்படுத்தவே கட்டுரை எழுதியவர் அந்த சத்தம் என்பதற்கு தவறான வியாக்கியானத்தை கொடுத்துவிட்டார். எச்சரிக்கையாக இருப்போம்.
அந்நியபாஷையில் பேய் ஓட்டுபவர்
2008 செப்டம்பர் மாதம் 21ம்தேதி இரவு திருச்சி பாஸ்டர்.விக்டர் ஞானராஜ் அவர்களின் பிரசங்க நிகழ்ச்சியை TVயில் காணநேர்ந்தது. அதில் அவர் ஒரு வீட்டுக்குப்போனாராம், அந்த வீட்டிலிருந்து திரும்பும்போது அந்த வீட்டுக்குழந்தை புர்ர் புர்ர் என்று சப்தத்தை வாயில் உண்டாக்கியதாம், அந்த குழந்தை மலம் கழிக்கவேண்டும் என்பதற்காக அப்படி கூறியிருக்கும் என்று பாஸ்டர் நினைத்தாராம். ஆனால் அந்த அம்மா சொன்னார்களாம் அந்த குழந்தை பாஸ்டருக்கு பிரைஸ் தி லார்ட் என்று கூறுகிறதாக விளக்கம் கொடுத்தார்களாம். அதன்மூலம் அறிவதென்ன! அந்த குழந்தைபுர்ர் என்றால் பிரைஸ் தி லார்ட் என்று அதன் தாய்க்கு விளங்குகிறது. ஆனால் நமக்கு விளங்கவில்லை. அதுபோல் நாம் அந்நியபாஷையில் பேசினால் பிதாவுக்கு விளங்கும். பேசுகிற அல்லது கேட்கிற உனக்கு விளங்கவேண்டும் என்பது அவசியமில்லை என்கிறார். இதற்கு ஆதாரமாக 1கொரி 14:2,3 வசனங்களைக்கூறி அந்நியபாஷையில் பேசுகிறவன் தேவனிடத்தில் இரகசியம்பேசுகிறான். அதற்கு எந்த விளக்கமும் தேவை இல்லை. கர்த்தர் விளங்கிக்கொள்வார் என்று பாஸ்டர்.விக்டர் ஞானராஜ் கூறியதை நான் கேட்டப்போது என்னால் நம்பமுடியவில்லை. அன்றுதான் நான் முதன்முறையாக அவர் பாஸ்டரானபிறகு அவர் பிரசங்கத்தை கேட்டேன். பெங்களுர் FEBAவானொலி நிலைத்தில் இவர் வேலை செய்துகொண்டிருந்தபோது எத்தனை ஆழமாக ஞானமாக வேதபாடம் நடத்தினார். மெத்த படித்த பட்டதாரியான இவர் எழுதப்படிக்க தெரியாத சில பாஸ்டர்மார்கள் விளக்கம் கொடுப்பது போல் பேசியதை என்னால் நம்பவே முடியவில்லை. 1 கொரி 14:2,3ல் வசனத்தின் சரித்திர பின்னணி கூட அறியாமல் படிப்பறிவு இல்லாதவர்போல பேச எப்படி அவருக்கு மனம் வந்தது. மேலும் ஒரு உதாரணம் கூறினார்: பெங்களுரில் பலபிசாசுகள் பிடித்த ஒருவனுக்கு இவர் ஜெபித்தபோது AK.47 துப்பாக்கியாக அந்நியபாஷையில் பேசி ஒவ்வொரு பிசாசையும் சுட்டு வீழ்த்தினேன். எல்லா பிசாசுகளும் ஓடிவிட்டன. இது எப்படியிருக்கிறது?அந்நியபாஷையில் சிலர் பிசாசை விரட்டுவதைப்பற்றி பழைய ஜாமக்காரனில் எழுதியுள்ளேன். எதையும் வசனத்தில் இருக்கிறதா என்பதை சோதித்தறியுங்கள் என்றும் எழுதினேன். அதை பாஸ்டர் அவர்கள் மனதில்வைத்து சிலர் வேதத்தில் இருக்கிறதா? வசனத்தில் எழுதியுள்ளதா? வேத ஆதாரம் உண்டா? என்றெல்லாம் கேட்பார்கள், எழுதுவார்கள் என்று கிண்டலாக பேசி இப்படி யாராவது எழுதியதை வாசித்த யாரும் அந்நியபாஷையில் பேசாமல் இருந்துவிடாதீர்கள் என்று கூறி மேலும் ஒரு உதாரணம் கூறுகிறார்: சிலர் எழுதுவார்கள் வேதத்தில் இல்லாததை நம்பாதீர்கள் என்பார்கள்!
ஒரு பெண் இயேசுவின் வஸ்திர ஓரத்தை தொட்டு சுகமானார். ஆனால் மோசேயின் காலத்திலும், வேதத்திலும் நியாய பிரமாணத்திலும் அப்படி ஒரு அற்புதம் எழுதப்படவில்லையே என்று அந்த பெண் நினைத்திருந்தால் அன்று அவளுக்கு சுகம் கிடைத்திருக்குமா? எல்லா அற்புதங்களும், எல்லா அடையாளங்களும் வேதத்தில் இருக்கிறதா என்று தேடாதீர்கள்.
அப்படியே அந்நியபாஷையை குறித்தும் என் சொந்த அனுபவத்தை கூறுகிறேன். நான் அன்று பேசிய அந்நியபாஷைக்கு அர்த்தம் புரியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பிசாசுகள் ஓடின, இது என் சொந்த அனுபவமாகும். ஆகவே நான் தைரியமாக பேசுகிறேன். ஆகவே அந்நிய பாஷையில் பேசுங்கள் என்று கூறிமுடித்தார். இப்படியும் படித்த ஊழியர்கள் பேசுவதைக்கண்டு ஆச்சரியம் அடைகிறேன். இவருடைய சபை மக்கள் வசனத்தில் வளரவே வழியில்லை. அந்த சபை மக்களுக்காக பரிதாபப்படுகிறேன். தாங்கள் பேசுவதும், எழுதுவதும், உபதேசிப்பதும் வேதவசன அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று வேதம் தெளிவாக கூறும்போது வசனத்தில் இருக்கிறதா? என்று ஆராயவேண்டாம் என்று பகிரங்கமாகவே கூறும் இப்படிப்பட்டவர்களுக்கு CSI, கத்தோலிக்கர் சபைகளில் உள்ள சில ஊழியர்கள் தேவபயம் இல்லாது ஊழியம் செய்வதுபோல் அல்லவா இவரும்தேவபயம் அற்று பிரசங்கம் செய்கிறார்.
கொஞ்சம் பைபிளை திறவுங்கள். 1 பேதுரு 4:11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கின்படி போதிக்ககடவன்.
தீத்து 2:8 ...உபசேதத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும், குற்றம் பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.
கலா 1:8 .... வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்கு பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.
மேலே வாசித்த வசனங்கள் யாவும் பிரசங்கிக்கிறவன் வேதவசன அடிப்படையில்தான் பிரசங்கிக்கவேண்டும். சொந்த அனுபவங்களை உபதேசமாக கூறக்கூடாது என்று இத்தனை தெளிவாக ஆவியானவர் எழுதியிருக்கும்போது சொந்த அனுபவத்தை உபதேசம் ஆக்குவது துணிகரமல்லவா! இப்படித்தான் அனைத்து பெந்தேகோஸ்தே சபைகளும் தங்கள் சொந்த அனுபவங்களை உபதேசங்களாக போதித்து வருகிறார்கள். சபைமக்களை வசனத்தைவிட்டு விலக்குகிற பாஸ்டர்மார்களின் முடிவு எப்படியிருக்குமோ! ஜாக்கிரதையாக இருங்கள்! யார் பேசினாலும் நிச்சயம் வேதத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அது உங்களின் தவறான வழியை செவ்வைப்படுத்தும்.
நீங்கள் எல்லா ஆவிகளையும், நம்பாமல் அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 1 யோ 4:4.
பாஸ்டர்.விக்டர் ஞானராஜ் அவர்கள் என் ஆரம்பகால நண்பர் என்றாலும், கையில் வேத புத்தகத்தை வைத்துக்கொண்டு வேதவசனத்தின்படி சபைமக்களுக்கு உபதேசிக்காமல் தன் சொந்த அனுபவத்தை உபதேசமாக்கி சபைமக்களின் மனதை கெடுத்துவிட்டாரே!
நீங்கள் எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். 1 கொ 14:5.
அந்நியபாஷை பேசுகிறதற்கும் தடை பண்ணாதிருங்கள். 1 கொரி 14:39.
இந்த இரண்டு வசனங்களின் பின்னணியை (Concept) வைத்துதான் இந்த வசனத்தின் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவேண்டும்.
ஆக அந்நியபாஷையை பேசுங்கள்! என்று யாரும் யாருக்கும் கட்டளையிடமுடியாது. அப்படி கட்டளையிட்டு நீங்கள் அந்நியபாஷையில் பேசினால் அது பரிசுத்த ஆவியானவரால் உண்டான கிரியை அல்ல. அது உங்கள் பழக்கத்தாலும் நீங்கள் பெற்ற பயிற்சியினாலும் நீங்களே பேசுவதாகும். ஆவியானவருக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று நீங்கள் அறியவேண்டும்.
கடந்த சில மாதங்களாக அந்நியபாஷை என்பது பரிசுத்த ஆவியின் நிறைவுக்கு ஒரு அடையாளமே அல்ல என்ற சத்தியத்தை விளங்கவைக்க பல விவரங்களை நான் தொடர்ந்து ஜாமக்காரனில் எழுதிக்கொண்டுவந்தேன். உலகில் பலர் இந்த கருத்துக்கு பெருத்த வரவேற்பையும், ஊக்கத்தையும் எனக்கு அளித்தனர். இந்த குழப்பத்தைப்பற்றிய சத்தியத்தை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்து பெந்தேகோஸ்தே சபையினர் இந்த விஷயத்தில் மக்களை குழப்பவும், ஏமாற்றவும் இவர்கள் வேதத்தில் சுட்டிக்காட்டும் வசனத்தைப்பற்றியும் வேதத்தில் அந்நியபாஷைபேசும் மூன்று முக்கியமான சம்பவங்களையும் அதன் நோக்கத்தையும், அதன் விளக்கத்தையும்பற்றி மட்டும் கூறிமுடித்து அவைகளை தொகுத்து புஸ்தகமாக வெளியிட தீர்மானித்துள்ளேன்.
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறின பிறகு சீஷர்கள் சபைகளை ஸ்தாபித்தனர். அவர்கள் சபைகளை ஸ்தாபித்து 1901-ம் ஆண்டுவரை அந்நியபாஷை பிரச்சனையே இல்லாமல் இருந்தது. ஆனால் அதன்பின் இடைசெருகலாக தோன்றிய இந்த அந்நியபாஷை இப்போது மட்டும் எப்படி வந்தது என்பதை நாம் அறிந்தோம். இந்த அந்நியபாஷை சபைக்குள் நுழைந்த காலத்திலிருந்து மனம் திரும்புதலுக்குமுக்கியத்துவம் குறைந்துபோய் அந்நியபாஷைக்கு முதலிடம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
அதிலும் ஒவ்வொரு ஆராதனையிலும் இயேசுவை பின்தள்ளி பரிசுத்த ஆவியானவருக்குபெரியளவில் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆராதனை தொடங்கியவுடன் ஆவியானவரை எல்லாரும் கைதட்டி வரவேற்போம் என்கிறார்கள். எனவே ஆவியானவர் என்னவோ வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு சிலநாள் கழித்து வீட்டுக்கு திரும்பும் நபரை வரவேற்பதுபோல வரவேற்கிறார்கள். இந்த புத்தியும் இவர்களுக்கு சுயமாகவோ அல்லது ஆவியானவர் மூலமாகவோ தோன்றவில்லை.
இது அமெரிக்க இறக்குமதி சரக்கு ஆகும். அமெரிக்காவில் பெனிஹின் என்ற ஊழியர் எழுதியGOOD MORNING HOLY SPIRIT என்ற புஸ்தகத்திலிருந்தும் TVயில் பெனிஹின் நடத்தும் ஆராதனை முறையை காப்பியடித்தும் ஆராதனை நடத்துகிறார்கள். பெனிஹினுக்குள்ள ஆவியே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டதல்ல. ஆனால் நம் ஆட்கள் அதை பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று நம்பி அவரைப் பின்பற்றுகிறார்கள். அவர் அப்படிப்பட்ட ஆராதனையை ஆரம்பிக்கும்முன் அதே அமெரிக்காவில் எத்தனை பெந்தேகோஸ்தே சபைகளும், TV பிரசங்கிமார்களும் உண்டே! அவர்கள் யாராவது இப்படிப்பட்ட ஆராதனையை அன்று தொடங்கினார்களா? அவர்கள் உள்ளத்தில் இது தோன்றியதா? ஆவியானவர் ஒருவரே இப்படி வித்தியாச வித்தியாசமான முறையில் கிரியை செய்வாராக?
வேதத்தில் பரிசுத்தாவியானவரின் முதல் இறக்கத்திற்குபின் சீஷர்கள் ஆவியில் ஒருமனப்பட்டு இணைந்து ஒன்றாக சிந்திப்பதையும், ஒரேமாதிரி செயல்படுவதையும் காண்கிறோம். ஆவியானவரை சபையில் கைத்தட்டி, வரவேற்று ஆராதிப்பதை வேதத்தில் எங்காவது காண்கிறோமா?
வேதம் கூறுகிறது பரிசுத்த ஆவியானவர் நாம் இரட்சிக்கப்படும்போதே நமக்குள் வந்துவிடுகிறார் எபே.1:13, யோ.14:16,17,23,24, எபே.4:30 தேவன் பரிசுத்த ஆவியானவரை நமக்குள் என்றென்றும் நிரந்தரமாய் தங்கி நமக்கு உதவிசெய்யும் திட்டத்தோடுதான் பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார்என்று பார்க்கிறோம். யோ.14:16 வாசித்துப்பாருங்கள் என்றென்றுமாய் உங்களோடு இருக்கும்படி என்று இயேசு வாக்களித்தார். அதன்படியே இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளுக்குள் பரிசுத்த ஆவியானவர் வந்து விட்டார் என்பதை உறுதியாக்கும்படியாய் எபே.4:30ல் உங்களுக்குள் இருக்கும் ஆவியானவரை துக்கப் படுத்தாதிருங்கள் என்கிறார். திரும்ப திரும்ப கூறிப்பாருங்கள். உங்களுக்குள், உங்களுக்குள்ஆவியானவர் இருக்கிறார். அதை மறுபடியும் உறுதியாக்க உலகத்திலிருப்பவனைக்காட்டிலும் உங்களுக்குள் இருப்பவர் பெரியவர். இதில் உங்களுக்குள், உங்களுக்குள் என்ற வார்த்தையை உச்சரித்துப்பாருங்கள்.
பெந்தேகோஸ்தே சபையில் எது நடந்தாலும் அது உண்மை, அது சரியாகத்தான் இருக்கும் என்றுCSI, லூத்தரன் சபையில் உள்ளவர்கள் நம்பி பிரசங்கித்துக்கு முன்பாக "ஆவியானவரே ஆவியானவரே இப்பவாரும் இறங்கிவாரும் எங்கள் உள்ளத்திலே" இப்படி பாடிய பிறகுதான் பிரசங்கங்களை ஆரம்பிக்கிறார்கள். என்ன அர்த்தமற்ற பாடல் இது? அவர்கள் செய்கிறார்கள் என்பதால் நாமும் செய்யவேண்டுமா? அவர்களே ஆவியானவரை வரவேற்று கைதட்டுகிறார்கள், இது அவிசுவாசம் இல்லையா? என்ன முட்டாள்தனம் இது? இதுவரை ஆவியானவர் இவர்கள் சபையில் எங்கிருந்தார்?என்ற கேள்விகேட்க யாருக்கும் தோன்றவில்லையே! பாஸ்டரின் உள்ளத்திலும் ஆவியானவர் இல்லை!
சபைக்குள்ளும் ஆவியானவர் இல்லை!. சபை மக்களுக்குள்ளும் ஆவியானவர் இல்லை!.
சபைக்குள்ளும், சபைமக்களுக்குள்ளும், பாஸ்டருக்குள்ளும் ஆவியானவர் இருந்தால் இப்படி வாரும்! வாரும்! என்று கூப்பிடுவார்களா! ஆவியானவரை வரவேற்போம் என்று சொல்வார்களா? என்ன விசுவாசம் இது. அதனால்தான் இவர்கள் சபையில் மனந்திரும்புதலுக்கு முக்கியத்துவம்இல்லாமல்போய் அந்நியபாஷைக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர்கள் பிரசங்கிப்பதால், அந்நியபாஷை இல்லை என்றால் மனந்திரும்புதலும் இல்லை என்ற தவறான உபதேசம் சபைக்குள் நுழைந்து சபையை குட்டிசுவராக்கிக் கொண்டிருக்கிறது.
எங்கள் வீட்டுக்கு சென்னையிலிருந்து வந்த ஒரு வாலிபபாஸ்டர் தான் வெளியிடும் பத்திரிகையை என்னிடம் கொடுத்து, தான் பைபிள் காலேஜ் நடத்துவதாகவும், பல டிகிரிகளை மாணவர்களுக்கு கொடுப்பதாகவும் அறிவித்தார். அவர் போனபின் அவர் பத்திரிக்கையை திறந்து தலைப்புகளைமட்டும் படித்தேன். அதில் அவர்கள் சபையின் விசுவாச பிரமாணம் என்று எழுதி வரிசையாக சில விஷயங்களை எழுதியிருக்கிறார். அதில் ஒன்று எங்கள் சபையின் விசுவாசம் - உபதேசம் என்னவென்றால் பரிசுத்தாவியை அந்நியபாஷை அடையாளத்தோடு ஒவ்வொருவரும் பெறவேண்டும். இந்த உபதேசத்தின்படி அந்நியபாஷை பேசாவிட்டால் திருவிருந்து கிடையாது. அப்படியேஅசெம்பளிஸ் ஆப் காட் சபையின் வேதாகம கல்லூரியின் அப்ளிகேஷன் பாரத்திலும் அந்நியபாஷைபேசியிருக்கவேண்டும் என்ற கண்டிஷனைக் கண்டேன்.
இதனால்தான் போலியான அந்நியபாஷையை கற்றுக்கொண்டு பெந்தேகோஸ்தே வாலிபர்கள் சபை நடவடிக்கைகளில் கலந்துக்கொள்கிறார்கள். அவர்கள் பேசுவது அந்நியபாஷையா அது போலியா என்பதை பாஸ்டருக்கு அறிய முடியவில்லை. காரணம் பாஸ்டர் பேசுவதும் அந்நியபாஷை இல்லையே! அதில்தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.
சென்னையில் மிகப் பெரிய பிரபலமான பெந்தேகோஸ்தே சபை ஒன்று உண்டு. ஒவ்வொரு ஞாயிறும் 6 ஆராதனைகள் அங்கு நடக்கின்றன. அதில் ஆங்கில ஆராதனையும் நடத்துகிறார்கள். இந்தஆங்கில ஆராதனையில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் நிறைந்திருப்பார்கள். ஒரே பாட்டு சத்தமும், ஆர்ப்பரிப்பும், அந்நியபாஷை சத்தமும், கைதட்டுதல், நடனம் ஆடுதல் ஆகியவை மிகுதியாக இருக்கும். அது ஆராதனைபோலவே இருக்காது. ஒரு கெட்டு டூ கெதர்போலதான் இருக்கும். அதாவது மாலை டீ பார்ட்டிப்போல அது இருக்கும்.
வாலிபப்பெண்கள் - ஆண்கள் கூடிக்குலாவ இதை சிறந்த நேரமாக தெரிந்துக்கொண்டு ஆராதனை முடிந்தபின் அப்படியே இரண்டு, இரண்டு பேராய் ஜோடியாக மகாபலிபுரசாலையில்பைக்கிலும், சிலர் காரிலும் பயணப்பட்டு பல ஆபாச காரியங்களில் ஈடுபட்டு பலமுறை போலீஸ் அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். சென்னையில் ஒரு போலீஸ் அதிகாரியே இதை அறிவித்துள்ளார்.
பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தத்தை அளிப்பதற்காகவே இயேசுவின் கிருபையால் நமக்கு அளிக்கப்படுகிறார். ஆனால் இவர்கள் ஆராதனையில் பலமுறை அல்லேலுயா கூறிஅந்நியபாஷையில் பேசிவிடுகிறதினால் பாஸ்டர் முதல் பெற்றோர்வரை பிள்ளைகளின் விஷயத்தில் ஏமார்ந்துபோய்விடுகின்றனர்.
இவைகளைக்குறித்து எனக்கு பல பெற்றோர்கள் ஏராளமான செய்திகளை அனுப்பியுள்ளார்கள். அதிலே ஒரு பெண் தன் பெற்றோருக்கு கடிதம் எழுதும்போது நம் பாஸ்டர் ஒவ்வொரு ஆராதனையிலும்அந்நியபாஷைபேசி தீர்க்கதரிசனம் கூறுங்கள் என்கிறாரே! எப்படி அப்பா தீர்க்கதரிசனம் தானே வரும்என்று கேட்டு பெற்றோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த பெண்ணின் பெற்றோர் மிக கோபமாக எழுதிய பதில் கடிதத்தில் சபைமக்களை உங்கள் பாஸ்டர் தீர்க்கதரிசனம் சொல்லசொன்னால் குறிப்பிட்ட சில பெண்களின் பெயர்களை குறிப்பிட்டு எழுதி அந்த பெண்களைப்பற்றி பாஸ்டருக்கு ஞாபகப்படுத்தி கர்த்தர் சொல்லும் தீர்க்கதரிசனம் என்று சொல்ல சொல்ல சொல்லுங்கள். பாஸ்டர் அமைதியாகவிடுவார். பாஸ்டரின் குடும்பம் ஏலியின் குடும்பம் போலாகிவிட்டது. அவரின் பிள்ளைகள் செய்யும் அக்கிரமம்தேவ சமூகத்துக்கல்ல. சென்னையில் பெண் போலீஸ் நிலையம் வரைக்கும் புகாராக சென்றுவிட்டது. பெண் கமிட்டிவரை மற்றொரு புகாரும் போய்விட்டது. பிள்ளைகளின் கதையைகாருண்யா கல்லூரி மலையாள பெண் ஒருவள் எழுதிய கடிதத்திலிருந்து பிள்ளைகளின் காரியத்தை தீர்க்கதரிசனமாக தொடங்கவேண்டும்.
சபையில் உள்ள இந்நிலைக்கு வாலிப பெண்பிள்ளைகளும் முக்கியகாரணமாகும். பாஸ்டரின் பிள்ளைகள் என்பதற்காக பல பலவீனமான பிள்ளைகள் பாஸ்டரின் ஆண்பிள்ளைகளுடன் நெருங்கி பழகிவிடுகிறார்கள். இதில் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால் சில திருமணமான பெண்களும் இந்த தவறுக்குள் சிக்கியுள்ளார்கள் என்பதே! ஆகவே தீர்க்கதரிசனத்தை முதலாவது பாஸ்டரின் குடும்பத்துக்கு சொல்லுங்கள் என்று அந்த கடிதத்தில் எழுதியிருக்கிறார். சில இக்கட்டான விஷயங்கள் குடும்பத்தில் உண்டாயின. பாதிக்கப்பட்ட பெண்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது எங்கள் பிள்ளைகள்விபச்சாரம் செய்யவில்லை - பழைய ஏற்பாட்டில் விபச்சாரம் மட்டும்தான் பாவம் என்று எழுதியுள்ளது. ஆனால் என் பிள்ளைகள் தொட்டு பேசியுள்ளார்கள், தொட்டு பழகியுள்ளார்கள்.இக்காலத்து வாலிபர்களுக்கு இது சகஜமான விஷயம். ஆகவே அது பாவமல்ல என்று வசன அடிப்படையில் பதில் வந்ததாம்.
ஆனால் ஒரு பெண்னை இச்சையோடு பார்த்தாலே விபச்சாரத்துக்கு சமம் என்று வேதம் போதிக்கிறது. கொரி:7:1 ஸ்தீரியை தொடாமல் இருப்பது மனிதனுக்கு நல்லது என்று எழுதியுள்ளது.
இந்த வசனமெல்லாமல் பாஸ்டருக்கு ஞாபகப்படுத்துங்கள். பாதிக்கப்பட்ட ஐந்தாறு குடும்பங்கள் இப்படியாக எழுதியுள்ளார்கள். இவர்கள் தாங்களும் அந்த பாவத்துக்கு உடந்தையாக இருந்தோம் என்றும் சம்மதிக்கிறார்கள். சபையின் தலைமைக்கும் இச்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
அந்நியபாஷையையும்,தீர்க்கதரிசனத்தையும் இந்த சபையில் செயல்படும் விதத்தைப் பார்த்தீங்களா? அந்நியபாஷை இவர்களை எங்கு கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.
ஆகவேதான் கூறுகிறேன், பரிசுத்த ஆவியானவருக்கு அந்நியபாஷையை அடையாளமாக்காதீர்கள் அது வரம் என்று வேதம் கூறுகிறது பரிசுத்த கிரியையை முக்கியத்துவப்படுத்துங்கள்.
அந்த ஆவியானவரின் ஆளுகைக்குள் உங்களை முழுவதும் விட்டுக்கொடுப்பதுதான்ஆவியானவரின் நிறைவு என்பதாகும். அந்த ஆவியானவரை ஆங்கில மொழிபெயர்ப்பு HELPERஉதவியாளர் என்று மொழிபெயர்த்துள்ளது. பெற்றோருக்கு பிள்ளைகள் காரியத்தில் நடந்துகொள்ள வேண்டிய விஷயத்தில் ஆலோசனைகூறி ஆவியானவர் உதவுவார். ஊழியம் செய்தாலும் தன் ஆண்பிள்ளைகள் யாரோடு நெருங்கி பழகுகிறார்கள்! அந்த பிள்ளைகளின் நடவடிக்கை எப்படியிருக்கிறது. அவர்கள் எங்கு போகிறார்கள், எத்தனை மணிக்கு வீடு திரும்புகிறார்கள், இதையெல்லாம் பாஸ்டர் அல்லது ஊழியரின் மனைவியும் கவனிக்க கடமைபட்டிருக்கிறார். காரணம் சபையின் விசுவாசிகளைவிட சபையின் பாஸ்டரை அல்லது கன்வென்ஷனில் என்னைப்போல் பிரசங்கிப்பவரைத்தான் எல்லா மக்களின் கண்களும் காணும். நம்முடைய குடும்பத்தையும்நம்முடைய பிள்ளைகளையும்தான் எல்லாரும் கண்கொத்தி பாம்புபோல கவனிப்பார்கள்.
பாஸ்டர் அல்லது பிரசங்கிமார்களின் பிள்ளைகளும், மற்ற பிள்ளைகளைப்போல் வாலிப வயதில்சரீர உணர்ச்சிகளால் நிரப்பபட்டவர்கள், பாவம் செய்ய துடிப்பார்கள். அவர்களும் மனிதர்கள்தானே! ஆனால் இச்சையடக்கம், சுய காட்டுப்பாட்டை அளிக்க (SELF CONTROL) ஆவியானவர் அவர்களுக்கு உதவ காத்திருக்கிறார்.
பெற்றோர்களின் உபவாச ஜெபம் பிள்ளைகளுக்கு உதவவேண்டும். பிள்ளைகளிடம் காமஎண்ணங்களைக்குறித்தும், பெண்களோடு பழகுதலைக்குறித்தும் பெற்றோர்கள் வெளிப்படையாக தங்கள் பிள்ளைகளோடு பேசவேண்டும் ஆவியானவர் இதற்கு மிகவும் உதவியாகவும், உறுதுணையாகவும் இருப்பார்.
சும்மா லபோதிபோ என்று அந்நியபாஷை பேசி சாட்சிக்கும், கனிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில் கோட்டை விட்டுவிடாதீர்கள். கனிகளால்மட்டுமே பரிசுத்த ஆவியானவரை நீங்கள்வெளியே காட்டமுடியும் அந்நியபாஷையால் அல்ல.CSI லுத்தரனில் உள்ள வாலிபர்களில் EUமூலமாக இரட்சிக்கப்பட்டு எத்தனையாய் சாட்சியோடு வாழ்கிறார்கள்.
காதலித்த பெண்ணை, காதலித்த பையனைக்கூட கர்த்தருக்காக சாட்சி நஷ்டப்பட்டுவிடகூடாது என்பதற்காக பழகின அந்த காதல் வாழ்வின் தொடர்பை தயவுசெய்து விட்டுவிடு. பெரிய தியாகம்தான் அது. ஆனால் அது ஆண்டவரை சந்தோஷப்படுத்தும் அப்படிப்பட்ட அந்த வாலிபர்கள் எங்கே! அந்நியபாஷை பேசி தீர்க்கதரிசனம்கூறி பெற்றோரையும் சபையினரையும், பெண்களையும்ஏமாற்றி தானும் ஏமார்ந்து இன்று குடும்ப வாழ்க்கையையே நரகமாக்கி விரக்தியுடன் வாழும்பெந்தேகோஸ்தே வாலிபர்கள் எங்கே!
திருப்புமுனை என்ற தலைப்பில் வரும் CBN டிவி நிகழ்ச்சியில் வரும் சாட்சியை பாருங்கள். அவற்றோடு பெந்தேகோஸ்தே சபையில் விசுவாசிகள் கூறும் சாட்சியையும் ஒப்பிட்டுபாருங்கள். அவர்கள் சாட்சியில் ஆவியானவர் உண்டு என்பதை நீங்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்கும்போதே நீங்களே நிதானிக்கலாம்.
அந்நிய பாஷை
பெந்தேகோஸ்தே சபையினர் குழப்பும் அந்நியபாஷை வசனம், புதிய ஏற்பாடு வேதத்தில்3 இடங்களில் வருகிறது. அடுத்த ஜாமக்காரனில் அந்த ஒவ்வொரு வசனத்துக்கும் விளக்கம்கூறி இந்த குழப்பத்தை முடித்து வைக்கிறேன். ஒருவேளை ஒரு வசனத்தின் விளக்கமே இரண்டு மாதத்துக்கு நீண்டுப்போகலாம்.
எப்படியோ அடுத்த வருடம் 2009ல் அவைகளை தொகுத்து புஸ்தகமாக வெளியிட கர்த்தர் எனக்கு நேரத்தையும், ஞானத்தையும் அருளுவார் என்று கர்த்தருக்குள் நம்புகிறேன்.