இன்று (02.10.2010)காலையில் சுமார் 7மணிக்கு தமிழன் டிவி-யில் ஜட்சன் ஆபிரகாம் அவர்களின் சுவிசேஷ நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தேன்;
நிகழ்ச்சிக்கு முன்பதாக அவர்களுடைய வீரதீர பராக்கிரமங்களின் தொகுப்பாக வரும் க்ளிப்பிங்ஸ்…அதிலொரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு பயங்கரமான துணிகரம் அரங்கேறியது;
மாயாவி ஜட்சன் ஆபிரகாம் தனது வலது கரத்தை உயர்த்துகிறார்;அப்போது அவரது உள்ளங்கையிலிருந்து ஒரு நட்சத்திரம் போன்ற ஒளி தோன்றி வளர்ந்து விஷ்ணு சக்கரம் போல சுழல எதிர்புறம் நிற்கும் அப்பாவி பொதுஜனம் ‘பொத்’தென சரிந்து விழுகிறது;
இதுபோன்ற மோசடிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதாலும் என்னைப் போன்ற ஒருசிலர் எங்கோ ஒரு மூலையிலிருந்து புலம்பிவிட்டுச் செல்வதாலும் இதுபோன்ற மோசடியாளர்கள் தினவெடுத்து சுவிசேஷ மேடைகளை மாயதந்திர காட்சி மேடையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்;
இவர்கள் வேத சத்தியத்தை மறைத்து அதற்கு விரோதமாக செயல்படுவது இந்துமார்க்கப் பின்னணியிலிருந்து வரும் சாதாரண மக்களுக்கு இது பெரிய குற்றமாக இராது;ஆனால் வேதத்துக்குப் புறம்பான இதுபோன்ற செயல்கள் கண்டிக்கப்படாவிட்டால் அதாவது பணத்துக்காக இவர்களை அழைத்து கூட்டம் போடும் ஒருங்கிணைப்பாளர்கள் அதனைக் குறித்து எச்சரிக்காவிட்டால் தேவ பயங்கரம் இறங்கும்;
அவர் தமது நாமத்தை வீணிலே வழங்கும் ஒருவரையும் சும்மா விடவே மாட்டார்;வியாதியிலோ விபத்திலேயோ கொலைசெய்யப்பட்டோ இந்த துரோகிகள் வீழ்த்தப்படுவர்;அல்லது இந்து விரோதிகளால் முச்சந்தியில் வைத்து அவமானப்படுத்தப்படுவர்;அல்லது வருமான வரி விவகாரங்களில் சிக்கி அசிங்க்ப்படுவர்;அல்லது இவர்களோ இவர்கள் பிள்ளைகளோ விபச்சார குற்றங்களில் சிக்கி தண்டிக்கப்படுவர்;இவை அன்றாட செய்தியாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
சில நண்பர்கள் கூறுவது போல இவர்களுக்கு எழுதி விளக்கம் கேட்பதோ விளக்கத்துக்காகக் காத்திருப்பதோ வேண்டாத வேலை; இது மோசடி என்பது என்னைப் போன்ற நுனிப்புல் மேயும் முட்டாளுக்கே தெளிவாகத் தெரிகிறதே;
இவர்கள் மனம் புண்படாதிருக்கவே மென்மையாகவும் அப்பாவியைப் போலவும் சந்தேகம் கேட்பது போன்ற பாவனையில் எழுதுகிறேன்; இதனால் எந்த ஒரு புது விசுவாசியும் நிச்சயமாக இடறலடையும் வாய்ப்பே இல்லை;சரியானதைக் குறித்து யோசிக்கும் வாசலையே நான் திறக்கிறேன்;
இதற்கு நீங்கள் ஆதாரம் கேட்பது அநியாயம்,ஏனெனில் இலட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள்; வெறும் ரெண்டு பேர் தான் பார்த்ததாக சாட்சி சொன்னாலே போதுமானது;
இப்படிப்பட்ட மோசடியும் சத்தியத்துக்கு விரோதமானதுமான துணிகரமான செயல்களை உண்மையான கிறித்தவர்கள் கண்டித்தாலே இவர்கள் நல்வழி திரும்ப வாய்ப்புண்டு; இன்னும் சொல்லுகிறேன்,இவர்களுடைய இரத்தப்பழியை ஆண்டவர் நம்மிடம் கேட்டால் என்ன செய்வோம்?
என்னைப் போன்ற சாதாரணமானவனுக்கு இந்த உணர்வை ஆண்டவர் கொடுக்க என்ன காரணம்,சிந்திப்போமா?
ஆண்டவர் இவர்களிடம் கிருபையாகக் கொடுத்துள்ள மந்தையினை சூழ்ச்சியினாலோ இழிவான ஆதாயத்துக்காகவோ மேய்க்காத வண்ணம் சபையார் அனைவரும் இணைந்து ஜெபிக்கவும் போராடவும் உணர்த்தவும் வேண்டும்;
சகோதரி ப்ரீத்தா அவர்கள் ஒரு நல்ல சுவிசேஷ பிரசங்கியாளர்; தற்போது அவரையும் இந்த படுபாவி கெடுத்துப் போட்டார்; அபிஷேகம் ஒருவரையும் புழுபோல விழுந்து நெளியச் செய்யாது, சகோதரி.
நீங்கள் சிங்கப்பூரில் பென்னிஹின் கூட்டத்தில் பார்த்த காட்சியைக் குறித்த பெருமை மிகுந்த தொலைக்காட்சி பேச்சில் நீங்களும் உங்கள் கணவரும் மாத்திரமே விழவில்லை என்றீர்கள்; பாஸ்டர்களெல்லாம் விழுந்து நெளிந்தது பரிசுத்தாவி இறங்கியதாலே என்றால் நீங்கள் விழாத காரணமென்ன, நீங்கள் பரிசுத்தாவியானவருக்கு இணையானவர்கள் (Super Power) என்பதாலா அல்லது பிசாசுகள் (devil) என்பதாலா?ஒரே குழப்பமாக இருக்கிறது.
கொஞ்சம் சரியாகவும் அதிகம் தவறாகவும் கலந்தடிக்கிறீர்கள்; அவற்றை வகை பிரித்து உங்கள் சூழ்ச்சிகளை இனம் காணுமளவுக்கு எமது ஜனம் விவரமானதல்ல; தயவுசெய்து இயேசுவின் பெயரால் இவற்றையெல்லாம் செய்து அவருடைய தியாகத்தை அவமாக்க வேண்டாம்; சொல்லப்பட வேண்டிய தீர்க்கமான செய்தி சிலுவையைப் பற்றியதே என்பதை அறிவீர்களாக. குற்றச்சாட்டு சுருக்கமாக:
1. ஆவியில் விழுதல்
ஜெபிக்க வருவோரை கீழே தள்ளுவதும் அதைக் குறித்த தெளிவான போதனையை போதிக்காததும்; நெடுநாளாக பலர் கண்டித்தும் எருமை மாட்டு மேல் மழை பெய்தது போல என்னைக் கேட்க யாருண்டு என்று அந்த தவறைத் தொடருவது.
2. உள்ளங்கையில் விஷ்ணு சக்கரம்
இதில் இன்னும் ஒரு படிமேலேசென்று கணிணியின் தந்திரக்காட்சியின் (Comp.Graphics) உதவியுடன் உள்ளங்கையிலிருந்து விஷ்ணு சக்கரம் சுழன்று வருவதைப் போல சித்தரித்து பார்வையாளர்களை பிரமிக்கச் செய்வது; கொஞ்ச காலத்தில் உங்கள் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் போட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை; ஆனால் இதுபோன்ற துணிகரங்களை அன்பு சகோதரர் டிஜிஎஸ் அவர்கள் கூட முயற்சிக்கவில்லை
-- Edited by devapriyaji on Wednesday 6th of October 2010 07:18:32 AM
ஈரோடு அருகில் உள்ள எல்லிஸ்பேட்டை என்ற ஊரில் கடந்த மே மாதம் விடுமுறை வேதாகப்பள்ளி நடந்த போது என்னுடைய ஊழியம் செய்யும் நண்பர் ஒருவர் ஜெபித்த போது 4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்பு சிறார்களும் இப்படியே சொன்னார்கள் இவர்கள் வெறுமனே சொல்லாமல், சம்பவத்தை வருனித்துச் சொன்னார்கள். மாத்திரமல்ல நரகத்தின் காட்சிகளையும் மிகவும் அழுகையும் திகிலோடும் சொன்னார்கள்.
கடந்த ஜனவரி 5ம் தேதி நண்பர்கள் சிலர் ஒன்றாகக் கூடி இந்த வருடத்தின் ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்கக் கூடினோம். அப்போது ஜெபிக்க ஆரம்பித்தவுடன் என்முன்னால் ஒரு உருவம், (ஒரு சின்னம் போன்ற) வந்து நின்றது நான் தான் உன் இயேசு என்று சொன்னது, நானும் அது இயேசு தான் என்று நம்பிவிட்டேன். பழுப்பேறிய சுண்ணாம்பின் வெள்ளை நிறத்தோடு இருந்தது. உன் ஆவி, ஆத்துமா, சரீரம், இவற்றை எடுத்து என் முன்னால் வை என்றது.
நானும் பனிக்குவழை(bowl) போன்ற ஒன்றை என்னிலிருந்து எடுத்து வைத்தேன். மேலும் என்னிலிருந்து வெள்ளை நிறமுள்ள மனித உடல் வடிவமுள்ள ஒன்றும் என் அருகில் நின்றது. நான் முழங்காலில் நின்றிருந்தேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் என்னுடைய உருவத்தை என் கண்களால் பார்க்க முடிந்தது.
இன்னும் என்ன தாமதம் நீ என்னில் வந்து சங்கமமாகு என்றது, நானும் என் ஆவி, ஆத்துமா இவை எல்லாம் அந்தச் சின்னத்தோடு போய் ஐக்கியமானதை என் கண்களால் பார்த்தேன்.
அதன் பிறகு என்னை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, என்னுடைய முழு சரீரமும், முடிவில்லாமல் கீழ் நோக்கிச் செல்வதைப் போல உணர்ந்தேன். நண்பர்களிடம் காப்பாற்றச் சொல்லிக் கதறினேன். சுய நினைவு வந்து வந்து போனது.
ஒரு மனி நேரம் ஜெபித்து விட்டு கடந்து செல்வதே எங்கள் நோக்கம், ஆனால் அன்று மாலை ஆரம்பித்த ஜெபம் என்னுடைய விடுதலைக்காக அதிகாலை 2 மனிவரை நடந்தது.
எனக்கு அன்று நான் பார்த்ததெல்லாம் முடிவில்லாத குழியில் பயனிப்பது போன்ற உணர்வும், வெள்ளை நிறப் பின்னனியில் வௌவால்களின் வடிவத்தில் பறந்த சில பொருட்கள், தண்ணீரில் இரத்தத்தால் வரையப்பட்ட ஒரு திரிசூலம், இருள், இவைகள் தான்.
மேலும். இவை தோண்றியது சில நிமிடங்கள் தான், ஆனால் அந்த அறையில் சில மணி நேரங்கள் கடந்து போயிருந்தது. மாத்திரமல்ல இயேசுவின் இரத்தம் என்று நண்பர்கள் கொண்டுவந்த தண்ணீரையும் ஒலிவ எண்ணெய்களையும், என்னருகில் கொண்டு வந்த போது நான் அவர்களின் கால்களைக் கடிக்க முயன்றேனாம், எனக்கு நினைவில்லை,
இருதியாக என்னை மற்றவர்கள் பிடித்துக்கொள்ள. மற்றொரு நண்பர் என் தலை மற்றும் நாக்கில் ஒலிவ எண்னெயைத் தடவினார். அப்போது குருதி வழியும் ஒரு கரம் இரத்தம் சொட்டச் சொட்ட என் மீது வந்து இறங்கியதைப் பார்த்தேன். தூக்கி வீசப்பட்டேன். அதன் பிறகுதான் எனக்கு சுய நினைவு வந்தது.
அதன் பிறகு பல நாட்கள் என்னால் ஜெபிக்கவே முடியவில்லை, எங்கே ஜெபிக்க முயன்றால் என் முன்னால் அந்த பிசாசு வந்துவிடுமோ என்ற பயம். பிறகு ஒரு நாள் ஆண்டவர் சங்கீதம் 19 மூலம் என்னோடு பேசி ஆலோசனை சொன்னார்
மாத்திரமல்ல, கடந்த செப்டம்பர்(2009) மாதம் பிசாசு பிடித்த ஒருவர் மூலம் சாத்தான் லூசிபரைக் குறித்தும், நரகத்தைக் குறித்தும் சொல்லுவதை கேட்கவும், அதன் மூலம் என்னுடைய விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளவும் தேவன் எனக்கு உதவி செய்தார். அந்தச் சமயத்திலும் அந்த நபர் சுய நினைவின்றியே இருந்தார்.
இன்னும் எத்தனை எத்தனையோ சம்பவங்கள், அமானுஸ்யமாக நடந்ததை கடந்த ஒருவருடத்தில் மட்டும் என்னால் பட்டியலிடமுடியும்....
இவைகள் என் புலன்களால் உணர்ந்து அனுபவித்தவைகள். மாத்திரமல்ல "இயேசு" என்ற பெயரை நாம் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் அந்தப் பெயரின் வலிமையை சாத்தானிடம் மட்டுமே நாம் அறிய முடியும்.
ஒரு பிசாசு பிடித்த மனிதனின் காதுகள் கேட்க இயேசு என்ற பெயரை உச்சரிக்க தேவன் எனக்கு ஒருமுறை உதவி செய்தார். அற்பனான என் வாயில் பிறந்த அந்த சொல்லின் வலிமையால் அந்த பிசாசு நெருப்பில் போடப்பட்ட புழுவைப்போல துடித்ததை என் கண்ணெதிரில் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு.
என் ஆயுள் சக்கரத்தை பாம்பின் ஆவியிடம் ஒப்படைக்க நான் யாகம் செய்தது மற்றும் அதை நான் மறந்து போனதும், பிறகு இரட்சிப்பின் அனுபவத்துக்கு நேராக நான் வந்த பின்பு அது என்னுள் இருந்து ஜெபவேளையில் ஆட்டுவித்த அனுபவமும் நண்பர்களிடம் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டது தான்.
இவைகளை நான் இங்கு சொல்லக்காரணம். எனக்கு இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதற்கு முன்னால நானும் இப்படித்தான் ஊழியர்கள் சொல்லும் போது பரிகசித்து வந்தேன். ஆனால் ஆண்டவர் இப்படிப்பட்ட அனுபவத்தில் என்னையும் நடத்தி இப்போது என்ன சொல்லுகிறாய் என்று கேட்பதுபோன்ற உணர்வை எனக்குக் கொடுத்த போது அந்த உண்மையை எப்படி விவரிப்பேன்.
(நான் இங்கு என் மோட்ச அனுபவங்களை விவரிக்கவில்லை) rajkumar_s
யோவானுக்கும் எசேக்கியேலுக்கும் தேவன் ஏன் தரிசனங்களை காட்டவேண்டும் என்று கேட்பதுபோல் இருக்கிறது உங்கள் கேள்வி. அது இன்று அநேகமார்யிரம்பேர்களுக்கு பயன்படும் ஒரு செய்தியாக இருக்கிறதே!
"நரகம் இப்படி" "பாதாளம் இப்படி" என்று எத்தனை முறை ஒருவருக்கு எடுத்து சொன்னாலும் அதை புரிவது கடினம். அப்படி புரிந்தாலும் அதன் உண்மை நிலையை அறிய முடியாது. ஆனால ஆண்டவர் வழிநடத்தும் ஒரே ஒரு அனுபவநிகழ்ச்சி நமது ஊன் உடல் ஆவி அனைத்தையும் உருவ குத்தி எல்லாவற்றையும் அசைத்துவிடும் என்பதை அறியுங்கள்.
இரட்சிப்பை நிராகரிக்கும் மக்களின் முடிவு என்னவென்பதை ஒவ்வொருவரும் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டால் அவர்களுக்காக பெருமூச்சு விட்டு அழாமல் அவர்களுக்காக மன்றாடி பிராத்திக்காமல் இருக்கவே முடியாது! அத்தோடு இவ்வித அனுபவங்களின் மூலம் இயேசு அனுபவித்த பாடுகளின் காரணம் அவர் சிந்திய இரத்தத்தின் மேன்மை போன்றவற்றையும் சரியாக புரிந்துகொள்ள முடியும்
சகோதரர் ராஜ்குமார் அவர்கள் சொல்லும் அதேஅனுபவம் எனக்கும் உண்டு முடிவில்லாத அந்த பெருங்குழியாகிய பாதாளத்தின் இரண்டாம் அடுக்குவரை சென்ற நான் "என்னை காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டு கதறினேன்" எனது கண் முன்னாள் நின்ற யாராலும் என்னை காப்பாற்றவோ அல்லது எதையும் தடுக்கவோ முடியவில்லை இறுதியில் மயக்கம்போட்டு விழுந்தேன். அந்நிகழ்வுகளை இன்று நினைத்தாலும் மனமெல்லாம் பதறுகிறது.
மேலும் "யாரின் மூலம்" அல்லது "எதன் மூலம்" இந்த அனுபவம் நமக்கு கிடைக்கிறது என்பது கேள்வியல்ல அவர் கழுதை மூலம்கூட பேசி நமக்கு உண்மையை உணர்த்த முடியும் என்பதை அறியவேண்டும்.