சென்னை: அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கில் 3 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் “ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் “என்று கூறினார்.
மேலும் அவ்வறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வரலாற்றை பார்க்காமல் வெறும் நம்பிக்கைகளை வைத்ஹு வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்.
ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டிக்கதக்கது என்று கூறிய திருமாவளவன் 450 ஆண்டுகள் மசூதி இருந்ததும், அது இடிக்கப்பட்டதும் நிகழ்கால வரலாறுகள் என்றும் எவ்வித வரலாற்று ஆதாரம் இல்லாத ராமர் பிறப்பை வைத்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாக கூறியுள்ள திருமாவளவன் மசூதி இடித்தவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதையும் சுட்டி காட்டியுள்ளார்.
முஸ்லீம்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது அனைவரின் கடமை என்றும் பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
inneram.com






















கைகளில் வாள் ஏந்தும் நிர்வாண அகராக்கள் (சாது அசுரர்கள்)












இந்த நேரத்தில் திடீரென்று ஒருவர் முளைத்து தீர்ப்பை வெளியிடக் கூடாதென்று வழக்கு தொடர்ந்து வாதிடுகிறார். இதுவரை வழக்கில் சேர்க்கப்படாத அவர் ஏதோவொரு இந்து இயக்கத்தின் பேரில் இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறார். ஏற்கனவே வழக்கில் ஈடுபட்டவர்கள் யாருக்கும் இவரையோ, இவரது இயக்கத்தையோ தெரியவில்லை.
இதே போல் இவ்வளவு வருடங்களாக வழிபாட்டுத் தலமாக இல்லாத பாபர் நினைவிடத்தைச் சொந்தம் கொண்டாடுவதையும் இஸ்லாமியர்கள் முழுதாக நியாயப்படுத்துவதில் சிக்கல்கள் உண்டு. இதற்குத் தீர்வாக சர்ச்சைக்குரிய அந்த இடத்தை அரசாங்கம் முழுவதுமாகக் கையிலெடுத்து ஒரு பகுதியை பாபர் நினைவுக்கூடத்தை, இஸ்லாமியரின் கலை, கலாசார வளங்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒரு அருங்காட்சியகமாக அமைக்கலாம். இன்னொரு பகுதியை ராமாயணத்தின் பெருமைகளைக் குறிக்கும் ஓவியங்கள், செய்திகள் கொண்ட ஓர் அரங்கமோ அருங்காட்சியகமோ அமைக்கலாம்.

















