New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "பேரின்பப் பெருவிழா"


Guru

Status: Offline
Posts: 9863
Date:
"பேரின்பப் பெருவிழா"
Permalink  
 


கூட்டம் சேர்க்கும் டெக்னிக் "பேரின்பப் பெருவிழா"

கோவையில் வருடா வருடம் நடக்கும் பேரின்பப் பெருவிழாவுக்கு வெளியூர்க்கார 'பிரபல'ங்கள் அழைக்கப்படுவார்கள். இதை நடத்தும் கோவை லோக்கல் பார்ட்டி எல்லா நாட்களும் கூட்டம் வரவேண்டுமென்று ஒரு சஸ்பென்ஸ் டெக்னிக்கை வெற்றிகரமாக கடைபிடித்து வருகிறார். நான்கு நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டங்களுக்கு லாகன் மோ சிசரஸ், ஜெம் சாபத்துரை, திரூஸ் குவாகரன் போன்றவர்களை அழைப்பார். ஒரு நாள் தானும் தன்னுடைய சேஷ்ட புத்திரனும் 'செய்தி' கொடுப்பார்கள். இதில் யார் எந்த தேதியில் பேசுவார்கள் என்பது ஒரு சஸ்பெஸாகவே இருக்கும். நோட்டீசுகளிலோ, போஸ்டர்களிலோ இதை வெளியிடவே மாட்டார்கள். ஏனென்றால் வெளியூர்க்கார பிரபலங்கள் பேசும்போது போய்க்கொள்ளலாம் என்று உள்ளூர்க்கார 'தேவ செய்தியாளர்களை' ஜனங்கள் உதாசீனப்படுத்திவிடுவார்களே. இந்தக்கூட்ட்ஙகளுக்குப் போகிறவர்கள் எல்லாருமே கிறிஸ்தவர்கள்தான். அவர்கள் கொடுக்கும் காணிக்கையில்தான் இவர்கள் 'பேரின்பம்' அடைகிறார்கள்.

தன்னுடைய இரண்டு மனைவிகளையும் பரிகொடுத்துவிட்டு இவர் 'பேரின்பத்தில்' இருக்கிறார். மூன்றாவதுக்கு அடிபோடுகிறாரோ என்னவோ? தன்னுடைய மனைவிகளைக் காப்பாற்ற வக்கில்லாதவன் மற்றவர்களை சுகப்படுத்துகிறானாம். கேலிக்கூத்து! ஆயிரம் ஜாமக்கார புஷ்பராஜ்கள் வந்தாலும் இவனுகளைத் திருத்தமுடியாது,


"பெரின்ப பெருவிழா"விற்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனையோ ஜனங்களின் நம்பிக்கையுடன் இவர்கள் விளையாடுவதை எல்லாம் தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது இந்த குருடர்களுக்கு தெரியாமல் இருக்கிறது போல். பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்க்கிறார் என்பதை இந்த கூட்டத்தார் புரியும் நாட்கள் அதிக தொலைவில் இல்லை. எல்லோரும் ஒரே ஆவியில் நிறைந்தவர்கள் என்று பிதற்றிகொண்டு ஏன் தான் வெளியூரில் இருந்து "அதிக" வல்லமை நிறைந்தவர்களை அழைத்து வருகிறார்களோ. உள்ளூர் ஊழியர்களின் வல்லமை எங்கே போய் விட்டது. சரி வருகிறவர்கள் தான் "இலவசமாக பெற்றோம் இலவசமாக தருகிறோம்" என்று இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு என்று "ரேட்" பேசி தான் கால் ஷீட் கொடுக்கிறார்கள். இது எல்லாம் திரை மறைவிற்கு பின்னால் உள்ள விஷயங்கள். அப்பாவி விசுவாசிகள் இதை தெரிந்துக்கொள்ள வாய்ப்பில்லை. காணிக்கையை பிரித்துக்கொள்வதில் ஊழியர்களுக்கு நடுவில் பெரிய தகறார் வருவதை எல்லாம் எழுதினால் வெட்க கேடாகிவிடும். போகட்டும் அவர்கள் "பெரின்பம்" காணட்டும்.

மொத்தத்தில் அரசியல் கட்சிகள் கூட்டனி கூட்டம் போல் ஆகி விட்டது. அதான் பல அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து காமன் மினிமம் ப்ரோக்ராம் வைத்து ஆட்சியை பிடிப்பது போல் இந்த கூட்டத்தார் பல சபைகளை சேர்ந்தவர்கள் தங்களின் முழு கொள்கையை கோட்பாடுகளை சொல்லாமல் ஒரு சில பொது காரியங்களை பகிர்ந்துக்கொண்டு ஆதாயம் தேடுகிறார்கள். அரசியலில் மக்கள் சற்று விழித்திருக்கிறார்கள். ஆனால் இங்கே தேவனை வியாபாரப்பொருளாக வைத்துக்கொண்டு இந்த ஊழிய வியாபாரிகள் விசுவாசிகளை சராமாரியாக ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வியப்பான ஊழியங்கள்!!


புது புது தரிசனங்களோடு முலைத்து வரும் ஊழியங்களை பார்த்தாலே வியப்பாக இருக்கிறது. வேதத்தை அறியாத கூட்டம் இதை தேவன் ஒரு குறிப்பிட்ட ஊழியர்களுக்கு வெளிப்படுத்தும் தேவ கிருபை என்று வியந்துக்கொண்டும், அந்த ஊழியர்கள் பெருமை பாராட்டி வருவதும் வாடிக்கையாகி விட்டது.

இந்த வரிசையில் நானும் ஒரு காலத்தில் ஒரு ஊழியத்தில் மும்முறமாக ஓடிக்கொண்டு இருந்த காலம் உண்டு. தேவன் அதன் மூலம் எனக்கு பயிற்சி தந்தார் என்றும், எசேக்கியல் எழுதியது போல் எசே. 8ம் அதிகாரத்தில் தேவன் அவனுக்கு ஆலயாத்தில் நடக்கு சகல அருவறுப்புகளையும் காண்பிக்கும் படி கூட்டி சென்றது போல் தான் என்னையும் தேவன் இப்படி பட்ட ஊழியங்களை காண்பித்து, பின்பு சத்தியத்தை தந்து, பார் நீ சென்று வந்த அறுவறுப்பான பாதைகளை என்று கற்று கொடுத்தார் என்றே எடுத்துக்கொள்ளுகிறேன்.

இன்று அநேக ஊழியர்கள் ஏதோ பாரப்பட்டு தேவனுக்கு உதவி செய்கிறோம் என்று நினைத்து தேவ சித்தத்திற்கு விரோதமாக சாத்தானின் ஊழியத்தை தான் செய்து வருகிறார்கள். உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை குறுகிய நோக்கத்துடன் "இந்தியாவை இரட்சியும்" என்று ஊழிய சர்விஸ் நடத்தி வருகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் அதிகாரம் என்னவென்று தெரியாத இந்த வேத ஞான சூனியர்கள் எந்த தைரியத்தில் தான் இப்படி பட்ட (அட்)ஊழியம் செய்து வருகிறார்களோ, கேட்டாள் தேவன் இவர்களுக்கு வெளிப்படுத்தின ஊழியமாம் இது. எல்லா மனுஷனையும் இரட்சிக்க தேவன் சித்தமாக இருக்கிறார் என்று வேதம் கூறினாலும் இந்த வேத அறிவு இல்லாத கூட்டம் "இந்தியாவை மட்டும் எங்களுக்கு தாருங்கள்' "Christ for India", போன்ற வாசகங்களையும் ஜெபகுறிப்புகளையும் வைத்துக்கொண்டு உலக இரட்சகரின் மகத்துவத்தை குறைக்கிறார்கள்.

இன்னும் ஒரு கூட்டம் 7 ஆண்டுகள் தேவ வசனம் இந்திய முழுவது சென்று அடையும் என்றும் அதன் பின் 7 ஆண்டுகல் வசன பஞ்சம் வரும் என்றும் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். வசன பஞ்சம் காலம் முடிந்து விட்டது என்று கூட அறியாத இவர்களுக்கு தேவன் எப்படி தான் வெளிப்படுத்துகிறாரோ!! இன்று நாம் உபயோகிக்கும் மொபைல் ஃபோனிலேயே பைபிள் வந்து விட்டது. ஒரு காலத்தில் அரபு நாடுகளுக்கு பைபிள் எடுத்து செல்ல கூடாது என்று சட்டம் எல்லம் தளர்ந்து இப்பொழுது அங்கும் ஆலயங்கள் வந்து விட்டது, இந்த நிலையில் இனிமேல் தான் இந்தியா போன்ற நாட்டில் வசன பஞ்சம் வரும் என்பது ஒரு முட்டாள்தனமான எச்சரிக்கை.

ஊழியர்களே, சொந்த கற்பனையில் மிதந்து அதை தேவ சாயம் பூசாமல் தேவனிடத்தில் வசன வெளிச்சத்தை கேளுங்களே!! குறுடர்கள் குறுடர்களை வழி நடத்துவது போல் இல்லாமல், காதுள்ளவனாக இருங்கள். மத்.15:14; லூக் 6:39




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

"ஆவியில் விழுவது"/ Slain in Spirit!!


"ஆவியில் விழுவது" (slain in spirit) என்று வேதத்திற்கு விரோதமான ஒரு செயல் இந்த நாட்களில் நாம் அதிக அளவில் பார்க்க முடிகிறது. அமேரிக்காவில் இருக்கும் பென்னி ஹின் தொடங்கி இந்தியாவின் பென்னி ஹினான ஆந்திரா ஊழியக்காரர் வரை இதை மேடைக்கு மேடை செய்து வருகிறார்கள். இப்படி நடப்பது சரியா?

என் சொந்த அனுபவத்தில் நான் பல முறை இது போன்ற ஊழியர்கள் முன் நின்றிருக்கிறேன், ஆனால் ஒரு முறை கூட கீழெ விழுந்ததில்லை. அவர்களும் என்னை விழவைக்க முடிந்த அளவு பிரயாசப்பட்டு பார்த்து கடைசியில் தோற்று போய் விட்டு விடுகிறார்கள். சரி போகட்டும், இது என் சொந்த அனுபவம். சொந்த சரக்கு இங்கு தேவை இல்லை.

பிறகு எப்படி & ஏன் விசுவாசிகள் (!?) கீழே விழுகிறார்கள்? வேதத்தின் படி ஆவி வரும் போது பெலன் கொண்டு (அப். 1:8) காலூன்றி நிற்க தான் முடியுமே தவிர, கீழே விழுந்ததாக ஒரு இடத்திலும் இல்லையே. பிறகு எப்படி? அதுவும் ஒரு சில‌ இட‌ங்க‌ளில் முக‌ங்குப்புற‌ விழுந்த‌தாக‌ போட்டிருக்கிற‌து, ஆனால் முதுகு கீழேப்ப‌டும் ப‌டி யாரும் விழுந்த‌தாக‌ வேத‌த்திலில்லையே? பிற‌கு எப்ப‌டி?

கீழே விழுவ‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ள்:

1. உண‌ர்ச்சிவ‌சப்ப‌டுத‌ல் (Falling down not controlling the emotions) நாம் வெகு நாளாக‌ கிட்டே இருந்து பார்க்க‌, தொட்டு பார்க்க‌ நினைத்த‌ ஒரு ஊழிய‌ரை இவ்வுள‌வு அருகில் இருந்து பார்ப்ப‌து ஒரு உண‌ர்ச்சியை தூண்டுகிற‌து, அதை க‌ட்டு ப‌டுத்த‌ முடியாத‌தால் கீழே விழுந்து விட‌ வாய்ப்புக‌ள் இருக்கிர‌து.

2. நான் கீழே வீழாவிட்டால் என்னை குறித்து மற்றவர்கள் என்ன‌ நினைப்பார்க‌ள் என்கிற‌ க்வ‌லையில் கீழே விழுவ‌து.

3.  சில‌ ஊழிய‌ர்க‌ள் பிடித்து த‌ள்ளி விடுத‌ல், நெற்றியில் ஒரு குறிப்பிட‌ இட‌த்தில் கையை வைத்து அழுத்தினால் கிழே விழுந்து விடும் வாய்ப்பு இருக்கிற‌து.

4. எல்லாவ‌ற்றுக்கும் மேல் ப‌ரிசுத்த‌ ஆவியில் அல்ல‌ ப‌ய‌த்தின் ஆவியில் கீழே விழுவ‌து.

இன்னும் அநேக‌ கார‌ண‌ங்க‌ள் இருக்கிற‌து. எது எப்ப‌டியோ, இது ந‌ட‌ப்ப‌து ப‌ரிசுத்த‌ ஆவியினால் அல்ல‌ என்ப‌தை தெளிவு ப‌டுத்த‌ மாத்திர‌ம் இந்த‌ ப‌திவு. இதை குறித்து நீங்க‌ளும் க‌ருத்துக்க‌ளை தெரிவிக்க‌லாமே!!




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இந்தக் கண்றாவிகளை எல்லாம் எந்தக் கேள்வியுமின்றி பயபக்தியுடன் ஏற்றுக்கொள்ளும் முட்டாள் கிறிஸ்தவத்தை என்ன சொல்லி என்ன பயன். "அந்நாட்களில் அனேகர் வஞ்சிக்கப்படுவார்கள்" என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது. அவ்வளவே. இந்தக் காமெடியைத்தான் பாருங்களேன்!





http://www.youtube.com/watch?v=5lvU-Dislk


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கொசுவைக்கூட துரத்தாத ஊழியர்கள்




தங்களை தேவன் வல்லமையாக பயன்படுத்துவதாகக் கூறித்திரியும் பாஸ்டர்கள் மற்றும் ஊழியர்கள்(?) அடுத்தமுறை சந்திக்கும்போது, ஐயா எங்கள் வீட்டில் பிசாசுத்தொல்லை உள்ளது என்று கூப்பிடுங்கள் தாராளமாக வந்து ஜெபிப்பார்; ஒருவேளை பிசாசும் கூட போகலாம். ஆனால் எங்கள் வீட்டில் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது வந்து ஜெபியுங்கள் என்று சொல்லித்தான் பாருங்களேன். அவர்களால் ஒரு கொசுவைக்கூட துரத்த முடியாது...

சிந்திக்கவும்....


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சகோ ராஜ் அவர்களே,

ஒரு போதும் அப்போஸ்தலர்களின் அழைப்பை இன்று பண வேட்டையில் இறங்கியிருக்கும் "கள்ள அப்போஸ்தலர்களுக்கு" ஒப்பீடாதீர்கள். இயேசு கிறிஸ்து அவர்களை அழைத்து தான் சபையின் அஸ்திபார கற்களாக நியமித்தார். அதன் பலனாக தான் நமக்கு அவர்கள் எழுதிய வார்த்தைகள் கிடைத்தது. அது நன்மையாக இருந்தது.

ஆனால் இன்று ஊழியம் செய்கிறோம் என்று பிணத்தின் மேல் கூட காசு பார்க்கும் "பிரபலமான" ஊழியனை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஏன் பார்த்தும் பார்க்காதது போல் இருக்கிறீர்கள். அந்த ஊழியனுக்கு பெரும் கூட்டம் சேர்ய்கிறதினால் அந்த ஊழியன் செய்வது எல்லாம் சரி என்று கண்மூடியாக இருக்கீங்களா? இவர்களை எல்லாம் ஊழியர்கள் என்று எப்படி தான் ஏற்றுக்கொள்ள முடிகிறதோ.

இன்று இந்தியா முழுவதிலும் உள்ள சபைகளை நடத்தும் "ஊழியர்கள்", "பாஸ்டர்கள்" "தீர்க்கதரிசிகள்", "கள்ள‌ அப்போஸ்தலர்கள்" போன்றவற்றில் சுமார் 99% பிறர் பணத்தை நம்பியிருக்கிறார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

இப்படி தான் கிறிஸ்தவத்தை வளர்க்க சொல்லி இயேசு கிறிஸ்து சொல்லி கொடுத்தாரா? யார் இவர்களை ஊழியத்திற்கு வர‌ சொன்னார்க‌ள் என்றால், ஆளாலுக்கு ஒரு "பித‌ற்ற‌ த‌ரிச‌ன‌ம்", தூத‌ன் க‌தை என்று வைத்திருப்பார்க‌ள். இது தான் ச‌த்திய‌மா? கூட்ட‌ம் என்றால் விப‌த்து ந‌ட‌க்கும் போதும் கூடூம் (அது க‌ழுதை செத்திருந்தால் கூட‌ தான்)? எந்த‌ ம‌த‌த்தில் இன்று கூட்ட‌ம் இல்லை என்கிறீர்க‌ள். இவ‌ர்க‌ளின் கூட்ட‌த்தை வைத்து இவ‌ர்க‌ள் எல்லாம் ச‌த்திய‌த்தை போதிக்கிறார்க‌ள் என்று ஆகி விடுகிற‌தா?

ச‌த்திய‌த்தை ந‌ம்பும் கூட்ட‌ம் வேத‌த்தின் ப‌டி நிச்ச‌ய‌மாக‌ ஒரு சிறு கூட்ட‌மாக‌ தான் இருக்கிற‌து என்ப‌தில் எந்த‌ ச‌ந்தேக‌மும் கிடையாது. தேவ‌ன் அனைவ‌ரின் க‌ண்க‌ளும் திற‌க்க‌ப்ப‌ட‌ ஒரு நேர‌த்தை வைத்திருக்கிறார். அத‌ற்குள் குறை பிர‌ச‌வ‌ குழ‌ந்தை போல் வெளிக்கொண்டுவ‌ர‌ ஏன் தான் த‌ங்க‌ளை ஊழிய‌ர்க‌ள் என்று அறிவித்துக்கொண்டு பித‌ற்றி திரியும் கூட்ட‌த்திற்கு செவி கொடுக்கிறீர்க‌ள்?

இந்த‌ த‌ள‌த்தை குப்பையாக்க‌ க‌ங்க‌ன‌ம் க‌ட்டி கொண்டு ஒரு self made ஊழிய‌ன் "அனைவ‌ரின் வெற்றிக்காக‌ ஜெபிப்ப‌வ‌ன்" என்று உலா வ‌ந்திருக்கிறார். த‌ங்க‌ள் வாத‌ங்க‌ளை உறுதி ப‌டுத்த‌ உங்க‌ளையும் சேர்த்துக்கொள்ள‌ பிர‌யாசிக்கிறார். சேர்வ‌தோ, சேராம‌ல் இருப்ப‌தோ உங்க‌ள் சுத‌ந்திர‌ம். பிற‌ த‌ள‌ங்க‌ள் போல் இங்கு யாரையும் நீக்க‌ போவ‌தில்லை. அவ‌ர்க‌ளின் ப‌திவுக‌ளால் அவ‌ர்க‌ள் அறிய‌ப்ப‌டுவார்க‌ளாக‌.

இது ச‌த்திய‌த்தை மாத்திர‌மே வாஞ்சிக்கும் க‌ழுகு கூட்ட‌த்திற்கு மாத்திர‌மே. அது காக்காவை போல் திர‌ள் கூட்ட‌மாக‌ இல்லாம‌ல், க‌ழுகின் த‌ன்மையில் சிறுகுட்ட‌மாக‌ மாத்திர‌மே இருக்கும். இது ஆள் சேர்க்கும் த‌ள‌மும் கிடையாது. இங்கு சுமார் 26 பேர் பதிவு செய்திருந்தாலும், தொட‌ர்ந்து எழுதுவோர் 6 பேர் அள‌வு தான். சாப்பிட்ட‌து செரிக்காம‌ல் எச்ச‌ம் போடும் த‌ள‌ம் இது அல்ல‌ என்று இத‌ன் மூல‌ம் சொல்லிக்கொள்ள‌ பிரிய‌ப்ப‌டுகிறேன்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பிலிப்பியர் 2: 9. ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

இந்த‌ வச‌ன‌த்தில் எல்லா நாம‌த்திற்கும் மேலான‌ நாம‌த்தை அவ‌ருக்கு த‌ந்த‌ருளினார் என்றால் யெகோவா தேவ‌னுடைய‌ நாம‌த்தை காட்டிலும‌ உய‌ர்வான‌ நாம‌ம் என்கிற‌ அர்த்த‌மா? அப்ப‌டி என்றால் கீழ் கானும் வ‌ச‌ன‌ம் இத‌ற்கு முற‌னாக‌ இருக்கிற‌தே!

I கொரிந்தியர் 15 :"27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.

28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்."

இப்ப‌டியாக சர்வ வல்லமை உள்ள யெகோவா தேவ‌னுக்கு இயேசு கிறிஸ்து என்கிற‌ உன்ன‌த‌மான‌ தேவ‌னுடைய‌ குமார‌ன், வ‌ல்ல‌மை உள்ள‌ தேவ‌ன், கீழ் ப‌ட்டிருப்பார் என்று தானே வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌து. ஆனால் வேத‌ புர‌ட்ட‌ர்க‌ள், தாங்க‌ள் தேவ‌னிட‌த்தில் அனுதின‌மும் பேசுகிறோம் என்று, சொல்லிக்கொண்டு, எந்த‌ ஆவியில் தான் தேவ‌னும் இயேசு கிறிஸ்துவும் ஒருவ‌ரே என்று அறிக்கை செய்து வ‌ருகிறார்க‌ளோ!! அறைகுறை வேத‌ அறிவை வைத்துக்கொண்டு, த‌ங்க‌ளை முழு நேர‌ ஊழிய‌ர்க‌ள் என்று பித‌ற்றி கொண்டு, வீடுக‌ள் தோறும் ஏமாந்து போகிற‌வ‌ர்க‌ளை ஏமாற்றி வ‌ருகிறார்க‌ளே!! என்ன துனிச்சலான தேவதூஷனம். இவர்களை குறித்து தான் பவுல் "ஓநாய்கள்" என்று எழுதியிருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். ஆதி அப்போஸ்தலர்களின் போதனைகளை மறுத்து, இருண்ட காலங்களில் வேதத்தை புறட்டி சொல்லி கொடுத்த மனித போதனைகளையே இவர்களும் பிரசங்கித்து, இது தேவன் எங்களுக்கு தந்தது என்று துனிச்சலாக‌ சற்றும் தேவ‌னுக்கு ப‌ய்ப்ப‌டாத‌வ‌ர்க‌ளாக‌வே இன்னும் பிற‌ர் உழைப்பில் வாழ்ந்து வ‌ருகிறார்க‌ளே!!

இப்ப‌டி பிற‌ர் உழைப்பில் வாழ்ந்து தேவ‌ன் எங்க‌ளோடு பேசுகிறார் என்று சொல்லும் க‌ள்ள‌ உப‌தேசிக‌ளுக்கு எச்ச‌ரிக்கையாக‌ இருப்போம்.

இவ‌ர்க‌ளை குறித்து தான் "அங்கே அழுகையும், ப‌ற்க‌டிப்பும் உண்டாயிருக்கும்" என்கிற‌து வேத‌ம்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வரப்போகும் காரியங்களை அறிவிக்கும் கிறிஸ்தவ மண்டல குறிக்காரர்களே (கள்ளத்தீர்க்கதரிசிகளே). உங்களில் யாருக்கும் தேவன் தான் செய்ய போகும் காரியத்தை வெளிப்படுத்தவில்லையா? சுமார் 2 இலட்ச்சம் உயிர்களை எடுத்துக்கொண்ட ஹெயிட்டி பூகம்பத்தை பற்றி எந்த ஒரு கள்ள தீர்க்கதரிசியும் குறி சொல்லவில்லையே? என்ன ஆச்சரியம்!! அதிலும் வந்த பிறகு கூட நான் இதை அந்த சபையில் போன வருஷம் ஜனவரி மாதமே பேசியிருந்தேன் போன்ற அறிவிப்புகளும் கானவில்லையே?

எல்லாவற்றையும் தேவன் தங்களுக்கு வெளிப்படுத்துகிறார் போன்ற அபத்தங்களை சொல்லி பணம் பார்க்கும் இந்த கள்ள தீர்க்கதரிசிகள் இந்த முறை என்ன பதில் வைத்திருக்கிறார்களோ!! கிறிஸ்தவ சமுதாயமே, தீர்க்கதரிசனம் என்றால் தேவனின் வார்த்தைகள் மாத்திரமே! அது தேவ திட்டங்களின் வெளிப்பாடு மாத்திரமே. அது ஏது ஒவ்வொரு வருடமும் புது வருஷத்தில் உறைக்கப்படும் காரியங்கள் இல்லை. தேவனின் தீர்க்கதரிசனங்கள் வேதத்தைல் முழுமையாக எழுதப்பட்டு விட்டது, இனி சொல்லப்படுபவைகள் எல்லாம் கள்ள தீர்க்கதரிசின‌ங்க‌ளே!!

இந்த‌ க‌ள்ள‌ தீர்க்க‌த‌ரிசிக‌ள் இதை குறுந்த‌ட்டில் ப‌திந்து இந்த‌ வ‌ருட‌த்திற்கான‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் என்று சொல்லி சில‌ குறி சொல்லுத்த‌லை அதில் வைத்து ப‌ண‌ம் பார்க்கும் ஓநாய்க‌ள். இவ‌ர்க‌ளிட‌ம் இருந்து ஜாக்கிர‌தையாக‌ இருப்ப‌தையே வேத‌ம் சொல்லுகிற‌து.

ஹெயிட்டியின் இவ்வுள‌வு பெரிய‌ அழிவை இந்த‌ ஒரு தீர்க்க‌த‌ரிசியும் Claim ப‌ன்ன‌வில்லையே!! ஆச்ச‌ரிய‌ம் ஆனால் உண்மை!! ஒரு வேளை நான் இதை எழுதி முடிப்பதர்குள் ஏதோ ஒர் செய்தியில் யாரோ ஒரு க‌ள்ள‌த்தீர்க்க‌த‌ரிசி, "இந்த‌ பூக‌ம்ப‌த்தை குறித்து தேவ‌ன் என‌க்கு போன‌ வ‌ருஷ‌ம் ஆக‌ஸ்ட் மாத‌மே வெளிப்ப‌டுத்தினார், அதை நான் என் ச‌பையிட‌ம் சொல்லியிருக்கிறேன்" என்கிற‌ வித‌மான‌ காரிய‌ங்க‌ள் வ‌ந்தாலும் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவ‌த‌ற்கு இல்லை!!




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

"கேப்பையில் நெய் வடியுதுன்னா கேக்குறவனுக்கு புத்தி எங்க போச்சு" என்ற கிராமிய பழமொழியிலுள்ள ஞானம் கூட இன்றைய வேதம் வாசிக்கும் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு இல்லை என்பது வருந்தத்தக்கது. ஆனாலும் அவருடைய வருகையின் பிரசன்னத்தால் இந்த அறியாமை இருள் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருப்பதையும் வேதத்தை ஆராய்பவர்கள் மட்டுமே உணரமுடியும்.

அதே இடத்தில் இன்னொரு பூகம்பமும் வந்தது என்று செய்தி!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அன்று எகிப்த்திலிருந்து தேவன் இஸ்ராயேல் மக்களை மோசேயின் தலைமையில் கூட்டி வந்தார். மக்களுக்கு மாமிசம் தேவைப்பட்டபோது மோசேயிடம் முறையிட்டார்கள். தேவன் அவர்களின் பயனத்திற்கு பொறுப்பேற்றபடியால் அவரே காடைகளை பொழிந்தார்.

இன்று தேவன் தங்களை தொலைக்காட்சி மூலமாக ஊழியம் செய்யும் படி அழைத்தார் என்று சொல்லிக்கொண்டு மக்களிடமே அதற்கு உண்டான பணத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். தேவனே அவர்களிடம் இப்படி ஒரு ஊழியத்தை கொடுத்திருந்தால் அன்று மோசேயின் தலைமையில் இஸ்ராயேல் மக்களுக்கு தேவன் காடையை பொழிந்தது போல் இன்று சுயமாக தங்களை ஊழியர்கள் என்று உயர்த்தி தேவன் பெயரில் இவர்கள் ஆடம்பரமான டீ.வி நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவன் வானத்திலிருந்து பணத்தை வருஷிக்க மாட்டாரோ. அப்பாவி கிறிஸ்தவர்களை தேவனின் பெயரை சொல்லி ஆடம்பரமான டீ.வி நிகழ்ச்சியின் மூலம் தான் ஜனங்களை இரட்சிப்பிற்குள் நடத்த முடியுமா அதுவும் இவர்களிடமே பணத்தையும் கேட்டு. அதாவது வேத வசனங்களினால் இரட்சிக்கப்படாத மக்கள் இவர்களின் ஆடம்பர டீ.வி நிகழ்ச்சிகளின் மூலமாக இரட்சிக்கப்படுவார்கள் என்று இவர்களின் நினைப்பு.

கிறிஸ்தவ மக்கள் ஏன் இப்படி பட்ட டீ.வி ஊழியர்களிடம் கேள்வி எழுப்புவதில்லை? அன்று பவுல் போன்ற அப்போஸ்தலர்கள் கூடார தொழில் செய்து சுவிசேஷம் சொல்லி வந்தார்கள். இன்றோ இந்த நவீன ஊழியர்கள் (!!) ஆடம்பரமாக இருக்கைகளின் அமர்ந்து வேலை செய்யாமல் (பெரும்பாலுமானோர்) மக்களிடமிருந்து பணத்தை வாங்கி இவர்கள் தங்கள் பெயர் புகழ்சிக்காக சுவிசேஷம் என்று சொல்லி அதுவும் தேவன் இவர்களிடத்தில் இப்படி செய்ய சொன்னார்கள் என்று சொல்லி துனிகரமாக செய்து வருகிறார்கள்.

கிறிஸ்தவர்களே, காலம் கடைசியாக இருப்பதால், "இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொண்டு அவரின் நாமத்தை சொல்லிக்கொண்டு "அநேகர்" வரும் காலமாக இருக்கிறது" மத். 24:24. ஆகவே இப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

//ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து- குறிப்பிட்ட மக்களுக்கு குறிப்பிட்ட நோக்கத்துடன்- எழுதப்பட்ட நிருப வாக்கியத்தை பொதுவான தன்மையுடைய போதனையாகவோ,கொள்கையாகவோ கொள்ளமுடியாது;

சுவிசேஷப் பணியை முழுநேரமாக செய்தோரால் மட்டுமே கிறிஸ்தவத்தில் ஒவ்வொரு துறையிலும் அரும்பெரும் சாதனைகளைச் செய்யமுடிந்தது;//


வேதத்தின் எல்லா வசங்களுமே அப்படித்தான் மிஸ்டர் ஊழியர்வாள்! வேலை செய்யச்சொன்னால் அது யாருக்கோ சொன்னது; தசம பாகம் முதலான வசூலிக்கும் வசனங்கள் மாத்திரம் அப்பாவி 'விசுவாசி'களூக்கு, 
சூப்பர்மா? இப்படியே மெயின்டன் பண்ணீங்கன்ணா சீக்கிரம் முன்னேறிருவீங்ணா.

இயேசு கிறிஸ்து கிறிஸ்தவத்தில் ஒவ்வொரு துறையிலும்(?) அரும்பெரும் சாதனைகளை செய்யச் சொல்லவேயில்லை.அடுத்தவரிடம் உதைவாங்கியே சாவீர்கள் என்றுதான் சொன்னார். அதேதான் அப்போஸ்தலருக்கும், சபைக்கும் நடந்தது... 

அதைவிட சாதனைகள் உலகத்தார் செய்துகொண்டுள்ளனர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மதிகேடு வெளிப்படுகிறது!



யந்னேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள், ஆனாலும் இவர்கள் அதிகமாய்ப்பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும் 2தீமோ3:8,9.

ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். 2தீமோ 4:3,4.

என்ற வசனங்கள் இவ்வளவு துல்லியமாக நிறைவேறுமென்று நமக்கே ஆச்சரியமாக உள்ளது. ஆரோக்கியமான வசனத்தைப் பொறுக்க மனதில்லாமல் செவித்தினவுள்ளவர்களாகி தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு (activeboardல் ) சத்தியத்துக்குச் செவியை விலக்கி கட்டுக்கதைகளுக்கு சாய்ந்தே விட்டார்கள். பாபிலோன் குழப்பத்தின் உச்சகட்டம் இவர்களது தளங்களில் தெளிவாகத் தெரிகிறது.

அப்போஸ்தலர்களுக்கே பாதாளம் என்றால் என்னவென்று தெரியாதாம். இவன்தான் ஜெயங்கொள்ளுகிற‌வனாம். இவன்தான் ஜெயம்கொண்டு சாத்தானைக் கட்டப்போகிறானாம்....

இவன்கள் மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட தேவன் கிருபை செய்ததற்காகவும் அதற்கு வழிவகுத்த இந்த 'தள' சேவைகாகவும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

ஒரு ஜோக்தான் ஞாபகம் வருகிறது.

ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் ஏராளம் பைத்தியங்கள் இருந்தனவாம். ஏகப்பட்ட உத்திகள், பயிற்சிகளுக்குப் பின்பு அவர்கள் 'முன்னேற்றத்தை'ச் சோதிக்க ஒரு சிறிய டெஸ்ட் வைத்தார்களாம். அதன்படி எல்லோரையும் ஓரிடத்தில் கூட்டி அவர்களை சைக்கிள் பெடல் செய்யச் சொன்னார்களாம், அதாவது சைக்கிளே இல்லாமல். எல்லா பைத்தியங்களும் காலைச் சுழற்றி வேக வேகமாக பெடல் செய்தனராம். ஆனால் ஒருவர் மாத்திரம் பெடல் செய்யாமல் இருக்கவே டாக்ட‌ர்களுக்கு ஒரே மகிழ்ச்சி, ஒருவனாவது சரியாகிவிட்டானே என்று. எல்லாரையும் நிறுத்தச் சொல்லிவிட்டு இவனிடம் சென்று கேட்டார்களாம், ஏன் நீ மாத்திரம் பெடல் செய்யவில்லை என்று அதற்கு நம் 'ஜெயங்கொண்டான்' என்ன சொன்னான் தெரியுமா?

"பெடல் செய்ய நான் என்ன முட்டாளா? நான் இறக்கத்தில்தானே சென்றுகொண்டிருக்கிறேன்."

ஆக நாமும் ஏதோ கேள்வியெல்லாம் கேட்கிறார்களே ஏதோ கொஞ்ச‌மாவது தலையில் இருக்கும் என்றெண்ணித்தான் இந்தத் தளத்தில் இந்த மேதாவிகளுக்கெல்லாம் பதில் கொடுத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இதெல்லாமே இறக்கத்தில் சைக்கிள் விடும் கேஸ்கள் என்று தெரிந்து அதிகம் வருத்தப்பட்டோம். "அவரவர்களுடைய 'தளங்களினாலே' அவர்களை அறிவீர்கள்."

இவர்களுடைய முழுநீள காமெடி தளங்களில் இவர்களுக்கு பதில் எழுதி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணடிப்பவர்களைக் குறித்துதான் அதிகம் கவலைப்பட வேண்டியுள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அப்போஸ்தலர்களுக்கு விளங்காத பல காரியங்கள் 2ம் நூற்றாண்டு முதல் பலருக்கு விளங்க ஆரம்பித்து விட்டது (!) ஆகவே தான் மகா பாபிலோனான சபை கத்தோலிக்க சபை உருவானது. அன்று தொடங்கிய வெளிப்பாடுகளின் வரிசை இன்று வரை முடிந்தபாடில்லை. ஆட்கள் மாறுகிறார்கள் ஆனால் சரக்கு அதே தான்.

கிறிஸ்தவத்தில் நரகம் என்று வர்னித்தவர் அல்லது நரகத்தின் தந்தை என்று சொல்லப்போனால் அது டாண்டே என்கிற கத்தோலிக்கர். இவருக்கு வெளிப்பட்டது தான் உச்சக்கட்டம். இன்று வெளிப்பாடுகள் கிடைத்தவர்கள் எல்லாம் "பச்சா"க்கள் தான். இவரின் புத்தகங்களை படித்தால் மேலும் பல வெளிப்பாடுகள் கிடைக்கும். அதை தேவன் எனக்கு வெளிப்படுத்தினால் என்று சொல்லுவதில் சுலபமாக இருக்கும்.

யோபு என்கிற வேதத்தில் உள்ள புத்தகம் அநேக அரிவியல் விஷயங்களை விளக்குகிறது, பூமிக்கு கீழ் என்ன இருக்கிறது என்று அதில் ஒன்றுமே இல்லையே!! பாவம் யோபுவிடம் தொடங்கி பவுல் பேதுரு வரை தேவன் வெளிப்படுத்தாமல் போனது தேவன் பட்சபாதம் உள்ளவராக இருப்பதாலோ!! வேதத்தில் இட‌ம்பெற்ற‌வ‌ர்க‌ள் அல்ல‌து வேத‌த்தில் பெரும் ப‌குதிக‌ளை எழுதிய‌ இவ‌ர்க‌ளுக்கு தேவ‌ன் பாதாள‌ங்க‌ளின் இர‌க‌சிய‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்தாது வேத‌னையான‌ விஷ‌ய‌ம் தான்!!

தேவ‌ன் குழ‌ப்ப‌த்தின் தேவ‌ன் அல்ல‌ என்று தான் வேத‌ம் கூறுகிற‌து, ஆனால் ந‌ர‌க‌ம், பாத‌ள‌த்தை ப‌ற்றி போட்டி போட்டு கொண்டு இன்று வெளிப்பாடுக‌ளை எழுதி வ‌ரும் ந‌ப‌ர்க‌ளின் எண்ணிக்கை பெருகி விட்டதால் இந்த‌ காரிய‌ங்க‌ளை வாசிக்கும் புற‌ம‌த‌ஸ்த‌ர்க‌ள் இவ‌ர்க‌ளின் தேவ‌ன் நிச்ச‌ய‌மாக‌ குழ‌ப்ப‌த்தின் தேவ‌ன் தான் என்று சொல்ல‌ துனிவார்க‌ளே!! என்ன‌ ஒரு வேத‌னையான‌ விஷ‌ய‌ம்!!

ந‌ர‌க‌ம், ம‌ற்றும் பாத‌ள‌த்தை குறித்தான‌ வெளிப்பாடுக‌ளின் த‌ந்தையான‌ டாண்டேயை குறித்து அறிந்துக்கொள்ளுங்க‌ள்

http://en.wikipedia.org/wiki/Inferno_(Dante)

இன்று தேவ‌ன் எங்க‌ளுக்கு வெளிப்ப‌டுத்தினார் என்று ஒரு கூட்ட‌ம், தேவ‌ன் என் அறையில் தோன்றி இவ‌ற்றை சொன்னார் என்று ஒரு கூட்ட‌ம், இந்த‌ இட‌த்தில் தேவ‌ன் வ‌ருகிறார் என்று சொல்லும் ஒரு கூட்ட‌ம், மொத்த‌த்தில் இந்த‌ கூட்ட‌ங்க‌ளில் சேர்ந்துக்கொண்டு கிறிஸ்த‌வ‌த்தை அல்ல‌, தேவ‌னுக்கு விரோத‌மான‌ ஒரு விசுவாச‌த்தை கொடுத்து கிறிஸ்த‌வ‌ர்க‌ளை கெடுத்துக்கொண்டு வ‌ருகிற‌தை நாம் காண‌முடிகிற‌து. (மத். 24:23 -26) (அவசியம் வேதத்தில் படியுங்கள்!!)

வேத‌த்தை ஆராய‌ம‌ல், என‌க்கு கிடைத்த‌து தான் வெளிப்பாடுக‌ள் என்றால், ஏன் பிற‌ ம‌த‌ங்க‌ளில் அல்ல‌து கிறிஸ்த‌வ‌ர்க‌ளிட‌ம் இவ‌ர்க‌ள் போதிக்க‌ வேண்டும்? அனைவ‌ரும் விசுவ‌சிக்க‌ த‌க்க‌ த‌ங்க‌ளிட‌ம் புத்த‌க‌ங்க‌ள் வைத்திருக்கிறார்க‌ளே! ஒவ்வொரு மொழியிலும் "அக‌ராதி" என்கிற‌ புத்த‌க‌ம் வ‌ந்த‌தே, சுல‌ப‌மாக‌ ஒரு வார்த்தையின் அர்த்த‌தை புரிந்துக்கொள்ள‌ தானே.

த‌மிழ் வேதாக‌ம‌ம் என்று சொல்லுக்கொண்டு "ச‌ம‌ஸ்கிருத‌" வார்த்தைக‌ள் க‌ல‌ந்த‌ ஒரு புத்த‌க‌த்தை இவ‌ர்க‌ள் அர்த்த‌ம் தெரியாம‌ல் புரிந்துக்கொண்டு அதன் மூல‌ம் தேவ‌ன் வெளிப்ப‌டுத்தினார் என்ப‌தை காட்டிலும் பெரிய‌ காமேடி ஒன்றும் இல்லை.

கிறிஸ்த‌வ‌ர்க‌ளே, "விழிப்பாயிருங்க‌ள்" என்று ந‌ம் எஜ‌மான‌ன‌ கிறிஸ்து சொல்லி போயிருக்கிறார்க‌ள், விழிப்பாயிருங்க‌ள் என்றால், உப‌வாச‌ம் இருந்து இர‌வு முழுவ‌தும் தூங்காம‌ல் இருப்ப‌து அல்ல‌, மாறாக‌ க‌ள்ள‌ போத‌க‌ர்க‌ள், க‌ள்ள‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ள், தேவ‌ன் சொல்லாத‌ ஒரு காரிய‌த்தை வெளிப்பாடுக‌ளாக‌ பெறுப‌வ‌ர்க‌ள், நான் தான் அப்போஸ்த‌ல‌ர் என்று சொல்லுப‌வ‌ர்க‌ள், பொதுவாக‌ மேட்டிமை பாராட்டுகிற‌வ‌ர்க‌ளை பார்த்து வேத‌த்துட‌ன் அதை ஒப்பீட்டு பார்த்து எச்ச‌ரிக்கையாக‌ இருப்ப‌தை தான் "விழித்திருங்க‌ள்" என்று சொல்லி சென்றுள்ளார்.

விழிப்பாயிருப்போம், பிற‌ரை விழிப்பாக‌ இருக்க‌ எச்ச‌ரிப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இன்று பெருவாரியான கிறிஸ்தவ ஊழியர்கள் (!!) சொல்லும் வெளிப்பாடுகள் தேவன் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் போல். ஆகவே தான் தேவன் அன்றே சொல்லி வைத்திருக்கிறார், "உங்கள் நினைவுகள் என் நினைவுகள் அல்ல" என்று. சத்திய வசனங்களை விசுவசியாமல் அந்த வசனங்களை தரிசித்தால் விசுவாசிப்போம் என்கிறபடியால் கொடிய வஞ்சகத்தை அவர்களுக்குள் தேவன் அனுப்ப சித்தம் கொண்டிருக்கிறார் என்பதை சற்றும் உணராதவர்கள் மென்மேலும் தங்களை மேன்மை படுத்தி வருகிறார்கள்!! இது எல்லாம் எங்கு போய் முடியுமோ!! தங்களை பவுல் என்றும், யோவான் என்றும், அப்போஸ்தலர்கள் என்றும் ஏன் இன்னும் சற்று உயர்த்தி இயேசு கிறிஸ்து என்று சொல்லும் காலமும் வருகிறது. தோமா கூட அவனின் செயலுக்கு மன்னிப்பு கேட்டார் ஆனால் இன்று வெளிப்பாடுகள் பெறுகிறவர்கள் எந்த ஆவியில் வெளிப்படுகள் பெறுகிறார்கள் என்று தெரியாததினால் தங்களையும் தங்கள் வெளிப்பாடுகளையும் மேன்மை பாராட்டி வருகிரார்கள்!!

விழிப்பாக இருப்போம். இந்த வெளிப்பாடுகள் சமாச்சாரம் எல்லாம் உங்களுக்கு பிறகு என்னை விசுவசிக்கும் ஒவ்வொரு மக்களுக்கும் தந்து தான் அவர்கள் மூலமாக நான் இரட்சிப்பை உண்டு பன்னுவேன் என்று எந்த வேதத்தில் தான் எழுதியிருக்கிறதோ!! கொப்டுமையாக இருக்கிறது.

அப்போஸ்தலர்களிடத்தில் இயேசு கிறிஸ்து இனி அவரின் இரண்டாம் வருகையின் போது தான் வ‌ருவேன் என்று சொன்ன‌வ‌ர், இந்த‌ கால‌த்தில் இத்துனை பேருக‌ளுக்கு எப்ப‌டி தான் வ‌ந்து சொல்லி போகிறாரோ!!

ச‌த்திய‌த்தில் பிரிய‌ம் வைய்யாம‌ல் இது போன்ற‌ த‌ரிச‌ன‌ங்க‌ளை ந‌ம்புவோருக்கு தான் 2 தெச‌ 2:11,12.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இன்னும் எத்தனைக் காலம்தான்....


தங்களை ஊழியர்கள் என்று அழைத்துக்கொள்ளும் பலர், "இயேசு என்னிடம் இதைச் சொன்னார், அதைச் சொன்னார்" என்று புருடா விடுவது நாம் அறிந்ததே. நமது கேள்வியெல்லாம் இப்படி இவர்களுடன் 'நேரடியாக' பேசும் இவர்கள் இயேசு ஏன் வேத சம்பந்தமான கேள்விகளுக்கு இவர்களுக்கு விடை அளிப்பதில்லை? வேலை நேரத்தில் ஊழியம் செய்யக்கூடாதென்றெல்லாம் 'சொல்லுகிறாராம்' ஆனால் சாமுவேல் என்னவானார் என்று சொல்லிக்கொடுப்பதில்லை. வினோதமாக உள்ளது!

//மரணத்தை பற்றிய  முழுதெளிவு இன்றுவரை யாருக்குமே கிடையாது. ஒருவர் மரித்து பிழைத்து வந்து சொன்னால்தான் உண்டு. அதையும் யாரும் நம்ப போவது இல்லை. ஏனெனில்  அனைத்தும் அறிந்த  ஆண்டவராகிய இயேசு மிக தெளிவாக மரித்த ஐஸ்வர்யாவான்  பாதாளத்தில் வேதனை அனுபவித்தான் என்று  சொல்லி யிருந்தும், அதையே நீங்கள் முற்றிலும் நிராகரித்து அது உண்மையல்ல என்று வாதிடும்போது இயேசுவை விட உங்களுக்கு மரணத்தை பற்றி அதிகம் தெரியுமா?
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்
பாதாளம் என்ற வார்த்தைபற்றிய உண்மைகளை முழுமையாக அறிந்தால்தான் மட்டுமே  மரணம் பற்றிய மறைபொருளை அறியமுடியும்! //

மரணத்தைப் பற்றிய தெளிவு யாருக்குமே இல்லையாம்.இவருக்கு இல்லையெனறால் யாருக்குமே இல்லை என்று அர்த்தமல்ல. மரித்து எழுந்த இயேசுதான் இவரிடம் அடிக்கடி வந்து பேசுகிறாரே அவர்கூட சொல்லிக்கொடுப்பதில்லையா?

ஐசுவரியவான் - லாசரு என்பது ஒரு உவமை என்றுகூட தெரியாமல் வியாக்கியானம் செய்கிறார்கள்

இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்களோ?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

JESUS CALLS தினகரனும் கொள்ளை கும்பலும்

Wednesday, January 12, 2011
 
family.jpg


இந்தியாவில்  இப்போது  கொள்ளை கும்பல்கள் ஒருபக்கம் போட்டி போட்டுக்கொண்டு  கொள்ளையடிக்கிறது என்றால் ஆன்மீகத்தை பரப்புகிறேன்  சுகம் அளிக்கிறேன் என்று இன்னொரு கும்பல் ஒரு பக்கம் கொள்ளையடித்துக்கொண்டு வருகிறது.   இவர்கள் கொட்டத்தை அடக்கவேண்டிய ஆட்சியாளர்களோ  இவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்றனர்.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன்று அனைத்து போலி  ஆன்மிகவாதிகளும் ஊர் ஊராக கிளைகள் வைத்து தங்கள் கொள்ளையை தொடர்ந்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்ப வேளி நாடுகளில் இருந்து  தங்கள் சொத்து சுகத்தை எல்லாம் விட்டு இந்தியாவிற்கு வந்து கிறிஸ்த்துவத்தை பரப்பி தன் உயிரை விட்டவர்களும் உண்டு. ஆனால் இன்று இருக்கும் ஆன்மிகவாதிகளோ மதத்தை பரப்புகிறேன் என்று கூறி வசதியையும் செல்வாக்கையும் அடையவே ஆன்மிகத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு வானொலியில் கிறிஸ்த்துவத்தை பரப்பவும், பிரசங்கம் செய்யவும் தொடங்கிய JESUS CALLS  குடும்பத்தினரின்  வாழ்க்கை இன்று இந்தியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் இவர்களுடைய நிகழ்ச்சியை மொழிபெயர்த்து வெளியிடும் அளவுக்கும் வளர்ந்துவிட்டனர்.


இவர்களுடைய நூதன கொள்ளை முறைகள்:
►தீர்க்கதரிசனம் சொல்வது
►ஜெப உதவிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொள்வது
►பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை
►பங்காளர், உறுப்பினர் திட்டம்.
►நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகம் அளிப்பது
►ஆன்மிகத்தை தொழிலாக மாற்றியது
►கிறிஸ்த்துவத்தை பரப்புகிறேன் என்ற பெயரில் கடவுளை அழிப்பது
தீர்க்கதரிசனம் சொல்வது
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும்  இவர்கள்  ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வார்கள், அந்த கூட்டத்தை கூட்ட இவர்கள் சொல்லும் வார்த்தை "இந்த ஆண்டுக்கான தீர்க்கதரிசனம்" வழங்குகிறார் பால்தினகரன் என்பதுதான். அந்த கூட்டத்தில் கடவுள் இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப்போகிறது என்று சொன்னார் என்று ஒவ்வொன்றாக சொல்வார்(ஆடியில காத்தடிக்கும், ஐப்பசில மழையடிக்கும்னு). கடவுளுக்கு வேற வேலை இல்லையா? இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப்போகிறது என்று சொல்வதுதான் வேலையா?. அப்படி உண்மையில் கடவுள் இவர் காதில் வந்து நடப்பதை முன்கூட்டியே சொல்கிறார் என்றால் பேரழிவுகளை பாற்றி சொல்ல வேண்டியது தானே, மக்களாவது உயிர்ப்பிழைப்பார்கள் அல்லவா  இல்லை இவர்கள் அப்பா இறப்பதையாவது முன்கூட்டியே சொல்லி இருக்கலாமே?

ஜெப உதவிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொள்வது
 உண்மையில் மதத்தை பரப்புபவன் தனக்கு ஏதேனும் ஆபத்து, கஷ்ட்டம் வரும்போது கடவுளிடம்  பிரார்த்திக்கவேண்டும் என்றுத்தான் பிரசங்கம் பண்ணுவான். ஆனால் இந்த கொள்ளை கூட்டமோ உங்களுக்கு எந்த ஒரு கஷ்ட்டமாக இருந்தாலும் எங்கலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் என்று தொலைக்காட்ச்சிகளிலும், புத்தகங்களிலும் தங்களுடைய தொலைப்பேசி என்னை விளம்பரப்படுத்துகின்றனர். தனக்காக இன்னொருவன் பிரார்த்தித்தால் கடவுள் கேட்டுவிடுவாரா?

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை:
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறேன் என்று பள்ளி மாணவர்களை அழைத்து கட்டாய காணிக்கை பெற்று வருகின்றனர். அது என்ன கட்டாய காணிக்கை என்று கேட்க்குறிங்களா? ஆம் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திருக்கு வந்திருக்கும் மாணவர்களை ஒரே நேரத்தில் எழுந்து நிற்கச்சொல்லி அவர்கள் காணிக்கை அளித்தப்பின்தான்  அமரச்சொல்வார்கள் அங்கே வந்த மாணவர்கள் வேறு வழி இல்லாமல் காணிக்கை செளுத்தியப்பிந்தான் அமருவார்கள்.

பங்காளர், உறுப்பினர் திட்டம்:
இவர்கள் அலுவலகத்துக்கு யாராவது குறை என்று வந்துவிட்டால் போதும் அவர்கள் முகவரியை வாங்கிவிட்டு அவர்கள் வீட்டுக்கு MONEY ORDER அனுப்புவதற்கான படிவத்தை அனுப்பிவிடுவார்கள் காணிக்கை அனுப்பச்சொல்லி. அதுமட்டும் இல்லாமல் பணம் கொடுத்தால் தான் உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் என்பது போல் பல திட்டங்களை காட்டி பணம் பிடுங்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி இவர்கள் பணம் பிடுங்க பயன்படுத்தும் திட்ட விபரங்கள் உங்களுக்காக
►ஆசிர்வாத திட்டம்
►குடும்ப ஆசிர்வாத திட்டம்
►கட்டிட ஆசிர்வாத திட்டம்
►பிள்ளைகள் ஆசிர்வாத திட்டம்
► டிவி க்ளப்
►பிரார்த்தனை திருவிழா திட்டம்
►வணிக ஆசிர்வாத திட்டம்
இப்படி எதில் தொட்டாலும் கடவுளிடம் ஜெபம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பதை விட இவர்களிடம் பணம் கொடுத்தால்தான் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதுபோல் இவர்களிடம் வருபவர்களை பயமுறுத்தி பணம் பிடுங்கி வருகின்றனர்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகம் அளிப்பது
இவர்களுடைய அப்பா நோய்வாய் பட்டு இறந்தபோது இவர் மற்றவர்களுக்கு ஜெபம் செய்து  சுகமளிக்கிறேன் என்று தொலைக்காட்ச்சியில் சொல்லி பிரசங்கம் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது?

ஆன்மிகத்தை தொழிலாக மாற்றியது 

 
கும்பகோணம்  தீவிபத்தால் இறந்த  குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அங்கே வந்த குழந்தையை இழந்த பெற்றோர்களின் கதறலையும் அழுகையையும் வீடியோ எடுத்து அதையும் vcd போட்டு விற்ற ஒரு பயங்கரமான கொள்ளை கும்பல் தான் இவர்கள். அங்கே இவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திருக்கு வந்த பெற்றோர்கள் தங்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும் என்றுதான் வந்து அழுது புலம்பினர்.  ஆனால் இவர்கள் அவர்கள் அழுவதையும் அவர்களுக்கு பால்தினகரன் ஆறுதல் சொல்வதையும் வீடியோ எடுத்து வியாபாரமாக்கி பணம் சம்பாத்தித்தனர்.  இது ஒரு உதாரணம் மட்டும்தான் இன்னும் பல மோசடிகள் உள்ளன இவர்கள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் வரும் மக்களை அழைத்து அவர்களுடைய் நிலையை கேட்பது போலவும், அவர்கள் அழும்போது ஆறுதல் கூறுவது போலவும் நடித்து அதை வீடியோவாக  எடுத்து தொலைக்காட்ச்சியில் வெளியிடுகின்றனர்,   இதைப்பார்ப்பவர்கள் மனம் உருகி காணிக்கை அனுப்புவார்கள் என்று.


இப்படி இவர்கள் கொள்ளையையும், மோசடிகளையும் அடிக்கிக்கொண்டே போகலாம். அதைவிட இன்னொரு கொடுமை மக்களிடம் வாங்கப்படும் காணிக்கையை இவர்கள் செலவழிக்கும் விதம்தான். நீங்களே பாருங்கள் 




மக்கள் பணத்தில் இருந்து கட்டப்பட்ட கல்லூரி:(சில உதாரணம் மட்டும்தான் இன்னும் நிறைய கட்டிடங்களும், வானகரம் போன்ற இடங்களும் கணக்கில் அடங்காதவை)

1.jpg

2.jpg

3.jpg

சென்னை பீச் ஸ்டேஷன்:
TIAM+House.jpg


இந்த கட்டிடம் சென்னை பீச் ஸ்டேஷன் எதிரில் உள்ளது. இந்த இடத்தில் தொழில் முறையில் வணீக வளாகம் பிடிப்பதே பெரிய விஷயம் ஆனால் இவர்கள் மக்கள் பணத்தில் பெறப்பட்ட காணிக்கையை வைத்து இவ்வளவு விலை உயர்ந்த கட்டிடத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்புவதாக கூறிக்கொண்டு தொழில் நிறுவனங்களுடன் போட்டி போடுகின்றனர்.
மக்கள் காணிக்கை என்று இவர்களிடம் கொடுப்பது இறைப்பணிக்கு உதவும், ஏழைகளுக்கு உதவுவார்கள் என்றுத்தான் ஆனால் இவர்கள் அந்தப்பணத்தில் கல்லூரி கட்டவும், புதிதாக இடம் வாங்குவதிலுமே அதிகமாக செலவிடுகின்றனர்.

கிறிஸ்த்துவத்தை பரப்புகிறேன் என்ற பெயரில் கடவுளை அழிப்பது
 கிறிஸ்த்துவத்தை பரப்பிகிறேன் என்று கூறிக்கொண்டு கடவுள் படத்தை எதிலும் காட்டாமல் இவர்களுடைய புகைப்படத்தைத்தான் இவர்களுடைய அலுவலகத்திலும், தொலைக்காட்ச்சியிலும், மாத இதழ் புத்தகத்திலும் வெளியிடுகின்றனர். அதேப்போல் மக்களுக்கு ஏதேனும் ஒரு பிரட்ச்சனை என்றால் கூட கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள் என்று பரிந்துரைப்பது இல்லை எங்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளுங்கள், கடிதம் எழுதுங்கள் என்றுத்தான் பரிந்துரைக்கின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் கடவுள் இல்லை நாங்கள் தான் கடவுளின் மறு அவதாரம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

JESUS CALLS நிறுவன இணையத்தளத்தின் சிலப்புகைப்படங்கள்:

jesuscalls5.jpg

jesuscalls.jpg

jesuscalls1.jpg

jesuscalls3.jpg

jesuscalls4.jpg
இதில் ஒரு புகைப்படத்தில் கூட  கிறிஸ்த்துவத்தை குறிக்கும் சிலுவையையோ அல்லது கடவுளின் படமோ இல்லை இவர்கள் முழுக்க முழுக்க இவர்களது குடும்பத்தின் படத்தையும் இவர்கள் நிறுவனத்தின் லோகோவை குறிக்கும் கையைத்தான் பயன்படுத்துகின்றனர்.

ஆன்மிகத்தை தொழிலாக மாற்றுவதில் இவர்களும் ஒருவர் மட்டுமே, இன்னும் பல கொள்ளை கும்பல்கள் உள்ளன. அவர்களை பற்றிய விபரங்களுடன் அடுத்த பதிவில்.


பாவமும், குற்றமும் குறையும் வரை இவர்கள் கை ஓங்கியே இருக்கும்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நானும் கிறிஸ்தவன்தான்

Friday, January 14, 2011
 
crss001.gif
JESUS CALLS பதிவை படித்த பலர் எனக்கு பின்னூட்டம் மற்றும் மின்னஞ்சல் செய்யும்போது கேட்டது  நீங்கள் கிறிஸ்தவர்கள் மனதை புன்படுத்திவிட்டீர்கள் என்பதுதான். தவறு செய்பவன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தால் என்ன? உங்கள் மதத்தை சேர்ந்த ஒருவன்,  உங்கள் ஜாதியை சேர்ந்த ஒருவன் தவறு செய்தால் அதை கண்டுக்கொள்ளக் கூடாதா?. உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லவேண்டும் என்றால் நானும் கிறிஸ்தவன்தான். என்னடைய அந்த பதிவை படித்தாலே உங்களுக்கு தெரிந்திருக்கும், மற்றவனால் இவ்வளவு ஆதாரத்தோடு எழுத முடியும் ஏன்பது சந்தேகமே. 



என்னுடைய இளம் வயதில் இருந்து இவர்களுடைய  ஜெப கூட்டங்களுக்கும், பத்தாம் வகுப்பு தேர்வுக்காக சென்னை சேத்துப்பட்டில் இவர்கள்  ஏற்பாடு செய்த கூட்டத்துக்கும் சென்றவன் நான். கிறிஸ்த்துவத்தில் இவர்கள் மட்டும் இல்லை இன்னும் பலர் கொள்ளை அடிப்பதையே நோக்கமாக உள்ளனர் அவர்களை பற்றி உண்மையை இன்னும் நான் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். தயவு செய்து யாரும் இவர்கள்தான் கிறிஸ்த்து என்று நினைத்து விடாதீர்கள் கிறிஸ்து என்பதுகடவுள் மட்டும்தான். இவர்கள் கொள்ளை கும்பல்கள்.  



நம்மிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் ஒருவன் தப்பு செய்தான் என்று தெரிந்தால் கூட அவன் நம் ஜாதியை சேர்ந்தவன், மதத்தை சேர்ந்தவன், இனத்தை சேர்ந்தவன் என்று ஆதரவு குரல் கொடுப்பது, இது தவறான ஒன்று. இந்த ஒரு காரணத்தால் தான் இன்று ஆட்சியாலர்களே இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் இவர்களை கைது செய்தால் இவர்களுடைய ஆதரவாளர்கள் எதிர்ப்பார்கள் என்று.



JESUS CALLS நிறுவனம் ஒரு கொள்ளை கும்பல் என்பது அனைத்து கிறிஸ்த்தவர்களுக்கும் தெரியும் ஆனால் எங்கே இவர்கள் மாட்டினால் கிறிஸ்த்துவ மதத்துக்கு களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று தயங்கி புகார் கொடுக்க தயங்குகின்றனர். இவர்களை பாற்றி நான் உலகத்திற்கு காட்ட வேண்டும் என்று நான் கல்லூரியில் படிக்கும்போதே முடிவு செய்து இருந்தேன் ஆனால் இரண்டு வருடம் தாமதமாகி விட்டது. வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள் தப்பு செய்பவன் யாராக இருந்தாலும் தைரியமாக வெளிச்சம் போட்டு காட்டுங்கள், இந்த குப்பைகள் கிறிஸ்த்துவத்தில் மட்டும் இல்லை ஹிந்து, முஸ்லிம் என எல்லாம் மதத்திலும் உண்டு. ஆனால் நாம் நம் மதத்தினரை எப்படி குற்றம் சாட்டுவது என்று தயங்குகிறோம். இதனால் குப்பைகள் அதிகரித்துக் கொண்டேத்தான் போகும்.

JESUS CALLS நிறுவனத்தை பாற்றி எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்:



//
தங்க பேழை திட்டம்,அவர்கள் கட்டும் கட்டிடத்தில் ஒரு அறை கட்டும் செலவுக்கு பணம் தருபவர் பெயரை ஒரு தங்க பேழையில் வைத்து 24 மணி நேரமும் ஜெபிப்பார்களாம்.அப்படி ஜெபித்தால் அவர்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராம்.மற்றொன்று ஒலி ஒளி தட்டுக்களை விற்பது.அந்த டிவிடி,சிடிக்களை வீட்டில் பார்த்தாலோ கேட்டாலோ அவர்கள் வீடு ஆசீர்வதிக்கப்படும்மாம்.இன்னொன்று அவர்களின் கல்லூரிகளில் படிக்கும் மானவர்களிடம் அடிக்கும் கொள்ளை.பால் தினகரனின் பிறந்த நாளை கொண்டாட அனைவருடைய மெஸ் பில்லில் 200 ரூபாய் யாரிடமும் கேட்க்காமல் சேர்த்து விடுவது.முன்பு (இப்பொழுது அது நடைமுறையில் இருக்கிறதா என தெரியவில்லை)அங்கு படித்தவர்களுக்கு ஒரு செல் போன் தரப்படும் அதற்க்கு மூன்று(3) (பெற்றோர்,மற்றும் உரவினர்கள்)எண்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.ஆணால் வெளி அழைப்புகள் செய்ய முடியாது. இதற்க்கு மாதம் 400 ரூபாய்.     

                          
இதெல்லாம் நான் எப்படி கூறுகிறேன் என்றால் நானும் ஒரு கிறிஸ்த்துவன் இவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் எந்த விதமான ஏழை கிறிஸ்துவர்களின்  பிள்ளைகளும் இலவசமாகவோ சலுகையிலோ படிக்கவில்லை.அதற்காக இவர்கள் உதவி ஏதுவும் செய்ததாக செய்தியும் இல்லை.(செய்திருந்தால் தான் வீடியோ எடுத்து போட்டிருப்பார்களே.)ஏழை,பணக்காரன்,இந்தியா,அயல் நாடுகள் என பலரும் இவர்கள் தான் ஆண்டவரின் பிரதநிதி என்று இவர்களிடம் பணத்தை கொட்டுகிறார்கள்.இவர்களிடம் குவியும் பணத்தில் எத்தனையோ நல்ல காரியங்கள் செய்யலாம்.ஆணால் அவர்கள் ஜெப கோபுரங்கள் கட்டுவதைதான் விரும்புகிறார்கள். -மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு என் நன்றிகள்.


//


இந்த கடித்தத்தை எனக்கு அனுப்பியவரும் ஒரு கிறிஸ்த்தவர்தான். இப்படித்தான் ஓவ்வொருவர்  மனத்திலும் நம் சமுதாயத்தில் நடக்கும் தவறுகளின் மேல் ஒரு கோபம் உள்ளது அதை எப்படி வேளி கொண்டுவருவது என்று தெரியாமல்  இருக்கிறார்கள்.  இனியாவது சுயநலம் என்பதை  விட்டு கொஞ்சம் நம் சமுதாயத்தையும் மக்களையும் பாற்றி யோசிங்க. நம் கண் முன்னாடியே நம் நாடு சீரழிந்து வருகிறது அதற்காக நாம் ஆட்சியாலர்களை எதிர்த்து கேள்வி கேட்க்க தேவை இல்லை நம்மிடம் இருக்கும் தவறுகளை திருத்திக்கொண்டாலே போதும்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நாங்களும் பேசுவோம்ல அந்நி(யா)ய பாஷை

Posted: மே 7, 2011 by onlyfalse in குற்றங்கள் மட்டும்

ஓ ரி ப பா பா ம ப ர க ல து ராக்க ரி மா பல சந்த ரி க ல பா ம
பௌதி க ர ம பலா

இப்படி பேசினா தான் நீ கிறிஸ்தவன் இல்லேன்னா கிறிஸ்துவுக்கு நீ எவன் ?

அந்நிய பாஷை என்றால் என்ன‌??

அந்நிய பாஷை என்றால் நாம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மொழி அல்லாத வேறு ஒரு மொழி (பாஷை) தான் அந்நிய பாஷை!! நம் மொழிக்கு அர்த்தம் இருக்கிறதா?? இருக்கிறதே!! அப்படி என்றால் அந்நிய பாஷைக்கு அர்த்தம் இருக்கிறதா?? இருக்கிறதே!!

ஆனால் நான் சென்ற சில கூட்டங்களில் அந்நிய பாஷை என்று பேசி அது எனக்கு புரியவேயில்லையே!! அந்த பாஷையை யாரும் மொழிப்பெயர்க்கவும் இல்லையே!! ஆனால் வேதம் சொல்லுகிறதே, உலகத்தில் பேசப்படும் எல்லா மொழிகளுக்கும் அர்த்தம் உண்டென்று,

I கொரிந்தியர் 14:10 உலகத்திலே எத்தனையோ விதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.

அப்படி என்றால் அந்நிய பாஷை என்கிற பெயரில் சபைகளில் செய்யப்படும் துனிச்சலுக்கு என்ன அர்த்தம்!!

ஏன் அந்நிய பாஷை??

படிக்காத மீனவ கூட்டத்திலிருந்து தன் அப்போஸ்தலர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலமாக சுவிசேஷம் உலகெங்கும் சொல்ல வேண்டும் என்று கட்டளை கொடுத்து விட்டு கிறிஸ்து இயேசு பரலோகம் சென்று விட்டார்!! இனி இந்த படிக்காத அல்லது ஒரே பாஷையை தெரிந்தவர்கள் எப்படி தான் உலகெங்கும் சென்று வேற்று மொழி பேசுவோருக்கும் சுவிசேஷம் சொல்லுவார்கள்!! அல்லது வேற்று மொழிக்காரர்கள் இவர்களிடத்தில் வரும் போது அவர்களுக்கு எப்படி சுவிசேஷம் சொல்லுவார்கள்!!

இதற்காகவே தேவன் இந்த எளிய மக்களிடம் வேற்று மொழி (அந்நிய பாஷை) பேசுவது மற்றும் வேற்று மொழியை வியாக்கியானம் (அர்த்தம் சொல்லுவது) செய்யும் வரத்தை தனது வல்லமை ஆவியினால் கொடுத்தார்!!

இந்த வரம் ஏதோ அப்போஸ்தலர்கள் அல்லது அன்றைய சபையார் எல்லாரும் சேர்ந்து சபையில் கூச்சிலட கொடுக்கப்படவில்லை, மாறாக சத்தியத்தை அவர்களுக்கு தெரியாத மொழிகளில் (மனிதர்கள் பேசும் / அர்த்தம் உள்ள வார்த்தைகள் கொண்ட மொழி) சொல்லவும், அல்லது அவர்களுக்கு தெரியாத வேற்று மொழியை புரிந்துகொண்டு அதற்கு பதில் கொடுக்கவே கொடுக்கப்பட்டது!!

எடுத்துக்காட்டாக, தோமா, இந்தியாவில் கேரளாவில் வந்து இறங்கின போது அவர் ஒன்றும் மலையாலத்தை கற்று தேர்ந்து வந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இங்கு வந்து கேரளாவில் பேசுவதற்கு தேவன் தாமே அவருக்கு அந்த பாஷையை பேசவோ புரிந்துக்கொள்ளவோ வரமாக தந்திருப்பார்!!

அந்நிய பாஷையின் முதல் அனுபவம்:

அப்போஸ்தலர் 2:4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். 5. வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். 6. அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். 7. எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? 8. அப்படியிருக்க நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? 9. பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, 10. பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், 11. கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.

இப்படி உலகில் எங்காவது ஒரு இடத்தில் பேசப்படும் அர்த்தமுள்ள பாஷையில், அதை கேட்கும் மக்களுக்கு அது புரிகிற பாஷையாக இருப்பது தான் அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்நியபாஷை பேசும் வரம்!! இந்த வரம் நிச்சயமாக ஒரு காலகட்டத்தில் தேவை பட்டது!!

ஆனால் இன்று சபைகளில் அந்நிய பாஷை என்று சொல்லப்பட்டும், பேசப்பட்டும் வருவது உண்மையிலேயே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடி ஆவியின் வரமா? இல்லை என்று வசனங்கள் சொல்லுகிறதே!!

1. 1 கொரிந்தியர் 14:9. அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.

தெளிவில்லாத வார்த்தைகளால் போடப்படும் கூச்சல் சத்தத்தை தான் இன்று அந்நிய பாஷை என்று சொல்லி ஒரு மாயையில் இருக்கிறார்கள் சபையார்!! சில இடங்களில் இதை பேச பயிற்சியும் அளிக்கப்படுகிறது (இதற்கு நானே சாட்சி)!! வேதம் சொல்லுகிறதே, யாருக்கும் புரியாதது போல், தெளிவில்லாமல் பேசினார் அது ஆகாயத்தில் பேசுகிறது போல், அதாவது செவியின் வழியாக உள்ளே செல்லாமல், ஒன்றும் புரியாததினால் அது தலைக்கு மேல் செல்லும் வார்த்தைகளாக இருக்கிறதே!!

2. 1 கொரிந்தியர் 14:27. யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.

இதுவும் சபையில் நடக்காத ஒன்று!! போதகர் மேடையிலிருந்தப்படியே கத்துவார், “எல்லாரும், எல்லாரும், இப்போ அந்நிய பாஷையில் தேவனை துதியுங்கள், ஒருவர் விடாமல், எல்லாரும் சேர்ந்து தேவன் தரும் அந்த அந்நிய பாஷையை பயன்ப்படுத்துங்கள்” என்று!! எப்படி வேதத்திற்கு முறனான ஒரு செயல்!! ஒருவர், இரண்டு பேர் அல்லது அதிகப்படியாக மூன்று பேர் மட்டுமே பேசி, அதுவும் அவர்கள் பேசுவதற்கு அர்த்தத்தையும் சொல்ல வேண்டுமாம்!! இது இன்றைய சபைகளில் நடக்கிறதா!! இல்லையே, ஏனென்றால் அந்நிய பாஷை வரம் என்பதை ஏதோ விச்சித்திரமான உச்சரிப்பில் பேசுவது என்று நினைத்திருக்கிறார்கள் இன்றைய போதகர்களும் சரி, சபையாரும் சரி!! இப்படி பேசுகிற முறை சுமார் 200 ஆண்டுகளுக்குள் தான் வந்திருக்கிறது, அதற்கு முன் இருந்த கத்தோலிக்கர்கள் அல்லது ப்ரொடஸ்டண்ட் இப்படி எல்லாம் பேசியதாக இந்த செய்தியும் இல்லையே!!

1 கொரிந்தியர் 14:2. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

பெந்தகோஸ்தே சபைகளினால் அந்நிய பாஷை என்கிற மாயையை உற்சாகப்படுத்த இந்த வசனம் தான் பயன்ப்படுகிறது!! அதாவது, அந்நிய பாஷையில் தேவனோடு பேசினால் அது பிசாசுக்கு (சாத்தானுக்கு) புரியாதாம்!! ஆகவே நீங்கள் அந்நிய பாஷையில் பேசுங்கள், பேசுங்கள், பேசிக்கொண்டே இருங்கள் என்றும், ஆவியை பெற்றுக்கொண்டதின் முதல் அடையாளமே அந்நியபாஷை பேசுவதாம்!!

இவர்களின் கூற்றுப்படி பாவம் தேவன், தன் பிள்ளைகளின் ஜெபத்தை சாத்தானிடத்தில் போய் சேராதப்படிக்கு அவருக்கு மாத்திரமே புரிகிற பாஷையை தருகிறாராம்!! அந்த ஒரு குறிப்பிட்ட பாஷையில் பேசினால் தான் அது சாத்தானுக்கு விளங்காதாம்!! அதாவது, இவர்கள் சாத்தானுக்கு அத்துனை முக்கியத்துவம் தருகிறார்கள் என்று தானே அர்த்தம்!! தேவனை இத்துனை கீழாக எடைப்போட்டிருக்கிறார்கள் இந்த கூட்டனியர்!! ஆனால் தேவனோ,

லூக்கா 16:15………….. தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்;……..

அப்போஸ்தலர் 15:8 இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் ……………………

தேவனிடத்தில் பேச அந்நியபாஷை தேவையில்லை, நம் இருதயத்தில் இருக்கும் ஜெபங்களையே அவர் தெரிந்துக்கொள்கிறார்!! சரி இந்த பெந்தகோஸ்தே சபையினர் வரும் முன் இருந்த எந்த ஒரு சந்தத்தியும் பிசாசுக்கு ஜெபம் கேட்டு விடக்கூடாது என்று இது வரை ஜெபித்ததாக இல்லையே!! யூதர்களானாலும் சரி, கிறிஸ்து இயேசு தன் பிதாவிடத்தில் ஜெபித்த போதும் சரி, அதன் பின் வந்த ரோமன் கத்தோலிக்கர்கள், ப்ரொடஸ்டண்ட் சபைகளானாலும் சரி, யாரும் இப்படி அந்நிய பாஷை பேசி தேவனிடத்தில் ஜெபித்து கிடையாதே!! இப்போ தான் அவர்களின் சபைகளிருந்து கூட்டங்கள் வெளியேறிவிடக்கூடாது என்பதற்காக, அந்நியபாஷை என்கிறா மாயையில் எல்லா சபைகளும் சிக்கி இருக்கிறது!!

மேலும் இந்த வசனம் சாத்தானை குறித்து எதுவும் சொல்லுவதில்லையே, மாறாக அந்நிய பாஷையில் ஜெபிப்பவன் மனுஷனிடத்தில் பேசாமல் தேவனிடத்தில் பேசுகிறான் என்று தானே இருக்கிறாது, அப்படி என்றால் இதில் சாத்தான் எங்கே வந்து விட்டான்!!

அப்படி என்றால் இந்த வசனம் என்ன தான் சொல்லுகிறது!!

1 கொரிந்தியர் 14:2. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

இதன் விளக்கம் 5ம் வசனத்தில் இருக்கிறது!!

இப்ப தமிழ் மாத்திரமே தெரிந்த ஒரு கூட்டம் கூடி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்!! அங்கே வெளிநாட்டுக்காரர் ஒருவர் வந்து ஆங்கில‌த்திலேயே பிரசங்கத்தை வைக்கிறார் என்றால், அங்கே கூடியிருக்கும் தமிழ் மக்களுக்கு அவர் பேசுவது தான் அந்நிய பாஷை!! அவர் ஆங்கிலத்தில் பேசுவது, தமிழ் மாத்திரமே புரியும் மக்களுக்கு வியப்பாக இருக்கும், இப்படி இருக்க, அவர்கள் நினைப்பது என்னவென்றால் இவர் எங்களிடத்தில் எதையும் சொல்லாமல், தேவனிடத்தில் தான் பேசுகிறான், ஏனென்றால் தேவனுக்கு மாத்திரமே இப்பொழுது, இந்த கூட்டத்தில் இவன் பேசும் பாஷை புரியும், நமக்கு யாருக்கும் புரியவில்லையே என்று!! அவன் பேசுவது என்னவென்று நாம் யாரும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் (எங்களிடத்தில்) பேசாமல், தேவனிடத்தில் (நமக்கு புரியவில்லை, ஆனால் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு எல்லாம் புரியுமே) பேசுகிறான்!! இதில் சாத்தான் எங்கே இருந்து வந்தான் என்று தான் புரியவில்லை!! மனிதனுக்கு புரியவில்லை ஆனால் தேவனுக்கு புரியுது என்று தான் வசனம் சொல்லுகிறது, இதையே ஜோடிச்சு, தேவனுக்கு மாத்திரமே புரியத்தான் அந்நிய பாஷை என்று சொல்லி அந்நிய பாஷை என்கிற ஒரு பெருத்த மாயையை கொண்டு வந்திருக்கிறார்கள்!!

மன்னிக்கவும் காப்பி அடித்த இடம்

http://kovaibereans.activeboard.com/t42560614/topic-42560614/?r=511398



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard