கேள்வி: ஊதி கீழே விழத்தள்ளும் சிறப்புபெற்ற அமெரிக்க ஊழியர்.பெனிஹின் தன் மனைவியை தள்ளிவிட்டாராமே!
பதில்: இவர் தள்ளவில்லை. ஜாய்ஸ்மேயர் தன் கணவனை தள்ளிவிட்டதைப்போல், பெனிஹின் மனைவி இவரைவிட்டு தள்ளிபோய்விட்டார்.
பெனிஹின் குடும்பத்தில் இப்போது விவாகரத்து நடக்கப்போகிறது. பெனிஹின் அவர்கள் தனிப்பட்டமுறையில் ஊழியர்களுக்கும், மீடியாக்களுக்கும் எழுதின கடிதம் எனக்கும் வந்தது. எப்படி என் விலாசம் கிடைத்ததோ அறியேன். அதில் வழக்கம்போல பெனிஹின் அவர்கள் நிறைய பொய் பேசியுள்ளார். தன் மனைவி தனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிறகுதான் எனக்கு அவர் விவாகரத்து பெறவிரும்புகிறாள் என்று தெரியும், அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாது, அது என் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் புரியாத அதிர்ச்சி செய்தியாகும் என்று எழுதியுள்ளார்.
மனைவி தன்னைவிட்டு வெளியேறி பல மாதங்கள் ஆகிறது. சத்தமில்லாமல் ஓசையின்றி வெளியேறியிருப்பாரா? இத்தனை மாதம் தன்னை விட்டுவிலகி வாழும் தன் மனைவியைப்பற்றி இவர் ஏன் விசாரிக்கவில்லை? பெனிஹின் அதை விசாரிக்கமாட்டார்! அவள் இவரைவிட்டு போகக் காரணம், இவருக்கே தெரியுமே! அந்த கடிதத்தில் பல பொய்களை வாரி இறைத்துள்ளார். வக்கீல் நோட்டீஸ் மனைவியிடமிருந்து வரும்போது அந்த நோட்டீசில் விவாகரத்துக்கான காரணம் காட்டியிருக்கமாட்டார்களா? காரணம் சொல்லாமல் வக்கீல் நோட்டீஸ் நிச்சயமாக அனுப்பமுடியாதே!
பிரபல பெந்தேகோஸ்தே ஊழியரும், அக்கினி அபிஷேகம் கூட்டங்கள் நடத்துபவரும்,இயேசுவும் வியாதியாக இருந்தவர்தான் என்றவருமான சகோ.சாம்ஜெபதுரை அவர்கள் எனக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீசிலேயே காரணம் குறிப்பிட்டபோது, எனக்கு புருஷன் வேண்டாம் என்று வக்கீல் மூலம் மனைவி ஒருவள் தன் கணவனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினால் அதற்கான காரணம் எழுதியிருக்கமாட்டாள்! இதற்கு பெயர்தான் காதில் பூ சுற்றுவது.
பாஸ்டர்.பால்தங்கையா (பெங்களுர்) அசம்பளீஸ் ஆப் காட் சபை பாஸ்டர், பிரபல பாட்டுக்காரர், பிரசங்கியார் ஆவார். இவர் மனைவி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். பலமாதங்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். அதனால் உதவி பாஸ்டரோடு இணைத்து பேசப்பட்டார். வெளியில் பிரபல தொழில் அதிபரோடு இணைத்துப்பேசபட்டார். சில மாதங்கள் எங்கிருக்கிறார் என்று இவருக்கும் தெரியாமல், சபை மக்களுக்கும் தெரியாமல், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறுவது பரிசுத்தாவி பெற்று, அந்நியபாஷை பேசி, பெண்கள் கூட்டத்தில் பிரசங்கிக்கும் ஒரு பாஸ்டரின் மனைவிக்கு இது சாட்சியாகுமா?
பெங்களுரில் பல பாஸ்டர்கள் கூடி இவர்களை சமாதானப்படுத்தி ஒன்றாக இணைந்து வாழ முயற்சி எடுத்தார்கள். இரண்டு பேரும் இணங்கிவரவில்லை.
இவர்கள் இரண்டு பேரும் சபை மக்களுக்கு என்ன உபதேசிப்பார்கள். இவர்கள் பேசினஅந்நியபாஷை மாய்மாலமானது என்பது இப்போதாவது விளங்குகிறதா? பணம் கோடிகள் இருந்தென்ன சொந்த வாழ்க்கையில் ஒரு ஊழியக்காரனுக்கு வீட்டில் சமாதானம் இல்லை, மனைவி இல்லை என்றால் அந்த வாழ்க்கை நரகமல்லவா?
இவர்களுடைய மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறார். அவர் அமெரிக்காவில் ஒரு பெண்ணை காதலித்துவிட்டார் இதுதான் பாஸ்டர்.பால்தங்கையா, அவர்களின் மனைவி பாஸ்டரைவிட்டு பிரிந்து போன பிரச்சனைக்கு மையக்காரணம் என்று பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது அல்ல பிரச்சனையின் மையக்காரணம், இதற்கும் அப்பால் பிரச்சனைக்கான வேர் இருக்கிறது. அது பாஸ்டர்.பால்தங்கையாவுக்கும், அவர் மனைவிக்கும் குடும்பத்தில் உள்ள இரண்டு பேர்களுக்கும், உடன் ஊழியர் ஒருவருக்கும் மட்டுமே அறிந்த விஷயமாகும். பாஸ்டர்.பால்தங்கையாவின் வாய்மொழி வார்த்தைகளை வைத்தும், சபைமக்கள், மற்ற பாஸ்டர்மார் யாவரும் வெளிப்படையாக அறிந்த விஷயத்தை வைத்தும் இப்பிரச்சனையை விவாதித்தார்கள். ஆனால் பாஸ்டர் அவர்களின் பதில் விசுவாசிகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
மகன் காதலித்த பெண் விக்கிரகத்தை ஆராதிக்கும் இந்துமதத்தை சேர்ந்த பெண் அல்ல - கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவள். ஆங்கிலிக்கன் சபையை சேர்ந்தவள். இதில் பிரச்சனை என்ன? காதல் என்று வந்துவிட்டால் அப்பா என்றும், அம்மா என்றும் இரட்சிக்கப்பட்டவள், இரட்சிக்கப்படாதவள் என்று பார்ப்பதில்லையே! பாசம் எல்லாம் வழுக்கிக்கொண்டு போவதுதான் காதல். இப்படியிருக்க மகனின் இந்த தொடர்பு காரணமாக பாஸ்டர் மனைவி மகனை சப்போர்ட் செய்வது பாஸ்டருக்கு பிடிக்கவில்லை. இதுதான் இவர்கள் பிரிவுக்கு காரணம் என்கிறார்கள். பாஸ்டர் அவர்களின் சொந்த திருமணத்திலேயே தகராறு இருக்கிறதே. ஆகவே மகனின் காதல்திருமணம் ஒரு காரணமல்ல, மகனின் காதல் காரணமாக பாஸ்டர் மனைவி வீட்டைவிட்டு பலமாதங்கள் பிரிந்து வாழ்வாரா? இவர் வெளியிலிருந்து வந்து ஞாயிற்றுகிழமை சபை பெண்கள் கூட்டத்தை தொடர்ந்து நடத்தியுமிருக்கிறார். என்ன சாட்சி இது. புருஷன் சில விஷயத்தில் ஒத்துப்போகவிட்டால் உங்களைப்போல் புருஷனை பிரிந்து வேறு வீட்டில் குடியிருக்கலாமா என்று சபை பெண்கள் கேட்டால் பாஸ்டர் மனைவி என்ன பதில் சொல்வார் அல்லது பாஸ்டர்தான் என்ன பதில் சொல்வார்.
புருஷன் மனைவி பிரிந்து வாழ்ந்தாலே பாஸ்டர் தன் பதவியை இழக்கவேண்டும். காரணம் நியாயம் எதுவானாலும் வேதவசனத்தின்படி 1 கொரி 7:5ல் உபவாசத்திற்கும், ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி,ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள். உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு மறுபடியும் கூடி வாழுங்கள்.
விவாகம் பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரேகட்டளையிடுகிறதாவது:மனைவியானவள் தன் புருஷனை விட்டுப்பிரிந்து போகக்கூடாது.......புருஷனும் தன் மனைவியை தள்ளிவிடக்கூடாது. 1 கொரி 7:10.
நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுவது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படி செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை. ஏன் நஷ்டத்தை பொருத்துக்கொள்ளுகிறதில்லை. நீங்களே அநியாயஞ்செய்கிறீர்களே! 1கொரி 6:7.
மேலே வாசித்தது பவுலின் சொந்த கருத்தல்ல. விவாகம் செய்தவர்களுக்கு கர்த்தர் சொல்லசொன்ன விசேஷ ஆலோசனையைத்தான் பவுல் அறிவிக்கிறார். இது ஆலோசனை அல்ல. கர்த்தரின் கட்டளை. இவ்வளவு தெளிவாக வேதவசனம் சொல்லியிருக்க பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டேன், அக்கினி அபிஷேகம் பெற்றுக்கொண்டேன், விதவிதமான அந்நியபாஷை பேசுகிறேன். கர்த்தர்தான் என்னை அந்நியபாஷை பேசவைத்தார் என்று கூறும் இத்தனை பிரபலமான பெந்தேகோஸ்தே பாஸ்டர்களுக்கு மேலே கூறப்பட்ட கர்த்தரின் கட்டளை தெரியாதா?
இன்று குடிக்கார புருஷனை உடைய மனைவிமார்கள், இரண்டு மனைவியோடு வாழும் புருஷனை உடையவர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் குடும்பம் நடத்தும் எத்தனையோ பெண்கள் புருஷனைவிட்டு பிரியாமல் வாழும்போது, மற்றவர்களுக்கு உபதேசிக்கும் இப்படிப்பட்ட ஊழியர் குடும்பம் சேர்ந்து வாழவேண்டியது எவ்வளவு முக்கியம். அன்பு சகலத்தையும் தாங்கும், சகிக்கும், நம்பும் என்று வேதம் கூறுகிறது. இவர்களின் அன்பில் எங்கோ தகராறு இருக்கிறது.
சென்னை அயனாவரம் அசம்பளிஸ் ஆப் காட் சபை பாஸ்டரும், பாஸ்டர்.பால்தங்கையாவும்இதே பிரச்சனையில் அகப்பட்ட இன்னும் ஏராளமான பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களும்மனைவியுடன்மறுபடியும் சேர்ந்து வாழும்வரை இவர்கள் யாரும் சபையை நடத்தக்கூடாது.இவர்கள் ஊழிய உயர்வைக்கண்டு கோபப்பட்ட பிசாசு இவர்களை சோதித்துவிட்டான் என்றோ, பிசாசு இவர்கள் குடும்பத்தை பிரித்து ஊழியத்தை கெடுக்கிறான் என்றோ பிசாசின்மேல் எளிதாக பழியைபோட இவர்கள் முயலுவார்கள். வேதம் பிசாசுக்கு இடம்கொடாதிருங்கள் என்று எச்சரிக்கிறது. இவர்களாக பிசாசுக்கு இடம் கொடுத்ததால்தான் பிசாசு இவர்கள் வாழ்க்கையில் நுழைந்தான். அவனாக இவர்களுக்குள் வர கர்த்தர் உத்தரவு கொடுக்கவில்லை.
யோபு பிசாசால் சோதிக்கப்பட்டான் என்று இவர்கள் கூறுவார்கள். ஆனால் யோபு பாவம் எதுவும் செய்யவில்லை. பாவமே செய்யாமல் பிசாசால் சோதிக்கப்பட தேவனால் யோபு அனுமதிக்கப்பட்டான். ஆனால் இவர்கள் விஷயத்தில் நடந்ததே வேறு.
(பாஸ்டர்) ஒருவன் தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால் தேவனுடைய சபையை எப்படி (நடத்துவான்) விசாரிப்பான். 1தீமோ 3:5.
வேதம் இப்படி தெளிவாக கூறியுள்ளபோது மேலே உள்ள வசனங்களை அசட்டை செய்யும் இப்படிப்பட்ட பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்களை, சபையில் உள்ள மூப்பர்கள், சபையில் உள்ள விசுவாசிகள்கூடி இவர்களை தைரியமாக கேள்வி கேட்கவேண்டும். இப்படி பாஸ்டர்களை கேள்வி கேட்பது சபை பாஸ்டர்மார்களை அவமானப்படுத்த அல்ல - அவர்களை சரிப்படுத்த, நல்ல சாட்சியுள்ள மேய்ப்பனாக மாற்ற கேள்விகேட்பது நல்லது. அப்போதுதான் இப்படிப்பட்ட பாஸ்டர்களுக்கு பயம் உண்டாகும்.
இவர்கள் ஊழியக்காரர்களை கேள்விகேட்ட மீரியாமின் குஷ்டரோகத்தை கூறி உங்களை பயமுறுத்தினாலும் பயப்படவேண்டாம்.
நீதிமானும் எச்சரிக்கப்படவேண்டியது அவசியம். அப்படி எச்சரிக்காவிட்டால் இரத்தப்பழி உங்கள்மேல் சுமரும் என்று (எசே 3:20,21) வேதம் தெளிவாக நம்மை எச்சரிக்கிறது.
பெந்தேகோஸ்தே சபையும், சபை பாஸ்டர்மார்களும் இரட்சிக்கப்படவேண்டும் என்று நான் ஜாமக்காரனில் அடிக்கடி எழுதுவது சரி என்று இப்போதாவது உணருகிறீர்களா?
பெனிஹின் மனைவியின் வக்கீல் நோட்டீஸ் அல்லது அறிவிப்பு பெனிஹினுக்கு அனுப்பும்போது விவாகரத்துக்கான காரணத்தை அந்த வக்கீல் விளக்காமல் இருப்பாரா? மனைவி விவாகரத்தின் காரணம் என்க்கு தெரியவில்லை என்று பெனிஹின் கூறியது எப்படிப்பட்ட பொய்! இதுதான் இவர் பேசும் பொய்யான அந்நியபாஷைமூலம் வரும் பொய்யான தகவலாகும். இப்படிப்பட்டவர்களின் ஆவியின் அனுபவம், பேசும் பாஷை, ஊதினால் விழுவது, கை நீட்டினால் கீழே விழுவது இவை யாவும் பிசாசின் ஆவி என்பதை ஏராளமானவர்கள் இன்னும் நம்பாதவர்களாக இருக்கிறார்களே!
அதேபோல தன் மனைவி தன்னைவிட்டு ஓடிப்போனதேன் என்று தனக்கு தெரியவில்லை என்று இவர் கூறும் கூற்றை இன்னும் பலர் நம்புகிறார்களே! ஊழியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக புருஷன்-மனைவி ஆகிய இருவரையும் மறுபடியும் ஒன்று சேர்க்க பலர் முயன்றனர். குறிப்பாக இவர்கள் பிள்ளைகள் முயன்றனர். ஆனால் முடியவில்லை.
சென்னை (அயனாவரம்) அசம்பளீஸ் ஆப் காட் சபை பாஸ்டரைவிட்டு மனைவி வெளியேறி பல மாதங்களாகிறது. பாஸ்டர்.மோகன் போன்றவர்கள் அவர்களை சேர்த்து வைக்க முயன்றனர் இயலவில்லை. ஆனால் இப்போதும் அவர் தொடர்ந்து ஆராதனை நடத்துகிறார். பரிசுத்த மேஜை(திருவிருந்து) ஆராதனையையும் நடத்துகிறார், அந்நியபாஷை பேசுகிறார், சபை மக்கள் யாவரும் ஆவியில் நிறைகிறார்கள் என்கிறார்கள். சபைமக்களும் அந்நியபாஷை பேசுகிறார்கள் - என்ன இது? எந்த ஆவி இந்த பாஸ்டர்களை நடத்துகிறது? இவர்கள் சபைமக்களை எந்த ஆவிநிறைக்கிறது.மேய்ப்பன் எவ்வழி - ஆடுகளும் அவ்வழி அல்லவா? இவர்கள் மேய்ப்பனாக தொடரவும் சபையை, சபைமக்களை நடத்தவும் அசம்பளீஸ் ஆப் காட் சபை தொடர்ந்து இவர்களை அனுமதிக்கிறது என்பது உண்மையானால் அசம்பளீஸ் ஆப் காட் சபை தலைவர்கள், அசம்பளீஸ் ஆப் காட் சபை முழுவதும் பேசும் அந்நியபாஷையும் போலி - அவர்கள் பெற்றுள்ளது பரிசுத்த ஆவியானவரும் அல்ல என்பது தெளிவாக விளங்கவில்லையா?
நம் பரிசுத்த ஆவியானவர் பிரிக்கிறவர் அல்ல - சேர்க்கிறவர். இதன் அடிப்படையில் இவர்களை நிதானியுங்கள்.
பென்னி ஹின் இடத்தில் இரவு முழுவதும் நாற்காலி போட்டு பேசி விட்டு போகும் பரிசுத்த ஆவியானவர் (!!?) இவருக்கு இவர் மனைவி வக்கீல் நோட்டிஸ் அனுப்புவார் என்று சொல்லவில்லையோ. எத்துனை காலம் தான் ஊரை ஏமாற்றி திரிவார்களோ, தேவன் இந்த கடைசி காலத்தில் இவர்களை போன்ற சுய விளம்பரக்காரர்களின் முகத்திரையை கிழித்துக்கொண்டு இருப்பதை நாம் பார்த்து, தேவனுக்கு நாம் நன்றி சொல்லுவோம், இப்படி பட்ட மகா பாபிலோனிலிருந்து நம்மை பிரித்து எடுத்ததற்காக. வேறு ஒரு நாட்டிலிருக்கும் மனிதனின் குடும்ப பிரச்சனைகளை இந்த வேஷதாரிகளிடத்தில் சொல்லும் பரிசுத்த ஆவியானவர், இவர்களின் சொந்த வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை சொல்லாமல் போனது ஆச்சரியம் தான். இவர்கள் சொல்லும் இந்த பரிசுத்த ஆவியானவர் யாரோ!? இந்தியாவிலும் இவர்கள் போன்றே, தேவன் என்னிடத்தில் பேசினார் போன்ற டைலாக் பேசி அநேகர் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் முகமுடியும் விரைவில் கிழிய மக்கள் உண்மையை அறிந்துக்கொள்ள நாம் தேவனிடத்தில் மன்றாடுவோம். அவரின் சித்தமே நடைபெறட்டும்.