
""அய்யா... விடிஞ்சா திருவாரூர் பஸ் ஸ்டாண்டுல கடை வெச்சிருக்குற எஸ்.ஆர்.ஆர்.ரமேஷின் 20 வயது மகன் கிலைடனுக்கும்... வேளாங்கண்ணி அருள்குமாரின் 14 வயது மகள் பூங்கொடிக்கும் கல்யாணம்(?) பண்ணி வெக்கப் போறாங்க. இந்த குழந்தை திருமணத்தை நீங்கதான் தடுத்து நிறுத்தணும்'' -கெஞ்சியபடி கட் ஆனது ஃபோன்.
""சார்... சிங்கப்பூர்லேர்ந்து வர்ற 24 வயசுப் பையன் சீர்காழி அருகே உள்ள அரசக்குப்பம் சீத் தாராமனின் மகன் முருகனுக்கு... 14 வயசு பச்சப்புள்ள அம்சவள்ளி யை வைத்தீஸ்வரன் கோயில்ல வெச்சு கல்யாணம் பண்ணப் போறாங்க... பாவம் அந்தப் புள்ள உசிரையே மாச்சிக்கும் போல'' -கதறியபடி கட் ஆனது ஃபோன்.
ஒரே நேரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு திருமணம் நடக்கப்போகுது என்ற தகவல் தொலைபேசியின் மூலம் வந்தது நாகை கலெக் டர் முனியநாதனுக்குத்தான். அடுத்த நிமிடமே மாவட்ட எஸ்.பி.க்கு ஃபோன் பறக்கிறது. அடுத்த ஃபோன் திருவாரூர் கலெக்டர் சந்திரசேகருக்கு. இரண்டு மாவட்ட காவல்துறையினரும்... சமூகநலத்துறையினரும் ஆக்ஷனில் இறங்கினார்கள்.
திருவாரூர்... மணமகனின்(?) அப்பா ரமேஷ் பலருக்கும் தெரிந்தவர் என்பதால் கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வைத்த போஸ்டர், டிஜிட்டல் பேனர்கள், வீதிகளில் அலங்கார விளக்குகள் பளபளத்துக் கொண்டிருக்க... இருமண வீட்டார்களிடம் இருள் சூழ்ந்தது. காரணம்... மணமகள் ஊர் வலத்திலேயே குழந்தை திருமணத்துக்கு காரணமான பெற்றோர் கள் உட்பட ஏழுபேரையும் கைது செய்து வழக்குப் பதிவும் செய்தனர் காவல்துறையினர். மணப்பெண்(?)ணின் தாய் ஈஸ்வரியோ, ""என் கணவருக்கு கால் முடியாதுங்க. வறுமை... அதான் வசதியான குடும்பம்னு ஏற்பாடு பண்ணினேன் ப்ச்'' என்கிறார் கல்யாணம்(?) நின்று போன கவலையில்.
அடுத்து நாகை... ""இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமில்ல தாத்தா... நான் படிக்கணும் நீங்கதான் எனக்கு உதவி பண்ணணும்னு அழுதா என் பேத்தி அம்சவள்ளி. அதான் கலெக்டரய்யா வுக்கு தகவல் கொடுத்தேன். அடுத்த நிமிஷமே தடுத்து நிறுத்தி... என் பேத்தியோட வாழ்க்கையை சுபமாக்கிட்டாரு கலெக்டரு'' -ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் தாத்தா கோவிந்தசாமி.
""சொத்து பத்து கைவிட்டுப் போய்டக்கூடாதுங்குறதால தான் சொந்தத்துல சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. பொண்ணு வீட்டிலேயும் வறுமை வாட்டுறதால சீக்கிரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்து வறுமை யை போக்க நினைக்குறாங்க. ஆனா... இந்த மாதிரி திருமணங்கள் அவர்கள் எண்ணத்திற்கு நிரந்தர தீர்வாகாது... மாறாக பிள்ளைகளின் வாழ்க்கைத் தான் சீரழியும்ங்குறதை பெற்றோர்கள் உணரணும்'' என்கிறார் பேராசிரியை தமிழினி அறிவுரையாக.















ஆமாம். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கு இன்றுவரை இந்தக் கோயிலுக்குள் இடம் இல்லை. அதேபோல, பெரிய கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு நிறைவுக்காக செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடக்கும் அரசு விழாவில்... கோயிலுக்குள் பரதநாட்டியக் கலைஞர்கள் ஆட, நாட்டுப்புறக் கலைகஞர்களுக்கு கோயிலுக்கு வெளியே தெருவோரத்தில் இடம் ‘ஒதுக்கப்பட்டிருக்கிறது’.
தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த-வர்களுக்கு முடிதிருத்தும் தொழிலாளர்--களை அமைத்தார். அவர்களில் தலைமையாக உள்ள ஒருவருக்கு Ôராஜராஜப் பெரும்நாவிதர்Õ என்ற பட்டத்தையும் கொடுத்தார். தனக்கே உரிய சிறப்பு பட்டத்தை தொழிலாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தவர் ராஜராஜன். அதே-போன்று கோயிலை எழுப்பிய தலைமை பொறியாளர் குஞ்சறமல்லன் என்ப-வருக்கும் Ôராஜராஜப் பெருந்தச்சன்Õ என்ற பட்டத்தை கொடுத்து சிறப்பு செய்தார். இது தொழில் ரீதியாக வந்த சாதிய ஒதுக்கீடாக இல்லை.
சிவகங்கை மாவட்டம், மானா-மதுரைக்கு அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சி கிராமம்தான் அந்த தமிழ் ததும்பும் கிராமம். ஊர் முகப்பு வயல் வெளியிலேயே ‘ஐயா வணக்கம்’ என நம்மை வரவேற்ற கிராமத்து பெரியவரான கேசவனிடம் பேசினோம். ‘‘சங்கத் தமிழ் புலவரான நக்கீரன் மதுரையில் பாண்டிய மன்னனது அவையில் பாடி விட்டு, ராமேஸ்வரம் கோயிலை பார்த்து தரிசிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
எங்கள் மக்களோ, ‘எத்தனையோ மன்னாதி மன்னர்கள் தங்களது சபையில் உங்க காலடிபாதம் படக் காத்து கிடக்கும்போது, உங்க பாதம் எங்க மண்ணில் பட்டதற்கு நாங்கதான் கொடுத்து வைத்திருக்கணும். நீங்க சொன்ன சுயம்புலிங்கத்தை இனி நாங்க நக்கீர குரவனாகவே நினைத்து வழிபடுவோம். நீங்கதான் இனி எங்களுக்கு தமிழ்க்கடவுள் மட்டுமின்றி குலக்கடவுளாகவும் ஆகப்போகிறீர்கள்’ எனக் கூறியுள்ளனர். நக்கீரனோ, ‘உங்க பிள்ளைகளை எல்லாம் தாய்ப்பாலோடு சேர்த்து தமிழ்ப்பாலையும் ஊட்டி வளருங்கள். அதாவது முதன்மையாக தமிழை படிக்க வையுங்கள். அப்புறமா பாருங்க உங்க கிராமத்தை’ என அருள்பாலித்துள்ளார். எங்க மூதாதையர்களும் நக்கீரன் வாக்கை வேதவாக்காக்கிக் கொண்டுவிட்டார்கள்.









‘‘உங்கள் மகள் ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கு. நீங்கள் எவ்வளவு விமரிசையாக திருமணம் செய்து வைத்தாலும் மாப்பிள்ளை பத்தே நாளில் வாகன விபத்தில் செத்துப்போயிடுவான்’’ என்று அதிர்ச்சி குண்டை வீசியிருக்கிறார் ஜோதிடர் பொன்.பாலன். 





குழந்தை இல்லாத தம்பதிகள், மதத்தை மறந்தும், இனத்தை மறந்தும் கோவில், கோவிலாக சுற்றி தவம் இருந்து விலைமதிப்பற்ற குழந்தை செல்வத்தை பெற கடும் விரதத்தை மேற்கொள்கிறார்கள்.























