
""என்னோட நண்பன் ரொம்ப சாதுவான டைப் சார். அவன் வீடு மகாபலிபுரம் ஐந்து ரதம் கோயிலுக்குப் பக்கத்துல இருக்கிற பழைய வீடு. கூட்டுக் குடும்பம். ஜனநடமாட்டம் வீட்டுக்குள்ள அதிகம். மழை பெஞ்சா ஒருபக்கம் சோவென தண்ணி ஒழுகும். அவனுக்குக் கல்யாணம் ஆச்சு. புதுசா வந்த பொண்டாட்டி, நமக்குன்னு தனியா ஒரு பாத்ரூம் கட்டுங்கன்னு சொன்னா. பொண்டாட்டிக்காக ஒத்தக்கல் சுவரு போட்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரையைப் போட்டு ஒரு பாத்ரூம் கட்டினான் பாருங்க... அடுத்தநாளே கவர்மெண்டு அதிகாரிங்க வந்து பாத்ரூமை இடிச்சுட்டாங்க. ஈ.பி.க்காரன் வந்து கரண்டை கட் பண்ணிட்டான். உங்க வீட்டை ஏன் நாங்க இடிக்கக்கூடாதுன்னு இரண்டு பக்கத்துக்கு பெரிய நோட்டீஸை இங்கிலீஷ்ல கொடுத்துட்டாங்க. எல்லாம் மருமவளாலதான் வந்துச்சுன்னு குடும்பமே சொல்ல... அந்தப் பொண்ணு கிருஷ்ணாயில தலையில ஊத்தி தற்கொலை பண்ணப் போயிட்டா'' -என ஒரு சோகக் கதையை விளக்குகிறார் செங்கல்பட்டு வழக்கறிஞர் லோகு.
லோகுவின் நண்பர் குடும்பத்திற்கு மட்டுமல்ல... தமிழகத்தின் 4 லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் தலைநகர் சென்னை தொடங்கி மகாபலிபுரம், திருப்போரூர், மதுரை, திருநெல்வேலி என தமிழகத் தின் கால் பாதம் அமைந்துள்ள கன்னியாகுமரி வரை வசிக்கும் அனைவருக்கும் இதுதான் கதி.
தமிழகத்தின் ஒட்டுமொத்த பரப்பளவில் இரண்டு சதவிகிதம் நிலத்தை மத்திய அரசு தனது ஆளுமைக்கு கொண்டுவந் துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பாத்ரூம் கட்டுவதில் தொடங்கி உடைந்து கிடக்கும் கால்வாயை சுத்தம் செய்வது வரை அனைத்து வேலை களுக்கும் டெல்லியில் உள்ள மத்திய அரசின் தொல்பொருள் துறையிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் என எப்பொழுதும் சத்தத்துடனும் உறுப் பினர்களின் எதிர்ப்பு கோஷங்களுக் கிடையேயும் நடைபெறும் இந்திய பாராளுமன்றத்தில் சத்தமில்லாமல் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி ஒரு சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.
அதன்படி புராதன நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடத்தில் 100 மீட்டர் தொலைவு தடை செய்யப்பட்ட பகுதி. அதற்குப் பக்கத்தில் உள்ள 200 மீட்டர் பகுதி வரையறுக்கப்பட்ட பகுதி என மொத்தம் தமிழகத்தில் 350 இடங் களை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.
இந்தப் பகுதிகளில் மத்திய தொல்பொருள் துறையின் அனுமதியின்றி எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறக்கூடாது. தொல்பொருள் துறையின் ஆளுமைக்குட்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் அலுவலகத்தில் புதிதாக ஒரு ஸ்விட்ச் போர்டு மாற்றினால் கூட இந்த சட்டத்தின்படி தவறு.
அதையும் மீறி தொல்பொருள் துறையின் அனுமதியின்றி முதல்வர் செய்வாரேயானால் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை, ஒருலட்ச ரூபாய் அபராதம். இந்தத் தண்டனையை எதிர்த்து சாதாரண கோர்ட்டில் மட்டு மல்ல சுப்ரீம் கோர்ட்டில் கூட வழக்குத் தொடர முடியாது.
""இலங்கை போன்ற சர்வாதிகார நாடுகளில் கூட அமல்படுத்த அஞ்சும் இந்த சட்டத்தை உடனடியாக அமல் படுத்துங்கள்'' என்கிறார் சத்யபாமா பத்ரிநாத் என்கிற வெறும் கண்காணிப்பாளர் அந்தஸ்து பெற்ற ஒரு அதிகாரி.
"ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய். காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்' என்பது மாதிரி தமிழக அரசின் அனைத்துத் துறைக்கும் 350 இடங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். தொல்பொருள் துறையின் உத்தரவை மீறினால் அதிகாரிகளுக்கும் கடும் தண்டனை என வரும் கடிதத்தில் உரிய கட்டளைகளை வெள்ளைக்காரன் உத்தரவை அப்படியே அமல்படுத்திய ஜமீன்தாரர்கள் போல் மாநில அதிகாரிகளும் படிப்படியாக அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
அது எப்படி நடக்கிறது என்பதை சிறுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி சொல்கிறார். ""சிறுதாவூர் கிராமத்துல ஒரு மலையில் பழங்காலத்துல இறந்தவர்களை புதைச்ச முதுமக்கள் தாழி இருக்கு. அதுக்குப் பக்கத்துல அம்பேத்கர் நகர்னு குடிசைப் பகுதியில் மக்கள் ரொம்ப காலமா வசித்து வந்தாங்க. அந்தப் பகுதிக்கு பட்டா கொடுங்கன்னு போனமாசம் திருப்போரூருக்கு எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் போய் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க. அடுத்தநாளே மத்திய அரசு அதிகாரிங்க புல்டோசர் வச்சு குடிசைகளையெல்லாம் இடிச்சுத் தரைமட்டமாக்கிட்டாங்க'' என்கிறார்.
திருப்போரூர் நகராட்சிக் கவுன்சிலர் சசிகலா, ""திருப்போரூர் முருகன் கோயில் சன்னிதானத்துல முருகனை கழுவுற தண்ணி போகிறதுக்கு ஒரு குழாய் போட நகராட்சி முடிவு செஞ்சு வேலையை ஆரம்பிச்சது. அதற்கு தொல்பொருள்துறை தடை விதித்துவிட்டது. கடந்த ஒரு மாசமா முருகனுக்கு அபிஷேகம் ஒழுங்கா நடக்கலை'' என்கிறார்.
மகாபலிபுரம் சிற்பிகள் பாஸ்கரன், ஆனந்தன்... ""நாங்கள் ஐந்து ரதத்திற்கு எதிரே சிற்பக்கூடம் அமைத்து வருகிறோம். ஏற்கனவே அரசு எங்களுக்கு பூஞ்சேரி கிராமத்தில ஒரு சிற்பக் கலைக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்தது. அது நிறைவேறவில்லை. இப்பொழுது தொல்பொருள் துறை எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி எங்களது கட்டட வேலைகளை நிறுத்திவிட்டது'' என்கிறார்கள்.
இதுபோன்ற குரல்கள் தமிழ்நாடு முழுவதும் கேட்க ஆரம்பித்துள்ளது. ""இந்தியா முழுவதும் தொல்பொருள் சின்னங் களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், தமிழ்நாட் டுக்கு பொருந்தாது. வடநாட்டில் பல இடங்களில் கல்லறைகள்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் கோயில்கள்தான் உள்ளது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கொள்கை யோடு வாழ்ந்த குடிகளை, கோயி லின் பழைமையைக் காட்டி கொடுமைப் படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்'' என்கிறார் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யா.

மாவட்ட அமைச்சரான தா.மோ.அன்பரசன், ""காஞ்சி மாவட்டத்தில பல்வேறு இடங் களில் இந்த பிரச்சினை என் கவனத்திற்கு வந்தது. இதையெல் லாம் மத்திய தொல்பொருள் துறையிடம் பேசி மக்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்றவற்றை ஏற்பாடு செய்து தர கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்கிறார்.
ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவந்த மீன்பிடி சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டத்தை எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது. அதேபோல் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.




. ‘திறந்தவெளி பல்கலைக் கழகம் மூலமாக முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இனிமேல் அரசு வேலைவாய்ப்புத் தரமுடியாது. பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, பட்டப்-படிப்பு, அதன்பிறகு முதுநிலை பட்டப்படிப்பு முடித்ததையே முறையான தகுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, பதவி உயர்வும் வழங்கப்படும்...’ என்பதுதான் அந்த அரசாணை! 
‘துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள எங்களது அல் தவா கான்கிரீட் கம்பெனி, அல் லிஜிமா பிளாஸ்டர்- டைல்ஸ் கான்ட்ராக்ட், ஆசியா- கல்ப் டெக் கான்ட்ராக்ட் உள்ளிட்ட 16 நிறுவனங்களில் பணியாற்ற கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரீசியன் தேவை’
இவரது உதவியுடன் துபாயில் உள்ள ராமசாமி நாராயணனுடன் பேசினோம். “தூத்துக்குடியைச் சேந்த செண்பககுமார், முத்தரசு ஆகியோர் ஷார்ஜா தூதரகத்தில் பணியாற்றும் ஜமால் ஒபைட் அல்மசூரி என்ற அரேபியரின் பெயரில் துபாயில் மெஸ்கோ மெரைன் சர்வீசஸ் மற்றும் 16 துணை நிறுவனங்களை லைசென்ஸ் பெற்று நடத்தி வருகின்றனர். துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஜேக்கப் தாமஸ் என்பவர் இவர்கள் நிறுவன பங்குதாரர். வந்த வருமானத்துடன் மேலும் பெரும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு துபாயில் 2006 மற்றும் 2007-ம் ஆண்டு இளையராஜாவை அழைத்து 2 இசை நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இதுபோன்ற செலவுகளுக்காக இவர்களிடம் பணிபுரியும் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெயரில் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றனர்.
‘‘6 மாதங்களுக்கு முன்பு துபாயில் உள்ள சிட்டி பேங்கில் கடன் மோசடி செய்ததாக செண்பககுமாரை கைது செய்துவிட்டனர். செண்பககுமாரின் தம்பியான முத்தரசு துபாயில் ஏற்கனவே ரூ.70 கோடி வரை கடன் பெற்று, இந்தியாவிற்கு வந்து தூத்துக்குடியில் ஸ்டார் ஓட்டல் வைத்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். எங்களை வங்கி கடன்தாரர் பட்டியலில் இருந்து விடுவிக்க வேண்டும். இல்லையென்றால், இந்தியாவில் உள்ள செண்பககுமாரின் சொத்துக்களை கைப்பற்றி வங்கிகள் தங்கள் பணத்தை மீட்கவேண்டும். இந்த பிரச்னைகளை எல்லாம் இந்திய தூதரகம் மற்றும் துபாய் தூரகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. யாரோ கடன் பெற்று உல்லாசமாய் வாழ்ந்ததற்கு அப்பாவிகளான 150 பேருக்கு மேல் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் கொடுமையாக இதுபோல கடன் பெற்றதாக வங்கி அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால் வாய்மேட்டைச் சேர்ந்த அன்பழகன் என்பவர், துபாயிலேயே தற்கொலை செய்துகொண்டுவிட்டார் ” என்றார்.

ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியது எல்லோரையும் கவர்ந்தது. அதில் காஷ்மீரிகளின் உள்ள கிடக்கையையும் எதிர்பார்ப்புகளையும் விளக்கியதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (றிளிரி) பகுதியை மீட்பது குறித்தும் அவர் நினைவுபடுத்தினார். 1993&ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காஷ்மீர் மாநிலத்திற்கான சுயாட்சி தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்வது குறித்து வலியுறுத்தினார்.
“பல்வேறு மொழி பேசும், கலாசார வேறுபாடுகளைக் கொண்ட மாநிலங்களின் கூட்டாட்சிதான் மத்திய அரசு” என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்தை மத்தியில் ஆண்டு வருபவர்கள் தொடர்ந்து மீறி வருகின்றனர். அவ்வாறு மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கப்படுவதால், தேசத்தின் ஒருமைப்பாடு மேலும் வலுப்பெறும் என்பதற்கு அமெரிக்காவின் அரசியல்முறை சிறந்த உதாரணம். சோவியத் யூனியன் இதில் சாதனையே படைத்தது. அங்கு தேசிய இனப்பிரச்னை எழவே இல்லை. ஐ.நா.வின் மனித உரிமைக் கழகமும் இதை ஆதரிக்கிறது.
மத்தியில் தனித்து ஆட்சி செய்ய எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்க மட்டும் வாய்ப்புள்ள இன்றைய நிலையில், மற்ற மாநிலங்களுக்கும் சுயாட்சி வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது. இக்கோரிக்கையை வலுவாக முன்வைத்த திராவிடக் கட்சிகள்கூட, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற தங்கள் கோஷத்தின் முதல் பகுதியைப்பற்றி கவலைப்படுவது இல்லை. 1957-ல் தனது தேர்தல் அறிக்கையில், பிரிந்து போகும் உரிமையைக் கோரிய தி.மு.க., இன்றைக்கு மத்திய ஆட்சியில் பங்கு பெறுவதையே குறிக்கோளாக்கிக் கொண்டுள்ளது. எனவே காஷ்மீருக்கு மாநில சுயாட்சி வழங்கினால், எங்களுக்கும் தாருங்கள் என்று கேட்கும் நிலையில் கூட பல மாநில அரசுகள் இல்லை. மாநிலத்திற்கும், மத்திய அரசிற்கும் கூட்டாக உள்ள உரிமை பட்டியலில் (நீஷீஸீநீuக்ஷீக்ஷீமீஸீt றீவீst) உள்ள பல சட்டப்பிரிவுகளை மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றும்போது கூட இக்கட்சிகள் வாய் திறப்பதில்லை.







நிஷாவின் தாயார் ரசீதாபானு நம்மிடம், ‘‘கடந்த வாரம் ஒரு நாள் காலை 11 மணி இருக்கும். பக்கத்து வீட்டு புள்ளையோட வேப்ப மரத்துகிட்டப் போய் வேப்பமுத்து பொறுக்கி விளையாடிகிட்டு இருந்தா நஜிமுன். கொஞ்ச நேரம் கழிச்சுப் போய் பார்த்தா, அவளைக் காணலை. ஊர்முழுக்கத் தேடினோம். கண்டுபிடிக்க முடியலை.ஊருக்குள்ள விசாரிச்சேன். வேப்ப மரத்தடியில் விளையாடிகிட்டு இருந்த புள்ளைய மதரசாவில் குர்-ஆன் படிக்கும் ஷாஜகானும், அரிய நாயகிபுரத்தை சேர்ந்த நிஜாமுதீனும் மிட்டாய் வாங்கி கொடுத்து கூட்டீட்டு போனாங்கன்னு தகவல் சொன்னாங்க.
அவங்க ரெண்டு பேரையும் தேடினோம். அகப்-படலை. மறுநாள் மதியம்... ஆடு மேய்க்கும் சில பேர் வந்து, ‘கண்மாய் காட்டு கருவைக்குள் நஜிமுன்நிஷா நரபலிக்காக கொலை செய்யப்பட்டிருக்கா. சென்ட்ரிங் கட்டையால் தலையை அடிச்சி நொறுக்கி, நரபலி கொடுத்திருக்காங்க’னு சொன்னாங்க. பதறி-அடிச்சு-கிட்டுப் போய்ப் பார்த்தோம். என் செல்ல மகளை நரபலி கொடுத்துட்டாங்க...’’ என்று சொல்லி கதறினார்.

அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம்தான் திருச்சியைச் சேர்ந்த அந்த அரசியல் பிரமுகர் என செய்திகள் கசிய ஆரம்பித்தன. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக செந்தூரேஸ்வரனை அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தியது, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கூடைப்பந்து வீரரான செந்தூரேஸ்வரனை சங்கத்தின் செயலாளராக நியமிக்க வேண்டும் என்பது தியானேஸ்வரனின் ஆசை. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அப்போதுதான் பிரச்னை வெடித்து, நடிகர் நெப்போலியன் தலைமையில் ஒரு குரூப், தியானேஸ்வரனுக்கு எதிராகக் கிளம்பியது. சங்கத்தை தங்கள் கைக்குள் கொண்டுவர அவர்கள் முயற்சித்தார்கள். 
தேவர் தேசிய பேரவையின் தலைவர் திருமாறனிடம் இதுகுறித்துப் பேசினோம்.
மதுரை விமான நிலையம் 1932&ல் தொடங்கப்-பட்டது. அப்போது அந்த விமான நிலையம் அமைக்க பள்ளர் சமூகத்தினருடைய விளைநிலங்கள் தான் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை மூன்று முறை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். இதனால் எங்கள் சமூக மக்கள் விளைநிலம் 98 ஏக்கர் அரசுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்குக்கூட எண்பத்தொன்பது வீடுகளை சின்ன உடைப்பு கிராமமக்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். 
தலையை சுற்றிலும் முப்பதுக்கும் மேற்பட்ட தையல்கள். இரண்டு வருடங்கள் கட்டாய ஓய்வு. எந்த பயிற்சிக்கும் செல்ல முடியாத நிலைமை. போதாக்குறைக்கு பக்கவாதம் பற்றிக்கொள்ளும் அபாயம்! மகனின் நிலையைக் கண்டு, அவனருகே கண்ணீருடன் சோகக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கோகுலின் தந்தை ராஜ முத்துவை சந்தித்தோம்.
அதன்பின் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஸ்கேன் எடுத்தோம். அதில், தலை எலும்பு முறிந்து மூளையில் குத்தி ரத்தம் உறைந்திருப்பதால் உடனடியாக ஆபரேஷன் செய்யச் சொன்னார்கள். ஆபரேஷன் செய்து மூன்று நாட்கள் ஐ.சி.யு. வார்டில் வைத்து காப்பாற்றி இப்போதுதான் கோகுலை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறோம். 



















