
shockan.blogspot.com
கோவை ரயில்வே நிலையத்தில் கத்தி முனையில் ரமேஷ்பாபு என்ற பயணியிடமிருந்து 1400 ரூபாயை பிடுங்கிக்கொண்டதாக ரயில்வே போலீஸாரால் 2007-ம் வருடம் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவன்தான் கைதி விஷ்ணுவர்த்தன். அந்த விஷ்ணுவர்த்தனை 29-06-10-ந் தேதி அன்று மத்திய சிறைச் சாலையிலிருந்து அழைத்து வந்த போலீஸார் கோவை 2-வது நீதிமன்ற வளாகத்துக்குள் நீதிபதி கோமதிநாயகம் முன்பு அவனை ஆஜர்படுத்திய போது...
""அய்யா... ஜெயிலுக்குள்ள எங்களை வார்டனுக ரொம்பவே கொடுமைப்படுத்தறாங்கய்யா. போன தடவை எங்கண்ணன் மனு போட்டுப் பார்க்க வந்தபோது 2000 ரூபாய் எனக்குக் கொடுக்க வந்தாரு. அந்தப் பணத்த எங்கிட்ட கொடுக்கறதுக்காக வார்டன்க 400 ரூபாய் லஞ்சம் வாங்கினதுக்கப்புறம் தான் எங்கிட்ட 2000 ரூபாயக் கொண்டு வந்து கொடுத்தாங்க. ஆனா இப்ப கோர்ட்டுல ஆஜர்படுத்த கொண்டு வர்றதுக்கு முன்னால எங்கிட்ட இருந்த 2000 ரூபாயைக் கேட்டு கன்னா பின்னான்னு அடிச்சு காயப்படுத்திட் டாங்க'' என்று சட்டையைக் கழற்றி காயங்களை அழுதுகொண்டே காட்டி யவன்... ""அய்யா உங்ககிட்ட இதையெல் லாம் சொன்னா "திரும்பவும் ஜெயிலுக்குத்தான் வரோணும்... கொன்னுபோடுவோம்'னு மிரட்டறாங்கய்யா'' என்று அவன் சொல்ல... அதிர்ந்துபோன நீதிபதி, கைதி விஷ்ணுவர்த்தனை ஜி.ஹெச்.சில் அட்மிட் செய்யும்படி சொன்னார்.
அதேநாளில் சிறைச்சாலையில் கைதிகள் மனுநாள். ""எங்களுக்கு தரம் குறைவான சாப்பாட்டையே போடுகிறார்கள். வார்டன்கள் எங்களிடம் பணம் கேட்டு சித்திரவதை செய்கிறார்கள்'' என்று சில கைதிகள் புகார் செய்த அன்றைய மாலைதான் புகார் கொடுத்த சிலரை வார்டன்கள் புரட்டி எடுத்திருக்கிறார்கள். கைதிகள் தாக்கப்பட்ட விஷயம் அறிந்து மற்ற கைதிகள் உண்ணாவிரதமிருக்க...

அதற்குப்பின் நடந்த சம்பவங்களை சிறையில் உள்ள நம் காக்கி சோர்ஸ்களிடம் கேட்டோம். ""புதிதாய் கோவை ஜெயில் சூப்பிரண்ட்டாய் இன்சார்ஜ் எடுத்திருக்கும் சேலம் ஜெயில் சூப்பிரண்ட்டான பழனி வந்ததற்குப் பிறகுதான் தரமற்ற உணவு கைதிகளுக்குப் போடப்பட்டது. இதை எதிர்த்துப் பேசிய கைதி பிரகாஷ் என்பவனை சில போலீஸ்காரர் களும் வார்டன்களும் சேர்ந்து பாவம்... செமத்தை யாய் அடித்துவிட்டார்கள். ஆனால் அவன் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்தான் என்று மூச்சுப் பேச்சற்றுக் கிடந்த அவனை ஜி.ஹெச்.சில் கொண்டுபோய் சேர்த்தார் கள்'' என்கிறார்கள் காக்கிகள்.
சேலம் சிறைச்சாலையில் கூட அனைத்துக் கைதிகளும் உண் ணாவிரதமிருக்கிறார் கள் என்ற தகவலைத் தொடர்ந்து என்ன பிரச்சினை என்று அலசினோம். சேலம் சிறையில் இருந்து காக்கிகளின் துணை யோடே நம்மைத் தொடர்புகொண்டு பேசிய கைதிகள் முனு சாமி (5662), ராஜ ராஜசோழன் (4456) ஆகிய இருவரும் ""உண்மையாலுமே ரொம்ப மட்டமான சாப்பாட்டையும், குழம்பையும் ஊத்தி சாப்புடச் சொல்றாங்க. எப்படிங்க சாப்புட முடியும்னு பழனி எஸ்.பி.கிட்ட நாங்க ரெண்டு பேரும் கேட்டதுக்காக அப்படி அடிக்கிறாங்க சார். சாப்பாட்டுல பிளேட துண்டு துண்டா உடைச்சுப் போட்டு இப்ப சாப்புடுன்னு சொல்றாங்க. ஏற்கனவே எதிர்த்துப் பேசினவங்கள கண்ணு மண்ணு தெரியாம அடிச்சு இந்த ஜெயிலுக்குள்ளயே இறந்து போயிருக்காங்க. இந்த எஸ்.பி. பழனிகிட்டயிருந்து முடிஞ்சா எங்கள காப்பாத்துங்க சார்'' என்று விசும்பல் ஒலியை எழுப்பிய இருவரின் குரலும் அவசர அவசரமாய் கட்டாகிப்போனது.

இதற்கடுத்த நாளே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மகளிர் சிறையிலிருந்து கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வெளியே கொண்டு வரப்பட்ட மைதிலி என்ற பெண் தன்னுடைய சேலையை அவிழ்த்தெறிந்துவிட்டு ""ஜெயிலுங்கிறது எதுக்கு? குற்றம் செஞ்சவங்க திருந்தற இடம்ங்கறாங்க. ஆனா நிச்சயமா இல்லை. கஞ்சா வித்த வழக்குல என்னை கைது செஞ்ச போலீஸ்காரங்க இப்ப உள்ளுக்குள்ளேயே என்னை கஞ்சா விக்கச் சொல்றாங்க. முடியாதுன்னு மறுத்ததுக்கு சரியா சாப்பாடு போடாம தண்டிக்கிறாங்க. என்னைப் பாக்கறதுக்காக வந்த எங்கம்மா மேல கஞ்சா வித்ததா பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்க'' என்றவளிடம்... "சரிம்மா அதுக்காக இப்படி அரைகுறையா பப்ளிக்ல நிக்கிறது சரியா?' என்றோம். ""உள்ளுக்குள்ள எங்கள நிர்வாணமாவே நிறுத்தி அங்க இங்கன்னு போலீஸ்காரங்க கை வைக்கறாங்க சார். அதை செல்போன்ல வேற படம் புடிச்சுட்டு "வெளிய போய் சொன்னீனா நெட்ல போட்டுவுட்ருவோம்'னு மிரட்டறாங்க. இவுங்கள்லாம் போலீஸ்காரங்களா சார்....? மனசும் உடம்பும் உடைஞ்சுப்போய்தான் இப்படி நின்னுட்டிருக்கேன்'' என்றவள் அப்படியே தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
இந்தச் சம்பவங்களைக் கேட்டு கொதித் துப்போயிருக்கும் கோவை வழக்கறிஞர் கலை யரசன்... ""ஏற்கனவே 2005-ல் இதே ஜெயில் சூப் பிரண்ட்டான பழனி மீது கைதிகளை துன் புறுத்தியதாக வழக்குப் போடப்பட்டிருக்கிறது. இதை கருத்திற்கொண்டு சரியான முறையில் நீதித்துறை விசாரணை செய்தால் உண்மைகள் வெளிப்படும்'' என்கிறார் கோபமாய்.
இதையொட்டி ஜெயில் சூப்பிரண்ட் பழனியிடம் பேச எவ்வளவோ முயன்றும் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் கோவை சிறைத்துறை டிஐ.ஜி. கோவிந்தராஜ னிடம் பேசினோம். ""ஜெயில் சூப்பிரண்ட் பழனி மீது கூறப்படுபவை நூற்றுக்கு நூறு இட்டுக் கட்டப்பட்ட பொய்கள்தான். எஸ்.பி. பழனி, கைதிகளுக்கு பீடி சப்ளை செய்யும் போலீஸ்காரர்கள் மீது கூட நடவடிக்கை எடுத்த ஸ்ட்ரிக்ட் ஆபீசர். பிரகாஷ் என்ற கைதிகூட பீடி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் மரத்தின் மீது ஏறி தூக்குப் போட முயன்றான். சேலம் சிறையில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று... கைதிகள் சுகமாய் வாழ அல்ல சிறைச்சாலை. அவர்கள் திருந்தி வாழ்வதற்காகவே'' என்று ஜெயில் சூப்பிரண்டு பழனி மீதான புகார்களை உறுதியாய் மறுக் கிறார்.
இந்நிலையில் சிறையில் நடந்த சம்பவம் குறித்து அறிய மாவட்ட கூடுதல் நீதிபதி சதீஷ்குமார் தலைமையிலான குழு கோவை சிறைச்சாலைக்குள் சென்று கைதிகளிடம் நடந்த சம்பவங்களைக் கேட்டிருக்கிறது.
அந்தக் குழு சேலம் சிறைக்குள் நுழையுமே யானால்... போலீஸிடமிருந்து கைதிகள் முனுசாமியையும் ராஜராஜ சோழனையும் கூடவே மைதிலி போன்ற பெண்களின் மானத்தையும் ஒருசேரக் காப்பாற்றலாம்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம், மேளப்பாளையம் என்ற கிராமத்தில் குறைகேட்டபோதுதான் மேலே சொன்ன நிகழ்வு. அதிர்ச்சி விலகாமல் அந்த பெண்ணிடம் கலெக்டர் மேலும் விசாரிக்க, அவர் ஒரு பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவி என்று சொன்னதும் கலங்கியே விட்டார்.
எங்க ஊர்ல அப்ப ஒரு பொண்ணு, ஒரு பையனைக் கூட்டிகிட்டு ஓடி கல்யாணம் பண்ணிக்கிடுச்சி. அதப் பார்த்ததும் என் மனசுல பயம். நம்ம பொண்ணுக்கு காலா காலத்துல ஒரு நல்லது பண்ணனுமுன்னு முடிவெடுத்தேன். அந்த சமயத்துலதான் மேலபட்டியில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து பொண்ணு கேட்டாங்க. நானும் மாப்பிள்ளை பையன் லாரி டிரைவராக இருந்தாலும், நல்லவரா தெரிஞ்சதால பொண்ணைக் கொடுத்தேன். கடனை வாங்கி கல்யாணத்தை நல்லபடியா முடிச்சேன்.
அப்பாவை ஆறுதல் படுத்திய ப்ரியா ‘‘என்ன சார் பண்றது. என் விதி இப்படி ஆயிடுச்சி. அவர் இருந்தப்ப, என்னை கொஞ்சிய அந்த குடும்பம், அவர் இறந்ததும் நா கூசமா திட்டினாங்க. என் நிலைமை யாருக்குமே வரக்கூடாது. எங்க வீட்டுல இருந்தப்ப எனக்கு செத்துடலாமுன்னு கூட தோணுச்சி. ஆனா எனக்காக எங்க குடும்பமும் துக்கபடுமேன்னு, அதச் செய்ய எனக்கு மனசு வரல. மறுபடியும் மனச தேத்திகிட்டு பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சேன். ப்ளஸ் டூ பரீட்சை எழுதி முடிச்சேன். அப்பதான் கலெக்டர், எங்க பக்கத்து ஊர்ல முகாம் போடற தகவல் வந்தது. விதவைக்கு தர்ற உதவித்தொகை கிடைச்சா எங்க குடும்ப கஷ்டம் கொஞ்சமாவது நீங்கும்னுதான், கலெக்டருக்கிட்டே மனு தந்தேன். அவரு என்னை பார்த்ததும் இந்த வயசில விதவைச் சான்றிதழ் வேணாம். உனக்கு வேற ஏதாவது உதவி செய்ய ஏற்பாடு பண்றேன்னு சொல்லியிருக்கார். எனக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்க ஆசை இல்லை. பட்டது போதும். இப்ப ப்ளஸ் டூ பரீட்சை எழுதியிருக்கேன். எனக்கு டீச்சர் டிரெய்னிங் படிக்க ஆசை. அதுக்கு யாராவது உதவி செஞ் சா, அவங்களுக்கு காலமெல்லாம் நன்றி சொல்லுவேன். அதை வைச்சி என் தம்பி, தங்கையை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன் சார்’’ என்று கலங்கிய விழிகளோடு அவர் முடித்த போது மில் வேன் வந்துவிட்டது. நமக்கு நன்றி சொல்லிவிட்டு வேலைக்குப் புறப்பட்டுப் போனார்.
இந்த நிலையில்... கடந்த வாரம், புதுவயல் வாசுகி நவீன அரிசி ஆலை அதிபரான செல்லப்பன், தன்னிடம் வேலைபார்க்கும் உதயகுமார் உள்ளிட்ட இருவருக்கு 500 ரூபாய் நோட்டுகளாக சம்பளம் கொடுத்திருக்கிறார். சம்பளம் வாங்கிய சந்தோஷத்தில் அந்த இருவரும் டாஸ்மாக் கடைக்கு போயிருக்கிறார்கள்.
இந்த கள்ள நோட்டு சர்ச்சை பற்றி புதுவயல் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவரான யூசுப்பிடம் பேசினோம்.
சாக்கோட்டை எஸ்.ஐ.அழகு-ராஜிடம் கேட்ட-போது, ‘‘இந்த ஏரியாவில் கள்ள நோட்டு விவகாரம் அடிக்கடி நடப்பது உண்மைதான். ஆனால் அரிசி ஆலை அதிபர்களும், வியா-பாரிகளும் வங்கிகளை நோக்கி கைகாட்டிவிட்டு எளிதாக தப்பி விடுகிறார்கள். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன. இதற்கு மேல் இன்ஸ்பெக்டரிடமே கேட்டுக்-கொள்ளுங்கள்’’ என நழுவினார். 
‘‘டி.ஆர்.பாலு பக்கத்து கிராமமான தளிக் கோட்டையைச் சேர்ந்தவர் என்றாலும் வடசேரிக்கும் அவருக்கும் தூரமில்லை. 1989ல் தி.மு.க. ஆட்சியின்போது, ‘வடசேரியில் ஒரு கெமிக்கல் கம்பெனி ஆரம்பிக்கிறேன். அதுல வீட்டுக்கு ஒருத்தருக்கு வேலை தர்றேன். பஞ்சாயத்துக்கும் வருமானம் வரும்’ என அப்போதிருந்த கிராம நாட்டார்கள் வீரப்பதேவர், ராமநாதன் ஆகியோரிடம் கூறினார் டி.ஆர்.பாலு. கிராம முன்னேற்றம் கருதி சுப்ரமணிய தேவரிடமிருந்து ஆறு ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கிக் கொடுத்தார்கள் நாட்டார்கள்.
பொது இடத்தில் கூட்டம் நடத்தலாம் என நாங்கள் சொல்ல... ஏப்ரல் 9-ம் தேதி டி.ஆர். பாலுவின் கெமிக்கல் நிறுவனத்திலேயே நடத்தினார்கள். அப்போதுதான் பிரச்னை மேலும் வெடித்தது’’ என நிறுத்தினார்கள் அவர்கள். 
விருதுநகர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அருப்புக்கோட்டை டூ விருதுநகர் சாலை ஆகிய பகுதிகளில் ‘கா’ தீப்பெட்டிகள் தாராளமாகக் கிடைக்கின்றன. மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர், திருப்பரங்குன்றம் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், தேனி, போடி பகுதிகளில் கஞ்சா லேகியமும் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. 
தமிழக அரசின் சின்னமாக இப்போது இருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோபுரத்தை அகற்றிவிட்டு, திருவள்ளுவர் உருவத்தை அரசு சின்னமாக அறிவிக்க வேண்டும்’’ -விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கடந்த 8-ம் தேதி சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ஒட்டுமொத்த ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களும் கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஸ்ரீவில்லிப்புத்தூர்வாசிகளில் ஒருவரான கிருஷ்ணகுமாரியிடம் இதுபற்றிக் கேட்டபோது, “ரவிக்குமார் எம்.எல்.ஏ. சட்டசபைக்கு சென்று பொதுமக்களின் பிரச்னைகளை பேசி தீர்க்க முயற்சி செய்யட்டும். அதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட கோரிக்கைகள் மூலம் பொதுமக்களிடையே பிரச்னைகளை உண்டாக்க முயல்கிறார். இது கடும் கண்டனத்துக்குரியது’’ என வெடித்தார்.

பள்ளிப்பாளையம், குமார-பாளையம், திருச்-செங்கோடு பகுதிகளின் உயிர்த் தொழிலே விசைத்தறி தொழில்தான். வியர்வை சிந்தி பாடுபட்டாலும் இந்தத் தொழிலில் கிடைப்பது சொற்ப வருமானமே! இதையே காரணமாக வைத்து விசைத்தறித் தொழிலாளர்களிடையே ஊடுருவத் தொடங்கினார்கள் கந்துவட்டிக்காரர்கள். இந்தக் கும்பலிடம் கடன் வாங்கி நைந்துபோய், பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்பட்டவர்கள் பலர். கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தாலும்... காவல்துறையும், அதிகாரி-களும் இந்தச் சட்டத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டதால், கந்துவட்டி கும்பலின் ஆட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.
இந்த ஆட்டத்தின் உச்சம்தான் அந்த அபலைப் பெண்ணுக்கு நேர்ந்திருக்கிறது.
பள்ளிப்பாளையம் சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் அசோகன் நம்மிடம், ‘‘வேலுச்சாமி இந்த கந்துவட்டி கும்பலைப் பற்றி ஏற்கெனவே எங்கக்கிட்ட சொல்லியிருக்கார். ஆனா போலீஸ்கிட்ட இந்தத் தகவலைச் சொன்னப்ப அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல. வேலுச்சாமி புகார் கொடுத்துவிட்டுப் போனதைப் பார்த்துட்டுதான் ரவுடிக் கும்பல் கொன்னுருக்கு. இங்க மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கந்துவட்டி கும்பல் திரியறாங்க. ஆனா, போலீஸ் அவங்களையெல்லாம் கண்டுக்காது. ஏன்னா மக்களைப் பிழிஞ்சு வாங்குற கந்துவட்டியில ஒரு பகுதி போலீஸுக்குப் போயிடுதே. இதனால்தான், போலீஸ் ரவுடிகளுக்குத் துணை போகுது.
மாவட்ட எஸ்.பி.யான பாரியோ, ‘‘பள்ளிப்-பாளையம் இன்ஸ்பெக்டர், சப் & இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேலுச்சாமி கொலை வழக்கை நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம். விரைவில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் பிடிப்போம்’’ என்கிறார்.

முதல்வர் கலைஞரின் 86-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தி.மு.க.வின் சார்பில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம், வருகிற பிப்ரவரி 19,20,21 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த முகாமில் பங்கேற்பதற்கான முன்பதிவு, கடந்த 23,24,25 ஆகிய தேதிகளில் நடந்தது. திருச்சி, துறையூர், முசிறி, லால்குடி, தொட்டியம், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய இடங்களில் நடந்த இந்த தி.மு.க. நிகழ்ச்சிக்கான வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார்கள் அரசு அதிகாரிகள்.
‘‘இதுவும் ஒரு ஜனநாயகப் படுகொலைதான். மாவட்டச் செயலாளர் மூலம் தலைமையிடம் கலந்து பேசி, தேவையான நடவடிக்கை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்’’ என்று கூறினார் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. எம்.பி.யான குமார்.
ஆளும் அரசியல் கட்சிக்கு அரசு அதிகாரிகள் பகிரங்கமாக வேலை பார்த்தது எப்படி? கல்வித் துறை வட்டாரத்தில் துருவினோம். 



கர்நாடகாவில் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்? தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி முடிக்க 2 லட்சம் வரை செலவாகும். மேலும் ஒரே தவணை அல்லது இரண்டு தவணைகளில் செலுத்த வேண்டும். கர்நாடகாவில் நிறுவனத்தை பொறுத்த 50 ஆயிரம் முதல் 70 ஆயிரத்திற்குள் அடங்கிவிடுகிறது. அதிலும் மூன்று அல்லது நான்கு தவணைகளில் செலுத்தும் வசதி. பாடத்திட்டத்தை பொறுத்தவரை கர்நாடகாவில் ஆண்டுக்கு நான்கு தாள்கள் மட்டுமே. அதுவே தமிழகத்தில் ஏழு தாள்கள். கர்நாடகாவில் படித்தாலும் இவால்வேஷன் தேர்வு மூலம் தமிழகத்திலும் பதிவு செய்து வேலை வாய்ப்பு பெறலாம்...’’ என்று ஆசை வார்த்தை காட்டுகின்றனர் ஏஜென்ட்டுகள். அதை உண்மை என்று நம்பி, பெங்களூருவில் உள்ள தமிழ் வழி பயிற்சிப் பள்ளிகளில் ஆண்டுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை சேர்ந்து படிக்கின்றனர்.ஏஜென்ட்டுகளின் உறுதி மொழியை அப்படியே உண்மை என்று நம்பிய மாணவர்கள் பலர், ஏனோதானோ என்று தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பல பள்ளிகளில் தற்போது ஆசிரியராகப் பணியாற்றியும் வருகின்றனர். இதையே காரணம் காட்டி மாணவர்களை இழுக்கும் பணியை, பல ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளனர்.
‘‘பல மாணவர்கள் கேள்விகளை அப்படியே விடைத்தாளில் எழுதி வைத்துள்ளனர். சில மாணவர்கள் மட்டுமே 20 முதல் 30 மதிப்பெண் பெற்றுள்ளனர். பலர் 15க்கும் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளனர். 10 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பெங்களூரு விடைத்தாள் திருத்தும் மையத்தில் 80 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் விடைத்தாள்களை திருத்திய போதுதான் மேற்கண்ட முறைகேடுகள் கண்டு-பிடிக்கப்பட்டன. இதையடுத்து தமிழக ஆசிரியர்கள் விடைத்-தாள்களை திருத்தி அளித்த மதிப்-பெண்களின் அடிப்படையில் ரிசல்ட் வெளியிட்டது கர்நாடகக் கல்வித் துறை. அதில்தான் 4 ஆயிரத்து நூறு மாணவர்கள் ஃபெயிலாக்-கப்பட்டனர்’’ என்கின்றனர் தமிழகக் கல்வித் துறை அதிகாரிகள்.
அவர்களைச் சந்தித்து என்ன நடந்தது? என்று கேட்டோம்.
“சேரன் மகாதேவி சப்-கலெக்டர் உள்ளிட்ட பல அதிகாரிகள், பரிசீலனை செய்த பிறகுதான் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன. அவற்றை பரிசீலனை பண்ணி நூறு பயனாளிகளைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.
குமரி மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் இருந்தாலும்... குமரி தந்தை மார்ஷல் நேசமணி நகரசபை தந்தையாக இருந்ததன் மூலம் பாரம்பரிய பெருமை பெற்றது நாகர்கோவில் நகராட்சி. இந்நகராட்சிக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிப்பது இந்து கல்லூரி அருகே உள்ள அனாதை மடம் மைதானம். இந்த மைதானத்தை வைத்துதான் இப்போது விபரீத விளையாட்டு ஆரம்பித்திருக்கிறது.
‘‘குமரி மாவட்டத்தில் முதியோர் கிராமம் அமைக்க ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்கான இடம் தேர்வு செய்யும்போது, அரசு புறம்போக்கு நிலம் என அனாதை மடம் இருப்பது தெரியவந்தது. எனவே, அங்கு போர்டு வைத்துள்ளோம். அனாதை மடம் என்றால் அனாதைகள் இருக்கவேண்டும். தானமாகக் கொடுத்த நோக்கத்திற்கு மாறாக, சம்பந்தப்பட்ட சொத்தை பயன்படுத்தினால் அதைப் பறிமுதல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. நகராட்சிக்குச் சொந்தமானது என்பதற்கு உரிய ஆவணங்களை அவர்கள் முதலில் காட்டட்டுமே? நாகர்கோவில் நகராட்சி, குப்பை கொட்டுவதற்காக புறநகர்ப் பகுதியில் சுமார் ஐம்பது ஏக்கர் நிலம்வேண்டும் என நகராட்சி சார்பில் எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்காக நாங்கள் இடம் தேடி வரும் நிலையில் அனாதை மடம் மைதானத்தை நகராட்சி விட்டுக்கொடுத்தால்தான் என்ன?’’ என்றார்.
நம்மிடம் பேசிய அரசு ஊழியர் வட்டாரத்தினர், ‘‘சாலை பாதுகாப்பு கமிட்டியில் நாகர்கோவில் நகராட்சித் தலைவரை உறுப்பினராகச் சேர்க்காதது, ஆரல்வாய்மொழி புறநகர்ப் பகுதியில் குப்பை கிடங்கிற்கு தொடர்ந்து அனுமதி மறுத்துவருவது, பிளாஸ்டிக் இல்லா நகரம் என்ற அறிவிப்பை நகராட்சியிடம் கலந்தாலோசிக்காமலேயே கலெக்டர் அறிவித்தது... இப்படியாக வருவாய்த் துறைக்கும், நகராட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவிவருகிறது. அதன் தொடர்ச்சியே இதெல்லாம்’’ என்கின்றனர். 
போன மச்சான் திரும்பி வந்தாண்டி’ என்ற கதையாக ரேஷன் கடைகளுக்குப் போன அரிசி திரும்பவும் அரிசி அரவை ஆலைக்கே வருவது தான் கடத்தல் கும்பலின் ஹைடெக் டெக்னிக் ஃபார்முலா.
மதுரை மாவட்டத்தில் 26 தனியார் அரிசி ஆலைகள், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், முகவர்களாக இருக்கிறார்கள். இந்த நவீன அரிசி ஆலைகள் அனைத்தும் முழுத் திறனோடு அரைத்தால் மாதம் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 டன் நெல்லை மட்டுமே அரைத்துக் கொடுக்க முடியும். ஆனால், அனைத்து அதிகாரிகளின் துணையோடு மாதம் ஒன்றுக்கு 16 ஆயிரம் டன் நெல் அரைத்ததாகக் கணக்கு மட்டும் காண்பிக்கின்றனர். மீதமுள்ள நெல்லை வெளிமார்க்கெட்டில் விற்று விடுகிறார்கள். 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, அ.தி.மு.க.வின் பாசத் தொகுதியான (பின்னே ஒரு காலத்தில் அம்மா ஜெயிச்ச தொகுதியாச்சே!) பர்கூரைச் சேர்ந்த சிறுவன் கார்த்திக். அப்பாவும், அம்மாவும் இறந்துவிட, தன் தந்தை வழி பாட்டனாருடன் பர்கூர் எம்.ஜி.ஆர் நகரில் தற்போது வசித்துவருகிறான். அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுவன்தான், முதல்வர் கலைஞரிடம் உதவி கேட்க சென்னைக்குப் புறப்பட்டவன்.
தகவல் சொன்ன அ.தி.மு.க. கட்சிக்காரரே, எங்களை சென்னைக்குக் கூட்டிக்கிட்டுப் போயி அ.தி.மு.க. கட்சி ஆபீஸ்ல விட்டாரு. அங்க இருக்கிறவங்கதான் புள்ளைய மீட்டுக் கொடுத்து துணி, நோட்டு வாங்கிக் கொடுக்கச் சொல்லி பணமும் கொடுத்தாங்க. நானும் என் பொஞ்சாதியும் கூலி வேலைக்குப் போனாத்தான் வீட்டுல சாப்பாடே. இதுல இவன் கவலை வேற...” என்று சோகமாய் சொல்லி முடித்தார்.
கார்த்திக்கை அழைத்து அவனிடம், ‘ஏன் கலைஞர் வீட்டுக்குச் சென்றாய்?’ என்று கேட்டோம். “அப்பா, அம்மா ரெண்டு பேரும் செத்துப் போயிட்டாங்க. பாட்டியும், தாத்தாவுந்தான் வேலைக்குப் போயி சாப்பாடு போடறாங்க. பாட்டி உடம்பு சரியில்லாம இருமிக்கிட்டு வயசான காலத்துல களைவெட்டப் போறாங்க. எங்களுக்காகத்தானே அவங்க வேலைக்குப் போயி கஷ்டப்படறாங்க. பள்ளிக்கூடம் போனாலும் எல்லாரும் அம்மாவோட வர்றது, போறதைப் பார்த்து எனக்கு அழுவாச்சி வந்துடும். வீட்டுல சில நாள் சாப்பாடு இருக்காது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது பற்றிப் பேசினோம். “ஏதோ சிறுவன் உதவி கேட்டு முதல்வர் வீட்டுக்கு வந்துட்டான். அங்கிருக்கும் காவலர்கள் அவனிடம் விசாரித்து ஊருக்குத் தகவல் கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். அதை விட்டுட்டு அவனை விரட்டி அடிப்பது எந்த விதத்தில் சரி? கோயம்பேடு பஸ் நிலையத்தில் படுத்திருக்கும்போது, அங்கு இருந்த போலீஸார் அவனை சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டனர். இச்செய்தியை கொடநாட்டிலிருக்கும் அம்மாதான் படித்துவிட்டு, என்னிடம் தகவல் சொன்னார்.
சிலைக் கடத்தல் கும்பலில் சிக்கிய உமாமகேஸ்வரி, சினிமா மற்றும் டி.வி.சீரியல்களுக்குத் தேவையான துணை நடிகர்களை அனுப்பும் ஏஜென்ட். சில சினிமாக்களில் ஆட்கள் வரவில்லையென்றால் இவரே வேஷமும் கட்டியிருக்கிறார் என்ற தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
வாட்டசாட்டமாக இருந்த மற்றொரு இளைஞரை போலீஸ் குழுவினர் கவனித்த விதத்தில் அந்த நபர், ‘என்னை அடிக்காதீங்க உண்மையைச் சொல்லிடுறேன்’ என்று அலறத் தொடங்கினான். “நான் கலைஞர் டி.வி.யில் ஒளிப்பரப்பான ‘ரேகா ஐ.பி.எஸ்.’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மேலும் ‘அழகிய நாட்கள்’ என்ற டி.வி. தொடரிலும் நடித்திருக்கிறேன். எனக்கு நடிப்பில் போதிய பணம் கிடைக்கவில்லை. அதனால் கூடுதல் வருமானம் தேவைப்பட்டது. 
இத்திட்டத்தில் இரண்டு விதமான குறைபாடுகள் இருக்கின்றன. கலன்களிலிருந்து வெளியேற்றப்படும் நீர் பொதுமக்களின் வீடுகளைச் சேரும்போது, சிறிது நாட்களில் கலங்கலாகிவிடும். இரண்டாவதாக, குடிநீராக்குவதற்குப் பயன்படும் ‘மெம்பரின்’ என்கிற நூற்றுக்கணக்கிலான கருவிகள் அதன் பணிகளை நூறு சதவிகிதம் தொடர்ந்து செய்யுமா? என்பதற்கு ‘உத்தரவாதம்’ கிடையாது.
இத்திட்டத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது பெயரைத்தவிர்த்த அவர், “சீதோஷ்ண சூழ்நிலை, காஸ்ட்லி பட்ஜெட், அடிக்கடி மாற்றப்பட வேண்டிய, பராமரிக்க முடியாத உபகரணங்கள் இதுபோன்ற பல காரணங்களால் இத்திட்டம் முழுமையாக வெற்றி பெறுவது சந்தேகம்தான்!” என்று தனது கருத்தைத் தெரிவித்தார். 
சென்னை நீலாங்கரையை அடுத்த பனையூரில் ஒதுக்குப்புறமாக உள்ள பங்களா. அக்கம்பக்கம் எந்த வீடுகளும் கிடையாது. அமைதியான சூழலில் பனையூர் 11-வது அவென்யூவில் பிரமாண்ட பங்களாவில் மனைவி ரமணியுடன் தனியாக வசித்து வந்தார், சரக்குக் கப்பலில் கேப்டனாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இளங்கோவன்.
பிற்பகல் 3 மணி அளவில் அந்த வீட்டிற்கு சண்முகராஜன் தனது ஹூண்டாய் காரில் வந்தார். சண்முகராஜன் மட்டும், இளங்கோவன் வீட்டிற்குள் சென்றார். அவ்வளவு பெரிய பங்களாவுக்கு ஒரு காவலாளி கூட இல்லை என்பதுதான் வேதனையான ஒன்று. சண்முகராஜன் காருக்குப் பின்னால், ஃபோர்டு ஐகான் கார் வந்து நின்றது. அதிலிருந்து யாரும் இறங்கவேயில்லை.
சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகஸ்ட் 25&ம் தேதி பிற்பகல் அவசர அவசரமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ''பணத்திற்காக, நகைக்காக நடந்த கொள்ளை. அவனிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அவன் இறந்ததற்கு பொதுமக்கள் அடித்தது காரணமா? போலீஸ் நடவடிக்கை காரணமா என்று இப்போதே சொல்ல முடியாது. எனினும் இறந்தது போலீஸ் நிலையத்தில் என்பதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளோம். விசாரணை முடிவில் தான் பல தகவல்கள் தெரியவரும். நாங்கள் குற்றப்பத்திரிகை போன்றவற்றை தயாரிக்க வேண்டும். இப்போதே எல்லாத் தகவல்களையும் கூற முடியாது'' என்றார். போலி துப்பாக்கி, போலி நம்பர் பிளேட் உள்ள கார் சம்பந்தமான கேள்விகளுக்குச் சரியான பதில்களை நிச்சயம் சண்முகராஜன் போலீஸாரிடம் சொல்லியிருப்பார். அதையெல்லாம் ஏன் மறைக்க வேண்டும் என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை திசைதிருப்பத்தான் என்ற பகீர் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 
தங்களது பெயர் விக்கி என்ற விக்னேஷ், சங்கிலிமுருகன் எனவும், கோயில் கலசங்களைத் திருடுவதற்காக, திரைப்படத் தயாரிப்பாளரான ராஜகோபால் தங்களை சென்னையில் இருந்து கூட்டி வந்ததாகவும், மற்ற நண்பர்களான நூர் முகம்மது, அந்தோணி நாச்சியப்பன், முரளி ஆகியோர் தயாரிப்பாளருடன் லாட்ஜில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர். உடனே தயாரிப்பாளர் ராஜகோபாலனையும், ஏனைய கூட்டாளிகளையும் வளைத்துவிட்டோம். தயாரிப்பாளர் ராஜகோபால் சொன்ன விஷயங்கள்தான் எங்களை திகிலடைய வைத்தது” எனக் கூறியவர், கலச வேட்டைக்கான தயாரிப்பாளரின் வாக்குமூலத்தை அவரது வார்த்தைகளிலேயே நம்மிடம் அப்படியே ஒப்புவித்தார்.

சென்னைக்கு அருகே இடம் தேடிய ஆந்திர நிறுவனமும் சந்திரசேகரனிடம் ஏமாந்து போயிருக்கிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த ‘பொல்லிநேனி டெவலப்பர்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு, திருவள்ளூர் பகுதியில் 50 ஏக்கர் வாங்கித் தருவதாக, சுமார் 200 கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையை சந்திரசேகரன் பெற்றிருப்பதாகத் தகவல். அதன் அடிப்படையில் அவர் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் பகுதியில் நிலங்களை வாங்கினார். ஒப்பந்தப்படி அவற்றை அவர் உரிய நிறுவனத்திடம் ஒப்படைக்கவில்லை. இதையடுத்து அவர் வாங்கிய சொத்துக்களை விற்க இடைக்கால தடையுத்தரவு பெற்றுள்ளது அந்த நிறுவனம். 
இவர்கள் ஓடிய விஷயம் ஜோடிகளின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்கள் தேடிப்போனது காவல்துறையினரிடம்! அவ்வளவுதான்! ஓடிய காதல் ஜோடிகள் ஓசூர் போலீஸாரிடம் மாட்டிக்கொள்ளவே, உலகம் அறியாத அவர்கள்(!) அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு ‘டிஸிப்ளின் கவுன்சிலிங்’ உரிய முறையில் தரப்பட்டு, புத்தி புகட்டப்பட்டு, கல்வியில் ஆர்வம் ஏற்படுத்தப்பட்டது. சரியான நேரத்தில், சரியான அறிவுரைகளால், தள்ளாடித் தடுமாறிப்போன அந்த மாணவ மாணவியின் வாழ்க்கை தடம்மாறிப் போகாமல் தடுக்கப்பட்டது!
மேலும் இருபது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செல்போன் தேவையே இல்லை. செல்போன் மெஸேஜ்களால் மாணவர்களின் தவறான ஆர்வம் தூண்டப்படுகிறது. இப்போதெல்லாம் செல்போனிலேயே நீலப்படங்கள் அப்பட்டமாகக் காண்பிக்கப்படுகிறது. பிக்சர் மெஸேஜ்கள் வேகமாகப் பரிமாறப்படுகின்றன.பள்ளி மாணவர்களுக்கு லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வாங்கித் தரப்படுவது எல்லாவற்றையும்விட அபாயமானது. அதில் நீலப்பட சி.டி.க்களைப் போட்டு பார்த்துவிடும் வசதி உண்டு. டி.வி. பார்க்கக்கூடாது என்றில்லை. ஆனால் டி.வி. பார்க்க நேர அளவு அவசியம். ஆணோ, பெண்ணோ, ‘ஸ்டடி ஹவர்ஸில்’ அவர்களைக் கவனிப்பது முக்கியம். இவை எல்லாவற்றையும்விட, பள்ளிகள் இருக்கும் ஏரியா பெட்டிக்கடைகளில் ‘ட்ரக்ஸ்’ விற்பனை தடை செய்யப்பட வேண்டும். என்னிடம் கவுன்சிலிங் வருபவர்களை நான் கேன்ஸர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று நோயாளிகள் படும் அவஸ்தைகளை காண்பிப்பதால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார். 
புகார் கொடுத்துவிட்டு வந்த தலைமையாசிரியர் சரஸ்வதியை சந்தித்தோம்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்... பத்து வயதுக்குள் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள். 240 வாக்காளர்கள். இப்போதுதான் தார்ரோடு அறிமுகமாகிறது. திறந்திருக்கும் வீடுகளை விட, திண்டுக்கல் பூட்டை போட்டு பூட்டியிருந்த வீடுகளே அதிகம்.
‘‘நல்லாதாங்க சொல்லிக்-கொடுத்தாங்க இந்த ஸ்கூல்ல. எங்க புள்ளைங்க கூட ஆறு வருடதுக்கு முன்னாடி இங்கதான் படிச்சது. இப்போ பத்தாம் வகுப்புல 430 மார்க் வாங்கியிருக்கு. இந்த ஊர்ல இருந்த மக்கள்ல பலபேரு வேலை இல்லேன்னு வட மதுரை, திண்டுக்கல், சென்னைன்னு போயிட்டாங்க. இந்த ஊருக்கு ஒரு மினி பஸ் வசதி கூட இல்ல. ஒரு பெட்டிக்கடை இருக்கான்னு பாருங்க. வயித்து வலி, தல வலின்னாக்கூட ஒரு மாத்திரை வாங்க முடியாது. இங்கே இருக்கறவங்க எல்லோரும் ஒவ்வொரு குடும்பமா காலி பண்ணி டவுன் பக்கம் போயிக்கிட்டு இருக்காங்க. அதனாலதான் இந்த ஊர் ஸ்கூல்ல படிக்க ஆளில்லை’’ என்றார் பழனியம்மாள்.
பதவிகளைப் பெறுவதற்கு விமானம் ஏறும் முதல்வர் மீனவர் பிரச்சனைக்கு கடிதம் மட்டும் எழுதி கடமையை முடித்து விட்டார். இது தொடர்கதையாகி விடக்கூடாது.
Chennai: The Chennai Metropolitan Development Authority (CMDA) and various local bodies in and around the city have identified 5,000 new cases of building violations in the Chennai metropolitan area over the last three years.According to a report submitted by the CMDA,these are cases reported after the cutoff date of July 27,2007,when the state first promulgated an ordinance to protect all buildings a staggering 1.7 lakh where the violations were noticed from being pulled down.
அந்த டி.எஸ்.பி. வேறு யாருமில்லை. சமீபத்தில் ஓன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி, சிக்கிக் கொண்ட நாமக்கல் டி.எஸ்.பி. சீனிவாசன்தான்.
மறுபடியும் ஒன்றரை லட்சத்தை ஜூலை 10&ந் தேதி கேட்டிருக்காரு. அதுக்கு பிறகுதான் ஷேக் குரூப் எங்ககிட்ட புகார் கொடுத்தாங்க. ஷேக்கின் நண்பர் சண்முகம் கூடவே நாங்களும் போனோம். சண்முகம் பணம் கொடுக்கும்போது அதிரடியா டி.எஸ்.பி. வீட்டுல புகுந்து அவரை கைது செஞ்சோம். வீட்டுல பல கோடி பெறுமானமுள்ள டாக்குமெண்ட் கிடைச்சிருக்கு. அத பத்தி எல்லாம் இப்ப சொல்லமுடியாது’’ என்றார்கள்.
இவரைப் பத்தி கேள்விப்பட்ட பல ஒன்றிய, நகர நிர்வாகிகள் தனியாகவே சந்தித்து பதவிக்கு பண பேரம் பேசுவாங்க. அப்படி பல பேரு இவருகிட்ட பணத்தை கொடுத்திட்டு அல்லாடிய கதையும் உண்டு. புரட்சித் தலைவரு இயக்கத்துக்கு துரோகம் செஞ்சவங்களை அவரோட ஆன்மா சும்மா விடாதுன்னு போன வாரந்தான் ஓ.பி.எஸ். நாமக்கல்ல பேசிட்டு போனாரு. ஆன்மா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சி’’ என்றனர் அ.தி.மு.க.வினர்.
ஆனால், தொழிலாளர்களின் தோழன் என கூறிக்கொள்ளும் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொறுப்பாளரே இப்படி ஒரு மோசடியை செய்திருக்கிறார். அதுவும் அரசு அதிகாரி ஒருவரின் பரிபூரண ஆதரவோடு. இந்த ‘கொள்ளை காம்பினேஷனை’ திருச்சி மாவட்ட அழகிய மணவாளம் ஊராட்சி தலைவர் அனந்தராமன் நம்மிடம் விளக்கினார்.
இந்துமதி கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருச்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் இங்கு வந்த 15 நாட்களுக்குப் பிறகு கொடுக்கப்பட்ட செக்குகளில் 95 சதவிகிதம் கிராஸ் செய்யப்படாத செக்குகள்தான். அவருக்கு வேண்டப்பட்ட, கமிஷன் தரும் தொழிற்சங்கத்தினருக்கு மட்டுமே அப்படி வழங்கியுள்ளார். இந்த அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் இவர் வழங்கிய சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள 358 செக்குகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது. இதனால் மாதாமாதம் சுமார் ரூ.28 ஆயிரம் வங்கிக்கு அலுவலகம் தண்டத்தொகையை செலுத்தி வருகிறது. 



இமெயில்
பிரதி
வலைப்பூக்கள்
digg
del.icio.us





மருத்துவ, பொறியியல் சீட் கவுன்சிலிங் நடப்பதால் இரண்டு வாரங்களாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பரபரப்பில் இருக்கிறது.
பிடிபட்ட திருவேங்கடம் போலீஸ் விசாரணையில், ‘‘நாங்கள் தரும் மதிப்பெண் பட்டியல் ஒரிஜினல். நீங்கள் வித்தியாசம் காணமுடியாது. ஏற்கனவே எங்கள் சான்றிதழ் பெற்றவர்கள் இன்று இந்தியா மற்றும் வெளி-நாடுகளில் டாக்டர்களாகவும், இன்ஜினியர்-களாகவும் வேலை பார்த்து வருகின்றனர். இன்னும் பலர் அரசுப் பணியில் இருந்து வருகின்றனர். பலர் ராணுவத்தில் பணியில் உள்ளனர். இதுவரை அதுபோல எந்தப் பிரச்னையும் வரவில்லை. தமிழகம் முழுவதும் ஒவ்வொருவர் மூலம் ஆட்களை பிடித்து என்னை வந்து சந்திப்பார்கள். நாங்கள் உடனே சான்றிதழ் வழங்க மாட்டோம். எங்களுக்கு நம்பிக்கை வந்தால்தான் சான்றிதழ் அளிப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.
மலைப் பகுதிகளில் ஆங்காங்கே தீ எரிந்து புகைந்து-கொண்டிருந்தது. அவற்றை நம்மிடம் காட்டிய ஒரு ஜே.சி.பி. டிரைவர் பேசத் தொடங்கினார்.
கல்வராயன் மலையில இருக்கிற பெரும்பாலான கிராமங்களில் வனத்தை அழிச்சி விவசாய நிலமா மாத்தற அட்டூழியம் நடக்குது. மலையில அங்கங்கே புகையுற காரணம் இப்ப புரியுதா?’’ எனக் கேட்ட அந்த டிரைவர், ‘‘வனத்துறை அதிகாரிகளோட தொடர்பு வச்சிருக்கற சிலர்தான் இப்படி காட்டை அழிக்கிறாங்க. இதனால தேக்கு, வேம்பு, கருங்காலி போன்ற மரங்களும் பல மூலிகை செடிகளும் நாசமாகுது. வனத்தை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, இப்படி அரசாங்க சொத்த அபகரிக்கிற காரியத்துக்கு துணை போறாங்க. அப்பப்போ என்னை மாதிரி ஆளுங்களையும் மடக்கி பணம் பிடுங்குறாங்க’’ என்று அதிர்ச்சியாக முடித்தார்.
நேர்மையான வனத்துறை அதிகாரிகள் சிலரை மிகுந்த சிரமத்திற்கிடையே அடையாளம் கண்டு பேசிய போது ‘‘இந்த மலைப் பகுதி மட்டுமில்லை... கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன் மலை என எல்லா இடங்களிலும் இப்படி வனத்தை அழித்து விவசாய நிலமாக மாற்றும் விபரீதம் நடந்துவருகிறது. கிராம முக்கியஸ்தர்களாக இருப்பவர்கள்தான் இப்படி ஈடுபடுகிறார்கள். அவர்களில் சிலரை நாங்கள் பிடித்துச் சென்றாலும், சில எம்.எல்.ஏ.க்கள், உயரதிகாரிகள் எல்லாம் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? வனங்களை நிலத்துக்காக இப்படி அழிப்பதால்தான் காட்டு விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருகின்றன. இப்படி வனத்தை அழிப்பது நமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் துரோகம்’’ என்றனர் கவலையாய்.



