![]() |
ஜெர்மனி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில், கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதற்காக, போப் பெனிடிக்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜெர்மனி, அயர்லாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் கத்தோலிக்க பாதிரியார்கள், பல ஆண்டுகளாக சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துள்ளனர். இது தொடர்பாக வாடிகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட்டுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக, அயர்லாந்தில் இந்த புகார்கள் அதிகம் காணப்பட்டது. அயர்லாந்து நாட்டின் சார்பில், இது குறித்து ஒரு ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஒரு பாதிரியார் நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களுடன் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொரு பாதிரியார், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சிறுவர்களுடன் உறவு கொள்வதை, 25 ஆண்டுகளாக செய்து வந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.
போப் பெனிடிக்ட், ஜெர்மனியில் உள்ள முனிச் நகர பிஷப்பாக, 1977ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அவர், பிஷப்பாக இருந்த கால கட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.எனவே, போப் பெனிடிக்ட் இச்சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜெர்மனி பார்லிமென்ட் கீழ் சபையின் துணைத் தலைவர் உல்ப்கேங் தியர்ஸ், பெனிடிக்ட்டை சந்தித்து கோரினார்.
நாளுக்கு நாள் பாதிரியார்கள் மீதான புகார்கள் அதிகரித்து வந்ததால் இதற்கு தீர்வு காண்பதற்காக கடந்த வாரம் போப் பெனிடிக்ட் வாடிகன் தேவாலயத்தின் உயர்மட்ட நிருவாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பாதிரியார்களின் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தேவாலய நிர்வாகிகளுக்கும் அவர் சமீபத்தில் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். போப் தனது கடிதத்தில் குறிப்பிடுகையில், பாதிரியார்கள் தாங்கள் செய்த தவறான செயலை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த செயல்கள் உங்கள் மதிப்பின் தரத்தை தாழ்த்தக்கூடியது. இந்த தகாத செயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். உங்களுக்கு நேர்ந்த இந்த துயரம் குறித்து வெட்கமும் வேதனையும் அடைகிறோம். அயர்லாந்து நாட்டு பாதிரியார்கள் செய்த துரோகச் செயல் குறித்து விசாரிக்கப்படும். அயர்லாந்து மக்கள், தேவாலயங்கள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.போப்பின் இந்த எட்டு பக்க கடிதத்தால் மற்ற நாட்டு கத்தோலிக்கர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அயர்லாந்து நாட்டு சம்பவங்களைத் தான் போப் கண்டித்திருக்கிறார். அனைத்து நாடுகளுக்கும் இவரது மன்னிப்பு கடிதம் பொருந்தவில்லை என, அமெரிக்க கத்தோலிக்கர்கள் தெரிவித்துள்ளனர். தவறு செய்த பாதிரியார்களை பதவி விலக வற்புறுத்தும்படி போப் இந்த கடிதத்தில் தெரிவிக்காததற்கு சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.



Benedict XVI met the head of the Irish Catholic church, Cardinal Sean Brady, at the Vatican to discuss a response to the Murphy report on clerical sex abuse. Photograph: Alessandra Tarantino/AP



சிறுவர்களுடன் பாதிரியார்கள் தகாத உறவு: போப் தலைகுனிவு!
வாடிகன், மார்ச் 18-_ அமெரிக்கா, அய்ரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக அனைத்து தேவாலய பாதிரியார்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளதாக போப் பெனிடிக்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களிடம் தகாத உறவு வைத்துக் கொள்வதாக நூற்றுக்கணக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், வாடிகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட் வருத்தமடைந்துள்ளார்.
போப் பெனிடிக்ட் ஜெர்மனியில் பிறந்தவர். முனிச் நகர பிஷப்பாக 77ஆம் ஆண்டு முதல் 81ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். ஜெர்மனியில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் செக்ஸ் வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த புகார்களுக்கு தீர்வு காண்பது குறித்து வாடிகன் நகரில் போப் பெனிடிக்ட் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.
சிறுவர்களிடம் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் வந்த தேவாலயங்-களுக்கு அவர் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளார். இந்த கடிதம் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கேட்பதாகவும், இந்த விஷயத்தால் ஏற்பட்ட மனப்பாதிப்பை அமைதிப்படுத்த உதவும் வகையில் அமையும் என்று கோடிட்டு காட்டினார். இதற்கிடையே அயர்லாந்தைச் சேர்ந்த கத்தோ-லிக்க தலைவர்கள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர். அயர்லாந்தில் தந்தை பிரன்டன் ஸ்மித் என்பவர் இக்குற்றச்சாற்றிற்குஅதிகம் ஆளானவர். அவர் வெளிப்படையாக, என்னால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று கூறினார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் மலை போல வந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.
இன்றைய நிலையில், ஜெர்மன் தேவாலயங்களில் உள்ள பாதிரியார்கள் மீதான சிறுவர் பாலியல் புகார்கள் ஏராளமாக வாடிகனில் வந்து குவிந்திருப்பதாகவும், அவற்றை பரிசீலிப்பதில் பத்து பேர் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.