கொடைக்கானலில் கொலை வழக்கில் போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்
கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள கவுஞ்சி கிராமத்தில் பலசரக்குக் கடை நடத்தி வரும் பாலகிருஷ்ணன் மனைவி வீரலட்சுமி கடந்த 18 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள கவுஞ்சி கிராமத்தில் பலசரக்குக் கடை நடத்தி வரும் பாலகிருஷ்ணன் மனைவி வீரலட்சுமி கடந்த 18 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த ஊரில் உள்ள ஒரு தேவாலயத்தில் போதகராகப் பணியாற்றி வரும் தங்கராஜ் என்பவரின் மகன் பிரகாஷ் மற்றும் இவரது நண்பர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் நகைக்காகவும் பணத்திற்காகவும் வீரலட்சுமியை கொலை செய்ததாக தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தையும் மீட்டனர். 
இந்நிலையில் கொலையாளி போதகரின் மகன் என்பதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பிரகாஷின் வீட்டையும் அவரது உறவினரின் வீட்டையும் அடித்து நொறுக்கியதோடு போதகரான அவரது தகப்பனார் நடத்தி வரும் தேவாலயத்தையும் அடித்து நொறுக்கினர். மேலும் ஒன்று கூடிய பொதுமக்கள் இந்த கொலைக்கு மது போதையே காரணம் என்பதால் அந்த கிராமத்தில் அனுமதி இல்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்து வரும் அதிமுக கிளைச் செயலாளர் கிருஷ்ணனை கைது செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தனர். மேலும் அவர் இவர் சட்ட விரோதமாக நடத்தி வரும் மதுபானக் கடையை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவாலயம் மற்றும் போதகரின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் மலைக் கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/villagers-ransack-church-kodaikanal-231561.html








v







































v

















































(திருநெல்வேலி) பாளையங்கோட்டையில் CSI சபை குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு ஒருவருடம் முடியப்போகிறது. தலை முடியெடுக்கவேண்டும் அதற்காக நாங்கள் சொந்தக்காரர்களையும் உடன் அழைத்துக்கொண்டு குடும்பமாக வேளாங்கண்ணி சென்று குழந்தைக்கு தலை மொட்டையடித்துவிட்டு வரும் வழியில் சகோ.தினகரன் உண்டாக்கிய காருண்யா வளாகத்திலுள்ளபெதஸ்தா குளமும் கண்டுவிட்டு அந்த குளத்தில் காணிக்கைகளையும் போட்டுவிட்டு திரும்பபோகிறோம் என்று எழுதி புறப்படும் தேதியை குறிப்பிட்டு எங்கள் பிரயாணத்தை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிக்கும்படி எனக்கு கடிதம் எழுதினார்கள். உடனே நான் பதில் எழுதினேன். நீங்கள் பல வருடமாக ஜாமக்காரன் வாசிக்கும் என் வாசக குடும்பமாகும். அதனால் உங்கள் பிரயாணத்தில் ஆபத்து நேரிடாமல் சுகமாக வந்துசேர மட்டும் ஜெபிப்பேன். ஆனால் குழந்தைக்கு செய்யும் மொட்டைக்காக ஜெபிக்கமாட்டேன். இத்தனை வருடங்களாக ஜாமக்காரனை வாசிக்கும் குடும்பத்தினராக இருந்து இந்த முட்டாள்தனமானமொட்டை அடிக்கும் செய்கையை குறித்து தெளிவில்லாமல் போனதென்ன? மொட்டையடிக்க லோக்கலில்முடிவெட்டுபவர்கள் இல்லையா? உங்களுக்கும் இந்துமத மக்களுக்கும், கத்தோலிக்க சபை மக்களுக்கும், திருப்பதி-பழனி போகும் மக்களுக்கும் ஒருவித்தியாசமும் இல்லாமல் போனதே! உங்கள் செயலுக்காக வெட்கப்படுகிறேன் என்று எழுதினேன்.




