New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளும், மனுதர்மமும் இரு வேறு நூல்கள் -கி. வீரமணி

Guru

Status: Offline
Posts: 18595
Date:
திருக்குறளும், மனுதர்மமும் இரு வேறு நூல்கள் -கி. வீரமணி
Permalink  
 
"திருக்குறளும், மனுதர்மமும் இரு வேறு நூல்கள்! இரு வேறு பண்பாடு! இரு வேறு நாகரிகம்!"

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இராஜபாளையம் திருவள்ளுவர்  மன்றத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் இலக்கிய ஆய்வுரை!

y12.jpg

வில், "ஆரியத்தை எதிர்த்து எழுதப்பட்டதுதான் திருக்குறள்"  என்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தரவுகளோடு ஆய்வுரை நிகழ்த்தினார்.

ராஜபாளையம் ரயில் நிலையம் அருகில் தென்காசி செல்லும் சாலையிலுள்ள திருவள்ளுவர் மன்றத்தின் சார்பில் 53ஆம் ஆண்டுவிழா செல்வநாயகம் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி சரியாக  (நேற்று 18.2.2018) மாலை 6.30 மணிக்குத் தொடங்கியது. நிகழ்ச்சியில் மேனாள் நீதியரசர் மாண்பமை நடராசன் தலைமை ஏற்றார். திருவள்ளுவர் மன்றத் தலைவர் புலவர் முத்தரசு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். 

வாழ்வியல் வள்ளுவம்

தனது ஆய்வுரையைத் தொடங்கும்முன் திருக்குறளில் ஆன்ற புலமை வாய்ந்தவர்களும், பக்தர்களும், பொது மக்களும் கூடியிருந்த அவையாகையால், "நான் ஒரு பகுத்தறிவுவாதி, எதையும் அறிவியல் மனப்பான்மையுடன் அணுகக் கூடியவன்" என்று முன்னோட்டமாகக் கூறி, "இது யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல. எங்கள் கத்தி, கசாப்புக் கடை கத்தியல்ல, அறுவை சிகிச்சை மருத்துவரின் கத்தி" என்று கூறி கூடியிருந்தவர்களை தன்னுடைய உரைக்கு தயார் செய்து விட்டுத் தொடங்கினார்.

"வாழ்வியல் வள்ளுவம்" என்ற தலைப்பைத் தந்திருக் கிறார்கள். வள்ளுவம் என்று சொன்னாலே வாழ்வியல் தானே!" என்று சொல்லிவிட்டு, "மிகவும் சிக்கனமாக வார்த்தை களைப் பயன்படுத்திய  வள்ளுவர்தான் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று எழுதினார். அது மட்டுமல்ல "எப்பொருள் எத்தன்மைத்தாயின்" என்று எழுதினார். என்றைக்கும் பின்பற்றத்தக்க இவற்றை 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினார் என்பதுதான் சிறப்பு" என்றதும் அரங்கம் கை தட்டல்களால் அதிர்ந்தது.

பரிமேலழகரின் தந்திரம்

மேலும் அவர், பரிமேலழகர் உரையை ஒரு பிடி பிடித்தார். "அப்படி எப்பொருள் யார் யார் வாய் என்று சொன்ன வள்ளுவரின் குறளுக்கு 1700 ஆண்டுகளுக்குப் பிறகு உரை எழுதிய பரிமேலழகர் தந்திரமாக ஆரியப் பண்பாட்டைப் புகுத்தினார். என்று கூறிவிட்டு  திருக்குறள் என்பது ஆரியப் பண்பாட்டை எதிர்த்து எழுதப்பட்டது என்பதற்கு. அசல் மனுதர்மம் நூலில் உள்ளவற்றையும் திருக்குறளையும் ஒப்பிட் டுக் காட்டி விட்டு, "உலகப் பொது நூலாம் திருக்குறளும், ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுதர்மமும் இரு வேறு நூல்கள்! இரு வேறு பண்பாடு! இரு வேறு நாகரிகம்! என்று அடுக்கியதும் அரங்கத்தினர் அதை ஆமோதிப்பதுபோல கரவொலி எழுப்பினர்.

குறள் வளர்த்த தந்தை பெரியார்!

தொடர்ந்து பேசிய தமிழர் தலைவர் "1949ஆம் ஆண்டு தந்தை பெரியார் குறள், வள்ளுவர் நெறி விளக்க மாநாடு நடத்தி புலவர்களின் அலமாரிகளில் இருந்த திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்ந்தவர் தந்தை பெரியார் தான்" என்றார். ஜி.யு. போப், மருத்துவர் ஆல்பர்ட், ஸ்வெட்சர்,  லாசரஸ் போன்றோர் "திருக்குறளின் பெருமையை உணர்ந்த அளவுக்கு, நம் மக்கள் உணராத நிலையில் தந்தை பெரியாரின் பணி எப்படிப்பட்டது என்பதை எண்ணிப் பாருங்கள்" என்று கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டி விட்டார்.

மேலும் தந்தை பெரியாருக்குப் பிடித்த "குடிசெய் வார்க் கில்லை பருவம்" என்ற குறளையும், விதிக் கோட்பாட்டை மறுக்கின்ற 'ஊழையும் உப்பக்கம் காண்" என்ற குறளையும் சொல்லி நம் நாட்டுக்கும், நம் மக்களுக்கும் இரு கண்கள் போல இருப்பது திருக்குறள்தான் என்று தந்தை பெரியார் சொன்னதைச் சொல்லிவிட்டு மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய "வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந் தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி" என்பதையும் சுட்டிக்காட்டி திராவிடர் பண்பாட்டையும், ஆரிய பண்பாட்டையும் வேறு வேறு என்பதை நிறுவினார். இறுதியாக, "அறிவுக்கும், வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக இருக்கும் திருக்குறளை கசடறக் கற்க வேண்டும். ஆகவே. ஜாதியைப் பரப்புகின்ற புராணங்களையும், இதிகாசங்களையும் புறம்தள்ளி, திருக்குறளை ஆதரியுங்கள்" என்று கூறி நிறைவு செய்தார்.

முன்னதாக திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் புலவர் முத்தரசு அவர்கள், திருக்குறளின் அருமை பெருமைகளை நல்ல வண்ணம் எழுத்துரைத்து, தமிழர் அனைவரும் ஒன்று சேர்ந்தால் பகைவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று பேசி அனைவரையும் வரவேற்று அமர்ந்தார்.

தொடர்ந்து மேனாள் நீதியரசர் நடராஜன் அவர்கள், இந்திய குற்றவியல் சட்ட நெறிமுறைகளை திருக்குறளோடு ஒப்புமைப்படுத்தி பல்வேறு ஆதாரங்களைத் தந்து தலைமை உரை ஆற்றி அமர்ந்தார்.

"திருக்குறளும், மனுதர்மமும் இரு வேறு நூல்கள்! இரு வேறு பண்பாடு! இரு வேறு நாகரிகம்!"

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இராஜபாளையம் திருவள்ளுவர்  மன்றத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் இலக்கிய ஆய்வுரை!

y12.jpg

தமிழுக்கு மரியாதை

தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படப் போவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. தமிழர் தலைவர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். பாடல் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே, "நாம் யாரும் தியானம் செய்யவில்லையல்லவா?" என்று தமிழர் தலைவர் மேடையில் இருந்தவர்களைப் பார்த்து கேட்டதும், புரிந்து கொண்ட அரங்கத்தினர் அரங்கம் அதிர சிரித்தனர். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

நினைவுப் பகிர்வுகள்

தமிழர் தலைவர் தங்கியிருந்த விடுதியில் அவரைக் காண்பதற்காக திமுக, மதிமுக உள்ளூர் பிரமுகர்கள் ஏராளமானோர் வருகை தந்து தமிழர் தலைவருக்கு புத்தகங்களைப் பரிசளித்து மகிழ்ந்தனர். தமிழர் தலைவர் அவர்களும் புத்தகங்களின் அருமையை தேவையைக் குறித்து பேசி மகிழ்ந்தார். உள்ளூர் பிரமுகர்கள் தந்தை பெரியாருடனான தங்கள் நினைவுகளை தமிழர் தலைவருடன் பகிர்ந்து கொண்டனர். காலை தொடங்கி, மாலை நிகழ்ச்சிக்கு புறப்படும் வரை இந்த சந்திப்புகள் ஓயாமல் தொடர்ந்தன. இந்நிகழ்வை விருதுநகர்  மாவட்டத் தலைவர் திருப்பதி மிக அருமையாக ஒழுங்கு செய்திருந்தார்.

இராஜபாளையம் பிப்.19 இராஜபாளையம் திருவள்ளுவர் மன்றத்தில் நடைபெற்ற  53ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருவிழாவில், "ஆரியத்தை எதிர்த்து எழுதப்பட்டதுதான் திருக்குறள்"  என்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தரவுகளோடு ஆய்வுரை நிகழ்த்தினார்.

ராஜபாளையம் ரயில் நிலையம் அருகில் தென்காசி செல்லும் சாலையிலுள்ள திருவள்ளுவர் மன்றத்தின் சார்பில் 53ஆம் ஆண்டுவிழா செல்வநாயகம் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி சரியாக  (நேற்று 18.2.2018) மாலை 6.30 மணிக்குத் தொடங்கியது. நிகழ்ச்சியில் மேனாள் நீதியரசர் மாண்பமை நடராசன் தலைமை ஏற்றார். திருவள் ளுவர் மன்றத் தலைவர் புலவர் முத்தரசு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தமிழர் தலைவரின் ஆய்வுரைக் குப்பின் மன்றத்தின் செய லாளர் அருணாச்சலம் நன்றி கூறினார்.
வாழ்வியல் வள்ளுவம்

தமிழர் தலைவர் தனது ஆய்வுரையைத் தொடங்கும்முன் திருக்குறளில் ஆன்ற புலமை வாய்ந்தவர்களும், பக்தர்களும், பொது மக்களும் கூடியிருந்த அவையாகையால், "நான் ஒரு பகுத்தறிவுவாதி, எதையும் அறிவியல் மனப்பான்மையுடன் அணுகக் கூடியவன்" என்று முன்னோட்டமாகக் கூறி, "இது யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல. எங்கள் கத்தி, கசாப்புக் கடை கத்தியல்ல, அறுவை சிகிச்சை மருத்துவரின் கத்தி" என்று கூறி கூடியிருந்தவர்களை தன்னுடைய உரைக்கு தயார் செய்து விட்டுத் தொடங்கினார்.

y13.jpg

திருவள்ளுவர் மன்றத்திற்கு இயக்க நூல்களை 
தமிழர் தலைவர் நன்கொடையாக வழங்கினார்

"வாழ்வியல் வள்ளுவம்" என்ற தலைப்பைத் தந்திருக் கிறார்கள். வள்ளுவம் என்று சொன்னாலே வாழ்வியல் தானே!" என்று சொல்லிவிட்டு, "மிகவும் சிக்கனமாக வார்த்தை களைப் பயன்படுத்திய  வள்ளுவர்தான் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று எழுதினார். அது மட்டுமல்ல "எப்பொருள் எத்தன்மைத்தாயின்" என்று எழுதினார். என்றைக்கும் பின்பற்றத்தக்க இவற்றை 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினார் என்பதுதான் சிறப்பு" என்றதும் அரங்கம் கை தட்டல்களால் அதிர்ந்தது.

பரிமேலழகரின் தந்திரம்

மேலும் அவர், பரிமேலழகர் உரையை ஒரு பிடி பிடித்தார். "அப்படி எப்பொருள் யார் யார் வாய் என்று சொன்ன வள்ளுவரின் குறளுக்கு 1700 ஆண்டுகளுக்குப் பிறகு உரை எழுதிய பரிமேலழகர் தந்திரமாக ஆரியப் பண்பாட்டைப் புகுத்தினார். என்று கூறிவிட்டு  திருக்குறள் என்பது ஆரியப் பண்பாட்டை எதிர்த்து எழுதப்பட்டது என்பதற்கு. அசல் மனுதர்மம் நூலில் உள்ளவற்றையும் திருக்குறளையும் ஒப்பிட் டுக் காட்டி விட்டு, "உலகப் பொது நூலாம் திருக்குறளும், ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுதர்மமும் இரு வேறு நூல்கள்! இரு வேறு பண்பாடு! இரு வேறு நாகரிகம்! என்று அடுக்கியதும் அரங்கத்தினர் அதை ஆமோதிப்பதுபோல கரவொலி எழுப்பினர்.

குறள் வளர்த்த தந்தை பெரியார்!

தொடர்ந்து பேசிய தமிழர் தலைவர் "1949ஆம் ஆண்டு தந்தை பெரியார் குறள், வள்ளுவர் நெறி விளக்க மாநாடு நடத்தி புலவர்களின் அலமாரிகளில் இருந்த திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்ந்தவர் தந்தை பெரியார் தான்" என்றார். ஜி.யு. போப், மருத்துவர் ஆல்பர்ட், ஸ்வெட்சர்,  லாசரஸ் போன்றோர் "திருக்குறளின் பெருமையை உணர்ந்த அளவுக்கு, நம் மக்கள் உணராத நிலையில் தந்தை பெரியாரின் பணி எப்படிப்பட்டது என்பதை எண்ணிப் பாருங்கள்" என்று கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டி விட்டார்.

மேலும் தந்தை பெரியாருக்குப் பிடித்த "குடிசெய் வார்க் கில்லை பருவம்" என்ற குறளையும், விதிக் கோட்பாட்டை மறுக்கின்ற 'ஊழையும் உப்பக்கம் காண்" என்ற குறளையும் சொல்லி நம் நாட்டுக்கும், நம் மக்களுக்கும் இரு கண்கள் போல இருப்பது திருக்குறள்தான் என்று தந்தை பெரியார் சொன்னதைச் சொல்லிவிட்டு மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய "வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந் தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி" என்பதையும் சுட்டிக்காட்டி திராவிடர் பண்பாட்டையும், ஆரிய பண்பாட்டையும் வேறு வேறு என்பதை நிறுவினார். இறுதியாக, "அறிவுக்கும், வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக இருக்கும் திருக்குறளை கசடறக் கற்க வேண்டும். ஆகவே. ஜாதியைப் பரப்புகின்ற புராணங்களையும், இதிகாசங்களையும் புறம்தள்ளி, திருக்குறளை ஆதரியுங்கள்" என்று கூறி நிறைவு செய்தார்.

முன்னதாக திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் புலவர் முத்தரசு அவர்கள், திருக்குறளின் அருமை பெருமைகளை நல்ல வண்ணம் எழுத்துரைத்து, தமிழர் அனைவரும் ஒன்று சேர்ந்தால் பகைவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று பேசி அனைவரையும் வரவேற்று அமர்ந்தார்.

தொடர்ந்து மேனாள் நீதியரசர் நடராஜன் அவர்கள், இந்திய குற்றவியல் சட்ட நெறிமுறைகளை திருக்குறளோடு ஒப்புமைப்படுத்தி பல்வேறு ஆதாரங்களைத் தந்து தலைமை உரை ஆற்றி அமர்ந்தார்.

கலந்து கொண்டவர்கள்

மோகனா வீரமணி, பொதுச் செயலாளர் ஜெயக்குமார், தென் மாவட்ட பிரச்சாரக் குழுச் செயலாளர் எடிசன்ராஜா, அமைப்புச் செயலாளர் மதுரை செல்வம், பேராசிரியர்

நம். சீனிவாசன், பெரியார் வீர விளையாட்டுக் குழுத் தலைவர் பா. சுப்பிரமணியம், விருதுநகர் மாவட்டத் தலைவர்  திருப்பதி, செயலாளர் ஆதவன், பொதுக்குழு உறுப்பினர் வானவில் மணி, பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் பகீரதன், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் நல்லதம்பி, மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா. கோவிந்தன், மதுரை முருகேசன் மண்டல செயலாளர் ம. பவுன்ராஜா, இராஜபாளையம் நகரத் தலைவர் சிவக்குமார், செயலாளர் இரா. பாண்டிமுருகன், கழகச் சொற்பொழிவாளர் காரைக்குடி என்னாரெசு பிராட்லா, சிவகாசி நகரச் செயலாளர் நரசிம்மராஜ், சிவகாசி நகர அமைப்பாளர் கண்ணன், திமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி, தி.மு.க. நகரத் துணைச் செயலாளர் சரவணன், மதிமுக நகரச் செயலாளர் வி.எஸ்.ராஜா, மதிமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மதியழகன், நிழற்படக் கலைஞர் சிவகுமார், பெரியார் வலைக்காட்சி உடுமலை வடிவேல், சுதன் மற்றும் திருவள்ளுவர் மன்ற பொறுப்பாளர்கள், பொது மக்கள்-- Edited by Admin on Tuesday 20th of February 2018 06:31:34 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard