New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஓத்து


Guru

Status: Offline
Posts: 18404
Date:
ஓத்து
Permalink  
 


 

ஓத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 

ஓத்து என்பது இலக்கண நூல்களில் அமைந்து கிடக்கும் பாகுபாடுகளில் ஒன்று. ஓரினப்பட்ட செய்திகளை ஒருமிக்கச் சொல்வது ஓத்து. நூலின் படிவடுக்குகளாகத் தொல்காப்பியம் சூத்திரம், ஓத்து, படலம்பிண்டம் என்னும் நான்கினைக் குறிப்பிடும்போது இதனைத் தெளிவுபடுத்துகிறது. [1]

நன்னூல் நூலின் படியடுக்குகளைக் குறிப்பிடும்போது வெறுமனே 'ஓத்து' எனக் குறிப்பிடுகிறது. [2] தவல்காப்பிய இலக்கண நூலில் இந்த 'ஓத்து' என்னும் சொல்லை 'இயல்' என்னும் சொல்லால் வழங்கிவருகின்றனர். நன்னூல் குறிப்பிடும் 'படலம்' என்னும் சொல்லும் 'அதிகாரம்' என்று வழங்கப்படுகிறது.

ஓத்து என்னும் சொல்லுக்கு இயல் [3] என்று பொருள் கூறியுள்ளனர்.

ஓதப்படும் வேதப் பாடல்[தொகு]
  • திருக்குறள் ஓத்து என்னும் சொல்லை பார்ப்பான் ஓதும் மந்திரத்தைக் குறிப்பதாக உள்ளது. [4]
  • தொல்காப்பியம் இதனை முன்மொழிந்துள்ளது. [5]
  • பாடப்படுவது 'பாட்டு', கூட்டப்படுவது கூட்டு [6] என்பது போல, ஓதப்படுவதை 'ஓத்து' என்பது தமிழ்நெறி.
பிற நூல்கள் தரும் விளக்கம்[தொகு]
  • ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை [7]
  • ஓத்தின் சாலை [8]
  • ஓத்துஉடை அந்தணர்க்கு [9]
  • இன்னா, ஓத்து இலாப் பார்ப்பான் உரை. [10]
  • அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே [11]
  • கொல்லானேல்.-பல்லவர் ஓத்தினால் என்ன குறை? [12]
  • மாய உயிர்க்கு ஊனம் என்று ஊனம் தீர்ந்தவர் ஓத்து கூறும் 5 நெறிகள் - ஆர்வம், செற்றம், கதம், உலோபம், மானம் [13]
  • ஓத்தும் ஒழுக்கமும் உடையார் சென்றால் இழிவு உண்டாக்கும் இடங்கள் 5 - கூத்து, விழா, திருமண நிகழ்ச்சி, கொலைக்களம், போர்முனை [14]
  • ஓத்து வினையால் செயலாற்ற முடியும் [15]

அடிக்குறிப்பு[தொகு]

  1. Jump up 'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,
    இன மொழி கிளந்த ஓத்தினானும்,
    பொது மொழி கிளந்த படலத்தானும்,
    மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று
    ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470)
  2. Jump up

    நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு
    பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
    நால்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
    ஐ இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு
    எண் நான்கு உத்தியின் ஓத்துப் படலம்
    என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
    விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே (நன்னூல் 4)

  3. Jump up நன்னூல் காண்டிகை உரை
  4. Jump up மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான்
    பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (திருக்குறள்)
  5. Jump up உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான (தொல்காப்பியம் 3-33)
  6. Jump up கூட்டுப்பொறியல்
  7. Jump up சிலப்பதிகாரம் 15-70
  8. Jump up தீர்த்தக் கரையும், தேவர் கோட்டமும், ஓத்தின் சாலையும், ஒருங்குடன் நின்று, (சிலப்பதிகாரம் 22-28)
  9. Jump up மணிமேகலை 13-25
  10. Jump up இன்னா நாற்பது 21
  11. Jump up இனியவை நாற்பது 7
  12. Jump up சிறுபஞ்சமூலம் 82
  13. Jump up சிறுபஞ்சமூலம் 61
  14. Jump up சிறுபஞ்சமூலம் 62
  15. Jump up ஓத்தான் வினை ஆம்; (சிறுபஞ்சமூலம் 72)


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard