சரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை”ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ஐ.ஏ.எஸ் ஈடுபட்டுள்ளாரா?
மகாபலிபுரம் கடற்கரையிலிருந்து சிற்பங்கள் டி.டி.டி.சிஹோட்டலுக்கு வந்தது: திரு இறை அன்பு, ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிறகு, சுற்றுலாத்துறை இயக்குநரராக 1999 ஜுன் முதல் 1999 நவம்பர் வரை 2007 ஜனவரி முதல் 2010 செப்டம்பர் வரை பணியில் இருந்திருக்கிறார். தமிழ்நாடு டூரிஸம் டெவலப்மென்ட் கார்புரேஷனுக்கு சொந்தமாக மகாபலிபுரத்தில் பல இடங்கள் இருக்கின்றன போலும். இப்பொழுதுள்ள ஹோடல்-ரிசார்ட் முதலைப் பண்ணை தாண்டியவுடன், இடது பக்கத்தில் விஸ்தாரமான இடத்தில், கடற்கரையை ஒட்டியபடி உள்ளது. TTDCக்கு தலைவராக இருந்தபோது, மகாபலிபுரத்தில், கடற்கரைக்கு அருகில் இருந்த இடத்தை, ஒரு தனியார் கம்பெனிக்கு குத்தகை விடப்பட்டதாம். அங்கு பல கற்சிற்பங்கள் இருந்தன. அப்படியென்றால், அச்சிற்பங்கள் ஏற்கெனவே வடிக்கப்பட்டிருந்தவை என்றாகிறது. இப்பொழுதுள்ள இடம் பெரிதாக இருந்ததால், அங்கிருந்த சிற்பங்களை இங்கு எடுத்து வந்தனராம். யார் இந்த இறை அன்பு?
மார்க்ஸிய சித்தாந்த மாணவராக இருந்த இறை அன்புஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனது: வெங்கடாசலம் இறை அன்பு[1]ஆரம்ப காலங்களில் மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாராம். அவரே குறிப்பிட்டுள்ளது[2], “மார்க்சியம் குறித்தும், இலக்கியம்குறித்தும் நிறைய கற்றுக்கொள்ள விரிவான களம் அமைந்தது. அப்போது நாங்கள் இந்தியாவில் நிச்சயம் புரட்சி வந்துவிடுமென்றுதிடமாக நம்பினோம். ஆனால் அது சாத்தியமே இல்லை என்பதுஇப்போது புரிகிறது”. தனது பெயரைப் பற்றிக் குறிப்பிடும் போது, “தமிழ் மறுமலர்ச்சி மாநிலத்தில் தீவிரமாக நடந்து கொண்டிருந்தகாலம் என்பதால் என் பெயரும் என் சகோதர சகோதரிகளைப்போல தமிழ்ப் பெயராகவே இருந்தது. என்னைச் சந்திக்கின்றபலரும் இது இயற்பெயரா? புனைப்பெயரா? என்று கேட்கும்போதெல்லாம் காரணப் பெயராக ஆக்க முயற்சி செய்கிறேன்என்கிற பதிலையே நான் தருவதுண்டு”, என்கிறார்[3].
டி.டி.டி.சி ஹோட்டலில் சிற்ப பூங்கா அமைக்கப் பட்டது(டிசம்பர் 2009): மகாபலிபுரத்தில், கடற்கரையில் இருந்த சிற்பங்கள் இங்கு கொண்டுவரபட்டு, அவற்றை வைத்துக் கொண்டு தான், “சிற்பங்கள் பூங்கா” அங்கு அமைக்கப்பட்டது. இதற்கான எல்லாவற்றையும் – தொடக்கத்திற்கான கரு-வடிவமைத்தல், சிற்பங்களை வைத்தல் இறை அன்பே செய்துள்ளார்[4]. அதில் தமிழகத்தின் தொன்மையினை எடுத்துக் காட்டும் வகையில் பல சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாதவியின் நாட்டிய முறைகள் பற்றிய சிற்பங்கள் உள்ளன. கம்பி, தோல், காற்று முதலிய வாத்தியங்களின் சிற்பங்கள் உள்ளன. இவ்வாறு கலாச்சாரம் முதலியவற்றை எடுத்துக் காட்டுவதுடன், சமயத்தலைவர்களின் சிற்பங்களும் அதில் உள்ளன. அவற்றுள் உள்ளது செயின்ட் தாமஸ் ஆகும்[5]. அது 2009ம் ஆண்டில் கிறிஸ்துமஸ் நாளில் – 25-12-2009 அன்று இவரால் திறந்து வைக்கப்பட்டது.
செயின்ட் தாமஸ் சிலை இருப்பது வினோதமாக இருக்கிறது: மற்ற சிலைகளை பார்க்கும் போது, எப்படி திடீரென்று நடுவில் தாமஸ் சிலை வந்தது, என்று பார்வையாளர்களுக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது. இருப்பினும் சுற்றுலா என்ற பெயரில் உள்ள இணைதளங்கள், இதனை குறிப்பிட்டு வருகின்றன[6]. யுவான் சுவாங் சிலைக்கு எதிராக தாமஸ் சிலை உள்ளது. அதன் கீழ், “தமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் தாமஸ் என்ற மனிதன் இருந்தானா, இல்லையா; போன்ற கருத்துகள் உள்ளன. ஏசுவே சரித்திர ரீதியில் இல்லை என்ற அளவுக்கு, இன்று மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அந்நிலையில், தாமஸ் இருந்தது பற்றியும் கேள்வி எழுந்துள்ளது. அப்படியிருக்கும் போது, “தமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்” என்றால், வேடிக்கையாகத்தான் இருக்கிறது. என்ன தொண்டு செய்தார் என்றால், என்ன பதில் வரும்? தெய்வநாயகம் போன்றோரின் கட்டுக்கதைகளுக்கு இணங்க, தாமஸ், திருவள்ளுவருக்கு பைபிள் சொல்லி கொடுத்தார், அதை வைத்து தான், திருக்குறள் எழுதினார் என்பதை “தொண்டு” என்பார்களா தெரியவில்லை.
இறை அன்பு, முத்தைய்யா தொடர்பு: ஆகஸ்ட் 2009ல் எஸ். முத்தைய்யா என்பவரின் “மெட்ராஸ் ரிடிஸ்கவர்ட்” என்று “தி ஹிந்து”வில் எழுதி வந்ததை, தமிழில் மொழி பெயர்த்து, புத்தகமாக வெளியிட்ட போது, அவ்விழாவில், தமிழக இணைதள பல்கலைகழகத்தின் முதல்வர் குழந்தைசுவாமி, பத்ரி சேஷாத்ரி, சி. வி, கார்த்திக் நாராயணன், வெ. இறை அன்பு மற்றும் எஸ். முத்தைய்யா முதலியோர் பங்கு கொண்டனர்[7]. அப்புத்தகத்தை வெளியிட்டது, நியூ ஹொரைஸான் பதிப்பகத்தின் தலைவர் பத்ரி செஷாத்ரி ஆகும்.
அப்படியென்றால், முத்தைய்யா, தாமஸ் கட்டுக்கதையைப் பற்றி எழுதியுள்ளது எல்லாம் அதில் சேர்க்கப்பட்டிருக்கும். பத்ரி செஷாத்ரி, பொதுவாக வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர் போல ஊடகங்கள் காட்டப்பட்டு வருகிறது. டிவி-விவாதங்களிலும் அவர் அவ்வாறே கருதப்பட்டு வர்கிறார். பிறகு, அவர் எப்படி தாமஸ் கட்டுக்கதைக்கு துணை போனார் என்று தெரியவில்லை. வழக்கறிஞர் போல, வியாபார ரீதியில் முத்தைய்யா புத்தகத்தை வெளியிட்டேன் என்றால், ஒன்றும் சொல்ல முடியாது. வினவு[8]போன்ற இணைதளங்கள் இவரை முதலாளி என்றெல்லாம் விமர்சித்துள்ளன[9]. வினவு பாரபட்சம் கொண்ட இணைதளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ். முத்தையாவும், தாமஸ் கட்டுக்கதையும்: முத்தைய்யா எப்பொழுதுமே தாமஸ் கட்டுக்கதையைப் பற்றி எழுதுவதில் பேரார்வம் கொண்டுள்ளவர். யாராவது அவர் எழுவது தவறு என்றாலும் விடமாட்டார். திரும்ப-திரும்ப அக்கட்டுக்கதையை பலவிதங்களில் எழுதிக் கொண்டே இருப்பார்[10]. ஈஸ்வர் சரண் என்பவர், அதை எடுத்துக் காட்டியபோது, “தி ஹிந்து” கண்டுகொள்ளவில்லை[11], ஆனால், முத்தையாவே, அதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். அக்கட்டுக்கதையினை இன்று சொல்வதினால் எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை என்று தனது பொய்களை அவிழ்த்து விட்டார்[12]. ஜனவரி 7, 2004 “தி ஹிந்துவில்” அது வெளிவந்துள்ளது. இந்நாள், கிழக்கத்தைய ஆசார கிருத்துவர்களுக்கு கிருஸ்துமஸ் ஆகும். ஆக, இவர் கிருஸ்துமஸ் அன்று கட்டுக்கதையினை எழுதுவது, இறை அன்பு தாமஸ் சிற்பத்தை சேர்த்து, ஐந்தாண்டுகள் கழித்து கிருஸ்துமஸ் அன்றே சிற்பப் பூங்காவைத் திறந்து வைப்பது முதலியனவெல்லாம், “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா” அல்லது பரிசுத்த ஆவியின் திருவிளையாடலா அல்லது, இவ்விருவரின் தீர்மானித்த விசுவாசமான செயல்களா என்று செக்யூலரிஸ இந்தியாவில் அப்பாவி இந்தியர்கள் திகைக்கத்தான் வேண்டியுள்ளது.
சரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை”ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ஐ.ஏ.எஸ் ஈடுபட்டுள்ளாரா?: வெங்கடாசலம் இறை அன்பு பொறுத்த வரையிலும், சிவில் சர்வீசஸ் பரீட்சை எல்லாம் எழுதி, உயந்திருப்பதால், அவருக்கு இந்திய சரித்திரம் நன்றகவே தெரிந்திருக்கும். வின்சென்ட் ஸ்மித் தாமஸ் பற்றி சொன்னதெல்லாம் கூட நிச்சயமாகத் தெரிந்திருக்கும். எனவே, அவரது தலைமையில், “சிற்பங்கள் பூங்காவில்” தாமஸ் சிலை இடம் பெற்றது, நிச்சயமாக அவருடைய ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்காது. அப்படியென்றால், அவர் ஏன் அச்சிற்பத்தை அங்கு நுழைத்தார், அதனின் உள்நோக்கம் என்ன, கட்டுக்கதையினை ஏன் சரித்திரம் போன்று உள்ளே சொருக முடிவு செய்தார் போன்ற கேள்விகள் எழுகின்றன.
© வேதபிரகாஷ்
11-10-2015
[1] http://indiatoday.intoday.in/story/venkatachalam-irai-anbu/1/105623.html
[2] http://www.iraianbu.in/index.php?option=com_content&view=article&id=66&Itemid=54
[3] http://www.iraianbu.in/index.php?option=com_content&view=article&id=66&Itemid=54
[4] This sculpture park was initiated and housed by Dr.V.Irai Anbu,IAS.,former Secretary to Tourism Department,Govt.of Tamilnadu and opened to tourists on 25.12.2009.The sculptures installed in the park has unique theme carried which are: Great Saint and Poet Thiruvalluvar,Poet Bharathi,St.Thomas,Yuvans … ………………….http://www.thehindu.com/arts/heritage-in-a-park/article353225.ece
[5] ………………….religious personalities (such as St. Thomas who came to Tamil Nadu, and Karaikkal Ammaiyar) https://www.youtube.com/watch?v=tXk3MstjvQI
[6] http://www.firstpost.com/topic/person/pimp-c-mamallapuram-sculpture-park-part2-tamilnadu-video-xCDc0fLVfMA-21942-1.html
[7] Bringing up the finale as it were on the last day of what was a hectic Madras Week (August 2009) was the Madras Book Club, with the launch at the Taj Connemara of the Tamil translation of S Muthiah’s Madras Rediscovered. There were some sterling speeches by Prof. V.C. Kulandaiswamy, chairman, Tamil Virtual University, who launched the book, and Dr V. Irai Anbu, secretary (tourism and culture), Govt of Tamil Nadu. But the honours must go to Badri Seshadri, publisher, New Horizon Media, for bringing out the 600-page book at an economical price, C.V. Karthik Narayanan for translating the book and, of course, Muthiah himself for having taken the initiative, I’m sure, of making it all happen. With this offering, prospects of the city’s history being read by many more people are bright indeed.
http://sashinair.blogspot.in/2009/08/madras-week-madras-rediscovered-in.html
[8] http://www.vinavu.com/2013/07/30/badris-poverty-budget/
[9] http://www.vinavu.com/2015/03/27/muhammed-yunus-athiyaman-badri-to-answer/
[10]http://www.thehindu.com/mp/2004/01/07/stories/2004010700090300.htm
[11] https://ishwarsharan.wordpress.com/parts-2-to-9/chennais-own-holocaust-deniers-ishwar-sharan/
[12] SEVERAL YEARS ago, there was an American (?) turned Hindu ascetic who was never happy whenever I wrote of Thomas Dydimus, the Apostle of India. In fact, he wrote a book, I recall, devoting a considerable and angry part of it to my unhistorical approach to the legend of Thomas in particular. I don’t know whether he’s still around, but if he is, I wish he’d realise that articles of faith, like his own, are not disputable, calling, instead, for tolerance. And that a little unhistoric storytelling, like today’s, does no one any harm. The Hindu, January.7, 2004.
10:52 பிப இல் ஒக்ரோபர் 12, 2015 | மறுமொழி
தன் அகம்பாவத்திற்கு தீனி போடும் எந்த விஷயத்தையும் இறையன்பு விட்டு வைத்ததில்லை. அவன் எது செய்தாலும் அது அவனது அகம்பாவத்திற்கு தீனி அளிப்பதாகவே இருந்து வருவதை கல்லூரி நாட்களில் இருந்தே கவனித்து வந்திருக்கிறேன் .
கவியரத்திற்கு கவிதை எழுதுவான்
டான்ஸ் ஆடுவான்
முனைவர்; பட்டம் பெறுவான். இந்திய ஆட்சி பணி தேர்வும் எழுதுவான். ஆனால் அவன் அகம்பாவம் தீனி கேட்பதை நிறுத்தியதில்லை.
அவன் என் வகுப்பு தோழன்தான்.
தனது பெயர் வருவதற்கு எதுவும் செய்வான் இறையன்பு
11:13 பிப இல் ஒக்ரோபர் 12, 2015 | மறுமொழி
உங்கள் தகவலுக்கு நன்றி.
ஒவ்வொரு மனிதனுக்கும், இன்னொரு பக்கம் இருக்கும் என்பார்கள்.
ஆனால், இங்கு “தாமஸ் கட்டுக்கதை” கோஷ்டியில் இறை அன்பு இருப்பது தான் விசித்திரமாக உள்ளது!
6:23 முப இல் ஒக்ரோபர் 20, 2015
He could be a ‘””crypto-christian”, as many such people used to be!
6:22 முப இல் ஒக்ரோபர் 20, 2015 | மறுமொழி
The nexus is interesting.
R. Muthaiah has been so unhappy with Ishwara Sharan, as could be noted from his outbursts in his writings.
Badri Seshadiri has been so enthusiastic with his mosaic type of interests, thus, publishing Muthaiah”s book as well as AMEN!
Here, the roping of Irai Anbu has been amazing and intriguing.
Thus, as long as, their interests are taken care of, they do not mind in supporting Christian cause, making them ‘”Secular” in Indian context!