New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீயா நானா நிகழ்ச்சி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
நீயா நானா நிகழ்ச்சி
Permalink  
 


நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன். (லூக்கா 12 : 49, 51, 52, 53)

>> நன்றி - வாட்ஸப் செங்கோட்டை ஶ்ரீராம்

போன வாரத்தின் நீயா நானா நிகழ்ச்சியைப் பாருங்கன்னு யுடியுப் லிங்க் அனுப்பினார்கள் நண்பர்கள் சிலர்....

பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே என் அம்மா, ஏதுடா? எல்லாம் சும்மா வெளையாட்டுக்கு பேசர்துகளா? என்று கேட்டார்.

இருக்கலாம்மா... அப்படித்தான் நினைக்கறேன் என்றேன்.

காரணம்...கல்யாணத்துக்கு நிற்கும் நம் நாட்டின் இளம்பெண்களை இவ்வளவு கேவலமாக யாராலும் சித்திரிக்க முடியாது.

அண்ணனுக்கும் தங்கைக்கும் சண்டை மூட்டிவிட முடியாது. சகோதர பாசத்தை கொச்சைப் படுத்த முடியாது. சகோதரிகளுக்குள்ளே பிரிவினை உண்டாக்க முடியாது...!

எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைந்து கொண்டிருப்பது... வீடு, பணம், நகை, புடவை, அப்ளையன்ஸஸ், நுகர்பொருள்கள் இவற்றிலான மோகம்..! இதையெல்லாம் கொடுப்பார்கள் என்றுதான் நான் அம்மா அப்பா பார்த்து வைக்கும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்.. இல்லாவிட்டால்... என்று ஒரு பெண் சொல்கிறாள். இதையெல்லாம் கேட்கும் மனநிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோமா?

இந்த நிகழ்ச்சியில் இத்தகைய பெண்களின் ஆசைகளை, கண்டிஷன்களை அவர்களின் வாயால் கேட்ட எந்த ஆண்மகனும் அவர்களைத் திருமணம் செய்யத் தயங்குவான் என்பது ஒருபுறமிருக்க... அந்தப் பெற்றோர்களின் நிலையை யோசித்துப் பார்த்தால்...! கவலைதான் மிஞ்சுகிறது!

பெண்களே... இந்த நிகழ்ச்சியில் பேசிய பேச்சுகளும் ஜோடனைகளும் நிச்சயம் உங்களுடைய கருத்தோட்டங்கள் இல்லை என்பதை என் உள்மனம் சொல்கிறது. எவனோ ஒரு பொறம்போக்கு நாதாரியின் நயவஞ்சகப் பேச்சை நீங்கள் உங்கள் முகங்களின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்றே நான் நம்புகிறேன்.

படுகேஷுவலாக, எண்பது சவரன், 25 லட்சம், ஐம்பது லட்சம் செலவில் கல்யாணம், குடும்பச் சொத்து அப்படி இப்படி என்று நீங்கள் இந்த உலகத்துக்கே உங்கள் சொத்து பத்துகளை கணக்கிட்டுக் காட்டிக் கொடுத்திருக்கிறீர்கள்! இதன் விளைவுகளை நீங்கள் பின்னாளில் அனுபவிக்கப் போகிறீர்கள்...

இது ஒருபுறம் இருந்தாலும்...

ஒரு பவுன் நகையை சம்பாதிக்க, நேர்மையான வழியில் வியாபாரத்திலோ, மாசச் சம்பளமோ, கூலியோ பெறும் உங்கள் தகப்பன் எவ்வளவு கஷ்டப் படுவான் என்பதை உணருங்கள்.

உங்கள் ஆசைகளையெல்லாம் ஈடு செய்ய வேண்டுமானால், நிச்சயமாக அவர் நேர்மையற்ற வழியில்தான் சம்பாதித்தாக வேண்டும். லஞ்சம் ஊழல் குறித்து தெருவுக்கு கொடிபிடிக்க வரும் நீங்கள், உங்கள் தகப்பன் அதே ஊழலில் திளைக்க நீங்களேதான் காரணமாகிறீர்கள் என்பதை உணர்வீர்களா?

எப்போது ஆடம்பரமும், தேவைக்கு மீறிய படாடோபங்களும் உங்களிடம் வெளிப்படுகிறதோ, அப்போதே அது உங்களை மட்டுமல்ல, உங்களைச் சார்ந்தோரையும் படுகுழியில் விழ வைக்கிறது என்பதை உணருங்கள்...

வடநாட்டுப் பெண்கள் பலர் சென்னையில் கல்லூரிகளில் படிக்கிறார்கள். அவர்களின் நட்பு வட்டத்தில் இருந்து கொண்டு, அவர்களின் படாடோபங்களைப் போல், பழக்க வழக்கங்களைப் போல் தாமும் இருக்க வேண்டும் என்று வழிதவறிப் போகும் தமிழ்நாட்டுப் பெண்களைக் காணும்போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு மிதமிஞ்சிய பணம் இருப்பதால்தான் இங்கே காசுகளைக் கொட்டிக் கொடுத்து படிக்க வைக்கிறார்கள். ஆனால், உங்கள் வீட்டில், உங்கள் தகப்பனின் உள்மனதை நீங்கள் நிச்சயம் புரிந்து கொள்ளவே மாட்டீர்கள்!

தகப்பன் சரியில்லாத, சம்பாதிக்கத் திராணியற்ற வீடுகளில், சகோதரன்கள்தான் தங்களை தியாகியாக்கி உடன்பிறப்புகளை கரையேற்றுகிறார்கள். அத்தகைய தியாக உள்ளங்களையே நான் முன்னிறுத்துகிறேன்... இந்த சமூகத்துக்கு! அவர்களே நம் சமூகத்தின் அடையாளங்கள்! உங்களைப் போல், சொத்து எனக்கு, எல்லாம் எனக்கு என்று ஒவ்வொரு அண்ணன்களும் தம்பிகளும் கணக்குப் போட்டால்... நீங்கள் நடுத்தெருவில் சுற்றியலைய வேண்டியிருக்கும்! அத்தகைய கொடூர விதையை உங்களின் பேச்சுக்கள் அவர்களின் மனத்தில் விதைத்திருக்கும் விளைவை நீங்கள் பிற்காலத்தில் உணர்வீர்கள்!

என்னவோ மனத்தில் தோன்றியது.... ஆனால்....

சற்று நேரத்திலேயே அயர்ச்சி ஏற்பட்டு, டே போதும்டா.. இதப் போய் பார்த்து நேரத்த வீணாக்கிட்டு... என்று அம்மா சொன்னதால், அப்படியே பாதியிலேயே நிறுத்தி விட்டேன்...

விஜய் டிவி நிகழ்ச்சிகளை பெரும்பாலும் நான் பார்ப்பதில்லை. குறிப்பாக நீயா நானா போன்ற சமூக விரோத, சமுதாய விரோத,தேச விரோத ஜோடனை நிகழ்ச்சிகளை அறவே தவிர்த்துவிடுவேன்.

நிச்சயமாக இதுபோன்ற தேசவிரோத மீடியாக்களின் இத்தகைய போக்குக்கு ஒரு முடிவு காலம் விரைவில் வரும்... !

பின்குறிப்பு:
1.
சுய உணர்வுடன், ஓர் ஊடகக்காரனாக, கையறு நிலையில், நான் எழுதியது... 
அன்பன், 
செங்கோட்டை ஸ்ரீராம்

2.
விஜய் டிவி மூலம், நீயா நானா நிகழ்ச்சியின் மூலம், கிறிஸ்துவ மிஷனரீஸ் ஆண்டனியை கையாளாக வைத்துப் பரப்ப எண்ணும் கிறிஸ்துவச் செய்தி...

//பூமியின்மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள். சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.
எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
(மத்தேயு 10 : 34, 35)//

3. 
விஜய் டிவியின் நிகழ்ச்சி மூலம் மிஷனரீஸ் பரப்ப எண்ணும் கிறிஸ்துவ மதச் செய்தி... 
செய்தியாளர் : ஆண்டனி
துணைச் செய்தியாளர்: நெஞ்சார்ந்த வணக்கம் கோபிநாத்

பைபிள் வாசகச் செய்தி:
//நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.
எப்படியெனில், இது முதல் ஒரே வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள், இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள்.
தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோ தமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
(லூக்கா 12 : 49, 51, 52, 53)//



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஸ்டார் டிவியின் தமிழ்ப்பிரிவுதான் விஜய் டிவி;இந்துக்களாகிய நாம் இந்து என்ற உணர்வுடன் வாழாதவரையில் இப்படிப்பட்ட கழிசடை டிவிக்கள் நமது நம்பிக்கைகள்,சம்பிரதாயங்களை இழிவுபடுத்துவது தொடரத்தான் செய்யும்;

என்ன ஒரு வில்லத்தனம்! இந்தக் கேவலமான நிகழ்ச்சியைப் பார்ப்பதை நான் அறவே விட்டுவிட்டேன். அதே போல எல்லா மதங்களும் நல்லதையே போதிக்கின்றன, ஜாதிபேதமற்ற சகோதரத்துவத்தை வளர்க்கின்றன, கருணாமூர்த்தியான ஒரே கடவுளிடம் அழைத்துச் செல்கின்றன என்பது போன்ற பசப்பு வார்த்தைகளையும் நம்பக் கூடாது. எங்கோ பாலைவனத்திலோ அத்வான காட்டிலோ முளைத்த சப்பாத்திக்கள்ளியையும், முள் செடியையும் செழிப்பான பாரத மண்ணில் பயிர் செய்பவர்களின் உள் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் அர்த்தமுள்ள ஹிந்து மதத்தின் அருமையையும் பாரத நாட்டின் கலாசாரப் பெருமையையும், பெரியவர்களிடமும் சான்றோர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமேயன்றி அழுக்குக் கோட்டு மற்றும் பாவாடைதாரிகளின் விஷமப் பிரசாரத்திற்குப் பலியாகக் கூடாது. நான் ஹிந்து, நான் இந்தியன் என்று ஒவ்வொருவரும் கர்வத்துடன் கூற வேண்டும். வாழ்க ஹிந்து மதம்! வெல்க பாரதம்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard