New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மகஇக-வின் அயோக்கியத்தனம் -Paraiyoasai Pathippaham சாகித்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
மகஇக-வின் அயோக்கியத்தனம் -Paraiyoasai Pathippaham சாகித்
Permalink  
 


 

 

என் பெயர் சாகித். வயது 52. என் முகத்தை பல முகநூல் நண்பர்கள் அறிவர். அறியாதவர்களுக்காக என் உருவப் படத்தை இங்கு பகிர்ந்துள்ளேன். இசுலாமிய குடிபிறப்பில் பிறந்து 14 வயதில் நாத்திகனானவன். ஒரு 15 ஆண்டுகளாக மகஇக என்ற கம்யூனிச அமைப்பில் குப்பைக் கொட்டியவன். 10 ரூபாய் புத்தகத்தை விற்க 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு புத்தகத்தை கொண்டு சென்று கொடுத்துவிட்டு வருவேன். ஆமாம். அவர்களாக விரும்பி வாங்கியது சிலரே. மற்றவர்களெல்லாம் முக அறிமுகத்திற்காக வாங்குபவர்கள். புத்தகத்தை எப்பொழுதும் அவர்கள் திறந்துகூட பார்ப்பதில்லை. நானாவது பரவாயில்லை. பணச்செலவு மட்டும்தான் எனக்கு. போலிசிடம் அடி உதை வாங்கி, இராத்திரி பகலா கண்விழித்து அலைந்து, பேரூந்து பேரூந்தா ஏறி இறங்கி புத்தகம் விற்றவர்கள் போஸ்டர் ஒட்டியவர்கள் நிறைய பேர்...... அவர்கள் நிலை? இன்று அயோக்கியர்களா உள்வர்கள்கூட அன்று அப்படித்தான் புத்தகங்களை விற்றார்கள். காரைக்குடி கள்ளழகர் காரைக்குடியிலிருந்து 2 புத்தங்கங்களைக் கொடுப்பதற்காக 52 கிலோ மீட்டர் பயணம் செய்து நம்புதாளைக்கு வருவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அமைப்பு எப்படி வளரந்தது என்று. பலரின் அளப்பரிய தியாகம் நிறைந்தது மகஇக.

நண்பர்களே, இன்று மகஇகவினால் பாதிக்கப்பட்டு இத்தொடரை எழுதத் தொடங்கியுள்ளேன். எனக்கு (அதாவது தனி நபர் ஒருவருக்கு) பாதிப்பு என்றதும் நான் புழுதியை தூற்றிவாரிரைப்பதாக நீங்கள் கருதலாம். மகஇக-வினர்கூட உங்களிடம் அப்படிச் சொல்லலாம். சுயதம்பட்டம் அடிப்பதற்காக இதை எழுதுவதாக கருதலாம். நான், தன் முதுகை தானே சொரிந்துகொண்டு பீற்றுவதாக அவர்கள் உங்களிடம் கூறலாம். நகர முடியாத கட்டத்தில், “சிலர் அப்படி இருந்திருக்கலாம். எங்களிடம் சொன்னால் நடவடிக்கை எடுப்போம். அதற்காக ஒட்டுமொத்த அமைப்பை தூற்றுவது என்னுடைய கயமைத்தனம்” என்றும் அவர்கள் கூறலாம். ஆனால் இது எனது கதைமட்டுமல்ல. அமைப்புகளுக்காக உழைத்தவர்களின் வரலாறு. நிகழ்வுகள் என்னுடைய வாழ்க்கையிலுள்ளதாக இருக்கலாம். ஆனால் இக்கதையின் அடிப்படை, அமைப்புகளுக்காக உழைத்தவர்களின் வரலாறு. இது மொட்டையான பதிவல்ல. இந்தக் கதையுனூடாக அவர்கள் உங்களிம் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டுகள் நிச்சயமாக சொல்லப்படும்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். பதிவுகளை தொடராகத்தான் பதிவிடப் பொகிறேன். முகநூலில் நிமிடத்திற்கு 50 பதிவுகள் விழும் முகநூலின் ஹோம் பக்கத்தில் தொடராக தெரிந்துகொள்ள விம்புபவர்கள் தேடிப்பிடித்து படிப்பது கடினம். எனது டைம்லைன்-க்குச் சென்று தொடராக படிக்கலாம். அதற்கு ஏதுவாக எனது டைம்லைனில் கொஞ்சம் நாளைக்கு நேரடியாக பதிவிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

இப்பதிவைப் பார்த்தும் பல முகநூல் நண்பர்கள் குறிப்பாக மகஇக-விளுள்ளோர் தங்களை என்னுடைய நட்பு வட்டத்திலிருந்து துண்டித்துக்கொள்ளலாம். அதனால் தொடராக தெரிந்துகொள்ள விரும்பினால் எனது நட்பு வட்டத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.

இத்தொடருக்கு ஒரு தலைப்பு வைப்பது நல்லது என்று கருதுகிறேன். என்ன தலைப்பு வைக்கலாம்? அவர்கள் மொழியிலேயே வைப்பது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். அப்படியானால்…….. தலைப்பு “மகஇக-வின் அயோக்கியத்தனம்”



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇக-வின் அயோக்கியத்தனம்: 2
என் அத்தை.. 50 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் செட்டில் ஆனவர். குர்ஷித் என்பவர் அவரின் மகள். குர்ஸித்திற்கு மகன் ஒன்று மகள் ஒன்று. கணவனின் ஒழுங்கின்மையால் கணவருக்கு மறைந்து எனது மறைமுகமான உதவியுடன் எங்களூரில் 15 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது மகன் எனது சிறு தொழிலகத்தில் பணியாற்றினார். மகஇகவிலும் பணியாற்றியவர். அவரது தங்கையை மகஇகவில் ஒருவருக்கு புரட்சிகர திருமணம் செய்துவைத்தார். அந்த புரட்சிகரமான அமைப்பில் ரொம்ப முக்கியமான பொறுப்பில் உள்ள (முக்கியமான பருப்பு இல்ல பொறுப்பு) அந்த புரட்சிகரமான கணவன் செய்த கொடுமை தாங்காமல் அவரது தங்கை பிரிந்து வந்துவிட்டார்.

போலிசு, கோர்ட்டு, கட்டப்பஞ்சாயத்து இப்படி பல சொல்லாடல்களும் விமர்சனங்களும் மகஇகவினரிடமிருந்து கேட்காமல் எவரும் தப்ப முடியாது. அவைகளுக்கான அர்த்தம் என்ன என்று எங்களுக்கு ஏற்பட்ட அவலங்களை விரிவாகப் பார்க்கும்போது எழுதுகிறேன்.

தனிப்பட்ட ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஒட்டுமொத்த அமைப்பையும் பழிசொல்வது முறையா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். தனிப்பட்டதாக மட்டும் இதை கருதியிருந்தால் சட்ட நடவடிக்கைகள், காவல்துறை நடவடிக்கைகள் எனக்கு போதுமானது. ஆனால் அது அப்படியில்லை. காவல்துறை நடவடிக்கையை சில சூழ்நிலை காரமாக தள்ளிவைத்துள்ளேன். அமைப்பு, கட்சி என்பது தலைவர்களை மட்டுமே எப்பொழுதும் குறித்துவருகிறது. அதே நிலைதான் மகஇக-விற்கும். உண்மையில் பாடுபடும் தோழர்களை சேர்த்து சொல்லவில்லை. உண்மையில் அவர்களுக்காகத்தான் எழுதுகிறேன்.

கொஞ்சம் எனது கதை. எனது குடும்பம் இசுலாமிய வெறியுள்ளதாக இல்லாவிட்டாலும் மதத்தில் நல்ல பற்றுள்ளவர்கள். தாத்தா ஒரு ஆலிம். தந்தை ஆலிமாக பட்டம் பெறாவிட்டாலும் ஆலிம் தொழில் செய்தவர். தந்தையிடம்தான் எனது மதக்கல்வி. உடன் பிறந்தாரில் நான் ஒருவன் மட்டும் நாத்திகன். சிறு வயதில் தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல் என்று தவறாமல் கடைபித்தவன். குர்ஆன் ஒதுதல் என்றால் பல சூராக்களை (பல வசனங்களை) மனப்பாடம் செய்து விரைவாக பிழையில்லாமல் ஓதும் திறமை இருந்தது. ஆனால் ஒன்றுக்கும் பொருள் தெரியாது. இந்த தீவிரமான பற்று ஏதோ சொர்க்கத்தையும் அதில் உள்ள சுந்தரிகளையும் குறிவைத்ததல்ல. அவ்வயதில் வயதத்தோரிடம் இருந்த போட்டி, பெருமை, பாராட்டுக்களைத் தவிர வேறு ஒரு சிந்தனையும் இல்லை. 30 நோன்புகளையும் விடாமல் பிடித்தால் அது பெருமைதானே. இன்றும் எல்லா சிறார்களிடம் இந்தப் பெருமைதான் “நான் 30 நோன்புகளையும் பிடித்தேனே” என்று சொல்ல வைக்கிறது. பெரியோர்கள் பலரிடம் நீங்கள், “நான் 30 நோன்பும் பிடிப்பேன் பாய்”என்று பெருமையுடன் சொல்லக் கேட்கலாம்.

இசுலாமிய ஆலிம்கள், அறிவுஜீவிகள், சாதாரண மக்கள் ஆகியோரிடம் உள்ள வெளிப்புற நடவடிக்கைகளும் முரண்பாடுகளும், வெள்ளிக்கிழமை தோறும் சொல்லப்படும் பரப்புரைகளும் ஏதோ ஒருவகையில் என் மனதில் கேள்விகளை எழுப்பிவிட நாத்திகனாகிவிட்டேன். குறிப்பான ஒரேஒரு கதையை இங்கு கூறிவிடுகிறேன். (தொடரும்)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மகஇக-வின் அயோக்கியத்தனம்: 3

 
குர்ஆன் வசனம் 18: 60 முதல் 18: 82 வரை இந்தக் கதையுள்ளது. சுருக்கமா கூறிவிடுகிறேன். இரண்டு கடல்கள் சந்திக்குமிடத்தை அடையும்வரை எவ்வளவு நாளானாலும் நான் பொய்க்கொண்டே இருப்பேன் என்று மூஸாநபி என்பவர் தனது வேலைக்கார வாலிபன் ஒருவருடன் ஒரு பயணம் செய்கிறார். ஓரிடத்தில் ஒரு பாறையின்மேல் இருவரும் கொஞ்சம் நேரம் அமர்ந்துவிட்டு மீண்டும் பயணிக்கின்றனர். கொஞ்சம் தூரம் போனதும் தனது வேலைக்காரரிடம் “அந்த மீன்களை எடு ரொம்ப பசிக்குது, நமது காலை உணவை உண்போம்” என்று மூஸா கூற, “அந்த மீன்கள் இரண்டும் நாம் கற்பாறையில் இருந்தபோது, ஆச்சரியமான விதத்தில் சுரங்கம் அமைத்துக்கொண்டு கடலில் சென்றுவிட்டது. ஷைத்தான் இதனை உங்களிடம் சொல்ல என்னை மறக்கடித்துவிட்டான்” என்று கூறூகிறார்.
என்ன ! புடிச்சி வச்சிருந்த மீன் உயிரோடு இருந்துச்சா? அது எப்படி சுரங்கம் அமைச்சுகிட்டு கடலுக்குச் செல்லும்? என்றெல்லாம் கேட்கக்கூடாது. அல்லாவின் அற்புதம் என்று வந்துவிட்டால் இதெல்லாம் துஜிபி.
மூஸா, உடனே “அந்த இடத்தைத்தான் தேடிவந்தோம்” என்று அவ்விடத்திற்குச் செல்ல அங்கு அடியாரிலும் அடியார் ஒருவரை சந்திக்கிறார். அடியாரிலும் அடியார் என்றால்? அவ்லியா அல்லது நபி என்று வச்சுகுங்க. (நிறைய கேள்விகள் ஒவ்வொரு வரியிலும் உள்ளது. விரித்தால் பூமி தாங்காது. அதனால் அவைகளை தவிர்த்துவிட்டு முக்கியமான செய்திக்குள் மட்டும் செல்வோம்.) அந்த அடியாரிடம், அந்த அடியாருக்குத் தெரிந்த கல்வியை கற்றுக்கொள்ள தானும் அவருடன் வரலாமா என்று கேட்கிறார். ஆனால் அந்த அடியார் “எதைப்பற்றி நீர் முழுமையான ஞானம் பெறவில்லையோ அதன் மீது நீ பொறுமையாக இருக்க சக்திபெறமாட்டாய்” என்று மறுக்கிறார். தாம் எக்காரியத்திலும் அடியாருக்கு மாறுசெய்யமாட்டேன் என்று மூஸா வேண்டிக்கொள்ள ‘சரி வா, நானா சொல்றவரை எதைப்பற்றியும் கேட்கக்கூடாது’ என்று கண்டிஷன் போட்டுவிட்டு இருவரும் பயணமாகிறார்கள்.
கடற்கறையில் ஒரு கப்பல். அதிலுள்ளவர்களுடன் பயணிக்கின்றனர். ஆனால் அந்த அடியார் அந்தக் கப்பலில் ஒரு ஒட்டையை போடுகிறார். “கப்பலில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் அதில் துளையிட்டீர்கள்...? ஒரு கொடுமையான செயலைச் செய்து விட்டீர்களே!” என்று மூஸா கேட்க, “நீ பொறுமையாக இருக்க மாட்டாய் என்று அப்பவே நான் சொல்லலையா, விடுப்பா ஆளை” என்று அடியார் கோபித்துக் கொள்கிறார். “சாரி, சாரி… நான் மறந்துட்டேன். என்னை குற்றம்பிடிக்காதீர்கள்” என்று மூஸா மன்னிப்பு கேட்க கப்பலில் இருந்து இறங்கி பயணம் தொடர்கிறது.
வழியில் சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அச்சிறுவர்களில் ஒருவனை அந்த அடியாரிலும் அடியார் கொன்று போட்டுவிடுகிறார். “அல்லாவே! கொலைக்குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆத்மாவைக் கொலை செய்துவிட்டீர்களே. நிச்சயமாக நீங்கள் ஒரு தகாத காரியத்தை செய்துவிட்டீர்கள்” என்று மூஸா கூற, மறுபடியும் அந்த அடியார் “நீ பொறுமையாக இருக்க மாட்டாய் என்று அப்பவே நான் சொல்லலையா, விடுப்பா ஆளை” என்று மீண்டும் கோபித்துக் கொள்கிறார். “சாரி, சாரி… சாரி…. இனிமே நான் அப்படி செய்தால் என்னை உங்களின் தோழனாக வைத்துக்கொள்ளாதீர்கள்” என்று மூஸா மறுபடியும் மன்னிப்பு கேட்க பயணம் தொடர்கிறது.
ஒரு கிராமத்துக்குச் சென்று கொஞ்சம் சோறு போடுங்கப்பா என்று இருவரும் கேட்கின்றனர். அவ்வூரார் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிடுறாங்க. நம்ம அடியாரிலும் அடியார் அங்கிருந்த ஒரு குட்டிச்சுவரை பூசி மெழுகி கீழே விழாது இருக்குமாறு செப்பனிடுகிறார். மூஸா “ இதற்காவது அவ்வூராரிடம் கொஞ்சம் கூலி வாங்கியிருக்கலாமே” என்று சொல்ல அவ்வடியார் “இந்தா பாரு உனக்கும் எனக்கும் பிரிஞ்சிக்கிற நேரம் வந்துருச்சி. நான் செஞ்சதுக்கான விளக்கத்தை சொல்றேன் கேளு. (நாளை…)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇக-வின் அயோக்கியத்தனம்: 4
மூஸாவின் கதைத் தொடர்ச்சி….
கடலில் வேலை செஞ்சிக்கிட்டிருக்கும் ஏழைகளுக்கு சொந்தமானது. அவுங்களுக்கு பின்னால் ஒரு அரசன் இருக்கிறான். பழுதில்லா கப்பல்களை அவன் புடுங்கிக்கிறான். அதனால் அதனை பழுதாக்கினேன்,
அந்தச் சிறுவனுடைய பெற்றோர்கள் நம்பிக்கையாளராக (ஓரே கடவுள்) இருக்கிறார்கள். இந்தப் பையன் அவர்களை அநியாயத்திலும் நிராகரிப்பிலும் சேர்த்துவிடுவான். அந்தப் பெற்றோர்களுக்கு பரிசுத்தத்தில் அவனைவிட சிறந்ததையும் அன்பினால் நெருக்கமானதையும் பகரமாக்கித் தருவதை நாம் விரும்பினோம். அதனால் அவனைக் கொன்றேன்.
(இப்பெற்றோர்கள் அல்லா மீது நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களுக்கு ஒருவன் பிறந்து நபியாக தேரந்தெடுக்கப்படவிருக்கிறான். இந்தப்பையன் மீது அவர்கள் மிகுந்த பாசத்துடன் இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பையன் அவர்களுடை ஈஈஈஈமானை (அல்லா மீதான நம்பிக்கையை) கெடுத்துவிடுவான். நபி வருவது கெட்டுவிடும். அதனால் கொன்றேன். என்பது இவ்வசனத்தின் விளக்கமாக ஹதீதுகள் உள்ளது.)
இந்தச் சுவர் இரு அனாதை சிறுவர்களுக்குரியது. இந்தச் சிறுவர்களுடை அப்பா சுத்த சன்மார்க்கப்படி நேர்மையாளர். இந்த சுவருக்கு கீழே புதையல் உள்ளது. அதனை அந்தச் சிறுவர்கள் பெரியவர்களானதும் எடுத்துக்கொள்ளும் வகையில் பாதுகாக்க இறைவன் நாடினான். அதனால் அதனைசெப்பனிட்டேன்.
இவைகளை என் விருப்பப்படி செய்யவில்லை. இதுதான் நீ பொறுமையா இருக்க சக்தி பெறாதவைகளின் விளக்கம் என்று சொல்லிவிட்டு பிரிந்துவிடுகிறார்.
ஒருநாள் எனது மூத்த சகோதரர் “உனக்கு இது பற்றி எல்லாம் விளக்கம் தெரிந்துகொள்ள வயது பத்தாது” என்று வற்புறுத்தி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அழைத்துச் சென்றார். அன்று இந்த பரப்புரையைக் கேட்டேன். அப்பொழுதெல்லாம் யாரிடமும் அதிகமாக, தானாக விவாதம் செய்வது கிடையாது. இந்தக் கதையில் ஆயிரமாயிரம் கேள்விகள் உள்ளது. அப்பொழுது எனக்கு எழுந்த கேள்வி இதுதான்; இந்தச்சிறுவனால் அவன் பெற்றோர்கள் வழிகெடுவார்கள் என்பதால் அல்லாவின் திட்டப்படி கொலை செய்வதென்றால் உலக மக்களை எல்லாம் வழிகெடுக்கும் ஷைத்தானை அல்லா கொன்றுவிட்டால் எல்லோரும் சுத்த சன்மாரக்க சுயம்புகளா இருப்பார்களே. ஏன் இதனை அல்லா செய்யவில்லை. சரி… அல்லாவுக்கும் ஷைத்தானுக்கும் ஒரு போட்டி. ஷைத்தான் அல்லாவிடம் “நான் மக்களை உன் வழிநிலிருந்து கெடுப்பேன் இது சத்தியம்” என்று சவால் விடுகிறான். அல்லாவும் “சரி எங்க உன் திறமையை பார்ப்போம். உன் பேச்ச கேட்டா நரகத்துல போடுவேன் என்று மக்களை எச்சரித்து வைக்கிறேன். நீ முடிந்தால் கெடு” என்று இருவருக்கும் போட்டி. அப்படி என்றால் அந்தச் சிறுவனால் அந்தப் பெற்றோர்கள் கெடுகிறார்களா இல்லையா என்று தானே நேர்மைமிக்க ஒருவன் பாரக்க வேண்டும். இப்படி புடிச்சு கொள்வதா இருந்தால் இங்கு யார் கோழைத்தனமாக நடந்து கொள்கிறார்.? ஒரேயடியா ஒரே ஒரு ஷைத்தானை கொன்றுவிட்டால்….. இந்த உலகமே பாவகாரியங்களற்ற உலகமாக மாறிவிடுமே. இந்த கம்யூனிச ஷைத்தான்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் தானே. இன்னும் சொல்லப் போனால் கம்யூனிச ஷைத்தான் தோன்றியே இருக்கமாட்டான். உலக மக்களனைவரும் சுகபோக வாழ்க்கையை வழங்குவோம் என்று கத்திக்கிட்டு திரியமாட்டான்.
கப்பலை அரசன் புடுங்கிக்குவான் என்றால் பையனை கொன்ற மாதிரி அரசனை அல்லவா கொல்ல வேண்டும்? சின்னப்பையனைக் கொல்ல சக்தியுள்ள அல்லாவுக்கு அரசனை ஏன் கொல்ல முடியவில்லை? கருணையுள்ள அல்லா கப்பலை ஓட்டையாக்கினால் எப்படி அது அந்த ஏழைகளுக்கு பயன்படும்? மதம் வர்க்க பாசமுள்ளது என்பதுக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மகஇக-வின் அயோக்கியத்தனம்: 5
 
ஒரு தத்துவம் இல்லாமல் ஒரு அமைப்பு இருக்க முடியாது. ஆனால் தத்துவம் கற்பனையிலிருந்து உதிக்க கூடாது முடியாது. நடைமுறைதான் ஒரு தத்துவத்தின் உரைகல். நடைமுறைக்கு உதவாது என்றாலோ முரணாக இருந்தாலோ அது ஒரு குப்பை. அதுபோல அந்த தத்துவத்தின் இயல்பு நிலையை அதனை கூறும் ஒருவர் கடைபிடிப்பதிலிருந்துதான் கூறக்கேட்பவர் அதனை நம்புவதும் பிறகு அதனை கற்பதும் நடைபெறும். அதுவல்லாது வரட்டுத்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும், கற்கவேண்டும் என்பது அதிகாரத்தின் ஆணவம். நடைமுறைச் செயல்பாடுகள் மட்டுமே மக்களை வழிப்படுத்தும்.
மூஸாவின் கதையை முன்பதிவில் சொல்லியுள்ளேன். அதல் நாம் ஓராயிரம் கேள்விகளை கேட்கலாம். அதற்கு அவர்களும் பதில் சொல்லலாம். ஆனால் ஒரே கேள்வி சிறுவனைக்கொன்று அந்த பெற்றோரை மதவிரோதத்தலிருந்து காக்கவேண்டும் என்றால் ஷைத்தானை கொன்று இந்த உலகையே காத்திடலாமே என்ற கேள்வி நம்மை இந்த தத்துவவாளர்களிடமிருந்தும் தத்துவத்திலுருந்தும் நம்மை அப்புறப்படுத்துறது. நமக்கு எதிராக இவன் இருப்பான் என்று சந்தேகப்பட்டால் போதும். கொல்! விபரீதமான நடைமுறை.
புறநிலை, அகநிலை, போர்த் தந்திரம், செயல் தந்திரம், அமைப்பு, இயக்கம், கழகம் அமைப்பின் வடிவம், சுயவிமர்சனம், சித்தாந்தம், ஜனயாயகம், புதிய ஜனநாயம் மீள்வாசிப்பு, அப்பப்பா… ஏகப்பட்ட சொல்லாடல்கள். மார்க்ஸிய அழகியலாம். இப்படி ஒருகூட்டம். முதலாளி வர்க்க இலக்கியவாதிகளின் விமர்சனத்திற்கு பலியாகாத புரட்சியாளர்கள் இல்லை. அது என்ன அழகியல்? பசியில் வாடுபவனிடம் இப்படி கூறினால்…? வஞ்சிக்கப்படும் வர்கத்தினருக்கு தேவை சொல்லாடல்களும் அழகியலுமா? நடைமுறைச் செயல்பாடுகளா?
நான் சில மாதங்கள் மதுரையில் தங்கி எனது தொழிலை செய்துவந்தேன், சிலர் ஒரு வாடகை வீட்டினை எடுத்து தங்கிவந்தனர். அவர்களுடன் நானும் தங்கிவந்தேன். அங்கு பெத்து என்றழைக்கப்படும் பெத்தபெருமாள் என்ற தோழர் ஒருவர் இருந்தார். முன்னாள்களில் மகஇக-வின் ஆதரவாளராக இருந்துள்ளார். கட்சினுள் இருந்தார இல்லையா என்பதை அவர் கூற மறுத்துவிட்டார். அரசுப் பேரூந்துக் கழகத்தில் ஓட்டுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்று டிவிஎஸ் பள்ளிக்கூடத்தின் பேருந்து ஓட்டுனராக இருந்தார். அவர் ஒருநாள், கம்யூனிசம் அமைப்பு என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது ஒன்றைச் சொன்னார். தோழர் “இரஷ்யாவில் லெனின் தலைமையிலான புரட்சி நடந்து கொண்டிருக்கும்போது ஒரிடத்தில் பாதுகாப்புக்கு நின்ற செம்படை வீரர் ஒருவரிடம் ( இவர் முன்னால் ஜார்படை இராணுவ வீரர். ) ஜார் மன்னனின் விசுவாசி ஒருவர் லெனின் அட்டூழியம் பண்ணுவதாகவும் அவரது கோட்பாடு இயற்கைக்கு புறம்பானதாகவும் இருப்பதாகவும் கூறினாராம். அதற்கு அந்த வீரர் “கோட்பாடு பற்றி எல்லாம் தெரியாது. ஆனால் லெனின் நல்லவர். அவர் எங்களுக்காகப் பாடுபடுகிறார்” என்று கூறினாராம்’--- என்று தோழர் பெத்து கூறினார். அவர் எதற்காக இதைக் கூறினார் என்று தெரியவில்லை. ஆழமாக நானும் கேட்கவில்லை. நானும் இதனை வீரம் விழைந்தது என்றா நாவலில் படித்ததாக நினைவுள்ளது. இங்கு அந்த போர் வீரனை மக்களுக்காக துப்பாக்கி ஏந்தவைத்தது எது? ஆகஸ்ட் புரட்சி நடந்து கொண்டிருக்கும்போது கப்பற்படை தரைப்படை வீர ர்கள், விவாசய சங்கத்தினர், தொழிற்சங்கங்கள் கூட்டம் கூட்டமாக வந்து இணைந்தனர். இவர்களெல்லாம் இணைந்தற்கு காரணம் தத்துவமா? நடைமுறையா? மென்ஷிவிக்குகள் தோல்வியடைந்தற்கு காரணம் தத்துவமா? நடைமுறையா?
ஒரு தத்துவத்தின் ஏக போக உரிமைபெற்றவர்கள், அவர்கள் செய்யும் தகிடுதத்தங்களை கூறினால் புறநிலை, அகநிலை, போர் தந்திரம், செயல் தந்திரம் தனி நபர் செயல்பாடு, ஒட்டுமொத்த அமைப்பையும் குறை சொல்லக்கூடாது, என்று ஏதோதோ சொல்கிறார்கள். அப்படின்னா என்ன என்று தெரியாத எளிமையான தொழிலாளி என்ன புரிந்துகொள்வான்? எப்படி செயல்படுவான்?
“அரசு, தன் ஊழியர்களையும், மக்களையும் தனது ஊழலுக்கு ஏற்ப ஊழல்படுத்துகிறது. ஊழல் சிந்தனையாளராக மாற்றி விட்டது. என்று இந்த அறிவு ஜீவிகள் (ஆமாம் ஜீவிகள்தாம்) கூறுகிறார்கள். காசுவாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் மக்களையும் இப்படித்தான் கூறுகிறார்கள். ஓட்டுக்கு காசு வாங்குவதில் நடைமுறையான இல்பு நிலை ஊழலுக்கு அப்பாற்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் இந்த ஆணவம், அதிகாரம், ஊழல் போன்றவற்றிற்கு பின்னால் என்ன உள்ளது?
எதுவானாலும் நடைமுறைதான் உரைகல். அடுத்த பதிவில் தொடர்வோம்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇக-வின் அயோக்கியத்தனம்: 6
 
எனக்கு 21 வயதிருக்கும். அப்பொழுது புதுவையில் எங்கள் குடும்பம் வசித்துவந்தது. நான் எனது சகோதரருக்கு துணையாக அவரது கடையை கவனித்து வந்தேன். ஒருநாள் நஜீம் என்ற நண்பர் ஒரு புத்தகத்தை கொடுத்து படிக்கச்சொன்னார். புதிய கலாச்சாரம் என்று தலைப்பிடபட்ட புத்தகம். படித்தத்தில் ஓ…நல்ல பத்திரிக்கையாக இருக்கிறதே என்று பிடித்தது. அப்பொழுதெல்லாம் எனக்கு துக்ளக் இதழ் பிடிக்கும். அதன் அரசியல் விமர்சனங்கள் என்னை சிறுவயது முதலே கவர்ந்தது. ஆனால் அரசியலில் எல்லாம் அதிகமான ஈடுபாடு கிடையாது. புதிய கலாச்சாரம் ஆட்சியில் உள்ளோர் ஆட்சியில் இல்லதாவர் என்று வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் விமர்சித்து எழுதியதால் ‘சரியான பத்திரிக்கை’ என்று தொடர்ச்சியாக வாங்கிப்படித்தேன். அப்பொழுது மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ரஷ்யப் புரட்சி என்பதுபற்றி எல்லாம் கொஞ்சமும் தெரியாது. பத்திரிக்கை நேர்மையானதாக தெரிந்தது. பொதுவாக ஒன்றை கடுமையாக விமர்சிக்கும் பத்திரிக்கையை நடுநிலையான பத்திரிக்கை என்று உச்சி முகர்வது எல்லோரிடமும் இருக்கும் ஒரு பண்புதானே.
ஒருநாள் அந்த புத்தகம் விற்பவரை (தோழர் தூயவன்) நஜீம் அறிமுகப்படுத்தினார். ஒரு சோடா கம்பெனியில் சோடா சுற்றுவதும் கடைகளுக்கு கொண்டு சென்று விற்பதும் அவரது பணி. திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ஒரு அனாதை குடும்பத்தை தனது வருமானத்தில் பராமரித்து வந்தார். எப்பொழுதுமே ஒருசில பகுதியைத் தவிர பிற பகுதிகளில் புத்தகம் முழுதாக விற்காது. பாதிக்குமேல் தேங்கும். பு.க.வினர் விற்பனையாகாததை திரும்ப பெறமாட்டார்கள். அதுபோல இவருக்கும் புத்தக பணம் நிலுவை தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருக்கு. ஒரு சில சமயங்களில் நானும் நஜீமும் கொடுத்து உதவுவோம்.
சில மாதங்களுக்குப் பிறகு சேகர் என்ற ஒருவர் தூயவனுடன் வந்தார். பேசினார். நாள் குறிப்பிட்டு தனியாக ஓரிடம் அமர்ந்து பேசினோம். பத்திரிக்கையில் வரும் செய்திகளைப்பற்றி பேசுவோம். ஓரளவு புரிந்தது. பொருளாதாரம் பற்றிய பொதுவுடமை புரிந்தது. பிடித்தது. பிறரிடமும் அது பற்றி பேசுவேன்.
பத்திரிக்கை பணம் நிலுவை பற்றி பேசினோம். “நீங்கள் தேவையில்லாமல் அந்த குடும்பத்தை இழுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் பாக்கி போடுகிறீர்கள்” என்று சேகர் கூறினார். பத்திரிக்கை ரிட்டன் வருவதைப்பற்றி தூயவன் கூறினார். “தனி நபர்களை சந்தித்து விற்கனும் தோழர் என்றார்”. சோடா கம்பெனியின் வேலைப் பழுவை கூறினார். “இந்த குடும்பத்தை வைத்துக்கொண்டிருப்பதால்தான் இப்பிரச்சனை’ என்றார் சேகர். தான் எப்படியாவது அடைத்துவிடுவதாக தூயவன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சில மாதங்கள் எவரும் வரவில்லை. பிறகு இருமுறை இந்திரஜித் என்பவர் வந்தார். கடலூரில் நடந்த ஒரு வகுப்பிற்கு அழைத்துச்சென்றார். அங்கு மோகன் என்பவரையும் ஹோட்டல் தெழில் செய்யும் ஒரு (பெயர் நினைவில்லை) இசுலாமியரையும் அறிமுகப்படுத்தினார். ஒருமுறை கடலூரில் நடந்த மாநாடு ஒன்றிற்கும் சென்றிருந்தேன். தஞ்சையில் நடந்த தமிழ் மக்கள் இசைவிழாவிற்கு வருடம் தோறும் தவறாமல் செல்வேன். ஆனால் அமைப்பு பணிகள் எதுவும் செய்ததில்லை. ஒரே ஒரு முறை இரால் பண்ணை அழிப்பு போராட்டத்திற்கான பிரச்சார பொதுக்கூட்டம் புதுவையில் நடத்த சிலப்பணிகளைச் செய்துள்ளேன்.
சேகர் என்பவர் வந்துகொண்டிருந்தபோது எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதனை அவரிடம் கூறும்போது திருமணம் பற்றி நல்லா யோசனை செய்யச் சொன்னார். புரட்சிப்பணிக்கு தடையாக இருக்கும் என்றார். பொதுவாக உளவுத்துறையினருக்கு ஒருவர் திருமணம் செய்யதுவிட்டால் அவரைக் கண்காணிப்பதிலிருந்து அவர்களுக்கு பாதி பணிச்சுமை குறைந்துவிடுவதாக சொல்வார்களாம். அவரின் மனைவி அந்த பாதி வேலையை செய்துவிடுவார் என்பதாக அவர்கள் சொல்வார்கள் என்றார். எனக்கு அப்பொழுது அதிகமாக ஏதும் புரியவில்லை. அதனால் அதனை பொருட்படுத்தவில்லை. திருமணம் நடந்தது. இரு பிள்ளகளுக்கு தந்தையானேன். ஒருமுறை என் துணைவியாரையும் பிள்ளைகளையும் தமிழ் மக்கள் இசைவிழாவுக்கு அழைத்துச் சென்றுள்ளேன். இப்படியே 6,7 ஆண்டுகள் கழிந்துவிட்டது. பொருளாதாரச் சூழநிலை, குடும்ப சிக்கல் காரணமாக புதுவையிலிருந்து எனது சொந்த ஊர் நம்புதாளைக்கு குடிபெயரந்து விட்டேன். அமைப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதெல்லாம் அதன் பிறகுதான்.
இந்திரஜித் அமைப்பிலிருந்து விலகி பமக-விற்கு சென்றுவிட்டார். மோகன் என்பவர் போலீசிடம் அடி உதை எல்லாம் வாங்கி அமைப்புக்காக பாடுபட்டவர். அவர் திருமணம் செய்து கொஞ்ச நாளில் அமைப்பை விட்டு விலகிவிட்டதாக கூறினார்கள். ஏன் விலகினார் அல்லது விலக்கினார்கள் என்பது தெரியவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன் புரட்சித் தூயவன் இறந்துவிட்டார் என்றும் அதற்கு முன் அவர் அமைப்பைவிட்டு விலக்கப்பட்டுவிட்டார் என்றும் இரண்டு மாதங்களுக்கு முன் கேள்விப்பட்டேன். அமைப்பைவிட்டு நீக்கப்ட்டதற்கு காரணம் அந்த குடும்பம்தானாம்.
மகஇக-விற்காக திருமணம் செய்துகொள்ளமல் பணியாற்றியவர்கள் நிறையபேர். அவர்களில் .பலருக்கு கசப்பான அனுபவங்கள்தான் கிடைத்துள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇக-வின் அயோக்கியத்தனம்: 7
 
நான் மகஇக-வா? என் பகுதியிலுள்ளோர் மகஇக-வா? என்ன இப்படி கேட்கிறீர்கள் என்று கேட்காதீர்கள். நாங்கள் மகஇக இல்லை என்று 6,7 ஆண்டுகள் வேலை செய்தபிறகு அவர்கள் சொல்லிவிட்டார்கள். அதுகூட பரவாயில்லை. எப்படி நீங்கள் மகஇக என்று சொல்லிக்கொள்வீர்கள். மகஇக என்று நோட்டீஸ் அடிப்பீர்கள்? பொதுக்கூட்டம் நடத்துவீரகள்? என்று கேட்டார்கள். அதாவது அப்படி செய்தது தவறு என்று சொல்லிவிட்டார்கள். ஒரு வேடிக்கை என்னவென்றால் துண்டுபிரசுரங்கள் பேனர்கள் அனைத்தும் அவர்கள் எழுதி அவர்கள் அச்சடித்து தந்ததுதான். ஆனால் நீங்கள் எப்படி அப்படிச்செய்வீகள் என்று கேட்டால் என்ன சொல்வது? அவர்களாக நீங்கள் விசாய விடுதலை முன்னணி, புட்சிகர மாணவர் முன்னணி, அல்லது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி என்று எதைச் சொல்கிறார்களோ அதுதான், நமது துண்டு பிரசுரங்களுக்கு தலைப்பாக இருக்கவேண்டும்.
நான் புதுவை விட்டு நம்புதாளைக்குச் சென்ற சில ஆண்டுகளில் நம்புதாளையிலேயே தொழிலைத் தொடங்கினேன். அது அமைப்பு வேலைகள் செய்ய வசதியாக இருந்தது. அப்பொழுது அங்கு இருவர் அமைப்பு தொடர்பில் இருந்தோம். ஒருவர் கொஞ்சம் சமுதாய சிக்கலுக்காக வெளிப்படையாக எந்த வேலையும் செய்யமாட்டார். நான் தன்னந்தனியாக வேலை செய்து அங்கு முதன் முதலாக, தோழர் வேம்பனின் ‘மந்திரமா தந்திரமா’ என்ற நிகழ்ச்சியை எங்களூர் பள்ளிக்கூடத்திலும் ஒரு டென்ட்கொட்டகை (திரையரங்கை) இலவசமாக பெற்றும் மகஇக என்ற தலைப்பில் நடத்தினோம். அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு நாத்திகராக இருந்ததால் பள்ளிக்கூடத்தில் நடத்த அனுமதி தந்தார். திரையரங்கில் நடத்தும்போது. அது பெரும் கலவரத்தில் முடிந்தது. கலவரம் செய்த இந்துக்களுடன் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று சமாதானமாகி வந்தோம். இந்நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்ற காரைக்குடி கள்ளழகர் எஸ்கேப். எல்லோரும் பத்திரமாக ஊர் திரும்பிவிட்டனர். திரையரங்கம் சேதமில்லாது தப்பியது. தாக்கியவர்கள் நோக்கம் எதையும் சேதப்படுத்துவதாக இல்லாததால் தப்பினோம். இல்லையேல் திரையரங்க மெயின் ஸ்பீக்கர் பாக்ஸ்ஸிற்கு மட்டும் பல இலட்சம் இழக்க வேண்டிருந்திருக்கும்.
கலவரத்திற்கு இந்து மத மூடநம்பிக்கைகளை தொடரச்சியாக நடத்தியதும், அதனால் வந்திருந்த இசுலாமிய வாலிபர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து உற்சாக விசிலடித்து இந்து வாலிபர்களை கோவமூட்டியதும்தான் காரணம். இதற்கான விமர்சனம் என்மீது திருப்பப்பட்டது. மதுரை தளபதி “நீங்கள் பகுதி நிலவர்த்தை (இசூலாமியர் பகுதி என்று) சொல்லி அதற்கேற்ப திட்டமிட்டிருக்க வேண்டும் என்றார். எனக்கு இது முதல் அனுபவம். தொடர்ச்சியாக பல இடங்களில் நடத்திவரும் அவர்களல்லவா நிகழ்சி எப்படி நடத்த வேண்டும் என்று திட்டமிடவேண்டும். இது இசுலாமியர் பகுதி என்று அறியாதவர்களா இவர்கள்? வேம்பன் தோழர் தனது தவறை ஏற்றுக்கொண்டார். இரண்டு மத நிகழ்ச்சிகளையும் கலந்து செய்திருக்க வேண்டும் என்று தன் தவறை சொன்னார். (இதன் தொடர்ச்சி நாளை)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇக-வின் அயோக்கியத்தனம்: 8
அதன் பிறகு சில ஆண்டுகள் எந்த பொது நிகழ்ச்சியும் நடத்தவில்லை. நான் ஒரு நாத்திகன் என்றும் இசுலாத்தையும் விமர்சனம் செய்பவனென்றும் அந்த இந்து நண்பர்களுக்கு புரியவைத்து பின்பு பல ஆர்பாட்டங்கள், இரண்டு மூன்று அரங்கக் கூட்டங்கள், இரண்டு பொதுக்கூட்டங்கள் (கலைநிகழ்சியுடன்), மூன்றுநாள் கலைக்குழுவுடன் பல பக்கத்திலுள்ள ஊர்களுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் என்று பல நிகழ்ச்சிகள் நடத்தினோம். அனைத்திற்கும் தலைப்பும் பேனர்களும் மகஇக-தான். பொதுக்கூட்டம் இரண்டில் ஒன்று தொண்டியிலும் மற்றொன்று எஸ்பி பட்டினத்திலும் நடத்தினோம். இரண்டிற்கும் சிறப்பு பேச்சாளர் மகஇகவின் இணைச் செயலாளர் காளியப்பன் அவர்கள்தான். ஆர்பாட்டங்கள் அனைத்தும் தொண்டியில் நடந்தது. ஒரு பொதுச் சொத்து ஆக்கிரமிப்புப் தொடர்பாக துண்டுபிரசுரம் வினியோகித்ததில் கைகலப்பாகி கைதாகி 28 நாள் சிறையில் இருந்தோம். (இது இரண்டாவது நிகழ்வு. இது பற்றி தனியாக பிறகு எழுதுகிறேன்). எல்லாம் மகஇக என்ற தலைப்பில். எது நடந்தாலும் அருகிலுள்ள சிற்றூர்களுக்கெல்லாம் சென்று துண்டு பிரசுரம் வினியோகம் செய்வது வழக்கம். அப்பகுதியினர் பிற கட்சியினர், பிற அமைப்பினைச் சேர்ந்தவர்கள் அறிவு ஜீவிகள் அனைவரும் நாங்கள் மகஇக என்றே அறிவர். எங்கள் பகுதி பொறுப்பாளர் சொல்லிவிட்டார்; நீங்கள் எப்படி மகஇக என்ற அமைப்பு கட்டாமல் மகஇக என்று செயல்படுவீரகள், நீங்கள் தப்பு செய்கிறீர்கள் என்று சொல்லி விட்டார். மகஇக என்பது கலை இலக்கியவாதிகளின் அமைப்பு. அது உங்களுக்குப் பொருந்தாது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்று செயல்படுங்கள் என்றும் சொல்லிவிட்டார். மகஇக_விலுள்ளோர் வல்லாம் கலை இலக்கியத்தில் கரைகண்டவர்கள் போலும். புஜதொமு என்று மட்டும் அமைப்பு கட்டாமல் செயல்படலாமோ? இவைகள் அனைத்தும் புதிய ஜனநாய தொழிலாளர் முன்னணி என்று ஒன்று தொடங்குவதற்கு முன் நடந்தது என்பது குறிப்படத்தகுந்தாகும். நாங்கள் அனைவரும் தன்மையில் தொழிலாளர்கள் இல்லை. விவசாயிகளும் இல்லை. குட்டி முதலாளிகள். அப்படியிருக்க புஜதொமு மட்டும் எப்படி பொருந்தும்? தலைமைக்கு எழுதிக் கேட்கும்படி பொறுப்பாளர் சொல்லிவிட்டார். தலைமை, மதுரை மகஇக தளபதியை அனுப்பினர். அவர் மாவட்ட தலைநகரில் மட்டும்தான் மகஇக அமைப்பு கட்டுவது என்பது எங்கள் விதி. பிற இடங்களில் அமைப்பு கட்ட எங்களுக்கு சக்தி இல்லை என்றார். அப்படி என்றால் நாங்கள் மகஇக அமைப்பு கட்ட அனுமதி இல்லை என்று சொல்கிறீர்களா என்று கேட்டால் “இல்லை எங்களுக்கு இயக்க சக்தி இல்லை. நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள் என்றார். நாங்கள் முடிவு செய்வதென்றால் இராமநாதபுர மாவட்டத்தின் தலைநகரான இராமநாதபுரத்தில் அமைப்பும் இல்லை. அமைப்புக்கு எவரும் இல்லை. தொண்டியில் நாங்கள் நன்றாகவே செயல்பட்டு வருகிறோம். அதனால் தலைநகருக்கு பதிலாக எங்களுக்கு அனுமதி தாருங்கள் என்றுதான் கேட்போம் என்று எங்கள் முடிவைச் சொன்னோம். இல்லை அப்படி ஒரு விதி இல்லை என்றார். அப்படி என்றால் அனுமதி இல்லை என்று சொல்லுங்கள். என்றேன். இல்லை எங்களுக்கு சக்தி இல்லை என்று மறுபடியும் சொன்னார். வேடிக்கையாக இருந்தது. ஒரு தோழர் மட்டும் “சரி விடுங்கள் என்றார்” என்றார். அத்துடன் பேச்சுவாரத்தை முடிந்துவிட்டது. ஆம் நான் மகஇக இல்லை. மாட்ட தலைநகரில் மட்டும்தான் அமைப்பு கட்டுவோம் என்று சொல்லும் ஒரே அமைப்பு மக்கள் கலை இலக்கிய கழகம்_தான். ஒரு சின்ன இடைச்செய்தி; இந்த தொடரை ஒரு தோழர் முகநூலில் பகிர்ந்ததற்கு மகஇக-வில் (ஆமாம் சந்தேகமே இல்லாமல் மகஇகவேதான்) மிகப் பெரிய பொறுப்பிலுள்ள ஒரு இலக்கிய செம்மல் ‘அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரின் பதிவை பகிராதீர்கள்’ என்று அறிவுரை சொல்லி இருக்கிறார். சரிதானே என்கிறீர்களா. சரிதான். ஆனால் அதில் ஒரு வேடிக்கை உள்ளது. அப்படிச் செய்தவரும் அவரால் அமைப்புக்கு திரட்டப்பட்ட ஏறக்குறைய 30 பேர்களும் அமைப்பைவிட்டு விலகிக்கொண்டவர்கள் என்பதுதான் அது. இது பற்றி பொருத்தமான இடத்தில் எழுதுகிறேன்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மகஇக-வின் அயோக்கியத்தனம்: 9
நான் மகஇக இல்லை.
எனக்கு ‘அமைப்பு என்பது பற்றியும் தெரியவில்லை: சித்தாம்பற்றியும் தெரியவில்லை’ என்று செல்வ நாயகன் என்றொருவர் விமர்சித்துள்ளார். ஒரு கட்சி என்றால் அதன் வழிகாட்டுதல்களும், அறிவுரைகளும் இருக்கத்தானே செய்யும். அதனை ஏற்பதும் முறையானதுதானே என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான் நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் சொன்னது என்ன? எங்கள் மீது குற்றச்சாட்டு. அத்தனையும் அவர்கள் வழியாகத்தான் நடந்தது. ஆனால் அது எதுமே தெரியாது போலவும் புதிதாக கண்டுபிடித்தது போலவும் “நீங்கள் எப்படி அப்படிச் செய்யலாம்” என்ற கேள்வி. இது எதைக்காட்டுகிறது? அதிகார மமதையைக் காட்டுகிறது. இந்த அதிகார மமதையே சஹனாஸின் பிரச்சனையிலும் பிரதான பங்கு. அமைப்பில் இந்த போதை வேரூண்றி இருப்பதற்கு வேறு சில வேறு பகுதி எடுத்துக்காட்டுகளையும் பிறகு எழுதுகிறேன். ‘மக்கள் சர்வாதிகார கமிட்டி கட்டி அமைப்போம்’ நாடி நரம்புகளை முறுக்கேற்றும் மகஇகவின் முழக்கம் இது. மக்கள் சர்வாதிகார கமிட்டி என்றால் என்ன? கட்சி கொடுத்தனுப்பும் போஸ்டர்களை ஒட்டுவதும் கூட்டத்திற்கு ஆள் கூட்டி வருவதும்தான் அதன் வேலையோ. அதிகாரம் கீழிருந்து மேலா? மேலிருந்து கீழா?
அவர்கள் ஒரு திட்டத்தை உருவாக்குவார்கள். முடிவெடுத்து அறிவிப்பார்கள். பிறகு அதனை கீழ் மட்ட அணிகளுக்கு அனுப்பி விவாதிக்கச் சொல்வார்கள். ஏனென்றால் நாங்கள் ஜனநாயக அமைப்பல்லவா! தொண்டர்களுக்கும் கருத்துச் சொல்ல வாய்ப்பளித்து ஏற்றுக்கொள்ளச் செய்யனுமல்லவா!!! அதனால் அந்த தொண்டர்கள் மயிரை பிளக்கும் அளவுக்குக்கூட விவாதிக்கலாம்; கருத்து மோதல்களில் ஈடுபடலாம். ஏனெனில் நாங்கள் ஜனநாயக அமைப்பு. ஆனால் இறுதியாக அமைப்பு சொன்னதை சரி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாங்கள் ஜனநாகய அமைப்பு. குழுவினரின் பெரும்பான்மை சிறுபான்மை முடிவு என்றெல்லாம் கூறி கட்சியின் அன்பான திட்டத்தை மறுத்திடவோ செயல்படுத்திட மறுத்திடவோ உரிமை கிரிமை என்று பேசக்கூடாது. வேண்டுமானால் ஒரு நோட்டு புத்தகம் போட்டு நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நக்கிக் கொள்ளுங்கள். தொடரந்து இரண்டு முறை முரண்பட்டால் அமைப்பை விட்டு தூக்கிடுவோம். பிற பகுதிகளில் உங்களை அமைப்பை விட்டு தூக்கிட்டோம்; தொடர்ப்பு வைத்துக்கொள்ளாதிர்கள் என்றும் சொல்லிடுவோம். நீங்களாக விலகினாலும் அப்படித்தான் சொல்வோம். என்னா எங்களுக்குக்கு ஒரு கொள்ளை சாரி கொள்கை கோட்பாடு மானம் ரோஷம் எல்லாம் இருக்கு. நாங்க என்ன ஓட்டுக்கட்சியா? உண்மையான ஜனநாயக் கட்சிங்க.
ஏய்! நீங்களெல்லாம் இப்படி கேட்பீங்கன்னு தெரிஞ்சுதான் அங்கங்க கத்தரியைப் போட்டு மக்கள் சர்வாதிகார கமிட்டியை ‘மக்கள் அதிகாரம்’னு வெட்டி குறைச்சிட்டோம்ல. இப்ப என்ன செய்விக.
நான் வெளியில் வந்ததும் இப்படிப்பட்ட ஒரு பிரச்சனையால்தான். ஆனால் அது ஒரு பெரிய சித்தாந்த பிரச்சனயல்ல. ஒன்றும் ஆகாத ஒரு செயல்தந்திர நரிதந்திர பிச்சனைதான். இது பற்றிய விளக்கம் பிறகு. ஒரு சிலரின்தவறுக்கு ஒரு அமைப்பையே குற்றம் சுமத்துவது சரியா என்ற கேள்விக்கு மீண்டும் பதில் சொல்கிறேன். ஒரு அமைப்பைப் பற்றிய விமர்சனம் என்பது அதன் தொண்டர்களைப் பற்றியதல்ல. பொறுப்பிலுள்ளவர்கள் தலைவர்கள் பற்றிய விமர்சனம். ‘தன் அணிகளை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்வதுதான் புரட்சிகர அமைப்பின் வழக்கம்’. இது பொது விதி. சஹனாஸின் பிரச்சனையிலும் அதற்காக சில உதவிகளை நாடிச் சென்றதிலும் மகஇக கட்சியின் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்ட பொறுப்பாளர்கள் வரை அப்படித்தான் உள்ளார்கள் என்பதை அறிந்து, விலகி இருந்தாலும் கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையையுடன் இருந்ததையும் இழந்த பிறகுதான் இதனை எழுதுகிறேன்.
அமைப்பும் தெரியவில்லை சித்தாத்தமும் தெரியவில்லை. அரைகுறை என்று செலவநாயகம் என்ற சித்தாந்த புலி விமர்சனம் வைத்தார். மூடக்கிழவன் சூறாவளிப்பயணம் போனதுபோல நீங்களும் போங்க; எங்களை அது ஒன்றும் செய்யாது என்று சொன்னார். அந்த புலிக்கு ஒரு சவால். கம்யூனிசத்தின் ஆணிவேரான கூலி, விலை, இலாபம், உபரி பற்றி ஒரு சாதாரண தொழிலாளி புரிந்துகொள்ளும்படி இங்கு வந்து விளக்குவாரா? தோழர்களே, இப்படி எழுதுவதைக்கண்டு அவர்கள் பயந்துவிடுவார்கள் என்றோ அதன் மூலம் சஹனாஸிற்கு தீர்வு கிடைக்கும் என்றோ இதை எழுதவில்லை. சஹனாஸ் இந்த (விக்னேஷ்) கழிசடைக்கூட சுயமரியாதை இழந்து வாழ்வதைவிட ‘வாழாவெட்டி’யாக இருந்துவிடுவது சிறந்தது என்றும் தன்னம்பிக்கையுடன் “உழைத்து வாழ்வேன்” என்றும் கூறிவிட்டார்.
சந்தர்ப்ப வாதம், சட்டவாதம், திரிபுவாதம், செயல்தந்திரம்னு சொல்றாங்களே. அப்படின்னா என்ன? தெரிஞ்சவுங்க கொஞ்சம் சொல்லுக்களேன்.
குறிப்பு: இக்கட்டுரையில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் சில வன் சொற்கள் மகஇகவின் ஒலிப்பேழைகள், சுவரொட்டிகளில் பிற அமைப்புகளை விமர்சிக்க அவர்களால் பயன்படுத்தபட்ட சொற்கள்களே. ޾B


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇக-வின் அயோக்கியத்தனம் - 10
பெரிய அறிவாளி இவரு, உண்ணமையை அறிய இத பத்தாது இன்னும் நிறைய எழுதுங்கள் என்று ஒருவர் கிண்டல் செய்துள்ளார் போஸ்டர் ஒட்டுபவனுக்கும் கொடிபிடிப்பவனுக்கும் என்ன கதை இருக்கப்பொகிறது. எப்படி அறிவாளியா இருக்கப்போறான். ஏனெனில் நாம் பாட்டாளி வர்க்க ஒட்டுமொத்த ஏஜெட்ண் ஆச்சே. இன்னிக்கு முதாளித்துவ மீடியவே வாயப்பொழந்துகிட்டு பெரிய பெரிய கலைஞருடைய வாழ்க்கை வரலாறை எழுதிக்கிட்டு இருக்கு. அது வரலாறு. வருங்கால தமிழத்தின் வரலாறு. இந்த நாதாரி இவுக கதையை எழுதுறாகலாம். என்ன சொன்னாலும் கொஞ்ச எழுதி முதுகை சொரிஞ்சிக்குறேன்.
மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிக்குப் பின் ஏறக்குறைய இரண்டாண்டுகள் எவ்வித பொது நிகழ்ச்சியும் நடத்தவில்ல. புத்தகம் விற்பது தொடர்ப்புகளை உருவாக்க முயற்சி செய்துவந்தது என்று காலம் சென்றது.
இருவர் ஆதவாளராக மாறினர். ஜான் பிரிட்டோ ஆதிக்க சாதியில் பிறந்த கிறித்துவர். கடுமையான அல்லேலுயா. சில தலைமுறையாக கிறித்துவத்துக்கு மாறிய குடும்பத்தின் உறுப்பினர்.. அவரது குடும்பத்தினர் கிறித்துவமாக இருந்தாலும் தமது பரம்பரை சாதி அடையாளத்தை துறந்தவர்கள் இல்லை. அதுபோல மிகவும் குறிப்பிட்தக்க செய்தி என்னவென்றால் ‘ஆதிக்க வெறியும்’ அற்றவர்கள். அவர்கள் ஊரில் அவர்கள் பெரும் சொத்துடையவர்கள் என்பதால் கோயில், சர்ச். இசுலாமிய விழாக்களில் முன் நிற்பவர்கள்.
ஜான் பிரிட்டோ ஒரு தாழ்த்தப்பட்ட சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் என்பதால் குடும்பத்தினர் சில காலம் வெறுப்பில் இருந்தனர். தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் என்பதால் எவ்விதத்திலும் அவர் குடும்பத்தினரால் இழிவு படுத்தப்படவில்லை. சில ஆண்டுகளில் குடும்ப வெருப்பு நீங்கி சகஜமாகிவிட்டனர்.
முதலில் ஏற்பட்ட சிக்கலால் எஸ்பி பட்டினம் என்ற ஊரில் அவர் குடியேறி தொழில் செய்து வந்ததால் இன்றும் வீடு வாசல் என்று எஸ்பி பட்டிணத்தில் குடியிருந்து வருகிறார். தாழ்த்ப்பட்டவர்களுக்காக எப்பொழுதும் குரல் கொடுத்து வருபவர்.
இன்னொருவர் சங்கர். தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர். சில தலைமுறையாக கிறித்துவத்திற்கு மாறியவர்கள். கிறித்துவமாக மாறினாலும் சாதி அடையாளத்தை துறக்காமல் சாதி அமைப்புகளில் இல்லாவிட்டாலும் சாதி இழிவுக்காக போராடியவர். அப்பகுதியில் ‘வாத்தியார்’ என்று எல்லோராலும் அழைப்படுபவர். ஒரு கிறித்துவ கம்யூனிச அமைப்பிலும் இருந்து பணியாற்றியுள்ளார். அதன் செயல்தந்திரம் நரித்தந்திரம் அவரை அதிலிருந்து வெளியேறச் செய்துவிட்டது. தொழில் தையல். வருமானம் கஞ்சிக்கே லாட்டரி. இவ்விருவரும் என்னுடன் இணைந்தனர்.
எஸ்பி பட்டிணத்தில் இரு நாட்டாண்மைகளால் (எஸ்பி பட்டிணத்தை சுற்றி கால்நடை தூரங்களில் சிறு கிராமங்கள் நிறைய உள்ளன. அனத்திக்கும் எஸ்பிபட்டிணம்தான் போஸ்ட்ஆபீஸ் போலீஸ் ஸ்டேஷன்.) பேரூந்து நிறுத்தத்தில் சாலை ஓரத்தில் உள்ள அரசு இடத்தை ஆக்கிரமித்து கூறுபோட்டு காசாக்க முயற்சித்து வந்தனர். அதனை இசுலாமியர்களும் இசுலாமிய அமைப்புகளும் எதிர்த்து வந்தனர்.
இந்நிலையில் ஒருநாள் அந்த ஆக்கிரமிப்பை டீக்கடையில் டீ அருந்திக்கொண்டிருக்கும்போது தோழர் ஜான் பிரிட்டோ விமரச்சித்துள்ளார். அங்கு டீ அருந்திக் கொண்டிருந்த இன்னொருவர் (நாட்டாண்மைக்கு ஆதரவாக உள்ள தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்) தான் குடித்துக்கொண்டிருந்த டீயை ஜான் பிரிட்டோவின் முகத்தில் ஊற்றிவிடுகிறார். அது ரகலையாகி காவல் நிலையம் சென்று அங்கும் அவரை மிரட்டி அனுப்பிவிடுகின்றனர்.
எனக்கு இது குறித்து தொலைபேசியில் விபரங்களை கூறினார். அவர் என்னுடன் தொடர்பில் இல்லை என்றால் இப்படி செய்திருக்கமாட்டார். நான் மேலே சொல்லியுள்ள விவரப்படி அவர் தனது படை பட்டாளங்களைக்கொண்டு பதிலடி கொடுத்திருப்பார். அவரின் கெட்ட நேரம் என்னிடம் சொன்னதுதான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇக-வின் அயோக்கியத்தனம் - 11
எஸ்பி பட்டிணத்தின் இந்தப் பிரச்சனையை விசாரித்து அம்பலப்படுத்துவது என்று முடிவு செய்து முதல் கட்டமாக துண்டு பிரசுரம் அடிப்பது என்று தீர்மானிக்கிறோம். எஸ்பி பட்டிணத்தின் பேரூந்து நிறுத்தத்திற்கு எதிரில் உள்ள நீண்ட இடங்கள் இசுலாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டவைகள்தான். ஆனால் அது பிரச்சனைக்குமுன் சராசரி 30 ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகள். இப்பொழுது ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே இசுலாமியர்களின் ஆக்கிரமிப்புக்கு துணைபோனவர்தான். இசுலாமியர்களின் நாட்டான்மைக்கு ஒளிந்து கிடக்கும் ஏகப்பட்ட நிலங்களை ஆக்கிரமிக்க துணைபோனவர். அதனுடன் அவரும் பல நிலங்களை ஆட்டைபோட்டவர். இன்று இசுலாமிய அமைப்புகள் உருவாகிவிட்டதால் இந்த ஆக்கிரமிப்பை விசிறிவிட்டு ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி செய்கின்றனர்.
ஆனாலும் பழசை இன்றைய நிலையில் தொடுவது சாத்தியம் இல்லை என்பதால் இந்தப் பிரச்சனையை அதுவும் தோழர் ஒருவர் தாக்கப்பட்டதால் அம்பலப்படுத்துவது என்பது சரியானது என்று முடிவெடுத்தோம். அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு விவரங்களை சொல்லி துண்டு பிரசுரம் அச்சடிக்கப்பட்டு எங்களுக்கு வருகிறது.
இன்னொன்றும் இங்கு குறிப்படத்தக்க விஷயம் உள்ளது. தேவிபட்டிணம் முதல் அதிராம்பட்டிணம் வரை இசுலாமியர்களின் ஆதிக்கப் பகுதி. இங்கு அவர்களின் நாட்டாண்மைதான். ஆதிக்கசாதியுடன் மாமா மச்சான் என்றும் தாழ்த்ப்பட்டவர்களை “ டேய் குப்பு’ என்றும் உறவு கொண்டவர்கள். ஒருவர், சாதி சொல்லி இழிவாக பேசியதால் நான் சண்டைக்குப் போய் பெரும் சரச்சையாகியது. அதிலிருந்து எங்கள் ஊர்காரனுங்க என் முன்னாடி அப்படி பேசமாட்டானுங்க. பின்னாடி பேசுவானுங்க. தொண்டி பிரதான சாலையில் கடைவைத்திருக்கு ஒருவர் “அய்யா என்று கைகட்டியவன் எல்லாம் இன்னைக்கி நெஞ்சை நிமித்திக்கொண்டு போறான்” என்றார். வேறொருவர் “வெள்ள மணல் தெருவு பூரா அவுங்களா போயிருவானுங்க போல” என்று சொன்னார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரியும் சிறு உணவக முதலாளியும் ஆவார்.
பள்ளிக்கூட வளாகத்தில் புது கட்டிடம் கட்டப்பட்டு வந்தபோது சென்ட்ரிங் முட்டுக் கம்புகளை தொடர்ச்சியாக சில இசுலாமிய மாணவர்கள் சரித்துவிட்டு சென்று வந்த து தொடர்பாக ஒரு மாணவனை கையும் களவுமாக பிடித்து அந்த தொழிலாளர்கள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க, அந்த தொழிலாளியை இசுலாமிய அமைப்புகளில் உள்ள இளைஞர்கள் அடிக்க அது பஞ்சாயத்து செய்யப்பட்டது. தொண்டி பள்ளிவாசலில் நடந்த பஞ்சாயத்தில் குற்றம்சாட்டப்பட்டவன், தாழ்த்தப்பட்ட தொழிளாலி சார்பாக வந்திருந்த ஒரு பெரியவரை “அவன்” என்று ஒருமையில் அழைக்க இசுலாமிய பெரியவர்கள் எவரும் கண்டு கொள்ளவில்லை. கோவம் வந்த சில தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் சத்தம் போட்டதும் சமாதானம் செய்தனர். ஒரிரு நிகழ்சியை மட்டும் அப்பகுதி நிலவரத்துக்காச் சொல்லியுள்ளேன்.
துண்டு பிரசுரம் வந்ததும் நானும் சங்கர் தோழரும் படித்துப்பார்க்கிறோம். எங்களுக்கு துண்டு பிரசுரத்தின் அமைப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. எஸ்பி பட்டிணம் பிரச்சனையை மகஇக வழக்கப்போல் ஆர்எஸ்எஸ், மதவெறி என்று வடிவமைத்திருந்தது. எஸ்பி பட்டிணம் பிரச்சனைக்கும் இதற்கும் தொடர்பில்லை. அப்படியே இருந்தாலும் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களும் மீனவர்களும் இசுலாமியர்களின் ஆதிக்கத்தில் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கும்போது (இன்றும் இதே நிலைமைதான்) இந்த துண்டு பிரசுரம் பொருத்தமற்றது. இதனை பொறுப்பாளரிடம் (அப்பொழுது காரைக்குடி கள்ளழகர்தான் தொடர்புக்கு) கூறுகிறோம். அவர் மேலிடத்தில் கேட்டுவிட்டு, “அதெல்லாம் ஒன்றும் இல்லை; அதெல்லாம் ஒன்றும் ஆகாது நாங்கள் எல்லா பகுதியிலும் இப்படித்தான் எழுதிகிறோம்; கோவையிலேயே இப்படி பிரச்சாரம் செய்கிறோம்; சும்மா கொடுங்கள், மதுரை தளபதி கதிரவனும், இரண்டு பொண்டாட்டிகாரர் லயோனல் அந்தோணிராஜும் கூட சொல்கிறார்கள்” என்றார். (அடைமொழி என்னுடையது. துண்டு பிரசுரத்தை எழுதியவர்கள்.)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇக-வின் அயோக்கியத்தனம் - 12
தயக்கத்துடன் முதலில் தொண்டியில் வெள்ளைமணல் வீதியில் கொடுக்க ஆரம்பித்தோம். முதல் வினியோகமே ஒருவரால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சங்கர் தோழர் தயங்கினார். ஷபி, அப்பொழுது அவர் என்னுடன் வேலை செய்தார் என்பதற்காக எனக்காக நோட்டீஸ் வினியோகத்திற்கு வந்தார். அவரும் தயங்கினார். நிச்சயம் அடி வாங்கப்பகிறோம் என்றார்கள். அப்பொழுது மகஇகவின் விசுவாசியாக நானும் இருந்ததால் தைரியம் கொடுத்து அழைத்துச் சென்றேன். (ஆரம்பத்திலிருந்தே மகஇஅகவின் இசுலாமியர்கள் தொடர்பான நிலைபாட்டில் நான் முரண்பட்டுதான் இருந்தேன். இது தொடர்பான எனது சரியான விமர்சனமே பல பேர்களை மகஇகவின் ஆதரவாளர்காக இப்பகுதியில் மாற்றியது. ஒரு அறைக்கூட்டம் போட்டால் குறைந்தபட்டசம் 25பேர்களாவது கலந்துகொள்வர். இசுலாமியர்களில்கூட கட்சி மதம் தொடர்பாக ஆர்வம் காட்டாதவர்கள் நிதி உதவிகள் செய்வர். ஆனால் அவர்கள் எவரும் மகஇக இல்லை) தொண்டிக்கு அடுத்ததாக மங்களகுடி, ஓரியூர் பகுதிகளில் கொடுத்துவிட்டு எஸ்பி பட்டிணத்தில் கொடுக்கிறோம். அப்பொழுது மகஇகவின் மீது நல்ல நம்பிக்கை கொண்ட 73 வயது தோழர் வேலுவும் இணைந்து கொள்கிறார். அவர் ஒரு நிலத்தகராறில் இடதுகை வெட்டப்பட்டு இடது கை செயலிழந்தவர். சிறிது நேரத்தில் இப்பிரச்சனைக்கு தொடர்புள்ளவர்கள் 20, 30 பேருடன் வந்து என்னை தடுக்கின்றனர். அடிக்கின்றனர். திருப்பி அடிக்கிறேன். அதில் அந்த ஆக்கிரமிப்பாளர் எட்டப்போயி விழுகிறார். அதனால் மற்றவர்கள் சற்று ஒதுங்குகிறார்கள். போலீஸ் வருகிறது. காவல் நிலையம் செல்கிறோம். தோழர் வேலு, சங்கர், ஷபி ஆகியோர் மனமுவந்து என்னுடன் இணைந்து காவல்நிலையம் வருகிறார்கள். சிறிது நேரத்தில் ஜான் பிரிட்டோ போலீஸ் ஸ்டேஷன் வருகிறார். (அவரை துண்டு பிரசுரம் வினியோகிக் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டோம்.) பிரச்சனைக்குரியவர்கள் ராஜூ (இவர்தான் ஆக்கிரமிப்பாளர்களில் முதன்மையானவர்) நக்சலைட்டுகளால் தாக்கபட்டுவிட்டார் என்று ஊரைத்திரட்டிவிட்டனர். ஏறக்குறைய 500 பேர்களுக்கு மேல் காவல்நிலையம் எதிரில். வஜ்ரா வருகிறது. சரக ஆய்வாளர் வந்துவிட்டார். தொண்டி எஸ்ஐ நக்சலைட்டுகளாமே யாருடா அது என்று உள்ளே வருகிறார். ஆயவாளரைப்பாரத்ததும் ஒதுங்கிவிடுகிறார். டிஎஸ்பி வருகிறார். வந்த வேகத்தில் ஜான் பிரிட்டோவின் வயிற்றில் எட்டி உதைக்கிறார். அவர் சுருண்டு விழுந்து மூளையில் கிடக்கிறார். திரண்டிருந்தவர்களை எங்களை கைது செய்துவிட்டதாக கூறி சமாதப்படுத்தியும் கொஞ்சம் மிரட்டியும் கலையச் செய்கிறார்கள். ஆயவாளர் ராஜா மகஇக-வைப்பற்றி அறிந்திருந்ததால் தப்பித்தோம். இல்லையேல் நக்சலைட் என்று நையப்புடைக்கட்டிருப்போம். ராஜாவுக்கு மகஇக-வைப்பற்றி தெரிந்திருந்தில் ஒரு பாதகமும் இருந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மகஇக-வின் அயோக்கியத்தனம் – 13
கைது செய்யப்பட்டு 29 நாட்கள் சிறையிலிருந்தோம். வெளியில் வந்த பிறகு ஆய்வாளர் ராஜா எங்கள் வழக்குடன், துண்டு பிரசுரம் அச்சடித்ததற்காக இரண்டு பொண்டாட்டிக்காரர் பொண்டாட்டியையையும் (பொண்டாட்டி பெயரில் அச்சக உரிமம் இருந்ததால்) இணைத்துவிட்டார். மகஇக-பற்றியும் இரண்டு பொண்டாட்டிக்காரரை பற்றியும் ராஜா அறிந்திருந்ததல் வந்தவினை இது. அவரை கைது செய்ய சென்ற இடத்தில் தள்ளுமுல்லு நடந்து அச்சக உரிமையாளர் அம்மாவுக்கு ‘நெஞ்சுவலி’ என்று தனியார் மருத்துவமனையில் சேர்த்து முன்ஜாமின் பெற்றுக்கொண்டனர். ஆய்வாளர் ராஜா காவல்துறை நடைமுறை மீறி நேரிடையாக கைது செய்யப் போனதால் உள்ளூர் காவல்துறையினர் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். அதனால் அவரால் கைது செய்ய முடியாமல் போனது.
எனக்கும் மற்றவர்களுக்கும் இது புது அனுபவம். மற்ற தோழர்களும் என்னால் மாட்டிவிடப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அழைத்துச் சென்ற விசுவாசி நான்தானே. ஜான் பிரிட்டோ சுருண்டு விழுந்து கிடக்கிறார். இந்த கவலையில் இருந்ததால் கைது செய்வதை மறுக்கவோ FIR-ஐ படித்துப்பார்த்து கையெழுத்துப் போடவோ தைரியம் இல்லை. அதனால் அச்சகத்தாரை மாட்டிவிட்டதற்காக என்னை விமர்சித்தனர்.
அச்சடிக்கும் துண்டு பிரசுரம் சுவரொட்டிகளில் மட்டும் போலீஸ் விதிமுறையை மீறும் புரட்சிக்காரர்கள் அவற்றில் அச்சக பெயரை போடமாட்டார்கள். மற்ற அனைத்திற்கு போலீஸ் அனுமதியை பெற்று நடத்துவர். போலீஸ் தரவில்லையானால் கோர்ட்டுக்கு போயாவது பெற்றுக்கொண்டுதான் நடத்துவார்கள். பிற சாதாரண கட்சிகள்கூட தடைமீறி நடத்தும்போது இவர்கள் மட்டும் சட்டத்தை மீறமாட்டார்கள். ஏனென்றால் தமிழகத்தின் ஒரே புரட்சிகர அமைப்பு இவர்கள்தான். சுவரொட்டி ஒட்டி நையப்புடைக்கப்பட் தோழர்கள் பலர். அதெல்லாம் தாங்கினால்தானே புரட்சியை தாங்க முடியும். இதெல்லாம் புரட்சிக்கான பயிற்சிங்க. ஆனால் எல்லாம் போஸ்டர் ஒட்டுபவனுக்குத்தான். மற்றவர்கள் போலீஸ் அனுமதி வாங்கிக்கொண்டு பாதுகாப்பாக புரட்சி செய்வார்கள். ‘தாமிரபரணி எங்கள் ஆறு, அமெரிக்க கோக்கே வெளியேறு’ என்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்ட வீரியத்தையும் அதற்கு அவர்கள் சொன்ன சொத்தை பதிலும் நீங்கள் அனைவரும் அறிந்ததுதானே.
இந்த கைதுவின் ஹைலைட் என்ன? நானும் காரைக்குடி கள்ளழகரும் மதுரை சென்றிருந்த போது மதுரை தளபதி கதிரவன் எங்களை ச்ந்திக்கிறார். பகுதி நிலவரம் பற்றி அந்தப் பகுதியிலுள்ளவர்கள்தான் முடிவெடுக்கனும் என்கிறார் . நான் தொலைபேசியில் மறுப்பு தெரிவித்ததை சொல்கிறேன் ஆனால் அவர்கள் எங்கள் மறுப்பை மறுத்ததையும் சொல்கிறேன். மீண்டும் சொன்னதையே சொன்னார். தாங்கள் செய்த தவறு பற்றி ஒருவாரத்தையும் சொல்லவில்லை. திரும்பத் திரும்ப நீங்கள்தான் முடிவு செய்திருக்க வேண்டும் என்றே சொன்னார். நான் மவுனமாகிவிட்டு வந்துவிட்டேன். மகஇக அமைப்பு கட்ட அனுமதி கேட்டபொழுது இவர் கூறிய பதிலை மந்திரமா தந்திரமா நிகழ்சி பற்றியும் முன் பகுதியில் எழுதியுள்ளேன். அதனுடன் இதனையும் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇக-வின் அயோக்கியத்தனம் – 14
ஆனாலும் நான் அப்பொழுதும் கட்சி விசுவாசியாக இருந்ததால் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு ஒரு குழுவாக அமைகிறோம். அதன்பிறகுதான் நான் முன்பு கூறியதுபோல் பல ஆர்பாட்டங்கள் அரங்கக் கூட்டங்கள் இரண்டு பொதுக்கூட்டம், புரட்சிக் கலைப் பயணம் எல்லாம் நடந்தது. வெளியூரில் நடக்கும் கூட்டங்கள் ஆர்பாட்டங்கள் மைய நிகழ்சிகள் ஆகியவற்றில் பங்கேற்பது. தெரிந்தவர்களை அழைத்துச் செல்வது எல்லாம் நடந்தது. ஏறக்குறைய ஏழு ஆண்டுகள்.
பொறுப்பாளர் மாறுகிறார். நீங்க என்ன மகஇக-வா என்று வினாவை எழுப்புகிறார். அதுபோல 4, 5 பேர் இருந்து நடத்துவதெல்லாம் ஆர்பாட்டமா என்று நக்கலடித்தார். 25 பேராவது இருந்தால்தான் நடத்தனும் என்றார். அதனால் எல்லாம் தடைப்பட்டு உட்கார்ந்து பேசுவதுடன் நின்றுவிடுகிறது. நானறிந்து சிவகங்கை பகுதி முழுக்க நாளைந்து பேர்களுடன்தான் ஆர்ப்பாட்டம் நடக்கும். தலித்துகள் தாக்கப்பட்டதற்காக ஏதும் நடந்தால் அவர்கள் வரும்போது 15, 20 பேர் என்று இருப்பர். பொதுக்கூட்டத்திற்கே 25 பேர்தான் இருப்பார்கள். அதுவும் வேறு பகுதியிலிருந்து வந்தால்தான். இந்த சொத்தை ஆர்பாட்டங்கள் எல்லாம் பத்திரிக்கையின் படத்திற்கு எடுப்பாக இருக்காது என்பதால் புதிய ஜனநாயகம் புதியகலாசாரத்திலெல்லாம் வெளிவராது. சிவகங்கைத் தோழர்கள் பலமுறை பத்திரிக்கை செய்தி கொடுத்தும் வராது ஏமாந்து தமக்குத்தாமே சமாதானம் சொல்லிக்கொள்வர். அது சரி மகஇக துவக்க காலத்தில் தமிழக முழுவதும் ஆர்பாட்டமும் பொதுக்கூட்டமும் எப்பிடி நடந்ததாம்?
நான் கட்சியில் இணைந்து செயல்படத்துவங்கிய ஆரம்ப காலத்தில் மகஇக-வினரின் எண்ணிக்கையைக் கண்டு பெருமிதமிருந்தது. சந்திப்பவர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பேன். அமைப்பு பணியையே தலையாயப் பணியாகக் கொண்டு போஸ்டர் ஒட்டுவது முதல் பேரூந்துகளில் புத்தகம் விற்பதுவரை இடைவிடாது செய்த வாலிபத் தோழர்கள் சிலரைத் தெரியும். அவர்களுடன் இணைந்து பேரூந்துகளில் புத்தக விற்பனை செய்ததுண்டு. அவர்கள் எவரும் இன்று மகஇக-வில் இல்லை. சிலர் உலகிலேயே இல்லை.
(காவல் நிலையம் முதல், சிறையிலிருந்து வெளியில் வரும்வரை உள்ள எங்கள் அனுபவம் பிறர் எவருக்கும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டியாக இருக்கும். நண்பர்கள் விருப்பப்பட்டால் இறுதியாக எழுதுகிறேன். இங்கேயே எழுதிவிடுவேன். ஆனால் ஜவ்வா இழுக்கிறேன் என்று திட்டுவீர்கள். அதனால் உங்கள் விருப்பம்)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மகஇக-வின் அயோக்கியத்தனம் – 15
ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவரைப்பற்றி காரைக்குடி கள்ளழகர் விபரம் கூறுகிறார்; ‘இவர், மக்கள் நேசன். இவர் அச்சகத்தில்தான் முதன் முதலாக புதியகலாச்சாரம் அச்சடிக்கபட்டதாம். டிவிஎஸ் சுந்தரம் அய்யங்கார் குடும்பம் பற்றி புதியகலாச்சாரத்தில் எழுதியதால் இவர் அச்சகம் தாக்கப்பட்டு எந்திரங்கள் உடைக்கப்ட்டதாம். பின்பு இவர்கள் அவர்களைப் பற்றி மேலும் அம்பலப்படுத்தோம் என்று மிரட்டியதால் புது எந்திரம் வாங்கிக் கொடுக்கப்பட்டதாம்.
இன்று இவர் அமைப்பில் இல்லை. இரண்டுபேரை அதாவது பொண்டாட்டியின் தங்கையையும் திருமணம் செய்து கொண்டதால் அமைப்பை விட்டு விலக்கிவிட்டார்களாம். இப்பொழுது ஆதரவாளராக இருக்கிறார்’ என்று கூறினார். அமைப்பின் கறாரான நடவடிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. தீவிர விசுவாசியானேன்.
ஆனால் அடுத்தடுத் சில நிகழ்வுகளில் இவரின் அதிமேதாவித்தனத்தையும் அதிகாரத்தையும் கண்டு பிடிக்காமல் போனது. சில மாதங்களுக்குப் பிறகு ஒரு போஸ்டர் ஒட்டும் தோழரை சந்திக்கிறேன். அவர் ‘மக்கள் நேசன்’ என்ற முதலாளியைப் பற்றி சொன்னவைகளும் அவரின் மேல் வெறுப்பை உருவாக்கியது. காரைக்குடி கள்ளழகரிடம் சிலமுறை அவரைப்பற்றி விமர்சனமும் செய்துள்ளேன். ஆனாலும் அவர் மூத்த தோழர், பகுதி வேறு. அதனால் அதற்கு மேல் நமக்கு தகுதியில்லை. (என்ன? அமைப்பை விட்டு அவரைத்தான் நீக்கிவிட்டார்களே. பிறகு மூத்த தோழர் என்று சொல்லறேனு நினைக்கிறீங்களா? முழுதாக படியுங்கள் புரியும்).
நான் கலந்து கொண்ட மதுரை பகுதியில் நடந்த அமைப்பு கூட்டங்கள், நவம்பர் புரட்சி விழாக்கள், ஆர்பாட்டங்கள் எல்லாம் இவரை நான் பார்க்கிறேன். மேடையில் தவிர பிறவற்றிலெல்லாம் இவரும் கம்யூனிசத்தைப் பற்றி உரையாற்றுவார். இவர் அதிகமாக எடுத்துக்காட்டுத் தருவதெல்லாம் தாய் நாவல் தான். பாவெல்லின் தியாகம்போல் தோழர்களின் தியாகம் இருக்கவேண்டும் என்பார். கட்சி வகுப்பிலும் கலந்துகொள்கிறார். ஆனால் அமைப்பில் இல்லை என்கிறார்கள். இது என்ன? விசுவாசிக்கு ஒரு நெருடலைத் தவிர அதற்கு மேல் செல்லவில்லை.
ஒரு கட்சி வகுப்பு. அதன் இடைவேளையில் ஒருவருக்கு ஹோமியேபதி மருந்து கொடுக்கிறார். அதாவது அவருக்கு ஹோமியோபதி மருத்துவம் தெரியும். அதனால் எந்தக் கூட்டத்திற்கு மருந்து பெட்டியுடன் வந்து தொண்டர்படைக்கு சேவை செய்வார். ஆனால் பிற சில தோழர்களும் ஹோமியோபதி மருத்துவம் செய்வது பிடிக்காது. அவர்களை கண்டித்து “ஹோமியோபதி என்றால் சும்மா இல்லை. ஹாங்... அதுல நிறையத் அடிப்படை விஷயங்கள் இருக்கு. அத புரிஞ்சிக்காம சும்மா புத்தகத்தை பார்த்துட்டு மருந்து கொடுக்கிறாங்க. இது ரொம்ப தப்பு’ என்று சொன்னார். எனக்கு கடுப்பு.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇக-வின் அயோக்கியத்தனம் – 16

பொதுவாக ஹோமியோபதி மருத்துவர்களிடம் ஒரு கோளாறு. ஹோமியோபதி பக்கவிளைவு இல்லாதது என்று சொல்வார்கள். அந்த நோய் இருந்தால் கண்டிக்கும் இல்லை என்றால் ஒன்னும் செய்யாது என்று தைரியம் கொடுத்து மருத்துவம் பாரப்பார்கள். அப்பொழுதுதானே நம்பி மருத்துவம் பார்க்க வருவார்கள். மருத்தவக் குறிப்பு புத்தகங்களும் எழுதி வெளியிடுவார்கள். ஆனால் மருத்தவக் குறிப்புகளைக் கொண்டு ஒருவர் தனக்குத்தேனே மருத்துவம் செய்து கொண்டால் ‘ஒண்ணு கிடக்க ஒண்ணு ஏதாவது ஆயிடுச்சுன்னா’ என்று பயமுறுத்துவார்கள். அப்படின்னா பக்கவிளைவு இல்லாதது என்று சொல்வது பெய்யும் பொய்யும் புரட்டுமா? இந்த ரகம் நம்ம மக்கள் நேசன். 
இவரின் மேதமைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். எனது துணைவியாருக்கு இரத்தப்புற்றுநோய் பாதித்து மருத்துவம் பார்த்து வரும் நிலையில் இவரிடமும் ஆலோசனை கேட்போம் என்று அயைத்துச் சென்றனர். அவர் ஹோமியபதியின் மகத்துவத்தைப் பற்றியும் அதன் அடிப்படையையும் சொல்லி ஹோமியோ மருந்து இரத்தப்புற்றை கரைத்துவிடும் என்றார். மருந்தினை மனப்பூர்வமாக நம்பி சாப்பிடனும் என்றும் சொன்னார். இது பற்றி விளக்கும்போது “அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் தனக்கு எந்த நோயும் இல்லை என்று ஓர் மனம் கொண்டு தியானம் செய்தவனுக்கு அந்த நோயே இல்லாமல் போய்விட்டதாம்” என்ற எடுத்துக்காட்டையும் சொன்னார். உடனிருந்தவர்கள் மதுரைத் தளபதி, சிவங்கை வசூல் சக்கரவர்த்தி மற்றும் காரைக்குடி கள்ளழகர். இரத்தப்புற்று நோய் என்றால் என்ன என்றுகூடத் தெரியாமல் ‘கரைந்துவிடும்’ என்று சொல்கிறார். நான், சரி சரி என்று மண்டையை ஆட்டிவிட்டு வந்துவிட்டேன். 
வெளியில் வந்ததும், இவரிடம் மருத்துவம் செய்து பார்க்கலாமா என்றார்கள். “மாத்திரையை நம்பி சாப்பிட வேண்டும் அப்பொழுதுதான் வேலை செய்யும் என்றும், மனதில் நோய் இல்லை என்று நம்பினானாம்; நோய் பறந்துவிட்டாதாம்” என்று பொருள் முதல்வாதி கருத்து முதல்வாதத்தை கூறுகிறார். நீங்களும் அதை கேட்டுட்டு வருகிறீர்களே” என்றேன். “ஆமா அங்கேயே சொல்ல வேண்டியதுதானே” என்றார்கள். என்னத்த சொல்றது?
மக்கள் நேசன். லயோனல் அந்தோனிராஜ். இவரை இரண்டு பெண்டாட்டிகாரர் என்று நான் சொன்னது மிக மிகத் தவறு. பொண்டாட்டியின் பிரசவத்திற்கு துணையாக மைத்துனி வந்திருக்க, மைத்துனிக்கும் இவருக்கும் தெடர்பு ஏற்பட அது தொடர்ந்து விடுகிறது. திருமணம் செய்துகொள்ள வில்லை. அப்படிப்பாரத்தால் இவர் இரண்டு பொண்டாட்டிகாரர் இல்லை. இதுக்கு வேறு பெயர். 
அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். நமக்கு அது தேவையில்லாத சங்கதி. ஆனால் அவர் மகஇக கடசிக்காரரா இல்லையா? இல்லை ஆதரவாளர். அப்படியானால் வை... வைத்துக்கொள்பவர்கள் ஆதவாளராக அமைப்பில் பங்காற்றலாம். உரையாற்றலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்பது மகஇக-வின் விதியில் ஒன்றா? 
இதன் ஹைலைட் என்ன? இப்பொழுது லயோனல் அந்தோனிராஜ் மனித உரிமை சாரி... சாரி... மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரைப் பகுதியின் தலவர். மக்கள் உரிமை என்றால் பெண்கள் உரிமை, பெண்கள் விடுதலை எல்லாம் உள்ளடங்கும் என்றால் மகஇக-வின் இன்றைய நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். இது பற்றி ஒரு தோழரிடம் கேட்டேன். அவர் ‘மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்திற்கு’ இரண்டு பொண்டாட்டிக்காரர்கள் இருக்கக் கூடாது’ என்று விதிமுறை இல்லை என்றார். நீங்க விதிமுறை அப்பிடி இப்பிடி கேட்பீங்கன்னுதான் நாங்க விதிமுறையையே மாத்திட்டோம்ல. இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க. 
மகஇக-வின் விதிமுறைகளைப் பற்றி போஸ்டர் ஒட்டுபவர்கள் கீழ்மட்ட குழுக்கள் எவராவது படித்திருக்கிறீர்களா? கண்ணகளால் பார்த்தாவது இருக்கிறீர்களா? அப்படி ஒன்று இருக்கா இல்லையா என்றாவது தெரியுமா?
மதுரையின் மனித உரிமைப் போராளிகளில் இன்னொருவர், சஹனாஸ் பஞ்சாயத்தை தலைமை ஏற்று நடத்திய வழக்கறிஞர் இது பற்றி தந்துள்ள ஓரு வாக்குமூலத்தை சஹனாஸ் பிரச்னையை எழுதும்போது சொல்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ம.க.இ.க காமெடிகள்.

பல தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பலமுறை எழுதாமலே விட்டுட்டுதான் இருந்தேன். ஆனால் தொடர்ந்து இவர்களின் காமெடிகள் கடுப்படிக்கவே (மேக்ஸிமம் எல்லா இடத்திலும் இவர்களுக்கு அவமானமே என்பது வேறு விசயம்). எழுத வேண்டியதாகிறது. 
எழுதுவதற்க்கு முதற்க்காரணம். பல உண்மை சம்பவங்கள் நடந்த போது இருந்த சிலர் இறந்து போவதை சமீக காலங்களில் கடந்து வந்துவிட்டேன் (அவைகள் இதற்க்கு முன்னர் இருந்த அமைப்பு இளமைக்கால நிகழ்வுகள் பற்றிய சம்பவங்கள்).
அதே போல இப்போது தொடர்ந்து எழுதி வரும் தோழர் Paraiyoasai Pathippaham எனும் பெயரில் இயங்கும் சாஹித் தோழர்களின் பதிவுகளில் கூட சிலர் சும்மா சும்மா பொய் பொய்னு கத்துவதால்.
நடந்த சம்பவங்கள் எல்லாம் இப்போதே எழுதுவதுதான் சரியானது காரணம் கூட இருந்தவர்கள் சம்மந்தபட்டவர்கள் எல்லோரும் இருக்கும் போதே எழுதிட்டா மறுக்க முடியாது அல்லவா...?.
இனி இதன் தொடர்ச்சிகளையும் தொடர்ந்து எழுதுவேன்.
முதல்ல நான் மார்க்ஸியம் கற்றது எப்படி எங்க என்பதையும், அதன் பின்னர் நான் அமைப்புக்கு வந்தது எப்படி எனதிலிருந்து தொடங்குகிறேன்.
மகிழ்ச்சி

No automatic alt text available.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇக-வின் அயோக்கியத்தனம் – 17

ஒரு புரட்சிகரமான பாட்டாளி வர்க்கக் கட்சி தனது புரட்சிகரமான கடமையை ஆற்ற வேண்டுமானால், சரியான அளவில், அமைப்பு வழிகளை வகுத்து நடைமுறைப் படுத்தினால் மட்டும் போதாது, சிறந்த பாட்டாளி வர்க்க பண்பாட்டு நெறிமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும். 'பண்பாடு இல்லாத ஒரு படை மந்த புத்தியுடைய ஒரு படையாகும்; ஒரு மந்த புத்தியுடைய படை எதிரியைத் தோற்கடிக்க முடியாது' என்றார் மாவோ.

………..எனினும் 'இன்றைய நிலைமையில் இவ்வளவு கறாராக இருக்கக் கூடாது' என்ற முகாந்திரத்தில் ஒளிந்து கொண்டு, புரட்சிகர பண்பாட்டு நெறிமுறைகளில் கட்சி அணிகளை உணர்வு பூர்வமாக வளர்க்கும் கடமையை கட்சி கைகழுவி விட முடியாது. எந்த நிலைமையிலும் பாட்டாளி வர்க்க, கம்யூனிசப் பண்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். அப்பொழுது மட்டுமே பலவீனமான சிறிய அமைப்பாக இருப்பினும் கட்சி பலம் பெறும், வளரும், உறுதியடையும்.

………..பரந்துபட்ட மக்கள் நம்மை கூர்ந்து கவனிக்கிறார்கள். நாம் முன் வைக்கும் புரட்சிகர அரசியலை மட்டுமல்ல, நாம் சொந்த வாழ்க்கையில் எந்த அளவு ஒழுக்கமுள்ளவர்களாக, யோக்கியமானவர்களாக, சொன்னதைச் செய்பவர்களாக இருக்கிறோம் என்பதையும் உற்று கவனிக்கிறார்கள். அதில் அவர்கள் மன நிறைவு கொள்ளும் போதுதான் நம்மைப் பின்பற்றத் தொடங்குகிறார்கள். நிலப்பிரபுத்துவப் பிற்போக்கு - ஏகாதிபத்தி சீரழிவுப் பண்பாடுகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதும் சொந்த வாழ்க்கையில் அவற்றை நிராகரிப்பதும் பிரச்சனையின் ஒரு பகுதியே.

--மேலுள்ள வரிகள் எவருடையது இல்லை. மகஇக-வின் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டு நெறிமுறைகள் என்ற வெளியீட்டில் அவர்கள் சொன்னது.

இனி நாம் தொடராக சில திருமணங்கள் பற்றி பார்ப்போம்.

மகஇக-வின் மூத்த உறுப்பினர்; பொருளாளர்; புதியகலாச்சாரத்திலும் மகஇஅ-வின் ஒலிப்பேழைகளிலும் தொடர்புக்கு என்று முழங்கப்பட்டவர் இரா.சீனிவாசன். அவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். சரிதானே அதற்கு என்ன என்கிறீர்களா? திருமணம் கோவிலில். ஐயர் வேதகாமத்தை ஓதி இந்திரனுக்கும் சந்திரனுக்கெல்லாம் …… செய்து வைத்துவிட்டு புனிதமான தாலியை எடுத்துக்கொடுக்க மணமகன் மூன்று முடிச்சுகள் போட்டு …..… தன் வீட்டு மாட்டுப்பொண்ணாக சொத்தாக்கிக் கொண்டார்.
பொதுவாக மகளுக்கு திருமணம் செய்யும்போது மனைவி ஒத்துக்களை, மணமகன் வீட்டார் ஒத்துக்களை என்று புரட்சியாளர்கள் சொல்வதுண்டு. உண்மைதான். இது ஒரு சிக்கலான விஷயம் தான். என்னதான் தான் யோக்கியன் என்று சொல்லிக்கொண்டாலும் வேறு வழி இல்லாமல் முன் நின்று நடத்திவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை ஏற்றுக்கொ ண்டுதான் தீர வேண்டும்,

ஆனால் தன்னுடைய மகன் திருமணத்தைப புரட்சிகர திருமணமாக நடத்த முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் வீட்டார்களை திருமண வேலைகளை பாரக்கச் சொல்லிவிட்டு ஒதுங்கி இருக்கனும். பெற்ற கடனுக்காக பண உதவிகளை செய்திடலாம். அவ்வாறு செய்யாமல், சமூக மாற்றத்திற்காக நாங்கள் போராடுகிறோம் கிழித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லும் புரட்சியாளர்களை என்னவென்று சொல்வது? இதில் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டு நடைமுறை என்ற வெளியீடு வேறு. எல்லாம் அறிவுரையும் போஸ்டர் ஒட்டுபவனுக்குத்தான் என்று சொல்லுகிறீரீகளா? ஆமாம்!! ஆமாம்!! போராடனும் தோழர். கறாராக இருக்கனும் தோழர்.

இவரின் இந்த செயலால் அமைப்பைவிட்டு நீக்கினர்; இல்லையில்லை நீக்கவில்லை பொறுப்பிலிருந்து நீக்கினர்; இல்லையில்லை அமைப்பிலிருந்து நீக்கினர்; இல்லை ஒரு வருடத்திற்கு தண்டனையாக அமைப்பிலிருந்து நீக்கினர். பலரும் பலவிதமான பதில்கள். இப்படி ஒன்று நடந்ததே தெரியாத பலர். என்னிடம் சொன்னது நீக்கப்பட்டார் என்றுதான். சிறிது காலங்களில் மீண்டும் பொறுப்பு கொடுக்கப்பட்டதாக ஒரிரிருவர் கூறுகின்றனர்.. ஏன்? மகஇக-வில் வேறு ஆட்களே இல்லையோ?

தேவனிடமோ அல்லாவிடமோ தான் செய்த பாவங்களை மனமுவந்து கூறி மன்னிப்பு கேட்டால் அவர்களின் பாவம் அனைத்தும் துடைத்தொழிக்கப்பட்டு அன்று பிறந்த குழந்தை போலாகிவிடுவர். அடுத்து திருமணம் செய்துவைக்க எந்த பிள்ளையும் இல்லை என்பதால் இனி சிக்கலில்லை என்று இவரும் அப்படி பாவமன்னிப்பு (சுய விமர்சனம்) கேட்டிருப்பார் போலும். கருணையுடன் திரும்ப இணைத்துக் கொண்டனர். அல்லாவுக்கு ஆமீன்; தேவனுக்கு ஆமென்.

அவர், இரா.சீனிவாசன் வயிற்றுப் புற்றுநோயால் மரணித்து விட்டார். மகஇக அனைத்து பகுதியிலிருந்தும் தொண்டர்களைத் திரட்டி மரண ஊர்வலத்தில் கலந்துகொண்டது. மின்சாரமேடையில் தகனம் செய்யப்பட்டு அவரது புரட்சிகர பணிகள் 'சில தவறுகள் செய்திருந்தாலும்' என்று இரங்கள் கூட்டத்தில் நினைவு கூறப்பட்டது.

………..பரந்துபட்ட மக்கள் நம்மை கூர்ந்து கவனிக்கிறார்கள். நாம் முன் வைக்கும் புரட்சிகர அரசியலை மட்டுமல்ல, நாம் சொந்த வாழ்க்கையில் எந்த அளவு ஒழுக்கமுள்ளவர்களாக, யோக்கியமானவர்களாக, சொன்னதைச் செய்பவர்களாக இருக்கிறோம் என்பதையும் உற்று கவனிக்கிறார்கள். --மகஇக



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?

 

மகஇக பொதுத்தளத்தில் யாருக்கும் தெரியுமோ என்னமோ ஆனால் இணையத்தில் வாய்கிழிய பேசும் இயக்கம், பெரியார் திக காரர்கள் மகஇக வோடு சோடி போட்டுக்கொண்டு சுற்றினார்கள், மகஇகவின் பார்ப்பன தலைமை சாயம் வெளுத்ததோ என்னமோ இப்போது முறைத்துக்கொண்டு திரிகின்றார்கள்...

எல்லோரையும் நோண்டு நொங்கெடுக்கும் புனித(?!)மான மகஇக வின் நிரந்தர பொதுச்செயலாளர் மருதையன் அவர்களின் மீது ஒரு சந்தேகம், எந்த மகஇக தோழர்களாவது தீர்த்துவைத்தால் தன்யனாவேன்...

சாதாரண பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவரில் ஆரம்பித்து நெடுமாறன், வைகோ, சுப.வீ, கொளத்தூர் மணி என்று நீளுகிற பட்டியல் தமிழர் விடுதலைப்படை மாறன், தமிழர் மீட்சிப்படை முத்துக்குமார் என பெரும் பட்டியல்... அடடே இதென்ன பட்டியல் என்கிறீர்களா? ஆம் இவர்களெல்லாம் பொதுவாழ்வில் அது பத்திரிக்கையாகவோ, அரசியலாகவோ, ஆயுதப்போராட்டமாகவோ என அரசையும் அதிகாரத்தையும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர்த்து போராடியவர்கள் (உடனே மகஇக தோழர்கள் இவன் இது செய்தான் அவன் அது செய்தான் என்றெல்லாம் பட்டியல் போடவேண்டாம், இவர்கள் அனைவரும் நான் புனிதர்கள் என்று சொல்லவில்லை), இதற்காக இவர்கள் மீது தடா பொடா என ஏகப்பட்ட வழக்குகள், அந்த வழக்குகளுக்காக மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் சிறையினுள் இருந்தவர்கள்... இன்னமும் ஏகப்பட்ட வழக்குகள் இவர்கள் மீது உள்ளன...

எதற்கெடுத்தாலும் நாங்கள் தான் காவல்துறையின் கடும் அடுக்குமுறையை சந்திக்கிறோம் என்று காவல்துறை தங்களின் க(ன்)ணை தங்கள் பிடறியின் மீது வைத்திருப்பதாக பீலா விட்டுக்கொண்டிருக்கும் மகஇக (இங்கே குறிப்பது மகஇக வின் அடிமட்ட தொண்டர்களையோ அல்லது இடை மட்ட பொறுப்பாளர்களையோ அல்ல அவர்கள் பாவம் பலியாடுகள், மகஇக வின் தலைமையை குறிப்பிடுகிறேன்) 

நான் மேலே குறிப்பிட்டவர்களை போல ஏதேனும் மகஇக மருதையன் மீது அரசாங்கத்திற்கு எதிராக போராடி அதனால் சிறைக்குள் மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் இருந்திருக்கிறாரா?

1.தோழர் மருதையன் எத்தனை முறை சிறை சென்றுள்ளார்?( ரிலையன்ஸ் போராட்டத்தில் மதியம் அரெஸ்ட் ஆகி மாலை ரிலீஸ் ஆன கதை போன்றல்ல)

2. மருதையன் மீது என்னென வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன?

3. தடா, பொடா, குண்டாஸ், மிசா என்ற வழக்குகள் ஏதேனும் அவர் மீது இருந்தனவா? அல்லது இருக்கின்றனவா? அப்படியெனில் எத்தனை மாதம் உள்ளே இருந்தார்?

4. மகஇக அடிமட்ட தொண்டர்களையே போலிஸ் ஜட்டியோடு அடிப்பதாக பீலா விடும் மகஇக வினர் மருதையன் அது மாதிரி எத்தனை முறை பரேடு வாங்கியிருக்கிறார்?

இந்த கேள்வியை சுத்தி சுத்தி சிலரிடம் விசாரித்தேன்... ம் பதில் கிடைக்கவில்லை, அது தான் இப்போது பதிவில் கேட்கிறேன்... ஒரு வேளை மருதையன் மீது பெரிய வழக்குகள் ஏதுமில்லை, உள்ளேயெல்லாம் போனதில்லை, ஜட்டியோடு அடிவாங்குவதெல்லாம் மகஇக தொண்டர்கள் மட்டும் தானென்றால் மருதையனின் புரட்சி யாரின் தயவில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்... http://kuzhali.blogspot.in/2009/08/blog-post_27.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇக-வின் அயோக்கியத்தனம் – 18

மகஇக-வின் பொருளாளரைப் பற்றி முன் பதிவில் பார்த்தோம். அடுத்து இணைச் செயலாளர். வங்கி மேளாலராகப் பணியாற்றிய பொழுதும் கம்யூனிசப் புரட்சியில் தன்னை அர்பணித்துக் கொண்டவர் திரு காளியப்பன் அவர்கள்.

இவரின் மூத்த மகனுக்கு இவரின் பள்ளியாசிரியர் தலைமையில் மணமக்கள் தங்கள் சாதிமுறைப்படி அலங்கரிக்கப்பட்டு (நகைநட்டுகளுடன்), தேவாரம் ஓதி தாலி எடுத்துக்கொடுக்க மணமகன் மூன்று முடிச்சுகளை நறுக்கென போட்டார்.

இரண்டாவது மகளுக்குத் திருமணம். இதிலும் மணமக்கள் தங்கள் அலங்கரிக்கப்பட்டு (நகைநட்டுகளுடன்), மணமகன் தாலி கட்டினார். இதில் இன்னொரு விஷேசம் மணமகனின் தந்தை சிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்.

இவ்விரண்டு திருமணங்களும் சாதியைத் தாண்டிச் செல்லவில்லை. மூன்றாவதாக ஒரு மகனின் திருமணம். காதல் கல்யாணம் என்பதால் சாதி மறுப்புத் திருமணமாக நடந்தது.

மூன்று திருமணங்களிலும் மகஇக-வின் பொதுச் செயலாளர் கலந்து கொண்டார். பிற முன்னணி பொறுப்பிலுள்ளவர்கள் எவர் கலந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை. இவரின் மகள் திருமணத்திற்கு பகுதியிலுள்ள மகஇக-வினர் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். பொதுச்செயலாளர் வந்ததும் 'விருப்பப்படுபவர்கள் கலந்துகொள்ளலாம் என்று முடிவு மாற்றப்படுகிறது. காளியப்பன் அவர்கள் திருமிகு. கன்னையா ராமதாஸாக (இயற்பெயர்) முகம்மாறி நின்றார்.

இத்திருமணங்களில் தவறாது கலந்து கொண்ட இன்னுமொரு முக்கிய பிரமுகர் திரு. பழனிமாணிக்கம். திமுக முன்னால் எம்பி. நிதித்துறையில் மத்திய இணைநிதியமைச்சர். ஒரே சாதிக்காரர். மகஇக-வின் திமுக விசுவாசத்திற்கு இதுவும் ஒரு காரணம். (இவரால்தான் தமிழ்மக்கள் இசைவிழாவுக்கு ஒருமுறை மிகப் பிரண்டாமான மாநாடு பந்தல், திமுக கூட்டம் நடத்திய அடுத்தநாள் தமிழ்மக்கள் இசைவிழா நடந்ததால் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.)

மதுரைத் தளபதி, மத்தியகுழு உறுப்பினர் கதிரவன் அவர்கள், தாமும் அக்னித் தேவராக (இயற்பெயர்) முகம்மாறி தனது மகளுக்கு தனது சாதியில் வரன்தேடி 100 பவுன் நகை கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளார். மனைவி வங்கி மேளாலர்; மகன் இந்திய நலனுக்காக அமெரிக்காவில் பணியாற்றும் 'ஒயிட்காலர்' தொழிலாளி (அமெரிக் அம்பி இல்லைங்க); அப்படியிருக்க தங்களின் தராதரத்திற்கு 100 பவுன் மிக மிகக் குறைவுதான். தாலி? அது இல்லாமல் மூத்த தோழர்கள் நடத்துவார்களா? பொதுச்செயலாளர்? அவர் இல்லாமல் மூத்த தோழர்களின் வீட்டு 'கல்யாணம்' நடைபெறுமா?!!!. (இவரின் 'கல்யாணம்' பற்றியும் அடுத்த பதிவில்)

தாலி பற்றிய பெரியாரின் கருத்து இன்றைய தமிழ் அறிவு ஜீவிகள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. பெரியாரின் வழி வந்தவர்களில் பலரால் இது மீறப்படுவது ஒருபக்கம் இருந்தாலும் புரட்சிகரமானவர்கள், சமூக மாற்றத்தை உருவாக்கப் பிறந்தவர்கள் என்பவர்களால் சாதி, தாலி தாண்டி வரமுடியவில்லை. இதில் வெட்கக்கேடு என்னவென்றால் இவர்கள்தான் மிகப் பெரிய பொறுப்பிலுள்ளவர்கள். புரட்சியாளர்களை புடம்போட்டு வழிநடத்துபவர்கள்.

பகுதி தொண்டர்கள், அணிகளுக்கு இது தெரியாதா? அவர்களெல்லாம் ஏற்றுக்கொண்டார்களா? என்று கேள்விகள் கேட்காதீர்கள். அழைப்பு விடுத்தால்தானே தெரியும்; கேள்வி எழும். எந்தக் கேள்விக்கும் நாங்கள் இடமளிக்காதபோது இதற்கு மட்டும் விடுவோமா?

ஒருவேளை தெரிந்துவிட்டால், குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுச் சொல்லி தொண்டர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. (இன்னும் சில திருமணங்களை சாரி கல்யாணங்களைப் பாரத்ததும் இந்த பண்பாடு பற்றி இவர்கள் வாழிகிழிய எழுதியுள்ளதையும் பாரப்போம்.)

தாலி பற்றி மகஇக-வின் இணையதளமான வினவில் கீழுள்ள சுட்டிகளில் மேலும் படித்துக்கொள்ளுங்கள்.

வரலாற்றுப்பர்வையில் தாலி - http://www.vinavu.com/…/thaali-a-historical-literary-persp…/

கிணத்துல வாளி கழுத்துல தாலி - http://www.vinavu.com/…/march-8-working-womens-day-chennai…/

சினேகா பிரசன்னா திருமணம்: ரெட்டைத் தாலி புரட்சிடே! -http://www.vinavu.com/2012/05/14/sneha-prasanna-marriage/

மகஇக-வின் பாண்டியன் என்பவர் திருமணத்திற்கு வினவு –-வாழ்வின் மகிழ்ச்சி என்பது பொதுநலனுக்காக வாழப்படும் வாழ்க்கை என்ற வகையிலேதான் இந்த திருமணம் நடைபெற்றது. சாதி, சடங்குகள், ஆடம்பரத்தை துறந்ததோடு மட்டுமல்ல தங்களது வாழ்வில் ஆணாதிக்கம், பெண்ண்டிமைத்தனம் முதலியவற்றை துறந்து ஜனநாயக முறையில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதோடு தங்களது குடும்ப வாழ்க்கையை பொது நலனுக்காக அமைத்துக் கொள்வோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள் மணமக்கள். சமூகத்தில் இருக்கும் சராசரி திருமணங்களை இந்த நோக்கில் ஒப்பிட்டு எழுதுவதில் என்ன தவறு? (உலகின் அழகிய மணமக்கள் என்ற வினவின் கட்டுரைக்கு வினவின் கருத்து)
–-----என்று எழுதி மெய் சிலிர்த்து கர்ஜித்துக் கொண்ட வினவு மேலுள்ள இந்தக் கல்யாணங்கள் பற்றியெல்லாம் வாயைத் திறக்காதது ஏன்? பெரிய எழுத்தாளர் சந்தனமுல்லையை அழைத்துச் செல்லாதது ஏன்?

இதில் இந்துக் கலாச்சாரம், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என ‘ஒரு தாலியும் கிடையாது’ (கரிசல் வட்டார வழக்கில் ‘ஒரு இழவும் கிடையாது’ என்பதை இவ்வாறும்…
VINAVU.COM

 

 


-- Edited by Admin on Friday 9th of September 2016 03:34:04 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

நேரடி விவாதத்திற்கு வாங்கடா.... https://t.co/ChDcrv6iQ4

“நேரடி விவாதத்திற்கு வாங்கடா....https://t.co/ChDcrv6iQ4
TWITTER.COM|BY PARAIYOASAI
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகஇஅ-வின் அயோக்கியதனம்- 19:

“நான் இப்பவே சொல்லிறேன். அப்பிடி இப்படின்லா நினைச்சுகிட்டு பின்னாடி சங்கடப்பட முடியாது. மனசுல ஒண்ண வச்சுகிட்டு மாத்திலாம் நடக்க முடியாது. என்க்கு அழகான பொண்ணு வேணும்.” இப்படி அமைப்பில சொல்லி பொண்ணு பாக்க சொன்னாரு மனித உரிமை போராளி சாரி (மனித உரிமை என்றுதான் வருகிறது) மக்கள் உரிமை போராளி வழக்குறைஞர் வாஞ்சிநாதன்.

அழகான பொண்ணுன்னா எப்படின்னு கேட்கிறீர்களா? அழகு பற்றி அறிஞர்கள் பலர் அளந்து உட்டுருக்கிறதெல்லாம் கதைக்கு உதவுமா? சினிமா நடிகை அளவுக்கு இல்லாட்டியும் சிவப்பா நல்ல இலட்சணமா இருக்கனும்னு சொல்லிட்டார். அப்படி இப்படின்னு சொந்தக்காரப் பொண்ணுதான் செட்டாச்சு.

திருமணம் மகஇக-வின் புரட்சிகர திருமணம். மணமகள் தலைநிறைய பூச்சூடி தங்க நகை அலங்காரம் ஜொலிக்க மகஇக-வின் பொதுச் செயலாளர் மருதையன் தலைமையில் வந்திருந்தோர் வாழ்த்துரை வழங்க சொதுச் செயலாளர் புரட்சிகர திருமணம் பற்றி வந்திருந்தோருக்கு அறிவுறுத்தும் சிறப்புரையுடன் நிறைவேறியது. இந்த கல்யாணத்தை மகஇக-வின் புரட்சித் திருணம் என்று ஏன் சொல்லி இருக்கிறேன். தாலி மிஸ்ஸிங். தாலி இல்லாட்டி புரட்சிதான்னுங்க தானே?

ஒரு வேடிக்கை. ஒரு தோழர் தன் மனைவியை இந்த கல்யாணத்திற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்து "அமைப்பு தோழர்கள் நகைகளெல்லாம் அணியமாட்டார்கள்; திருமணப் பெண்ணும் நகைகள் அணியமாட்டார்கள். அதனால் நீயும் நகையெல்லாம் அணியாமல் வா" என்று அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் கல்யாணப் பொண்ணு கோலத்தைப் பாரத்துவிட்டு அவர் கணவனிடம் "என்னை நகை போடாதேன்னு சொன்னீங்க, அங்க பாருங்க" என்று கல்யாணப் பொண்ண சுட்டிக்காட்டி கேட்டிருக்கிறார். அந்த தோழர் 'விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல்' கல்யாணத்துல கலந்துகொண்டு வந்துவிட்டார்

வினவில் இரட்டைத் தாலி என்ற ஒரு கட்டுரைக்கு முன் பதிவில் இணைப்புச் சுட்டி தந்திருந்தேன். படித்திருப்பீர்கள். அடுத்து இரட்டை கல்யாணம். இரண்டு பொண்டாட்டிகளுக்கும் ஒரே மகன். (ஒரு மகன் கல்லூரி பருவத்தில் விபத்தொன்றில் இறந்துவிட்டார்). ஏறக்குறைய 40பேர்கள் வேலை செய்யும் மதுரம் அப்பளக் கம்பெனியின் ஓனர் லயோனல் அந்தோனிராஜ். அவரது மகனின் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடப்பதுதானே முறை. மணமகன் கோட்சூட் அணிந்து கம்பீரத்துடன். மணமகள் நகை அலங்காரங்களுடன் ஏற்குறைய கிறித்துவ மணமகள் தோரணை.

முதல் கள்யாணம் மகஇக-வின் இணைச் செயலாளர் காளியப்பன் தலைமையில் புரட்சிகர திருமணங்கள் பற்றிய அறிவுரையுடன் மணமக்கள் உறுதிமொழி ஏற்று நடைபெற்றது.

அடுத்து பெற்றோர்கள் ஆசியுடன் மோதிரங்கள் எடுத்துக்கொடுக்க மணமக்கள் கிறித்துவ முறைப்படி மோதிரம் மாற்றிக் கொள்ள ஒரு கல்யாணம் அதே மேடையில் நடந்து முடிந்துவிடுகிறது. இதுவும் மகஇக-வின் புரட்சிகர திருமணம்தான். ஆமாம். பாதிரியார் மிஸ்ஸிங். அப்ப புரட்சிதானே.

மகஇக-வின் பாட்டாளி வர்க்க பண்பாட்டு நெறிமுறை என்ற வெளியீடு அனைவரும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இந்த சுட்டியில் இணைத்துள்ளேன். அதில் கட்சி அணிகளுக்கான நடைமுறை, மக்களுக்கான புதிய ஜனநாயகப் பண்பாட்டு நெறிமுறைகள் என்று இருபிரிவுகளாக உங்களுக்கு அப்படியே உடல் புல்லரிக்கும் அறிவுறைகளை வாரி வழங்கியுள்ளனர். அவர்களைப்போல் நீங்களும் படித்து மகிழுங்கள்.

https://drive.google.com/open…

கீழே இரண்டே இரண்டு மேற்கோள்களை மட்டும் தந்துள்ளேன். 
புரட்சிப் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்த அவர்களது பருண்மையான நிலைமைகளிலிருந்துதான் தொடங்க வேண்டும், தொடங்கவும் முடியும், இது சரியே. எனினும் 'இன்றைய நிலைமையில் இவ்வளவு கறாராக இருக்கக் கூடாது' என்ற முகாந்திரத்தில் ஒளிந்து கொண்டு, புரட்சிகர பண்பாட்டு நெறிமுறைகளில் கட்சி அணிகளை உணர்வு பூர்வமாக வளர்க்கும் கடமையை கட்சி கைகழுவி விட முடியாது. எந்த நிலைமையிலும் பாட்டாளி வர்க்க, கம்யூனிசப் பண்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். அப்பொழுது மட்டுமே பலவீனமான சிறிய அமைப்பாக இருப்பினும் கட்சி பலம் பெறும், வளரும், உறுதியடையும்.

(சிபிஐ. சிபிஎம் கட்சிகளின் பண்பாட்டு சீரழிவுகளை விமர்சித்துவிட்டு)

கம்யூனிசப் பண்பாடுகளை கறாராக கடைப்பிடிப்பதால் வறட்டுவாதிகள் என்ற குற்றச்சாட்டு நம்மை நோக்கி வீசப்பட்டுள்ள நிலையில் கம்யூனிசப் பண்பாடுகளை உயர்த்திப் பிடிப்பதும் நடைமுறையில் கடைப்பிடித்து முன்னுதாரணமாக திகழ்வதும் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனை உணர்ந்து சிறந்த கம்யூனிஸ்டுகளாக செயல்படுவோம். பரந்துபட்ட மக்களுக்கு சேவை செய்வோம். புரட்சியை முன்னெடுத்துச் செல்வோம் என்ற உறுதியேற்போம்.

இதில் இன்னொரு முக்கியமான கொள்கை விளக்கத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மகஇக தலைமை ஏற்று புரட்சிகரத் திருமணத்தை நடத்திவைக்க வேண்டுமென்றால் மணமக்கள் இருவரும் பாட்டாளி வரக்கப் பண்பாட்டை உயர்த்தி பிடிப்பவர்களாகவும் அதன் ஏதோ ஒரு அமைப்பில் உள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும். கேட்க நல்லாத்தான் இருக்கு…..

ஆனால் முக்கியமான பொறுப்பிலுள்ளவர்களின் இந்த கல்யாணங்களில் என்ன செய்வது. வெரி சிம்பிள்…. விதிமுறையை தளரத்திவிட்டால் போகுது. நமக்கு பண்பாட்டு நெறிமுறை முக்கியமா? முக்கிய பொறுப்பானவர்கள் முக்கியமா?….. சும்மா புரட்சின்னு வரட்டுத்தனமா இருக்க முடியுமா தோழர்!!!!! அவனுங்க கிடக்கிறாய்ங்க. அவதூறு பரப்புரானங்க. இத பொதுவில உள்ளவங்க, நம்மல எதிர்க்கிறவங்க எவரும் சட்டை செய்றதே இல்லை. குப்பைங்க. இது ……. துடைச்சு போடும் பேப்பர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ம.க.இ.க காமெடிகள் 3.

அவ்வாறாக நியூட்டன் தோழருடனான விவாதம் வளர்ந்தது. காரணம் நான் (முன்னர் இருந்த) அமைப்பு வேலைகளுக்கு செல்லும் அதே பகுதியில்தான் அவரும் ஒரு சில தொடர்புகளை காண வருவார். (அவர்கள் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல அவர்களிடம் இவர் நியூட்டன் என சொல்லி இருந்தாலும் இவரின் ஒரிஜினல் பெயர் சிவா என்பதை கண்டுபிடிச்சே வைத்திருந்தார்கள் இவர்கள் இப்படித்தான் பல இடங்களில் மரு வைத்து சுத்துவார்கள்).
எங்கள் அமைப்பு நபர்களிடம் அவர் சொல்லும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும் பொருட்டே நான் என் அண்ணனின் மூலமாக (அவர் அளவுக்கு எளிமையா பொது உடமை தத்துவத்தை புரிய வைக்கும் நபர்களை நான் இன்றுவரை கண்டது இல்லை).
பொது உடமை கருத்துக்களை படிக்க தெரிந்த்ய்கொள்ள ஆரம்பித்தேன்.
ஒரு கட்டத்தில் நான் இருந்த பழைய அமைப்பில் நான் கம்யூனிஸ ஆதரவாளன் எனும் குற்றச்சாட்டுக்கு!?!! கூட ஆளாகினேன்.
(எந்த அளவுக்கு என்றால் டெய்லி விளையாட போகும் புட்பால் க்ரவுண்டில் மூத்த சகோதரர் ஆன ஷஜஹான் பாய் என்னிடம் நேரடியாக கம்யூனிஸ்ட்டுகள் அராஜகவாதிகள் அவர்களை எல்லாம் சபோர்ட் செய்யவோ அவைகளை படிக்கவோ கூட செய்யாதே எனும் அளவுக்கு போச்சு)
தொடந்து கோவையில் சில விரும்பத்தகாத மத மோதல்கள் நடந்ததன அதன் நீட்சியாக 97ல் குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து பல்வேறு அடக்குமுறை இந்த சமூகத்தின் மீது. அதில் எனது மற்றும் தோழர் Abu Thahir குடும்பம் எல்லாம் நேரடியாக பதிப்புக்குள்ளானது அத தனி பதிவா பின்னர் எழுதலாம்.
அடக்குமுறையின் தொடர்ச்சியாக இஸ்லாமிய அமைப்புகள் முடக்கப்பட்டன. சமூகம் ஒருவித அநாதை நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னாட்க்களில் என்னால் போலிகள் என பிரச்சாரம் செய்யப்பட்ட சி.பி.எம் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த பி.ஆர்.என் என அழைக்கப்பட்ட பி.ஆர்.நடராசன் தோழர் அவர்கள்தான் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து ஒருசில அப்பாவிகள் மேல் வழக்கு தொடுக்க இருந்ததை காவல்நிலையம் வந்து சண்டை போட்டு அந்த இளைஞர்களை வெளியே கூட்டி வந்தது.
இன்னொரு பக்கம் எனது மாமா எம்.ஏ.பி.என கட்சியில் அழைக்கப்படும் எம்.ஏ.பாபு தோழர் (CITU) தன் கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்து சில இளைஞர்களை பொய்க்கேசு போடும் சூழலில் இருந்து காத்து வந்தார்.
இந்த குழப்பமான சூழலில் ஏதாவது செய்தே ஆகனும் எனும் தேடுதல் மட்டும் இருந்தது.
இந்த சூழ்லில்தான் மீண்டும் தோழர் நியூட்டனை எதார்த்தமாக சந்திக்க நேர்ந்தது.
அந்த சந்திப்பு தொடர்ச்சியாக நிகழ துவங்கி அவரால் அறிமுகப்படுத்தபப்ட்ட தோழர்களோடு புத்தக விற்ப்பனைக்கு பேருந்து விற்ப்பனைக்கு எல்லாம் செல்ல துவங்கியது (மேட்டுப்பாளையத்தில் என்னை கூட்டி போனவர் நான் பேருந்தில் பேச தயங்குவேன் என எண்ணி இருந்துள்ளார் தயக்கம் இல்லாமல் பேசுவது கண்டு முதலில் வருபவர்கள் தயங்குவார்கள் நீங்கள் பரவால்லையே என்றார். சிரித்தவாரே சொன்னேன் "வேடிக்கை பார்க்கும் முஸ்லீமே வீதியில் இறங்கி போராடு என்பதுதான் நான் இட்ட முதல் அரசியல் முழக்கம் அதுவும் 95இல் என்றேன்") இப்படியா நிகழ்வுகளுக்கு செல்வதும் நீடித்தது. என்னை பார்க்க வரும் அந்த தோழரை பேக்கரியில் இருக்கும் நண்பர்கள் குழு கிண்டல் செய்த போதும் கூட அதை கண்டித்து அவரை பற்றி பெருமையாக சொல்லி வைத்தேன் (அதில் பெரும்பான்மை இடையில் தோழர்களாக ஆனாவர்கள்தான் இப்போது இல்லை) ஆனா அந்த தோழர் என்னிடமே மிக கேவலமாக நடந்தார் அது பின்னர் தனி சப்ஜெக்ட்டா எழுதப்படும்.
இந்த சந்திப்புகள் ஒரு கட்டத்தில் நின்றுவிடுகிறது. நானும் சென்னை போயிட்டேன். அதன் பிறகு ஒரு நாள் குனியமுத்தூரில் பைக்கில் வந்து கொண்டிருந்த போது செக்கிங்கிர்க்காக நிறுத்தப்பட்டேன் காவல்துறையால். கொஞ்சம் ஸ்லோ பண்ணி ஓரமா நிறுத்திட்டு வந்த என்னை காவலர் எடுத்ததும் லைசென்ஸ் எங்கடான்னு கேட்டார்.
மரியாதையா கேட்க்க தெரியாதா..? என்றேன் என்னடா உனக்கு மரியாதை வாடா இங்க என்று குரலை உயர்த்தவே நானும் பதிலுக்கு பேச சாண்டை கொஞ்சம் முத்திவிட்டது.
அந்த நேரம் அங்கே இருந்த இஸ்லாமிய இயக்க நண்பர்களால் இந்த பிரச்சனை சமாதானம் செய்து வைக்கப்பட்டது.
மனது ஆரவில்லை எனவே நியூட்டனை தொடர்பு கொண்டு சம்பவத்தை சொல்லி ஒரு வழக்கறிஞர் இருந்தா சொல்லுங்க. இந்த காவலர் மேல் ஒரு வழக்கு போடலாம்னு கேட்டேன். அவர் மோகன்னு ஒரு தோழர் இருக்கார் மனித உரிமை பாதுகாப்பு மையம்னு நம்ம தோழமை அமைப்பு ஒண்ணு இருக்கு அவரிடம் பேசுங்க என எண் கொடுத்தார். தோழர் மோகனுடனான உரையாடல் வக்கறிஞர் சந்திப்பெனும் காமெடி எல்லாம் அடுத்த பதிவில்..... தொடர்வோம்

No automatic alt text available.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard