New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாரதியும் மதமாற்றமும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பாரதியும் மதமாற்றமும்
Permalink  
 


பாரதியும் மதமாற்றமும்

 
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குஇந்தியாவில் மதமாற்றம் என்பதுதாறுமாறாக நடந்துவருகிறது . அதுவும்தமிழகத்தில் நிம்மதியாய் ஒரு பஸ்ஸ்டாண்டை கடந்து செல்லமுடியாது .டிப்டாப்பாக வரும் ஆசாமிகள் திடீர் பிரச்சாரபீரங்கிகளாய் மாறி நம்மிடம் ரத்தம்கக்கிச்சாகுமளவிற்கு சாத்தானின் கதைகளைஅள்ளித்தெளிக்கிறார்கள் . உங்களுக்குகுடும்பத்தில் பிரச்சனையா ? மாறுங்கள்எங்கள் மதத்திற்கு ! உடனே உங்கள் பிரச்சனை , கஷ்டம் அனைத்தும்தீர்ந்துவிடும் என்று எர்வாமேட்டின் பாணியிலான இவர்களின்பிரச்சாரங்களால் மக்கு மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள் . 
oooooooooooooo.jpg
உலகில் பிரச்சனையில்லாதவன் எவனுமில்லை .உயிர்போனபின் என்ன பிரச்சனை என்று நமக்குதெரியாததால் , சாகும் வரை பிரச்சனைக்குப்பழக்கப்பட்டவர்களாய்த் தானிருக்கிறோம் .  இதற்காகநான் ஒன்றும் பிறமதங்களின் எதிரி என்றுஅர்த்தமில்லை . என் மதம் எனக்கு முக்கியம் .அதைக்காக்க என்னாலான பணியைச்செய்வேன் . அதுபிற மதங்களுக்கு எதிரானதாக இருக்கலாம் . 
 
கீழ்கண்ட நிகழ்ச்சி மகாகவி பாரதியார் வாழ்க்கைவரலாறு எனும் நாலில் இருந்து பெறப்பட்டது .
 
ஒருமுறை பாரதியைக்காண , அவருடைய நண்பர் சுரேந்தரநாத் ஆர்யாவந்திருந்தார் . ஆர்யா சுதந்திர போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டுஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று , விடுதலையாகிபாரதியைக்காண வந்திருக்கிறார் . சகல விசாரிப்புகளுக்கு பின் ,
பாரதி . உனக்கு விஷயம் தெரியாதே !நான் கிறித்துவனாக மாறிவிட்டேன்.சிறையிலும் வெளியிலும் டேனிஷ் பாதிரிமார்கள் எனக்கு மிகவும்பரிவுகாட்டிச்செய்த உதவியை நான் எப்படி வர்ணித்துச்சொல்வது ? நான்கிறிஸ்தவனாகிவிட்டேன் ” என்றார் ஆர்யா .
 
இப்படி நேரும் என்று நான் சந்தேகித்ததுண்டு , நீ என்ன செய்வாய் ?இந்துசமூகம் இருக்கிற நிலைமை இதற்கெல்லாம் இடங்கொடுக்கிறது ;உயிரற்றஜன சமூகம் ” என்று பதறிக்கொண்டே பாரதியார் கூறினாராம் .
 
ஜெயிலிலிருந்து நான் வெளிவந்தபிறகு என்னிடம் ஒருவரும்பேசத்துணியவில்லையே ! எங்கே போனாலும் என்னைக்கண்டுபயப்படுகிறார்கள் . பாதிரிமார்கள்தாம் என்னிடம் நல்லமுகம் காண்பித்து ,எனக்கு வேண்டிய ஒத்தாசைகள் செய்தார்கள் . பிரசங்கத்திலேகைத்தட்டுறதும் , வீட்டுக்குப்போனதும் பயப்படுகிறதுந்தான் இந்துக்களின்வேலை . இக்கூட்டத்தில் இருக்க  எனக்குச்சற்றுகூடப் பிடிக்கவில்லை .நான்கிறித்துவனானதில்ல உனக்கு வருத்தமோ ! ” என்றார் ஆர்யா .
 
பாரதியார் ஒன்றுமே சொல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தார் ; பிறகுசொன்னார் ; “மனக்கசப்பு அடைந்த ஒவ்வொரு இந்துவும் , அதுவும் புத்தியும்தைரியமும் தேசபக்தியும் நிறைந்த ஒவ்வொரு இந்துவும் ஜனசமூகத்தின்ஊழல்களைக் கண்டு மனம் சகிக்கமுடியாமல் , வேறு மதத்திற்குபோய்விட்டால் , அந்த ஹிந்து சமூகத்தின் கதி என்னவாகும் ! புருஷன் செய்ததப்பிற்கு மனைவி தற்கொலை செய்துகொள்வதும் , மனைவியின் தவறுக்காகபுருஷன் சந்நியாசம் வாங்கிக்கொள்வதும் சகஜமாய்ப் போனால் , குடும்பவாழ்க்கை என்பதைப்பற்றியே பேசமுடியாது . இனி நீ பாதிரிமார்களின்ஆளுகைக்குப் பயந்து நடக்கவேண்டியவன் . உன்னுடைய தேசபக்தியை(இந்த இடத்தில் பாரதி கண்ணீர்விட்டார் ) அவர்கள் மதப்பிரசாரத்து்ககாகபயன்படுத்திக்கொண்டாலும் கொள்ளக்கூடும் . உனக்கு நான் உபதேசம்செய்வது தவறு .”
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மேலும் பாரதி கூறியதாவது ,
ஒருவர் செய்த உதவிக்கு நன்றி பாராட்டுவது மனித இயற்கை . அதைஒப்புக்கொள்கிறேன் . அந்த இயற்கை இல்லாமல் போனால் உலகம்கட்டுக்கொள்ளாது . ஆனால் நன்றி காண்பிக்கும் பொருட்டு நாம் அடியோடுநம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதுண்ணோ ! ஹிந்து ஜனசங்கஆசாரங்களிலும் கொள்கைகளிலும் தினசரி வாழ்க்கையிலும் எத்தனையோஊழல்கள் , கசடுகள்  ஏறியிருக்கலாம் . அவைகளை ஒழிக்க நாம்பாடுபடவேண்டும் . அவைகளை ஒழிக்கமுடியாது என்று பயந்து , வேறுமதத்தில் சரண்புகுவது என்பது எனக்கு அர்த்தமாகாத சங்கதி . எல்லாமதங்களிலும் உண்மை உண்டு . நம்  ஹிந்து ஜனங்களிடம் நமக்கு ஆத்திரம்வரலாம் . அதற்காக அவர்களை ஒழிக்கவோ , அவர்களுடைய பரம்பரையைஏளனம் செய்து அவமதிக்க நாம் எண்ணலாகாது ”’.
 


இதுக்குமேல் என்ன சொல்வது ? ஒருவர் உங்களுக்கு உதவி செய்கிறார்என்பதற்காக உங்கள் மதத்தை விட்டு இன்று வெளியேருகிறீர்கள் . நாளைவேறொரு மதத்தவன் உதவி செய்து என் மதத்திற்கு வா என்று அறைகூவல்விடுத்தால் அந்த  மதத்திற்கும் மாறுவீர்களா ? நன்கு யோசியுங்கள் .மற்றவர்களுக்காக என்றும் மதமாற்றத்தில் இறங்காதிர்கள் . இதற்குமேலும்யாராலும் மதமாற்றத்தைப் பற்றி சொல்லிவிடமுடியாது . உணர்ந்துஒன்றிணையுங்கள் நண்பர்களே !!!
-மேக்னேஷ் திருமுருகன்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard