New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்தணர் என்போர் அறவோர்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
அந்தணர் என்போர் அறவோர்
Permalink  
 


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். (30-நீத்தார் பெருமை)

மு.வ உரை: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை: எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

Translation:Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue’s sons the name of ‘Anthanar’ men give,

Explanation: The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.

கலைஞர் உரை:அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார். ஆசையை துறந்த முனிவர்களையும் வள்ளுவர் அழைகின்றார்.

திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் என்ற சொல்-தமிழரின் பழமையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், இதன் பின் தொல்கப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்கணக்கு நூல்கள், இதன் பின்னரான இரட்டை காப்பியங்கள் சிலப்பதிகாரம் மனிமேகலையும், பின் திருமந்திரம் தொடங்கி பக்தி இலக்கியங்கள் என அறிஞர்கள் குறித்துள்ளனர். இலக்கியங்களில் பயன்பட்ட அதே பொருளில் தான் வள்ளுவரும் பயன்படுத்தியுள்ளார்.

பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
``ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்'' பதிற்றுப்பத்து - 24)

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச் பதிற்றுப்பத்து - 74

அந்தணன், பார்ப்பான், நான்மறையாளன், முனிவன் என்று குறிப்பிடப்படுகின்றனர். வேதம் அறிந்தவர்கள். அதனைத் தினந்தோறும் ஓதுபவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

அந்தணர் - பார்ப்பான் அறுதொழிலார் என நேரடியாக குறளில் வள்ளுவர் பன்படுத்தியுள்ளார்.
நாம் மேலே சங்க இலக்கியத்தில் காட்டியதில் வேள்விகள் சிறப்பித்து கூறப்படுவதயும் காண்கிறோம்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்1
மறைமொழி தானே 2மந்திரம் என்ப. தொல்காப்பியம்-செய்யுளியல்480
என் - னின். மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு.

திருமுருகாற்றுப்படை2. திருச்சீர் அலைவாய்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

இக்குறள் நீத்தார் பெருமை என்னும் குறளில் வருகிறது. எனவே- தொழில் ரீதியிலான அந்தணர்-அரசர்-வணிகர் போன்ற பிரிவுகளைக் குறிக்கவில்லை.
கடவுளையே அந்தணர் என அழைத்தல் சங்க இலக்கியத்தில் காணலாம்.

மேலும் வள்ளுவர் தொழில்முறை பார்ப்பனர், அந்தணர், அறுதொழிலார் என்றபடியே முறையே - 134,560,543 குறட்பாக்களில் கூறுவதால் இந்தக் குறளில் முனிவர்கள் ஒழுக்கத்தைய்யெ சொல்கிறார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புறநானூறு - 166 (26-1-4)
நன்றாய்நத நீ ணிமிர் சடை முது முதல் வன்வாய்போகா-
தொன்று புரிந்த வீரிரண்டின் ஆறுணர்ந்த வொருமுது நூல்


பரிபாடல் 3 (10,11)
மாயோய் நின்வயிற் பரந்தவையுறைத்தேம்
மாயா வாய் மொழி
ஆரிநீர்க்களிப்பிய அரன்நவில் கொள்கை
மூன்று வகை குறித்த முத்தீச்செல்வத்து
இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல



-
இங்கு நால்வேதங்கள்ஆறு வேதாங்கங்கள் பேசப்படுகின்றன.
அதன் நித்யத்வம்அபௌருஷேயத்வம் பேசப்படுகின்றன.


பெரும்பாணாற்றுப்படை 300-301
வளைவாய்க்கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகாப்பாளர் உறைபதிச்சேப்பின்
-இங்கு வேதம் பயிற்றுவிக்கும் முறை சொல்லப்பட்டதுகிளிப்பிள்ளை போல
அத்யயனம் செய்யும் முறை சந்தை-திருவை சொல்லப்பட்டது.


பதிற்றுப்பத்து 24 (68)
ஓதல் வேட்டலவை பிறர்ச்செய்தல்
ஈதலேற்றலென்றாறுபுரிந்தொழுகும்
அறம்புரியன்தணர் வழிமொழிந்தொழிகி


-இங்கு அறம்புரியன்தணர் ஆறு புரிந்தொழுகும் செயல்கள் ஓதல்,வேட்டல்இவைகளை
பிறருக்கு செய்தல்-ஓதுவித்தல்,வேட்டுவித்தல் மற்றும் ஈதல்,ஏற்றல் என்பவை சொல்லப்பட்டது.


.
மேலும்,
நான்மறை முனிவர் புறநானூறு 6
நான்மறை முதல்வர் புறநானூறு 26,93
கேள்வி உயர்ந்தோர் புறநானூறு 229
அருமறை அந்தணர் சிறுபாணற்றுப்படை204
நான்மறையோர் பட்டினப்பாலை202
வேள்வி அந்தணர் புறநானூறு361
வேள்வி மடித்த கேள்வி அந்தணர் பதிற்றுப்பத்து 



இவ்வாறு வேள்வி யாகம் என்பதும்கேள்வி வேதம் என்பதும் புலனாகிறது.



ஐங்குருனூறு202 (1-3)
நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப்போலத்
தாமும் குடுமித்தலய
-பார்ப்பனர் குடுமித்தலை பேசப்பட்டது



திருமுருகற்றுப்படை 182,187 (முருகனை வழிபடுதல்)
இருபிறப்பாளர் பொழுதரிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண் புலராக்கழகம் புலர
உடிஇ உச்சிக்கூப்பிய கையினர், தற்புகழ்ந்து ஆறு எழுத்து
அடக்கிய அருமறைக்கேள்வி நா இயல் மருங்கில் நவிலப்
பாடி விரை உறு நறுமலர் ஏந்தி-பெரிது உகந்து எரகத்து
உறைதலும் உரியன்.

-
இருபிறப்பாளர்(அந்தணர்,அரசர்,வைசிகர்)
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண் பூணூல்
அருமறைக்கேள்விவேதம்
.-ஒன்பதுஅதாவது மூன்று முப்புரி நூல் அணிதல் இன்றும் வழக்கத்தில் உள்ளது.பெரும்பாலும் இன்று மூன்று(ப்ரஹ்ம்மசாரி),ஆறு(க்ருஹஸ்தர்). சில சன்யாஸிகள் ஒன்பது அணிகிறர்க்ள்




இனி ஒரு அழகான பரிபாடல் இதோ:

மாயோன் கொப்பூழ் மலர்ந்ததாமாரைப்
பூவொடுபுரையும்சீரூர்பூவின்
இதழகத்தனையதெருவம்இதழகத்து
அரும்பொருட்டனைத்தேஅண்ணல்கோயில்
தாதினனையர்தண்டமிழ்குடிகள்
தாதுண்பறவையனயர்பரிசின்வாழ்நர்
பூவினுள்பிறந்தோன்நாவினில்பிறந்த
நான்மறைக்கேள்விநவில்குரலெடுப்ப
ஏமவின்துயிலெழதலல்லதை
வாழியவஞ்சியும்கோழியும்போலக்
கோழியினெழஆதெம்பேரூர்துயிலே

மாயோன்(திருமால்கொப்பூழ்(தொப்புள்மலர்ந்ததாமாரைப் பூவினுள்பிறந்தோன் (நான்முகன்-ப்ரஹ்மா))நாவினில பிறந்தநான்மறைக்கேள்வி(வேதம்).





குறுந்தொகை - 156
செம்பூ முருக்கினன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
படிவ உண்டி பார்ப்பன மகனே



-பலாச தண்டம்கமண்டலம் தரித்து விரதம் இருத்தல்


இவ்வாறு வேதம் கேள்வி,நான்மறைக்கேள்வி,நான்மறை,மறை,முதுமொழி,நிறைமொழி,
வாய்மொழி,அருமறைக்கேள்விஎன்று தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களிலும் குறிக்கப்பட்டிருக்கிறது.



மதுரைக்காஞ்சி 656-657(அந்தணர் அதிகாலையில் வேதம் ஓதுதல்)
ஓதல் அந்தணர் வேதம் பாடசீர் இனிது கொண்டு
நரம்புஇனிது இயக்கி

கலித்தொகை 119 -12,13(அறுதொழில் அந்தணர் தீயை வழிபடுதல்)
அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து செந்தீச்செவ்வழல்
தொடங்க வந்ததை அறுதொழில் அந்தணர் அறம் புரிந்து
எடுத்த தீயொடு விளங்கும் நாடன்வாய்வாள் வலம்படு
தீவின்பொலம் பூண்வளவன்

 

மதுரைக்காஞ்சி656-657(அந்தணர்அதிகாலையில்வேதம்ஓதுதல்)
ஓதல்அந்தணர்வேதம்பாடசீர்இனிதுகொண்டு
நரம்புஇனிதுஇயக்கி


மேலும்,
"ஆயிரம் வேட்டலின்றும் ஓர் உயிர் செகுத்து உண்ணாமை நன்று"
இதுவும் பரமாசார்யார் முதலியோர் விளக்கி இருக்கிறர்கள். இது துறவு அதிகாரத்தில் வருகிறது.
எனவே ஸன்னியாஸி விஷயம் இது.ஸன்னியாஸிக்கு யாகம்(வேட்டல்) முதலிய அக்னி கார்யம்
கிடையாது. இது க்ருஹஸ்த(இல்லறத்தான் அறம்) தர்மம். ஆகவே இல்லறத்தான் அறமான வேட்டலோடு துறவியின் அறமான "செகுத்து உண்ணாமை" ஒப்பிட்டு கூறப்பட்டது. அதுவும் இரு பொருள்களை சீர்தூக்கி ஒத்து் நோக்கும் போது/ஒப்பிடும் பொது இரண்டும் சம அந்தஸ்து உடையனவாக இருத்தல் வேண்டும்.மேலும் திருவள்ளுவரே "அவி உணவை" புகழந்து இருக்கிறார்.

இக்குறளும் மனு ஸ்ம்ருதியில் உள்ளது.இதை அப்புறம் நோக்குவோம்.
மேலும் பார்ப்போம். பிறகு திருக்குறளுக்கு வருவோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருக்குறளில் அந்தணரும் வேதமும் ! (Post No.3296)

img_8188

Written by S. NAGARAJAN

 

Date: 28 October 2016

 

Time uploaded in London: 5-38 AM

 

Post No.3296

 

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 1

 

திருக்குறளில் அந்தணரும் வேதமும் !

 

                      ச.நாகராஜன்  

இந்த ஆய்வில் சங்க இலக்கியம் மட்டுமே இடம் பெறுகிறது. சங்க இலக்கியம் என்பது : –                               எட்டுத் தொகை நூல்கள்,

பத்துப்பாட்டு  நூல்கள்,

பதினெண்கணக்கு நூல்கள் ஆகியவையே.

 

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்    

செந்தண்மை பூண்டொழுகலான்   (குறள் 30)

 

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் அந்தணர் என்போர் அறவோர்.

இனிய நீர்மையும் கருணையும் கொண்டவர் ஆதலின் அந்தணர் அறவோர் ஆவர்.

ஈர நெஞ்சத்து அந்தணர் (பரிபாடல் 14) என்பதால் கருணை உள்ளம் கொண்டவர் அந்தணர் என்பது பெறப்படுகிறது

அறவாழி அந்தணன் (குறள் 8)

இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் (கலி 88) என்ற இடங்களில் இறைவனை அந்தணன் என்ற சொல் குறிக்கிறது.

 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்   (குறள் 134)

ஓத்துக் கொளல் என்பது வேதம் ஓதுதல்.

ஒருவேளை வேத்ம ஓதுவதை மறந்தாலும் கூடத் திருப்பி ஓதிக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கத்தை இழந்தால் பார்ப்பான் உயர்வு ஒழிந்து இழிவான்.

மறப்பினும் என்று உம் போட்டுச் சொல்லப்படுவதால் வேதம் ஓதுவதை அந்தணன் ஒருபோதும் மறக்க மாட்டான் என்பதை அவர் குறிப்பிடுகிறார்..

மிகக் கடினமான பயிற்சியை மேற்கொண்டிருக்க வேண்டியிருப்பதாலும் தொடர்ந்து தினசரி அதை ஓத வேண்டியிருப்பதாலும் வேதத்தை மாற்றவும் முடியாது. மறக்கவும் முடியாது.

ஜட பாடம், கன பாடம் என்பது எல்லாம் சிக்கல் நிறைந்த ஓதல் பயிற்சிகள். கனபாடத்தில் தேர்ந்தவர்களே கனபாடிகள் ஆவர். ஆனால் இந்த வேதம் ஓதுதல் மறந்தாலும் கூட ஒருவேளை திரும்பப் பெறக்கூடும். ஆனால் ஒழுக்கம் இழந்தாலோ, பிறப்பே கெடும் என அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் என்று இந்த இரண்டையும் இணைத்துப் பின்னாலே வந்த நறுந்தொகை கூறுகிறது.

பார்ப்பான் என்பது மெய்ப்பொருள் அல்லது பிரம்மத்தைப் பார்ப்பான் என்பதைக் குறிக்கும்.

 

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்    (குறள் 28)

 

நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப என்ற தொல்காப்பிய வரிகளை இங்கு நோக்கினால் அர்த்தம் எளிதாகப் புரியும்.

 

தவமும் தெய்வத்திருவருளும் அறிவும் உடையோரின் சொல்லே மந்திரம் ஆகிறது. அதையே மறைமொழி என்று இங்குக் காண்கிறோம்.

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்                    

நின்றது மன்னவன் கோல்         (குறள் 543)

அந்தணர் நூல் வேதமாகும். அதற்கும் அறத்திற்கும் ஆதியாய் நிற்பது மன்னவனால் செலுத்தப்படும் செங்கோல்.

ஆகவே அறத்தை அடிப்படையாகக் கொண்டு வேத நூலைப் போற்ற மன்னவன் கோல் செங்கோலாக அமைதல் வேண்டும்.

 

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்                          

பெருமிறை தானே தனக்கு        (குறள் 847)

 

அரிய மறைப்பொருளை உணர்ந்து அதன் வழி நடக்காமல் இருக்கும் அறிவிலாதவர் தனக்குத் தானே பெரும் தீங்கினை இழைத்துக் கொள்வர்.

இங்கு உபதேசம் குறிப்பிடப்படுகிறது. கேட்ட மறைப் பொருளை – உபதேசப் பொருளை உட்கொள்ளாதவன் அறியாமையால் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதை இந்தக் குறள் நன்கு உணர்த்துகிறது.

 

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்               

ஆன்றாரோ டொப்பர் நிலத்து   (குறள் 413)

செவியுணவு என்பது கேள்வி.

வேள்வியில் ஆகுதியாக்கப்படும் அவி உணவு தேவருக்கான உணவு.  செவி உணவாகிய கேள்வியில் மிக்கார் இங்கு நிலவுலகில் இருப்பினும் கூட அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

கேள்வியையும் வேள்வியையும் வள்ளுவர் கையாளும் பாங்கு நம்மை பிரமிக்க வைக்கிறது.

 

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் செகுத்து உண்ணாமை நன்று  (குறள் 259)

இந்தக் குறளில் மாபெரும் அறப் பண்பை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

ஹவிஸ் என்பது தமிழில் அவி ஆயிற்று. நெய்யை ஆகுதியாக ஹவிஸாகக் கொடுத்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதைக் காட்டிலும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.

ஆக, –

அந்தணர் அறவோர் எனப்படுவதும் அவர்கள் வேதம் ஓதுதலைச் செய்யும் ஒழுக்கம் உடையவர் என்பதும், இந்த அந்தணர், வேதம், அறம் இவை செழித்திருக்க மன்னவன் செங்கோல் சரியாக இருக்க வேண்டும் என்பதும் வள்ளுவரின் கூற்று.

மறைப்பொருளை உணராமல் இருப்பவன் தனக்குத் தானே கெடுதி செய்து கொள்கிறான் என்பதை வலியுறுத்திய வள்ளுவர் அவி உணவை உட்கொள்ளும் தேவரோடு கேள்விச் செல்வத்தில் மேம்பட்டவர் ஒப்பாவார் என்றும் அவி சொரிந்து ஆயிரம் யாகங்களைச் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நன்று என்றும் கூறுகிறார்.

வேதம், பார்ப்பான், ஹவிஸ், தேவர், மன்னவன் கோல், அறம் ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் இணைக்கப்பட்ட அறச் சாறை சில குறள்களிலேயே அள்ளித் தருகிறார் வள்ளுவர்.

மிக உயரிய நூலாக வேதம் கருதப்படுவதையும், அதை ஓதுபவர் அறவோர் என்பதையும், அதைக் காப்பதே மன்னவன் கடமை என்பதையும் வள்ளுவர் குறள்களில் நிலை நிறுத்திக் காண்பிக்கிறார்.

இதுவே வேதம் மற்றும் அந்தணர் பற்றிய வள்ளுவர் கொள்கை!

 

பின்னாலே எழுந்த ஏராளமான தமிழ் இலக்கிய நூல்களில் இந்தக் குறள்களை அடியொட்டிய ஏராளமான பாக்களைப் பார்க்கலாம். அதன் அடியொட்டிய அற்புத வரலாறுகளையும் படிக்கலாம்.

******

சங்க இலக்கியம் குறிக்கும் தெய்வங்களைப் பற்றிய எனது முந்தைய கட்டுரையைப் படித்த தமிழ் ஆர்வலரின் மடலே இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கக் காரணம். (அவரது மடலைக் கட்டுரையின் விமரிசனப் பகுதியில் காண்க)

பல ஆண்டுகளாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த இந்தத் தொடருக்குப் பிள்ளையார் சுழி போட வைத்த அன்பருக்கு நன்றி. சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இன்று நமக்கு போலியாக ஊட்டப்படும் பல பொய்க்கருத்துக்கள் போகும்; தமிழ்ச் சமுதாயம் மேம்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 திருமுருகாற்றுப்படையில் அந்தணரும் வேதமும்! (Post No.3299)

img_4204

Written by S. NAGARAJAN

 

Date: 29 October 2016

 

Time uploaded in London: 9-11 AM

 

Post No.3299

 

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 2

 

திருமுருகாற்றுப்படையில் அந்தணரும் வேதமும் !

 

                      ச.நாகராஜன்  

317 அடிகள் கொண்ட திருமுருகாற்றுப்படை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய அற்புத நூலாகும்.

பாட்டுடைத் தெயவம் குமரவேள். பத்துப் பாட்டில் இடம் பெறுகிறது இது.

சங்க இலக்கியம் தோன்றிய காலத்தில் பிற்பகுதியில் இயற்றப்பட்ட நூல் இது என்பர் சிலர்.

12 திருமுறைகளில் 11ஆம் திருமுறையில் இது இடம் பெறுகிறது.

முருக பக்த்ரகளுக்கு (விவாதம் தாண்டிய) பக்தி உணர்ச்சியைத் தரும் பக்தி நூல் இது. இலக்கிய அன்பர்களுக்கோ சிலிர்க்க வைக்கும் தமிழ் இன்பத்தை ஊட்டும் நூல். ஆய்வாளர்களுக்கோ பல்வேறு துறைகளில் ஆய்வை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பை நல்கும் சிந்தனைக் களஞ்சியமான  நூல்.

 

 

குமரவேளின் அருமைக்காக ஒரு முறையும், தமிழ்ச் சொற்களின் அழகிய இயல்புக்காக ஒரு முறையும், படிக்கும் போது மீதூறி வரும் பக்திக்காக ஒரு முறையும், தமிழர் தம் பண்பாட்டை தெள்ளிதின் தெரிந்து கொள்வதற்காக ஒரு முறையும், அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்ற பிரப்ஞ்ச நியதியைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு முறையும், மேலாம் முக்தி நிலையை அடைய வழிகாட்டி அழைத்துச் செல்லும் நூல் என்பதால் ஒருமுறையும் ஆக ஆறுமுகத்தைப் போற்றும் இந்த நூலை ஆறுமுறை அவ்வப்பொழுது படிக்கலாம்.

 

 

ஒருமையுடன் மனதைச் செலுத்திப் படிப்போர் இன்பம் அடைவது உறுதி. இந்தக் கட்டுரைக்கான வடிவமைப்பில் நாம் பார்க்க வேண்டிய அந்தணர், வேதம் ஆகியவை வரும் பகுதிகளை (மட்டும்) இனிப் பார்ப்போம்.

 

முதலில் 177 முதல் 183 முடிய உள்ள வரிகளைப் பார்ப்போம்:

 

“இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி

அறுநான்கு இரட்டி இளமை நல்யாண்டு

ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்”

 

அந்தணர் பற்றிய விரிவான விளக்கத்தை இப்பகுதி தருகிறது.

இதில் குறிப்பிடப்பெறும் இரு மூன்று எய்திய இயல்பு ஓதல்  என்பது ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,ஈதல், ஏற்றல் என்னும் ஆறாகிய நன்மையைக் குறிக்கிறது. அந்தணர் குல  மரபின் படி இந்த ஆறு தொழில்களையும் வழுவாது பரம்பரை பரம்பரையாகக் காத்து வருபவர்கள் அந்தணர் எனப்து இதனால் பெறப்படுகிறது.

 

 

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி என்பதால்  தாய் வழியிலும் தந்தை வழியிலும் தூய்மையான  குடியினைச் சேர்ந்தவர்கள் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.

குடி என்பது கோத்திரத்தைக் குறிக்கிறது. கௌசிகம், வாதூலம், கச்யபம் போன்ற கோத்திரங்கள் இந்த வார்த்தையால் குறிக்கப்படுகிறது.

 

 

அறுநான்கு என்றால் இருபத்திநான்கு அதை இரட்டித்தால் வருவது 48. ஆக 48 ஆண்டுக் காலம் பிரமசரியத்தைக் காத்தலை இந்த வரி காட்டுகிறது.

 

48 ஆண்டுகள் பிரமசரியம் காக்கும் பழக்கத்தை இறையனார் அகப்பொருளுரையில் “நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியம் காத்தான்” என்ற வரியாலும் தொல்காப்பிய களவியல் உரையிலும் கூடக் காணலாம்.

 

 

அறன் நவில் கொள்கை என்பதால் அந்த அந்தணர்கள் அறத்தைத் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டும் பண்பைக் கொண்டவர்கள் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது. அற வாழ்க்கையே அவர்களது message!

மூன்று வகை குறித்த மூத்தீச் செல்வம் என்பது காருகபத்தியம்,ஆகவனீயம்,தட்சிணாக்கினி ஆகிய மூன்று வகை அக்கினியைக் குறிக்கும். மூன்று வகை அக்கினிக்கும் வெவ்வேறு வடிவங்கள் உண்டு. சிறப்புகள் உண்டு. இது பற்றிய விளக்கத்தைக் கல்ப சாஸ்திரத்தில் விரிவாகக் காணலாம்.

இருபிறப்பாளர் என்பது அந்தணர் தாய் வயிற்றில் அடையும் ஒரு பிறப்பையும் பின்னர் உபநயனத்தின் போது காயத்ரி மந்திரத்தை உபதேசமாகப் பெறும் போது அடையும் ஞானப் பிறப்பாம் இரண்டாம் பிறப்பையும் கொள்வதைக் குறிப்பிடுகிறது. அந்தணருக்கான இன்னொரு பெயரே இருபிறப்பாளர்.

 

 

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் என்பதால் ஒன்பது இழைகளைக் கொண்ட பூணூலை அணிந்த அந்தணர்கள் என்பது காட்டப்படுகிறது. மூன்று மூன்று இழைகளாக மூன்று பூணூலை அதாவ்து  மொத்தம் ஒன்பது இழைகளைக் கொண்ட பூணூலை அணிந்தவர்கள் என்பது திருத்தமாக விளக்கப்படுகிறது.

img_4205

அடுத்து 185,186,187 அடிகளைக் காண்போம்;

 

உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து

ஆறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி

நாவில் மருங்கின் நவிலப் பாடி

 

என்பதால்

தலைக்கு மேலே குவித்து வைத்த கைகளுடன் முருகனைத் துதித்து ஆறு எழுத்து அடங்கிய இரகசியமான மந்திரத்தை  (நம; குமாராய) நாக்கு அசையும் அளவில் பயிலும் படி உச்சரிக்கும் அந்தணர்  என்பது பெறப்படுகிறது.

 

ஆறுமுகத்தின் செயல்களை விளக்க வரும் நக்கீரர்,

 

ஒருமுகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்வி யோர்க்கும்மே (வரிகள் 94,95,96)

என்று கூறுகிறார்.

 

அதாவது முருகனின் ஒரு முகம் மந்திரத்தை உடைய வேதத்திலே விதித்தலை உடைய ம்ரபு வழி வந்த பிராமணர்களின் யாகங்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் நிலையாக் நிற்கும் படி காக்கின்ற தொழிலை மேற்கொள்கிறதாம்!.

 

அந்தணரைக் காப்பதும் அவரது வேள்வி நன்கு நடக்கும் படி அருளுவதும் வெற்றிவேலனின் திருவருட்செய்கையாக இயல்பாகவே இருக்கிறது.

 

இனி 155,156ஆம் அடிகளில் இந்திரனைக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.

 

நூற்றுப்பத்தடுக்கிய நாட்டத்து நூறுபல்

வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து”

 

இந்திர பதவியை அடைவது என்பது எளிதல்ல. நூறு அஸ்வமேத யாகம் செய்த ஒருவ்ரே இந்திர பதவி பெறும் தகுதி உடையவராவார்.  நூறு பல்வேள்வி முற்றிய இந்திரன் நூற்றுப்பத்தடுக்கிய கண்களை உடையவன். அதாவது ஆயிரம் கண்களை உடையவன்.

 

 

அவன் இந்த வேள்வி பலத்தினால் பகைவரை வெற்றி கொள்பவன் (வெனறடு கொற்றம்)!!

இங்கு யாகத்தின் சிறப்பு கூறப்படுகிறது.

 

ஆக அந்தணர் பெருமை, அவர்களைக் காக்கும் முருகனின் அருள் திறம், வேள்வி பல் செய்ததால் இந்திர பதவி அடைதல் உள்ளிட்ட நுட்பமான கருத்துக்களைத் திருமுருகாற்றுப்படை தெளிவாக விளக்குகிறது.

 

 

பண்டைய தமிழ்ச் சமுதாயத்தில் அந்தணர் பெற்றிருந்த இடத்தையும், அவர்கள் இயல்பையும், வேள்வியின் மஹிமையையும் திருமுருகாற்றுப்படையின் இப்பகுதிகள் விளக்குகின்றன.

******

சங்க இலக்கிய ஆய்வில் முதலாவது கட்டுரை :  திருக்குறளில் அந்தணரும் வேதமும்.

மறு வெளியீடு செய்ய விரும்புவோர் தவறாது ப்ளாக்கின் பெயர், கட்டுரையாளர் பெயரை வெளியிட வேண்டுகிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பிராமணன் தலையில் பிறந்தான்; சத்திரியன் தோளில் பிறந்தான்; வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான்! - இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத திராவிடக் குஞ்சிகள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் புகட்டி எலும்புகளைக் கவ்விக் கொண்டிருக்கிறது:
-----------------------------------------------------------------------------------
உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது. சமஸ்கிருதம் தெரியாமலேயே நீங்கள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் புகட்டிவிடும் போது. சமஸ்கிருதம் அறிந்து அடியேனால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லிவிட முடியும்.

புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:
---------------------------------------------------------------------------
”பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:
ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” (ரிக் வேதம் 10-90-12)

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்:
-----------------------------------------------------
பிராமணஸ்ய - பிராமணன் உடைய; 
முகமாஸீத் - முகமானது பிரகாசமாய் இருத்தல்;
பாஹீ - தோள்கள் வலிமையாக
ராஜான்ய - சத்திரியர்கள்
க்ருத - மத்திய
ஊரு - தொடை
ததஸ்ய - தத்துவம் நிறைந்த
யத் வைஷிய - இந்த வைஷியர்கள்
பத்ப்யாகும் - பாதமாக
சூத்திரோ - சூத்திரன்
அஜாயத் - வலிமைமிகுந்தவனாக (ஆஜானபாகு).

ஸ்லோகத்தின் பொருள்:
--------------------------------------
வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபன பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும், அதாவது பார்வையில் நேர்மை, எண்ணத்தில் தூய்மை, வாயில் வாய்மை பொருந்தியவனாக இருத்தல் வேண்டும். பிரம்ம தேவரின் முகத்தை ஒத்து இருத்தல் வேண்டும்.

இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அவனால் போர்களையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும்.

வைஷியனாவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றிர்க்கு வஞ்சனை அளிக்காமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும்.

சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும் அத?ற்கு அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும்.

இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?
------------------------------------------------------------------
அடியேன் மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது? வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.

பிறப்பால் வர்ணங்கள் இல்லை - மனு தர்மம்:
-----------------------------------------------------------------------
பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,

“ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே”

அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே, தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்). இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.

இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:
--------------------------------------------------------------------
ஜன்மனா - பிறப்பால்; ஜாயதே - பிறந்த அனைவரும்; சூத்ர - சூத்திரரே; கர்மணா - தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ - இருபிரப்பாளனாக; ஜாயதே - பிறப்பாளன் ஆகிறான்.

மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்த்தத்தில் ஜ, ஜா என்னும் வார்த்தைகள் எங்காவது காண முடிகிறதா?
-----------------------------------------------------------------------------------
இதற்கு மேலும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard