New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி!


Guru

Status: Offline
Posts: 24601
Date:
யார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி!
Permalink  
 


யார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி!

மார்ச் 18, 2012

யார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி!

 

தில்லியில் இந்தியா-டுடே 2012 நிகழ்ச்சி: சனிக்கிழமை (17-02-2012) இந்தியா-டுடே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டதால் பல அரசியல்வாதிகள் கலந்து கொள்ளவில்லை அல்லது எதிர்ப்பு தெரிவிக்க அம்மாதிரி செய்தார்கள் என்று சொல்லப்பட்டது. அந்த பட்டியிலில் – பிரணாப் குமார் முகர்ஜி, அகிலேஷ் யாதவ், ஒமர் அப்துல்லா முதலியோர் அடங்குவோர்[1]. தேர்தலுக்குப் பிறகும் காங்கிரஸ் ருஷ்டியை விட்டு விலகியே இருப்பது முஸ்லீம் ஓட்டு வங்கி குறையக் கூடாது என்ற எண்ணம் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ருஷ்டியின் வரவு பற்றி ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை.

 

எனதுவருகையைதடுத்ததேகாங்கிரஸ்தான்ருஷ்டி[2]: அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்னை ராஜஸ்தான் இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்ள விடாமல் காங்கிரஸ் கட்சி சதி செய்துள்ளது என பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கூறினார். டில்லி வந்திருந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டி, டில்லியில் நடக்கவுள்ள எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கூறினார். கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் ருஷ்டி கலந்து கொள்ள முஸ்லிம் மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என ராஜ்தான் அரசு கூறியதால், அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. தற்போது டில்லியின் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு முன்னதாக அவர் பேட்டியளிக்கையில், இந்திய மண்ணில் கால் வைக்க இத்தனை எதிர்ப்புகள் வரும் என எதிர்பார்க்கவில்லை. எனது வருகையினை எதிர்ப்பதில் அரசியல் காரணங்கள் உள்ளன. இந்தியாவில் தேர்தல் நடந்த நிலையில் முஸ்லிம்களில் ஒட்டுவங்கிக்காக, எனது வருகையினை தடை செய்துவிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்குள்ளது என்றார். முன்னதாக டில்லியில் நடந்த கருத்தரங்கில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முதல்வர் ஒமர்அப்துல்லா உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சல்மான் ருஷ்டி இம்ரான் கானை சாடினார்: அதில் கலந்து கொண்ட சல்மான் ருஷ்டி, பாகிஸ்தானின் முந்தைய கிரிக்கெட் வீரர் மற்றும் தற்பொழுதைய அரசியல்வாதியான இம்ரான் கானை சாடினார்.  இம்ரான் கான் அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொள்ள மறுத்ததுடன், சல்மான் கானின் எழுத்துகளால் முஸ்லீம்கள் அளவிட முடியாத பாதிப்படைந்துள்ளார்கள் என்று தனது பேட்டியில் கூறினர். அதற்கு சல்மான் ருஷ்டி, இம்ரான் எனது பௌன்ஸர்களுக்கு பயந்துததன் ஒதுங்கிக் கொண்டார்போலும்[3]; இஸ்லாம் பெயரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளால் தான் பாகிஸ்தான் மக்கள் அளவிட முடியாத அளவிற்கு பாதிப்படைந்துள்ளார்கள். ஒசாமா பின் லாடனை 80% பாகிஸ்தனிய மக்கள் ஹீரோ என்று மதிக்கின்றனர். ஆனால், முல்லாக்களால் நடத்தப் பட்டு வரும் அரசியலில் மக்கள் பொருளாதார ரீதியில் முனேற்றாம் அடையவில்லை, படிப்பறிவையும் பெறவில்லை என்று அடுக்கிக் கொண்டு போனார். இம்ரான் கான், முகமது கடாபியைப் போலவே தோற்றமளிக்கிறார் என்று கிண்டலடித்தார்[4]. முகமது கடாபி படம் ஏதாவது எடுப்பதாக இருந்தால், அந்த வேடத்திற்கு சரியான ஆள் இம்ரான் தான், ஏனெனில் அவர் அப்படியே காட்சியளிக்கிறார்[5].

ராஹுலையும் மற்ற இளைய அரசியல்வாதிகளையும் கிண்டலடித்தார்: காங்கிரஸ் தரப்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லையென்றாலும், தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு, தன்னை தடை செய்ததால், ராஹுல் எந்த பலனையும் பெறவில்லை என்று கிண்டலடித்து பேசினார்[6]. வழக்கம் போல திக்விஜய் சிங் இதற்கு எதிர்பாட்டு பாடியுள்ளார்[7].

இந்திய அரசியல்வாதிகளை விமர்சித்ததற்கு பி.ஜே.பி எதிர்ப்பு: இந்திய அரசியலில் திறமையான தலைவர்கள் இல்லை என்றும், அரசியல் சிரிப்புற்குள்ளாகி வரும் நிலையில் உள்ளது என்றும் குற்றாஞ்சாட்டினார். இந்த கருத்தை பி.ஜே.பி எதிர்த்துள்ளது[8]. இருக்கும் நிலைமைக்கு காங்கிரஸ்ததன் காரணம் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்[9]. அவரிடமிருந்து யாரும் சான்றிதழைப் பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று வாதிட்டார்.

கருத்து சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு, அடக்குமுறை: கருத்து சுதந்திரம் காக்கப்படவேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, மேற்கத்தைய நாடுகளிலும் அத்தலைய “சென்சார்” செய்யும் வழக்கம் உள்ளது[10]. மற்ற மக்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்று எப்பொழுதும், கட்டுப்பாடு கொண்டு வந்தால், கருத்து சுதந்திரம் இருக்காது. அதனால் அது பாதுகாக்கப் படவேண்டும் என்று பேசினார்.

 


[2] தினமலர், எனதுவருகையைதடுத்ததேகாங்கிரஸ்தான்ருஷ்டி,http://www.dinamalar.com/News_Detail.asp?Id=429100

[5] “Have you noticed the physical resemblance between Imran Khan and Gaddafi?” the author went on, with a grin. “If you were making a movie of the life of Gaddafi and you wanted a slightly better-looking version of Gaddafi you might cast Imran Khan.”



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard