New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாகிஸ்தான் எல்லையில் கோடிக்கணக்கில் போதைப் பொருள் பிடிப்பட்டது: ஜிஹாதிகள் போதை மருந்துடன் வ


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பாகிஸ்தான் எல்லையில் கோடிக்கணக்கில் போதைப் பொருள் பிடிப்பட்டது: ஜிஹாதிகள் போதை மருந்துடன் வ
Permalink  
 


பாகிஸ்தான் எல்லையில் கோடிக்கணக்கில் போதைப் பொருள் பிடிப்பட்டது: ஜிஹாதிகள் போதை மருந்துடன் விளையாடுவதேன்?

அக்டோபர் 8, 2011

பாகிஸ்தான் எல்லையில் கோடிக்கணக்கில் போதைப் பொருள் பிடிப்பட்டது: ஜிஹாதிகள் போதை மருந்துடன் விளையாடுவதேன்?

போதை மருந்து குழுக்கள் மாறி அமைந்துள்ள நிலை: ஒப்பியம் என்ற போதைப் பொருளைத் திருட்டுத் தனமாக உற்பத்தி செய்வதில் ஆப்கானிஸ்தான் முதலிடம் வகிக்கிறது. மயன்மார் / பர்மா இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்குள்ள தீவிரவாத குழுக்கள் இஸ்லாம், மாவோயிஸம் என்று பிரிந்து இருந்தாலும், போதை மருந்து விஷயத்தில் ஒன்றாகவே வேலை செய்து வருகின்றன[1].  தாலிபான், லஸ்கர்-இ-தோய்பா போன்ற ஜிஹாதி குழுமங்கள் “தங்க முக்கோணம் / தங்கப் பிறை” (Golden Triangle[2] / crescent[3]) என்ற போதை மருந்து உற்பத்தி, கடத்தல் மற்றும் வியாபாரங்களுக்கு பெயர் போன இடத்திலிருந்து செயல்பட்டு வருவது தெரிந்த விஷயமே. ஜிஹாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பிரதேசம், ஒசாமா இறப்பிற்குப் பிறகு, பிளவு பட்டு தனித்தனியாக செயல்பட்டு வர ஆரம்பித்துள்ளன.   காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டு, புதிய அரசை உருவாக்க அதில் ஒரு கூட்டம் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. போதை மருந்தும், ஆயுத விற்பனை மற்றும் தீவிரவாதம் முதலியவை சேர்ந்தே செயல்படுகின்றன. எல்.டி.டி.இயின் ஆதிக்கம் குறைந்த பிறகு, ஜிஹாதி குழுமங்கள் முழுவீச்சில் இந்த தொழிலில் இறங்கியுள்ளனர்.

ஜிஹாதிகளின் இந்தியாவில் நடத்தும் சதி திட்டங்கள்: இந்தியாவில் போதை மருந்தை பரப்புவது, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது, தீவிரவாதத்தை ஊக்குவிப்பது என்பதெல்லாம் ஒன்றுக்கு ஒன்றாக பிணைந்து ஜிஹாதிகள் செய்து வருகின்றன. இது வரை இல்லாத அளவிற்கு ஹெராயின் என்ற போதைபொருளுடன் இந்திய எல்லைக்குள் புக முற்பட்ட கடத்தல்காரர்களை எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். இதில் கடத்தல்காரர்கள் விட்டு சென்ற 27 கிலோ நார்காட்டிக் என்ற போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது[4]. ஹெராயின் பொட்டலங்கள் பாகிஸ்தான் எல்லையிலிருந்து கடத்தல்காரர்களால் வீசப்பட்டன என்றும் செய்திகள் கூறுகின்றன[5]. வ்இதைத் தவிர 1.98 லட்சம் இந்திய கள்ளநோட்டுகள், சைனாவில் தயாரிக்கப் பட்ட துப்பாக்கி, 20 சுற்று வெடிபொருட்கள் முதலியவையும் கைப்பற்றப் பட்டன[6]. பாகிஸ்தான் – சீனா சம்பந்தம் இதில் நன்றாகவே வெளிப்படுகிறது[7].

ஜிஹாதிகள் போதை மருந்துடன் விளையாடுவதேன்? பொதுவாக இஸ்லாமிய ஜிஹாதிகள் போதை மருந்துகளில் ஈடுபடக்கூடாது, ஈடுபட மாட்டார்கள் என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள், ஆனால், இவர்கள், இத்தகைய தொழிலில் ஈடுபடுவது, வேறு உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்திய – பாக்., எல்லை பகுதியான அட்டாரி பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், இந்நேரத்தில் சிலர் இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டதும் உஷாராயினர். தொடர்ந்து துப்பாக்கியால் சுடத்துவங்கியதும் கடத்தல்காரர்கள் பாக்.எல்லைக்குள் திரும்பி விட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தப்பகுதியில் அவர்கள் கொண்டு வந்த நார்காடிக் என்ற போதைபொருள் 27 கிலோ போட்டு விட்டு சென்று விட்டனர். இதன் சர்வதேச மதிப்பு 135 கோடி ஆகும்[8] . இது குறித்து பி.எஸ்.எப்., இன்ஸ்பெக்டர் பவான்சவுத்திரி கூறுகையில்; “இது போல் இந்த அளவிற்கு போதை பொருள் இது வரை கைப்பற்றியதில்லை. தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்”, என்றார். கடந்த அக்., 4 ம் தேதி ரூ. 75 கோடி மதிப்பு கொண்ட 15 கிலோ ஹெராயின் கைப்பற்றபட்டது என்பது குறிப்பிடத்தக்கது[9]. 22 லட்சம் இந்திய கள்ளநோட்டுகளும் பிடிபட்டன[10].

வேதபிரகாஷ்

08-10-2011


[1] இடைக்காலத்திலும், சீன-அரேபிய / முஸ்லீம் குழுக்கள் சேர்ந்தே செயல்பட்டன. குறிப்பாக இந்தியர்களுக்கு எதிராக செயல்பட்டன. இன்றும் அதேபோலத்தான் செயல்பட்டு வருகின்றன.

http://cholahistory.wordpress.com/2011/09/18/china-resorting-to-medieval-threatening-tactics/

[2] The Golden Triangle is one of Asia‘s two main illicit opium-producing areas. It is an area of around 367,000 square miles (950,000 km2) that overlaps the mountains of four countries of Southeast AsiaBurmaVietnamLaos, and Thailand. Along with Afghanistan in the Golden Crescent and Pakistan, it has been one of the most extensive opium-producing areas of Asia and of the world since the 1920s. Most of the world’s heroin came from the Golden Triangle until the early 21st century when Afghanistan became the world’s largest producer.

[3] The Golden Crescent is the name given to one of Asia‘s two principal areas of illicit opium production, located at the crossroads of CentralSouth, and Western Asia. This space overlaps three nations, AfghanistanIran, and Pakistan, whose mountainous peripheries define the crescent, though only Afghanistan and Pakistan produce opium, with Iran being a consumer and trans-shipment route for the smuggled opiates.

[6] In one of the biggest seizures in the last decade, the Border Security Force (BSF) personnel seized 27kg heroin valued at Rs 135 crore in international market, Rs 1.98 lakh fake Indian currency notes, one Chinese made pistol and 20 cartridges on the intervening night of October 5 and 6 from two places on the India-Pak international border in Punjab.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard