New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: M Karunanidhi DMK Government Achievements


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: M Karunanidhi DMK Government Achievements
Permalink  
 


விதவைச் சான்றிதழ் கேட்ட ப்ளஸ் டூ மாணவி!
நெஞ்சை உருக வைக்கும் சோகம்

Salem%201.jpg



‘‘ஐயா! எனக்கு விதவை சான்றிதழ் கொடுக்க சொல்லுங்க. சான்றிதழ் கிடைச்சி உதவித் தொகை வந்தா.. எங்க குடும்பத்தோட கஷ்டம் கொஞ் சமாவது நீங்கும்’’ என்று மனுவை நீட்டிய இளம் பெண்ணை பார்த்து ‘ஷாக்’ ஆகி நின்றார் நாமக்கல் கலெக்டர் சகாயம். சுற்றி நின்ற அதிகாரிகளும் திகைத்தனர்.

Salem.jpgநாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம், மேளப்பாளையம் என்ற கிராமத்தில் குறைகேட்டபோதுதான் மேலே சொன்ன நிகழ்வு. அதிர்ச்சி விலகாமல் அந்த பெண்ணிடம் கலெக்டர் மேலும் விசாரிக்க, அவர் ஒரு பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவி என்று சொன்னதும் கலங்கியே விட்டார். 

விஷயத்தை கேள்விப்பட்ட நாம் அந்த மாணவியைச் சந்தித்தோம்.

சேந்தமங்கலம் வழியாக ராசிபுரத்திலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் உள்ளது சிங்களாந்தபுரம். இந்த ஊரில் இருந்து தெற்கே இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் வருவது சின்னப்பநாயக்கன் பட்டி. ஊரில் நுழைந்து விசாரித்ததும் வீட்டை காட்டினார்கள். வீட்டுக்கு சென்றதும், பத்திரிகையில் இருந்து வருவதாக சொன்னோம். முதலில் தயங்கிய ப்ரியா, ‘மில் வேன் இப்ப வந்துரும். வேலைக்கு போகனுமே’ என்றார். ‘கலெக்டரிடம் கொடுத்த மனு தொடர்பாகவே விசாரிக்க வந்தோம். வேறு எதுவும் சொல்ல வேண்டாம்’ என்று தைரியம் சொன்னதுமே பேசத்தொடங்கினார் அந்தப் பெண்.

‘‘சார்.. நான் பொறந்தது இந்த ஊர்தான். என்னை கட்டிக் கொடுத்தது பக்கத்துல இருக்கிற மேலபட்டிங்கற கிராமத்துல. நான் பதினொன்னாவது படிச்சிட்டு இருக்கும்போது கல்யாணம் நிச்சயம் பண்ணினாங்க. அப்ப எனக்கு பதினாறு வயசுதான் ஆச்சு’’ என்றவரை இடைமறித்து அவரது அப்பா பழனிச்சாமி பேச தொடங்கினார்.

‘‘எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒரு பையன். ப்ரியாதான் பெரியவ. என் பிள்ளைங்களை நல்லா படிக்க வைக்கனும்னுதான் ஆசைப்பட்டேன். நான் தினமும் ஊர், ஊரா சுத்தி ரொட்டி, பன் விக்கிற வேலைக்கு போனாதான் சாப்பாடே. என் பொஞ்சாதியும் வேலைக்கு போயி வீட்டை கொஞ்சம் காப்பாத்திக்கிட்டுருந்தா. அந்த சமயத்துல ப்ரியா படிச்சிக்கிட்டு இருந்தா.

Salem%202.jpgஎங்க ஊர்ல அப்ப ஒரு பொண்ணு, ஒரு பையனைக் கூட்டிகிட்டு ஓடி கல்யாணம் பண்ணிக்கிடுச்சி. அதப் பார்த்ததும் என் மனசுல பயம். நம்ம பொண்ணுக்கு காலா காலத்துல ஒரு நல்லது பண்ணனுமுன்னு முடிவெடுத்தேன். அந்த சமயத்துலதான் மேலபட்டியில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து பொண்ணு கேட்டாங்க. நானும் மாப்பிள்ளை பையன் லாரி டிரைவராக இருந்தாலும், நல்லவரா தெரிஞ்சதால பொண்ணைக் கொடுத்தேன். கடனை வாங்கி கல்யாணத்தை நல்லபடியா முடிச்சேன்.

மாப்பிள்ளையும் எம் பொண்ணை நல்லாத்தான் பாத்துகிட்டார். ஒரு வருஷம் சந்தோஷமா இருந்தாங்க. யார் கண் பட்டதோ தெரியலை. மாப்பிள்ளை மோகனூர்க்கு போற வழியில, பால் லாரியில அடிபட்டு குத்துயுரும், கொலையுருமா கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து ரெண்டு நாள் வைத்தியம் பார்த்தோம். மூணாவது நாள் உயிர் போயிடுச்சி. அவரை அடக்கம் செய்யறதுக்கு கூட எங்களால முடியலை. 

அவங்க அப்பா, அம்மா ஈமச் சடங்கு செய்யற நேரத்துல, என் பொண்ண பார்த்து ‘‘நீ வந்த நேரந்தான்டீன்னு’’ திட்ட ஆரம்பிச்சாங்க. சடங்கை முடிச்சிக்கிட்டு என் பொண்ணை கூட்டிகிட்டு வந்திட்டேன். நம்ம பொண்ணு வாழ்க்கையை நாமளே அழிச்சிட்டமேன்னு அழுகாத நாள் இல்லை.

திடீர்னு என் உடம்புக்கு முடியலை. அதனால வேலைக்கு போறதை விட்டுட்டேன். அந்த கட்டத்துல என் பொஞ்சாதிதான் குடும்பத்தை காப்பாத்தினா. என் பொண்ணு முகத்துல ஒரு சிரிப்பை பாக்கமாட்டமா? அப்படிங்கிற ஏக்கத்திலதான் பள்ளிக்கூடத்தில புள்ளைய சேர்த்திவிட்டேன். என் பொண்ணு நிலைமையை நினச்சா என் வயித்துகுள்ள ஒரு பருக்கை கூட போக மாட்டேங்குது’’ என்று கண்ணீர் விட்டு அழுதார்.

Salem%204.jpgஅப்பாவை ஆறுதல் படுத்திய ப்ரியா ‘‘என்ன சார் பண்றது. என் விதி இப்படி ஆயிடுச்சி. அவர் இருந்தப்ப, என்னை கொஞ்சிய அந்த குடும்பம், அவர் இறந்ததும் நா கூசமா திட்டினாங்க. என் நிலைமை யாருக்குமே வரக்கூடாது. எங்க வீட்டுல இருந்தப்ப எனக்கு செத்துடலாமுன்னு கூட தோணுச்சி. ஆனா எனக்காக எங்க குடும்பமும் துக்கபடுமேன்னு, அதச் செய்ய எனக்கு மனசு வரல. மறுபடியும் மனச தேத்திகிட்டு பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சேன். ப்ளஸ் டூ பரீட்சை எழுதி முடிச்சேன். அப்பதான் கலெக்டர், எங்க பக்கத்து ஊர்ல முகாம் போடற தகவல் வந்தது. விதவைக்கு தர்ற உதவித்தொகை கிடைச்சா எங்க குடும்ப கஷ்டம் கொஞ்சமாவது நீங்கும்னுதான், கலெக்டருக்கிட்டே மனு தந்தேன். அவரு என்னை பார்த்ததும் இந்த வயசில விதவைச் சான்றிதழ் வேணாம். உனக்கு வேற ஏதாவது உதவி செய்ய ஏற்பாடு பண்றேன்னு சொல்லியிருக்கார். எனக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்க ஆசை இல்லை. பட்டது போதும். இப்ப ப்ளஸ் டூ பரீட்சை எழுதியிருக்கேன். எனக்கு டீச்சர் டிரெய்னிங் படிக்க ஆசை. அதுக்கு யாராவது உதவி செஞ் சா, அவங்களுக்கு காலமெல்லாம் நன்றி சொல்லுவேன். அதை வைச்சி என் தம்பி, தங்கையை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன் சார்’’ என்று கலங்கிய விழிகளோடு அவர் முடித்த போது மில் வேன் வந்துவிட்டது. நமக்கு நன்றி சொல்லிவிட்டு வேலைக்குப் புறப்பட்டுப் போனார்.

பக்கத்தில் இருந்த ப்ரியாவின் உறவுக்கார பெண்மணி சுதாவிடம் பேசினோம். ‘‘ரொம்ப சுறுசுறுப்பான பிள்ளை சார் அவ. இப்ப பள்ளிக்கூடத்து லீவுல, நாங்க எல்லாம் சொல்றதை கேட்காம மில் வேலைக்கு போறா. வயசுல நான் பெரியவளா இருந்தாலும், கஷ்டத்துல அவதான் சார் பெரியவ. அவளுக்கு மேல் படிப்புக்கு யாராவது உதவி செஞ்ச நல்லாயிருக்கும்’’ என்றார்.

கலெக்டர் சகாயத்திடம் இது பற்றி கேட்ட போது, ‘‘அந்த பொண்ணு குறை கேட்கும் முகாமுக்கு வந்து நிலைமையை சொல்லும்போது எனக்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது. சின்ன வயதில் விதவை சான்றிதழ் எல்லாம் தேவையில்லை என்று சொல்லிவிட்டேன். அவருக்கு சமூக நலத்துறை மூலமாக உதவியளிக்க முடிவு செய்துள்ளோம். அவருக்கு மேற்படிப்புக்கான உதவிகளை செய்ய பரிசீலனை செய்யப்படும். அந்த பெண்ணிற்கு தேவையான உதவிகளை இந்த மாவட்ட நிர்வாகம் நிச்சயம் செய்யும்’’ என்றார்.

ஏழை, பாழைகளுக்கு சகாயம் செய்வதில் கலெக்டர் சகாயம் என்றும் சளைத்ததேயில்லை. இந்தப் பெண்ணுக்கும் அவரது சகாயம் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது நமக்கு!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கள்ளநேட்டு சந்தையாகிறதா காரைக்குடி?
அலறும் அரிசி ஆலை அதிபர்கள்

Kishore.jpg



பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் இந்தியாவின் பல இடங்களில் கள்ள நோட்டுகளை புழங்கவிட்டு நமது பொருளாதாரத்தை பாழடிக்க முயன்றுவருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் ஐ.எஸ்.ஐ. தன் கள்ள நோட்டுக் களமாக காரைக்குடி அருகிலுள்ள புதுவயலையும் தேர்வு செய்துவிட்டதோ என அச்சமும், ஐயமுமாகப் பேசிக்கொள்கிறார்கள் இப்பகுதிவாசிகள். இத்தனைக்கும் இந்த பகுதி, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் தொகுதி என்பதால் முக்கியத்துவம் அதிகமாகியிருக்கிறது.

150-க்கும் அதிகமான நவீன அரிசி ஆலைகள் புதுவயலில் இருக்கின்றன. பல மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து வியாபாரிகள் நெல்லை அரைத்துச் செல்வதால் எப்போதும் பிஸியாக இருக்கும். 

Kishore%201.jpgஇந்த நிலையில்... கடந்த வாரம், புதுவயல் வாசுகி நவீன அரிசி ஆலை அதிபரான செல்லப்பன், தன்னிடம் வேலைபார்க்கும் உதயகுமார் உள்ளிட்ட இருவருக்கு 500 ரூபாய் நோட்டுகளாக சம்பளம் கொடுத்திருக்கிறார். சம்பளம் வாங்கிய சந்தோஷத்தில் அந்த இருவரும் டாஸ்மாக் கடைக்கு போயிருக்கிறார்கள். 

500 ரூபாய் நோட்டை வாங்கி உற்றுப் பார்த்த கடை சூப்பர்வைசரான தென்னரசு, அது கள்ள நோட்டு என உறுதிப்படுத்திக் கொண்டார். உடனடியாக சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கள்ள நோட்டுகளை ஒப்படைத்துவிட்டார். இதையடுத்து எஸ்.ஐ.அழகுராஜ், இதுபற்றி உதயகுமாரையும் அவருடன் வந்தவரையும் விசாரிக்க.. ‘எங்க முதலாளி சம்பளமா கொடுத்ததுதாங்க. மத்தபடி எங்களுக்கு எதுவும் தெரியாது’என கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து வாசுகி அரிசி ஆலை அதிபரான செல்லப்பனையும் ஸ்டேஷனுக்கே கூட்டி வந்து விசாரித்தனர் போலீஸார். இவர் புதுவயல் முன்னாள் சேர்மன் கணேச பாண்டியனின் மருமகன் என்பதால்.... தன் மாப்பிள்ளைக்காக கணேச பாண்டியனே ஸ்டேஷனுக்கு சென்று, ‘அட... அந்த ரெண்டு நோட்டும் ஒரு தனியார் வங்ககியின் ஏ.டி.எம்.லேர்ந்து எடுத்ததுதான். இத என்னத்த விசாரிக்கப் போறீங்க?’ என கேட்டு ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டிருந்த இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளையும் வாங்கிக் கொண்டு, தன் மருமகன் செல்லப்பனையும் கூட்டிக் கொண்டு போய்விட்டாராம். 

இத்தோடு இந்த பிரச்னை முடிந்துவிடவில்லை.

‘‘இந்த விவகாரம் காரைக்குடி டி.எஸ்.பி.யான மாறன் வரை போய்விட்டது. உடனே அவர் மீண்டும் அரிசி ஆலை அதிபர் செல்லப்பனை அழைத்து விசாரித்திருக்கிறார். போலீஸ் விசாரணை இறுக ஆரம்பித்ததால்... முன்னாள் சேர்மன் கணேச பாண்டியன் தனது மேல்மட்ட அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி இந்த விசாரணை மேல் வெந்நீர் ஊற்றிவிட்டார்’’ என்று போலீஸ் வட்டாரத்திலேயே தகவல்கள் புகைந்துகொண்டிருக்கின்றன.

Kishore%202.jpgஇந்த கள்ள நோட்டு சர்ச்சை பற்றி புதுவயல் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவரான யூசுப்பிடம் பேசினோம்.

‘‘புதுவயல்ல இருக்கும் 150-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள்ல தினம் தினம் கோடிக்கணக்கான ரூபாய் ரொட்டேஷன் ஆவுது. இந்தியா முழுவதுலேர்ந்தும் பல தரப்பட்ட அரிசி வியாபாரிங்க இங்க வந்து போறாங்க. இதனாலதானோ என்னமோ புதுவயல்ல சர்வசாதாரணமாக கள்ள நோட்டு புழங்குது. ஆலை அதிபர்களைக் கேட்டா அதெல்லாம் பேங்க் ஏ.டி.எம்.லேர்ந்துதானே எடுக்குறோம்னு பொத்தாம் பொதுவாக சமாளிச்சிடறாங்க.

அப்படின்னா... முன்னாள் நிதி அமைச்சரும், இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தோட சொந்தத் தொகுதியிலயே... கள்ள நோட்டுக்களை புழக்கத்துல விடுற அளவுக்கு வங்கி அதிகாரிகள் துணிஞ்சிட்டாங்களா? இதுபோல பல தடவை கள்ள நோட்டு பிடிபடறதும், அதை அரசியல் ப்ரஷர் காரணமா போலீஸ் அப்படியே விட்டுடறதும் தொடர்கதையா நடக்குது’’ என வேதனைப்பட்டார்.

புதுவயல் நகர தி.மு.க. செயலாளரான ஜெயக்குமார் நம்மிடம், ‘‘தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளையும் போலீஸார் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தாமல் சம்பந்தப்-பட்டவரிடமே ஒப்படைத்துவிட்டார்கள். இது ஏன்? ஆலை அதிபர்கள் வங்கிகள் மீது பழிபோட்டால் இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்படி செய்யத் தவறினால் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு நாமே கதவு திறந்துவிட்டதுபோல் ஆகிவிடும்’’ என கொந்தளித்தார்.

கணேச பாண்டியனை நேரில் சந்தித்து, அவரது மருமகன் செல்லப்பனின் அரிசி ஆலையில் கள்ள நோட்டுப் புழக்க சர்ச்சை பற்றி கேட்டோம். ‘‘மூன்று மாதத்துக்கு முன்பு, எனது அரிசி ஆலை தேவைக்காக ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் பணத்தை டிராப் செய்து பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு கொண்டுபோய் டி.டி. எடுக்க கட்டினோம். அதில் இரண்டு தாள்கள் கள்ள நோட்டு இருப்பதாக கண்டுபிடித்துத் தெரிவித்தனர். அதேபோலத்தான் எனது மருமகன் செல்லப்பனும் தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் டிராப் செய்த பணத்தை சம்பளமாக பட்டுவாடா செய்திருக்கிறார். அது கள்ள நோட்டு என அறிந்து போலீஸ் விசாரணை செய்தபோது நடந்தது அத்தனையும் சொல்லிவிட்டோம். வங்கிகளை போலீஸார் விசாரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமுமில்லை’’ என்றார் பொறுமையாக.

ஆலை அதிபர்கள் வங்கிகள் நோக்கி கைகாட்ட... இதுபற்றி வங்கிகள் வட்டாரத்திலேயே விசாரித்தோம். ‘‘ஒவ்வொரு வங்கியிலும் கள்ள நோட்டை கண்டறியும் இயந்திரங்கள் வைத்துள்ளோம். அதன் மூலம் சோதனையிட்ட பின்புதான் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுகிறோம். எனவே, ஏ.டி.எம்.களில் கள்ள நோட்டு இருக்க வாய்ப்பே இல்லை. அப்படியே அரிதாக இருந்தாலும்... ஒவ்வொரு ஏ.டி.எம். சென்டரிலும் கள்ள நோட்டு பற்றி புகார் செய்ய லெட்ஜர் உள்ளது. அதில் நோட்டு நம்பரைக் குறிப்பிட்டு புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், அப்படி செய்யாமல் தங்கள் தவறை மறைக்க, வங்கிகள் மீது ஆலை அதிபர்கள் குறை சொல்கிறார்கள்’’ என்கின்றனர். 

Kishore%203.jpgசாக்கோட்டை எஸ்.ஐ.அழகு-ராஜிடம் கேட்ட-போது, ‘‘இந்த ஏரியாவில் கள்ள நோட்டு விவகாரம் அடிக்கடி நடப்பது உண்மைதான். ஆனால் அரிசி ஆலை அதிபர்களும், வியா-பாரிகளும் வங்கிகளை நோக்கி கைகாட்டிவிட்டு எளிதாக தப்பி விடுகிறார்கள். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன. இதற்கு மேல் இன்ஸ்பெக்டரிடமே கேட்டுக்-கொள்ளுங்கள்’’ என நழுவினார். 

இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் பேசியபோது, ‘‘கள்ள நோட்டா? இதெல்லாம் பெரிய மேட்டரா சார்? இதைப் போயி பத்திரிகையில போட்டு என்ன செய்யப் போறீங்க?’’ என்றார் பொறுப்பாய்(!).

சி.பி.ஐ.யை தன் கையில் வைத்திருக்கும் ப.சிதம்பரம் தனது தொகுதிக்குள் வெடித்திருக்கும் கள்ள நோட்டு சர்ச்சை பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் வியாபாரிகளும், பொதுமக்களும். சிதம்பரம் செய்வாரா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘டி.ஆர்.பாலு காட்டும் நன்றி இதுதானா?’’
ஆத்திரத்தில் வடசேரி மக்கள்

Nellai.jpg



முன்னாள் மத்திய அமைச்சர், இந்நாள் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர், தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்... இத்தனை அடைமொழிகளுக்கும் சொந்தக்காரரான டி.ஆர். பாலுவா தன் கிராம நலனுக்கு எதிராக போலீஸை ஏவி தடியடி நடத்தினார்?

சுட்டெரிக்கும் கோடை வெயிலை விடவும் தஞ்சை மாவட்டம் வடசேரி கிராம மக்கள் கொதித்து போய் கிடக்கிறார்கள். இருவர் வெட்டப்பட்டும், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தும் போலீஸ் கெடுபிடியில் கிராமத்தினர் பலர் தலைமறைவாய் இருக்க, முகம்காட்ட விரும்பாத ஊர் பெரியவர்கள் சிலர் பிரச்னையின் ஆரம்பம் முதல் விரிவாக பேச ஆரம்பித்தனர். 

Nellai%201.jpg‘‘டி.ஆர்.பாலு பக்கத்து கிராமமான தளிக் கோட்டையைச் சேர்ந்தவர் என்றாலும் வடசேரிக்கும் அவருக்கும் தூரமில்லை. 1989ல் தி.மு.க. ஆட்சியின்போது, ‘வடசேரியில் ஒரு கெமிக்கல் கம்பெனி ஆரம்பிக்கிறேன். அதுல வீட்டுக்கு ஒருத்தருக்கு வேலை தர்றேன். பஞ்சாயத்துக்கும் வருமானம் வரும்’ என அப்போதிருந்த கிராம நாட்டார்கள் வீரப்பதேவர், ராமநாதன் ஆகியோரிடம் கூறினார் டி.ஆர்.பாலு. கிராம முன்னேற்றம் கருதி சுப்ரமணிய தேவரிடமிருந்து ஆறு ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கிக் கொடுத்தார்கள் நாட்டார்கள். 

அதன் பின் அந்த நிலத்தை சுற்றியுள்ள சிறு விவசாயிகள் நிலத்தையும் வாங்கி கிங் கெமிக்கல்ஸ் கம்பெனி ஆரம்பித்தார். சிலருக்கு கட்டடத் தொழிலாளர் வேலையும் நிலம் கொடுத்த ஏழெட்டு பேருக்கு எடைபோடும் மெஷினில் வேலை கொடுத்ததோடு சரி. அதன்பின் அவர்கள் ‘லேபர் யூனியன்’ ஆரம்பித்தபோது, அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு போட்டு பத்து வருஷங்கள் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலையவிட்டார். அதன்பின் கெமிக்கல் நிறுவனம் செயல்படவில்லை. மத்திய அமைச்சராக இருந்தபோது அதிக விலை கொடுத்து நிறுவனத்தை சுற்றியுள்ள சுமார் 30 ஏக்கர் நிலத்தையும் வாங்கிப் போட்டார். தற்போது கிங்ஸ் இந்தியா கெமிக்கல் நிறுவனம் என்ற புதிய பெயரில் எரி சாராய ஆலையை கொண்டு வர முயற்சி செய்கிறார்’’ என்றவர்கள் தொடர்ந்தனர்.

‘‘நாள் ஒன்றுக்கு 12.5 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை எடுத்து அதில் 1.5 லட்சம் எரிசாராயம் தயாரிக்க போகிறார்களாம். இதனால்... நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறையும். தொழிற்சாலையின் ரசாயன கழிவால் சுவாசிக்கும் காற்று கெடும். தோல் வியாதிகள் முதல் உடல் நோய் பலவும் பரவும். இந்த ஆலை அமைக்க வேண்டுமானால் மூன்று கி.மீ. தூரத்திற்குள் நீர் நிலைகள், மருத்துவ-மனை, பள்ளிக்கூடம், பொதுமக்கள் வசிப்பிடம் இருக்கக்கூடாது என்பது அரசு விதி. டி.ஆர்.பாலு ஆலை ஆரம்பிக்கும் இடத்தில் இவை எல்லாமே ஐநூறு மீட்டர் தூரத்திற்குள் இருக்கிறது. இதற்கு எப்படி மேல்மட்டத்தில் அனுமதி கொடுக்கிறார்கள்? 

தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவரான இன்ப-சேகரனிடம் பணம், பங்களா என பேரம் பேசினார்களாம். அதனால்தானோ என்னமோ, மற்ற தீர்மானங்களோடு இடைச் செருகலாக இதனை வைத்து எரிசாராய ஆலை என்று கூறாமல் ‘வடிப்பாலை அமைய அனுமதி’ என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றி மூன்றே நாளில் கொடுத்துவிட்டார். 

அதன்பின்புதான் விஷயம் ஊருக்குத் தெரிந்தது. ஒரத்தநாட்டில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம், தஞ்சையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் என நடத்தினோம். எங்கள் வலிமையான எதிர்ப்பை அடுத்து, ஆலைக்கு அனுமதி அளித்த ஊராட்சிமன்ற தீர்மானத்தை ரத்து செய்து விட்டார்கள். போராட்டம் வலுவடைந்ததால் டி.ஆர். பாலு ஐகோர்ட்டை அணுக... மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த உத்தரவிட்டது கோர்ட். 

Nellai%202.jpgபொது இடத்தில் கூட்டம் நடத்தலாம் என நாங்கள் சொல்ல... ஏப்ரல் 9-ம் தேதி டி.ஆர். பாலுவின் கெமிக்கல் நிறுவனத்திலேயே நடத்தினார்கள். அப்போதுதான் பிரச்னை மேலும் வெடித்தது’’ என நிறுத்தினார்கள் அவர்கள். 

கருத்துக் கேட்புக் கூட்டத்துக்காக வெளியூரிலிருந்து லாரியில் ஆட்கள் வந்து இறக்கப்படுவதைப் பார்த்த வடசேரி மக்கள், பயந்துபோய் மாவட்ட எஸ்.பி.யிடம் அச்சம் தெரிவித்தனர். அப்படியிருந்தும், வயல்வெளிக்குச் சென்ற திருவள்ளுவன், ராஜேஷ் ஆகிய இரு வடசேரிக்காரர்களை வெளியூர் ஆட்கள் வெட்டிவிட்டார்கள். ரத்தம் வழிய அவர்களை தூக்கி வந்தபோது... டி.ஆர்.ஓ. கார் வரவே ஆவேசமான மக்கள், அவரது காரை அடித்து நொறுக்கினர். உடனே, போலீஸ் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது. 

ஊராட்சி மன்ற தலைவர் இன்பசேகரனை சந்தித்தோம்.

‘‘ஒரு பக்கம் நான் கட்சிக்காரன் என்ற முறையில் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட-வேண்டி இருந்தது. ஆயினும், என்னை தேர்ந்தெடுத்த ஊர்மக்களுக்கு ஆதரவாக தீர்மானத்தை ரத்து செய்துவிட்டேன். இதில் நான் எந்த ஆதாயமும் அடைய-வில்லை. நான் கடனில் இருக்கிறேன் என்பதுதான் சத்தியமான உண்மை. நான் கருத்துகணிப்பு கூட்டத்திற்கு போகாததால், அங்கு நடந்தது பற்றி எனக்கு தெரியாது’’ என்று முடித்துக் கொண்டார். 

கிங்ஸ் இந்தியா கெமிக்கல் நிறுவன இயக்குநர் அய்யாவுவிடம் பேசினோம்

‘‘இந்த கிராமத்தில் 400 போர்வெல் இருக்கு. எங்கள் நிறுவனத்தில் 4 போர்வெல்தான் போட்டிருக்கோம். 400 போர்-வெல்லால் குறையாத நீர்மட்டம் எங்கள் 4 போர்வெல்லால் குறைந்துவிடுமா? இதுபோல் இந்தியாவில் ஐந்து நிறுவனங்கள் உண்டு. இதனால் கிராம மக்களுக்கு எவ்வித இடையூறும் இருக்காது. எங்கள் செலவில் மற்ற நிறுவனங்கள் இயங்கும் இடங்களுக்கு அழைத்துப்போய் காட்டுகிறோம் என்று கூறியும் மக்கள் கேட்கவில்லை. எல்லாம் அரசியல் சூழ்ச்சிதான் காரணம். கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு சுற்றுப்புற கிராம மக்களும் வந்தார்கள். நாங்கள் ரவுடிகளை அழைத்துவரவில்லை. வடசேரி கிராமத்தினர் வெட்டப்பட்டதும், தாக்கப்பட்டதும் எனக்குத் தெரியாது’’ என்றார். 

இதற்கிடையில் டி.ஆர். பாலுவின் சொந்த ஊரான தளிக்கோட்டையில் வடசேரியைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது போர்செட் கொளுத்தப்-பட்டிருக்கிறது. இதனால் அந்த இரு கிராமங்களை மோத வைத்து பிரச்னையை திசைதிருப்பும் முயற்சியும் நடக்கிறது.

நடந்தது பற்றி மாவட்ட எஸ்.பி. செந்தில்வேலனிடம் விசாரித்தோம். 

‘‘இரண்டு தரப்பும் மோதி கொள்ளாமல் இருக்கவும், டி.ஆர்.ஓ. கார் அடித்து நொறுக்கப்படும்போது காப்பாற்றவுமே ‘லத்தி சார்ஜ்’ செய்தோம். சம்பவம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளதால், அதனை போட்டு பார்த்து குற்றம் இழைத்தவர்கள் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்திருக்கிறோம்’’ என்றார். 

இதற்கிடையில் விவசாயிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ஏப்ரல் 9-ம் தேதி நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

பீதிகுறையாத வடசேரி மக்களோ, ‘‘தன்னை வளர்த்த கிராமத்துக்கு டி.ஆர். பாலு காட்டும் நன்றி இதுதானா?’’ என்று ஆத்திரமும் அழுகையுமாகக் கேட்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கஞ்சா தீப்பெட்டி..!
கலங்கும் விருதுநகர்

Kanja.jpg



‘‘அண்ணே தீப்பெட்டி கொடுங்களேன்...’’

‘‘சாதா தீப்பெட்டியா... கா தீப்பெட்டியா?’’

‘‘கா பெட்டியே கொடுங்கண்ணே’’

-விருதுநகர் பேருந்து நிலையம் அருகே ஒரு கல்லூரி மாணவருக்கும், கடைக்காரருக்கும் நடந்த உரையாடல்தான் இது.

இதை கவனித்த வழக்கறிஞர் ஏ.பி.ஆர். பாண்டியராஜன் அந்த உரையாடலை நம்மிடம் அப்படியே லைவ் செய்தார். 

அதென்ன ‘கா’ தீப்பெட்டி?

‘‘அந்த தீப்பெட்டிக்குள் தீக்குச்சிகள் இருக்காது. கஞ்சா அடைக்கப்பட்டிருக்கும். அதைக் கசக்கி சிகரெட்டுக்குள் திணித்து சாவசகாசமாக ஊதிக்கொண்டு போகிறார்கள் இளைஞர்கள். தீப்பெட்டிக்கு புகழ்பெற்ற விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் கஞ் சா தீப்பெட்டியால் குட்டிச்சுவராகிறார்கள்’’ என்று சொல்லி நம்மை அதிர வைத்தார் பாண்டியராஜன்.

தேனி மாவட்டத்தின் வருசநாடு பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வருசநாடு பகுதியைச் சுற்றிய மலை இறக்கத்தில் மதுரை வனக்கோட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வனக்கோட்டம் ஆகியவை உள்ளன. வருசநாட்டிலிருந்து கடமலைக் குண்டு, மயிலாடும் பாறை, மல்லபுரம் வழியாக மதுரை வனக்கோட்டத்தை அடையலாம். வருசநாட்டிலிருந்து கூமாபட்டி இணைப்புச்சாலை வழியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனகோட்டத்துக்கு வரலாம். இந்த வழியாகத்தான் விருதுநகர் மாவட்டத்தை தீப்பெட்டி வடிவில் தீண்டிக் கொண்டிருக்கிறான் கஞ்சா அரக்கன். 

கஞ்சா தீப்பெட்டி பற்றி மேலும் நம்மிடம் பேசிய பாண்டியராஜன், ‘‘முன்பெல்லாம் கஞ்சாவை பிரவுன் ஷீட்டுக்குள் வைத்து பொட்டலம் போட்டு விற்றனர். இப்போது அடுத்த நுட்பமாக தீப்பெட்டியைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இது வெளிப்படையாக தெரியக் கூடாது என்பதற்காகத்தான் ‘கா’ தீப்பெட்டி என கோட்வேர்டு வைத்திருக்கிறார்கள். 

Kanja%201.jpgவிருதுநகர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அருப்புக்கோட்டை டூ விருதுநகர் சாலை ஆகிய பகுதிகளில் ‘கா’ தீப்பெட்டிகள் தாராளமாகக் கிடைக்கின்றன. மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர், திருப்பரங்குன்றம் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், தேனி, போடி பகுதிகளில் கஞ்சா லேகியமும் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. 

காவல்துறை மெத்தனமாக இருந்தால் இன்னும் ஏகப்பட்ட இளைஞர்கள் பாதிக்கப்படுவது உறுதி. கஞ் சா விற்பவர்களோடு, கஞ்சா பயிரிடுபவர்களையும் கூண்டோடு பிடித்து உள்ளே தள்ள வேண்டும். வருசநாட்டிலிருந்து கஞ் சா கடத்தப்படும் பாதைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இதுபற்றி பொது நல வழக்கு தொடர உள்ளேன்’’ என்றார் ஆவேசமாக. 

நேரடியாக நாமே களத்தில் இறங்கி விருதுநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் ‘கா’ தீப்பெட்டி கேட்டோம். ‘இருபது ரூபாயா முப்பது ரூபாயா, ஐம்பது ரூபாயா?’ என கேட்டார் கடைக்காரர். ஐம்பது ரூபாய்க்கு கஞ்சா தீப்பெட்டி வாங்கினோம்.

அதை உள்ளங்கையில் வைத்துக்-கொண்டே தென் மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினோம். ‘‘அப்படியா? நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. கஞ்சா தீப்பெட்டி விற்பனை செய்யும் இடங்கள் மட்டுமின்றி கஞ்சா கடத்தும் வழிகளிலும் கடும் சோதனை செய்ய உத்தரவிடுகிறேன். விற்பனை செய்பவர்கள் மீதும் பயிரிடுபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்’’ என்றார் பொறுப்போடு.

படங்கள்: பொன் சௌபா



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆண்டாள் கோபுரம்:
அரசு சின்னத்தை மாற்றக் கூடாது!
வலுக்கும் எதிர்ப்பு

Aandal%204.jpg



Aandal%201.jpgதமிழக அரசின் சின்னமாக இப்போது இருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோபுரத்தை அகற்றிவிட்டு, திருவள்ளுவர் உருவத்தை அரசு சின்னமாக அறிவிக்க வேண்டும்’’ -விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கடந்த 8-ம் தேதி சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Aandal%202.jpgஇதற்கு ஒட்டுமொத்த ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களும் கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஸ்ரீவில்லிப்புத்தூர்வாசிகளில் ஒருவரான கிருஷ்ணகுமாரியிடம் இதுபற்றிக் கேட்டபோது, “ரவிக்குமார் எம்.எல்.ஏ. சட்டசபைக்கு சென்று பொதுமக்களின் பிரச்னைகளை பேசி தீர்க்க முயற்சி செய்யட்டும். அதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட கோரிக்கைகள் மூலம் பொதுமக்களிடையே பிரச்னைகளை உண்டாக்க முயல்கிறார். இது கடும் கண்டனத்துக்குரியது’’ என வெடித்தார்.

ரவிக்குமாரின் இந்த கோரிக்கை வைணவர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவைஷ்ணவ கலாசார பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகியும், கும்பகோணத்தைச் சேர்ந்தவருமான நரசிம்மன் நம்மிடம், ‘‘சங்கத் தமிழ்மாலை-யாகிய தனது திருப்பாவை பாசுரங்களை முத்திரையிட்டு முழங்கிய பச்சைத் தமிழச்சி ஆண்டாள். ‘ஆழிமழைக் கண்ணா’ என்ற திருப்பாசுரம் மூலம் கடல் நீரை சூரியன் எடுத்துச் சென்று மேகங்கள் மூலம் பின்பு மழையாகப் பொழியும் என்ற அறிவியல் உண்மையைப் பாடிய அறிவியல் தமிழச்சியும் ஆண்டாளே. இப்படியாக தமிழினத்துக்கும், பெண்ணினத்துக்கும், தமிழர்களின் கட்டடக் கலைக்கும் பெருமையாக விளங்கும் ஆண்டாளின் கோபுரத்தை மத அடையாளமாகப் பார்ப்பது சிறுமைத்-தனமானது. மதத்தையும் மீறிய கலாச்சாரப் பெருமை பெற்றது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம். நேரு ஒரு முறை திருவனந்தபுரம் பத்மநாபா கோயிலுக்கு போனபோது சட்டையைக் கழற்றச் சொன்னார்கள். ஆனால், நேரு, ‘நான் வழிபட வரவில்லை. கோயிலின் கட்டடக் கலையை ரசிக்கவே வந்தேன்’ என்றார். அந்த வகையில் தமிழக அரசும் ஆண்டாள் கோயிலை தமிழுக்கும் தமிழர் கட்டடக் கலைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக சின்னமாக அறிவித்தது. செம்மொழி மாநாட்டு ஃபோபியாவால் பாதிக்கப்பட்டு ரவிக்குமார் இப்படி ஒரு கோரிக்கையை எழுப்பியிருக்கலாம்’’ என்றார்.
Aandal.jpg
ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. ராமசாமியிடம் இந்த பிரச்னை பற்றி கேட்டபோது, ‘‘இதை ரவிக்குமாரின் ஆலோசனையாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. முதல்வரின் ஆலோசனைப்படிதான் ரவிக்குமார் சட்டசபையில் பேசியுள்ளார். ஏப்ரல் 17-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தி தி.மு.க. அரசையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளோம்’’ என்றார் ஆவேசமாக! ‘‘எகிப்து என்றால் பிரமிடு நம் நினைவுக்கு வருவதற்கு கட்டடக் கலையும், கலாசாரமும்தான் காரணமே தவிர மதம் அல்ல. அதுபோல தாஜ்மஹாலையும் காதலின் சின்னமாகவே பார்க்கிறோமே தவிர மதத்தின் அடையாளமாக அல்ல. இவைபோலதான் ஆண்டாள் கோபுரத்தை தமிழ் கலாசாரத்தின் அடையாளமாக பார்க்க வேண்டுமேயன்றி மதத்தோடு தொடர்புடையதாக கருதக்கூடாது. எனவே சில ‘அசடுகள்’ சொல்வதைக் கேட்டு, அபத்தமான முடிவை கலைஞர் எடுக்கக் கூடாது’’ என்று சொல்கிறார்கள் பகுத்தறிவாளர்கள் சிலரே.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கந்துவட்டி... ஆபாசப்படம்... கொலை!
பள்ளிப்பாளையம் பயங்கரம்

Pallipalayam%2045.jpg



கந்து வட்டிக்காகக் கொடூரமாக மிரட்டும் கும்பல் ஒருபடி மேலே போய்... வட்டிகட்ட முடியாத பெண்ணை ஆபாசப் படம் எடுத்து பரப்பியுள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளரை படுகொலை செய்து தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி அடுத்தடுத்த அப்பட்டமான அராஜகங்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வட்டாரத்தையே உலுக்கிப் போட்டிருக்கின்றன. 

Pallipalayam%202.jpgபள்ளிப்பாளையம், குமார-பாளையம், திருச்-செங்கோடு பகுதிகளின் உயிர்த் தொழிலே விசைத்தறி தொழில்தான். வியர்வை சிந்தி பாடுபட்டாலும் இந்தத் தொழிலில் கிடைப்பது சொற்ப வருமானமே! இதையே காரணமாக வைத்து விசைத்தறித் தொழிலாளர்களிடையே ஊடுருவத் தொடங்கினார்கள் கந்துவட்டிக்காரர்கள். இந்தக் கும்பலிடம் கடன் வாங்கி நைந்துபோய், பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்பட்டவர்கள் பலர். கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தாலும்... காவல்துறையும், அதிகாரி-களும் இந்தச் சட்டத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டதால், கந்துவட்டி கும்பலின் ஆட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.

Pallipalayam%201.jpgஇந்த ஆட்டத்தின் உச்சம்தான் அந்த அபலைப் பெண்ணுக்கு நேர்ந்திருக்கிறது.

பள்ளிப்பாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு விசைத்தறிக் குடும்பம், வாங்கிய கந்துவட்டிக் கடனை கட்டமுடியாமல் விழிபிதுங்கியுள்ளது. இதனால் வீடு தேடிவந்த கும்பல், பணத்துக்குப் பதில் வீட்டில் இருந்த இளம்பெண்ணைத் தூக்கிச் சென்றது. தனி அறையில் அந்தப் பெண்ணுடன் கும்பலை சேர்ந்த ஒருவனை உல்லாசம் அனுபவிக்கச் செய்து அதை செல்போனில் படம் பிடித்துள்ளனர். சுமார் இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய அளவுக்கு அந்த காட்சிகளை சி.டி.யில் பதிவு செய்து விற்பனை செய்த அந்தக் கும்பல், அந்தக் காட்சிகளை இன்டர்நெட்டிலும் பரவவிட்டுள்ளது. 

தன் பக்கத்து வீட்டுக்-காரர்கள்கூட இந்தக் கண்றாவிக் காட்சிகளை செல்போனில் பார்த்துவருவதை அறிந்து பதறிய அந்தப் பெண், தனது தாயாரிடம் சொல்லி அழுது புலம்ப... குடும்பத்துடன் கந்துவட்டி கும்பலிடம் சென்று நியாயம் கேட்டிருக்கிறார்கள். அப்போது கிடைத்தது கொலைமிரட்டல்தான்.

பின்னர், பள்ளிப்பாளையம் அருகே உள்ள அக்ரஹாரம் சி.பி.எம். கிளை செயலாளர் வேலுச்சாமியிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் நடந்ததைச் சொல்லி அழ... ஏற்கெனவே கந்துவட்டிக்காரர்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வந்த வேலுச்சாமி, இதில் தீவிர கவனம் செலுத்தினார். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மாதர்சங்க நிர்வாகி ஜெயமணி மூலமாக, பள்ளிப்பாளையம் காவல்துறையிடம் புகார் கொடுக்க அனுப்பி வைத்தார் வேலுச்சாமி. ஆனால், அந்தப் பெண் கந்துவட்டி கும்பலுக்குப் பயந்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. 

இதனிடையே மார்ச் 10-ம் தேதி இரவு வேலுச்சாமியின் வீட்டுக்கு ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் சென்றது. வேலுச்சாமி வீட்டில் இல்லாத நிலையில் அவரை அங்கிருந்தே மொபைலில் தொடர்புகொண்டு மிரட்டியதோடு, அவரது குடும்பத்தினரையும் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

வீடு திரும்பிய வேலுச்சாமி, இப்படி-யாவது இந்தப் பிரச்னையை போலீஸின் கவனத்துக்கு எடுத்துச் செல்வது என முடிவெடுத்து உடனே பள்ளிப்பாளையம் காவல்நிலையம் சென்றார். புகார் கொடுத்துவிட்டு தன் தம்பியோடு திரும்பிக் கொண்டிருந்தவரை... அவரது தம்பியின் கண்ணெதிரே கொடூரமாக வெட்டிச் சாய்த்தது கந்துவட்டி கும்பல். அவசரமாக ஈரோடு ஜி.ஹெச்.சுக்குக் கொண்டு போக... வழியிலேயே வேலுச்சாமி உயிர் இழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்ட கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அவரது பிணத்தை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டம் நடத்த... நாமக்கல் மாவட்ட எஸ்.பி., பாரி பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

Pallipalayam%203.jpgபள்ளிப்பாளையம் சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் அசோகன் நம்மிடம், ‘‘வேலுச்சாமி இந்த கந்துவட்டி கும்பலைப் பற்றி ஏற்கெனவே எங்கக்கிட்ட சொல்லியிருக்கார். ஆனா போலீஸ்கிட்ட இந்தத் தகவலைச் சொன்னப்ப அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல. வேலுச்சாமி புகார் கொடுத்துவிட்டுப் போனதைப் பார்த்துட்டுதான் ரவுடிக் கும்பல் கொன்னுருக்கு. இங்க மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கந்துவட்டி கும்பல் திரியறாங்க. ஆனா, போலீஸ் அவங்களையெல்லாம் கண்டுக்காது. ஏன்னா மக்களைப் பிழிஞ்சு வாங்குற கந்துவட்டியில ஒரு பகுதி போலீஸுக்குப் போயிடுதே. இதனால்தான், போலீஸ் ரவுடிகளுக்குத் துணை போகுது.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தறி பட்டறையில வேலை செய்யறவங்கக்கிட்ட கிட்னி எடுத்து விற்றது கந்துவட்டி கும்பல். அது பெரிய பிரச்னை ஆனவுடனே கொஞ்சம் அடங்கி இருந்தவங்க, இப்ப மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்க. பக்கத்து மாவட்டத்திலும் இந்த அட்டகாசம் ரொம்ப நாளா நடக்குது. அரசுதான் கடுமையான நடவடிக்கை எடுத்து இந்தக் கும்பலை ஒழிக்கணும்’’ என்றார் கோபமாக.

இந்த நிலையில், 14-ம் தேதி பள்ளிப்பாளையம் பகுதியில் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட ‘தல’ சிவா என்பவரைக் கைது செய்திருக்கிறது போலீஸ். இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் கேட்டால், ‘‘வேலுச்சாமி கொலை வழக்கில் அவரைக் கைது செய்யவில்லை. பழைய வழக்குகளுக்காகக் கைது செய்திருக்கிறோம்’’ என்கிறார்கள்.

ஆனால், ஏரியா மக்களோ, ‘‘அந்த ‘தல’ சிவாவும் கந்துவட்டி நடத்துற ஆளுதான். அவருக்கு போலீஸ் சப்போர்ட் ரொம்பவே இருக்கு. கந்துவட்டி கும்பல் மேல யாரு போய் புகார் கொடுத்தாலும் போலீஸ் வாங்கறதில்லை’’ என்கிறார்கள் ஒரு வித மிரட்சியுடன்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் இது பற்றிப் பேசினோம். ‘‘கந்துவட்டி கும்பல் பற்றி தாசில்தாரிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். தொழிலாளிகளுக்குக் கட்டாயமாகக் கந்துவட்டிக்குப் பணம் கொடுத்தாலும் அவர்கள் சட்டத்தின் மூலம் நிறுத்தப்படுவார்கள்’’ என்றார்.

Pallipalayam.jpgமாவட்ட எஸ்.பி.யான பாரியோ, ‘‘பள்ளிப்-பாளையம் இன்ஸ்பெக்டர், சப் & இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேலுச்சாமி கொலை வழக்கை நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம். விரைவில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் பிடிப்போம்’’ என்கிறார்.

வேலுச்சாமி கொலைக்கு நீதிகேட்டு போராட பள்ளிப்பாளையத்துக்கு வந்தார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். அவரிடம் பேசியபோது, ‘‘முழுக்க முழுக்கக் கந்துவட்டி கும்பலோடு கைகோத்து நடக்கும் போலீஸாரின் அலட்சியத்தால், இந்தக் கொலை நடந்திருக்கிறது. வெறும் சஸ்பெண்ட் நடவடிக்கை போதாது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி போலீஸாரையும், குற்றவாளிகளையும் தண்டிக்கவேண்டும். மேலும், இந்தப் பகுதியில் கோலோச்சி வரும் கந்துவட்டிக்காரர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது’’ என சூளுரைத்தார்.

இந்நிலையில் மார்ச் 16-ம் தேதி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

கந்துவட்டி என்ற குற்றத்தை செய்வதற்காகவே ஆபாசப்படம், கொலை என மேலும் பல குற்றங்களை சுதந்தரமாக செய்யும் கும்பலை முழுமையாக ஒடுக்குமா அரசு?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘சீக்கிரம் பைத்தியமாகி விடுவோம்’’
புலம்பும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்

Teacher.jpg



தேர்வில் மாணவர்கள் பெயிலானால் டீச்சர்கள் அடிப்பார்கள், பெற்றோரிடம் முறையிடு-வார்கள். ஆனால்... ஆசிரியர் ஆவதற்காக படிக்கும் மாணவ- மாணவிகளில் 69 சதவிகிதம் பேர் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் பெயிலாகிவிட்டனர். ஏன்?

தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவி கிளாராவிடம் கேட்டோம்.

‘‘ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 2008-10 பேட்ச் மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை, 2 வருடத்திற்கும் சேர்த்து 8 பாடங்கள்தான் இருந்தன. ஆனால், புதிய பாடத் திட்டப்படி ஒவ்வொரு ஆண்டிற்கும் 7 பாடங்கள் என மொத்தம் 14 பாடங்களாக உயர்த்தப்பட்டன. இதுமட்டுமில்லை... கைவினை தொழில், யோகா என கூடுதலான துணைப் பாடங்களும் உண்டு. தேர்ச்சி மதிப்பெண்ணும் 40லிருந்து 50 ஆக உயர்த்தப்பட்டது. ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நேரடிப் பயிற்சிக்காக பள்ளிகளுக்கு செல்லும் காலம் 40 நாட்களில் இருந்து 48 நாட்களாக உயர்த்தப்பட்டது. செய்முறை பயிற்சியிலும் பல கூடுதல் வேலைகள் இணைக்கப்பட்டுள்ளன.

பாடத் திட்ட ரீதியாக இவ்வளவு சுமைகளை எங்களுக்கு அதிகப்படுத்தியவர்கள் அதற்கான புத்தகங்களை காலத்தோடு கொடுக்க-வேண்டும் அல்லவா? ஆனால்... முதலாம் ஆண்டுக்கான புத்தகங்கள் ஜனவரி மாதம்தான் வழங்கப்பட்டது. ஜுன் மாதம் தேர்வு. ஒரு வருடம் படிக்க வேண்டிய பாடத்தை 5 மாதத்தில் படித்து தேர்வு எழுதினால் எப்படி சார்?’’ என்று சொன்ன கிளாரா, கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். 

‘‘ஆசிரியர் பயிற்சி முடிப்பவர்-களுக்கு 5-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கான ஆசிரியர் பணி மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு 10-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்-படுகின்றன. 5-ம் வகுப்பிற்கு மேல் எங்களை பாடம் எடுக்க அனுமதிக்காத நிலையில், 10-ம் வகுப்பு வரையுள்ள பாடங்களைக் கொடுத்து கொடுமைப்படுத்துவது ஏன்?

மேலும், செய்முறைப் பயிற்சியில் கற்றல் கற்பித்தல், பொருட்கள் செய்தல் போன்ற பிரிவுகள் உண்டு. அதில் செயல் வழி கற்றல் அட்டைகளை தயாரித்தல் என்று ஒரு வேலை. இந்த அட்டைகளை பள்ளிகளுக்கு கல்வித் துறையே வழங்குகிறது. இதற்கு நாங்கள் பல மணிநேரம் வேலை செய்து, பிறகு அதை தூக்கிப் போடுவதில் யாருக்கு என்ன லாபம்? அதே போல் மாணவர்களுக்கு பொருட்களை காண்பித்து பாடம் நடத்துவதற்காக என்று களிமண்ணால் கடப்பாரை, கத்திரிக்கோல், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை செய்யச் சொல்கிறார்கள். மாணவர்களுக்கு இந்த பொருட்களை காண்பித்துதான் பாடம் நடத்த வேண்டுமா? ஒரிஜினல் பொருட்களை வாங்கி வைத்து பாடம் நடத்தலாமே? காய்கறிகள்,- பழங்களை தவிர மற்றவை பல வருடத்திற்கு வரும். இப்படி தேவையில்லாமல் நேரத்தை விழுங்கும் வேலைகளையே கொடுத்து விட்டு தேர்ச்சி வரவில்லை என்றால் எப்படி தேர்ச்சி வரும்? 

செய்முறைப் பயிற்சிகளுக்கு 10 மணி நேரத்திற்கு மேல் கஷ்டப்பட்டு செய்ய வேண்டிய வேலைகளுக்கு 1 மார்க், 2 மார்க் என நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். எல்லா படிப்புகளிலும் செய்முறைப் பயிற்சி என்றால் சுலபமாக மார்க் கிடைப்பதாக இருக்கும். ஆனால் ஆசிரியர் பயிற்சியில் மட்டும் செய்முறைத் தேர்வுகள் சித்ரவதையாக இருக்கின்றன. கற்றல், -கற்பித்தல் பொருட்கள் செய்வதற்கான கால அளவாக புத்தகத்தில் 40 மணி நேரங்கள் போட்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கான பொருட்களை தேடித் தேடி வாங்கவே அந்த 40 மணி நேரம் போதாது. இந்த பொருட்களை செய்து முடிக்க அதைவிட பல மடங்கு நேரம் ஆகும். அதே போல் 100க்கும் மேற்பட்ட அசைன்மெண்ட் எழுதி அதற்கு அட்டை போட வேண்டும். இந்த வேலைக்கே நேரம் போதாதபோது பாடங்களைப் படிக்க ஏது நேரம்?

கடந்த வருடம் நாங்கள் கஷ்டப்பட்டு செய்த அசைன்-மெண்ட் மற்றும் பாடத்திட்ட குறிப்புகளை செய்முறைத் தேர்விற்கு மேற்பார்வையிட வந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கையால் கூடத் தொட்டுப் பார்க்கவில்லை. அவையெல்லாம் இப்போதும் என் வீட்டில் குப்பையாகக் கிடக்கிறது’’ என்றார் சோகமாய்.

மற்றொரு மாணவியோ... ‘‘ஒவ்வொரு தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் பணிபுரியும் விரிவுரையாளர்களும், ‘ நாங்கள் 5 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் வாங்குறோம். நீங்க படித்து முடித்தவுடன் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவிங்கதானே? அதனால் நாங்க சொல்ற எல்லாத்தையும் செஞ்சுதான் ஆகணும். இல்லாட்டி உங்களை பாஸ் ஆக விடமாட்டோம்’ என சைகோ போல பேசுகின்றனர். இப்படியே போனால் நாங்கள் சீக்கிரமே பைத்தியமாகிவிடுவோம். பாடத் திட்டங்களை அதிகப்படுத்தியவர்கள் பயிற்சிக் காலத்தையும் அதிகரிக்க வேண்டும்’’ என்றனர் கன்னத்தில் கைவைத்தபடி. 

ஆசிரிய மாணவர்களின் இதே முகாரிகளை தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர்களும் வழிமொழிகிறார்கள். 

அதிகப்படியான பாடத் திட்டத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து சேலத்தைச் சேர்ந்த மனநல நிபுணர் பாஸ்கரிடம் கேட்டோம். 

“பாடத் திட்டத்தால் மட்டும் அல்ல, எந்த சுமை அதிகமானாலும் அதனால் மனஅழுத்தம் ஏற்படும். இதனை ஆரம்பத்திலேயே கவனித்து மன அழுத்தத்தை குறைக்காவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. குழந்தைகளுக்கு மட்டும் இல்லாது பெரியவர்களுக்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கும் போது அதனால் ஏற்படும் உளவியல் சிக்கலையும் கண்டறிய தகுந்த நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். மாணவர் உளவியல் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட தரமான பாடத்திட்டம் அமைய வேண்டும்’’ என்கிறார். 

இது குறித்து தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழக வட்டாரத்தில் விசாரித்தோம். முடிவு எடுக்கக்கூடிய அதிகாரிகள் பலரும் பேச மறுத்தனர். நம் கருத்தை காது கொடுத்து கேட்ட அதிகாரிகள் வட்டாரத்தில் ஒரு சிலர் நம்மிடம், ‘‘பாடத்திட்டம் பற்றி பல புகார்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்துகொண்டே இருக்கின்றன. ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சிக்-கான வேலைவாய்ப்பு மிகவும் சிரமமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் புதிய பாடத்-திட்டத்தில் இப்படி ஒரு மோச-மான நிலை இருப்பது தெரிய வந்தால் வரும் ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் அட்மிஷனே இருக்காது. மாணவர்கள் பாதிக்காத அளவில் விரைவில் இதில் நல்ல முடிவு எடுக்க அரசை வற்புறுத்துவோம்’’ என்றனர். 

இந்தியாவிலேயே கல்வியியல் பல்கலைகழகம் தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது என தமிழக அரசு பெருமை பேசுகிறது. ஆசிரியர் பயிற்சியில் இந்த நிலை நீடித்தால் பல்கலைகழகம் மட்டும்தான் இருக்கும். மாணவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த நிலை வரும் முன் இதில் தேவையான மாறுதல்களை செய்ய வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்-. 

இது ஆசிரிய மாணவர்களின் பிரச்னை மட்டுமல்ல... அடுத்த தலைமுறையின் ஆரம்பக் கல்விக்கான பிரச்னையும் கூட! உடனடியாகத் தலையிட்டு தக்க தீர்வு காணுமா அரசு? 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தி.மு.க.நிகழ்ச்சிக்கு வேலை பார்த்த அரசு ஊழியர்கள்!
திருச்சியில் கிளம்பிய தீ

Camp%203.jpg



ஓர் அரசியல் கட்சி சார்பில் நடைபெறும் விழாக்களை அந்தக் கட்சியின் நிர்வாகிகள் முன்னின்று நடத்துவதுதான் வழக்கம். ஆனால் ஆளுங்கட்சியான தி.மு.க. நடத்திய நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர், மாவட்ட கல்வி அதிகாரி, தாசில்தார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என அரசு ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு கடமையாற்றியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

திருச்சியில்தான் இந்தத் தீ!

Camp.jpgமுதல்வர் கலைஞரின் 86-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தி.மு.க.வின் சார்பில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம், வருகிற பிப்ரவரி 19,20,21 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த முகாமில் பங்கேற்பதற்கான முன்பதிவு, கடந்த 23,24,25 ஆகிய தேதிகளில் நடந்தது. திருச்சி, துறையூர், முசிறி, லால்குடி, தொட்டியம், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய இடங்களில் நடந்த இந்த தி.மு.க. நிகழ்ச்சிக்கான வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார்கள் அரசு அதிகாரிகள்.

திருச்சியில் நடந்த முன்பதிவு முகாமில் மாவட்ட கலெக்டர் சவுண்டையா கலந்து கொண்டு முன்பதிவு அட்டையை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர். முசிறியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், சுகாதார மேற்பார்வையாளர்கள் ரங்கசாமி, சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர். துறையூரில் நடந்த முகாமில், கிராம நிர்வாக அதிகாரி ஜெகந்நாதன் தலைகாட்டினார். இவர்கள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு முன்பதிவு முகாமிலும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் என இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கெல்லாம் சிகரம் வைக்கும் விதமாக... இந்த முன்பதிவு முகாம் குறித்த செய்திகளை மாவட்டச் செய்தி- மக்கள் தொடர்பு அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர், அரசின் செய்திக் குறிப்புபோல் பத்திரிகைகளுக்கு அளித்தார். ஒவ்வொரு நாளிதழுக்கும் போன் செய்து நிகழ்ச்சிக்கு வாருங்கள் என அழைத்தார் அந்த அதிகாரி. 

தி.மு.க.வின் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் பணியாற்றியது ஏன்? எப்படி?

இப்படிக் கேட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் திருச்சி மாநகர மாவட்ட ம.தி.மு.க. துணை செயலாளர் வெல்லமண்டி சோமுவிடம் பேசினோம். 

‘‘மாநில அரசு, வேலைவாய்ப்புத் துறை என்று ஒரு துறையையும் அதற்கென அலுவலகத்தையும் வைத்திருக்கிறது. ஆனால்... ஆளும் கட்சியே இப்படித் தனியாக ஒரு நிகழ்ச்சியை நடத்துவது, அவர்களது அரசு நிர்வாகத்தின் மேல் நம்பிக்கை இல்லாததால்தான். 2006-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வின் கட்சி செய்திக் குறிப்பு ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு வழங்கியதற்காக, உதவி செய்தித் தொடர்பு அலுவலர் சரவணன் என்பவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. துள்ளிக் குதித்தது. தற்போது இத்தனை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டதாக, புகைப்படத்துடன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளனவே? தி.மு.க. அரசு, ஜனநாயக வழியில் இயங்கும் அரசு என்று சொல்லிவரும் கருணாநிதி, இதற்கு பதில் சொல்லவேண்டும். இது மட்டும் இல்லாமல் கடந்த மூன்று நாட்களில் மட்டும் தனியார் துறை வேலைவாய்ப்பை நம்பி இவர்களிடமே சுமார் ஒரு லட்சம் பேர் இங்கு பதிவு செய்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் வேலை இல்லாத் திண்டாட்டத்துக்கு தி.மு.க. நடத்திய நிகழ்ச்சியே சாட்சி. இதற்கும் தமிழக அரசு விளக்கம் தரவேண்டும் என தமிழகம் எதிர்பார்க்கிறது’’ என்றார் வெல்லமண்டி சோமு.

அ.தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளர் மனோகர் இதுபற்றி நம்மிடம்... ‘‘கடந்த மூன்று நாட்களாக திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் என்ற பெயரில் அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி நடந்துவரும் ஜனநாயகக் கேலிக் கூத்துக்களை அம்மாவின் கவனத்திற்குத் தெரியப்படுத்தி உள்ளோம். கட்சித் தலைமையின் உத்தரவுப்படி செயல்படுவோம்’’ என்றார். 

Camp%201.jpg‘‘இதுவும் ஒரு ஜனநாயகப் படுகொலைதான். மாவட்டச் செயலாளர் மூலம் தலைமையிடம் கலந்து பேசி, தேவையான நடவடிக்கை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்’’ என்று கூறினார் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. எம்.பி.யான குமார். 

‘‘ஒரு பொதுக் கூட்டத்திற்கும், இன உணர்வு மிக்க நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கேட்டு அணுகினால், ஆயிரம் விதிகளை கூறி தட்டிக் கழிக்கிறார்கள் அரசு அதிகாரிகள். ஆனால்... முற்றிலும் கண்துடைப்புக்காக நடத்தப்படும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு எந்த விதிகளின் கீழ் அரசு அதிகாரிகள் ஆர்ப்பாட்டமாகப் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபடி கலந்துகொள்கின்றனர்? இதுகுறித்து ஜனநாயக உணர்வு கொண்டோர் சிந்தித்து தக்க நடவடிக்கை எடுக்க முன்வந்தால் நாங்கள் கட்டாயம் தோள்கொடுப்போம்’’ என்கிறார் பெரியார் தி.க.வின் திருச்சி மாவட்டத் தலைவர் ராஜேந்திரன். 

Camp%202.jpgஆளும் அரசியல் கட்சிக்கு அரசு அதிகாரிகள் பகிரங்கமாக வேலை பார்த்தது எப்படி? கல்வித் துறை வட்டாரத்தில் துருவினோம். 

‘‘என்ன சார் இது? மாவட்ட அமைச்சரின் உத்தரவை மீறி யார் இங்கு என்ன செய்ய முடியும்? முன்பதிவு முகாம் நடந்த ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் இவ்வளவு ஆசிரியர்கள் வேண்டும் என்று கேட்டார்கள். அனுப்பி வைத்தோம். இது கட்சி வேலையா- அரசு வேலையா என்றெல்லாம் எங்களால் கேள்வி கேட்க முடியவில்லை. இதில் சனி,- ஞாயிறு விடுமுறை நாட்களில் முன்பதிவு வேலைக்குப் போனது மட்டுமல்ல... வேலை நாளான திங்கட்கிழமையும் தி.மு.க.வின் முன்பதிவு முகாம் வேலைக்கு ஆசிரியர்கள் சென்றனர். இதை பணி நாட்களில் சேர்ப்பதா? விடுமுறையில் சேர்ப்பதா என்றே தெரியவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் ஆட்சி மாறினால்... வேலைவாய்ப்பு முகாமில் பணிபுரிந்ததற்காக எங்கள் வேலைக்கே கூட பிரச்னை வரலாம். என்ன செய்வதென்று தெரியவில்லை’’ என சொல்லிச் சொல்லிப் புலம்புகின்றனர்.

கல்வித் துறை அதிகாரிகள் சிலரோ, ‘‘சில நூறு பேருக்காவது வேலை கிடைக்குமே என்ற நல்லெண்ணத்தில், தனிப்பட்ட முறையில்தான் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம். இது சரியா, தவறா என்று நாங்கள் விவாதிக்கவில்லை’’ என்கிறார்கள்.

‘மாவட்ட கலெக்டரா அல்லது அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளரா?’ என ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தி.மு.க.வினர் கேட்டனர். இப்போது இந்தக் கேள்வி தி.மு.க.வின் பக்கமே திரும்பியிருக்கிறது. தி.மு.க. என்ன பதில் சொல்லப் போகிறது?

படங்கள்: ஆர்.பி.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘சாதியை மாற்றி ஜெயித்தர்!’’
பேரூராட்சித் தலைவர் மீது பாயும் புகார்

Bakiyaraj%203.jpg



சாதியை மாற்றி ஜெயித்து அரசையும் மக்களையும் ஏமாற்றியதாக, பேரூராட்சித் தலைவர் மீது கிளம்பியுள்ள புகாரால்... போர் ஊராட்சியாகி இருக்கிறது ராயகிரி! திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி தாலுகாவுக்கு உட்பட்ட ராயகிரி பேரூராட்சித் தலைவர் பதவி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.கடந்த 2006&ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டவர் என வேட்பு மனு செய்து 3-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்று பேரூராட்சித் தலைவர் ஆனார் வேலாயுதம். இந்த நிலையில்தான், ‘வேலாயுதம் தாழ்த்தப்பட்டவரே அல்ல’ என்று சாதியின் பெயரில் புதிய பூதம் கிளம்பியிருக்கிறது. 
Bakiyaraj%202.jpg
‘மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த வேலாயுதம், தன்னை போலியாக ஆதி திராவிடர் என அடையாளம் காட்டி தலைவராகியிருக்கிறார். எனவே, வேலாயுதத்தைப் பதவி நீக்கம் செய்வதோடு அவருக்குத் தக்க தண்டனை வழங்கவேண்டும்’ என, மதுரை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ராயகிரி பேரூராட்சியின் ஆதி திராவிட கவுன்சிலர்களில் ஒருவரான வேலுச்சாமி. 

இதுபற்றி வேலுச்சாமியிடமே பேசினோம்.

“எங்க ஊர்ல நாடார்கள்தான் மெஜாரிட்டி. அவர்கள்தான் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று தலைவர், கவுன்சிலர் பதவிகளில் இருந்தனர். நாங்கள் கவுன்சிலர் பதவியை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையில்தான்... கடந்த தேர்தலில் ராயகிரி பேரூராட்சித் தலைவர் பதவியை தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கியது அரசு. இதையடுத்து தேர்தலில் நின்று நான்கு கவுன்சிலர்கள் வெற்றிபெற்றோம். இதையடுத்து நாடார்கள் செய்த சூழ்ச்சி, தேர்தல் முடிந்துதான் எங்களுக்குத் தெரியவந்தது. அதாவது, 3&வது வார்டில் வெற்றி பெற்ற புலவர் இனத்தைச் சேர்ந்த கவுன்சிலர் வேலாயுதத்தை திருநெல்வேலி மாவட்டத்திலேயே இல்லாத சாதியான ஆதிதிராவிடர் இந்து பைரா சாதி என்று சொல்லி, பேரூராட்சித் தலைவர் ஆக்கிவிட்டார்கள்.

தலைவர் தேர்தலில் போட்டியிட்ட வேலாயுதம், தாழ்த்தப்பட்டவர் இல்லையே என தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டோம். அவரோ, ‘மூணு மணி நேரம் அவகாசம் தர்றோம். அதுக்குள்ள அவர் தாழ்த்தப்பட்டவர் இல்லைனு நிரூபிக்கணும். இல்லேன்னா தலைவர் பதவி அவருக்குத்தான். கவுன்சிலர்கள் ஆதரவு அவருக்குத்தான் இருக்கு’ என சொல்லிவிட்டார். அவ்வளவு சீக்கிரம் எங்களால் ஆதாரத்தைத் தரமுடியாததால்... வேலாயுதத்தைத் தலைவராக அறிவித்துவிட்டனர். 

அதன் பிறகு... திருநெல்வேலி மாவட்டத்திலேயே ஆதி திராவிடர் இந்து பைரா என்ற சாதியே இல்லை என அரசு சான்றிதழ் வாங்கி கலெக்டரிடம் கொடுத்தோம். அவரும் கண்டுகொள்ளவே இல்லை. முதல்வர் வரை மனு அனுப்பியும் தீர்வு இல்லை. அதனால்தான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம்” என்றார் ஆவேசமாக.

நம்மிடம் பேசிய கவுன்சிலர் தாமரைச் செல்வி, “மாவட்ட அதிகாரிகள்கிட்ட முட்டிமோதிப் பாத்துட்டோம். ‘தேர்தல் முடிஞ்சு மூன்றரை வருசத்துக்கு மேல ஆச்சு. இதில் தாழ்த்தப்பட்டவங்க ஆண்டா என்ன? ஆளலேன்னா என்ன?’ன்னு கேக்குறாங்க. எங்க பதவிக் காலம் முடியறதுக்குள்ள தலைவர் பதவியை வாங்காம விடமாட்டோம். இத மனசுல வச்சிக்கிட்டு தலைவர் வேலாயுதம் எங்க வார்டுகளுக்கு வர்ற நல்ல திட்டங்களைத் தடுத்து நிறுத்துறாரு. அடிப்படை வசதிகள்கூட செய்து தருவதில்லை. இதைப் பற்றி அவர்கிட்ட கேட்டா... ‘கோர்ட்டே செய்யும்’னு சவடாலா பேசுறாரு. எங்களுக்குத்தான் இப்படிச் செய்யுறார்னு நினைச்சா, நாடார் சமூகத்தைச் சேர்ந்தவங்களையும் பாடாய்ப்படுத்தி காமராஜர் நினைவுப் பூங்காவை இடிச்சுத் தரைமட்டமாக்கிட்டாரு. இத நெனச்சி ஏண்டா வேலாயுதத்தைத் தலைவர் ஆக்கினோம்னு நாடார் சமூகத்தினரே நொந்துபோயிருக்காங்க” என்றார் காரசாரமாக.

அப்போது நம்மை நெருங்கிய நாடார் சமூகப் பிரமுகரான காளியப்பன், ‘‘ஆமாங்க. இந்த கவுன்சிலர் அம்மா சொல்றதெல்லாம் உண்மைதான். எங்களுக்கு விசுவாசமா இருப்பார்னுதான் தலைவர் பதவியை அவருக்குக் கொடுத்தோம். பதவியைக் கையில வச்சுக்கிட்டு எங்க தலை மேலயே ஏறி உட்கார்ந்துக்கிட்டாரு. வணிக வளாகம் கட்டுறேன்னு சொல்லி காமராஜர் பூங்காவை காசுக்காகத் திட்டம் போட்டு இடித்துத் தரைமட்டமாக்கி நாசமாக்கிட்டாரு. இந்தப் பூங்காவை அமைக்கிறதுக்கு அரசுக்கிட்ட எப்படிப் போராடியிருப்போம் தெரியுமா? இப்போ, எப்படியாவது பூங்காவை மறுபடியும் அமைக்கணும்னு மதுரை உயர் நீதிமன்றத்துல பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கோம்’’ என்றார் ஆத்திரம் குறையாமல். 
Bakiyaraj%201.jpg
இந்தப் புகார்களுக்கெல்லாம் ராயகிரி பேரூராட்சித் தலைவர் வேலாயுதத்தைச் சந்தித்து பதில் கேட்டோம்.

“நான் உண்மையாகவே ஆதி திராவிடர் இந்து பைரா இனத்தைச் சேர்ந்தவன். என் மனைவிதான் புலவர் இனத்தைச் சேர்ந்தவங்க. நாடார் சமுதாயத்துக்காரங்க சூழ்ச்சிசெய்து எனக்குப் பதவி வாங்கிக் கொடுக்கல. பல எதிர்ப்புகளை மீறி தலைவர் பதவியை வாங்கினதால... இப்படிப் பழி சுமத்துறாங்க. காமராஜர் பூங்காவை இடிச்சதற்கான காரணம் வணிக வளாகம், பஸ் நிலையம் கட்டத்தான்னு நாடார் சமூகத்திற்கே தெரியும். அதுக்கு அவங்களும் ஒத்துழைப்பு கொடுத்திருக்காங்க” என்றார் பொறுமையாக

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயராமனிடம் பேசினோம். “இப்படி ஒரு பிரச்னை எங்க மாவட்டத்துல இருப்பதே நீங்க சொல்லித்தான் தெரியும். சம்பந்தப்பட்டவர்களை என்னை நேரில் வந்து பார்க்கச் சொல்லுங்க. அரசிடம் பேசி தீர்த்து வைக்கலாம்”என்றார் பொறுப்புடன்!

இதை அப்படியே ஊர் மக்களிடம் சொன்னதற்கு, “அட போங்க சார்! கலெக்டர்கிட்ட எத்தனை முறைதான் நேரடியாப் பார்த்துச் சொல்றது? கோர்ட்ல பார்த்துக்குறோம்” என்றனர் ஆதங்கமாய்.

மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனத்தால்தான் பிரச்னை பெரிதாகிறது என்பது மட்டும் புரிகிறது!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கர்நாடகத்தில்...
ஆந்திராவிலிருந்து ஆபாசப்புயல்
அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்

student.jpg


தண்ணீரைத் தடுக்கும் திருப்பணியை வெகு நாட்களாகச் செய்துவரும் கர்நாடகா அரசு, தமிழக மாணவர்கள் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஆசை காட்டி மோசம் செய்த கொடுமை தற்போது வெளிவந்திருக்கிறது. இதற்கு தெரிந்தோ தெரியாமலோ தமிழ் மாணவர்களும் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி.

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு எப்போதும் தேவை இருக்கிறது. இதைக் குறிவைத்து பெங்களூருவில் உள்ள கல்வி நிறுவனங்களின் சார்பில் அவர்களின் ஏஜென்ட்டுகள் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்பட பல மாவட்டங்களில் முகாமிடுகின்றனர்.

student%201.jpgகர்நாடகாவில் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்? தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி முடிக்க 2 லட்சம் வரை செலவாகும். மேலும் ஒரே தவணை அல்லது இரண்டு தவணைகளில் செலுத்த வேண்டும். கர்நாடகாவில் நிறுவனத்தை பொறுத்த 50 ஆயிரம் முதல் 70 ஆயிரத்திற்குள் அடங்கிவிடுகிறது. அதிலும் மூன்று அல்லது நான்கு தவணைகளில் செலுத்தும் வசதி. பாடத்திட்டத்தை பொறுத்தவரை கர்நாடகாவில் ஆண்டுக்கு நான்கு தாள்கள் மட்டுமே. அதுவே தமிழகத்தில் ஏழு தாள்கள். கர்நாடகாவில் படித்தாலும் இவால்வேஷன் தேர்வு மூலம் தமிழகத்திலும் பதிவு செய்து வேலை வாய்ப்பு பெறலாம்...’’ என்று ஆசை வார்த்தை காட்டுகின்றனர் ஏஜென்ட்டுகள். அதை உண்மை என்று நம்பி, பெங்களூருவில் உள்ள தமிழ் வழி பயிற்சிப் பள்ளிகளில் ஆண்டுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை சேர்ந்து படிக்கின்றனர்.ஏஜென்ட்டுகளின் உறுதி மொழியை அப்படியே உண்மை என்று நம்பிய மாணவர்கள் பலர், ஏனோதானோ என்று தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பல பள்ளிகளில் தற்போது ஆசிரியராகப் பணியாற்றியும் வருகின்றனர். இதையே காரணம் காட்டி மாணவர்களை இழுக்கும் பணியை, பல ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளனர். 

இந்நிலையில், கர்நாடக கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஒரு சந்தேகப்பொறி தட்டியது. பெங்களூருவில் படிக்கும் தமிழ் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 80 முதல் 90 சதவிகிதம். தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவு. அதேபோல, கர்நாடகத்தில் கன்னட மொழியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவு. எப்படி இது சாத்தியம்? என்ற சந்தேகம், கர்நாடக அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடகக் கல்வித் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அப்போது தான் அவர்களுக்கே பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. இதுவரை பெங்களூருவில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்களே தங்களுக்குள் மாற்றி மாற்றி விடைத் தாள்களை திருத்தி வந்தனர். அதில்தான் முறைகேடுகள் இறக்கைக் கட்டி பறந்தன. 

அதை மாற்றியமைக்க, கர்நாடகக் கல்வித் துறை அதிகாரிகள் தமிழகக் கல்வித்துறை செயலாளரை அணுகினர். கர்நாடகாவில் பயிலும் தமிழ் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தம் செய்து வழங்கவேண்டும் என்று தமிழகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். அதனடிப்படையில் 4 ஆயிரத்து நூறு மாணவர்களின் விடைத்தாள்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதைத் திருத்திய ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி...

student%202.jpg‘‘பல மாணவர்கள் கேள்விகளை அப்படியே விடைத்தாளில் எழுதி வைத்துள்ளனர். சில மாணவர்கள் மட்டுமே 20 முதல் 30 மதிப்பெண் பெற்றுள்ளனர். பலர் 15க்கும் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளனர். 10 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பெங்களூரு விடைத்தாள் திருத்தும் மையத்தில் 80 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் விடைத்தாள்களை திருத்திய போதுதான் மேற்கண்ட முறைகேடுகள் கண்டு-பிடிக்கப்பட்டன. இதையடுத்து தமிழக ஆசிரியர்கள் விடைத்-தாள்களை திருத்தி அளித்த மதிப்-பெண்களின் அடிப்படையில் ரிசல்ட் வெளியிட்டது கர்நாடகக் கல்வித் துறை. அதில்தான் 4 ஆயிரத்து நூறு மாணவர்கள் ஃபெயிலாக்-கப்பட்டனர்’’ என்கின்றனர் தமிழகக் கல்வித் துறை அதிகாரிகள்.

கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களோ, ‘‘கடந்த ஆண்டுவரை கர்நாடகாவில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. இந்தமுறை தமிழகத்தில் திருத்தப்பட்டன. பாடம் நடத்துவது மட்டுமே நாங்கள். தேர்வு மற்றும் முடிவுகளை அறிவிப்பது அரசு. எனவே, ஒட்டுமொத்தமாக மாணவர்கள் ஃபெயிலானது எங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது எங்களின் மாணவர் சேர்க்கையையும் பாதிக்கும் அம்சம்’’ என்கிறார்கள்.

இவர்களின் கருத்தை அப்படியே வழிமொழிகிறது கர்நாடகக் கல்வித் துறை. மேலும், அம்மாநில கல்வித் துறை இந்த முறைகேடு குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, விடைத்தாள் திருத்தும் முறையை மாற்றி அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

முதலாம் ஆண்டில் தமிழ்ப் பிரிவில் மூன்றாமிடம் பிடித்த கள்ளக்குறிச்சி மாணவர் முருகன் நம்மிடம், ‘‘தமிழக மாணவர்கள் நான்காயிரத்து நூறு பேர் ஃபெயிலாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாங்கள் முறையிட சென்றபோது, கர்நாடகக் கல்வித் துறை அதிகாரிகள் எங்களை விரட்டியடித்தனர். இது குறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத்திடம் முறையிட்டுள்ளோம். அவர்கள் கர்நாடக அதிகாரிகளிடம் பேசியுள்ளனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி முதலாம் ஆண்டில் தமிழ் வழி கல்வியில் முதலிடம் பிடித்தார். அவரும் ஃபெயிலாக்கப்-பட்டுள்ளார். 

எல்லா மாணவர்களும் நன்றாகப் படிப்பார்கள் என்று கூற முடியாது. சில மாணவர்கள் வெறும் கேள்வியையே எழுதி வைத்திருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை. அதற்காக ஒட்டுமொத்த மாணவர்களும் அப்படிச் செய்வார்கள் என்பதை ஏற்க முடியாது. எனவே, எங்களுக்குப் பரிகாரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் பெங்களூரு தமிழ் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.

பெங்களூரு தமிழ்ச் சங்க செயலாளர் தாமோதரனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘கர்நாடகக் கல்வி அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டேவை கடந்த டிசம்பர் 29ம் தேதி சந்தித்துப் பேசினோம். ‘தவறு நடந்ததற்கான ஓர் ஆதரத்தை அளித்தல்கூட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயார். அதிகாரிகளிடம் விசாரித்த வகையில் அனைத்தும் முறைப்படி நடந்துள்ளது. தவறை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் இருந்தும் தலா ஐந்து மாணவர்கள் மறு திருத்தம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். அதில் குறைபாடுகள் இருந்தால் அனைத்து மாணவர்களுக்கும் மறுபரிசீலனை செய்யலாம்’ என்று தெரிவித்தார். அரசின் முடிவைப் பொறுத்து எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை அமையும்’’ என்றார். 

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இப்பிரச்னை பற்றிப் பேசினோம். ‘‘கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தி வழங்கவேண்டும் என்று கர்நாடகக் கல்வித் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்படையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன.

அப்போதுதான் விடைத்தாள்களில் பலர் கேள்வியை மட்டுமே எழுதி வைத்துள்ளனர் என்பது போன்ற தகவல்கள் கிடைத்தன. இவர்கள் கர்நாடகத்தில் படித்துவிட்டு, இவால்வேஷன் தேர்வு எழுதி தமிழகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பு பெற்றுவிடுகின்றனர். விடைக்கு கேள்வி எழுதும் இவர்கள், தமிழகத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தினால் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை’’ என்றார் வேதனையோடு!




 

பால.சீனிவாசன்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

காசு கொடுத்தால்தான் வீடு!
லஞ்சம் விளையாடும் சமத்துவபுரங்கள்

House.jpg


‘‘விவேகம் என்னும் வெள்ளி முளைத்து ஜாதி எனும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் என்ற ஞாயிறு பிறக்கும்’’ என்று கலைஞரின் தத்துவமாக, ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் பல இடங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த சமத்துவபுரம் ஜாதியை ஒழித்ததோ இல்லையோ, லஞ்சத்தை பாலூற்றி வளர்த்து வருகிறது.

ஜாதிப் பாகுபாடுகள் நீங்கி, சமத்துவமாக மக்கள் வாழ வழிவகுக்கும் என்ற நினைப்பில், கலைஞரின் மனதில் உருவானதுதான் சமத்துவபுரம் என்ற திட்டம். நூறு வீடுகளைக் கொண்ட இந்த சமத்துவ புரத்தில், ஐம்பது வீடுகள் தாழ்த்தப்பட்டோருக்கும் மீதமுள்ள ஐம்பது வீடுகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன. 

இலவசமாக, வழங்கப்படவேண்டிய இந்த வீடுகளை அதிகாரிகளில் சிலர், வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்கி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை கிளப்புகின்றனர் ராதாபுரம் மக்கள்.

நெல்லை மாவட்டம் ராதா-புரத்தில் கடந்த அக்டோபர் 13ம் தேதி அன்று சமத்துவபுரத்தைத் திறந்து வைத்தார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு சமத்துவபுரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தகுதியுள்ள பலர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் மனு கொடுத்து வருகின்றனர் அப்பகுதி மக்கள். 

House%202.jpgஅவர்களைச் சந்தித்து என்ன நடந்தது? என்று கேட்டோம்.

கீதா என்பவர் தைரியமாகப் பேச முன் வந்தார்.

“நாங்க நாலு தலைமுறையா இதே ஊரில்தான் இருக்கிறோம். எனக்கு மூன்று பிள்ளைகள். பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறோம். வாடகை வீட்டில்தான் இருக்கிறோம். சமத்துவபுரத்தில் வீடு வேண்டும் என்று மனு கொடுத்திருந்தோம். இது வரையிலும் வீடு தரவில்லை. பல இடங்களிலும் மனு கொடுத்து வருகிறோம். வீடு தருவாங்களான்னு தெரியலை” என்றார் பரிதாபமாக.

அடுத்து கலங்கிய கண்களுடன் வந்தார் ராஜம்மாள். “எனது மகனும் மருமகளும் இறந்து விட்டனர். பேரன், பேத்திகளை நான்தான் வளர்த்து வருகிறேன். கூலி வேலைக்குப் போய், அவங்களுக்கு கஞ்சி ஊத்தறேன். ரேஷன் கார்டுகூட இருக்கு. எங்களை விட நல்லபடியா இருக்குற பல பேருக்கு, சமத்துவபுரத்தில் வீடு கெடச்சிருக்கு. எங்களப் போல ஏழை பாழைகளுக்குக் கொடுக்கலாமே இந்த அதிகாரிங்க’’என்று கண்ணீர் மல்கக் கூறினார். சுடலையாண்டி என்பவர், சமத்துவபுர அதிகாரிகளை நேரடியாகவே குற்றஞ்சாட்டினார்.

“என்னுடைய மகள் ஊனமுற்றவர். அவருக்குத் தான் வீடு கேட்டு விண்ணப்-பித்திருந்தோம். ஆள் பிடிக்கிற-வங்களுக்குத்தான் வீடு என்ற நிலைமை தான் உள்ளது. வசதியானவங்க, அதிகாரிகளை கவனிச்சவங்களா பார்த்து வீடு கொடுத்துட்டாங்க. அரசாங்கம் தரும் வீட்டுக்குக்கூட, லஞ்சம் தரணும்னு சொன்னா நாங்க என்ன செய்ய முடியும்?’’ என்றார் வேதனையுடன்.

கண்ணன் என்பவர், “நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன். தினக்கூலி வேலைக்குத் தான் போறேன். நிரந்தரமா தங்க ஒரு வீடு இல்லைன்னுதான் மனு கொடுத்தேன். இப்ப இருக்கிற குடிசையும் மழை பெய்தால் ஒழுகும். மழை பெய்தால் லைப்ரரி பில்டிங்கில்தான் ஒதுங்குவோம். எங்ககிட்ட யாரும் பணம் கேட்கலை. கேட்டாலும் கொடுக்கக் கூடிய நிலைமையில நாங்க இல்லை” என்றார்.

நம்மிடம் புகைப்படம், பெயர் தவிர்த்துப் பேசிய பலர், பஞ்சாயத்து யூனியன் அலுவலகப் பணியாளர் ஒருவரையும், தலையாரி ஒருவரையும் குறிப்பிட்டு, இவர்கள்தான் பணம் பெற்றுக்கொண்டு, நிரந்தர வீடு உள்ளவர்கள், இரண்டு பொண்டாட்டிக்காரர்கள் என்று பலருக்கும் வீடுகளை வழங்கக் காரணமாக இருந்தார்கள், என்று சொன்னார்கள்.

இரு மனைவிகளையுடைய ஒருவர், தனது செல்வாக்கால் இரண்டு மனைவிகளுக்குமே வீடு ஒதுக்கிக்கொண்டார். விஷயம் தெரிந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பியதும், ஒரு வீடு திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்களில் சிலர், ‘‘இப்போது வீடு வாங்கி-யுள்ளவர்களுக்கு நிரந்தர வீடுகள் வேறு எங்கேனும் இருந்தால், அவை பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்பை கலெக்டர் வலியுறுத்திச் சொன்னால்-போதும், சமத்துவ-புரத்தில் வீடு வாங்கியுள்ளோர் பலர் ஓடிவிடுவார்கள்’’ என்று சொன்னார்கள். 

ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர வடிவேலுவிடம் இதுபற்றிப் பேசினோம்.

House%203.jpg“சேரன் மகாதேவி சப்-கலெக்டர் உள்ளிட்ட பல அதிகாரிகள், பரிசீலனை செய்த பிறகுதான் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன. அவற்றை பரிசீலனை பண்ணி நூறு பயனாளிகளைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.

வீடு கிடைக்காதவர்கள் அதிருப்தியில் இதுபோன்ற புகார்களை கூறுகின்றனர். அவர்களில் சிலருக்கு, உண்மையிலேயே அனைத்து தகுதிகளும் இருந்தும் கிடைக்காமல் இருந்திருந்திருக்கலாம். இருப்பது நூறு வீடுகள்தான். அதற்குள்தான் கொடுக்க முடியும். தவறான முறையில் யாருக்கும் வீடுகள் கொடுக்கப்படவில்லை” என்றார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஜெயராமனிடம் பேசினோம்.

“சமத்துவபுரத்தில் வீடு கிடைக்காதவர்களில் சிலர் நீதிமன்றங்களை அணுகியிருந்தனர். தகுதி இருந்தால் பரிசீலனை செய்யவும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டன நீதிமன்றங்கள். என்னிடத்திலும் புகார்கள் கொடுத்துள்ளனர். தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை உறுதி” என்றார்.

சமத்துவபுரத்தில் வீடுகள் பெறுவதற்கு நிலம் உடையவர்கள்தான் தகுதியுள்ளவர்களாம். ஆனால் அந்த நிலத்தில் நிரந்தர வீடு இல்லாதவர்களுக்குத் (குடிசைகளில் குடியிருப்பவர்கள்)தான் வீடு என்கின்றனர் அதிகாரிகள். நிலம் இல்லாதவர்களுக்கு வீடுகள் கிடையாதாம். என்ன கொள்கையோ? அரசு அதிகாரிகளுக்கே வெளிச்சம்! 

சமத்துவபுரத்தின் மூலம் சமத்துவம் உருவாகிறதோ இல்லையோ, அரசு ஊழியர்கள், அதிகாரிகளில் சிலர் வளமாகிறார்கள் என்பதுதான் உண்மை!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அனாதை மடத்திற்காக அடித்துக் கொள்ளும் அரசுத்துறைகள்!
குமரி கலாட்டா

Kumari%202.jpg


புறம்போக்கு நிலத்துக்காக அரசியல்வாதிகள் மோதிக்கொள்வது சகஜம். ஆனால், வித்தியாசமாக குமரி மாவட்டத்தில் அரசு நிலத்துக்கு உரிமை கோரி வருவாய்த் துறையும், நகராட்சி நிர்வாகமும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. 

Kumari.jpgகுமரி மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் இருந்தாலும்... குமரி தந்தை மார்ஷல் நேசமணி நகரசபை தந்தையாக இருந்ததன் மூலம் பாரம்பரிய பெருமை பெற்றது நாகர்கோவில் நகராட்சி. இந்நகராட்சிக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிப்பது இந்து கல்லூரி அருகே உள்ள அனாதை மடம் மைதானம். இந்த மைதானத்தை வைத்துதான் இப்போது விபரீத விளையாட்டு ஆரம்பித்திருக்கிறது. 

அதென்ன அனாதை மடம்? 

நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே சுமார் எட்டு ஏக்கர் பரப்பில் மடத்துடன் கூடிய மைதானம் இருக்கிறது. 1962&ல் திருவிதாங்கூர் மகாராஜா அவிட்டம் திருநாள் என்பவரால் அனாதைகள் மற்றும் பிச்சைக்காரர்களை பராமரிப்பதற்காக, இந்த இடம் நகராட்சிக்கு அளிக்கப்பட்டது. அதோடு ஒவ்வோர் ஆண்டும் அனாதைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி உதவியும் செய்து வந்தார் மகாராஜா. இதனால் இது அனாதை மடம் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அனாதைகள் யாரும் தங்காததால் நிதி உதவி நிறுத்தப்பட்டது. 

இப்போது இந்த மைதானத்தை லாரி செட், சர்க்கஸ் மற்றும் பொருட்காட்சிக்கும், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கும் வாடகைக்கு வழங்கிவருகிறது நகராட்சி. இதேபோல போக்குவரத்து வசதிகளுடன் கூடிய மைதானம் குமரி மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லை. 

இந்நிலையில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராமச்சந்திரன் திடீரென்று அனாதை மடத்துக்கு விசிட் அடித்து... ‘இந்த இடம் வருவாய்த் துறைக்கு சொந்தமானது’ என்ற அறிவிப்புப் பலகை வைக்க... ஆரம்பித்தது பிரச்னை!

இதுகுறித்து நாகர்கோவில் நகராட்சித் தலைவர் அசோகன் சாலமனிடம் பேசினோம். 

‘‘தமிழக அரசு 1972ம் ஆண்டு பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையம் அமைப்பதற்காக, நகராட்சிக்குச் சொந்தமான இந்த மைதானத்தைக் கேட்டது. ஆனால், தர மறுத்து அப்போதே நாகர்கோவில் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகராட்சி ஆவணத்தில் அனாதை மடம் மைதானம், ‘மன்னர் அவிட்டம் திருநாள் ஞாபகார்த்த நகராட்சி அனாதை மடம்’ என்ற பெயரில்தான் உள்ளது. இந்த மைதானம் மட்டுமல்ல சர்.சி.பி.இராமசாமி ஐயர் பூங்கா, வடசேரி கனகமூலம் சந்தை போன்றவைகூட தானமாக வழங்கப்பட்டவை தான். அனாதை மடம் நகராட்சிக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களாக அவிட்டம் மகாராஜா வழங்கிய சேமிப்புக் கணக்கு மற்றும் இது தொடர்பான நகராட்சித் தீர்மானங்களை எங்களால் காட்டமுடியும். தங்களுக்கு இந்த இடம் சொந்தமானது என்று வருவாய்த்துறை போர்டு வைத்ததன் மூலம், நாகர்கோவிலைச் சேர்ந்த 2.75 லட்சம் மக்களை அவமானப்படுத்தியுள்ளது. நல்ல சாதனை செய்யும் அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இந்த அதிகாரிகள் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார் ஆத்திரத்தோடு. 

தாசில்தார் ராமச்சந்திரன் என்ன சொல்கிறார்? 

Kumari%203.jpg‘‘குமரி மாவட்டத்தில் முதியோர் கிராமம் அமைக்க ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்கான இடம் தேர்வு செய்யும்போது, அரசு புறம்போக்கு நிலம் என அனாதை மடம் இருப்பது தெரியவந்தது. எனவே, அங்கு போர்டு வைத்துள்ளோம். அனாதை மடம் என்றால் அனாதைகள் இருக்கவேண்டும். தானமாகக் கொடுத்த நோக்கத்திற்கு மாறாக, சம்பந்தப்பட்ட சொத்தை பயன்படுத்தினால் அதைப் பறிமுதல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. நகராட்சிக்குச் சொந்தமானது என்பதற்கு உரிய ஆவணங்களை அவர்கள் முதலில் காட்டட்டுமே? நாகர்கோவில் நகராட்சி, குப்பை கொட்டுவதற்காக புறநகர்ப் பகுதியில் சுமார் ஐம்பது ஏக்கர் நிலம்வேண்டும் என நகராட்சி சார்பில் எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்காக நாங்கள் இடம் தேடி வரும் நிலையில் அனாதை மடம் மைதானத்தை நகராட்சி விட்டுக்கொடுத்தால்தான் என்ன?’’ என்றார். 

விவகாரம் இப்போது ஆர்.டி.ஓ.விடம் செல்ல, அனாதை மடம் தங்களுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை நகராட்சி உடனே தரவேண்டும் என ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார். இப்பிரச்னை தொடர்பாக கலெக்டரிடமும் முறையிட்டிருக்கிறார் நகராட்சி ஆணையர்.

இதற்கிடையில் நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் முப்பது நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அனாதை மடம் மைதானத்தில் வருவாய்த் துறையினரால் வைக்கப்பட்டிருந்த போர்டை உடைத்துத் தீவைத்து சாலை மறியலிலும் ஈடுபட... பிரச்னை பூகம்பமாய் வெடித்திருக்கிறது.

இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூவிடம் நாம் கேட்டபோது,

‘‘அனாதை மடத்தில் போர்டு வைத்தது பற்றி தாசில்தாரிடம் விளக்கம் கேட்டுள்ளேன். தவறு இருந்தால் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனாதை மடம் மைதானத்தைத் தற்போது பராமரித்து வரும் நகராட்சியே தொடர்ந்து பராமரிக்கட்டும். நகராட்சியும், வருவாய்த் துறையும் அனாதை மடத்துக்கு உண்டான ஆவணங்களை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியிடம் காண்பிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார் கவனத்தோடு. 

Kumrai1.jpgநம்மிடம் பேசிய அரசு ஊழியர் வட்டாரத்தினர், ‘‘சாலை பாதுகாப்பு கமிட்டியில் நாகர்கோவில் நகராட்சித் தலைவரை உறுப்பினராகச் சேர்க்காதது, ஆரல்வாய்மொழி புறநகர்ப் பகுதியில் குப்பை கிடங்கிற்கு தொடர்ந்து அனுமதி மறுத்துவருவது, பிளாஸ்டிக் இல்லா நகரம் என்ற அறிவிப்பை நகராட்சியிடம் கலந்தாலோசிக்காமலேயே கலெக்டர் அறிவித்தது... இப்படியாக வருவாய்த் துறைக்கும், நகராட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவிவருகிறது. அதன் தொடர்ச்சியே இதெல்லாம்’’ என்கின்றனர். 

அரசு நிர்வாகத்தின் முக்கிய இரு பிரிவுகள் இப்படி சிறுபிள்ளைத்தனமாக மோதிக்கொண்டால் பாதிக்கப்படுவது மக்கள் நலத் திட்டங்கள்தான்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

“ரேஷன் அரிசியில் நவீன மோசடி!
-திகைக்க வைக்கும் மதுரை

Rice.jpg




கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், போட்ட முதல் கையெழுத்து ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்பதற்கான கோப்பில்தான். ஏழை எளிய மக்களுக்காகக் கொண்டுவரப்பட்டத் திட்டம் அது. எந்த நோக்கத்திற்காக அத்திட்டம் அமல்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாமல், அத்திட்டத்திற்கான அரிசியை மூட்டை மூட்டையாய் கேரளா, கர்நாடகம் என கடத்துவது அரிசி ஆலை முதலாளிகளுக்கும், ரேஷன்கடை ஊழியர்களுக்கும் கை வந்த கலை.

முன்பெல்லாம் ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாய் வெளிமாநிலங்களுக்குக் கடத்தியவர்கள், இப்போது எந்த மாநிலத்துக்கும் கடத்துவது இல்லை. அதற்குப் பதிலாகப் புதிய டெக்னிக் ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறது ரேஷன் அரிசி கடத்தும் கும்பல்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 150 அரிசி ஆலைகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 26 தனியார் அரிசி அரவை ஆலைகளை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்த அரிசி ஆலைகளில் இருந்துதான் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. 

Rice%202.jpg போன மச்சான் திரும்பி வந்தாண்டி’ என்ற கதையாக ரேஷன் கடைகளுக்குப் போன அரிசி திரும்பவும் அரிசி அரவை ஆலைக்கே வருவது தான் கடத்தல் கும்பலின் ஹைடெக் டெக்னிக் ஃபார்முலா. 

ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக, மதுரையில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலுடன் நம்மைத் தொடர்பு கொண்டார் இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன். அவரே இதுபற்றி விவரிக்கிறார் கேளுங்கள்.

“விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து அவித்து, அரைத்து ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் சென்றடையும் வரை அரவைக் கூலி, லாரி வாடகை உள்பட ஒரு கிலோ அரிசி பதினேழு ரூபாய் முதல் பதினெட்டு ரூபாய் வரை ஆகிறது. 

நெல்லை அவித்து அரைத்து அரிசியாக மாற்ற அரசாங்கத்திற்குச் சொந்தமான அரிசி ஆலைகளைத் தவிர, மேலும் தனியார் ஆலைகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் உரிமம் கொடுக்கிறது நுகர்பொருள் வாணிபக் கழகம். அரைப்பதற்காக அரசு அனுப்பும் நெல்லை, தனியார் ஆலை நிறுவனத்தினர் வெளிமார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள். அதற்கு பதிலாக, கள்ளச் சந்தையில் ரேஷன் அரிசியைக் கடத்தி தங்களது ஆலைகளுக்கே கொண்டு வந்து வேறு சாக்குகளில் மாற்றி மீண்டும் அரசின் உணவு கிட்டங்கிற்கே அனுப்பி வைக்கின்றனர். அதாவது நெல்லை அரைத்து அனுப்புவதுபோல கணக்குக் காட்டிவிடுகின்றனர். இது ஒரு சுழற்சி முறை. 

தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் சுமார் 17 லட்சம் டன் நெல்லிற்கு, அந்தந்த மாவட்ட முகவர்கள் மூலமாகச் சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் வரை 170 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கப்படுவதாக அந்தத் துறையின் அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு இத்தனை கோடி என்றால், வருடத்துக்கு ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது. 

தனியார் அரிசி ஆலைகள், அரசாங்க நெல்லை அரைத்து தரமான அரிசியை உணவு கிட்டங்கியில் செலுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், முதுநிலை மண்டல மேலாளர், முதன்மை தரக்கட்டுப்பாடு அதிகாரி, சூப்பர்வைசர்கள், பறக்கும் படை தாசில்தார், உணவு கடத்தல் போலீஸார் உட்பட அனைவருக்கும் ‘கட்டிங்’ சென்றுவிடுகிறது.

Rice%201.jpgமதுரை மாவட்டத்தில் 26 தனியார் அரிசி ஆலைகள், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், முகவர்களாக இருக்கிறார்கள். இந்த நவீன அரிசி ஆலைகள் அனைத்தும் முழுத் திறனோடு அரைத்தால் மாதம் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 டன் நெல்லை மட்டுமே அரைத்துக் கொடுக்க முடியும். ஆனால், அனைத்து அதிகாரிகளின் துணையோடு மாதம் ஒன்றுக்கு 16 ஆயிரம் டன் நெல் அரைத்ததாகக் கணக்கு மட்டும் காண்பிக்கின்றனர். மீதமுள்ள நெல்லை வெளிமார்க்கெட்டில் விற்று விடுகிறார்கள். 

நெல் அரைப்பதற்காக மின்சாரத்தைக் குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்திவிட்டு, மீதமுள்ள அரவைக்கு ஜெனரேட்டர் பயன்படுத்தியதாக டீசல் பில் கொடுத்து, அதற்காக பில் க்ளைம் பண்றாங்க” என்று பல உண்மைகளை வெட்ட வெளிச்சப்படுத்தினார் சோலைக்கண்ணன்.

அக்கட்சியின் மதுரை மாவட்ட இளைஞர் அணி தலைவர் தென்றல் ரவி கூறுகையில், “முதல்வர் கலைஞர் ஏழை மக்களுக்காகக் கொண்டு வந்துள்ள மானிய விலை அரிசி திட்டத்தை கோழித் தீவனம் மற்றும் மாட்டுத் தீவனத்திற்குக் கருப்பு அரிசியுடன் கலந்து அரைப்பதற்காக நாமக்கல், சேலம் மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வதும் வேதனை அளிக்கிறது” என்கிறார்.

இது பற்றி உணவுத் துறை அமைச்சரான வேலுவிடம் பேசியபோது, “அரசு உரிமம் பெற்ற அரிசி ஆலைகளிலிருந்து வரும் ரேஷன் அரிசி திரும்பவும், அதே ஆலைகளுக்குப் போவதாக எனக்கு புகார்கள் வந்திருக்கின்றன. இதையடுத்து விஜிலென்ஸை முடுக்கிவிட்டிருக்கிறேன். மதுரையில் இப்புகார் குறித்த புலனாய்வு தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. இரண்டுநாள் முன்பு கூட சென்னையில், ஃபுட் செல் டீம் 400 அரிசி மூட்டைகளை கைப்பற்றியிருக்கிறது. மதுரையில் இருப்பவர்கள் எனக்கு விதிவிலக்கு அல்ல. அவர்கள் எனக்கு மாமன் மச்சானும் கிடையாது. யார் தவறு செய்தாலும், என் கட்சிக்காரனே தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பேன்” என்றார் உறுதியாக.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கலைஞர் வீட்டுக்குப் போன சிறுவன், காப்பகத்தில்!
மீட்டுக் கொடுத்த ஜெயலலிதா

Salem%201.jpg




தமிழக முதல்வர் கலைஞரின் வீட்டுக் கதவைத் தட்டி உதவி கேட்கப் போன பர்கூர் சிறுவன், சென்னையில் சிறுவர் காப்பகத்தில் அடைக்கப்பட்டான். அவனை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா!

நம்புவதற்குச் சற்றுக் கடினமாக இருந்தாலும், அதுதான் நிஜம்.

Salem.jpgகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, அ.தி.மு.க.வின் பாசத் தொகுதியான (பின்னே ஒரு காலத்தில் அம்மா ஜெயிச்ச தொகுதியாச்சே!) பர்கூரைச் சேர்ந்த சிறுவன் கார்த்திக். அப்பாவும், அம்மாவும் இறந்துவிட, தன் தந்தை வழி பாட்டனாருடன் பர்கூர் எம்.ஜி.ஆர் நகரில் தற்போது வசித்துவருகிறான். அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுவன்தான், முதல்வர் கலைஞரிடம் உதவி கேட்க சென்னைக்குப் புறப்பட்டவன். 

பர்கூர் வீட்டில் அவனை சந்திக்கச் சென்றபோது, வணக்கம் தெரிவித்து நம்மிடம் கைகுலுக்கினான்.

அவனது தாத்தா கிருஷ்ணன் நம்மிடம், “இவன் என் பையனுக்கு இரண்டாம் தாரத்தோட புள்ளைங்க. இவனுக்குத் தங்கச்சி ஒண்ணு இருக்கு. என் பையன் மாமியார் வீட்டுல (காவேரிப்பட்டணம்) போயி செட்டிலாயிட்டான். பத்து வருசத்துக்கு முன்னாடி வரக்கூடாத நோய் வந்து செத்துப் போயிட்டான். அவங்க அம்மாவும் ஆறு மாசத்துக்கு முன்னாடி இவங்களை தவிக்கவிட்டுட்டு, செத்துப் போயிட்டா. புள்ளைங்க இரண்டையும் நாங்கதான் கூட்டிக்கிட்டு வந்து வளர்க்குறோம். 

சின்ன வயசில இருந்து இருதயத்துல இவனுக்குக் கொஞ்சம் பிரச்னை இருக்கு. அதுக்கும் இப்ப மாத்திரை சாப்பிட்டுட்டு வர்றான். அதனால இவன மிரட்டாம வச்சிருந்தோம். அடிக்கடி வீட்டுல யாருகிட்டயும் சொல்லாம கிருஷ்ணகிரி, ஓசூர்ன்னு போயிடுவான். நாங்களும் தவிச்சிப் போய், இவனைத் தேடி புடிச்சி வீட்டுக்குக் கொண்டு வருவோம். போன வாரம்(செப்டம்பர் 12-ம் தேதி) மத்தியானத்துக்கு மேல இவன காணலை. வீட்டுல இருந்த 500 ரூபாயையும் காணலை. ஓசூர்ல எங்க மகள் வீடு இருக்கு. அங்க போயிட்டு வந்துடுவான்னு நாங்களும் தேடாம விட்டுட்டோம். நாலு நாள் கழிச்சி அ.தி.மு.க. கட்சியில இருக்கிற ஒருத்தர் வந்து சொல்லித்தான் இவன் மெட்ராஸ்ல இருக்குற விஷயம் எங்களுக்குத் தெரியும். 

Salem%203.jpgதகவல் சொன்ன அ.தி.மு.க. கட்சிக்காரரே, எங்களை சென்னைக்குக் கூட்டிக்கிட்டுப் போயி அ.தி.மு.க. கட்சி ஆபீஸ்ல விட்டாரு. அங்க இருக்கிறவங்கதான் புள்ளைய மீட்டுக் கொடுத்து துணி, நோட்டு வாங்கிக் கொடுக்கச் சொல்லி பணமும் கொடுத்தாங்க. நானும் என் பொஞ்சாதியும் கூலி வேலைக்குப் போனாத்தான் வீட்டுல சாப்பாடே. இதுல இவன் கவலை வேற...” என்று சோகமாய் சொல்லி முடித்தார்.

Salem%204.jpgகார்த்திக்கை அழைத்து அவனிடம், ‘ஏன் கலைஞர் வீட்டுக்குச் சென்றாய்?’ என்று கேட்டோம். “அப்பா, அம்மா ரெண்டு பேரும் செத்துப் போயிட்டாங்க. பாட்டியும், தாத்தாவுந்தான் வேலைக்குப் போயி சாப்பாடு போடறாங்க. பாட்டி உடம்பு சரியில்லாம இருமிக்கிட்டு வயசான காலத்துல களைவெட்டப் போறாங்க. எங்களுக்காகத்தானே அவங்க வேலைக்குப் போயி கஷ்டப்படறாங்க. பள்ளிக்கூடம் போனாலும் எல்லாரும் அம்மாவோட வர்றது, போறதைப் பார்த்து எனக்கு அழுவாச்சி வந்துடும். வீட்டுல சில நாள் சாப்பாடு இருக்காது. 

எனக்குத் திடீர்னு நெஞ்சு வலிக்கும். இதை எல்லாம் பார்த்துட்டுதான் கலைஞர் அய்யாக்கிட்ட உதவி கேட்கப் போனேன். அவர்கிட்ட என் நிலைமையைச் சொன்னா நல்லது செய்வாருன்னுதான் போனேன். போன சனிக்கிழமை(செப்டம்பர் 12-ம் தேதி) ராத்திரி 9 மணிக்கு கலைஞர் வீட்டுக்குப் போனேன். அங்க போலீஸ்காரங்க ரொம்பப் பேர் இருந்தாங்க. அங்க போய் ‘கலைஞரை பார்க்கணு’முன்னு கேட்டேன். 

‘இங்க எல்லாம் பார்க்க முடியாது. ஊருக்குப் போயி லெட்டர் போடு’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. நான் மறுபடியும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வந்து தூங்கிப் போயிட்டேன். அங்க வந்த போலீஸ்கார அக்காதான் என்னை ஒரு இடத்துல கொண்டு போய்விட்டாங்க. எங்க தாத்தா, பாட்டி வந்தவுடனே விட்டுட்டாங்க” என்றான்.

பர்கூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் ஜெயராமிடம் பேசினோம். “கட்சித் தலைமையிலிருந்து என்னை கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னாங்க. நானும் அவங்க பாட்டியைப் பார்த்து விஷயத்தைச் சொல்லி தலைமைக் கழகத்துக்கு அழைச்சிக்கிட்டுப் போனேன். ‘பையனை வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு, அவனுக்கு உதவிகள் தேவைன்னா தகவல் சொல்லுங்க’ன்னு சொல்லியிருக்காங்க” என்றார்.

Salem%202.jpgமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது பற்றிப் பேசினோம். “ஏதோ சிறுவன் உதவி கேட்டு முதல்வர் வீட்டுக்கு வந்துட்டான். அங்கிருக்கும் காவலர்கள் அவனிடம் விசாரித்து ஊருக்குத் தகவல் கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். அதை விட்டுட்டு அவனை விரட்டி அடிப்பது எந்த விதத்தில் சரி? கோயம்பேடு பஸ் நிலையத்தில் படுத்திருக்கும்போது, அங்கு இருந்த போலீஸார் அவனை சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டனர். இச்செய்தியை கொடநாட்டிலிருக்கும் அம்மாதான் படித்துவிட்டு, என்னிடம் தகவல் சொன்னார்.

அவனை அழைத்து வந்து தாத்தா பாட்டியிடம் ஒப்படைத்-திருக்கிறோம். கார்த்திக் இப்போது எட்டாவது படிக்கிறான். அவனை நன்றாகப் படிக்கச் சொல்லி, மேற்படிப்புக்கு அவனுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்ய அம்மா உத்தரவிட்டுள்ளார். அவனது உடல்நிலை பற்றி நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். அவர்களுக்கு அப்படி ஏதாவது உதவி தேவைப்பட்டால், அம்மாவின் கவனத்துக்கு உடனே கொண்டு சென்று சிகிச்சைக்கான ஏற்பாட்டை கண்டிப்பாகச் செய்கிறேன்” என்றார்.

கலைஞரிடம் உதவி கேட்கப்போய் சிறுவர் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவனை மீட்ட பெருமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைச் சேரும். கொடநாட்டில் இருந்தாலும் சென்னை பதிப்பில் வெளியாகும் பத்திரிகைகளை அன்றாடம் ஜெயலலிதா படித்து வருவதால்தான் இச்சிறுவன் மீட்கப்பட்டிருக்கிறான். சமீபத்திய இடைத்தேர்தலில் பர்கூர் தொகுதியை தி.மு.க.விடம் இழந்தபோதும், பர்கூரின் மேல் கவனம் செலுத்தி இச்சிறுவன் விஷயத்தில் உரிய நேரத்தில் உதவி செய்த ஜெயலலிதாவை பாராட்டவே செய்கிறார்கள், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பர்கூர் வாசிகள்!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிலைத்திருட்டு:
சிக்கிய நடிகர், நிருபர், ஜோசியர் கூட்டணி!

Chennai.jpg




சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரகம். கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் வழக்கமான பணியில் இருந்தது. ஐம்பொன்னாலான திப்புசுல்தான் வாள்... சிவபெருமானின் சூலாயுதம், கடவுள் சிலைகள் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது என்ற தகவல் கமிஷனருக்குக் கிடைத்தது.

உடனே மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஜெயக்குமார் குழுவினரை களத்தில் இறக்கிவிட்டார் கமிஷனர். சென்னையை அடுத்த பள்ளிக்கரணைக்குப் படையெடுத்தது போலீஸ்படை.

பள்ளிக்கரணையைச் சேர்ந்த உமாமகேஸ்வரி, கொடுங்கையூர் பூபேந்திரன், புதுக்கோட்டை அரங்குளவன் என்கின்ற அரி, திருச்செல்வம் ஆகியோரை அமுக்கியது போலீஸ்படை. அவர்களிடம் இருந்து 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள சிலைகளும் கைப்பற்றப்பட்டன.

Chennai%201.jpgசிலைக் கடத்தல் கும்பலில் சிக்கிய உமாமகேஸ்வரி, சினிமா மற்றும் டி.வி.சீரியல்களுக்குத் தேவையான துணை நடிகர்களை அனுப்பும் ஏஜென்ட். சில சினிமாக்களில் ஆட்கள் வரவில்லையென்றால் இவரே வேஷமும் கட்டியிருக்கிறார் என்ற தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Chennai%202.jpgவாட்டசாட்டமாக இருந்த மற்றொரு இளைஞரை போலீஸ் குழுவினர் கவனித்த விதத்தில் அந்த நபர், ‘என்னை அடிக்காதீங்க உண்மையைச் சொல்லிடுறேன்’ என்று அலறத் தொடங்கினான். “நான் கலைஞர் டி.வி.யில் ஒளிப்பரப்பான ‘ரேகா ஐ.பி.எஸ்.’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மேலும் ‘அழகிய நாட்கள்’ என்ற டி.வி. தொடரிலும் நடித்திருக்கிறேன். எனக்கு நடிப்பில் போதிய பணம் கிடைக்கவில்லை. அதனால் கூடுதல் வருமானம் தேவைப்பட்டது. 

சிலர் தங்கள் வீட்டு வரவேற்பறையில், பழம் பொருள்களை காட்சிப் பொருளாக வைக்க விரும்புகின்றனர். அவர்களிடம் இந்தத் திருட்டு சிலைகளை நல்ல விலைக்கு விற்கலாம் என்று என் நண்பர்கள் சிலர் ஐடியா சொன்னார்கள். இதன் மூலம் ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்று முடிவுசெய்து இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தேன்” என்று தன் சுயசரிதையைக் கொட்டினார் அரி என்ற அந்த டி.வி. நடிகர். 

“ரவிக்குமார் என்ற சப்-இன்ஸ்பெக்டரை தயார் செய்தோம். அவருக்கு பூணூல்... நெற்றியில் பட்டை... கழுத்தில் உத்ராட்ச கொட்டை என்று வேஷம் போட்டோம்.

அவரைப் பார்த்ததும் சிலை விற்பவர்களுக்குச் சந்தேகம் வரவில்லை. சிலைகள் பேரம் 50 லட்சத்தில் தொடங்கி 24 லட்சத்தை நெருங்கியிருந்தது. இந்த நிலையில் கையில் இருந்த கால்குலேட்டர் மாடல் செல்போனில் கணக்குப்போடுவதைப்போல எங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தார். உஷாரான நாங்கள் சுற்றி வளைத்து அவர்களைப் பிடித்தோம். இது கமிஷனுக்காக சென்னையில் இயங்கி வந்த கும்பல். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், நிருபர் என்ற போர்வையில் வலம் வந்த வேலூரைச் சேர்ந்த ஜெயவேலை கைது செய்தோம்” என்றார் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜெயக்குமார்.

ஜெயவேலிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான 24 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக எந்த நேரத்தில் எந்தக் கோயிலில் சிலை திருடினால் லாபம், போலீஸ் பிடிக்காது என்று ஜோசியம் பார்த்து, கோயிலையும் குறித்துக் கொடுத்து மூளையாகச் செயல்பட்ட காட்பாடி ஜோசியர் சுவாமிநாதனைத் தேடி வருகிறது போலீஸ்.

“கல்யாணத்துக்கு ஜோசியம் பார்ப்பாங்க. வியாபாரத்துக்கு ஜோசியம் பார்ப்பாங்க. சாமி சிலைகளை திருடறத்துக்குமா பார்ப்பாங்க?! என்று அதிர்ச்சியில் உறைந்தது காக்கி வட்டாரம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கடல் நீரைக் குடிநீராக்கும் முயற்சி: கரை சேருமா கனவுத் திட்டம்?
-பயமுறுத்தும் சந்தேகங்கள்


Water.jpg



முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதித்த, இன்னாள் முதல்வர் கலைஞரின் தற்போதைய ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம். சென்னை வாழ் மக்களின் குடிநீர் பற்றாக்குறையைப்போக்க, விஞ்ஞான ரீதியில் நிறைவேற்றத் தீட்டிய, சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, கடல்நீரைக் குடிநீராக்கும் தமிழக அரசின் கனவுத்திட்டம்! ஆனால், இக்கனவு நனவாகுமா? தேவைக்கேற்ப தண்ணீர் கிடைக்குமா? அல்லது பட்ஜெட் அதிகமாகிவிடும் என்று கருதி ‘ஊற்றி’க்கொள்ளுமா? என்றெல்லாம் கேள்விகள் எழத்தொடங்கிவிட்டன. 

உலக வங்கி உதவியுடன் மத்திய அரசில் நிதித்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது அவரால் அறிவிக்கப்பட்டு இன்று கலைஞரால் நிறைவேற்றப்படவிருக்கும் இத்திட்டம், சாதனை புரியுமா? என்பது சர்ச்சைக்குரிய சமாச்சாரம்! என்றும் அதிக பாதிப்பான அம்சங்கள் இத்திட்டத்தில் குளறுபடிகளை உண்டாக்கும் என்றும் பெரிய குண்டு ஒன்றைப் போட்டார் விஷயமறிந்த பொறியாளர் ஒருவர். 

அவர் நம்மிடம், “கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட தொழிற்சாலை வடசென்னையில் எர்ணாவூர் அருகே உள்ள காட்டுப்பள்ளியிலும், தென்சென்னையில் காட்டுக்குப்பத்திலும் நிறுவப்பட்டுள்ளது. கடல்களில் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி அங்கிருந்து எடுக்கப்படும் உப்பு நீரில் உள்ள 250 ப்பி.பி.எம். தேவையற்ற உப்பை அகற்றிவிட்டு, 10 ப்பி.பி.எம். அளவுள்ள உப்பு நீரை குடிநீராக்கிப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் இதற்காகும் செலவே பல கோடிகளைத் தாண்டிவிடும். 

Water%201.jpgஇத்திட்டத்தில் இரண்டு விதமான குறைபாடுகள் இருக்கின்றன. கலன்களிலிருந்து வெளியேற்றப்படும் நீர் பொதுமக்களின் வீடுகளைச் சேரும்போது, சிறிது நாட்களில் கலங்கலாகிவிடும். இரண்டாவதாக, குடிநீராக்குவதற்குப் பயன்படும் ‘மெம்பரின்’ என்கிற நூற்றுக்கணக்கிலான கருவிகள் அதன் பணிகளை நூறு சதவிகிதம் தொடர்ந்து செய்யுமா? என்பதற்கு ‘உத்தரவாதம்’ கிடையாது. 

(சமீபத்தில் கூட வடசென்னை காட்டுப்பள்ளியில் உள்ள கலன்களில் சில பழுதடைந்துவிட, அதனை சரிசெய்ய துணைமுதல்வர் ஸ்டாலின் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.காரணம் எப்படியாவது இத்திட்டத்தை நிறைவேற்றி முதல்வரிடமும், மக்களிடமும் பாராட்டுபெற வேண்டும் என்ற உந்துதல் அவரிடமிருந்தது.) 

கலன்கள் சிலசமயங்களில், சரியாகப் பணி செய்தாலும் இரண்டு மாதத்திற்கொரு முறை அக்கருவிகளை மாற்ற வேண்டும். அதன் இன்றைய மதிப்பு சுமார் மூன்று லட்ச ரூபாய். இதனால் ஒரு முறை சுத்திகரித்து தண்ணீரை பயன்படுத்திட ஆறு கோடி ரூபாய் செலவாகும். 

ஒரு தனி மனிதனுக்குத் தினமும் 80 லிட்டர் குடிநீர் அத்தியாவசியம். மக்கள் தொகை அதிகரிக்கும்போது, உற்பத்தியின் அளவையும் அதிகரிக்க வேண்டும். முன்பு ஒரு லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்ய 25 பைசா செலவானது. தற்போது அதற்கு 75 பைசா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. செலவை ஈடுகட்ட அரசால் முடியாது!” என்று விரிவாகவே கூறினார் அவர். 

மேலும் இதுகுறித்து காரைக்குடி ‘சிக்ரி’(சிணிழிஜிஸிகிலி ணிலிணிசிஜிஸிளி-சிபிணிவிமிசிகிலி ஸிணிஷிணிகிஸிசிபி மிழிஷிஜிமிஜிஹிஜிணி)- யில் பணியாற்றி ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஒருவரிடம் பேசினோம். அவர், இத்திட்டம் எலக்ட்ரோ-கெமிக்கல் ஃபார்முலாக்களைப் பயன்படுத்தி குடிநீர் தயாரிக்கும் திட்டம். சில தனியார் நிறுவனங்கள் தங்களது சொற்ப தேவைகளுக்கு வேண்டுமானால் தயாரித்து பயன்படுத்தலாம். சென்னையில் கல்பாக்கம் அணுமின்நிலையப் பகுதிகளில் சில தனியார் நிறுவனங்கள் கடல்நீரைக் குடிநீராக்கி விநியோகித்து வருகின்றன. அது அவர்களின் அளவான தேவைகளை பூர்த்தியாக்கிவிடுகிறது. 

ஆனால் தேவைகள் அதிகமாகும்போது அதனை எதிர்கொள்ளும் அளவு உற்பத்தி செய்ய முடியாது. அப்படியே அதிகமாகச் செலவழித்து விநியோகித்தாலும், குடிநீராக மாற்றப்பட்ட கடல் நீர், இரும்புக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுவதால் விரைவில் துருப்பிடித்து, சாணிக்கரைசல்போல் தண்ணீர் வெளியாகும். இதனை சமைக்கவோ, குடிக்கவோ, அல்லது துணி துவைக்கவோ இயலாது!” என்றார். 

பெயர் கூற விரும்பாத இன்னொரு விஞ்ஞானி, “இந்தியக் கடல்களுக்கும், வேறு நாட்டு கடல்களுக்கும் நீர் அடர்த்தி மாறுபடுகிறது. உதாரணமாகக் கருங்கடலில் உள்ள அடர்த்தி மிகுதியால், அதில் மனிதனைத் தூக்கிப்போட்டாலும் மிதப்பான். அப்படி மிதந்து கொண்டே பேப்பர் படிப்பதை இணைய தளங்களில் புகைப்படத்துடன் செய்தியாக வெளியிட்டுள்ளார்கள். (அந்தப் புகைப்படத்தைத் தனியே காண்க!) 

அவ்வாறு அடர்த்தி அதிகமாக இருப்பதாலும், அந்தந்த நாட்டு வானிலைகள் ஒத்துப்போவதாலும், கடல்நீர் குடிநீராகும் திட்டம் சில நாடுகளில் நூறு சதவிகிதம் வெற்றிகரமாக நிறைவேறிவிடுகிறது. ஆனால், நமது நாட்டில் நிலவும் தட்பவெட்ப நிலை இத்திட்டத்திற்குச் சாதகமாக இருக்காது! 

எனவே, இதனைக் கைவிட்டு நிலத்தில் துளையிட்டுக் கிடைக்கும் உவர் நீரை, குடிநீராக்கும் திட்டத்தை அரசு புதிதாகத் தொடங்க வேண்டும். ஒவ்வோர் ஊராட்சியிலும் ‘பிளாண்ட்’ போடப்பட்டு மக்களுக்கு அன்றாடம் பயன்படும் வகையில் இது சாத்தியமானது!” என்று தீர்வையும் சொன்னார். 

Water%202.jpgஇத்திட்டத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது பெயரைத்தவிர்த்த அவர், “சீதோஷ்ண சூழ்நிலை, காஸ்ட்லி பட்ஜெட், அடிக்கடி மாற்றப்பட வேண்டிய, பராமரிக்க முடியாத உபகரணங்கள் இதுபோன்ற பல காரணங்களால் இத்திட்டம் முழுமையாக வெற்றி பெறுவது சந்தேகம்தான்!” என்று தனது கருத்தைத் தெரிவித்தார். 

தமிழக அரசு இதற்கான விளக்கங்களை அளிக்குமா? அல்லது புதிய முயற்சியில் ஈடுபட்டு சென்னைவாழ் மக்களின் தாகப்பிரச்னையை நிரந்தரமாகத் தீர்த்து வைக்குமா? ஏதோ ஒரு வகையில் நல்லது நடந்தால் சரிதான்! 




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சென்னை மர்மக் கொலைகள்: ‘மாண்புமிகு’க்கள் தொடர்பு?

Murder%203.jpg




‘க்ரைம் நாவல் படித்தால்கூட இவ்வளவு திடுக்கிடும் தகவல்களும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் அதில் இடம்பெறுமா என்றால் இருக்காது. சென்னைக்கு அருகே கப்பல் கேப்டன் இளங்கோவன் வீட்டில் நடந்த மர்மக் கொலைகளில் ஏகப்பட்ட திடுக் தகவல்கள். அதை அப்படியே மண்ணுக்குள் புதைத்து சமாதி எழுப்பி, கம்பீர சல்யூட் அடித்துவிட்டது சென்னை போலீஸ்.

Murder.jpgசென்னை நீலாங்கரையை அடுத்த பனையூரில் ஒதுக்குப்புறமாக உள்ள பங்களா. அக்கம்பக்கம் எந்த வீடுகளும் கிடையாது. அமைதியான சூழலில் பனையூர் 11-வது அவென்யூவில் பிரமாண்ட பங்களாவில் மனைவி ரமணியுடன் தனியாக வசித்து வந்தார், சரக்குக் கப்பலில் கேப்டனாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இளங்கோவன்.

இவர்களுடைய மகன்கள் வித்யாசங்கர், நேமிநாதன், முகுந்தன். இதில் முகுந்தன் கப்பல் கேப்டன். மற்றவர்கள் இன்ஜினியர்கள். வித்யா சங்கர் பிரான்ஸ் நாட்டில் பணியாற்றி வருகிறார். மீனவர் சங்கத் தலைவரும் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவருமான அன்பழகனார் தனது மகளை இளங்கோவனின் மகன் நேமிநாதனுக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

ஓய்வுக்குப் பிறகு, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார் இளங்கோவன். தனது மகன்களின் வருமானத்தில் ஏகப்பட்ட நிலங்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினார். அதில் ஒன்றுதான் மரக்காணம் அருகேயுள்ள அனுமந்தபுரத்தில் இருக்கும் 150 ஏக்கர் நிலம். இந்த நிலம்தான் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் எமனாக வந்து அமைந்தது.

அந்த நிலத்தை விற்பதற்காக சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சண்முகராஜனுக்கு ‘பவர்’ (அதிகாரப் பத்திரம்) எழுதிக் கொடுத்திருந்தார். சண்முகராஜனுக்கு சைதாப்பேட்டையில் பால் வியாபாரி, மார்பிள்ஸ் ஏஜென்ட், ரியல் எஸ்டேட் தொழில் என பல முகங்கள். ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பல அரசியல் புள்ளிகளிடம் தொடர்பு ஏற்பட்டிருந்தது சண்முகராஜனுக்கு.

அனுமந்தபுரம் நிலத்தை வாங்க சில அரசியல் புள்ளிகளிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார் சண்முகராஜன். அந்த நிலத்தைத் திடீரென விற்க மறுத்த இளங்கோவன், தான் சண்முகராஜனுக்கு எழுதிக் கொடுத்த பவரையும் ரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு மூத்த மகன் வித்யாசங்கர் பிரான்சில் இருந்து மனைவி வசந்தி மகன் பிரவீன், மகள் பிரியங்கா மற்றும் அவர்களுடன் சில நண்பர்கள் குடும்பமும் சென்னை வந்தது. பிரான்ஸ் நண்பர்கள் குடும்பத்தை வழியனுப்ப, வித்யாசங்கர் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி, விமான நிலையத்துக்குச் சென்றார். அப்போது அவரது மனைவி வசந்தி அறையொன்றில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது குழந்தைகளும் அதே அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

Murder%201.jpgபிற்பகல் 3 மணி அளவில் அந்த வீட்டிற்கு சண்முகராஜன் தனது ஹூண்டாய் காரில் வந்தார். சண்முகராஜன் மட்டும், இளங்கோவன் வீட்டிற்குள் சென்றார். அவ்வளவு பெரிய பங்களாவுக்கு ஒரு காவலாளி கூட இல்லை என்பதுதான் வேதனையான ஒன்று. சண்முகராஜன் காருக்குப் பின்னால், ஃபோர்டு ஐகான் கார் வந்து நின்றது. அதிலிருந்து யாரும் இறங்கவேயில்லை.

உள்ளே சென்ற சண்முகராஜன், அந்த நிலம் விற்பது தொடர்பான பத்திரங்களைத் தருமாறு இளங்கோவனிடம் கேட்க... இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும் மேலாக நடந்த வாக்குவாதத்திற்குப் பிறகு, சண்முகராஜன் துப்பாக்கியை எடுத்து நீட்ட, ‘நான் பார்க்காத துப்பாக்கியா?’ என்று இளங்கோவன் அலட்சியப்படுத்தினார்.

அந்த நேரத்தில் பதற்றமடைந்த இளங்கோவனின் மனைவி ரமணி, ‘ஏங்க வம்பு. அவன் கேட்குறதைக் கொடுங்க’ என்று சொல்ல... ‘நீ உள்ளே போ’ என்று அவர் அதட்ட, சண்முகராஜன் ஊஷ்ணமாகிப்போனார். மனைவியைச் சுட்டால் வழிக்கு வந்துவிடுவார் என்று நினைத்து ரமணியைச் சுட்டார் சண்முகராஜன். துப்பாக்கியிலிருந்து அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் ரமணியின் வயிற்றில் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் ரமணி.

இதைக்கண்ட இளங்கோவன் ஆவேசமாகப் பாய்ந்தார். அடுத்த பலி இளங்கோவன். அவரது உடலில் மூன்று குண்டுகள் பாய்ந்தன. அவரும் ரத்த வெள்ளத்தில் அலறியபடி சாய்ந்தார். ஏதோ சத்தம் கேட்கிறதே என்று தூக்கக் கலக்கத்தில், குழந்தைகளோடு அறையிலிருந்து வந்து, நின்றார் வசந்தி. 

மாமனார், மாமியார் ரத்த வெள்ளத்தில். அதன் அருகே யாரோ ஒரு நபர் துப்பாக்கியுடன் நிற்பதைக் கண்டதும் வசந்திக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘எல்லா பீரோவையும் திற’ என்று மிரட்டிய சண்முகராஜனுக்கு ‘முடியாது’ என்ற வார்த்தையை உமிழ்ந்த வசந்திக்கு, சண்முகராஜன் பதிலுக்குத் துப்பாக்கிக் குண்டுகளை உமிழ்ந்தார். சரிந்தார் வசந்தி.

அதைப் பார்த்த குழந்தைகள் ஓவென அழுதன. இரண்டு குழந்தைகளையும் கத்தி முனையில் மிரட்டினார். பிரவீனுக்குக் கத்தி குத்தும் கன்னத்தில் அடியும் விழுந்தது. குழந்தைகள் அழுகையை நிறுத்திவிட்டன. 

பிறகு ஒவ்வோர் அறையாக நுழைந்து, தான் தேடி வந்த ஆவணங்களை அள்ளிக்கொண்ட சண்முகராஜன், இரண்டு சூட்கேஸ்களில் ஆவணங்களையும் 2.5 லட்ச ரூபாய் பணம், லேப் டாப், கேமராவையும் எடுத்துச் சென்றார்.

வெளியே சென்று தனது காருக்குப் பின்னால் நிறுத்தியிருந்த காரில் ஆவணங்கள் அடங்கிய சூட்கேஸ்களை ஒப்படைத்தார். மீண்டும் பங்களா வீட்டிற்குள் நுழைந்தார். 




 





*


ஏன் இந்த அவசரம்?
Murder%202.jpgசென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகஸ்ட் 25&ம் தேதி பிற்பகல் அவசர அவசரமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ''பணத்திற்காக, நகைக்காக நடந்த கொள்ளை. அவனிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அவன் இறந்ததற்கு பொதுமக்கள் அடித்தது காரணமா? போலீஸ் நடவடிக்கை காரணமா என்று இப்போதே சொல்ல முடியாது. எனினும் இறந்தது போலீஸ் நிலையத்தில் என்பதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளோம். விசாரணை முடிவில் தான் பல தகவல்கள் தெரியவரும். நாங்கள் குற்றப்பத்திரிகை போன்றவற்றை தயாரிக்க வேண்டும். இப்போதே எல்லாத் தகவல்களையும் கூற முடியாது'' என்றார். போலி துப்பாக்கி, போலி நம்பர் பிளேட் உள்ள கார் சம்பந்தமான கேள்விகளுக்குச் சரியான பதில்களை நிச்சயம் சண்முகராஜன் போலீஸாரிடம் சொல்லியிருப்பார். அதையெல்லாம் ஏன் மறைக்க வேண்டும் என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை திசைதிருப்பத்தான் என்ற பகீர் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

மலைக்க வைக்கும்பின்னணி!
சென்னை சைதாப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகராஜன். இவருக்கு குருமூர்த்தி, வெங்கடேஷ் என்று இரண்டு சகோதரர்கள். சண்முகராஜனின் மனைவி அமுதவள்ளிக்கு 20 ஆயிரம் மாத சம்பளத்தில் பாலிடெக்னிக்கில் பணி. ராஜன் பிடிபட்டதும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இன்னொரு துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கும் லைசென்ஸ் கிடையாது. இவருக்கு எப்படி இரண்டு துப்பாக்கிகள் கிடைத்தன? என்பதை போலீஸ் விசாரித்தால் பல விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வரும். அதில் ஒரு துப்பாக்கி மாண்புமிகு ஒருவரின் தம்பியுடையது என்றொரு தகவல் உலா வருகிறது. இளங்கோவன் வைத்திருந்த அனுமந்தபுரம் நிலத்தைத் தோண்டினால், கிரானைட் கற்கள் கிடைக்கும் என்று தெரிந்திருந்ததால் நிலத்தை விற்க திட்டமிட்டிருந்த இளங்கோவன், திடீரென நிலத்தை விற்க மறுத்தார். ஆனால், சண்முகராஜன் கொண்டு வந்த அரசியல் புள்ளிகள், நிலத்தைத் தங்களுக்கே விற்கவேண்டும் என்று பிரஷர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன் விளைவே, இந்தக் கொலைகளும், ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டதும் என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன. இந்த நிலத்தை வாங்க ஆர்வம் காட்டியவர்களில் ஒருவர் மாண்புமிகு ஒருவரின் மகன் என்கிறார்கள். போலீஸ் கஸ்டடியில் இறந்த சண்முகராஜனை கடைசியாக யாரோ ஒரு அரசியல்புள்ளி வந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது. அவர் யார்? அவர் வந்து பார்த்த பிறகுதான் ராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதா? உண்மையிலேயே, பொதுமக்கள் அடித்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதை எப்படி நம்புவது. காரணம், பொதுமக்கள் பிடித்துக் கொடுத்து கிட்டத்தட்ட எட்டு மணிநேரத்துக்கு பிறகுதான் அவர் இறந்திருக்கிறார். அவரது சாவில் மர்மம் இருப்பதை இதுவும் உறுதிப்படுத்துகிறது. 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கோடிகள் புரளும் இரிடியம் பிஸினஸ்?
கொள்ளை போகும் கோயில் கலசங்கள்!
-செட்டிநாட்டில் சுற்றி வளைக்கப்பட்ட கும்பல்

Kalasam%20-%208.jpg



மண்ணுளிப் பாம்புகளில் ஆண்மை விருத்திக்குப் பயன்படும், ‘வயாக்ரா எஃபெக்ட்’ இருப்பதாகக் கூறிக்கொண்டு, மண்ணுளிப் பாம்பு வேட்டையாடல் தடபுடலாக நடந்துகொண்டிருப்பதைக் கேட்கவும், பார்க்கவும் செய்கிறோம்.

இதே ஸ்டைலில், ‘பண்டைய கால கோயில் கலசங்களில் ‘இரிடியம்’ என்ற உலோகம் இருக்கிறது. இப்படிப்பட்ட கலசம் கிடைத்து, அதைக் கொண்டு வந்து கொடுத்தால் பல கோடி ரூபாய் வரை தருகிறோம்’ என ‘டூப்’ விட்டு, கோயில் கலசங்களைத் திருடிய கும்பல் செட்டிநாடு பகுதியில் பிடிபட்டிருப்பது பலத்த பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது. இந்தக் கும்பலை தமிழ் சினிமாத் தயாரிப்பாளர் ஒருவரே வழி நடத்தியிருப்பதுதான் கூடுதலான அதிர்ச்சித் தகவலாகும். காரைக்குடியில் கடந்த ஜூலை 23--ம் தேதி அன்று சினிமாத் தயாரிப்பாளர் ராஜகோபாலனும் கலசம் திருடும் கூட்டாளிகள் ஆறு பேரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் வரும் தகவல்கள் ‘பகீர்’ ரகமாகும். இந்தக் கும்பல் பிடிபட்ட விவரத்தை நம்மிடம் விவரித்தார் குற்றப்பிரிவில் பணிபுரியும் ஒரு காக்கிச் சட்டைக்காரர்.

“கடந்த வாரத்தில் ஒருநாள் காரைக்குடியில் போலீஸார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆட்டோ மின்னல் வேகத்தில் தப்பிச் செல்ல முயல, அதை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். ஆட்டோவில் இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, ஆட்டோவில் இருந்த பொருள்களோடு டிரைவர் எஸ்கேப் ஆகிவிட்டார். ஆட்டோ டிரைவர் தப்பி ஓடியதால் போலீஸாருக்குச் சந்தேகம் வலுத்தது. பிடிபட்ட இருவரையும் போலீஸார் தங்கள் பாணியில் விசாரிக்க ஆரம்பித்தபோதுதான், கடகடவென ‘கலச தகவல்களை’ கொட்ட ஆரம்பித்தார்கள்.

Kalasam%20-%207.jpgதங்களது பெயர் விக்கி என்ற விக்னேஷ், சங்கிலிமுருகன் எனவும், கோயில் கலசங்களைத் திருடுவதற்காக, திரைப்படத் தயாரிப்பாளரான ராஜகோபால் தங்களை சென்னையில் இருந்து கூட்டி வந்ததாகவும், மற்ற நண்பர்களான நூர் முகம்மது, அந்தோணி நாச்சியப்பன், முரளி ஆகியோர் தயாரிப்பாளருடன் லாட்ஜில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர். உடனே தயாரிப்பாளர் ராஜகோபாலனையும், ஏனைய கூட்டாளிகளையும் வளைத்துவிட்டோம். தயாரிப்பாளர் ராஜகோபால் சொன்ன விஷயங்கள்தான் எங்களை திகிலடைய வைத்தது” எனக் கூறியவர், கலச வேட்டைக்கான தயாரிப்பாளரின் வாக்குமூலத்தை அவரது வார்த்தைகளிலேயே நம்மிடம் அப்படியே ஒப்புவித்தார்.

“எனக்கு சொந்த ஊர் திருப்பத்தூர் அருகேயுள்ள காரையூர். ‘எம் புருஷன் குழந்தை மாதிரி’ என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டேன். அந்தப் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிகட்டவும், சொகுசு, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டே இந்தக் ‘கலசத் திருட்டு’ வேட்டையில் இறங்கினேன். 

மலேசியாவிலுள்ள எனது நண்பர்கள் பண்டைய கோயில் கலசங்கள், அரியவகை வெண்கல செம்புகளில் ‘இரிடியம்’ என்ற உலோகம் உள்ளதாகவும், இது யுரேனியத்தைவிட டிமான்ட் உள்ள காஸ்ட்லியான உலோகமாகும் எனக் கூறியவர்கள், ‘அதைக் கொண்டு வந்தால் நீ கோடீஸ்வரன்தான்’ என ஆசைவார்த்தை காட்டினார்கள். இரிடியம் உள்ள கலசம், செம்பு(சொம்பு) எதுவென எப்படிக் கண்டுபிடிக்கவேண்டும் என்பதையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.

அதாவது நெல்லை உடைத்து முழு அரிசியைக் கலசத்தின் முன்போ, செம்பின் முன்போ, செம்பின் பின்போ வைத்தால் அது காந்தத்தை இழுப்பது மாதிரி இழுக்கவேண்டும். 1 சென்டி மீட்டர் தூரம் இழுத்தால் அந்தக் கலசத்துக்கு 100 கோடி மதிப்பு எனவும், 5 செ.மீ தூரம் இழுத்தால் 500 கோடி எனவும், 10 செ.மீ இழுத்தால் 1000 கோடி எனவும் கூறினார்கள். இதற்கு ‘ரைஸ்புல்லிங்’ எனவும் பெயர் சொன்னார்கள். 

இதை நம்பித்தான் நான் கோயில் கலசங்களைத் திருடி வைத்துக்கொண்டு, ‘ரைஸ்புல்லிங்’ கலசம் இருப்பதாகக் கூறி, சம்பாதிக்க ஆரம்பித்தேன். என்னிடம் உள்ள ‘ரைஸ் புல்லிங்’ கலசத்தை டெமோ செய்து காண்பிக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் 10 லட்சமாவது அட்வான்ஸ் கொண்டு வந்து கொடுத்தால் மட்டுமே செய்து காண்பிக்க முடியும் என பிகு பண்ணினேன். 

ஏராளமான ஏமாளிகள் கைக்குக் கிடைத்ததை எல்லாம் கொண்டுவந்து ‘ரைஸ் புல்லிங்’ கலசத்தை டெமோ செய்து காட்டுமாறு வற்புறுத்தினார்கள். அப்படி வந்தவர்கள் 25 ஆயிரம் முதல் 5 லட்ச ரூபாய் வரை கொண்டு வந்தார்கள்.

கலசத்தைக் காண்பிக்காமலேயே நானே ஏற்பாடு செய்த போலி போலீஸாரை வரவழைத்து அவர்கள் கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்து அனுப்பி விடுவோம். ஏமாந்த விஷயத்தை வெளியே போய் சொன்னால், அப்புறமா கதையை முடிச்சிடுவோம் என எங்க செட்டப் போலீஸே அவர்களை எச்சரித்து அனுப்பிவிடும். இப்படி கோடிக்கு ஆசைப்பட்டு என்னிடம் இறங்கி வந்து, லட்சங்களை பறிகொடுத்தவர்கள் ஏராளமானவர்கள் உண்டு.

இப்படிக் கிடைத்த பணத்தை வைத்து மீண்டும் சினிமாத் தயாரிப்பில் ஈடுபடலாம் என எண்ணியிருந்தேன். அத்தோடு அந்த ‘இரிடியம் பவர் கலசம்’ ஒரு வேளை நம் கைக்கு வந்தாலும் நல்லதுதானே என ஆசைப்பட்டுத்தான் பூவந்தி, சிங்கம்புணரி அருகேயுள்ள அரளிப்பாறை, பலவான்குடி ஆகிய ஊர்களிலுள்ள கோயில் கலசங்களை ஆட்களை வைத்து திருடினேன். அத்தோடு செட்டிய வீடுகளில் பண்டைய வெண்கல செம்புகளையும் நிறையத் திருடினோம்’ என்று ராஜகோபால் அளித்த வாக்குமூலத்தைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியில் உறைந்து போனார்களாம்.

Kalasam%20-%206.jpgஇந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காரைக்குடி தெற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் பேசினோம். 

“சினிமாத் தயாரிப்பாளரான ராஜகோபால், சினிமாத் தயாரிப்பில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டத்தான் இந்த நூதன மோசடியில் இறங்கியுள்ளார். சமீப காலமாக காரைக்குடியை நோக்கி ஏராளமான சினிமாத் தயாரிப்பு புள்ளிகள் ‘லொகேஷன்’ பார்க்கிற போர்வையில் படையெடுத்து வருகிறார்கள். எனவே இதில் மிகப்பெரிய ‘நெட்வொர்க்’ இருப்பதாகச் சந்தேகப்பட்டு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளோம்” என்றார்.

காரைக்குடியில் தற்போது முகாமிட்டிருக்கும் சினிமாத் தொடர்புடைய ஒரு புள்ளியை சந்தித்த போது, “இந்த கோயில் கலசம், செம்பு வேட்டையில் அரசியல் மற்றும் சினிமா உலகப் புள்ளிகள் பலருக்கும் லிங்க் இருக்கத்தான் செய்கிறது. ராஜகோபாலை இன்னமும் இறுக்கிப் பிடித்து விசாரித்தால், அரசியல் மற்றும் சினிமாப் புள்ளிகள் பலரது முகமூடி கிழியலாம்” என்றார்.

சிவகங்கை எஸ்.பி.யான ராஜசேகரனின் கவனத்துக்கு இதைக் கொண்டு போனபோது, “ராஜகோபாலை கஸ்டடி எடுத்துக்கூட விசாரித்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் எத்தனை பெரிய வி.ஐ.பி.யாக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிச்சயமாக நிறுத்துவோம். மக்கள் இனிமேலாவது திடீர் பணக்காரர் ஆகும் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும்” என்றார்.

மண்ணுளிப் பாம்பு, இரிடியம் பவர் கலசம்... இன்னும் எத்தனை பேர் என்னவெல்லாம் சொல்லி கிளம்பப் போறாங்களோ! மகா ஜனங்களே உஷாரா இருங்க!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அரசு அதிகாரிகளுக்கு ‘ராணி’ வைத்த செக்!
-விக்கித்து நிற்கும் வருவாய்த்துறை


Rani.jpg



ராணி..! பெயர்தான் ராணி. ஆனால், செய்த வேலைகள் எல்லாம் சகுனியை மிஞ்சிய சதிகள். அதுவும் அரசாங்கப் பணம் ஒரு கோடியே 64 லட்ச ரூபாயை சுருட்டிக் கொண்ட ராணி, போலீஸ் கண்களில் அகப்படாமல் ஜேம்ஸ்பாண்ட் வித்தையைக் காண்பித்து வருவதால், திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை விக்கித்துப் போயிருக்கிறது.

ஜேம்ஸ்பாண்ட் வித்தையைக் காட்டும் ராணிக்கு வயது 54. திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறைக்கு உட்பட்ட பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றியவர்தான் இந்த ராணி. உதவியாளர் என்ற பதவியில் இருந்துகொண்டு ராணி செய்த தில்லாலங்கடி ஊழல்கள் தலைசுற்ற வைக்கும் ரகத்தைச் சேர்ந்தவை.

சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வரை சாலை விரிவாக்கப் பணிக்கு, நெடுஞ்சாலைத் துறை தனியார் நிலங்களை ஆர்ஜிதம் செய்தது. நில ஆர்ஜிதம் செய்யும்போது, நிலங்களை அரசுக்குக் கொடுத்தவர்களுக்கு இழப்பீடாக ஒரு தொகை தரப்படும். அரசு தரும் தொகையை எதிர்த்து, சிலர் வழக்கு போடுவார்கள். ‘அரசு தரும் தொகையை உயர்த்தித் தர வேண்டும்’ என்ற வழக்குகள்தான் அதிகம்.

அதைப்போல மதுரவாயல், நெற்குன்றம் பகுதிகளில் எடுக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள், கூடுதல் தொகை கேட்டு வழக்கு போட்டிருந்தார்கள். இன்னும் சிலர், நிலம் பாகம் பிரிப்பது தொடர்பாக வழக்கு போட்டிருந்தனர். இப்படி 13 பேருக்குப் போய்ச் சேர வேண்டிய தொகைக்கான டி.டி., பூந்த-மல்லி தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது.

அதற்கான ஆவணங்களையும் டி.டி.க்களையும் திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்(டி.ஆர்.ஓ) கார்த்திகேயன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பி வைத்திருந்தார். அதை வாங்க வேண்டிய பூந்தமல்லி தாசில்தார் ஜி.வி.குமார், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பிசியாக இருந்தார். எனவே அந்த டி.டி.க்களை உதவியாளர் ராணி வாங்கி வைத்துக் கொண்டார்.

2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் பணிக்குத் திரும்பிய தாசில்தார் குமார், நில ஆர்ஜித ஃபைல்களை பார்த்தார். ‘ஏம்மா, ராணி! அந்த நிலம் கையகப்படுத்தியவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய டி.டி.யெல்லாம் கொடுத்தாச்சா?’ என்று கேட்டிருக்கிறார். ‘சிலர் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறார்கள். அதனால், அந்த டி.டி. என்னிடம்தான் இருக்கிறது’ என்று சொன்னார் ராணி. ‘அதை ஏன் நீ வைச்சிக்கிட்டு இருக்கே? அதை டி.ஆர்.ஓ. ஆபீஸுக்கு அனுப்பிடு’ என்றார் குமார். மார்ச் மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியானது. டி.ஆர்.ஓ.வும் தாசில்தாரும் தேர்தல் வேலைகளில் மூழ்கினர்.

தேர்தல் முடிந்து ஜூன் மாதமும் போனது. ஜூலையும் வந்தது. மதுரவாயல், நெற்குன்றம் நில விவகாரம் தொடர்பாக டி.ஆர்.ஓ. வுக்கு நோட்டீஸ் வந்தது. அப்போதுதான் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்திற்கு ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் அனுப்பியது ஞாபகம் வந்தது. தாசில்தார் குமாரிடம் கார்த்திகேயன் விசாரித்தார். அவர் ராணியிடம் விசாரித்தார்.

‘எல்லாத்தையும் அப்பவே அனுப்பிட்டேனே?’ என்றார் ராணி. மறுநாளே ராணி வேலைக்கு வரவில்லை. டி.டி.யும் போக வேண்டியவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. பீதியடைந்தார் தாசில்தார். விசாரணை ஆரம்பமானது.

மதுரவாயல், நெற்குன்றம் பகுதியில் டி.டி.க்களை வாங்காமல் இருந்த நில உரிமையாளர்கள், திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் ஒரு கோடியே 64 லட்ச ரூபாயை வாங்கிச் சென்றதாகத் தகவல் கிடைத்தது. இந்தியன் வங்கிக் கிளையில் இருந்து, அத்தொகை வெவ்வேறு வங்கிக் கிளைகளுக்குப் பணம் பரிமாற்றமாகியிருந்தது. பணம் பெற்றவர்களின் முகவரிகளை, வருவாய்த்துறையினர் சென்று பார்த்தபோதுதான் தூக்கி வாரிப்போட்டது.

அந்த 13 முகவரிகளும் டுபாக்கூர். இது தொடர்பாக உண்மையான நில உரிமையாளர்களைத் தேடிப்பிடித்து அணுகினர் அதிகாரிகள்.

‘என்னா சார். விளையாடுறீங்களா. நாங்க ஏன் பணத்தை வாங்கறோம்’ என்று எகிறினர். அப்போது தான் ராணியின் ஆட்டம் அம்பலமானது.

‘சார், ராணி நமக்கு ‘செக்’ வைச்சிட்டா’ என்று தாசில்தார் மெல்ல மெல்ல டி.ஆர்.ஓ. கார்த்திகேயனிடம் சொல்ல, அவருக்குக் கடப்பாரையை விழுங்கியதுபோல் தவித்தார். விஷயம் கலெக்டருக்குச் சென்றது. ராணியின் வரலாற்றை(!) புரட்டிப் பார்த்தனர்.

1997-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட முதியோர் உதவித் தொகை பத்து லட்ச ரூபாயை அபேஸ் செய்த வழக்கு விவகாரம் நிலுவையில் இருக்கிறது. அந்தத் தொகையை ராணி கையாடல் செய்துவிட்டதாக, துறை ரீதியான நடவடிக்கை எடுத்து ராணி பதவியிறக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதாவது உதவியாளரிலிருந்து இளநிலை உதவியாளராக மாற்றப்பட்டார். அந்த உத்தரவுக்குத் தடை வாங்கிய ராணி, 12 ஆண்டுகளாக உதவியாளராகவே பணியைத் தொடர்ந்திருக்கிறார் என்பது தெரிந்தது.

அந்த வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு வராத நிலையில், அடுத்தகட்ட மோசடியில் இறங்கி ஒரு கோடியே 64 லட்ச ரூபாயைச் சுருட்டியிருக்கிறார் ராணி.

உண்மையான நில உரிமையாளர்களுக்கு டி.டி. தருவதுபோல, ஆவணங்களை மாற்றி எழுதினார். பிறகு, பழைய டி.டி.க்களை திருவள்ளூர் இந்தியன் வங்கிக் கிளைக்கு அனுப்பி, புதிய டி.டி.க்களை தருமாறு கேட்டுக்கொண்டார். எல்லாக் கடிதங்களிலும் டி.ஆர்.ஓ.வுக்குப் பதிலாக ராணியே கையெழுத்துப் போட்டிருந்தார். அந்த வங்கி அதிகாரிகளும் ராணி கேட்டதுபோல, 13 பேருக்கும் அதுவும் புதிய பெயர்களில் டி.டி.க்கள் வழங்கியது அதிர்ச்சியான ஒன்று. இந்த எல்லா வேலைகளையும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் முடித்துக் கொண்டார் ராணி.

மோசடி நடந்து இரண்டு மாதங்கள் கழித்துத்தான், அதை மேல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட ராணியை, மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. மேலும் தாசில்தார் குமார், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் கடந்த ஜூலை 16-ம் தேதி புகார் கொடுத்தார். இதை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு தலைசுற்றிவிட்டது. அந்த ராணியின் முகவரிகூட வருவாய்த்துறையினருக்குத் தெரியவில்லை.

ராணியின் சொந்த ஊர் உசிலம்பட்டி. அவருக்கு மகனும் மகளும் உள்ளனர். ராணியின் ஆடம்பர வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க முடியாமல் கணவர் எப்போதோ எஸ்கேப் ஆகிவிட்டார். அண்ணாநகர் மேற்கு 13-வது மெயின் ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகத் தகவல். சென்று விசாரித்தால், 18 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து ராணி வசித்து வந்ததாக, வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். அந்த வீட்டில் ஒருவர் பியூட்டி பார்லர் நடத்திக் கொண்டிருந்தார். இதைக் கேட்டு போலீஸாருக்கு மயக்கம் வராத குறை.

வருவாய்த்துறை உதவியாளருக்கு 15 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம். எப்படி 18 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்தார் என்று போலீஸார் யோசித்துக் கொண்டிருந்த போதே, மற்றொரு தகவல் போலீஸாரை சுனாமியாகத் தாக்கியது. ராணியிடம் இரண்டு கார் இருந்ததுதான் அந்தத் தகவல்.

இந்த மோசடி செய்து முடித்ததுமே, வாடகை வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் ராணி. 

நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகை பெறவேண்டியவர்களில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. செல்லகுமாரும் ஒருவர். ராணியின் மோசடி குறித்து செல்லகுமாரிடம் கேட்டபோது, “இந்த மோசடி குறித்த தகவல் எனக்குக் கிடைத்தது. அந்த நிலத்தை நான் 2006-ல் வாங்கினேன். அந்த நிலத்தில் குறிப்பிட்ட பகுதியை, எனக்கு நிலத்தை விற்றவரே வைத்திருக்கிறார். அவருக்குத் தான் அந்தத் தொகை போய்ச் சேர வேண்டும்” என்றார்.

டெயில் பீஸ்: இத்தனை மோசடி செய்தும் ராணி அசரவில்லை. தலைமறைவாக இருந்து கொண்டே, தனது சஸ்பெண்ட் உத்தரவுக்குத் தடை வாங்கிவிட்டார்! மேலும் தாசில்தாருக்குத் தனது வக்கீல் மூலம் அனுப்பிய நோட்டீஸில் ‘எனது சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் வாங்கினால், அந்தப் பணத்தைத் தருவேன்’ என்று ஜோக் அடித்திருப்பதுதான் உச்சகட்ட காமெடி.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நில மோசடியில் ஜி.கே.மணி சம்பந்மி சிக்கியது எப்படி?

Land.jpg




திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் வலசை சந்திரசேகரன். இவர் வலசை வெட்டிக்காடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும் இருந்தவர். ஸ்கோடா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆடம்பர கார்களுக்கு நடுவில்தான் பவனி வருவார். ஸ்ரீபெரும்புதூரில் ஹைடெக் ஆபீஸ். ஆனாலும், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும், அ.தி.மு.க. பிரமுகர்களுக்கும் வலசை சந்திரசேகரன் பெரிய அளவில் பரிச்சயம் கிடையாது. ‘ரியல் எஸ்டேட்’ புகழ் சந்திரசேகரன் என்றால் காக்கிச் சட்டைகளும், பத்திரப் பதிவு அலுவலகங்களும் எழுந்து நின்று ‘ராயல் சல்யூட்’ கொடுக்கும். அந்த அளவுக்கு இரண்டு துறைகளையும் கரன்சிகளால் குளிப்பாட்டியிருப்பவர் சந்திரசேகரன்.

அப்படி ராஜபோகமாக வலம் வந்தவரை திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் கைதுசெய்தது. காரணம், நில மோசடி. இந்த மோசடி இன்றோ நேற்றோ நடக்கவில்லை. 2000-ம் ஆண்டிலிருந்து இவரது மோசடி இறக்கை கட்டி பறக்கிறது. அப்போதெல்லாம் போலீஸார் கண்ணை மூடிக்கொண்டிருந்தனர். திடீரென போலீஸாருக்கு ஞானோதயம் பிறந்து, டில்லி பாபு என்பவர் எப்போதோ கொடுத்த புகாரின் பேரில் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர், இலுப்பூர், வலசை வெட்டிக்காடு கிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் காணப்படும் அரசு நிலம், விதவைகளின் நிலம், கேட்பாரற்று கிடக்கும் நிலம், சகோதர சண்டையில் பராமரிப்பு இல்லாத நிலம், வழக்கு நிலுவையில் உள்ள நிலம், 25 ஏக்கருக்கு மேல் கரம்பாக உள்ள நிலம் ஆகியவை மீது இவரது பார்வை பட்டால் அடுத்த நிமிடமே அவற்றிற்கு சனியன் பிடித்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் அவரால் பாதிக்கப்பட்டவர்கள்.

விதவைகள் யார்? அவர்களின் பெயரில் நிலம் உள்ளதா? என்பன போன்ற தகவல்களை அடிப்பொடிகள் சேகரித்து சந்திரசேகரனிடம் அளிப்பார்களாம். நிலத்தின் சொந்தக்காரர் நிலம் விற்பனைக்கோ, பயிர் செய்யவோ வரவேண்டிய சூழ்நிலை இல்லை என்பதைத் தெரிந்து அவரின் நிலத்தை மோசடி செய்ய ஸ்கெட்ச் போடுவார். உடனே அந்த நிலத்தின் சர்வே எண் மூலம் வில்லங்கம் வாங்கப்படும். பின்னர் அதே பெயரில் ஒரு நபர், பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கையெழுத்து போடுவார். அவருக்கு சில ஆயிரம் கரன்சி கைமாறும். 

சந்திரசேகரனிடம் நிலம் விற்றால் பெரிய அளவில் பணம் கிடைக்கும் என்று அவரது அலுவலகத்திற்குச் செல்பவர்களும் உண்டு. அவர்களின் நிலைமைதான் படுமோசம். அவர்களை வாசலிலேயே வரவேற்கும் ரகசிய கேமிரா மூலம் படம் எடுத்து அதையே ஆவணங்களில் பயன்படுத்திவிடுகிறார்களாம். ‘கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள். மறுத்தால் பணமும் போகும், நிலமும் போகும்’ என்று மிரட்டுவார்களாம். தன்னை ஏமாற்றியதாக மணவாள நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும் நபர்களின் மனு, அடுத்த நொடியே குப்பைக்குப் போகும். காரணம், ‘கரன்சி வள்ளலாக’ மணவாளநகர் போலீஸுக்குக் காட்சியளித்தார் சந்திரசேகரன். 

Land%201.jpgசென்னைக்கு அருகே இடம் தேடிய ஆந்திர நிறுவனமும் சந்திரசேகரனிடம் ஏமாந்து போயிருக்கிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த ‘பொல்லிநேனி டெவலப்பர்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு, திருவள்ளூர் பகுதியில் 50 ஏக்கர் வாங்கித் தருவதாக, சுமார் 200 கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையை சந்திரசேகரன் பெற்றிருப்பதாகத் தகவல். அதன் அடிப்படையில் அவர் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் பகுதியில் நிலங்களை வாங்கினார். ஒப்பந்தப்படி அவற்றை அவர் உரிய நிறுவனத்திடம் ஒப்படைக்கவில்லை. இதையடுத்து அவர் வாங்கிய சொத்துக்களை விற்க இடைக்கால தடையுத்தரவு பெற்றுள்ளது அந்த நிறுவனம். 

சந்திரசேகரனுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு தொடர்ந்திருப்பவரான மணிபல்லவனை சந்தித்தோம்.

“ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோதே அரசு நிலங்களை வளைத்துப் போட்டுவிட்டார் சந்திரசேகரன். என் நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்றுவிட்டார். கிராம நிர்வாகி ஒருவரிடம் ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்து சிட்டா உள்ளிட்ட தகவல்களை வாங்கி வைத்துள்ளார். அதில் உள்ள விவரங்களை வைத்துதான் இதுபோல போலிப் பத்திரங்களை தயாரித்து மோசடி செய்தார். 

பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் அல்லவா?- 1975-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி இலுப்பூரை சேர்ந்த ராமதாஸ் நாயக்கர் என்பவர் இறந்துவிட்டார். ஆனால், அவர் 2006-ம் ஆண்டு உயிரோடு(!) எழுந்துவந்து தனக்குச் சொந்தமான இடத்திற்காக சந்திரசேகரனுக்கு பவர் எழுதிக் கொடுத்துள்ளார். இதைக் கண்ட அவரது மகன் டில்லிபாபு அதிர்ச்சி அடைந்து, போலீஸில் புகார் அளித்துள்ளார். டில்லி பாபு கொடுத்த புகாரின் பேரில் தற்போது சந்திரசேகரன் கைது செய்யப்பட்டிருப்பதுதான் ஆச்சர்யம். 

ஏன் என்றால் அவர் மீது ஏற்கெனவே பல புகார்கள் கொடுத்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் பாதித்த எல்லோரும் வன்னிய சமூகத்தினர். இதனால் பா.ம.க. நிறுவனர் ராமதாஸைச் சந்தித்து புகார் அளித்தோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள். ஆர்ப்பாட்டமும் நடந்தது. என்ன பிரயோஜனம்? பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியே சந்திரசேகரனின் சம்பந்தியானதுதான் மிச்சம். அடுத்ததாக நாங்கள் போலீஸ், கோர்ட் என்று படிகளை ஏறி அலைந்து கொண்டிருப்பது தொடர்கதையாக இருக்கிறது” என்றார் அவர்.

“அ.தி.மு.க.வில் குறுகிய காலத்தில் கடம்பத்தூர் ஒன்றியச் செயலாளராகப் பணம் கொடுத்து பதவியை பிடித்தார். அவரது தவறுக்குச் சரியான தண்டனையாக, கட்சியிலிருந்து தூக்கியிருக்கிறார்கள். இனி கட்சிக்கு இந்த ஒன்றியத்தில் ஏறுமுகம்தான். இப்போது கூட இந்தக் கைது நடந்திருக்காது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால், நம்ம பொழப்பு நாறிவிடும் என்ற பயத்தில்தான் திருவள்ளூர் மாவட்ட போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் அவர் மோசடி செய்திருக்கிறார்” என்கிறது திருவள்ளூர் அ.தி.மு.க. வட்டாரம்.

பா.ம.க. வட்டாரத்தில் விசாரித்த போது, “இதே சந்திரசேகரனின் நில அபகரிப்பு விவகாரத்தை டாக்டர் ஐயா கடுமையாகக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் ஜி.கே.மணியும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கொடுத்தார். பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலகத்தின் எதிரே, சந்திரசேகரனை எதிர்த்து அப்போதைய பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சக்தி கமலாம்பாள், ரவிராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடந்தது. அதன் பின்னர், ஆறு மாதங்களில் காட்சி மாறியது. சந்திரசேகரனின் மகளுக்கும் ஜி.கே.மணியின் மகனுக்கும் திருமணமாகியது. இருவரும் சம்பந்தியாகியதும், எங்கள் போராட்டங்கள் எல்லாம் வீணாகிப் போனது. சந்திரசேகரனின் கொட்டம் அடங்காமல் போனதற்கு ஜி.கே.மணியும் ஒரு காரணம்” என்று ஆவேசப்பட்டனர்.

சந்திரசேகரன் விஷயத்தில் போலீஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்ததே பெரிய விஷயம். காரணம், சந்திரசேகரன் கைது செய்யப்பட்ட மறுநாளே பெங்களூரில் இருந்த கலைஞரிடம் போன் செய்து, தன் கவலையை ஜி.கே.மணி தெரிவித்ததாகவும் ஒரு வதந்தி தீவிரமாக திருவள்ளூர் பகுதியில் உலாவருகிறது.

‘சந்திரசேகரன் கைது என்ற நடவடிக்கை மட்டுமே போதாது. இழந்த நிலத்தை மீட்டு எங்களிடம் தர போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனை கலந்த வேண்டுகோள் வைக்கிறார்கள் நிலத்தைப் பறிகொடுத்தவர்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மாணவர்களை சீரழிக்கும் போதை கலாசாரம்!
ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

Students.jpg



சென்னையில் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜாய்சன். (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பள்ளிக்குப் படிக்கத்தான் போய் இருக்கிறான் என்று பெற்றோர் நினைத்துக்கொண்டிருக்க, ஒரு நாள் வீதியில் கிடந்தான் ஜாய்சன். காரணம், அவன் வயதுக்கு மீறிய பீர் போதை. விஷயமறிந்து உஷாரான அவனது பெற்றோர், எப்படி இவனுக்கு இந்தப்பழக்கம் உண்டானது? என்று விசாரித்த போது, அவனது நண்பர்களின் வற்புறுத்தல் என்றும், சினிமா மற்றும் சின்ன(!)த்திரைகளில் வரும் காட்சிகளைப் பார்த்து தானும் அதுபோல் ஆக வேண்டும் என்ற உந்துதலாலும்தான் அப்பழக்கம் தொற்றியது என்றும் தெரிய வந்தது.

அதே சென்னையில் நடந்த இன்னொரு சம்பவத்தையும் கேளுங்கள். மீசை அரும்பாத பருவ வயது மாணவன் அவன். வயதிற்கு வந்து ஆறுமாதம் கூட தாண்டாத முல்லை அவள். அவர்களுக்குள் காதல் தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கவே, பெற்ற தாயும், தந்தையும்,படிக்கும் பாடமும்,எதிர்காலக்கனவுகளும், அக்காதலர்களின் கண்ணை மறைத்தது. காதலின் வேகம் அறிவின் விவேகத்தைத் தொலைத்தது. பிறகு? பிறகென்ன..? வழக்கம்போல் இறக்கை முளைத்தது. பறந்தார்கள் ஊரைவிட்டு! 

Students%201.jpgஇவர்கள் ஓடிய விஷயம் ஜோடிகளின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்கள் தேடிப்போனது காவல்துறையினரிடம்! அவ்வளவுதான்! ஓடிய காதல் ஜோடிகள் ஓசூர் போலீஸாரிடம் மாட்டிக்கொள்ளவே, உலகம் அறியாத அவர்கள்(!) அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு ‘டிஸிப்ளின் கவுன்சிலிங்’ உரிய முறையில் தரப்பட்டு, புத்தி புகட்டப்பட்டு, கல்வியில் ஆர்வம் ஏற்படுத்தப்பட்டது. சரியான நேரத்தில், சரியான அறிவுரைகளால், தள்ளாடித் தடுமாறிப்போன அந்த மாணவ மாணவியின் வாழ்க்கை தடம்மாறிப் போகாமல் தடுக்கப்பட்டது!

சென்னையின் மையப்பகுதியில் நடுத்தர வர்க்கத்து குடும்பம் ஒன்றில் நடந்த இந்த உண்மைச்சம்பவம் மன நல மருத்துவர் ஒருவரால் நமக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர், சென்னை பள்ளி மாணவர்களில் ஒரு பகுதியினர் பீர் போதை மற்றும் காதலில் மட்டுமல்ல! மீளமுடியாத பான்பராக், சிகரெட், விஸ்கி, பிராந்திப் பழக்கம் இவற்றாலும் சீர்கெட்டு வருவதையும் தெரிவித்தார்.

பாதையை மாற்றும் போதைச்சீரழிவின் அடிப்படைக்காரணம் என்ன? எப்படி அவர்கள் இத்தீயபழக்கவழக்கங்களுக்கு அடிமை ஆகிறார்கள்? அதற்குத் தீர்வென்ன? என்பதை அறியும் பொருட்டு ‘ஸ்டூடண்ட்ஸ் கவுன்சில’ரும், சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞருமான ஆர்.விஜயலட்சுமியைச் சந்தித்துக் கேட்டோம்.

“பள்ளி மாணவர்கள் போதை மார்க்கத்தில் பயணிப்பது ஒன்றும் அதிர்ச்சிகரமான விஷயமல்ல! சென்னையின் பல பகுதிகளில் இதுபோன்று நடக்கிறது. அவர்களின் சின்னச் சின்ன விஷயங்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை. பசங்களுடன் பெற்றோர் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பது முக்கியம். அது அவசியமும் கூட! பசங்களிடம் மனம் விட்டுப்பேசினால்தான் அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்று தெரியும். தவறு எது? சரி எது? என்று புரியும்.

பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் மதிப்பெண்களைப்பற்றி மட்டுமே பேசுகிறோம். அது தவறு. மதிப்பெண்கள் அதிகமாகப் பெற என்ன செய்ய வேண்டும் என்று ஐடியா தர வேண்டும். தவிர, பிள்ளைகளுக்கு பாக்கெட் மணியாகக் கொடுக்கும் பணத்திற்கு என்ன செலவு? என்று கேட்க வேண்டும். 

Students%202.jpgமேலும் இருபது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செல்போன் தேவையே இல்லை. செல்போன் மெஸேஜ்களால் மாணவர்களின் தவறான ஆர்வம் தூண்டப்படுகிறது. இப்போதெல்லாம் செல்போனிலேயே நீலப்படங்கள் அப்பட்டமாகக் காண்பிக்கப்படுகிறது. பிக்சர் மெஸேஜ்கள் வேகமாகப் பரிமாறப்படுகின்றன.பள்ளி மாணவர்களுக்கு லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வாங்கித் தரப்படுவது எல்லாவற்றையும்விட அபாயமானது. அதில் நீலப்பட சி.டி.க்களைப் போட்டு பார்த்துவிடும் வசதி உண்டு. டி.வி. பார்க்கக்கூடாது என்றில்லை. ஆனால் டி.வி. பார்க்க நேர அளவு அவசியம். ஆணோ, பெண்ணோ, ‘ஸ்டடி ஹவர்ஸில்’ அவர்களைக் கவனிப்பது முக்கியம். இவை எல்லாவற்றையும்விட, பள்ளிகள் இருக்கும் ஏரியா பெட்டிக்கடைகளில் ‘ட்ரக்ஸ்’ விற்பனை தடை செய்யப்பட வேண்டும். என்னிடம் கவுன்சிலிங் வருபவர்களை நான் கேன்ஸர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று நோயாளிகள் படும் அவஸ்தைகளை காண்பிப்பதால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார். 

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறுகையில்,“மாணவர்கள் சிகரெட் குடிப்பது, விஸ்கி, பிராந்தி சாப்பிடுவது எல்லாம் சென்னையில் மட்டுமல்ல! கிராமங்களில்கூட பரவிவிட்டது. அவர்கள் கெட்டுப்போவது சில டியூஷன் சென்டர்களிலும் நடக்கிறது.அங்குதான் வேறு சில மாணவர்களின் தொடர்பும் கிடைக்கிறது. போதை பழக்கங்களுக்கு ஆளாகும் மாணவர்களை தண்டனை மூலம் சரிசெய்ய முடியாது. அது அவர்களை மேலும் கெடுத்துவிடும். பக்குவமாகச்சொல்ல வேண்டும். பெட்டிக்கடைகளில் கஞ்சா அடிக்கும் பையன் ஒருவனையும் பார்த்திருக்கிறேன். அவனை திருத்துவதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். இருந்தாலும் அவன் திருந்தியது ரொம்பவே சந்தோஷம். கஞ்சா விற்பனையைத் தடைசெய்ய வேண்டியது சுகாதாரத்துறையின் பணி! தவிர, கல்வித்துறையும் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்துவது நல்லது!” என்று பொறுப்புடன் கூறினார்.

போதை அடிமைகள் மறுவாழ்வு மையமான, நுங்கம்பாக்கம் ‘விஸ்டம்’ மருத்துவமனை இயக்குனர் எஸ்.அறிவுடைநம்பி சொன்ன விஷயங்கள் நம்மை அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச்சென்றது. அவர், “பள்ளி மாணவர்கள் போதைப்பொருட்களாக விஸ்கி, பிராந்தியைக்கூட அதிகம் நாடுவதில்லை. ஏனென்றால் வாசனை நுகரப்பட்டு பெற்றோருக்குத் தெரிந்துவிடும் என்ற முன் ஜாக்கிரதை ஏற்படுகிறது. எனவே, பனிரெண்டு வயதிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பையன்கள் பஞ்சர் ஒட்டப்பயன்படும் சொல்யூஷன்ஸ் மற்றும் ‘லிக்யூட் எரேஸர்ஸ்’ இவைகளை வாங்கி மூக்கில் வைத்து உறிஞ்சியே போதையை அனுபவிக்கிறார்கள். இவைகளை உபயோகப்படுத்துவதால் மூன்று மாதங்களிலிருந்து ஆறு மாதங்களுக்குள் மனித மூளையின் செல்கள் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இதனை அவர்கள் உணர்வதில்லை. நாளடைவில், இவைகள் தரும் போதை போதாமல், இதைவிட பெரிய போதை என்ன என்று தேடத்தொடங்கிவிடுவார்கள். இப்பழக்கமுள்ளவர்களின் அறிகுறிகளை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். ‘சொல்யூஷன்’ உறிஞ்சும் பையன்களுக்குப் படிப்பில் கவனம் இருக்காது. தூக்கமின்மை தொடங்கிவிடும். சரியாகச் சாப்பிடமாட்டார்கள். லேட்டஸ்ட்டாக, குழந்தைத் தொழிலாளர்கள் மத்தியில் இப்போதை பழக்கம் மிக அதிகமாகத் தமிழகம் எங்கும் வேகமாகப் பரவிவருகிறது!” என்று சொல்லி அதிர்ச்சியூட்டினார்.

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவர்கள் சின்ன வயதிலேயே விதவிதமான போதைப்பழக்கத்திற்கு அடிமையாவது அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, நாட்டையே சீரழித்துவிடும்.வெளிநாடுகளில் துப்பாக்கி முதல் செக்ஸ் வரை ‘எல்லாமே’ எல்லைகள் மீறப்பட்டு இறுதியில் ஆன்மிகவழிதேடி வெளிநாட்டவர், தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். தீர்வு கிடைக்கும் தமிழகத்திலேயே போதைக் கலாசாரம் பரவுவது கொடுமையான விஷயம். இதனை தமிழக அரசும், சம்பந்தப்பட்டவர்களும் சிந்தித்து சீர்செய்வது காலத்தின் கட்டாயம்! 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மாணவர்களைக் கடத்தி வந்து போலி கணக்கு காட்டுகிறார்கள்!
-அரசை ஏமாற்று அரசு உதவி பெறும் பள்ளிகள்

School%201.jpg



டேய் இந்த கிளாஸ் நான் வரலை. நீ எனக்காக பிராக்ஸி (போலி அட்டெண்டன்ஸ்) கொடுத்துடு. நான் சினிமாவுக்குப் போறேன்...’

-இப்படி ஆசிரியர்களை ஏமாற்றி ஆள் மாறாட்டம் பண்ணும் பிராக்ஸி மாணவர்கள் ஒரு சிலரை கல்லூரிகளில் பார்த்திருப்போம். 

ஆனால்... ஒட்டுமொத்தமாக மாணவர்களை அழைத்துவந்து பிராக்ஸி கொடுத்து தமிழக அரசையே ஏமாற்றும் பள்ளிக் கூடங்களைப் பார்த்திருக்கிறீர்களா? தேனி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிக் கூடங்கள்தான் இப்படி அரசை ஏமாற்றி வருகின்றன. 

ஜூன் 16 காலை 11 மணி... பெரியகுளம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள் பக்கத்து கிராமமான இ.புதுக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள். ‘‘எங்க ஸ்கூலில் படிக்கும் பசங்களை பெரிய-குளத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள்லேர்ந்து வந்து கூட்டிக்கிட்டு போயிட்டாங்க. அவங்களை எல்லாம் எங்க ஸ்கூலுக்கு அனுப்பி வையுங்க. இந்தாங்க ‘கடத்தப்பட்ட’ மாணவர்களோட லிஸ்ட்’’ என ஒரு பட்டியலை நீட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அதிர்ந்துவிட்டார். ‘உடனே நடவடிக்கை எடுக்கிறேன்’ என சொல்லி அவர்களை அனுப்பியிருக்கிறார்.

School.jpgபுகார் கொடுத்துவிட்டு வந்த தலைமையாசிரியர் சரஸ்வதியை சந்தித்தோம்.

‘‘பெரியகுளத்தில் உள்ள அரசு உதவி பெறும் பல பள்ளிகளில் போதுமான அளவு மாணவர்கள் இல்லை. இதை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்தால் அந்தப் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போதெல்லாம், தங்களிடம் மாணவர்கள் அதிகம் படிக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக... கிராமங்களில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். கிராமத்திலுள்ள பெற்றோர்களுக்கு வேட்டி & சேலை, ஐநூறு ரூபாய் வரை பணம் கொடுத்து, ‘இன்னிக்கு ஒரு நாள் மட்டும் உங்க பிள்ளைகளை எங்க கூட அனுப்புங்க. சாயந்தரம் கொண்டுவந்து விட்டுடுறோம்’ என சொல்லி கூட்டிப் போகிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும் ரெக்கார்டுகளை சரிபார்க்காமல் சும்மா தலைகளை மட்டும் எண்ணிவிட்டுப் போய்விடுகிறார்கள். இதனால்தான் எங்கள் பள்ளிப் பிள்ளைகளை மீட்டுத் தரச் சொல்லி மனு கொடுத்துள்ளோம். இப்படி அடிக்கடி எங்கள் பிள்ளைகளை அரசு உதவி பெறும் பள்ளிகள் முறைகேடாக அழைத்துச் சென்றால் அரசுப் பள்ளிகளை மூடவேண்டியதுதான்’’ என்றார் வேதனையாக. 

இதுபற்றி விசாரிக்க ஆரம்பித்தோம். 

‘‘தமிழகத்தில் 44 ஆயிரத்து 249 அரசு மற்றும் தனியார் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் அரசு நிதியுதவி பெறும் தனியார் துவக்க பள்ளிகள் 5 ஆயிரத்து 48-, நடுநிலைப்பள்ளிகள் ஆயிரத்து 163-. இப்பள்ளிகளில் மட்டும் 98-லட்சத்து 78-ஆயிரத்து 621-மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இப்பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்கப்படுகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை 61-ஐத் தாண்டும்போது 2 ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதனால் 400- மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு பத்து -ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் அதிகரிப்பால் அரசு நிதியுதவி பெறும் தமிழ்ப் பள்ளிகள் போதிய மாணவர் சேர்க்கையின்றி தவித்து வருகின்றன. 

தற்போது 6-வது ஊதியக்குழு பரிந்துரைக்கு பிறகு இடைநிலை ஆசிரியர் ரூ. -11 ஆயிரத்து 120 ,-பட்டதாரி ஆசிரியர் ரூ-. 14 ஆயிரத்து 630,- தலைமை ஆசிரியர் ரூ. 16-ஆயிரத்து 690- என சம்பளம் பெறுகின்றனர். அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்யும் உரிமை பெற்றுள்ளனர். அதற்காக இவர்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்று ஆசிரியர்களை நியமிக்கின்றனர். தற்போது மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறையவும் வாய்ப்புள்ளது. 

இதனை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் ஆண்டு தோறும் அதிகாரிகள் தணிக்கை செய்கின்றனர். அந்த சமயத்தில் அதிகாரிகளை சரிக்கட்டத்தான்... அருகிலுள்ள நர்சரி, மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவிகளை அழைத்து வந்து வகுப்பறையில் உட்கார வைத்து கணக்கு காட்டிவிடுகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் அங்கு கடைசியாக சேர்க்கப்பட்ட ஆசிரியர் வேறொரு அரசு பள்ளிக்கு டிரான்ஸ்பர் செய்யப்படுவார். இதனை தவிர்க்க சோதனையின் போது மாணவர்களை அழைத்து வருகிறார்கள். இதற்கான செலவை கடைசியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும். மொத்தத்தில் அரசிடமிருந்து சம்பளம் வாங்கிக் கொண்டு, அரசையே ஏமாற்றி அரசுப் பள்ளிகளுக்கும் சிக்கல் ஏற்படுத்தி வருகின்றனர்’’ என்றனர் பெயர் வெளியிட விரும்பாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலரும். 

இதுகுறித்து கிராம கல்விக் குழுத் தலைவர் லதா பாஸ்கரன் நம்மிடம்,- ‘அரசு உதவி-பெறும் பள்ளிகளுக்கு அதிகாரிகள் சோதனையிட வரும்போது சில ‘கறுப்பு ஆடு’ அதிகாரிகள் முன் கூட்டியே பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து-விடுவதால் மாணவர்களை திரட்டி கணக்குக் காண்பித்து-விடுகின்றன பள்ளி நிர்வாகங்கள். அதிகாரிகள் ஒழுங்காக ஆய்வு செய்தாலே அரசுக்கு நேரும் பல கோடி நஷ்டத்தைத் தடுக்கலாம்’’ என்றார். 

இதுபற்றியெல்லாம் மாவட்ட கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பீட்டர் கென்னடியிடம் கேட்டபோது, ‘‘கடந்த வாரம் பெரியகுளம் முருகமலை, நேருநகர், இ.புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள ஆரம்பப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புகார் மனு அளித்துள்ளனர். அது குறித்து அன்றை தினம் விசாரணை நடத்தி பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை அவர்கள் முதலில் படித்த அரசுப் பள்ளிகளுக்கே அனுப்பி வைத்திருக்கிறோம். மேலும் 3 -பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்’’ என்றார்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முற்றுகையிட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஹெலன் மிடில்டாவிடம் -கேட்டபோது, ‘‘மாணவர்களின் பெற்றோர்கள் புகார் கொடுத்தால் விசாரிக்கலாம். பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இவ்வாறு புகார் கொடுப்பது தவறானது. அவர்கள் பள்ளிகளில் நன்றாக மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தால் வேறு பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதைத் தடுக்கலாம்’‘ என விவகாரத்தையே புரிந்துகொள்ளாமல் பேசினார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சென்றோம். ‘‘இதுபோன்ற புகார்கள் தற்போதுதான் எழ ஆரம்பித்துள்ளன. இதுபற்றி விசாரணை நடத்துமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளோம். தவறு செய்யும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அரசு உதவிபெறும் பள்ளிகள், யாருக்கும் உபத்திரவம் தரும் பள்ளிகளாக அமைந்துவிடக் கூடாது!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஒரே ஒரு பள்ளியில் ஒரே ஒரு மாணவன்!
மக்களின் அலட்சியத்தால்அவல நிலையில் அரசுப் பள்ளி

school.jpg



ஒரே பள்ளி... ஒரே ஆசிரியர்... ஒரே மாணவன்... இப்போது அதுவும் கேள்விக் குறி! இப்படியொரு கல்விப் புரட்சி நடந்திருப்பது வேறெங்கும் இல்லை. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு அருகில் இருக்கும் சீத்தப்பட்டி என்ற கிராமத்தில்தான்.

School%201.jpgஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்... பத்து வயதுக்குள் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள். 240 வாக்காளர்கள். இப்போதுதான் தார்ரோடு அறிமுகமாகிறது. திறந்திருக்கும் வீடுகளை விட, திண்டுக்கல் பூட்டை போட்டு பூட்டியிருந்த வீடுகளே அதிகம். 

இப்படி வெறிச்சோடியிருந்த சீத்தப்பட்டி கிராமத்தில் முப்பது வருடத்துக்குமேல் செயல்பட்டு வந்த தொடக்கப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் படித்த மாணவர்களின் எண்ணிக்கைதான் நம்மை வியப்பூட்டியது. கடந்த கல்வியாண்டில் ஆறே ஆறு மாணவர்கள் அங்கு படித்திருக்கிறார்கள். அதில் நான்கு மாணவர்கள் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு சென்றுவிட, இந்த கல்வியாண்டில் அங்கு படித்த மாணவர்கள் இரண்டே பேர்.

அந்த இரண்டு மாணவர்களில் ஐந்தாம் வகுப்பிலிருந்த மாணவியை பெற்றோர் வேறு பள்ளிக்கு மாற்றிவிட, இறுதியாக இருந்தது இரண்டாம் வகுப்பு தினேஷ் மட்டும்தான். அந்த மாணவனின் பெற்றோரும் சிறைக் கைதியைப் போல தனிமையான கல்வி தேவையில்லை என்று அந்த மாணவனையும் வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள். 

இந்நிலையில் மாணவர்களே இல்லாத சீத்தப்பட்டி துவக்கப் பள்ளியை இழுத்து மூடிவிடலாம் என முடிவெடுத்தனர் கல்வித்துறை அதிகாரிகள்.

தங்கள் ஊரில் இருக்கும் பள்ளி மூடப்பட்டுவிட்டது என்றதுமே கொதித்துப் போன சீத்தப்பட்டி மக்கள், அன்று இரவே கவுன்சிலர் செல்வராஜ் முன்னிலையில் ஊர்க் கூட்டம் போட்டு பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எல்லாம் உள்ளூர் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இதன்படி வெளியூர்ப் பள்ளியில் இருந்த உள்ளூர் குழந்தைகளை மாற்றுச் சான்றிதழ் கூட வாங்காமல் அழைத்து வந்திருக்கும் சீத்தப்பட்டி மக்களிடம் பேசினோம்.

School%202.jpg‘‘நல்லாதாங்க சொல்லிக்-கொடுத்தாங்க இந்த ஸ்கூல்ல. எங்க புள்ளைங்க கூட ஆறு வருடதுக்கு முன்னாடி இங்கதான் படிச்சது. இப்போ பத்தாம் வகுப்புல 430 மார்க் வாங்கியிருக்கு. இந்த ஊர்ல இருந்த மக்கள்ல பலபேரு வேலை இல்லேன்னு வட மதுரை, திண்டுக்கல், சென்னைன்னு போயிட்டாங்க. இந்த ஊருக்கு ஒரு மினி பஸ் வசதி கூட இல்ல. ஒரு பெட்டிக்கடை இருக்கான்னு பாருங்க. வயித்து வலி, தல வலின்னாக்கூட ஒரு மாத்திரை வாங்க முடியாது. இங்கே இருக்கறவங்க எல்லோரும் ஒவ்வொரு குடும்பமா காலி பண்ணி டவுன் பக்கம் போயிக்கிட்டு இருக்காங்க. அதனாலதான் இந்த ஊர் ஸ்கூல்ல படிக்க ஆளில்லை’’ என்றார் பழனியம்மாள்.

அந்த பள்ளியிலே படித்த மகேஷ்வரன் என்ற மாணவனிடம் பேசினோம். ‘‘நாங்க படிக்கும்போதெல்லாம் நாற்பது மாணவர்களுக்குமேல் இருந்தாங்க. இப்போதுதான் குறைந்திருக்கிறது. நன்றாகத்தான் கிளாஸ் எடுத்தாங்க. நான் இங்கே படித்துதான் பத்தாம் வகுப்பில் 340 மார்க் வாங்கினேன். இந்த கிராமத்துல சரியான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் யாரும் வெளியூர் போகமாட்டார்கள். ஊர் நன்றாக இருந்தால்தானே பள்ளி சிறப்பாக செயல்படும்’’ என்றார். கவுன்சிலர் செல்வராஜ் வேறு மாதிரி சொல்கிறார். ‘‘அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்பதால் ஊரைவிட்டுப் போவதாகச் சொல்வதெல்லாம் தவறு. எத்தனையோ வசதிகள் செய்து கொடுத்திருக்கோம். இங்கிருக்கும் குழந்தைகள் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல், தென்னம்பட்டி ஸ்கூலுக்கென்று அனுப்புவதால்தான் இந்த ஊர் பள்ளியில் படிக்க மாணவர்கள் இல்லாமல் போய்விட்டது. 

ஸ்கூலை மூடப் போவதாகத் தகவல் வந்தவுடனே ஊர் கூட்டத்தைப் போட்டு இங்கிருந்து பக்கத்து ஊருக்கு படிக்கச் செல்லும் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த துவக்கப் பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும் என தீர்மானம் போட்டு இங்கே கூட்டிவந்திருக்கோம். கல்வித் துறை அதிகாரிகள் வந்து பார்க்கிறோம் என்றிருக்கிறார்கள். கண்டிப்பாக பள்ளியை மூடவிடமாட்டோம். இந்த ஊரில் தொடர்ந்து பள்ளி நடக்கும்’’ என்றார்.

கல்வித்துறை ஊழியர்களிடம் பேசியபோது, ‘‘இதேபோல நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் இல்லாமல் இந்தப் பள்ளி மூடும் நிலைமைக்கு வந்தது. அப்போதும் ஊர் கூட்டம் போட்டு உள்ளூர் பள்ளியில் குழந்தைகளை சேர்க்காவிட்டால் ஊரைவிட்டு தள்ளி வைப்போம் என தீர்மானம் போட்டனர். ஆனால், இந்தத் தீர்மானத்துக்கு ஒரு சிலர் மட்டும்தான் மதிப்பு கொடுத்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த கல்வித் துறை அதிகாரிகளும் அந்த பள்ளி மீது எந்த கவனமும் செலுத்தவில்லை. வருடா வருடம் மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறதே, அதற்கான மாற்று வழி என்ன என்று எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு ஒரே அறையில் ஐந்து வகுப்பு-களும் நடந்திருக்கிறது. அங்கு இருந்த இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் டெப்டேஷனில் வேறு பள்ளிக்கு போய்விட்டார். மற்றொருவர் விடுமுறை என்றால் அந்த பள்ளிக்கே விடுமுறைதான். பல முறை அந்தப் பள்ளிக்கு இன்ஸ்பெக்ஷ ன் போன அதிகாரிகள் இதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை’’ என்று ஆதங்கத்தைக் கொட்டினார்கள்.

திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகர்ராஜிடம் இந்தப் பள்ளியின் அவலம் பற்றி கேட்டோம். ‘‘அந்தப் பள்ளியை மூடுவதற்கு ஆர்டர் போடவில்லை. படிப்பதற்கே மாணவர்கள் இல்லாத நிலையில்தான் அங்கிருந்த ஆசிரியருக்கு வேறு பள்ளிக்கு டெப்டேஷன் டூட்டி போட்டிருக்கிறோம். பொதுவாக துவக்கப் பள்ளியில் படிக்கும் வயதில் அந்த கிராமத்திலே மாணவர்கள் இல்லை. இருக்கும் ஒரு சில மாணவர்களும் பக்கத்தில் இருக்கும் தென்னம்பட்டி, வடமதுரை பள்ளிகளுக்கென்று சென்றுவிடுவதால்தான் சீத்தப்பட்டி பள்ளி மாணவர்கள் சேரும் வரைக்கும் மூடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இருந்தும் அந்த பகுதியில் உள்ள ஏ.இ.ஓ.விடம் முழுமையான ரிப்போர்ட் பெறப்பட்ட பின்பே இறுதி முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

இந்த விஷயத்தில் அதிகாரிகளை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. ஆங்கில மோகத்தில் தங்கள் பிள்ளைகளை கான்வென்ட்டுகளில் சேர்க்கத் துடிக்கும் பெற்றோர்களும்தான் பொறுப்பு!




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சீக்கியர் ரோமத்துக்கு உள்ள மதிப்பு தமிழனுக்கு இல்லையா?: சீமான்

வெள்ளிக்கிழமை, ஜூலை 9, 2010, 11:14[IST]

சென்னை: சீக்கியரின் ரோமப் பிரச்சினைக்காக வாதாடிய பிரதமர் மன்மோகன் சிங், தமிழனின் உயிருக்கு என்றாவது மதிப்பு கொடுத்துள்ளாரா?. சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா? என்று ஆவேசமாக கேட்டுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.

இதுதொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை:

நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென் கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதில் நமது தமிழ் மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்டுள்ளார்.இது போக மற்ற மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் கடும் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களை மிகவும் இழிவாக நடத்தியுள்ளனர்.

கடந்த 60 ஆண்டுகளாக நம் மீனவர்கள் மீது தொடர்ந்து சிங்கள கடற்படையினர் தாக்குதல் நடத்திக் கொலை செய்வதும், அவர்களின் படகுகள் மோசமான முறையில் சேதப்படுத்தப்பட்டு, வலைகள் அறுக்கப்பட்டு, மீன்கள் கொள்ளையடிக்கப்படுவதும் அதனை நம் அரசியல் தலைவர்கள் கண்டித்து வெற்று அறிக்கை வெளியிடுவதும் தொடர்கதையாக உள்ளது.

தமிழக மீனவர்கள் இந்திய கடல் பகுதிக்குள் கூட மீன் பிடிக்க முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது இந்த முறையாவது நாம் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.இந்த நிலைக்கு காரணம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களின் கையாலகாத்தனம் தான்.

இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களான தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை- ஒரு உயிருக்குக் கூட – இந்திய அரசின் சார்பில் நிதியுதவியோ அல்லது வேறு வகையான உதவிகளோ செய்யப்படவில்லை – குறைந்தபட்சம் ஆறுதல் கூட தெரிவிக்கப்பட்டதில்லை. இது குறித்து இதுவரை இந்திய தூதரகம் பெயரளவுக்கு கூட இலங்கையிடம் ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன் இன உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அங்குள்ள பூத்தொட்டி உடைந்தவுடன் பதைபதைத்து தன் கவலையை இலங்கைக்கு தெரிவித்த மத்திய அரசு, உடனடியாக விசாரணையை முடுக்கிய மத்திய அரசு, இது வரை செத்த 500க்கும் மேற்பட்ட தமிழ் மீனவனுக்கு என்ன செய்திருக்கிறது?

பிரான்சில் சீக்கியனின் மயிர்ப் பிரச்சனைக்காக விமானம் ஏறிச்சென்று வாதாடிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தினசரி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மீனவனின் உயிர் குறித்து என்றாவது அக்கறை காட்டியிருக்கின்றாரா? சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா?

இது தான் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணமா?:

இந்தியாவின் கிழக்கு கடற்படை காமாண்டோ ராஜசேகர் நேற்று அளித்த பேட்டியில் இலங்கை கடற்படையினர் இந்தியாவில் எங்களை மீறி நுழைய வாய்ப்பில்லை என்று சொல்லியிருக்கின்றார்.அப்படியானால் அவர்களுக்குத் தெரிந்து தான் இத்தகைய சம்பவங்கள் நடக்கிறதா?.

வழக்கம் போல் நமது முதல்வரும் கடிதம் எழுதி பிரச்சனையை முடித்து விட்டார். தமிழர்களின் பிரச்சனைக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையே தீர்வாக சொல்லும் முதல்வரே, மத்திய அரசு இப்பிரச்சனையத் தீர்க்க ஒன்றும் செய்யவில்லை என்று மத்தியில் பதவி வகித்துக்கொண்டே நேற்று கூறியிருக்கிறார். இந்த முறையும் கடிதம் எழுதிவிட்டு வழக்கம் போல் பிரச்சனையை முடித்து விட்டார்.

Seemanபதவிகளைப் பெறுவதற்கு விமானம் ஏறும் முதல்வர் மீனவர் பிரச்சனைக்கு கடிதம் மட்டும் எழுதி கடமையை முடித்து விட்டார். இது தொடர்கதையாகி விடக்கூடாது.

ஆகவே இந்த முறையாவது தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நம் மீனவனின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். முதற் கட்டமாக இதுவரை உயிரிழந்த மீனவர்கள் அனைவருக்கும் 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும். இல்லையெனில் இந்திய இறையான்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறிவிடும் என்று கூறியுள்ளார் சீமான்

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிறையில் செக்ஸ் டார்ச்சர்!


1.jpg

shockan.blogspot.com

கோவை ரயில்வே நிலையத்தில் கத்தி முனையில் ரமேஷ்பாபு என்ற பயணியிடமிருந்து 1400 ரூபாயை பிடுங்கிக்கொண்டதாக ரயில்வே போலீஸாரால் 2007-ம் வருடம் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவன்தான் கைதி விஷ்ணுவர்த்தன். அந்த விஷ்ணுவர்த்தனை 29-06-10-ந் தேதி அன்று மத்திய சிறைச் சாலையிலிருந்து அழைத்து வந்த போலீஸார் கோவை 2-வது நீதிமன்ற வளாகத்துக்குள் நீதிபதி கோமதிநாயகம் முன்பு அவனை ஆஜர்படுத்திய போது...

""அய்யா... ஜெயிலுக்குள்ள எங்களை வார்டனுக ரொம்பவே கொடுமைப்படுத்தறாங்கய்யா. போன தடவை எங்கண்ணன் மனு போட்டுப் பார்க்க வந்தபோது 2000 ரூபாய் எனக்குக் கொடுக்க வந்தாரு. அந்தப் பணத்த எங்கிட்ட கொடுக்கறதுக்காக வார்டன்க 400 ரூபாய் லஞ்சம் வாங்கினதுக்கப்புறம் தான் எங்கிட்ட 2000 ரூபாயக் கொண்டு வந்து கொடுத்தாங்க. ஆனா இப்ப கோர்ட்டுல ஆஜர்படுத்த கொண்டு வர்றதுக்கு முன்னால எங்கிட்ட இருந்த 2000 ரூபாயைக் கேட்டு கன்னா பின்னான்னு அடிச்சு காயப்படுத்திட் டாங்க'' என்று சட்டையைக் கழற்றி காயங்களை அழுதுகொண்டே காட்டி யவன்... ""அய்யா உங்ககிட்ட இதையெல் லாம் சொன்னா "திரும்பவும் ஜெயிலுக்குத்தான் வரோணும்... கொன்னுபோடுவோம்'னு மிரட்டறாங்கய்யா'' என்று அவன் சொல்ல... அதிர்ந்துபோன நீதிபதி, கைதி விஷ்ணுவர்த்தனை ஜி.ஹெச்.சில் அட்மிட் செய்யும்படி சொன்னார். 

அதேநாளில் சிறைச்சாலையில் கைதிகள் மனுநாள். ""எங்களுக்கு தரம் குறைவான சாப்பாட்டையே போடுகிறார்கள். வார்டன்கள் எங்களிடம் பணம் கேட்டு சித்திரவதை செய்கிறார்கள்'' என்று சில கைதிகள் புகார் செய்த அன்றைய மாலைதான் புகார் கொடுத்த சிலரை வார்டன்கள் புரட்டி எடுத்திருக்கிறார்கள். கைதிகள் தாக்கப்பட்ட விஷயம் அறிந்து மற்ற கைதிகள் உண்ணாவிரதமிருக்க... 1.jpg


அதற்குப்பின் நடந்த சம்பவங்களை சிறையில் உள்ள நம் காக்கி சோர்ஸ்களிடம் கேட்டோம். ""புதிதாய் கோவை ஜெயில் சூப்பிரண்ட்டாய் இன்சார்ஜ் எடுத்திருக்கும் சேலம் ஜெயில் சூப்பிரண்ட்டான பழனி வந்ததற்குப் பிறகுதான் தரமற்ற உணவு கைதிகளுக்குப் போடப்பட்டது. இதை எதிர்த்துப் பேசிய கைதி பிரகாஷ் என்பவனை சில போலீஸ்காரர் களும் வார்டன்களும் சேர்ந்து பாவம்... செமத்தை யாய் அடித்துவிட்டார்கள். ஆனால் அவன் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்தான் என்று மூச்சுப் பேச்சற்றுக் கிடந்த அவனை ஜி.ஹெச்.சில் கொண்டுபோய் சேர்த்தார் கள்'' என்கிறார்கள் காக்கிகள்.

சேலம் சிறைச்சாலையில் கூட அனைத்துக் கைதிகளும் உண் ணாவிரதமிருக்கிறார் கள் என்ற தகவலைத் தொடர்ந்து என்ன பிரச்சினை என்று அலசினோம். சேலம் சிறையில் இருந்து காக்கிகளின் துணை யோடே நம்மைத் தொடர்புகொண்டு பேசிய கைதிகள் முனு சாமி (5662), ராஜ ராஜசோழன் (4456) ஆகிய இருவரும் ""உண்மையாலுமே ரொம்ப மட்டமான சாப்பாட்டையும், குழம்பையும் ஊத்தி சாப்புடச் சொல்றாங்க. எப்படிங்க சாப்புட முடியும்னு பழனி எஸ்.பி.கிட்ட நாங்க ரெண்டு பேரும் கேட்டதுக்காக அப்படி அடிக்கிறாங்க சார். சாப்பாட்டுல பிளேட துண்டு துண்டா உடைச்சுப் போட்டு இப்ப சாப்புடுன்னு சொல்றாங்க. ஏற்கனவே எதிர்த்துப் பேசினவங்கள கண்ணு மண்ணு தெரியாம அடிச்சு இந்த ஜெயிலுக்குள்ளயே இறந்து போயிருக்காங்க. இந்த எஸ்.பி. பழனிகிட்டயிருந்து முடிஞ்சா எங்கள காப்பாத்துங்க சார்'' என்று விசும்பல் ஒலியை எழுப்பிய இருவரின் குரலும் அவசர அவசரமாய் கட்டாகிப்போனது.
1.jpg
இதற்கடுத்த நாளே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மகளிர் சிறையிலிருந்து கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வெளியே கொண்டு வரப்பட்ட மைதிலி என்ற பெண் தன்னுடைய சேலையை அவிழ்த்தெறிந்துவிட்டு ""ஜெயிலுங்கிறது எதுக்கு? குற்றம் செஞ்சவங்க திருந்தற இடம்ங்கறாங்க. ஆனா நிச்சயமா இல்லை. கஞ்சா வித்த வழக்குல என்னை கைது செஞ்ச போலீஸ்காரங்க இப்ப உள்ளுக்குள்ளேயே என்னை கஞ்சா விக்கச் சொல்றாங்க. முடியாதுன்னு மறுத்ததுக்கு சரியா சாப்பாடு போடாம தண்டிக்கிறாங்க. என்னைப் பாக்கறதுக்காக வந்த எங்கம்மா மேல கஞ்சா வித்ததா பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்க'' என்றவளிடம்... "சரிம்மா அதுக்காக இப்படி அரைகுறையா பப்ளிக்ல நிக்கிறது சரியா?' என்றோம். ""உள்ளுக்குள்ள எங்கள நிர்வாணமாவே நிறுத்தி அங்க இங்கன்னு போலீஸ்காரங்க கை வைக்கறாங்க சார். அதை செல்போன்ல வேற படம் புடிச்சுட்டு "வெளிய போய் சொன்னீனா நெட்ல போட்டுவுட்ருவோம்'னு மிரட்டறாங்க. இவுங்கள்லாம் போலீஸ்காரங்களா சார்....? மனசும் உடம்பும் உடைஞ்சுப்போய்தான் இப்படி நின்னுட்டிருக்கேன்'' என்றவள் அப்படியே தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள். 

இந்தச் சம்பவங்களைக் கேட்டு கொதித் துப்போயிருக்கும் கோவை வழக்கறிஞர் கலை யரசன்... ""ஏற்கனவே 2005-ல் இதே ஜெயில் சூப் பிரண்ட்டான பழனி மீது கைதிகளை துன் புறுத்தியதாக வழக்குப் போடப்பட்டிருக்கிறது. இதை கருத்திற்கொண்டு சரியான முறையில் நீதித்துறை விசாரணை செய்தால் உண்மைகள் வெளிப்படும்'' என்கிறார் கோபமாய்.

இதையொட்டி ஜெயில் சூப்பிரண்ட் பழனியிடம் பேச எவ்வளவோ முயன்றும் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் கோவை சிறைத்துறை டிஐ.ஜி. கோவிந்தராஜ னிடம் பேசினோம். ""ஜெயில் சூப்பிரண்ட் பழனி மீது கூறப்படுபவை நூற்றுக்கு நூறு இட்டுக் கட்டப்பட்ட பொய்கள்தான். எஸ்.பி. பழனி, கைதிகளுக்கு பீடி சப்ளை செய்யும் போலீஸ்காரர்கள் மீது கூட நடவடிக்கை எடுத்த ஸ்ட்ரிக்ட் ஆபீசர். பிரகாஷ் என்ற கைதிகூட பீடி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் மரத்தின் மீது ஏறி தூக்குப் போட முயன்றான். சேலம் சிறையில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று... கைதிகள் சுகமாய் வாழ அல்ல சிறைச்சாலை. அவர்கள் திருந்தி வாழ்வதற்காகவே'' என்று ஜெயில் சூப்பிரண்டு பழனி மீதான புகார்களை உறுதியாய் மறுக் கிறார்.

இந்நிலையில் சிறையில் நடந்த சம்பவம் குறித்து அறிய மாவட்ட கூடுதல் நீதிபதி சதீஷ்குமார் தலைமையிலான குழு கோவை சிறைச்சாலைக்குள் சென்று கைதிகளிடம் நடந்த சம்பவங்களைக் கேட்டிருக்கிறது. 

அந்தக் குழு சேலம் சிறைக்குள் நுழையுமே யானால்... போலீஸிடமிருந்து கைதிகள் முனுசாமியையும் ராஜராஜ சோழனையும் கூடவே மைதிலி போன்ற பெண்களின் மானத்தையும் ஒருசேரக் காப்பாற்றலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

5,000 building violations in Chennai in last three years

Govt Seeks Action-Taken Report From CMDA,Corpn 

Jayaraj Sivan | TNN

Pc0071000.jpg Chennai: The Chennai Metropolitan Development Authority (CMDA) and various local bodies in and around the city have identified 5,000 new cases of building violations in the Chennai metropolitan area over the last three years.According to a report submitted by the CMDA,these are cases reported after the cutoff date of July 27,2007,when the state first promulgated an ordinance to protect all buildings a staggering 1.7 lakh where the violations were noticed from being pulled down.
Taking a serious view of new violations,housing secretary Ashok Dongre has sought an action-taken report from the CMDA,as well as the local bodies,including the Chennai Corporation,several municipalities and town panchayats in the region.A senior official noted that inordinate delay in deciding the fate of old violations and the apathetic attitude of the enforcement wings in both CMDA and local bodies were responsible for violations continuing.A year ago,the CMDA had delegated powers to local bodies to initiate action against building violators.But the local bodies are reluctant to exercise those powers to rein in violators for reasons known only to them,said the official.
Dongre has called for details like the list of buildings inspected by various regulatory agencies,cases where stop work notices were issued,list of sealed buildings,instances of notices issued for sealing and demolition and cases caught in litigation.He has asked for a break-up like how many of them are residential,commercial,industrial and institutional buildings.The ordinance was aimed at giving a reprieve to the illegal constructions that sprang up after the first regularization scheme of February 28,1999.Though the government introduced three more regularization schemes in 2000,2001 and 2002,the Madras high court struck them down saying exemptions like regularizations could be given only once.To avoid immediate pulling down of buildings,the state government first promulgated an ordinance and later enacted a law Tamil Nadu (Special Provisions) Act 2007.The high court struck down the said Act too,which resulted in the state approaching the Supreme Court.The apex court ordered status quo on December 14,2007.The ordinance was re-issued twice,in 2008 and 2009,to extend their term.
Meanwhile,the government appointed a regularization committee headed by retired Supreme Court judge S Mohan.The committee,which has scrutinized all applications submitted by building owners for regularization,has been instructed by the state government to submit its final report before the end of July,2010.The committee is also expected to suggest modifications in the Town and Country Planning Act to keep it relevant to the changing times.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பத்து மார்க்குக்கு 2 லட்சம்! +2 ரிசல்ட் மோசடி!

1
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கும் மாணவர்களை ரொம்பவே திடுக்கிட வைத்திருக்கிறது +2 போலி மதிப்பெண் விவகாரம்.

மருத்துவ சீட் கேட்டு... குவிந்த விண்ணப்பங்களை ஆராய்ந்த மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள்... மறுகூட்டல் மூலம் ப்ளஸ் டூவில் பாஸான 10 பேரின் மார்க் ஷீட்டைப் பார்த்துக் குழம்பினர். குறிப்பாக ஒரு மாணவரின் கட் ஆஃப் மார்க் ரீ டோட்டலிங்கிற்கு முன்பு 140 ஆக இருந்தது. ஆனால் ரீடோட்டலுக்கு பிறகு கட் ஆஃப் மார்க் 195 ஆனது. இதைப் பார்த்து அதிர்ந்த மருத்துவக் கல்வி இயக்குனரகம் மொத்த சான்றிதழ்களையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் பல மார்க் ஷீட்களில் சீக்ரெட் குறியீடாக இருக்கும் வாட்டர் மார்க் இல்லாமல் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

அத்துடன் மறுகூட்டலின் மார்க்ஷீட் வெளியீட்டு நாளான ஜூன் 25-க்கு பதில்... பொதுத் தேர்வு மார்க்ஷீட் விநியோக நாளான மே 14-ஐ பொறித்திருந்தனர். 

இதனால் சந்தேகப்பட்ட அதிகாரிகள்... மதிப்பெண்களை அச்சிடும் டேட்டா சென்டருக்கு அவற்றை அனுப்பி வைத்தனர். 

அவை அச்சு அசல் போல் உருவாக்கப்பட்ட போலி மார்க்ஷீட் என்பதை உறுதிசெய்த... டேட்டா நிறுவன அதிகாரிகள், இவை டுபாக்கூர் மார்க் ஷீட்டுகள்தான் என மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்குத் தெரிவித்ததோடு.... பொறியியல் கல்லூரி களுக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தையும் தொடர்புகொண்டு... விபரத்தைக் கூறி... எச்சரிக்கை செய்தனர்.

இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம்... தன்னிடம் வந்த அத்தனை மார்க் ஷீட்டுகளையும் கண்களில் விளக்கெண் ணையை ஊற்றிக்கொண்டு சோதித்தது. இதில் 41 பேர் போலி மார்க்ஷீட் அனுப்பியிருப்பதும்... அவர்களில் 4 பேருக்கு பிரபல கல்லூரிகளில் தான் இடம் ஒதுக்கி விட்டதையும் கண்டுபிடித்து அண்ணா அதிர்ந்தது. உடனடியாக... அந்த 4 பேரின் இட ஒதுக்கீட்டையும் நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டது.

போலி மார்க்ஷீட் விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டதுமே அதிர்ச்சியடைந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வந்து விசாரித்தார். பின்னர் ""போலி மார்க்ஷீட்டைக் கொடுத்த மாணவ-மாணவிகள் 5 வருடங்களுக்கு தேர்வெழுத முடியாது என்றதோடு... போலி களைக் தயாரித்த டுபாக்கூர் ஆசாமிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுகக்கப்படும்'' என்றும் எசசரித்தார்.

இந்த விவகாரம் பெரிய அதிர்வலை களை ஏற்படுத்த ஆரம்பித்ததால்.. தேர்வுத் துறை ஆணையர் வசுந்தராதேவி காவல் துறையிடம் புகார் செய்ய... விசாரணைக் களத்தில் தீவிரமாகக் குதித்திருக்கிறது காவல்துறை.

நாம் விசாரணை அதிகாரிகளிடம் இது குறித்துக்கேட்டபோது ""ஒரு பெரிய கும்பலே இந்த போலி மார்க்ஷீட் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம்னு நாங்க சந்தேகப் படறோம். ஒரு மாணவி ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் நல்லா படிச்சி... 1200-க்கு 1,101 மார்க் வாங்கியிருந்தார். 

ரீ-டோட்டலுக்கு அப்ளை பண்ணினா... மேலும் மார்க் கிடைக்கும்னு இந்த மாணவி நினைச்சி பணம் கொடுத்திருக்கா. 1115 மார்க் வந்திருக்கு. இப்ப போலி சான்றிதழில் மாட்டிக்கிட்டா. இன்னொருவன் டி.பி.ஐ. வளாகத்தில் வேலை பார்க்கிற ஒரு நபரிடம் பேசியிருக்கான். 2 லட்ச ரூபா கொடுத்தா ரீ-டோட்டல்ல 10 மார்க் அதிகமா போட ஏற்பாடு பண்றேன். ஒரு மார்க்குக்கு 20 ஆயிரம் ரூபான்னு ஆசை காட்டியிருக்கார். நல்ல காலேஜ்ல அதிலும் சென்னைலயே சீட் வாங்கறதுன்னா ஏழெட்டு லட்ச ரூபாயைக் கொட்டிகொடுத்தாகணும். அதுக்கு ரெண்டு மூணு லட்சத்தை ரீ-டோட்டல் மார்க்குக்கு கொடுத்துடுவோம்னு அந்த மாணவனும் பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கான். 

ஆனா அந்த டுபாக்கூர் ஆசாமி... ரீ டோட்டலுக்குப் போகாமலே போனமாதிரி... டுபாக்கூர் மார்க் ஷீட்டை ரெடி பண்ணிக் கொடுத்திருக்கான். அதிக மார்க்குக்கு ஆசைப்பட்டு... தவறான வழியில் அதை அடைய முயற்சி செஞ்ச அந்த மாணவ, மாணவிகள்... இன்னும் 5 வருஷத்துக்கு தேர்வே எழுத முடியாது. போலி மார்க் ஷீட் கொடுத்த மாணவ மாணவிகளை எல்லாம் எங்க விசாரணை வளையத்துக்கு உட்படுத்துவோம். அதே போல்... இந்த போலி மார்க் ஷீட்டுகளை தயார் பண்ணுகிற கிரிமினல்கள், இதை மாணவர்களுக்கு வாங்கித் தரும் புரோக்கர்கள் போன்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்போம். இப்ப டி.பி.ஐ.யில் வேலை பார்க்கும் ஏகாம்பரம் என்ற ஊழியரை நாங்க மடக்கியிருக்கோம். தீவிர விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. விசாரணையில் இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியே வரலாம்'' என்றார்கள் மீசையை முறுக்கி விட்டபடியே. 

எத்தனை ஆண்டுகளாய் இப்படி நடக்கிறதோ என போலி மார்க்ஷீட் விவகாரம் பகீரூட்ட... இன்னொரு பக்கம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநில மாணவ- மாணவிகள் சிலர்... தமிழக மாணவர்களின் கோட்டாவில் இடம்பிடிக்க... போலி இருப்பிட சான்றிதழ் களைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரமும் பல்கலைக் கழகங்களுக்குத் தலைவலியை உண்டாக்க ஆரம்பித்திருக்கிறது.

கேரள மாணவி ஒருவருக்கு... அம்பத்தூர் தாசில்தார் போலி இருப்பிட சான்று வழங்கி அவரைத் தமிழ்நாட்டு மாணவியாக்கியிருந்தார். தமிழக மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கவேண்டிய சீட்டை வெளி மாநிலத்தவருக்கு தாரைவார்க்க அதிகாரிகள் துணைபோயிருப்பது வெட்கக்கேடு. 
போலி மார்க் ஷீட் விவகாரம் எல்லா மட்டத்திலும் பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

லஞ்சம் வாங்கி சிக்கிய மத்திய அமைச்சரின்...

1
இரவு 7.30 மணி இராசிபுரம் சுப்ர மணிய நகர் தெருவிளக்கு களின் மங்கிய ஒளியில் மினுக்கிக் கொண்டிருக்கும் அந்த மாடரேட் நகரில் ஓர் அடுக்கு மாடியில் டிப்-டாப் சஃபாரி சூட் பார்ட்டியிடம் சாதாரண உடையில் ஒருவர் பவ்வியமாய்...’"அய்யா நீங்க கேட்ட ஒண்ணரை லட்சத்தை கொண்டாந் திருக்கேன்' என்றார். முகம் மலர்ந்த சஃபாரி வெரிகுட். இத மொதல்லயே கொண்டு வந்திருக்கலாமில்ல... சரி... சரி... இனி கவலைப்படாதே. பணத்தை பி.ஏ. சுப்ரமணிகிட்ட கொடு' என்றார் மிடுக்காக. பணம் கை மாறுகிறது. அடுத்த வினாடி திபுதிபுவென தன் டீமோடு நுழைந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.பெரியசாமி ""போத் ஆர் அரெஸ்ட்'' என்று கர்ஜிக்க... முகம்வெளிறிப் போனார் அந்த சஃபாரி. அவர் வேறு யாருமல்ல; நாமக்கல் டி.எஸ்.பி. சீனிவாசன்.

எதற்காக இந்த கைது? லஞ்ச ஒழிப்பு டீமிடம் கேட்டோம். ""நாகப்பட்டிணம் ஆரோக்கியராஜுக்கு இங்க இருக்கும் கங்கநாயக்கன்பட்டி, புதுப்பட்டியில ரெண்டு கோழி பண்ணைகள் இருக்கு. அதில் சேக் என்பவர் ஒர்க்கிங் பார்ட்னராகியிருக்கார். அவங்களுக்குள் பிரச்சினை ஏற்படுது. அதைத் தொடர்ந்து கடந்த 6-ந்தேதி 85 ஆயிரம் கோழிகளை சேக் தனியா கொண்டுபோக.. அவர்மேல் ஆரோக்கிய ராஜ் கோழிகளைத் திருடியதா புகார் கொடுக்கறார். டி.எஸ்.பி. சீனிவாசன்... இதை கையில் வச்சிக்கிட்டுதான் "உன்னைக் கைது பண்ணாம விட்டுடறேன்'னு முதல்ல ஒரு லட்சமும், பிற்பாடு 7-ந்தேதி 50 ஆயிரமும் கறந்திட்டாரு. அதுக்கப்புறமும் ஒன்றரை லட்சம் வேணும்னு மிரட்டவும்தான் எங்ககிட்ட ஓடிவந்தாரு சேக். திருட்டுப் பூனை யை பிடிச்சிட்டோம்ல'' என்றனர் பெருமிதமாக.

சீனிவாசன் கைது என்றதும் அ.தி. மு.க. கரைவேட்டிகள் அங்கே கூடி பத்திரி கையாளர்களைப் படம் எடுக்கவிடாது தடுத் தனர். "ஒரு காக்கிக்கு இத்தனை கரை வேட்டிகளின் சப்போர்ட் டா?' என்ற போது...

""சசிகலா குடும்ப உறவினர் புலவர் கலியபெருமாள் கண்காணிப்பிலுள்ள 7 மாவட்டத்திலும் சீனிவாசன் சொல்லாமல் ஒரு அணுவும் அசையாது. யாராவது கட்சியில பொறுப்பு கேட்டு போனா கூட மொதல்ல சீனிவாசனை பாருன்னுதான் கலியபெருமாளே சொல்வாரு'' என்கிறார்கள் லோக்கல் புள்ளிகள்.

இப்போது லஞ்சத்துக்காக நீண்ட சீனிவாசனின் கை... சேலம் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது. 

’’""சீனிவாசன் சசிகலா உறவினர் மட்டுமில்லீங்க, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றின் பெயர் கொண்ட மத்திய அமைச்சரின் உறவினரும் கூட. தி.மு.க. ஆட்சியில் அமைச்சரின் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். எவ்வளவு தப்பு செஞ்சாலும் தப்பிச்சி வர்ற இவர்... இந்த முறை வசமா மாட்டிக்கிட்டாரு'' என ஒரு ர.ர.வே நம்மிடம் கிசுகிசுத்தார். 

இந்த சீனிவாசன் உத்தமர் காந்தி பெயரில் விருது பெற்றவர் என்பதுதான் தலைகுனியத் தக்க உபரித் தகவல்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கொலைகார டாக்டர்கள்!

கொலைகார டாக்டர்கள்!


போலி டாக்டர்களை அரசு ஒரு பக்கம் தீவிரமாகக் களையெடுத்துவரும் நிலையில்... இன்னொரு பக்கம் ஒரு சில அரசு டாக்டர்களை எதிர்த்து அங்கங்கே பொதுமக்கள் ஆவேசப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக் கிறார்கள்.

சம்பவம்-1 :

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன் பொதுமக்கள் ஆவேசத்துடன் திரண்டிருக்க.. என்ன... ஏது என்று விசாரித்தோம். அப்போது கண்ணீரும் கம்பலையுமாகக் காட்சியளித்த சாந்தி ""நல்லா இருந்த என் வீட்டுக்காரர் ராமு... திடீர்னு ஜுரம் வர்றமாதிரி உடம்பு அனத்துதுன்னு சொன்னார். உடனே அவரை இங்க அழைச்சிக்கிட்டு வந்தேன். ரொம்ப அலட்சியமா எங்களைப் பார்த்த ஒரு நர்ஸ்... என் வீட்டுக்காரருக்கு ஒரு ஊசியைபோட்டு மூலையில் உட்காரவச்சிட்டுப் போனாங்க. கொஞ்ச நேரத்தில் அவருக்கு கைகால்கள் இழுக்க ஆரம்பிச்சிடிச்சி.. ஓடிப்போய் டாக்டர்களைத் தேடினா யாரும் இல்லை. அங்க இருந்த நர்ஸோ செல்போன்ல பேசறதிலேயே மும்முரமா இருந்தாங்க. அவங்களைக் கூப்பிட்டதுக்கு... "உன் புருஷந்தான் அதிசயமா? எல்லாரையும்தான் நாங்க பார்க்கணும். நல்ல டிரீட்மெண்ட் வேணும்னா பிரைவேட் ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டியதுதானே'ன்னு ரொம்ப அலட்சியமா சொன்னாங்க. அவங்க வந்து பாக்கறதுக்குள்ள என் வீட்டுக்காரரோட உயிர் போயிடுச்சிங்க''’என்றார் கதறலாய். அங்கிருந்த அவரது உறவினர்களும் பொதுமக்களும் “""அரசு மருத்துவமனை வியாபார ஸ்பாட்டா மாறிடிச்சி. காசு இருந்தாத்தான் மதிக்கிறாங்க. ஏழைகள்னா அவங்களுக்கு இளக்காரமா இருக்கு. அந்த நர்ஸோட அலட்சியத்தால்தான் ராமுவின் உயிர் போயிருக்கு. அதனால் அவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்''’என்றார்கள் காட்டமாய். மருத்துவமனை வட்டாரமோ துறை ரீதியான விசாரணை நடத்தப்பட இருக்கிறது என்கிறது.

சம்பவம்-2 :

தஞ்சைமாவட்டம் பெரப்படியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரின் 13 வயது மகள் பரணி 8-ஆம் வகுப்பு படித்து வந்தாள். அவளுக்கு தொண்டையில் கட்டி ஒன்று தோன்ற.. மகளை நாச்சியார்கோயி லில் இருக்கும் டாக்டர் அருள்மணியிடம் அழைத்துச்சென்றார். பிறகு? செல்வ ராஜே கண்ணீருடன் விவரிக்கிறார்...

""தொண்டையில் இருக்கும் கட்டியை ஆபரேசன் பண்ணி எடுத்துடலாம். அதுக்கு 20 ஆயிரம் ரூபா செலவாகும்னு டாக்டர் அருள்மணி சொன் னார். அவ்வளவு பணம் புரட்ட... வசதி இல்லைங்க, கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் பண்ணிக்கி றோம்னு சொன்னேன். அதுக்கு அவர்... "நீ கும்ப கோணம் ஜி.ஹெச்.சுக்குதானே வரணும். அங்கயும் நான்தான் ஆப ரேசன் பண்ணனும்'னு மிரட்ட லாச் சொன்னார் காசு இல்லாத குத்தத்துக்கு என்ன பண்றதுன்னு... கும்ப கோணம் ஜி.ஹெச்.சுக்கு எங்க பரணியைக் கூட்டிட்டுப்போனேன். அங்க இருந்த அருள் மணி டாக்டர்... ஆபரேசன் தியேட்டர் வாசல்ல வச்சி... "கடைசியாக் கேட்கறேன். ஒரு பத்தாயிரம் ரூபாயாவது கொடு. உன் பிள்ளையை குணமாக்கிடறேன்'னு சொன்னார். என் கிட்ட பணமில்லை சாமின்னு சொன்னேன். ரொம்பக் கோபமா ஆப ரேசன் தியேட்டருக்குள்ளே போன டாக்டர்... அடுத்த பத்தாவது நிமிசம் என் பொண்ணைக் கொன்னுட்டார். கேட்டதுக்கு ஆபரேசன் பெயிலியர்னு சொல்றார். என் மகளைக் கொன்ன டாக் டரை கூண்டில் ஏற்றாமல் விடமாட்டேன்''’என்கிறார் கதறிய படியே. உறவினர்களோ கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள்.

சம்பவம்-3 :

புதுக்கோட்டை ஜி.ஹெச்.வாசலில் பரபரப்பான பரபரப்பு. ஒரு பெண்மணியின் சவத்தை வாசலில் கிடத்தியிருந்தனர். அது குறித்து நாம் விசாரித்தபோது... ""எங்க பெரியம்மா செல்லாயி... 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கும் போது மயக்கமா இருக்கும்னு சொன்னாங்க. இங்க கூட்டி வந்தோம். டாக்டர் ஒரு ஊசியப் போட்டுட்டு நீங்க போகலாம் னார். எங்க பெரியம்மாவோ... "எனக்கு உடம்பு சரியா இல்லை. ஒருநாள் பெட்ல இருக்கேன்'னு சொல்ல... "அதெல்லாம் வேணாம் நீங்க கிளம்புங்க'ன்னு டாக்டர் வலுக்கட்டாயமா எங்களைத் துரத்திவிட்டுட்டார். பஸ்ஸ்டாண்டுக்கு வந்ததும், மறுபடியும் மயக்கமா இருக்குன்னு எங்க பெரியம்மா சொல்ல.. மீண்டும் ஆட்டோ பிடிச்சி ஆஸ்பத்திரிக்கு வந்தோம். இங்க வந்தா டாக்டர் இல்லை. இங்க இருக்கும் நர்ஸ் டாக்டர்ட்ட போன்ல யோசனை கேட்டுட்டு ஒரு ஊசியைப் போட்டாங்க. அவ்வளவுதான் ரெண்டே நிமிசத்தில் எங்க பெரியம்மாவின் உயிர் போயிடுச் சிங்க''’என்றார் செல்லையா பெருகிவழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே.

இந்த அலட்சிய மர ணங்கள் குறித்து பேராசிரி யர் முரளிதரன் இப்படி சொல்கிறார் ""அரசு டாக் டர்கள் தனியா கிளினிக் வச்சுக்கிட்டு பெரும்பா லான நேரம் அங்கேயே இருக்காங்க. அவங்களுக்கு பதில் நர்ஸ்கள் டிரீட் மெண்ட் கொடுக்கறாங்க. இந்த நிலையால்தான் மரணங்கள் அதிகமாகுது. இன்னும் சில டாக்டர்கள் ஆஸ்பத்திரி பக்கமே தலைவச்சிப் படுக்குறதில்லை. என்னைக்காவது ஒரு நாள் போய் கையெழுத்து மட்டும் போட்டுட்டு வந்திடுவாங்க. நாகை மாவட்டம் வில்லிய நல்லூர், தஞ்சை மாவட்ட கீழக்காட்டூர், பந்தநல்லூர் போன்ற ஊர்களுக்குப் போய்ப் பாருங்க. அங்க இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் எல்லாம் எல்லா நேரத்திலும் பூட்டியே கிடக்கும். டாக்டர் களைக் கண்காணிச்சி... அவங் களை தனியார் மருத்துவமனை நடத்தறதைத் தடுத்தாதான் நிலைமை சீராகும். இல் லைன்னா... அலட்சிய மரணங் கள் தொடர் கதையாத்தான் இருக்கும்'' அவரது குரலில் கவலை வழிந்தது..

கொடுமைக்கார டாக் டர்களை சுகாதாரத்துறை கவனிக்குமா?


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கேபிள் ஃபைட்! உயிருக்குக் குறி!

ஒசூரில் இரண்டு நபர்களுக்கிடையே நடந்துவரும் கேபிள் யுத்தம் உச்சகட்டத்தை எட்ட.... எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற திக்திக்கில் இருக்கிறார்கள் ஏரியாவாசிகள். 

ஒசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாக்களில் சிட்டி என்ற பெயரில் கேபிள் டி.வி.யை நடத்தி வருகிறவர் வேலு. இவர் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர். இதேபோல் ஒசூரில் ஏ-1 என்ற பெயரில் கேபிள் டி.வி.யை நடத்தி வருகிறவர் சூரி. இந்த இருவருக்கும் இடையே நடக்கும் தொழில் போட்டிதான் தற்போது தீவிரம் பெற்று பலரையும் திகிலில் ஆழ்த்தியிருக்கிறது. 

""சூரியாவது சுண்டைக்காயாவது. இனி எவனும் சூரிக்கிட்ட கேபிள் இணைப்பைப் பெறக்கூடாது. மீறிப் பெற்றால்... விபரீதத்தைத்தான் சந்திக்கணும்னு ஒரு பக்கம் வேலு தரப்பு மிரட்டுது. இன்னொரு பக்கம் "வேலுவாவது வெங்காயமாவது.... இனி வேலுவிடம் இணைப்பை வாங்காதே. என்னிடமிருந்துதான் வாங்கணும். இல்லைன்னா நடக்கறதே வேற' என சூரித்தரப்பு மிரட்டுது. இப்படி இவங்க மாறி, மாறி மிரட்டிக்கிட்டு இருப்பதால் என்னை மாதிரி மற்ற கேபிள் ஆபரேட்டர்களும் பொதுமக்களும்தான் மிரண்டுபோய்க் கிடக்குறோம். இது சம்பந்தமா போலீஸுக்கு ஏகப்பட்ட புகார்கள் போயிருக்கு. இருந்தும் இவங்க ஆட்டம் அடங்கலைங்க''’என மிரட்சி விலகாமலே சொல்கிறார் அந்த கேபிள் ஆபரேட்டர்.

இன்னொரு கேபிள் ஆபரேட்டரோ ""சூரிமேல் கொலை வழக்கு உட்பட ஏகப்பட்ட வழக்குகள் இருக்கு. ஒசூர் முழுக்க தன் ஆதிக்கத்தைச் செலுத்தணுங்கிற எண்ணத்தில் அவர் வேலுக்கிட்ட இணைப்பு வாங்கிய ஆபரேடர்களை மிரட்டறார். கொஞ்சம்கூட அவகாசம் தராமல்... அங்கங்கே கேபிள் வயரை 300 முதல் 500 அடிவரை அவர் ஆளுங்க துண்டிச்சிட்டுப் போயிடறாங்க. சன் கிட்ட ஒசூர் இணைப்பை வாங்கிய சூரி... அளவுக்கு மீறி இணைப்புக் கொடுத்ததால்... சன்.. தன் கேபிள் இணைப்பைத் துண்டிச்சிடிச்சி. இது தொடர்பா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நடக்குது. இப்படி இந்த ரெண்டு தரப்பும் பண்ணி வருகிற அட்டகாசத்தால்... சமீபத்தில் நடந்த உலகச் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கூட பார்க்க முடியாம ஒசூர் மக்கள் ரொம்பவே அவஸ்தைப் பட்டாங்க. விரைவில் ஒசூரே ரத்தக்களறியா ஆகுமோங்கிறதுதான் எங்க பயமே''’என்கிறார் பீதியோடு.

இவர்களின் யுத்தம் குறித்து ஒசூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமாரிடம் நாம் கேட்டபோது “""இந்த இரண்டு தரப்புமே மாறி மாறி புகார் மனுக்களை எங்களிடம் குவித்து வருகிறது. எனவே ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைத்திருக் கிறோம்'' என்று முடித்துக்கொண் டார். 

நாம் ஆர்.டி.ஓ செல்வராஜையும் விடாமல் துரத்திப்பிடித்தோம்.. அவர் நம்மிடம் ""சன் டி.வி.மீது சூரித் தரப்பு வழக்குப் போட்டிருக்கு. வழக்கின் தீர்ப்புக்குப் பிறகுதான் பேச்சுவார்த் தைக்கு வருவோம்னு அவர் சொல்றார். வேலு தரப்பும்... வழக்குக்குப் பிறகு பேசுறதுதான் முறைன்னு சொல்லுது. அதனால் கோர்ட்டின் தீர்ப்புக்குக் காத்திருக்கிறோம். அதற்கிடையே இவர்கள் வன்முறை போன்ற நடவடிக்கைகளில் இறங்கினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். கடுமையாக நடவடிக்கை எடுப்போம்''’என்றார் எச்சரிக்கைக் குரலில்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நான்கு மாவட்ட அ.தி.மு.க.வை ஆட்டிவைத்த
டி.எஸ்.பி. ஆட்டம் கண்டது எப்படி?

DSP.jpg

 



‘‘கட்சிப் பதவிக்கு இவர்களை நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு கடிதம் கொடுத்தால், கலியபெருமாளை பார்க்க வேண்டும் என்றார்கள். அவரைப் பார்த்தால், நாமக்கல் டி.எஸ்.பி.யை பாருங்கள் என்றார்கள். அங்கே போனால், ‘இந்த பதவிகளுக்கு எவ்வளவு பணம் தருவீங்க?’ என்று கேட்கிறார். உலகத்திலேயே ஒரு கட்சியோட பதவியை நியமிக்கிற அதிகாரத்தை டி.எஸ்.பி.யிடம் கொடுத்திருக்கிற கொடுமை அ.திமு.க.வைத் தவிர வேற எங்காச்சும் நடக்குமா?’’ & சில வாரங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி சொன்ன வார்த்தைகள் இவை.

DSP%201.jpgஅந்த டி.எஸ்.பி. வேறு யாருமில்லை. சமீபத்தில் ஓன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி, சிக்கிக் கொண்ட நாமக்கல் டி.எஸ்.பி. சீனிவாசன்தான்.

யாரிந்த சீனிவாசன்? 1972ம் ஆண்டு கிரேடு ஒன் காவலர். 1985ம் ஆண்டு எஸ்.ஐ.யானார். திடீரென கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, ‘என் பெற்றோர் எனது வயதை அதிகமாகக் காட்டிவிட்டார்கள். எனவே, வயதைக் குறைக்க வேண்டும்’ என்று வயதை மாற்றிக் கொண்டார். எல்லா விஷயத்திலும் கில்லாடி. மன்னார்குடி வகையறாக்களின் உறவினர் என்று சொல்லி, 1991 முதல் 96 வரை எக்கச்சக்க ஆட்டம். அந்த ஆட்டத்தின் கடைசி இன்னிங்ஸ் முடிய இன்னும் ஒன்பது மாதங்களே இருந்தது. அதற்குள் சிக்கிக் கொண்டார் சீனிவாசன்.

லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரத்தில் பேசியபோது ‘‘நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, மோகனூருக்கு பக்கத்தில இரண்டு கோழிப் பண்ணை வைச்சிருக்கார். அவருக்கு லோன் வாங்கி தர்றதுக்கு உதவியா இருந்த ஷேக் நவீத் (ராசிபுரம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராணியின் பி.ஏ.) தன்னையும் கோழி பண்ணையில், ஒரு பார்ட்னராக சேர்த்துக்க சொல்லியிருக்கார். ஆரோக்கியசாமியும் சேத்துக்கிட்டாரு.

ஒரு கட்டத்துல ஷேக் நவீத், பண்ணையில எனக்கு சரி பாதி பங்கு இருக்குன்னு கோர்ட்ல கேஸ் போட்டிருக்கார். மேலும் ஆரோக்கியசாமியை மிரட்டி வைக்கணுமுன்னு நினைச்சி, அவரோட இரண்டு பண்ணையில இருந்த 85 ஆயிரம் கோழிகளை ஜூலை 6&ந் தேதி தனது நண்பர்கள் ரவி, சண்முகம் மூலமா கடத்தியிருக்கார் ஷேக் நவீத். இந்த தகவலை கேள்விப்பட்ட டி.எஸ்.பி. சீனிவாசன் லாரியை மடக்கி மீட்டுக் கொடுத்து, ஷேக் நவீத் குரூப் மேல கேஸ் போட்டுட்டார். கேஸ் போடாமல் வெளிய வர ஷேக் குரூப், டி.எஸ்.பி.கிட்ட பேரம் பேசினாங்க. முதல்ல அவரு கேட்ட ஒரு லட்சத்தை ஜூலை 7&ந் தேதி தனது நண்பர் சண்முகம் மூலமா, ஷேக் கொடுத்துட்டார். காசு பத்தாதுன்னு சொல்லி மறுபடியும் 50 ஆயிரம் ரூபாயை வாங்கியிருக்காரு டி.எஸ்.பி. 

DSP%202.jpgமறுபடியும் ஒன்றரை லட்சத்தை ஜூலை 10&ந் தேதி கேட்டிருக்காரு. அதுக்கு பிறகுதான் ஷேக் குரூப் எங்ககிட்ட புகார் கொடுத்தாங்க. ஷேக்கின் நண்பர் சண்முகம் கூடவே நாங்களும் போனோம். சண்முகம் பணம் கொடுக்கும்போது அதிரடியா டி.எஸ்.பி. வீட்டுல புகுந்து அவரை கைது செஞ்சோம். வீட்டுல பல கோடி பெறுமானமுள்ள டாக்குமெண்ட் கிடைச்சிருக்கு. அத பத்தி எல்லாம் இப்ப சொல்லமுடியாது’’ என்றார்கள்.

‘டி.எஸ்.பி. சிக்கிக் கொண்டதுக்கு காரணமே வேற’ என்று கிசுகிசுக்கிறார்கள் சில காவல்துறை அதிகாரிகள். அவர்களிடம் பேசியபோது ‘‘அ.தி.மு.க ஆட்சியில இவரோட பவரே தனி. ‘அ.தி.மு.க.வுல சசிகலாவும், தி.மு.க.வுல பழனி மாணிக்கமும் எனக்கு நெருங்கின சொந்தம்’ என்று சொல்லிக் கொண்டு மேலதிகாரிகளுக்கே டிரான்ஸ்பர் விசயத்தை கச்சிதமா செஞ்சி கொடுப்பாரு. 

இப்படி யோகமா வாழ்ந்த இவருக்கு நாமக்கல் எஸ்.பி.யாக பாரி வந்ததும் நெருக்கடி ஆரம்பமாச்சு. அ.தி.மு.க. கட்சி பதவிக்கு நடக்கும் எல்லா பஞ்சாயத்தையும் சீனிவாசன் தன்னோட ஆபீஸ்ல வச்சு பேசறாருன்னு ஏகபட்ட புகார். அதுபற்றி எஸ்.பி. கேட்டப்ப, அவரை அலட்சியப்படுத்தி பதில் சொன்னாரு. மத்திய அமைச்சர் காந்தி செல்வன் பாதுகாப்பு விஷயமும் சீனிவாசன் கையிலதான் இருந்தது. சரியான நேரத்துக்கு காவலர்களை அனுப்பாததால், அமைச்சருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எல்லமுமாகச் சேர்ந்து இப்ப லஞ்ச வழக்கு வடிவில் சிக்கிக்கொண்டார்’’ என்றார்கள்.

சீனிவாசன் சிக்கிக் கொண்டதுமே, அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் பட்டாசு வெடிக்காத குறைதான். அ.தி.மு.க.வினர் சிலரிடம் பேசிய போது ‘‘கரூர், சேலம், நாமக்கல், தருமபுரின்னு இந்த நாலு மாவட்டத்திலயும் கரை வேட்டி கட்டாத கட்சிக்காரர் போல சீனிவாசன் வலம் வந்தாரு. அ.தி.மு.க. மண்டலத் தலைவர் கலியபெருமாள் மருமகன், இவரோட சொந்த அண்ணன் மகன்தான். கலியபெருமாளை யார் போய் பார்த்தாலும், அவரு அடுத்த நிமிடமே சொல்ற வார்த்தை ‘நாமக்கல் போலீஸ் அதிகாரிய கான்டாக்ட் பண்ணுங்க’என்பதுதான். 

இவரைப் போய் பார்த்தா, இந்த பதவிக்கு இவ்வளவு விலைன்னு சொல்லுவாரு. அந்த விலைய பாத்து பல பேரு மலைச்சி போயிருக்காங்க. 

DSP%203.jpgஇவரைப் பத்தி கேள்விப்பட்ட பல ஒன்றிய, நகர நிர்வாகிகள் தனியாகவே சந்தித்து பதவிக்கு பண பேரம் பேசுவாங்க. அப்படி பல பேரு இவருகிட்ட பணத்தை கொடுத்திட்டு அல்லாடிய கதையும் உண்டு. புரட்சித் தலைவரு இயக்கத்துக்கு துரோகம் செஞ்சவங்களை அவரோட ஆன்மா சும்மா விடாதுன்னு போன வாரந்தான் ஓ.பி.எஸ். நாமக்கல்ல பேசிட்டு போனாரு. ஆன்மா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சி’’ என்றனர் அ.தி.மு.க.வினர்.

சீனிவாசன் தரப்பினரோ ‘‘இது அவருக்கு தெரியாமலேயே பின்னப்பட்ட சூழ்ச்சி வலை. அதில் அவர் சிக்கிகொண்டார். அவருக்கு எதிராக சிலர் திட்டம் போட்டு இதை செய்திருக்கிறார்கள். அ.தி.மு.க கட்சி விவகாரத்திலும் அவரை அளவுக்கு மீறி சம்மந்தப்படுத்துகிறார்கள். அவர் ஜாமீனில் வெளியே வந்ததும் கண்டிப்பாக உண்மை வெளியுலகுக்கு தெரியும்’’ என்று அடித்து பேசுகிறார்கள்.

லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்ததுமே, தனக்கு நெஞ்சு வலி என்று சொல்லி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகிவிட்டார் சீனிவாசன். இவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சில முக்கிய வி.ஐ.பி.களுக்கு இவர் பினாமியாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. விசாரணை முடிவில் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினர். 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் + அரசு அதிகாரி:
தொழிலாளர்கள் நிதியை கொள்ளையடித்த கூட்டணி!

Trichy%204.jpg

ஒப்பாரி வைப்பது போல் அழுது பிணத்தின் மோதிரத்தைத் திருடும் காட்சிகளை சினிமாவில் காமெடியாகக் காட்டுவார்கள்.


Trichy%203.jpgஆனால், தொழிலாளர்களின் தோழன் என கூறிக்கொள்ளும் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொறுப்பாளரே இப்படி ஒரு மோசடியை செய்திருக்கிறார். அதுவும் அரசு அதிகாரி ஒருவரின் பரிபூரண ஆதரவோடு. இந்த ‘கொள்ளை காம்பினேஷனை’ திருச்சி மாவட்ட அழகிய மணவாளம் ஊராட்சி தலைவர் அனந்தராமன் நம்மிடம் விளக்கினார்.

“எங்கள் ஊர் அருகே பழையூரில் அரிசி ஆலை கட்டும்போது கடந்த டிசம்பர் மாதம் விபத்து ஏற்பட்டது. அதில் எங்கள் ஊரைச் சேர்ந்த விஜயா, புஷ்பவள்ளி, ராஜேஸ்வரி மற்றும் பழையூரைச் சேர்ந்த மேகலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். இந்த விபத்தைப் பார்வையிட கலெக்டர் சவுண்டையா, மாவட்ட தொழிலாளர் நல அதிகாரி இந்துமதி ஆகியோர் வந்தபோது, ‘விபத்தில் இறந்த கூலித் தொழிலாளர்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்குமா?’ என்று கேட்டோம். உடனே இந்துமதி, ‘இந்த கிராமத்தில் யாரும் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இல்லை. எனவே இவர்களுக்கு அரசின் எந்த உதவியும் கிடைக்காது. அரசு என்ன தர்மசத்திரமா?’ என்று ஏளனமாகக் கேட்டார். ஆனால்... விபத்தில் இறந்தவர்களின் உடல்களை பழையூர் மெயின் ரோட்டில் கிடத்தி வைத்திருந்த போது திருப்பைஞ்சீலியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில இணைச் செயலாளரான மாரியப்பன் அங்கே வந்திருக்கிறார். இறந்து கிடந்தவர்களையும், காயம் அடைந்தவர்களையும் போட்டோ எடுத்திருக்கிறார். இதெல்லாம் அப்போது எங்களுக்குத் தெரியாது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அந்த விபத்தில் இறந்தவர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து தலா 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தையும் மாரியப்பனிடம் அதிகாரி இந்துமதி கொடுத்திருப்பது தெரியவந்தது. உடனே அதிர்ச்சியாகி அதிகாரி இந்துமதியைப் போய்ப் பார்த்தோம்.
Trichy%205.jpg
‘அன்னிக்கு பணமே கிடைக்காதுன்னு சொன்னீங்க. இன்னிக்கு எப்படி நிவாரணத் தொகை கொடுத்தீங்க? அதுவும் பாதிக்கப்பட்டவங்க யாரும் விண்ணப்பிக்கவே இல்லையே... செக்கை கிராஸ் பண்ணித்தானே தருவீங்க. மாரியப்பன் எப்படி இந்த நிவாரணத்தை வாங்கினார்?’ என கேள்வி மேல் கேள்வி கேட்க, ‘எனக்கு ஒண்ணும் தெரியாது’ என்று சொல்லி அழுதார் இந்துமதி. ஆனால்... தொடர்ந்து விசாரித்தபோதுதான் இந்துமதி-, மாரியப்பன் இருவருமே கூட்டுக் கொள்ளையர்கள் என்பது தெரிந்தது. அதனால், ஏமாற்றப்பட்டவர்கள் சார்பில் மண்ணச்சநல்லூர் போலீசில் புகார் செய்தோம். இங்கு நடவடிக்கை இல்லாத காரணத்தால் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தோம். அதன்பிறகுதான் மாரியப்பன் கைது செய்யப்பட்டார்” என முடித்தார் அனந்தராமன்.

அந்த அரிசி ஆலை விபத்தில் பலத்த காயமடைந்த ராணியிடம் பேசினோம். ‘‘சுவர் இடிஞ்சு விழுந்ததுல சாரம் கட்டியிருந்த சவுக்கு மரத்துல போய் குத்தி, ஒரு கிட்னியையே எடுக்கவேண்டியதாப் போச்சுங்க. கண்ணுல கல் விழுந்ததுல பார்வையும் சரியா தெரியலை. நான் இப்படி கஷ்டப்படும்போது என் பேரைச் சொல்லி மாரியப்பனுக்கு 50 ஆயிரம் ரூபா கொடுத்திருக்காங்க. இது எந்த ஊர் நியாயம்?’’ என்று பரிதாபமாகக் கேட்கிறார். இதுபற்றி திருச்சி தொழிலாளர் நல அலுவலக வட்டாரங்களில் விசாரித்தோம். ‘‘அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக ஏதேனும் ஒரு தொழிற்சங்கத்தின் பரிந்துரை தேவை. தொடர்ந்து அந்தப் பதிவை புதுப்பித்து வந்தால் அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, விபத்து காப்பீடு, இயற்கை மரண உதவித் தொகை மற்றும் விபத்து மரண உதவித்தொகை ஆகியவற்றை தொழிற்சங்கத்தினரே பெற்றுத் தருவார்கள். இதைப் பயன்படுத்திதான் அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில இணைச் செயலாளரான மாரியப்பன் வாரியத்தில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கு முன்தேதியிட்ட உறுப்பினர் கார்டு போட்டு அவர்களது வாரிசுகள் பெயரில் இழப்பீடு வாங்கி, அதைத் தானே எடுத்துக்-கொண்டிருக்கிறார்.

இதற்காக இவர் சமர்ப்பித்த ஆவணங்களான எப்.ஐ.ஆர்., இழப்பீடு கோரும் வாரிசுகளின் கடிதம், வாரிசுச் சான்றிதழ் அனைத்துமே போலியானவை. இதை சரிபார்க்க வேண்டிய தொழிலாளர் நல அதிகாரி இந்துமதி கமிஷன் பெற்றுக்கொண்டு கிராஸ் செய்யப்படாத செக்குகளை கொடுத்துள்ளார். 

Trichy%202.jpgஇந்துமதி கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருச்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் இங்கு வந்த 15 நாட்களுக்குப் பிறகு கொடுக்கப்பட்ட செக்குகளில் 95 சதவிகிதம் கிராஸ் செய்யப்படாத செக்குகள்தான். அவருக்கு வேண்டப்பட்ட, கமிஷன் தரும் தொழிற்சங்கத்தினருக்கு மட்டுமே அப்படி வழங்கியுள்ளார். இந்த அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் இவர் வழங்கிய சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள 358 செக்குகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது. இதனால் மாதாமாதம் சுமார் ரூ.28 ஆயிரம் வங்கிக்கு அலுவலகம் தண்டத்தொகையை செலுத்தி வருகிறது. 

இது குறித்து புகார்கள் சென்றதால், மண்டல தொழிலாளர் நல இணை ஆணையர் சங்கரி, இந்துமதியின் அலுவலகத்தை சோதனையிட்டார்.அப்போது, ‘என் அனுமதி இல்லாமல் என் அலுவலகத்தில் புகுந்து நான் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை திருடிவிட்டார். மேலும், சங்கரி என்னை சாதியைச் சொல்லி இழிவுபடுத்துகிறார்’ என தன் மேலதிகாரி மீதே புகார் வாசித்தார் இந்துமதி. அதனால், மண்டல இணை ஆணையர் பயந்து போய்விட்டார். இதுதான் இந்துமதியின் டெக்னிக். அதனால்தான் மோசடி செய்த மாரியப்பனை கைது செய்தபோதும், அதற்கு உறுதுணையாக இருந்த இந்துமதி மீது இன்னும் நடவடிக்கையே இல்லை. அவர் நீண்ட விடுப்பில் போய்விட்டார்’’ என்றனர்.

‘‘இந்துமதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?’’ என்று மண்டல தொழிலாளர் நல அதிகாரி சங்கரியிடம் கேட்டோம். ‘‘அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத வேலை’’ என்று பொறுப்பாக (!) பதிலளித்தார். இந்துமதியிடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்டால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தரும் உதவித் தொகையை இப்படி ஈரமே இல்லாமல் கொள்ளையடிப்பவர்களை அரசு இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் வேடிக்கை பார்க்கப்போகிறது?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Another marksheet scandal: this time 4 held in Thanjavur

Tiruchi Passport Office Tips Off Cops After Detecting Fraud 

V Mayilvaganan | TNN

Thanjavur: Days after a fake marksheet scam was unearthed in Chennai,the regional passport office (RPO) in Tiruchi has busted a similar racket.Four persons have been caught making fake Plus Two marksheets in Kumbakonam in Thanjavur district after the RPO tipped off the police about finding a fake Plus Two marksheet along with a passport application.
A youth who applied for a passport using a fake certificate was also arrested while one more member of the gang is absconding.The five were involved in making fake marksheets and other certificates for the past five years.Police said there was no information whether this gang had any links to the fraudsters arrested in Chennai a few days back on similar charges.We have no information about the links.This gang was selling fake school and college marksheets to persons in this region who wanted those certificates to obtain passports or overseas jobs.There were complaints from the passport office about the fake certificates based on which the gang was tracked and arrested, said Thanjavur superintendent of police,AK Senthilvelan.The operations of the gang came to light after a fake Plus Two certificate was detected with an application for a passport in the RPO in Tiruchi recently.We randomly send the certificates to the issuing authorities to confirm the veracity of the certificates.It was during such a verification that we found that the marksheet was a fake, regional passport officer K Balamurugan said.When he summoned the applicant,Saminathan,25,of Andipandal in Nagapattinam district and began quizzing him,he admitted that it was a fake certificate.Saminathan had said that he had obtained the marksheet paying Rs 5,000 to Basheer Ahmed of Kudavasal.
The passport officer passed on the information to the police who nabbed Basheer Ahmed,Khaja Mohideen of Nannilam,Pandian of Tiruvarur and Aktar Ali of Kumbakonam.Saminathan was also held,while Ravi,a photographer,is on the run.Balamurugan said the passport office comes across such cases often.

THE NET WIDENS


10 suspected marksheets in medical and 41 in engineering admissions are under investigation A retired assistant headmaster and an education official have been arrested No information about links between Kumbakonam and Chennai rackets

Pc0081700.jpg




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்
aPlus.gifa_.gif
ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது:    வசூல் ராணியாக திகழ்ந்த    பெண் சப்-இன்ஸ்பெக்டர்    வீடு-சொத்து வாங்கி குவித்தார்
பெரம்பூர், ஜூலை. 20-
சென்னை யானை கவுனியைச் சேர்ந்தவர் லட்சுமி. லாரி அதிபரான இவர் கடந்த வாரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்று கொடுத்தார். அதில், எனது வீட்டை பைனான்ஸ் நிறுவனத்திடம் அடமானம் வைத்து ரூ. 2 லட்சம் கடன் வாங்கினேன். 

அதை திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால் இப்போது ரூ. 41 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என தொல்லை கொடுக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
இது பற்றி விசாரிக்க யானை கவுனி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் ரேகா விசாரித்தார். இந்த வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று லாரி அதிபர் லட்சுமியிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் தரமறுத்தார். இதனால் வழக்கை விசாரிக்காமல் ரேகா மருத்துவ விடுப்பில் சென்றார். பணம் வேண்டும் என தொல்லையும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து லட்சுமி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரேகாவை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட் டனர். போலீசார் யோசனைபடி லட்சுமி பணம் தருவதாக போனில் ரேகாவிடம் கூறினார். உடனே கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அருகில் வரும்படி கூறினார்.
அங்கு ரூ. 3 ஆயிரத்தை ரேகாவிடம் கொடுக்கும் போது போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். ரேகாவை யானை கவுனி போலீஸ் நிலையத் திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணை யில் திடுக்கிடும் தகவல் கள் கிடைத்தது. ரேகா வீடுகள் - சொத்துக்கள் வாங்கி வசூல் ராணியாக திகழ்ந்தது தெரிந்தது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சப்-இன்ஸ்பெக்டர் ரேகா 2006-ம் ஆண்டில் கொடுங் கையூர் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக வேலை பார்த்தார். அப்போது அங் குள்ள சாலையோர கடை களுக்கு சென்று மாமூல் வாங்கியுள்ளார். பெரிய கடைகள் முதல் இளநீர் கடை வரை ஒரு கடையும் விடாமல் வசூலை வாரி குவித்துள்ளார்.
மேல் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு வசூலித்துள்ளார். அதன் பிறகு எம்.கே.பி.நகர், வியாசர்பாடி ஆகிய போலீஸ் நிலையங்களில் வேலை பார்த்த போதும் பணம் வசூலித்து சொத்துக் களை குவித்துள்ளார்.
கொடுங்கையூர், கிருஷ்ண மூர்த்தி நகரில் வீடு, அதன் அருகில் உள்ள பகுதியில் ஒரு வீடு, ஈ.சி.ஆரில் ஒரு வீடு என 3 வீடுகளை லஞ்ச பணத்தில் வாங்கியுள்ளார்.
மேலும் சொத்துக்களும் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரேகாவுக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள், வீட்டு பத்திரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
aPlus.gif


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

லஞ்சம் வாங்கியதாக கைது 2 சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயிலில் அடைப்பு

லஞ்சம் வாங்கியதாக கைது    2 சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயிலில் அடைப்பு
புதுச்சேரி, ஜூலை. 20-
புதுவை வில்லியனூர் அருகே உள்ள ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி தமிழ்செல்வி(வயது 28). தமிழ்செல்வியையும், அவரது ஒரு வயது மகனையும் கடந்த மாதம் 29-ந்தேதி தாண்டவராயன்குப்பத்தை சேர்ந்த முருகையன், பிரபு ஆகிய இருவரும் கடத்தி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாஜலபதி, சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் காரைக்கால் பகுதியில் பதுங்கி இருந்த முருகையனை கைது செய்து தமிழ்ச்செல்வியையும், அவரது மகனையும் மீட்டனர்.
இதற்கிடையே தமிழ் செல்வியின் தாலி சங்கிலியை சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வெங்கடாஜலபதி ஆகியோர் வாங்கி வைத்துக்கொண்டனர். இதனை பழனியும், தமிழ்செல்வியும் திருப்பி கேட்டனர். அதற்கு அவர்கள் தாலி சங்கிலி வேண்டும்¢ என்றால் ரூ.50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டனர். ஆனால் பழனி ரூ.10 ஆயிரம் மட்டும் தருவதாக கூறியுள்ளார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதுகுறித்து பழனி சென்னை சி.பி.ஐ. போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், பழனியப்பன், ராஜா ஆகியோர் நேற்று மாலை புதுவை வந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ரூ.10 ஆயிரத்தை பழனியிடம் கொடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதியிடம் கொடுக்கும்படி கூறினர்.
அதன்படி பழனி பணத்தை கொடுத்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சரவணனும் அவருடன் இருந்தார். அவர்கள் இருவரும் பணத்தை வாங்கும் போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

aPlus.gif


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

லஞ்சம் வாங்கி கைதான பத்திர பதிவு அலுவலக உதவியாளர் நாகர். ஜெயிலில் அடைப்பு

aPlus.gif
லஞ்சம் வாங்கி கைதான    பத்திர பதிவு அலுவலக உதவியாளர் நாகர். ஜெயிலில் அடைப்பு
நாகர்கோவில், ஜூலை.14-
மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுதாகரன் தம்பி. இவர் ரியல் எஸ்டேட், திருமண தகவல் மையம் போன்றவை நடத்தி வருகிறார்.
இதற்காக மார்த்தாண்டம் வடக்கு தெருவில் புதிதாக ஒரு அலுவலகம் தொடங்கினார். இதனை முறையாக பதிவு செய்ய குழித்துறையில் உள்ள மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி விண்ணப்பித்தார்.
2 வாரங்கள் ஆகியும் அவரது மனு மீது எந்த நடவ டிக்கையும் பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் செய்ய வில்லை. இதையடுத்து சுதா கரன்தம்பி அலுவலகத்திற்கு நேரில் சென்று விபரம் கேட்டார். அப்போது, அங்கிருந்த அலுவலக “பி” பிரிவு உதவியாளர் ராதாகிருஷ்ணன் பதிவு சான்றிதழ் கேட்ட சுதா கரன்தம்பியை அணுகி தனக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் தந்தால் உடனடியாகவேலையை முடித்து தருவதாக கூறினார்.
இதற்கு ஒப்புக்கொண்டு 2 நாட்களில் பணம் தருவதாக கூறிய சுதாகரன்தம்பி இது பற்றிய தகவலை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்தார். அவர்கள் சுதாகரன்தம்பி யிடம் ரசாயண பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதனை அலுவலக உதவியாளர் ராதாகிருஷ்ணனிடம் கொடுக்கும்படி கூறினர்.
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கொடுத்த யோசனைப் படி நேற்று மாலை சுதாகரன் தம்பி குழித்துறை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று ரசாயண பவுடர் தடவிய லஞ்சப் பணத்தை அலுவலக உதவியாளர் ராதா கிருஷ்ணனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்தி ருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தர ராஜ், இன்ஸ் பெக்டர்கள் பீட்டர்பால், கண்ணன், அமிர்தராஜ், ஏட்டு குமரேசன் ஆகியோர் ராதா கிருஷ்ணனை கையும், களவு மாக பிடித்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய பின்பு திருவட்டாரில் உள்ள அவரது வீட்டுக்கும் சென்று சோதனை நடத்தினர். இரவு வரை நடந்த சோதனைக்குப் பின்னர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர் படுத்தப்பட்டுநேற்று இரவே நாகர்கோவில் ஜெயி லில் அடைக்கப்பட்டார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_07_2010_007_018.jpg

-- Edited by devapriyaji on Sunday 25th of July 2010 06:08:00 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இன்ஸ்பெக்டர் லீலைகள் குறித்து புகார் தந்தவர் மீது வழக்கு : விசாரிக்க போலீசாருக்கு உத்தரவு

மதுரை : நெல்லை மேலப்பாளையத்தில், உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்த விரோதத்தில் பொய் வழக்குப்பதிவு செய்ததாக, இன்பார்மர் கொடுத்த மனுவை 30 நாட்களுக்குள் விசாரிக்க, இன்ஸ்பெக்டருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.


நெல்லையை சேர்ந்த ஷா நாவாஸ் தாக்கல் செய்த ரிட் மனு: போலீஸ் துறையில் 28 ஆண்டுகள் தகவல் கொடுப்பவராக இருந்தேன். பல முறை வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் சில போலீஸ் அதிகாரிகள் குறித்தும், தகவல் கொடுப்பேன். 2007ல் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பல பெண்களுடன் தொடர்பு வைத்தது குறித்து, உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தேன். என் மீது அவருக்கு விரோதம் ஏற்பட்டது. 2007 ஆக., 28ம் தேதி என்னை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் துன்புறுத்தினார். போலீசார் சேகர், ராஜன் விசாரணை என்ற பெயரில் தாக்கினர். பின், பொய் வழக்கு பதிவு செய்து ரிமாண்ட் செய்தனர். வழக்கில் விடுவிக்கப்பட்டேன். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார். பொய் வழக்குப்பதிவு செய்தது குறித்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை கோரி மனு கொடுத்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.எம்.ஏ.ஜின்னா ஆஜரானார். நீதிபதி சி.எஸ்.கர்ணன், ""மனுதாரர் மனுவை 30 நாட்களுக்குள் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என தற்போதைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

குழந்தை கடத்தல் வழக்கு: பெண் இன்ஸ்பெக்டர் லஞ்சம்; வாங்கியதை படம் பிடித்தவர் கைது
திருப்பூர், ஜூலை. 24-
திருப்பூர்- தாராபுரம் சாலை கரட்டாங்காடு பகுதியில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருபவர் சரவணன். இவர் வீரபாண்டியை அடுத்த அய்யம்பாளையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்திற்கு மோட்டார் மற்றும் மின் வசதி செய்து கொடுத்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த காப்பகத்தை நடத்தி வந்த பிரபாவதி என்பவர் குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையின் போது எலக்ட்ரிக் கடையின் “பில்” உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கியது. இதையடுத்து வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் இந்தராணி எலக்ட்ரிக் கடை உரிமையாளர் சரவணனை சாட்சியாக சேர்த்தார். வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இது குறித்து சரவணன் தனது நண்பர் வீடியோ சுப்பிரமணியத்திடம் கூறி உள்ளார். வீடியோ சுப்பிரமணியம் ஏற்கனவே லஞ்சம் வாங்கும் அதி காரிகளை வீடியோ மூலம் படம் எடுத்து அவர்களது முகத்திரையை கிழித்துள்ளார். எனவே இந்திராணியை கையும் களவுமாக படம் பிடிப்பதற்கு தயாராக மறைந்திருந்தார்.
பணியில் இருக்கும் போது லஞ்சம் வாங்கினால் சிக்கிக் கொள்வோம் என்றெண்ணிய இன்ஸ்பெக்டர் இந்திராணி வேலைக்கு லீவு போட்டு விட்டு சாதாரண உடையில் கடைக்கு சென்றார். அங்கு அவர் ரூ. 10 ஆயிரம் லஞ்சப்பணம் வாங்கியதாகவும், அதை வீடியோ சுப்பிரமணியம், அவரது உதவியாளர் ஆதின் ஆகியோரும் படம் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதை பார்த்து விட்ட இன்ஸ்பெக்டர் இந்திராணி உடனடியாக கையில் வாங்கிய ரூ. 10 ஆயிரத்தை தூக்கி எறிந்து விட்டு அவர்களிடம் வாக்கு வாதத் தில் ஈடுபட்டுள்ளார். வாக்கு வாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் இந்திராணி உடனடியாக போலீஸ் ரோந்து வண்டிக்கு தகவல் தெரிவித்து போலீ சாரை வரவழைத்தார். உடனடியாக அங்கிருந்த சரவணன், வீடியோ சுப்பிர மணியம், ஆதின், சண்முகம், மணி, முருகேசன் ஆகிய 6 பேரையும் பிடித்து வண்டியில் ஏற்றினர். வீடியோ காமிரா, கேசட் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் மீது 332வது பிரிவு (போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) என்று வழக்கு பதிவு செய்யபட்டது. 6 பேரையும் கைது செய்து திருப்பூர் கே.எம். கோர்ட் எண் 2ல் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக் கப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர் பணம் வாங்கவில்லை என திருப்பூர் டி.எஸ்.பி. ராஜா மறுத் துள்ளார். அவர் கூறிய தாவது:-
இந்திராணி 3 நாட்களாக மருத்துவ விடுப்பில் உள்ளார். அவர் செல்போன் ரிப்பேர் செய்வதற்காக சரவணனின் கடைக்கு சென்றுள்ளார். அங்கு வீடியோ சுப்பிரமணியன் படம் பிடித்து லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டி மிரட்டி உள்ளார். சாட்சியிடம் பணம் கேட்டு வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ வாய்ப்பு இல்லை. இந்திராணிக்கு சரவணன் ஏற்கனவே பரிச்சியமானவர் என்றார்.
விரிவான விசாரணை நடத்தினால் மட்டுமே இந்திராணி விவகாரத்தில் முழு விவரமும் தெரிய வரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
aPlus.gif


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு!

1.jpg
இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாதிப்புக்கு ஆளாகிறாள். கடைசியாக எடுத்த புள்ளி விபரப்படி ஒரு ஆண்டில் 1,85,312 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கின்றன.

அரசு அலுவலகங்களிலும் கூட பாலியல் ரீதியாக பெண்களைத் துன்புறுத்துவது தொடரவே செய்கிறது. பெண்களைச் சீண்டுவது தண்டனைக்குரிய குற்றம் என அரசு அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டிய நிலை இருக்கிறது. தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. உதாரணத்துக்கு ஒரு சில-

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...' என்றார் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை. இங்கே கடலூர் மாவட்டம், நெய்வேலியில் தமிழக அரசின் கரு வூலத்துறையில் பணியாற்றும் கருவூல அலுவலர் விநாயகம் பிள்ளையோ "கணக்கர் லதாவுக்கும் மாவட்ட கருவூல உதவி அலுவலர் சிவநேசனுக்கும் தகாத உறவு இருக்கிறது' என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கே இ-மெயில் வாயிலாக புகார் அனுப்பி யிருப்பதாகச் சொல்கிறார். அரசு ஊழியர் சங்க கடலூர் மாவட்டச் செயலாளரான பாலகிருஷ்ணன், ""தனக்கு கீழே பணிபுரியும் ஒரு பெண்ணை இந்த அளவுக்கு இழிவுபடுத்தி புகார் எழுதுவது எவ்வளவு பெரிய குற்றம்? கெட்ட நோக்கத்தோடு பெண் ஊழியர்களை இம்சிப்பது இவரது வாடிக்கை. இவர் ஏற்கனவே பணியாற்றிய சிதம்பரம், விழுப்புரத்திலும் இத்தகைய அடாவடித்தனம் செய்தவர்தான். அதனால்தான் விநாயகம் பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம்'' என்றார் ஆவேசத்துடன்.

அவமானத்தில் கண்கள் சிவக்க நம்மிடம் பேசினார் கணக்கர் லதா...

""நான் நேர்மை யாகப் பணியாற்று வது ஒரு குற்றமா? அதனால் என்னென்ன இடைஞ்சல்கள்? ஒரு பெண்ணை சுலபத்தில் குற்றம் சுமத்தி இழிவுபடுத்திவிடலாம் என்ற போக்கு எத்தனை கொடுமையானது? இதனால் குடும்பத்திலும் பிரச்சினை, அலுவலகத்திலும் கேவலமாகப் பார்க்கும் நிலை என மன உளைச்ச லில் தவிக்கும் வாழ்க்கையாகி விட்டது. எனக்கெதிராக உள் நோக்கத்தோடு சுமத்தப்பட்ட இந்த அபாண்டத்திலிருந்து எப்படி மீளப் போகிறேனோ?'' என்றார் வேதனையோடு.

விநாயகம் பிள்ளையோ, ""அந்த சிவநேசன் ஒரு கபடதாரி. வள்ளலார் பெயரைச் சொல்லிக் கொண்டு பெண்களை வசியப்படுத்தும் ஆசாமி. அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்படுகிறார்களே என்றுதான் பேசினேன். சிவநேச னையும் லதாவையும் இணைத்து புகார் கொடுத்திருப்பதாக அவர் களே தப்பாக எடுத்துக் கொண் டால் அதற்கு நானா பொறுப்பு? தான்தோன்றித் தனமாகச் செயல்படுபவர் லதா. நான் ஜென்டில்மேன். பெண்களைப் பெரிதும் மதிப்பவன்'' என தன்னைத் தானே பாராட்டிக் கொண்டார்.

""பெண்கள் அதிகமா வேலை பார்க்கிற இடத்துல இப்படியா கட்டிப்பிடிச்சு... முத்தம் கொடுத்து...? இதுக்கா அரசாங்கம் இவங்களுக்கு சம்பளம் கொடுக்கு?''.

ஏ-1382 விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சுயசேவைப் பிரிவில் வேலைபார்க்கும் சாந்தி, காணக்கூடாத அந்தக் காட்சியைப் பார்த்து ஆவேசக் கூச்சலிட, சம்பந்தப்பட்ட சூப்பிரண்டு பாண்டியிடமும் அந்தப் பெண் ஊழியரிடமும் விசாரணை நடத்த வேண்டியதாயிற்று எஸ்.ஓ. அண்ணாத்துரைக்கு. "எனக்கு மேலதிகாரியாச்சே... எப்படி புகார் தர்றது? அப்படி புகார் கொடுத்துட்டு இங்கே வேலைல நீடிக்க முடியுமா?' என்று அஞ்சிய அந்தப் பெண் ஊழியர் ""அப்படி ஒரு சம்பவமே நடக்க வில்லை'' என்று மழுப்ப... ""சரி... சரி...'' என்று விவகாரத் தைக் கிளறாமல் விட்டு விட்டார் எஸ்.ஓ. ஆனாலும் "தவறு செய்த அலுவலர் மீது நடவடிக்கை இல்லையே... இது மேலும் மேலும் தவறு செய்ய, பெண் ஊழியர்களைத் தன் இச்சைக்குப் பணிய வைக்க வழி செய்து விடுமே? இங்கே பத்து வருஷமா விடாப்பிடியா சீட்ல உட்கார்ந்துக்கிட்டிருக்கிற சந்திரசேகருக்கு எங்களுக்கு நடக்குற கொடுமையெல்லாம் தெரியும். அவரோட கணக்கே வேற. அதனால, இதயெல் லாம் கண்டுக்க மாட்டாரு. எங்களுக்கு என்ன பாதுகாப்பு?' என பெண் ஊழியர்கள் சிலர் தங்களின் தவிப்பை வெளிப் படுத்த... நாம் சந்திரசேகரை அந்த ஸ்டோரில் சந்தித்தோம்.

""நான் எதுவும் சொல்லக் கூடாதே...'' என்று தயங்கியவர்,

""அந்தப் பெண்ணே இது என்னோட வாழ்க்கைப் பிரச்சினை, விட்ருங்கன்னு சொல்லிடுச்சு. அப்படியும் இத வெளிய தெரிஞ்சு யாரோ ஒரு ஆள் இங்க வந்து சத்தம் போட்டுட்டுப் போனாரு. சூப்பிரண்டு பாண்டியை இனிமே இந்த ஸ்டோரு பக்கமே வரக்கூடாதுன்னு எஸ்.ஓ. சொல்லிருக்காரு'' என்றார்.

"போதையில் பெண் ஊழியர்களைச் சீண்டுவதை வெகு சிரத்தையோடு செய்து வரும் பேர் வழி' என்கிறார்களே? -நிர்வாக அலுவலகத்தில் இருந்த பாண்டியிடமே கேட்டோம்.

""அய்ய... நான் பேரன்-பேத்தி எடுத்தவன். இந்த வயசுல அப்படிப் பண்ணுவேனா? குடிக்கிற பழக்கம் எனக்குண்டு. அத மறுக்கல...'' என்று முதலில் அழுத்தம் காட்டியவர், பிறகு பேச்சுவாக்கில் ""ஆமா... என் கெட்ட நேரம்... அன்னைக்கு சபலப்பட்டுட்டேன். இதப் பெரிசுப்படுத்தாதீங்க...'' என்று ஒத்துக் கொண்டார்.

""குடும்ப சூழ்நிலை, அவமானங்களுக்கு அஞ்சி பெரும்பாலான பெண் ஊழியர்கள் தங்களிடம் அத்துமீறும் அலுவலர்கள் குறித்து புகாரே செய்வதில்லை. சகித்துப் போவதால், ஒரு கட்டத்தில் தவறுகளுக்கு அவர்களே உடன்படவும் நேர்கிறது. எங்கோ, யாரோ ஒருவர்தான் பிரச்சினையை துணிவோடு எதிர்கொள்கிறார்கள். இத்தகைய விழிப்புணர்வு நிச்சயம் வேண்டும். கருவிலிருந்து கல்லறை வரை பிரச்சினைகள் பெண்களைத் துரத்துகின்றன. இதற்கு நிச்சயம் தீர்வு காண முடியும். அதற்கு நாம் சட்டத்தை அணுக வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் பயனுள்ள சட்டங்கள் பல இருக்கின்றன'' என்கிறார் வழக்கறிஞர் ரேவதி.

பெண்கள் நாட்டின் கண்கள். பெண்களைப் போற்றி பாதுகாக்கும் நெறிகள் காப்பாற்றப்பட வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அரசுப் பணியில் ஆயிரம் போலிகள்!
- மதிப்பெண் சான்றிதழ் கிளப்பும் பூதம்

Marksheet2.jpg


இன்னும் எதில் எதிலெல்லாம் போலிகள் உருவாகும் என்பதை யோசிக்கவே முடியாதபடி... வந்துகொண்டே இருக்கின்றன போலிகள். அதிலும் அனைத்தையும் சரிப்படுத்த வேண்டிய கல்வி உலகத்தையே ‘போலி மதிப்பெண் சான்றிதழ் கும்பல்’ கரையானாக அரிக்க ஆரம்பித்துவிட்டதுதான் காலக் கொடுமை. 

எப்படி சிக்கினர் போலிகள்?

Marksheet.jpgமருத்துவ, பொறியியல் சீட் கவுன்சிலிங் நடப்பதால் இரண்டு வாரங்களாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பரபரப்பில் இருக்கிறது. 

இந்த நிலையில் சில மாணவர்களின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்த பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு மூக்கு வேர்த்திருக்கிறது. தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களில் மிகக் குறைந்த பாஸ் மார்க் வாங்கியவர்கள்... ‘கீ சப்ஜெக்டுகள்’ எனப்படும் கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில் மதிப்பெண்களை வாரிக் குவித்திருந்தனர். இதில் சந்தேகம் முட்ட, அந்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அடங்கிய சி.டி.யை தேர்வுத் துறை இயக்குனகரத்திலிருந்து வாங்கி இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தனர் அதிகாரிகள்.

அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சி.டி.யில் இருந்த மதிப்பெண் பட்டியலை விட அம்மாணவர்கள் கொண்டுவந்த மதிப்பெண் பட்டியலில் மார்க்குகள் அதிகம் இருந்தன.

இந்த வகையில் சுமார் 51 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் போலி என தெரியவந்திருக்கிறது. மேலும் அதிர்ச்சி என்னவென்றால், மருத்துவ கவுன்சிலிங்கின்போது போலி மதிப்பெண் பட்டியல் கொடுத்த பத்து மாணவர்களில் ஒன்பது பேர் மாணவிகள்.

‘‘கவுன்சிலிங் ரேங்க்கில் முன்வரிசை, விரும்பிய படிப்பு, டாப் டென் கல்லூரியில் இடம் போன்றவற்றை அடைய, வாங்கிய மார்க்குகளை விட ஒரு சில மார்க்குகள் அதிகம் பெற வேண்டியிருக்கிறது. இந்த போட்டியை சமாளிக்க முடியாத சில பெற்றோர்கள்தான் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் ஏஜன்ட்டுகளை நாடி தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதாக நினைத்து உலைவைத்துவிட்டனர்’ என்கிறார்கள் பல்கலைக்கழக வட்டாரத்தில். 

போலீஸாரின் பிடியில் சிக்கிய மாணவிகள், ‘‘எங்களுக்கு ஒன்றும் தெரியாது. எங்களை கைது செய்துவிடாதீர்கள்’’ என்று கதறி அழுதுள்ளனர். அவர்களின் நிலையை உணர்ந்த போலீஸார் பெற்றோரிடம் விசாரித்தபோதுதான் போலி மதிப்பெண் ஏஜென்ட்டுகளான திருவேங்கடம், ஏகாம்பரம் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். 

திருவேங்கடம் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவித் தலைமை ஆசிரியர். அவரைப் பொறிவைத்து பிடித்த போலீஸார் அவரை வைத்துக் கொண்டு முக்கிய குற்றவாளியான கல்லூரிக் கல்வி இயக்குனரக ஆவணப் பிரிவு எழுத்தர் ஏகாம்பரத்தை மடக்கினர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஏகாம்பரத்தின் வீட்டில் சோதனை நடத்தியதில் தயாரித்து தயாராக வைக்கப்பட்டிருந்த 48 போலி மதிப்பெண் பட்டியல் சிக்கியது. மேலும் போலி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கத் தேவையான அனைத்து விதமான ஆவணங்கள், முத்திரைகள், ஹாலோகிராம் ஆகியவையும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் திருவேங்கடத்தின் பங்கு முக்கியம். இவருக்கு தமிழகத்தின் வடக்கில் இருந்து தெற்கு வரை நெட்வொர்க். அதற்கு அவருக்கு உதவியது புனிதமான ஆசிரியர் பணி. தனக்கு தேர்வுக் கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் ஆட்கள் இருக்கிறார்கள் என்று பெற்றோரிடம் வலை விரிப்பது இவரின் பாணி. மாணவர்களின் வசதிக்கு ஏற்ப 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் கைமாறியுள்ளது. குறிப்பாக மருத்துவ படிப்பு என்றால் அதற்கு ரிஸ்க் அதிகம் என்று சொல்லி பல லட்சங்களை கறந்துள்ளனர். கிடைக்கும் பணத்தில் ‘பிப்டி பிப்டி’ என்று பங்கு பிரித்துக் கொண்டனர் ஏகாம்பரமும், திருவேங்கடமும். சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு சந்தேகமே வராத வகையில் சென்னையில் இருந்து அரசு தபால் போலவே கூரியர் மூலம் மதிப்பெண் பட்டியலை அனுப்பி வந்திருக்கிறார்கள் இவர்கள்.

Marksheet1.jpgபிடிபட்ட திருவேங்கடம் போலீஸ் விசாரணையில், ‘‘நாங்கள் தரும் மதிப்பெண் பட்டியல் ஒரிஜினல். நீங்கள் வித்தியாசம் காணமுடியாது. ஏற்கனவே எங்கள் சான்றிதழ் பெற்றவர்கள் இன்று இந்தியா மற்றும் வெளி-நாடுகளில் டாக்டர்களாகவும், இன்ஜினியர்-களாகவும் வேலை பார்த்து வருகின்றனர். இன்னும் பலர் அரசுப் பணியில் இருந்து வருகின்றனர். பலர் ராணுவத்தில் பணியில் உள்ளனர். இதுவரை அதுபோல எந்தப் பிரச்னையும் வரவில்லை. தமிழகம் முழுவதும் ஒவ்வொருவர் மூலம் ஆட்களை பிடித்து என்னை வந்து சந்திப்பார்கள். நாங்கள் உடனே சான்றிதழ் வழங்க மாட்டோம். எங்களுக்கு நம்பிக்கை வந்தால்தான் சான்றிதழ் அளிப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர் நம்மிடம், ‘‘பல்கலைக் கழக ரேங்க்கில் கூடுதல் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவ்வாறு விண்ணப்-பித்தவர்-களிடம் உங்களுக்கு மதிப்பெண் பட்டியல் வர காலதாமதமாகும், நாங்கள் அதிக மதிப்பெண்ணோடு பட்டியல் வாங்கித் தருகிறோம் என்று சொல்லி பணம் வாங்கியுள்ளனர். போலி மதிப்பெண் பட்டியல் கொண்டுவந்த மாணவிகளிடம் முழுமையாக விசாரித்துவிட்டோம். திருவேங்-கடத்தையும், ஏகாம்பரத்தையும் மீண்டும் விசாரிக்கும்போதே முழுத் தகவல்கள் தெரியவரும்’’ என்றார்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹரிடம் பேசினோம். ‘‘இந்த மதிப்பெண் மோசடியில் சிக்கிய மாணவ, மாணவிகள் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள்தான். ஆனால், குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பெற்றோர், நல்ல கல்லூரி, விரும்பிய பாடங்கள் கிடைக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிய-வந்துள்ளது. தமிழகத்தில் பொறியியல் தொழிற்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும். எனவே மாணவர்கள் இதுபோன்ற செயல்பாடுகளில் ஆர்வம் காட்டவேண்டாம்’’ என்றார்.

திருவேங்கடத்தின் வாக்குமூலப்படி இன்று அரசுப் பணிகளில் உள்ளவர்களை கணக்கெடுத்தால் இதுபோன்ற ஆயிரக்கணக்கான போலிகள் சிக்குவார்கள். அவர்களில் பலர் இன்று ஓய்வுபெறும் நிலையில் உள்ளனர். இந்த போலிகளை ‘பொலி’ போடுமா அரசு?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அழிக்கப்படும் வனங்கள்... ஆதரவு தரும் வனத்துறை!
கரைந்து வரும் கல்வராயன் மலை

Kalvarayan%204.jpg



‘பட்ட மரத்தை வெட்டினாலும், பத்து மரம் நட வேண்டும்’ என்பது தமிழ்நாடு வனத்துறையின் சுலோகன். ஆனால், ஆயிரக்கணக்கான மரங்களையும், மூலிகைகளையும் வனத்துறை அதிகாரிகள் உதவியோடு வெட்டிச் சாய்த்துவருகின்றன சில சமூகவிரோதி கும்பல்கள்.

& இப்படி ஒரு தகவல் கல்வராயன் மலையிலிருந்து வந்து நம் காதைத் தொட, கல்வராயன் மலைக்கே விரைந்தோம். 

Kalvarayan%205.jpgமலைப் பகுதிகளில் ஆங்காங்கே தீ எரிந்து புகைந்து-கொண்டிருந்தது. அவற்றை நம்மிடம் காட்டிய ஒரு ஜே.சி.பி. டிரைவர் பேசத் தொடங்கினார். 

‘‘வேலையிருக்குன்னு சொல்லி சில பேரு என்னை மலைக்கு கூப்பிட்டாங்க. வண்டியோடு வந்தேன். கூட்டிக்கிட்டு போய் நிலத்தை திருத்தணும்னு ஒரு மலை குன்றைக் காட்டினாங்க. ‘பாரஸ்ட் கார்டு வந்தா எங்கள பிடிச்சிடுவாங்களேய்யா’ன்னு கேட்டேன். ஆனா, ‘அவங்க வரமாட்டாங்க, நீ ஓட்டு’ன்னு சொன்னாங்க. நானும் பணத்துக்கு ஆசைப்பட்டு வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கும்போதே பாரஸ்ட் கார்டு வந்து வண்டியப் பிடிச்சிட்டார். நான் வண்டிய விட்ருங்கன்னு கெஞ்சிக் கேட்டேன். ஆனா அவரோ, இருபதாயிரம் பணம் கொடுத்தாதான் வண்டிய எடுக்க முடியும்னு சொல்லிட்டார். க்ளீனரை அங்கயே விட்டுட்டு பணத்த ரெடி பண்ணி பாரஸ்ட் கார்டுகிட்ட கொடுத்துட்டுதான் வண்டிய எடுத்துட்டு வந்தேன். 

அதுக்குப் பிறகு விசாரிச்சிப் பார்த்தப்பதான் மலையில வாழற சிலரே மலையில இருக்குற மரங்கள் அடியில தீ வச்சி கொளுத்திடறாங்க அப்படிங்குற விசயம் தெரியவந்துச்சு. தீ வச்சிட்டா அந்த மரம் செத்துப் போயிடும். மரத்த வெட்டி காயப் போட்டுட்டு, மீதி இருக்கிற செடிகளயும் தீ வச்சி கொளுத்திடுவாங்க. மறுபடி அங்க கெடக்குற கல்லை எல்லாம் பொறுக்கிப் போட்டுட்டு அத அப்படியே விவசாயம் செய்யற நிலமா மாத்திடறாங்க. வெட்டிப் போட்ட மரங்களை சேலம் மாதிரி ஊர்களுக்குக் கொண்டு போயி ஆயிரக்கணக்குல வித்துக் காசாக்கிடறாங்க. வனத்துறை அதிகாரிங்களுக்கு அதுல கணிசமான தொகையை ஒதுக்கிடறாங்க. 

Kalvarayan.jpgகல்வராயன் மலையில இருக்கிற பெரும்பாலான கிராமங்களில் வனத்தை அழிச்சி விவசாய நிலமா மாத்தற அட்டூழியம் நடக்குது. மலையில அங்கங்கே புகையுற காரணம் இப்ப புரியுதா?’’ எனக் கேட்ட அந்த டிரைவர், ‘‘வனத்துறை அதிகாரிகளோட தொடர்பு வச்சிருக்கற சிலர்தான் இப்படி காட்டை அழிக்கிறாங்க. இதனால தேக்கு, வேம்பு, கருங்காலி போன்ற மரங்களும் பல மூலிகை செடிகளும் நாசமாகுது. வனத்தை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, இப்படி அரசாங்க சொத்த அபகரிக்கிற காரியத்துக்கு துணை போறாங்க. அப்பப்போ என்னை மாதிரி ஆளுங்களையும் மடக்கி பணம் பிடுங்குறாங்க’’ என்று அதிர்ச்சியாக முடித்தார்.
Kalvarayan%203.jpg
தாழ் வெள்ளார் என்ற பகுதியில் எதிர்ப்பட்ட வெங்கடேஷிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேச்சுக் கொடுத்தோம். 

‘‘பாரஸ்ட் கார்டுங்க அப்பப்ப வந்து, வேண்டிய பணத்தை வாங்கிட்டு போயிடுவாங்க சார். இப்படி காடு பிடிக்கிறவங்க எல்லாம் ஊர்ல பெரிய மனிதர்களா இருக்கிறவங்கதான். வனத்துறைக்கு கொஞ்சம் பணத்தை வெட்டினீங்கன்னா இப்பவே நீங்க கூட நாலு மரத்தை வெட்டிக்கிட்டுப் போகலாம்’’ என்றார் சாதாரணமாக.

மேல் வெள்ளார் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி நம்மிடம் ‘‘இந்த மலையில பாதிப் பகுதி விழுப்புரம் வனத்துறை கட்டுப்பாட்டிலும், மீதிப் பகுதி சேலம் வனத்துறை கட்டுப்பாட்டிலும் வரும். ஆனா, இரு மாவட்ட அதிகாரிகளும் லஞ்சம் வாங்குறத்துல பேதம் பாக்கறதில்லை. அதனாலதான் இப்படி வனத்தை அழிச்சி நிலமா உருவாக்குறாங்க. தொடர்ந்து மூணு வருஷம் விவசாயம் பண்ணிகிட்டு இருந்தா அப்புறம் எப்படியாவது பட்டா வாங்கிடலாம். இதுதான் அந்த ஆளுங்களோட ஐடியா’’ என்றார். 

Kalvarayan%206.jpgநேர்மையான வனத்துறை அதிகாரிகள் சிலரை மிகுந்த சிரமத்திற்கிடையே அடையாளம் கண்டு பேசிய போது ‘‘இந்த மலைப் பகுதி மட்டுமில்லை... கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன் மலை என எல்லா இடங்களிலும் இப்படி வனத்தை அழித்து விவசாய நிலமாக மாற்றும் விபரீதம் நடந்துவருகிறது. கிராம முக்கியஸ்தர்களாக இருப்பவர்கள்தான் இப்படி ஈடுபடுகிறார்கள். அவர்களில் சிலரை நாங்கள் பிடித்துச் சென்றாலும், சில எம்.எல்.ஏ.க்கள், உயரதிகாரிகள் எல்லாம் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? வனங்களை நிலத்துக்காக இப்படி அழிப்பதால்தான் காட்டு விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருகின்றன. இப்படி வனத்தை அழிப்பது நமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் துரோகம்’’ என்றனர் கவலையாய். 

கயவர்களால் கல்வராயன் மலை வனம் அழியும் அவலத்தை வனத்துறை அமைச்சர் செல்வராஜின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ‘‘நீங்கள் சொல்லித்தான் இந்த விஷயம் என் கவனத்துக்கு வருகிறது. உடனடியாக விசாரிக்கச் சொல்லுகிறேன். பழங்குடியினருகென்று சில சலுகைகளை அரசு வழங்கியுள்ளது. அதை தவறாகப் பயன்படுத்தி மரங்களை வெட்டுவது போன்ற தவறுகள் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார் அக்கறையுள்ளவராக. கல்வராயன் மலைப் பகுதிகளில் இன்னும் பல இடங்களில் புகைந்து கொண்டிருக்கிறது. வனத்துக்கு மட்டுமல்ல... நமது எதிர்காலத்துக்கும் நெருப்பு வைப்பவர்களை அரசு உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இல்லை-யெனில் சில வருடங்களில் கல்வராயன் மலை கரைந்துவிடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_07_2010_003_019.jpg?w=306&h=787

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

3.75L city buildings evade tax net
CHENNAI: Property owners are playing a hide-and-seek game with Chennai corporation and there are no prizes for guessing who the winner is. According to rough estimates, at least 3.75 lakh buildings in the city have escaped the property tax net, even as the civic body has got cracking on the commercial use of residential buildings that evade property tax. 

According to urban planners’ estimates, a city of 50 lakh populace would have at least 10 lakh dwelling units. But Chennai Corporation’s records show only 6.26 lakh properties. 

Data collated from different departments show that several people refuse to pay property tax even while paying tax for water and electricity. As on June this year, the Chennai Metropolitan Water Supply and Sewerage Board (CMWSSB) had 6.63 lakh tax assessees. The Tamil Nadu Electricity Board has 27.17 lakh connections, including 21.64 lakh domestic connections, in corporation limits. A building has more than two connections in many cases. 

“Lack of coordination between government departments cause huge loss to the local body,” said Saidai P Ravi, Congress floor leader in the corporation council. The civic budget, tabled by mayor M Subramanian in March, underlined the need to correlate the revenue department’s statistics with that of TNEB connections. 

However, the local body has not made much headway till date, except for sending a communiqué to the TNEB asking for details. It is alleged that tax assessors and collectors of the corporation are not in proportion to the rapid pace of real estate development in the city, thus leaving several properties out of the tax net. The 155-ward corporation has only 86 tax assessors and 50 licence inspectors to assess properties, while Velachery alone has had 1,150 streets added in the last 10 years. 

Currently, the cash-strapped local body is keen on streamlining the usage of properties to generate more revenue. A recent exercise undertaken in Kilpauk zone, comprising Anna Nagar, Purasawalkam and Kilpauk, found that 5,000 buildings were being put to commercial use, evading huge taxes.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

HC to monitor steps taken to abolish manual cleaning of drains
CHENNAI: The Madras high court has decided to personally monitor the steps taken by the Metrowater and Municipal Administration department to do away with the practice of manual cleaning of sewerage in the state. 

The first bench comprising Chief Justice M Yusuf Eqbal and Justice TS Sivagnanam was passing orders on a contempt of court petition, which said the court-appointed special committee comprising senior officers and the petitioner was not taking the issue of manual cleaning of sewers seriously and that no concrete decisions had been taken by the committee. 

The petition, filed by A Narayanan, referred to deaths of workers who got asphyxiated after entering into manholes in different parts of the city. Though the civic authorities contended that they had stopped the practice and had purchased machines for the purpose, several deaths were reported even after that, the petitioner said. 

In September 2009, the court formed a special committee and asked it to suggest steps to improve the drainage system and maintain the overall environment clean in cities and villages. Though the committee was supposed to submit its report in two months, it got six more months to submit it. 

As no meaningful progress was made by the committee, Narayanan filed the present contempt petition. 

The bench, considering the seriousness of the issue, said henceforth it would monitor further course of action, and directed the committee to hold its meeting in the first week of August itself. A preliminary report as to the steps taken should also be filed, it said. 

The judges then posted the matter to August 17 for further proceedings.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Ordinance to stop CMDA from demolishing 1.7L illegal buildings
http://timesofindia.indiatimes.com/city/chennai/Ordinance-to-stop-CMDA-from-demolishing-17L-illegal-buildings/articleshow/6230176.cms


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

என்னை சட்டவிரோதமா முறையில் தமிழக அரசும், முதல்வர் கருணாநிதி குடும்பத்தாரும், மாறன் சகோதரர்களும் மிரட்டி வருகின்றனறர். அவர்களிடமிருந்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், மத்திய அரசின் பாதுகாப்புப் படை மூலம் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரியுள்ளார் சமீபத்தில் தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர்.

இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

அதில் உமாசங்கர் கூறியிருப்பதாவது...

பொதுமக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு நான் பணியாற்றி வந்தேன். நேர்மையாகவும்,நியாயமாகவும் நான் பணியாற்றியதை விரும்பாமல் தொடர்ந்து என்னை இடமாற்றம் செய்து வந்தனர்.

என் மீது, அகில இந்திய அரசுப் பணி சட்டம், மக்கள் சேவகர் விசாரணைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு உட்பட்டு எந்தவிதமான விசாரணையையும் தமிழக அரசு எடுக்கட்டும். ஆனால் அதைச் செய்ய அரசுக்குத் தைரியம் இல்லை.

மாறாக என் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு முதல்வர் காவல்துறையை நிர்பந்தித்து வருகிறார். தற்போதைய முதல்வர் தலைமையிலான தமிழக அரசு சகிப்புத்தன்மை அற்றதாக உள்ளது. காரணம், மாறன் சகோதரர்களுக்கு எதிராகவும், இடிஎல் இன்பிராஸ்டிரக்சரில் நடந்த முறைகேடுகளை நான் அம்பலப்படுத்தியதுமே காரணம். இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும் தொடர்பு உண்டு. இந்த ஊழலில் மத்தியில் உள்ள ஒரு திமுக அமைச்சருக்கும் பங்கு உண்டு.

இதன் காரணமாகவே அரசு அதிகாரத்தை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

எனது ஜாதிச் சான்றிதழ் தொடர்பாக என் மீதான விசாரணை எதுவாக இருந்தாலும், அதை மத்திய ஊழல் ஆணையமோ அல்லது சிபிஐயோ நடத்த வேண்டும். அல்லது தமிழக அரசு சம்பந்தப்படாத ஏதாவது ஒரு ஏஜென்சி விசாரணையை நடத்த வேண்டும்.

மேலும், நான் மத்திய அரசின் துறை ஏதாவது ஒன்றில் பணியாற்ற உத்தரவிட வேண்டும்.

எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மத்திய படைகள் மூலம் போதிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் உமாசங்கர்.

_______________________________________________


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

6 மாதங்களில் 11 சிறுவர்கள், 29 பெண்கள் மாயம் - நரபலிக்காக கடத்தலா?

மதுரையில் 2010 ஜனவரி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை 11 சிறுவர்கள், 29 பெண்கள் உட்பட 70 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


மனநலம் பாதிப்பு, குடும்ப பிரச்னை, பெற்றோர் கண்டிப்பு உட்பட பல்வேறு காரணங்களால், நகரில் மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, மதுரை வருகின்றனர். காப்பகங்களில் தங்க வைக்கப்படும் இவர்கள், திடீரென மாயமாவது காப்பக பொறுப்பாளர்களுக்கும், காவல் துறையினருக்கும் தலைவலியை ஏற்படுத்துகிறது.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த நாணி (17) என்ற சிறுவன் லாரி மூலம் மதுரை வந்தார். அவரை மீட்ட போலீசார், முத்துப்பட்டி விடியல் காப்பகத்தில் தங்க வைத்தனர். ஜூலை 2ஆம் தேதியன்று முதல் நாணியை காணவில்லை. ஜூலை 19ஆம் தேதி, வீட்டிற்கு வெளியே கொண்டிருந்த மதுரை பைகாராவைச் சேர்ந்த கார்த்திக் (8) திடீரென்று மாயமானார். பின் தலையில் "வி' வடிவ தழும்பு உடைய இவர், நான்காம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் இருவரையும் சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வலை வீசி தேடுகின்றனர். மேலும் ஏழாம் வகுப்பு படித்த, அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் கணேசனும்(13) ஜூலை 21ஆம் தேதி மாயமானார்.

இதற்கிடையே பெரியவர்களும் மாயமாகி வருகின்ற தகவல் வெளியாகியுள்ளது.. வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (28). மே 31 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றவர். இதுவரை வீடு திரும்பவில்லை. சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறையைச் சேர்ந்தவர் ஜெயந்தி (30). கணவர் ராமுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தந்தை வீட்டில் தங்கியிருந்தார். ஜூலை 21ஆம் தேதி முதல் இவரைக் காணவில்லை. சமீபகாலமாக "காணாமல் போனவர்கள் குறித்து' காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்வது அதிகரித்துள்ளது. 2010ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை 21 ஆண்கள் மாயமாகி உள்ளனர். இதில் 12 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். மாயமான 29 பெண்களில் 18 பேரும், 11 சிறுவர்களில் 9 பேரும், 9 சிறுமியரில் 7 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், கோரிப்பாளையம் பள்ளிவாசலில் திருடப்பட்ட 15 மாத குழந்தை காதர்யூசுப், நரபலி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, மாயமான சிறுவர்களை கண்டுபிடிக்கமதுரை மாநகர் முழுவதும் அந்தந்தகாவல் நிலையங்களில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

30_07_2010_002_040orphanages.jpg?w=630&h=347

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இலவச பஸ் பாஸ் - பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி தற்கொலை!

இலவச பஸ் பாஸ் எடுத்து வர மறந்துவிட்ட பள்ளி மாணவியை, அரசு பேருந்து ஊழியர்கள் தகாத வார்த்தைகள் கூறி அவமானப்படுத்தியதால் மனமுடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.


கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் நித்யபிரியா(15). பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல பொன்னேரியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் (தடம் எண் 167) அரசு பஸ்சில் ஏறினார். பஸ் நடத்துனர் உமாபதி மாணவியிடம் பஸ் பாஸ் கேட்டார். பஸ் பாஸ் கொண்டு வராததால், பயத்தில் சக மாணவனுடைய பஸ் பாசை அவர் காண்பித்தார். இதை கண்ட கண்டக்டர், பஸ் பாஸ் இல்லாமல் பயணித்த மாணவியை, பொன்னேரி அரசு போக்குவரத்து பஸ் டெப்போவில் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

டெப்போ மேற்பார்வையாளர் ஜான்சுந்தர் (57), நேரக் காப்பாளர் ராஜேந்திரன் (48) ஆகியோர் அம்மாணவியை தகாத வார்த்தைகளால் பேசினர். பின், மாணவியின் தந்தைக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்து விட்டு மாணவியை விடுவித்தனர். அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற நித்யபிரியா அவமானம் தாங்காமல் தன் தாய் விமலாவிடம் சம்பவத்தைக் கூறி அழுதுள்ளார். தாய் கடைக்குச் சென்ற நேரம் பார்த்து, தன் பள்ளி சீருடை துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த தச்சூர் கிராம மக்கள் ஆவேசமடைந்து, தச்சூர்- பொன்னேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பொன்னேரி நோக்கி வந்த மாநகர பஸ்சின், முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். சம்பவ இடத்துக்கு பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ருத்ரசேகரன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கிராம மக்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வர வேண்டும். அவரிடம் எங்கள் வேதனையை தெரிவிக்க வேண்டும். மாணவியின் சாவிற்கு காரணமான போக்குவரத்து ஊழியர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி மறியலை கைவிட மறுத்தனர்.

மாலை 6 மணிக்கு துவங்கிய சாலை மறியல், இரவு 11 மணி வரை நீடித்தது. இதனால் பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அதிரடி படை காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

பொதுச் சொத்தை சேதப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக செயல்பட்டதாக, தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தபொதுமக்கள் 14 பேரைகாவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, பள்ளி மாணவியின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில்பேருந்து நடத்துனர் உமாபதி, நேரக் காப்பாளர் ராஜேந்திரன் மற்றும் மேற்பார்வையாளர் ஜான்சுந்தர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். இதில் ராஜேந்திரன் மற்றும் ஜான்சுந்தர் ஆகியோரை கைது செய்த போலீசார் நடத்துனர் உமாபதியை தேடி வருகின்றனர்.

அரசு கொடுக்கும் பஸ் பாஸ் விவகாரத்தில் அரசு போக்குவரத்து துறையினர் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசுப் பணியாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்து அரசின் திட்டங்கள் ஏழைய எளிய மக்களைச் சென்றடையும் வகையில் பணியாற்றும் காலம் வருமா?


__________________
« First  <  Page 2  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard